Tuesday, September 23, 2014

வயிற்றின் அளவுக்கு அதிகமாக அரோமணி விதி 1

               A 225- MLM- Aromani's 1st Principle-  
அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்,சர்க்கரை நோய்களிலிருந்து நலம் பெற மருந்து!  
                           மருந்து.
அரோமணி முதல் விதி.
                        Sound Health of Body and Mind is Spiritual!
                                             Doing (Attentive) Action is God!
                                      Let Live Attentive Life and grow prosperously!
                                              
God's blessing Truths after the research of 27 years.இரட்டை மருத்துவம் (Twin Medicine)

முதல் மருத்துவம் :-வாழும் தாய் மருத்துவம (வா.தா.ம) (24.2.2012)
( First Medicine-Living Mother Medicine-LMM) -
 9 அரோமணி விதிகள்.
அரோமணி முதல் விதி மற்றும் அரோமணி தொழில் நுட்பம்.

செறித்தல் (digestion)
1.பல்வேறு நோய்கள் என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன.அதனால் நான் அடைந்த மனவேதனை அதிகம்; வார்த்தைகளால் சொல்லமுடியாது.  அனைத்து நோய்களுக்கும் மூல காரணம், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதுதான் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் அளவைக் கண்டுபிடிப்பது எப்படி என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. 4-12-1993 அன்று மதிய உணவின்போது, ஒவ்வொரு கவளத்தையும் நன்றாக மென்று (25 முதல் 30 முறை) சாப்பிட்டேன். ஒரு ஏப்பம் வந்தது. அப்பொழுது “சாப்பிடுவதை நிறுத்து! இதுதான் அளவு!” என்ற குரல் எனக்குள் கேட்டது. எனக்கு வியப்பாக இருந்தது. அன்றுதான் அரோமணி முதல் தத்துவமும் மற்றும்  தொழில் நுட்பம் பிறந்தது.


அரோமணி தத்துவம்-1 (Aromani Principle-1): வயிற்றின் அளவுக்கு அதிகமாக உண்ணும் உணவின் அளவுக்கு நேர்விகிதத்தில் உடல் வலிமை குறையும்; வலிமை குறைந்த உடலில் புதிய நோய்கள் தோன்றும்; பழைய நோய்கள் தீவிரமடையும்.

பெரிய பெரிய கட்டிடங்கள், பாலங்கள், அணைகள் ஆகியவற்றைக் கட்டுவது, இயந்திரங்களை வடிவமைப்பது, மக்களின் அன்றாட உபயோகப் பொருட்களை வடிவமைப்பது, மக்கள் அணியும் சட்டைகள், பேண்ட்கள் வடிவமைப்பது, செருப்புகளை வடிவமைப்பது மற்றும் பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் அரிசி போட்டு சமைப்பது வரை ‘அளவு’ என்ற கோலைப் பயன்படுத்தி தான் எல்லாக் காரியங்களையும் செய்து வருகிறோம். ஆனால் மனிதர்கள் மட்டும் வயிற்றின் அளவுக்குக் கூடாமல் சரியான அளவில் சாப்பிடுவதில்லை. உணவின் சுவையில் மனம் சலிக்கும் வரை (ஆசை தீரும் வரை) சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடுவதுதான் அளவாகச் சாப்பிடுவது என்று நினைக்கிறார்கள்.

அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்?

‘அற்றால் அளவறிந்து உண்க’ என்கிறார் திருவள்ளுவப் பெருமான்.

ஜிப்புள்ள பையில், துணிகளை அளவுக்கு அதிகமாக தொடர்ந்து அழுத்தி அழுத்தி வைத்தால், ஜிப் கிழிந்து பை விரைவில் பழுதுபட்டுவிடும்.

வெட்கிரைண்டரில் தொடர்ந்து அதிக அளவு அரிசியையும் உளுந்தையும் போட்டு ஆட்டி வந்தால், பெல்ட், மின் மோட்டார் முதலியன பழுதுபட்டு விடும்.

பஸ்ஸில் தொடர்ந்து அதிக அளவு பயணிகள் பயணம் செய்தால், பஸ் விரைவில் பயனற்றுவிடும்.

எந்த ஒரு பொருளானாலும், இயந்திரமானாலும் அதனுடைய கொள்ளளவுக்கோ, திறனுக்கோ அதிகமான அளவில் பயன்படுத்தினால், விரைவில் பழுதுபட்டுவிடும்.

இதேபோலத்தான், மக்களும் மூன்று நேரங்களிலும் அளவுக்கு அதிகமாகத்தான் சாப்பிடுகிறார்கள். இதைத்தவிர இடையில் சிறிய அளவில் டீ, காபி, வடை ஆகியவற்றை நொறுக்குத்தீனியாக எடுத்துக் கொள்கிறார்கள். இவவாறு அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால்தான் மக்களுடைய உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக சேதத்துக்குள்ளாகின்றன. சேதத்தினால் நோய்கள் உற்பத்தியாகின்றன. அந்தமாதிரி சேதமாகும் உறுப்புக்களில் ஒன்றுதான் கல்லீரல். அதன் பாதிப்பால், அதில் சுரக்கும் இன்சுலின் குறைந்து சக்கரைச் சத்து நோய் (diabets) தோன்றி விடுகிறது.

அனைத்துப் பத்திரிகைகளும் மருத்துவப் பத்திரிகைகள் உட்பட மற்றும் தொலைகாட்சிகளும் (T.V), காலையில் குறைவாகவும் (light) ஆகவும், மதியம் அதிகமாகவும் (heavy), இரவு  குறைவாகவும் (light) உண்ணுவது உடல் நலத்திற்கு நல்லது என்கிறது. ஆனால், குறைவு (light) என்பது 8 இட்லிகளா அல்லது 6 இட்லிகளா என்று தெளிவாகச் சொன்னால்தான் அந்த வார்த்தைக்கு முழு அர்த்தம் கிடைக்கும். அதேபோல மதியம் கூடுதல் (heavy) என்பது 500 கிராம் அல்லது 750 கிராம் உணவா என்று தெளிவாகச் சொல்ல வேண்டும். உதாரணமாக 8 இட்லிகள்தான் வயிற்றின் கொள்ளளவு என்றால் அதற்குக் கீழ் 7, 6, 5 இட்லிகளை குறைவு (light) என்று சொல்லலாம்.

இன்னும் சில பத்திரிகைகள் எப்பொழுது சாப்பிட்டாலும் வயிற்றில் அரை பங்கு உணவு, ¼ பங்கு தண்ணீர், ¼ பங்கு காலியிடம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்குகின்றன.

வயிற்றில் ஒரு பங்கு இரண்டு பங்கு என்று எங்கே பிரிப்பது? வயிற்றில் பிரித்து வெளிப்பாகத்தில் பிரித்தப் பாகங்கள் தெரியும்படியாக அளவுகள் போடப்பட்டிருக்கின்றனவா? அப்படிப் பிரித்துப் போடப்பட்டிருந்தாலும், வயிற்றிற்குள் நிரம்பிக் கொண்டிருக்கின்ற உணவுப் பதார்த்தங்களை வெளியிலிருந்து பார்க்கும்படியாக் நமது வயிறு கண்ணாடியால் செய்யப்படவில்லையே! அப்படியானால் இந்தப் பாகங்களை எப்படிக் கண்டுபிடிப்பது.

வயிற்றின் கொள்ளளவை கண்டுபிடிக்கமுடியுமா?

வயிற்றின் கொள்ளளவை கண்டுபிடிக்க தெரியாததால்தான், மக்கள் எல்லா நேரமும் வயிற்றின் அளவுக்கு (capacity) அதிகமாகவே சாப்பிடுகிறார்கள். பறவைகளும், மிருகங்களும், மற்ற உயிரினஙகளும் வயிற்றின் அளவறியும் தொழில் நுட்பமறிந்து அளவுடன் உண்கின்றன; நலமாக இருக்கின்றன. மனிதன் நெருப்பின் உபயோகமறிந்து சமைத்து சாப்பிடும்வரை (புதிய கற்காலம் வரை) வயிற்றின் அளவுக்கு மிகாமல்தான் சாப்பிட்டு வந்தான். அந்தக் காலத்திற்குப் பிறகு, சமைத்த உணவின்சுவையினாலும், சமுதாய அமைப்பில் விளைந்த மன அழுத்தத்தாலும், வயிற்றின் அளவறியும் தொழில் நுட்பத்தை மறந்து, அதிகமாகச் சாப்பிட ஆரம்பித்தான்.

ஒரு பானையில் நீர் வழிந்தால், பானை நிரம்பிவிட்டது என்கிறோம். இதேபோல, வயிறு நிறைந்துவிட்டதை எப்படி கண்டுபிடிப்பது. இதற்குத்தான் அரோமணி தொழில்நுட்பத்தை 04-12-1993-ல் இறைவன் எனக்கருளினான். அன்றையிலிருந்து இன்றுவரை இத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உணவருந்தி வருகிறேன். எனக்கிருந்த பல நோய்களிலிருந்து குணம் கிடைக்கப் பெற்றேன்.
அரோமணி தொழில் நுட்பம் (Aromani Technique)8. 

 ஒவ்வொரு கவள (handful of food) உணவையும் 25 முதல் 30 முறை மென்று சாப்பிடவேண்டும். காபி, டீ முதலிய திரவ உணவையும் 30 முறை அசைபோட்ட பிறகே விழுங்க வேண்டும். ஏனென்றால் அதுவும் உணவுதான். அப்படி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு ஏப்பம் (belching) வரும். இது முதல் ஏப்பம். இதற்கு மேல் சாப்பிட்டால், வயிறு மந்தமாக உணர்ந்தால், முதல் ஏப்பத்துடன் சாப்பிடுவதை நிறுத்திவிடவும்.

 இதற்குமேல் ஒரு 6 கவளங்கள் வரை சேர்த்துச் சாப்பிட்டால் 2-வது ஏப்பம் வரும். இதற்கு மேல் சாப்பிட்டால், வயிறு மந்தமாக உணர்ந்தால், 2-வது ஏப்பத்துடன் சாப்பிடுவதை நிறுத்திவிடவும். மேலும் 6 கவளங்கள் சாப்பிட்டால் 3-வது ஏப்பம் வரும். 3-வது ஏப்பத்தில் வயிறு மந்தமாக உணர்ந்தால், 2-வது ஏப்பத்தோடு நிறுத்திவிடவும். 3 ஏப்பங்கள் வந்தபிறகும் வயிறு மந்தமாக உணராவிட்டால், தொடர்ந்து. பசி உணர்வு மறையும் வரை சாப்பிடவும். ஆகவே சாப்பிடும்பொழுது, உணவை 30 முறை மெல்லுவதிலும், ஏப்பம் வருவதைக் கவனிப்பதிலும். பசி உணர்வு மறைவதைக் கவனிப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இதனால், சாப்பிடும்பொழுது பேசவோ, செய்தித் தாளைப் படிப்பதோ, T.V. பார்ப்பதோ கூடாது
  T.V. பார்த்துக் கொண்டே சாப்பிட கூடாது ஏன்? T.V. பார்த்துக் கொண்டே சாப்பிடுவதால், உங்களது கவனம் அதில் காட்டும் நிகழ்ச்சிகளில் நிலைத்திருக்கும். ஆகவேசிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்தம் (Special Reserved Blood)’ சாப்பிடும் வேலையைச் செய்யும் உறுப்புகளான கை, வாய், நாக்கு, தொண்டை, உணவுக் குழல், இரப்பை ஆகிய உறுப்புக்களுக்குப் போகாமல், மூளைக்குச் சென்று விடுகிறது. இதனால், அவ்வுறுப்புக்கள் தேய்மானமடைந்து, நோய்களுக்குள்ளாகின்றன. அவ்வாறு வரும் நோய்கள்தான் கை வலி,பல் வலி, பல்லீரல் வலி, ஈரல் தேய்மானம்,  வாய்க் கோணல், திக்கிப் பேசுதல், , பற்கள் விழுதல், தொண்டை, இரப்பை நோய்கள் முதலியன. 

மேலே சொன்னபடி சாப்பிடும் பொழுது, 8 இட்லிக்கு ஏப்பம் வருகிறதென்றால், 4 இட்லி சாப்பிட்டவுடன் அரை வயிறு நிரம்பிவிட்டது என்று சொல்லலாம். ..

இப்பொழுது வயிற்றின் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால்தான், அதனால் ஏற்படும் அசவுகரியத்தைப் (uneasiness) போக்க வெற்றிலை பாக்குப் பொடுதல், பொடி பொடுவது, புகையிலை பயன்படுத்துதல், சிகரட் பிடிப்பது போன்ற உடலுக்குக் கெடுதி செய்யும் செயல்களைச் செய்கிறார்கள். அரோமணி தொழில் நுட்பத்தின்படி சாப்பிட ஆரம்பித்து விட்டால், அப்பழக்கங்களை நிறுத்திவிடுவார்கள்.

30 முறை மென்று சாப்பிட வேண்டும். ஏன் தெரியுமா?

உமிழ்நீர் (saliva) ஒரு மருந்துக்குச் சமமான ஒரு திரவம். விரலில் பிளேடால் தெறியாமல் அறுத்துவிட்டால், இரத்தம் சொட்டும். அந்த விரலை அப்படியே வாயில் வைத்துச் சிறிது நேரம் சப்பினால், இரத்த ஒழுக்கு நின்றுவிடும். இதே போல உடம்பில் அரிப்பு ஏற்பட்டுக் காந்தினால் காந்துகின்ற இடத்தில் எச்சிலைத் தடவினால், காந்தல் குறைந்து, அரிப்பு நின்றுவிடும். உடம்பில் சிறு புண்கள் இருந்தால், அவைகளில் எச்சிலைத் தடவிக் கொண்டே வந்தால், அந்தப் புண்கள் ஆறிவிடும். எச்சிலால் பெரிய வெட்டுக் காயத்தைக் கூட குணப்படுத்திவிட முடியும். ஆனால் அந்த அளவுக்கு உமிழ்நீர் கிடைக்காது. ஆகவேதான் வேறு மருந்துகளை நாடுகிறோம்.

ஏப்பம் வருவதற்கு உமிழ்நீர் தூண்டுகோலாக இருக்கிறது. 30 முறை மெல்லும்போது, போதுமான உமிழ்நீர் உணவுடன் கலந்து, வயிற்றிலிருந்து ஏப்பம் வெளிவர தூண்டிவிடுகிறது. மேலும் அதிக அளவு மெல்லுவதால் உணவு நன்றாக அரைபட்டு சரியான கூழாகிறது. அரைக்கும் வேலையைச் செய்யும் இரைப்பையின் வேலையை வெகுவாகக் குறைக்கிறது. இதனால் ஜீரண சக்தி அதிகமாகிறது.

போதுமான உமிழ்நீர் உணவுடன் கலக்காவிட்டால் ஏப்பம் வராமல் நின்று விடும். அப்பொழுது அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலை ஏற்பட்டு விட்டால் அஜீரணக் கோளாறில் ஆரம்பித்துத் தொடர்ச்சியாக மலச்சிக்கல், நெஞ்சுச் சளி, காய்ச்சல், தலைவலி என்று ஆரம்பித்து இறுதியில் ஜீரண உறுப்புக்களான குடல்கள், கல்லீரல், கணையம், உணவு மண்டல உறுப்புக்கள் என்று வரிசையாக சேதமடைய ஆரம்பிக்கின்றன. இதில், இன்சுலின் சுரக்கும் உறுப்பும் பாதிக்கப்பட்டுச் சர்க்கரைச் சத்து வியாதி தோன்றி நிரந்தரமாகிவிடுகிறது.

சர்க்கரைச் சத்து வியாதி மட்டுமல்லாமல், இதர அனைத்து நோய்களும் தோன்றுவதற்கு, வயிற்றின் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதுதான் மூலகாரணமாகும்.

ஆகவே அளவுடன் சாப்பிடுவது ஒன்றுதான், சர்க்கரைச் சத்து நோயை உண்டாக்கும், பழுதடைந்த இன்சுலின் சுரக்கும் உறுப்பை குணப்படுத்தும் அருமருந்தாகும்.

அரோமணி தொழில் நுட்பத்தின் படி சாப்பிட்ட ஒரு பெரிய டாக்டரின் கருத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

“அரோமணியின் தொழில் நுட்பத்தினால், எனக்கிருந்த வியாதியிலிருந்து நல்ல குணம் தெரிந்தது. எனது நோயாளிகளையும் இதனைக் கடைப்பிடிக்கும்படி அறிவுரை கூறிவருகிறேன். உண்மையிலேயே, இது மனிதவர்க்கத்திற்கு ஒரு நல்ல செய்தியாகும். இந்தத் தொழில் நுட்பம் உலகம் முழுவதும் பரப்பப்படவேண்டும்.”

நன்றி:-டாக்டர் கனகசபாபதி, MBBS., FCIP. MNAMS., MD., இராமையா நர்சிங்ஹொம், 4, காலனி (குறுக்குச் சாலை) புதிய வண்ணாரப்பேட்டை, சென்னை-600081.

‘20 லிருந்து 30 முறை மென்று சாப்பிடும்போது, குறைவான உணவே தேவைப்படுவதாகவும், மகிழ்ச்சியை தரக்கூடிய உணவாக இருப்பதாகவும்,’ கிங்ஸ்டன் ரோடு ஐலண்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நன்றி: ‘THE HINDU’ தேதி: 20.7.2008.


மத்திய அரசு இத்தொழில் நுட்பத்திற்கு ஒப்புதல் அளித்து, மக்களின் நலத்திற்காக இதனைப் பரப்பும்படி அறிவுறுத்தியிருக்கிறது.

அரோமணியின் தொழில் நுட்பப்படி, வயிற்றின் அளவுக்கு மிகாமல் சாப்பிடும்போது, சர்க்கரைச் சத்து வியாதி உட்பட அனைத்து நோய்களிலிருந்தும் குணம் பெறலாம். For details please read the book 'Disease and medicine at one place only' published by kovai VIJAYA PATHIPPAGAM; PH: O422-2394614.


Medicinal Meditation Expert                                      
Er.R.A.Bharaman (Aromani)

Copy right to Er.R.A.Bharaman @ Aromani
Please visit the websites:
www,medicineliving.com;
www,medicineliving.blogspot.com;



Attachments-3

     
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: