Monday, September 22, 2014

பயனுள்ள நடை


A 239 MLM-அவிதி 4
         மருத்துவ நடைப்பயிற்சி
   பயனுள்ள மருத்துவ உடற்பயிற்சி  அல்லது நடைபயிற்சி (walking) எது?
1.உடற்பயிற்சியாக இருந்தாலும், மனப்பயிற்சியாக இருந்தாலும் அறிவியல் பகுதி, ஆன்மீகப்பகுதி என்று இரண்டு பகுதிகள் இருப்பதை ஏற்கனவே பார்த்தோம்.

2. உடற்பயிற்சியில் அறிவியல் பகுதி (science part).
உடற்பயிற்சிக்கு உதாரணமாக நடைப்பயிற்சியை எடுத்துக் கொள்வோம். மக்கள், ஆண்களாயிருந்தாலும், பெண்களாயிருந்தாலும், பெரும்பாலும்  நடைப்பயிற்சி செய்யும் போது நண்பர்களுடன் பேசிக் கொண்டே நடப்பார்கள் அல்லது தனியாக நடந்தால், எதையாவது யோசித்துக் கொண்டே நடப்பார்கள். பேசிக்கொண்டே அல்லது யோசித்துக் கொண்டே நடப்பதால், சிறப்பு ஒதுக்கப்பட்ட அதிகபடியான இரத்தம் {சிஒஅஇ(SREB)} வேலை செய்யக்கூடிய முக்கிய உறுப்புகளான இரண்டு கால்கள், இடுப்பு ஆகியவற்றிற்கு போகாமல், மூளைக்குச் சென்றுவிடுகிறது. இதனால்அவ்வுறுப்புகள் தேய்மானத்திற்குள்ளாகி, நோய்வாய்ப்படுகின்றன. பேசிக் கொண்டேயும், யோசித்துக் கொண்டேயும் நடக்கும் நடைப்பயிற்சியால் எந்தப் பயனும் இல்லை. கெடுதல்தான் ஏற்படும்; இந்த நடைப்பயிற்சியில் ஆன்மீகப் பகுதியே இல்லை. அது இல்லை என்றால், அறிவியற் பகுதியும் இருக்காது. ஆகவே அதனுடைய செயல்பாடான, நடப்பதால் முக்கியாக கால்களுக்கு ஏற்படும் வலியை குறைக்கச் செய்யாது; மனவழுத்தங்களும் வெளியேறாது. 

3. பயனுள்ள மருத்துவ் நடைப்பயிற்சி எது?
அறிவியல் பகுதியும், ஆன்மீகப் பகுதியும் சேர்ந்திருக்கும் நடைப்பயிற்சிதான் பயனுள்ள மருத்துவ நடைப்பயிற்சியாகும்.

4. நடைப்பயிற்சியில் அறிவியல் பகுதி (science part)).
நடைப்பயிற்சியின் போது யாருடனும் பேசிக்கொண்டோ அல்லது எதையாவது யோசித்துக் கொண்டோ நடக்கக்கூடாது.  நமது கவனம் முழுக்க நடையில் இருக்க வேண்டும். வேறு எண்ணங்கள் வரும்போதெல்லாம் அவற்றை நிறுத்தி மீண்டும் மீண்டும் நடையில் கவனத்தைச் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது, சிறப்பு ஒதுக்கப்பட்ட அதிகபடியான இரத்தம் {சிஒஅஇ(SREB)} நடக்கக்கூடிய முக்கிய உறுப்பான கால்களுக்கும் மற்ற துணை உறுப்புகளுக்கும் சென்று ஆற்றலை அந்த உறுப்புகளின் செல்களுக்குக் கொடுத்து, உராய்வினால் ஏற்படும் தேய்மானத்தைத் தடுத்து, அதனால் ஏற்படும் நோயை தடுக்கிறது. இது அறிவியலால் ஏற்படும் பயன்.

5. நடைப்பயிற்சியில் ஆன்மீகப் பகுதி (Spiritual part).
நடையில் கவனத்தைச் செலுத்தும்போது, மேல் மனம் நடையினால் ஏற்படக்கூடிய சிரம உணர்வையும் (வலியிருந்தால், வலி உணர்வையும்) மனவழுத்த எண்ணங்களையும் எடுத்துக் கொண்டு, தனக்குள் கீழ்நோக்கி  ஆழத்தை நோக்கி பயணிக்கிறது. அப்படி பயணிக்கும்போது, தன்னிடமிருக்கும் சிரம உணர்வையும், மனவழுத்த எண்ணங்களையும் (stressed thoughts) வெளியேற்றிக் கொண்டே செல்லும். அது மிகவும் ஆழத்திற்குச் செல்லுகின்றபோது, தன்னிடமுள்ள சிரம உணர்வையும், மனவழுத்த எண்ணங்களையும் முழுவதையும் வெளியேற்றிவிட்டு, காலியாக இருக்கும். இந்த காலியான மேல்மனது ஆழ்மனதுடன் அங்கே (இறைவனுடன்) ஐக்கியமாகிறது. இணைந்த மனசு, (நடப்பதால் ஏற்படும் சிரம உணர்வு/வலி இல்லாமல், (மனவழுத்தங்களும் இல்லாமல்)      முழு நித்திய ஆற்றலை (eternal energy) எடுத்துக் கொண்டு, பெரு மகிழ்ச்சியுடன், இலேசான மனதுடன் அடுத்த  வேலை செய்வதற்கு தயாரான (வளைத்த வில்லில் அம்பை பொருத்தியிருக்கும் நிலை) நிலையில்  வெளிவருகிறது. இதுதான் ஆன்மீக இயக்கத்தால் உண்டான பயனாகும்.

6. நாள் முழுக்க உட்கார்ந்து பணி செய்பவர்களும், மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களும்  ஒரு நாளைக்கு இரு வேளை நடைப்பயிற்சி செய்வதால், மறு நாள் காலையில் இலகுவாக மலம் இறங்கி வெளி வரும்.

7. ஒருவர் ¾ மணி நேரம் வெயிலில் நடந்து வந்து, 10 நிமிடங்கள் ஓய்வுக்குப் பிறகு வேலை செய்யும் நிலையிருந்தால், அவருக்கு எந்த நோயும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

Please visit websites: www.medicineliving.com; www.medicineliving.blogspot.com; Email:twinmedicine@gmail.com
R.A.Bharaman (Aromani), 9442035291.















முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: