Monday, September 22, 2014

பகலில் தூக்கத்தை தவிர்த்திட வேண்டும் அரோமணி விதி 8

A 232-AP 8-
 பகலில் தூக்கத்தை தவிர்த்திட வேண்டும்  
இரட்டை மருத்துவம்-வாழும் தாய் மருத்துவம் (முதல் மருத்துவம்)
     அரோமணி 8-வது விதி ( Aromani 8th Principle)
செலவழித்த ஆற்றலைத் திரும்பப் பெறுதல் (Recouping of energy)

1. இரட்டை மருத்துவத்தின் சிகிச்சையினால், எல்லா நோய்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டாலும், எனக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. ஏனென்றால், நான் சோர்வையும், களைப்பையும், வேலை செய்வதில் சோம்பேரித்தனத்தையும், உடற்பயிற்சியின்போதும், நடக்கும்போதும் உடல் கனமாக இருப்பதையும் உணர்ந்தேன். அதனால் வேலையின் அளவு குறைந்து, செயல் திறனில் ஏழ்மையாக இருந்தேன். இருந்தபோதிலும், நடு நடுவே எப்பொழுதாவது ஒரு நாள் சுறுசுறுப்பையும், நடக்கும்போது உடல் எடையில்லாமல் சுலபமாக இருப்பதையும், அந்த நாள் முழுக்க புத்துணர்ச்சியுடனிருப்பதையும் உணர்ந்தேன். மேலே கூறப்பட்ட உளவியல் உணர்வுகள் ஒரு வேளை முந்தைய நாள் சாப்பிட்ட உணவாக இருக்கலாம், அல்லது மாத்திரை மருந்தாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டு என்னை அமைதியடையச் செய்தது.

2. மார்ச்,1993 யிலிருந்து 13, சூன், 2013 வரையிலும், ஊடே, ஊடே முதல் நாள் தூங்காமலிருந்தது எனது மனதில் மின்னலைப் போல வந்து போய்க் கொண்டிருந்தது. நான் தூத்துகுடி அனல்மின் நிலையத்தில் செயற்பொறியாளராக வேலை பார்த்தபொழுது (மார்ச்,1992 முதல் நவம்பர்  1999 வரை), மதியம் ¾ மணி நேரம் தூங்குவது வழக்கம். இதன்மூலம் பிற்பகல் வேலையை நன்றாகச் செய்ய முடிந்தது. அதே நேரத்தில் தூங்கி எழுந்தவுடன் தூக்கக் கலக்கமும், வேலைக்குச் செல்வதற்கு விருப்பமில்லாத ஒரு மந்த உணர்வும் இருக்கும். இரவுப் படுக்கைக்குப் போவதற்கு விருப்பம் இல்லாததையும், தூக்கம் வருவதற்கு புரண்டு புரண்டு படுத்து, வெகுநேரம் கழித்து தூக்கம் வரும் அநுபவத்தையும், இரவில் தூக்கம் கலைந்து விழிப்பு ஏற்படுவதையும் சொல்லாமலிருக்க முடியாது. அந்த ஆண்டுகளில், இளப்பு (wheezing) சளி, நீர்வடிதல், மூக்கடைப்பு, மலச்சிக்கல், ஒற்றைத்தலைவலி ஆகிய நோய்கள் என்னை ஆண்டுகொண்டிருந்த காலம். அந்தக் காலக் கட்டத்தில், நான் கொசுக்கடியிலிருந்து தப்பிக்கவும், உடலில் கதகதப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் (குளிர்காலத்தில்) கொசுவலைக்குள் படுத்துத் தூங்கினேன்; மருந்து மாத்திரைகளும் எடுத்துக் கொண்டதால், இரவில் தூக்கம் கலைந்து விழிப்பு ஏற்பட்டதையும் இலேசாக எடுத்துக்கொண்டேன். அந்த நேரத்தில், நல்ல உடல் நலத்திற்கு அரோமணி விதியொன்று மறைந்திருப்பதை நான் அறிய வில்லை.

3. பணியிலிருந்து ஒய்வு பெற்றபிறகு, மதிய தூக்கம் ¾ மணியிலிருந்து 2 ½ மணி நேரமாக அதிகரித்தது. ஒய்வுபெற ஒன்றரை  மாதம் இருக்கும்போது 12-12-2000 அன்று இரண்டாவது மருத்துவமான மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தை (Medicine of Medicinal Meditation-MMM  ) கண்டுபிடித்தேன். இந்த மருத்துவத்தைக் கண்டுபிடித்தபிறகு, அடுத்து வந்த வருடங்களில் எனது நோய்கள் குணமடைவதில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. சூன், 2007 ல் வளைந்த மூக்கை நிமிர்த்த அறுவை சிகிச்சை ஒன்று நடந்தது.

4. அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோய்கள் குணமாவதில் இரட்டை மருத்துவம் நல்ல முன்னேற்றத்தைக் காட்டியது. பகல்தூக்கம் தொடர்ந்தது. ஒரு நாள் 2 ½ மணி நேரப் பகல் தூக்கத்திற்குப் பிறகு சிக்கன்குனியா (chickenkunya) நோயினால் பாதிக்கப்பட்டேன். இந்நோய் வந்ததற்கு பகல் தூக்கம் காரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது, இருந்த போதிலும் பகல் தூக்கத்தைத் தொடர்ந்தேன். 2010 ம் ஆண்டு முடிய பகல் தூக்க நேரத்தை 2 ½ மணியிலிருந்து 1 மணி நேரமாகக் குறைக்க எவ்வளவோ முயற்சி எடுத்தும் சைனஸ் தொந்தரவு இருந்ததால் முடியவில்லை.

5. 15-03-2011 அன்று இறைவனின் அசரீரி வாக்கு மூலம், கொசுவலை, நல்ல உடல்நலத்தை கொடுப்பதற்குரிய காற்றைத் தடுக்கிறது என்ற உண்மையை வெளிப்படுத்தி அதன்மூலம் 7-வது அரோமணி விதியை வெளிப்படுத்தினான். கொசுவை ஒழிப்பதற்கு, லைசால் 30 மி.லி (Lizol) கலந்த நீரை கழிப்பறை, குளியலறை மற்றும் வீட்டுக்குப் பக்கத்தில், மற்ற வீடுகளின் கழிவுநீர் தேங்கிக் கிடந்த சாக்கடைப் பள்ளத்திலும் தினசரி ஊற்றினேன். ஏனென்றால் கொசு 12 மணி நேரத்தில் உற்பத்தியாகக் கூடியது.

6. மாலை 6 மணியிலிருந்து 7.30 மணிவரை வேப்பெண்ணையுடன் வேறு எண்ணையை 2:98 என்ற விகிதத்தில் கலந்து மண்சுட்டி விளக்கில் எரிய வைப்பேன். மாலை 7.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஒரு மின்சார ஆவிக்குடுவையில் (an empty electric vaporizer container), வேப்பெண்ணையுடன்   மண் எண்ணையை 2:98 என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தினேன். சமயலறை கழிவை  தினசரி அப்புறப்படுத்திவிடுவேன். சமயலறை கழிவுக்  கூடை (kichen wastage bucket), கழிப்பறைக்கோப்பை, கழிப்பறை வெண்டிலேட்டர்,   மற்றும் கொசுக்கள் தங்கக் கூடிய இடங்களிலெல்லாம்  லைசால் கலந்த நீரை ஸ்பிரேயரால் (sprayer) தெளிப்பேன். எனது குடும்ப உறுப்பினர்கள் ஒரு வழியாக இறைவன் அருளால் கொசுக்கடியிலிருந்து தப்பித்தனர். 

7. “நல்ல உடல் நலத்தைத் தக்க வைப்பதற்குரிய செயல்களான, வேலை செய்தல், உடற்பயிற்சி, மனப்பயிற்சி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லுதல், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருத்தல் ஆகிய அனைத்தும்  என்னை வழிபாடு செய்து, எனக்கு சேவை செய்வதாகும்” என்று எனக்குள்ளிருக்கும் எல்லாம் வல்லவன் எனக்கு வெளிபடுத்தினான்.

8. என்னிடமிருந்த எல்லா நோய்களும் குணமாகி என்னை விட்டு வெளியேறும் தருணம் நெருங்கி விட்டது. என்னுடைய பகலில் தூங்கும் நேரமும் 2 ½ மணியிலிருந்து 1 ½ மணிநேரமாகக் குறைந்தது. பிற்பகல் 3.30 மணிக்குத் தூங்கி 5 மணிக்கு எழுந்திருப்பேன். பகல் நேரத் தூக்கம் முடிந்த நேரத்திற்கும்  (5pm) இரவு தூங்கப்போகிற நேரத்திற்கும்  (10.30pm) இடைவெளி 4.30  மணிநேரம்தான் (10.30-5.30=4.30) இருந்தது. இரவில் தூக்கம் வரத்தாமதமானதால், இந்த நேரத்தை அதிகப்படுத்தினால் என்ன? என்ற எண்ணம் ஏற்பட்டது.  ஆகவே, பகல் தூக்க நேரத்தை பிற்பகல் 1 மணியிலிருந்து 2.30pm மணிக்கு மாற்றினேன். இதனால் பகல் நேரத் தூக்கம் முடிந்த நேரத்திற்கும்  இரவு தூங்கப்போகிற நேரத்திற்கும் (10.30pm) இடைவெளியை அதிகப்படுத்தினேன் (10.30-2.30=8 மணி நேரம் இடைவெளி). சில நாட்கள் கழிந்தபிறகு, வேலை செய்ய விருப்பமில்லாமலிருந்தது. நடக்கும்போது, உடல் கனமாக இருந்தது. நாளடைவில், பசி எடுக்கவில்லை; சாப்பிடுவதில் விருப்பமில்லாமலிருந்தது; எனக்கு அச்சம் வந்துவிட்டது.

9. 10 நாட்கள் கழிந்தபிறகு, ஒரு நாள் இறைவனின் அசரீரி வாக்கு எனக்குள் மின்னல் வேகத்தில் எண்ணமாக வெளிப்பட்டது. அதன்படி, எனது பகல் தூக்க நேரம் மதியம் 1 மணியிலிருந்து 2.30 மணி. இந்த நேரம் பசி எடுக்கும் நேரம். அந்த நேரத்தூக்கம் பசியை அழுத்தி வைத்துவிடுகிறது. ஆகவே பசி எடுக்காமலே சாப்பிட்டிருக்கிறேன். இதனால் செரிமானம் (digestion) பாதித்து, மேலே குறிப்பிட்ட பசிஎடுக்காமை, உண்பதில் விருப்பமில்லாமை முதலியன தோன்றிவிட்டன. என்னுடைய பகல் தூக்க நேரத்தை அரை மணியாகக் குறைத்து பிற்பகல் 3.30 முதல் 4 மணி வரை தூங்கினேன்.

10. சில நாட்களுக்குப் பிறகு, தூக்கத்திற்குப் பதிலாக அரை மணிநேர மனப்பயிற்சியாக (meditation) மாற்றினேன், இதில், 10 நிமிட மனப்பயிற்சிக்குப் பிறகு 20 நிமிடங்கள் தூங்கிவிடுவேன். இருந்தபோதிலும், இரவில் விழிப்பு ஏற்ட்டது; மறுநாள் சோம்பேரிதனத்தையும், சோர்வையும் உணர்ந்தேன். 10-06-2013 முதல் 12-06-2013 வரை அதாவது 3 நாட்கள் நான் மிகவும் சிரமப்பட்டு பகல் தூக்கத்தைத் தவிர்த்தேன். நான் ஆச்சரியப்படும்படியாக, எளிதாக உடற்பயிற்சி செய்யவும், உடல் கனக்காமல் சுலபமாக நடக்கவும், புத்துணர்ச்சியை உணரவும் முடிந்தது. எனக்குக் கிடைத்த உடல் நலத்தைக்கொண்டு (சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி) என்னால் அதிக வேலை செய்ய முடிந்தது. இறுதியாக, பகல் தூக்கம் கொடுக்கும் நன்மைகளைவிட கெடுதல்கள்தான் அதிகம் என்ற முடிவுக்கு வந்தேன். 13-06-2013 அன்று மனிதவர்க்கத்திற்காக இறைவன் அருளி அளித்த  அரோமணி 8-வது விதி கிடைக்கப் பெற்றேன்.

11. அரோமணி 8-வது விதி ( Aromani 8th Principle):
12. “பகலில் தூங்கும் ஒட்டுமொத்த நேரத்திற்குத் தகுந்தாற்போல நேர்விகிதத்தில் உடல் பலவீனப்படும்; புதிய நோய்கள் தோன்றும்; பழைய நோய்கள் தீவிரமடையும்”. 

13. ஆராய்ச்சியில் இறைவன் எனக்குத் தெரியபடுத்தியதை கீழே கொடுத்துள்ளேன்.

14. காலை எழுந்ததிலிருந்து நமது ஆற்றல் (energy)  அதிகரித்துக் கொண்டே சென்று மதியம் 12 மணிக்கு உச்சத்திற்குச் சென்று பிறகு குறைந்து கொண்டே வந்து, படுக்கைக்குப் போகும்போது மிகக் குறைந்த நிலையிலிருக்கிறது. இதேபோல, செரித்தல்  ஆற்றல் (power of digestion) காலையில் அதிகரித்துக் கொண்டே சென்று மதியம் 12 மணிக்கு உச்சத்துக்குச் சென்று, பிறகு பிற்பகலில் குறைந்து கொண்டே வந்து, படுக்கைக்குப் போகும்போது மிகவும் குறைந்த நிலையிலிருக்கிறது. மேற்குறிப்பிட்ட இரண்டு ஆற்றல்களும் கூடிக்குறைவது, சூரியன் உதயமாகி, 12 மணிக்கு உச்சத்துக்குச் சென்று பிறகு மாலையில் மறைவதோடு தொடர்புள்ளது. சுருங்கச் சொன்னால், மனித ஆற்றல் (human energy) மற்றும் செரித்தல் ஆற்றல் (digestion power) ஆகியவற்றின் கூடிக்குறையும் வேறுபாடு  சூரிய உதயம் மற்றும் மறைவதோடு இணைக்கப்பட்டுள்ளது.

15. மதிய உணவுக்குப் பிறகு தூங்கும்போது, செரித்தல் (digestion) பாதிக்கப்படுகிறது. செரித்தல் பாதிப்பினால், தூங்கி எழுந்தபிறகு, தூங்கி எழுந்தவர் சிறிது நேரம் மனவழுத்தத்திலிருப்பார் அல்லது குழப்பத்திலிருப்பார்; வயிற்றில் மந்த உணர்வை உணருவார். அடிக்கடி தும்மல்களுடன் நீர் மூக்கிலிருந்து வடியும். தூங்கும் நேரத்தின் அளவைப்பொறுத்து மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கூடலாம் அல்லது குறையலாம். பிற்பகல் மற்றும் மாலை நேர வேலையைச் செய்வதற்காக, பகல்நேரத்தூக்கம் ஆற்றலை பகல்நேரத்தூக்கக் காரருக்குக் கொடுத்தாலும், அதற்கு அவர் வெகு நேரம் கழித்துத் தூங்கவேண்டும், இரவை தூக்கமில்லாத இரவாகக் கழிக்கவேண்டும்; மறுநாள் முழுவதுவும் குறைந்த ஆற்றலுடன் வேலை செய்யவேண்டும். இவ்வாறு பகல்நேரத்தூக்கக்காரர் அடைந்த ஆற்றலுக்கு அதிக அளவு விலை (அதிக அளவு ஆற்றல் இழப்பு) அடுத்த நாள் கொடுத்தாகவேண்டும்.

16. என்னுடைய சொந்த வேலை நிமித்தம் சென்னைக்குச் செல்லும்போதெல்லாம், பேருந்துகளில் ஏறவோ, இறங்கவோ, நடப்பதிலோ, . முகவரிகளைத் தேடி அலையும்போதோ சிரமப்பட்டதில்லை; எனது கால்களில் வலிகள் ஏற்பட்டதை நான் உணரவில்லை. சென்னையில் எனது சுறுசுறுப்புக்கும் புத்துணர்ச்சிக்கும் காரணம் தொடர்ந்து இருந்த வேலைகளினால், நான் பகலில் அங்கு தூங்கவில்லை என்பதை இப்பொழுது தெளிவாக அறிகிறேன். ஆகவேதான், சென்னையில் எனது எல்லா வேலைகளையும் முடித்துவிட்ட திருப்தி இருக்கும். 

17. பெங்களூரில் அகில உலக இயற்கை மற்றும் யோகா மருத்துவ மாநாடு (International conference on Naturopathy and Yoga) 09-02-2012 முதல் 12-02-2012 வரை நடந்தது. அதில் நான் கலந்து கொண்டேன். இப்பொழுது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அங்கிருந்த அந்த 4 நாட்களிலும் அதிக உற்சாகத்திலிருந்தேன்; நாள் முழுக்க சோர்வை உணரவில்லை. காரணம் நாங்கள் (தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர்கள்) மாநாடு நடக்கும் இடத்திலிருந்து 50 கி.மீ. தூரத்தில் ஒரு அழகிய அமைதியான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். ஆகவே நாங்கள் நினைத்தாலும் அங்கு மதியம் தூங்கச் செல்லமுடியாது. அந்த 4 நாட்களும் மதியம் தூங்கவில்லை.  

18. ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது இரட்டையான உழைப்பு*ஓய்வு (labour*rest) எனபது மனிதயினம் தோன்றிய காலத்திலிருந்து நடைமுறை யிலிருக்கும் ஒன்றாகும். இயற்கைச் சட்டங்களில் (Natural Laws) இது ஒரு  முக்கியமான கட்டாயச்(mandatory) சட்டமாகும். பகல் நேரத்தில் உழைத்தபிறகு  இரவில் ஒய்வெடுக்க  வேண்டும். மேலே கூறப்பட்டுள்ள கட்டாயச் சட்டத்தை மீறும்பொழுதெல்லாம் எதிர்ச்செயலாக, மேலே குறிப்பிட்டுள்ளதைப் போலவும், கீழே கொடுத்துள்ளதைப்போலவும் நோய்களாக பரிணமளிக்கும்.

19. நமக்கு தூக்கம் ஏன் தேவைப்படுகிறது?
20. தற்காலிக தூக்க இழப்புகூட நமது கவனத் திறமை (ability to concentrate),சிறு சிறு எரிச்சல்களை சமாளிக்குமாற்றல் (cope with minor irritations) மற்றும் பணிகளை நிறைவேற்றுமாற்றல் ஆகியவற்றை வலிமையிழக்கச்செய்து விடும். மேற்குறிப்பிட்ட ஆற்றலிழப்பு நமது உறவுகளுக்கிடையே கருத்து வேறுபாட்டினை உண்டாக்கி பகையை வளர்த்து விடும்.

21. நாம் தூக்கத்தை இழந்துவிட்டால், நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் பணிகளிலும் சாலையிலும் விபத்துக்குட்படுத்தப்படும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்து விடுகிறோம்.  உதாரணமாக, அமெரிக்காவில், தூக்கக் குறைபாடுகள் பற்றிய  தேசிய ஆணையத்திற்காக (National Commission on Sleep Disorders , USA)  தயாரிக்கப்பட்ட   அறிக்கையில், நடந்த விபத்துக்களில் 42% தூங்கியதால் ஏற்பட்டதாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 1988-ல் மொத்தம் நடந்த  2,69,184 விபத்துக்களும், சாலையில் நடந்த 17,687 இறப்புக்களும் தூங்கிக்கொண்டே வண்டிகளை ஓட்டிய டிரைவர்களால்தான் ஏற்பட்டன. அதிக தூக்கக் குறைவுள்ளவர்கள்தான் (chronic insomnia), மற்றவர்களைக் காட்டிலும், பலவிதமான மனப் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர் என்று அமெரிக்காவின் தேசிய தூக்க பவுண்டேசன் (National Sleep Foundation,  USA) அறிக்கை வெளியிட்டுள்ளது.

22.. தூக்கத்தின் பாதிப்புக்களால் மருத்துவத்தொழிலும் பாதிக்கப்படுகிறது. இருதய கோளாறுகளை கண்டுபிடிக்கும் மருத்துவருடைய திறனானது, அவருடைய தூக்கத்தின் அளவைப் பொறுத்தது. சரியான இதயத் துடிப்புகளுக்கிடையில் (normal heart rhythms) உள்ள உடைப்புகளை கண்டறிவதில் (to detect breaks), ஒய்வெடுத்த மருத்துவர்கள்தான் தூக்கக் குறைவுள்ள மருத்துவர்களைக் காட்டிலும் திறைமையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று மற்றொரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. தூக்கத்தை இழந்த மருத்துவர்கள் (sleep-deprived doctors), முடிவெடுக்கத்திணருவதாகவும், தூக்கத்தை இழந்த அறுவை சிகிச்சை மருத்துவர்கள் (sleep-deprived surgeons) செய்யும் அறுவைச் சிகிச்சையில் 1/3 நேரம் ஆற்றல் குறைவும் திறமைக்குறைவும்  காணப்படுவதாகவும் வீடியோ காட்சியில் தெரியவருவதாகவும் இன்னொரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது,

23. தூக்கம் குறைவாக,தூங்கியவர்கள்தான், அநேக விபத்துக்களுக்கும், தவறுகளுக்கும், தவறான முடிவுகளுக்கும் காரணமானவர்கள் என்று ஆராய்ச்சி தெரிவிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதிகநேரத் தூக்கமும் மறுநாள் இரவு தூக்கமின்மையை (insomnia) ஏற்படுத்திவிடும். நல்ல தூக்கம் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். போதுமான அளவு தூங்கும்போது, ஒருவருடைய மனம் புத்துணர்வைப் பெறுகிறது; கற்கும் திறன் அதிகரிக்கிறது. ஆகையால், அவர் நன்கு கற்கிறார்; புரிந்துகொள்வது கடினம் என்று விட்டதையும் புரிந்துகொள்கிறார். அவர் கலந்துகொள்ள விரும்பாத வெவ்வேறு செயல்பாடுகளில் கூட கலந்துகொள்கிறார்.

24. மனவழுத்ததைப் போக்குவதற்கு தூக்கம் சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறது. வெவ்வேறு விதமான மனவழுத்தங்கள் இருக்கின்றன. பகல் நேர கடுமையான வேலையினால் ஏற்பட்ட மனவழுத்தத்தைப் போக்குவதற்கு தூக்கம் உதவியாக இருக்கிறது. நாம் தூங்கும்போது மனவழுத்த ஹார்மோன்கள் (stress hormones) செயலிழந்து விடுகின்றன. இதனால் இரத்த அழுத்தம் (B.P) குறைகிறது.   ஒருவர் பொதுமான அளவு தூங்காவிட்டால், மனவழுத்த ஹார்மோன்கள் (stress hormones) அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, இதனால் இரத்த அழுத்தம் (blood pressure) அதிகமாகி மாரடைப்புகளுக்கு (heart attacks). வழிவகுத்துவிடும். ஆகவே தூக்கம் மனவழுத்தத்தோடு போராடுவதில் நமக்கு உதவி செய்கிறது. எவ்வளவு வேலைப்பளுவிலும் மிகவும் முக்கியமானது தூக்கமாகும். உடல் மனம் ஆகிய இரண்டின் நலத்துக்கும் தூக்கம் அவசியமானதாகும். தூக்கப் பிரச்சன்னைகள் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. அவைகள், வேகமாக மாறிவரும் நவீன வாழ்க்கையில், நமது உடல், மன நலத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

24A. “தூக்கக் குறைவினால், குழந்தைகளுக்கும் வயது வந்தோறுக்கும் (adults) அதிகமாக சாப்பிடக்கூடிய மனப்பான்மை வளர்ந்து அதிகமாக சாப்பிட்டு எடை அதிகரிக்க வாய்ப்புண்டு; தூக்க குறைவுள்ள மக்கள் இன்சுலினை ஏற்றுக்கொள்ளும் திறன் குறைவினால்,  நீரிழிவு நோய் வகை 2 பற்றிக்கொள்ளும் ஆபத்திலிருக்கிறார்கள்.” பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலை கழகம் மற்றும் கொலொராடோ பல்கலை கழகத்திலும் செய்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நன்றி:‘THE HINDU’ தேதி: 16.8.2013 Attachment-1

24B. “வருடக் கணக்கில் தொடர்ந்து இரவில் வேலை செய்யும் பெண்களுக்கு நீரிழிவு நோய் வகை 2 பற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகமுண்டு”, என்று அமெரிக்காவில் செய்த இரண்டு ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக ஜெருசலம் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. நன்றி:‘THE HINDU’ தேதி: 5.9.2013 Attachment-2” 
24C. “நாம் ஏன் தூங்குகிறோம் என்பதை கண்டுபிடித்திருக்கிறோம்; நமது மூளைப் பகுதிகளை சுத்தப்படுத்துவதற்குதான் தூங்குகிறோம்.” என்று தூக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர் அமெரிக்கா ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் மெய்க்கன் நெடர்கார்டு கூறுகிறார். ”நன்றி:‘THE HINDU’ தேதி: 20.10.2013 ”Attachment-3

25. மக்கள் தொகையில் 17% பேர் தூக்கமில்லாப் பிரச்சனையால் (insomnia problem) மிகவும் அவதிப்படுகின்றனர். பொருள் ஈட்ட, விழித்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்த, உடலின் போதுமான தரமான தூக்கத்தின் அளவை விட்டுக்கொடுக்கும் லட்சக்கணக்கான மக்கள், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலையை அறிந்திருந்தால், போதுமான தரமான இரவுத்தூக்கத்திற்கு உயர் முன்னுரிமை கொடுப்பார்கள்.

26. சுறுசுறுப்பான நாளுக்குப் பிறகு அல்லது கடுமையான வேலைக்குப் பிறகு ஏற்படும் தசைச் சோர்வை (muscle fatigue) பழுது பார்க்கும் திறமையை தூக்கம் பெற்றிருக்கிறது. 13 வயதிலிருந்து 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு (Teenager) தூக்கம் மிகவும் நன்மையளிப்பதாக இருக்கிறது. அது அவர்கள் வேகமாக வளர்வதற்கும் முக்கியமாக உயரமாக வளர்வதற்கும் உதவுகிறது.  நாம் தூங்கும்போது, நமது உடல் வேகமாக செல்களை புதுப்பிக்கிறது. இதனால், தசைச் சோர்வைப் (muscle fatigue)  பழுதுபார்க்கும் முறை (process) வேகப்படுத்தப்படுகிறது. இறந்துபோன மயிரின் செல்களுக்கு புத்துயிர் கொடுக்கவும், வேகமாக முடி வளர்வதற்கும் தூக்கம் உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

27. பிறந்த குழந்தை, 24 மணிநேரத்தில், 17 மணி நேரம் தூங்கிக் கழிக்கிறது. 7 முதல் 12 வயதினருக்கு, 10 முதல் 11 மணி வரை சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.  13 வயதிலிருந்து 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு 8 முதல் 9 மணிநேரத் தூக்கமும், மத்திய வயதிலிருப்பவர்களுக்கு 7 மணி முதல் 7.30 மணி நேரத் தூக்கமும் தேவைப்படுகிறது.

28. உடற்பயிற்சிக்கும் தூக்கத்திற்கும் நீண்ட நெடு இணைப்பு உள்ளதாக நிபுணர்கள் உணருகிறார்கள். தூக்கத்தின்போது, சதை வளர்ச்சி (muscle growth), கொழுப்பை எரித்தல் (fat burning), எழும்பு வளர்ச்சி (bone building), திசு புதுப்பித்தல் (tissue repair) ஆகியவற்றை மேற்கொள்ளும்  முக்கியமான ஹார்மோன்கள் (hormones) வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் இல்லாமல், உங்களது உடல் தானாகவே பழுதுபார்த்துக் கொள்ளவும், கடுமையான உழைப்பினால் ஏற்பட்ட சோர்விலிருந்து மீளவோ இயலாது போய்விடும். தூக்கமில்லாத இரவுக்குப் பிறகு, நீங்கள் உடற்பயிற்சி செய்தால், அது உங்களது களைப்பை கூட்டத்தான் செய்யும். தூக்கமில்லாமை உங்களது ஆற்றலைக் குறைத்துவிடும். இதனால் உங்களது வேலையை நல்ல முறையில் செய்ய முடியாது.

29. படுக்கை அறை இருட்டாகவும், குளிர்ச்சியாகவும், வசதியாகவும், இரவு நேர ஓய்வுக்குத் தகுந்தாற்போலவும் இருக்கவேண்டும் என்பதுவும் நாம் அறிவோம். காவின் (caffeine), ஆல்ஹகால் (alcohol), சிகரட் புகையிலிருந்து வரும் நிக்கோடின் (nicotine) ஆகியவை கிளர்ச்சியைத் தூண்டவல்லது. மூளைக்குத் தனது ஆற்றலை திரும்ப ஏற்றிக்கொள்ள, ஒரு ஆழமான மெதுவான அலைத் தூக்கம்(“slow wave” sleep) தேவைப்படுகிறது. மேலே குறிப்பிட்ட பொருட்கள் உண்டாக்கும் கிளர்ச்சி இத்தூக்கத்திற்கு இடஞ்சலாக இருக்கும். 

30. “இரவு 9 மணிக்கு மேல் தூங்கச் செல்வதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்; மனவழுத்தத்தை (stress) வெளியேற்றுங்கள்; குறைந்தபட்சம் படுக்கைக்குப் போவதற்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்னால், உடலளவிலும் மனதளவிலும் தயார்படுத்திக் கொள்ளுங்கள். இது நல்ல தூக்கதின் தரத்தை  உறுதிப்படுத்தும்” என்கிறார் மருத்துவர் இராமகிருட்டிணன். (நன்றி- THE HINDU Dated:20-07-2012),

31. மனவழுத்தமும், அதிகபடியான இரவுச் சாப்பாடும் (Stress and uneasiness due to excessively eating in the dinner), நடு இரவில் விழிப்பை கொண்டுவரும். இவ்விரண்டையும்,  அதற்குரிய மருத்துவ மனப்பயிற்சிகளை (Medicinal Meditations)  செய்து, நடு இரவில் ஏற்படும் விழிப்பைத் தவிர்த்து விடுவேன். 

31A. தகவல் தொழில் நுட்பம் மற்றும் மூளையை பயன்படுத்தி வேலை செய்பவர்களுக்கு மூளை (மனம்) மட்டும் சோர்ந்து போயிருக்கும். ஆனால் உடலும் சோர்ந்திருக்க வேண்டும் அப்பொழுத்துதான் தூக்கம் வரும். ஆகவே தூங்குவதற்கு முன்பு அரை மணி நேரம் வீட்டுப் பால்கனியில் அல்லது மொட்டை மாடியில் நடை பயிற்சி செய்தபிறகு. தூங்க வேண்டும். உடனே தூக்கம் வந்துவிடும்.

31B. பசி எடுக்காமல் சாப்பிடுவதினால் இரவுத் தூக்கம் பாதிக்கப்படும். இது மறுநாள் பகல் தூக்கத்திற்கு வழிவகுக்கும். மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் சாப்பிடும் சிற்றுண்டி நேரத்தில் பசி இருந்தால் சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். இது காலை மதியம் ஆகிய இரண்டு வேளைகளில் பசி இல்லாமல் சாப்பிட்டதை ஈடுகட்டிவிடும். உடல்நலம் கெடுவதிலிருந்து தப்பித்து விடலாம். இரு உணவுகளின் இடைவெளியில் டீ, காபி, குளிர்பானங்கள் அருந்துபவர்கள் பசியை உணரமாட்டார்கள்:. ஆகவே அவர்கள் அனைவரும் பசி இல்லாமலேயே உணவு உண்கிறார்கள் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

32. வெறு வயிற்றில் தூங்காதே!
ஜனவரி, 2013 வரை, நான் சாப்பிடுவது: காலையில் 7 மணிக்கு, சத்து மாவு (சமா) கலந்த பால், 10.30 மணிக்கு, காலைச் சிற்றுண்டி, மதியம் 2.30 மணிக்கு சாப்பாடு, மாலை 6.45 மணிக்கு சமா கலந்த பால், தோசை அல்லது சப்பாத்தி அல்லது இட்லி மற்றும் சமா கலந்த பால், ஆகியவற்றில் ஏதாவது ஒன்று. இரவு 10.30 மணிக்கு சமா கலந்த பால்.

 பிப்ரவரி மாதம் மருந்தில்லாமல் சிகிச்சை அளிக்கும் அரோமணி மருத்துவமனை திறந்த பிறகு காலை 9.30 க்குள் சாப்பிட வேண்டியிருந்ததால், 7 மணிக்கு குடிக்கும் சமா,பாலை நிறுத்திவிட்டேன்.

 33. 13-06-2013 அன்று பகலில் தூங்க கூடாது; தூங்குவது நோய்களைக் கொடுக்கும் என்கின்ற 8-வது அரோமணி விதியை இறைவன் எனக்கு வெளிப்படுத்தினான். ஆகவே பகலில் தூங்குவதை நிறுத்தி விட்டேன். இதனால், இரவு 10.30 மணிக்குப் பதில் 9.30 மணிக்கு தூங்க ஆரம்பித்தேன். இதற்குப் பிறகு எனது சாப்பாட்டு முறை 4  வேளைக்குப் பதில், மூன்று வேளையாக மாறியது- காலை, மதியம், இரவு 6 3/4 மணிக்குப் பதில் 8 மணிக்கு. எனது வயது 71 ஆக இருந்ததால், மூன்று வேளை உணவு போதுமானது என்று நினைத்தேன். 9.30 மணிக்கு தூங்கினால் 20 நிமிடங்கள் ஆகும் தூக்கம் வருவதற்கு. இதற்கு முன்னால்,  படுத்த 5 நிமிடங்களுக்குள் தூக்கம் வந்துவிடும். அதிகாலை 3 மணி, 4 மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விடும். வீட்டிற்குள்ளேயே சிறிய நடைப்பயிற்சிக்குப் பிறகு தூங்கினால், தூக்கம் வந்துவிடும்; தூங்கிவிடுவேன். மறுநாள் காலையில் எழுந்தவுடன் மலம் வெளியேறும் உணர்வு ஏற்படாது. அதற்கும் மருத்துவ மனப்பயிற்சி (medicinal meditation) செய்வேன். பிறகுதான் உணர்வு ஏற்படும். கண்ணாடியைப் பார்த்தால், கண்களில் தூக்கமில்லாத சோர்வு தெரியும்; முகம் சுருங்கிப் போயிருக்கும். எடையும் குறைந்து கொண்டே வருவதையும் உணர்ந்தேன். ஆகவே எனக்கு வியப்பாகவும், குழப்பமாகவும், கவலையாகவும் இருந்தது.

34. 30-08-2013 அன்று எனது கவலையை போக்கவும், புதிய கண்டுபிடிப்பைத் தெரியப்படுத்தவும் நாள் குறித்திருந்தான் அவன். அன்று மதுரையில் மாலை 5 மணிக்கு ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கு 6 மணிக்கு சிற்றுண்டி கொடுத்தார்கள். 3 ½ மணி நேரம் இடைவெளிவிட்டு அன்று  9.30 மணிக்கு இரவு சாப்பாடு சாப்பிட்டேன். உடனே படுக்கைக்கு சென்று படுத்தேன். உடனே தூங்கிவிட்டேன். மறுநாள் முகத்தில் தெளிவு தெரிந்தது. தோல்ச் சுறுக்கம் குறைந்திருந்தது. கைவிரல்கள் புடைத்திருந்தது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

35. அன்றையிலிருந்து மாலை 6 மணிக்கு சிற்றுண்டி, சாப்பிட்டு விட்டு, இரவு 9.30 மணிக்கு அரோமணியின் தொழில் நுட்பத்தின்படி வயிறு நிறைய சாப்பிட்டேன். தூக்கம் உடனே வருகிறது. இடையில் விழிப்பு ஏற்படுவதில்லை. காலையில் எழுந்திருக்கும் போது சோர்வில்லாமல் மகிழ்ச்சியுடன் எழுந்திருக்கிறேன். கண்களைச் சுற்றிலும் உள்ள பள்ளங்களும் மேடாகிக் கொண்டு வருகிறது. எடையும் கூடும் அறிகுறி தெரிகிறது. இதற்கு காரணம் என்ன?. படுப்பதற்கு முன்பு சாப்பிடுவது நல்லதா?. இதற்கு நல்ல ஒரு உதாரணத்தை கொடுக்க முடியும்.

36. அரசு பேருந்துகளை (Govt. buses) பகல் முழுவதும் ஓட்டிவிட்டு, அவைகளை இரவில் . பணிமனைகளில் விட்டு விடுவார்கள். அங்கே, தொழில் நுட்ப பணியாளர்கள் (technicians) சிறிய சிறிய பழுதுகளை சரிபார்த்து, மறு நாள் சாலையில் ஓட்டுவதற்கு தயார் செய்து,  ஓட்டுனர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். இதேபொலத்தான், நாம் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு, உடலை, உடலிலுள்ள பழுதுபார்க்கும் பணிமனையில் ஒப்படைத்து விடுகிறோம். அங்கே, தொழில் நுட்ப பணியாளர்கள்  என்றால்,  இங்கே இரத்தத்திலுள்ள ஆற்றல், உறுப்புகளுடன் சேர்ந்து,  சிறிய சிறிய பழுதுகளை சரிபார்த்து, மறு நாள் பணி செய்ய தயார் செய்து, உடலை நம்மிடம் ஒப்படைத்து விடும்.

37. நான் 3 வேளை சாப்பிட்டபொழுது, இரவு 8 மணிக்கு முன்னால் சாப்பிட்டு முடித்துவிடுவேன். ஒன்றரை மணி நேரம் கழித்து 9.30 மணிக்குத், தூங்கும் போது, ஆற்றல் பற்றாக்குறையால் உட்லில் பழுது பார்க்கும் பணி சரியாக நடைபெறவில்லை. அதனால்தான்,  படுத்தவுடன் தூக்கம் வரவில்லை; கண்களில் தூக்கமில்லாத சோர்வும், கண்களைச் சுற்றிலும் பள்ளங்களும், முகச் சுருக்கம், எடைகுறைவும் எனக்கு ஏற்பட்டது. ஆகவேதான் நமது முன்னோர்கள் ‘வெறும் வயிற்றில் படுக்காதே’ என்று சொல்லியிருக்கிறார்கள். மற்றொன்றையும் சொல்லியிருக்கிறார்கள். “உண்ட மயக்கம் தொண்டனுக்குமுண்டு!” இந்த பழமொழி பகல் தூக்கத்துக்குச் சொல்லப்பட்டதல்ல. இரவுத்தூக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழி. வயிறு முழுக்க சாப்பிட்டவுடன் (அரோமணி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சாப்பிடுவது) ஏற்படும் மயக்கத்துடன் படுக்கைக்குப் போனால், உடனே தூக்கம் வந்துவிடும், அது நல்ல தூக்கமாக அமையும். அப்பொழுது சாப்பிட்ட உணவின் முழு ஆற்றலும், உடலைப் பழுது பார்க்கவும் மீதமிருந்தால் அதை சேமிக்கவும் பயன்படுத்தப் படுகிறது; ஆற்றல் பற்றாக்குறை இல்லை. இந்த சாப்பாட்டிற்கு முன்னால் சிற்றுண்டி மாலை 6.30 மணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே நாம் உண்ணும் 2 பெரிய உண்டி + 1 சிற்றுண்டி உடலுழைப்பிற்கும், 4-வது பெரிய உண்டி உடலைப் பழுது பார்க்கவும், சேமிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது

38. குழந்தைகள் பகலில் தூங்கமாட்டார்கள்; விளையாடிக்கொண்டே இருப்பார்கள்; அதுதான் இயற்கை; நாமும் அவர்களிடமிருந்து பாடம் கற்போம்.

39. மேலே கூறப்பட்டவைகளிலிருந்து, பகல்தூக்கம் இயற்கைக்கு மாறானது. ஆகவே அதனைத் தவிர்க்க வேண்டும் என்பது  இரட்டை மருத்துவத்தில், முதல் மருத்துவமான வாழும் தாய் மருத்துவத்தின் 8-வது அரோமணி விதியாகும். இதைக் கடைப்பிடிப்பதின் மூலம், மனவழுத்தம் (stress), இரத்த அழுத்தம் (B.P), மாரடைப்பு (heart attack) ஆகியவற்றிலிருந்து குணம் பெறுதல், இறந்துபோன மயிர்களின் செல்களைப் புதிப்பித்தல், வேகமாக முடி வளர்தல், இளவயதினர் வேகமாக வளருதல், கற்கும் திறன் அதிகரித்தல், புரிந்துகொள்ளும் திறன் அதிகரித்தல், சோர்வு நீங்குதல், களைப்பு நீங்குதல், சோமபல் நீங்குதல், இதனால் வேலைத் திறன் கூடுதல் ஆகியப் பலன்களைப் பெறலாம். சுருங்கச் சொன்னால், இரவில் மட்டும் தூங்குவது அநேக நோய்களைக் குணப்படுத்தும் அருமருந்தாகும்.


Please visit websites: www.medicineliving.com; www.medicineliving.blogspot.com; Email:twinmedicine@gmail.com 
R.A.Bharaman (Aromani), 9442035291.Attachments-3

 முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: