Tuesday, September 23, 2014

அரோமணி விதி 5 பசி எடுக்காமல் சாப்பிடும் உணவு


A 229-அரோமணியின் 5-வது விதி-
அரோமணி 5-வது விதி (Aromani 5th  Principl

1. எனது எடை குறைவாக இருந்தது. அதற்காக சாப்பிட்டு 1 ½  முதல் 2 மணி நேரம் கழித்து காலையிலும் பிற்பகலிலும் ஒரு பூஸ்ட் அல்லது காம்ப்லான் அல்லது போன்விட்டா கலந்த பால் மட்டும் அருந்தினேன். தேவைப்பட்டால் ஒரு ரொட்டியை பாலில் தொட்டு சாப்பிடுவேன். சளி மட்டும் நடு நடுவே வந்து போய்க் கொண்டிருந்தது. இளப்பும் அப்போதைக்கப்போது தலையை காட்டிச் செல்லும். இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை.

2. சூளை மாதம், 2005 ல் முதல் வாரத்தில் ஒரு நாள் ரயிலின் பயணத்தின் போது பால் கிடைக்கவில்லை. அதனால் காலையிலும் பிற்பகலிலும் அருந்த வேண்டிய பாலை அருந்தவில்லை. அலுவல்களின் நெருக்கடி காரணமாக அடுத்த நான்கு நாட்களிலும் இடையில் பால் அருந்த முடியவில்லை. ஆறாவது நாள் 12.7.2005 ல் நான் ஆச்சரியப்படும்படியாக சளி நிறையவே குறைந்திருந்தது. அன்றுதான் ஒரு உணவுக்கும் அடுத்த உணவுக்கும் இடைவெளி 4 மணி நேரம் இருக்க வேண்டும் என்ற ஆணித்தரமான அரோமணியின் ஐந்தாவது விதியை இறைவன் வெளிப்படுத்தினான்



4. உடலில் உணவுச் சத்துக்கள் குறைந்து வருகின்றன என்பதை உணர்த்தவே செரிமான மண்டலம் பசி உணர்வை உருவாக்குகிறது. சாப்பிட்டு 3 ½ மணி நீரம் ஆனவுடன் ஒரு ஏப்பம் வரும். இந்த ஏப்பம் வருவதை நாம் துல்லியமாகக் கவனிக்க முடியும். இந்த ஏப்பம் வந்தவுடன் பசி எடுக்க ஆரம்பிக்கும். சாப்பிட்டு 4 மணி நேரம் ஆனவுடன் வயிறுதீஆகக் காந்துகிறது என்போம். அதாவது அப்பொழுது நல்ல பசியாக இருப்பதையே இப்படிச் சொல்லுவார்கள். இந்த 4 மணி நேரத்திற்கு இடையில் சிற்றுண்டியோ அல்லது காபி, டீ, முதலிய பானங்களையோ சேர்த்துக் கொள்ளலாமா? என்பதுதான் கேள்வி.






6. வயிற்றின் அளவறிந்து உட்கொள்வதற்கு அரோமணி தொழில் நுட்பம் கைகொடுக்கிறது. செரித்த பிறகு உண் என்கிறார். அதாவது செரிப்பதற்கு 4 மணி நேரம் பிடிக்கிறது. ஆகவே 4 மணி நேரம் கழித்து உண்! என்கிறார் வள்ளுவர். அதாவது இடைத்தீனி, டீ, காபி உட்பட சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் என்னவாகும். அதற்கு ஒரு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன்.




7. அப்படி செய்தால், நன்றாக அரைபட்ட மாவோடு அரைகுறையாக ஆட்டப்பட்ட குருனை மாவும் கலந்த நிலையிலிருக்கும். இப்படிப் பட்ட மாவு இட்லி தோசைக்கு நன்றாக வருமா? இதேபோல நமது வயிறு தன்னிடம் வந்து சேர்ந்த உணவுப் பண்டங்களை சுரப்பி நீர்களின் உதவிகொண்டு அரைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு தொழிற்சாலையில் நடைபெரும் பணியைப்போல தொடர் வேலை நடக்கிறது. இந்தப் பணி முடிய 4 மணி நேரம் ஆகும். 2 மணி நேர இடைவெளியில் உணவுப் பண்டங்களை வயிற்றிற்குள் போட்டால், நன்றாக அரைபட்ட உணவுப் பண்டமும், அரைகுறையாக அரைபட்ட உணவுப் பண்டமுமாகச் சேர்ந்து, உணவின் ஆற்றலில் சிதைவு அல்லது சேதம் ஏற்படும். இந்தச் சேதம் கீழே கூறப்பட்டுள்ள நோய்களை கொண்டுவரும்.


8. சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல் இருந்து விடுகிறது. இதனால் ஜீரணமாகாத பொருள்கள் புளித்தல், அழுகுதல், (Fermentation of Carbohydrates Puterfaction of Protein) காரணமாக வயிற்றில் உப்புசம் (Flatulence) ஏற்பட்டு சுகக் குறைவை (uneasiness) உணர்வோம். வாயைத் திறந்து பேசினால் துர்நாற்றம் வீசும். பசி எடுக்காமல் போவது, புளிச்சி ஏப்பம் (acid erectation), பித்த மயக்கம் (bliousiness), குமட்டல் (nausea) வாந்தி எடுத்தல் (vomiting), வயிற்றுப் பகுதியில் இரைச்சல் கேட்பது, மலச்சிக்கல் போன்றவை ஆரம்பத்தில் தோன்றும் நோய்களாகும்.

9. சிறிது முற்றிய நிலையில், நீங்காத தலைவலி, கண்பார்வை மங்குதலோடு, வாந்தியும் சேர்ந்திருக்கும். இரைப்பைப் புண் இருக்கும்போது உணவை அரைப்பதும் சரிவர நடக்காது. இந்நிலையில் பசியின்மை ஏற்படும். வாந்தியையும் உண்டாக்கும். இரைப்பையின் புற்றுநோய், இரத்த புற்று நோய் ஆகியவை பசியின்மையை ஏற்படுத்தும். சிறு குடல் பாதிப்பு ஏற்படும். இதனால் பேதி உண்டாகும்.

10. மேலும் உணவிலுள்ள சத்துப் பொருள்களை இரத்தத்தில் கலக்க செய்ய இயலாமல் போய்விடுகிறது. இதனால் செரிமான கோளாறு நோய் ஏற்படும் (Mal absorption Syndrome).

11. சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பது இவைகளின் காரணமாக அதிக பசி இருக்கும். உணவு அதிகமாகச் சாப்பிட்டாலும் எடை கூடாமல் குறையக் கூடும்.

12. குடல் புளுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் உடலில் பாதிப்பு ஏற்படுகிறது. கல்லீரல் பழுதடைகிறது. பித்தக் குழாய் தடைபடுகிறது. இதனால் கொழுப்பு உணவை செரிமானம் செய்ய இயலாமல் பசியின்மை ஏற்படுகிறது. அப்போது கல்லீரலின் கரணை நோய் மற்றும் மகோதரம் போன்ற நிலைகளினால் பசியின்மை, பித்த மயக்கம், வயிற்றுப் பகுதி பெருத்துப் போதல் முதலிய அறிகுறிகள் தெரியும். கணைய அழற்சி ஏற்படுகிறது. இதனால் பசியின்மை பேதி உண்டாகிறது. வயிற்று உள்ளுறை (peritonium) காசநோயினால் பாதிக்கப்படுகிறது. இதனால் பசியின்மை, வயிறு உப்புசம் ஆகியவை ஏற்படும். நன்றி- மீனாட்சி மருத்துவ மலர், ஜூலை 2005 மற்றும் எனது ஆராய்ச்சியில் கிடைத்த அனுபவம். இவ்வளவு நோய்களும் நமக்கு வரவேண்டுமா!

மேலும் உங்களது சிந்தனைக்கு ஒன்றைக் கூறுகிறேன். நன்றாக கொதித்துக் கொண்டிருக்கும் அரிசி பாத்திரத்தில் யாராவது புதிதாக அரிசியை போடுவார்களா?

மாலை 5-6 மணிக்குள் சிற்றுண்டியாக ஒரு வடையும் பாலும் குடிக்கும் பழக்கம் S.S.L.C. படிக்கும்போது (1959-1960) ஏற்பட்டது. விடுதியில் தங்கிப்படித்த நான், நன்றாகப் படித்து மார்க் வாங்கவேண்டும் என்பதற்காக, எனது விடுதிக்கு அருகில் உள்ள ஹோட்டலில் எனது குடும்பத்தார் அக்கவுண்ட் வைத்துக் கொடுத்தார்கள். அதில் மாலை நேரம் வந்தவுடன் அங்கு சிற்றுண்டி சாப்பிட்டுச் செல்வேன். மதுரையில் மதுரைக் கல்லூரியில் விடுதியில் தங்கி P.U.C (1960-1961) படித்துவந்தேன். மாலை நேரத்தில் சிற்றுண்டியாக  ஒரு காபி கொடுத்தார்கள். மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில் படிக்கும்போது (1962-1967) மூன்று வேளை உணவு மட்டும் விடுதியில் சாப்பிடலாம். மாலை நேர சிற்றுண்டி கல்லூரியில் டோக்கன் முறையில் காபியுடன் வடை, கேக், சம்சா என்று பல வகை உணவுப் பண்டங்கள் கிடைக்கும். நான் காபிக்கு மட்டும் டோக்கன் வாங்கி வைத்து குடித்து வந்தேன். அதற்குப்பிறகு தொடர்ந்து பசி இருக்கோ இல்லியோ அதொரு சடங்காக, கடமையாக சாப்பிட்டு வந்தேன். நான் மட்டுமல்ல இன்று அனைத்து மக்களும் அப்படித்தான் சாப்பிட்டு வருகிறார்கள். 20-2-2016 அன்றுதான் நான் எனது உடலின் மொழியைக் கேட்டேன். அதாவது அன்று மாலை 6 மணிக்கு பசி உணர்வு இருக்கா என்று தற்செயலாக உற்றுக் கவனித்தேன். பசி உணர்வு இல்லை என்று அறிந்தேன். அப்படியானால், “ஏன் சிற்றுண்டி எடுத்துக்கொள்ளவேண்டும்?” என்ற எண்ணம் ஏற்பட்டது. அன்று சிற்றுண்டிக்கு மூடு விழா நடத்தினேன் மறுநாள் எனது உடலில் இருந்து கொண்டிருக்கும் சிறு சிறு வலிகளும், எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கும் அசவுகரிய உணர்வும் காணாமல் போய்விட்டன. நடப்பதில் ஏற்படும் சிரம உணர்வு நன்றாகவே குறைந்திருந்தது. இரவில் சிறுநீர் கழிக்க தூக்கத்தைக் கெடுத்து எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அன்றையிலிருந்து மாலை சிற்றுண்டி நேரத்தில் உடலின் மொழியை அறிந்து பசி உணர்வு இருந்தால் சிற்றுண்டி எடுத்துக் கொள்வேன். இல்லாவிட்டால் சிற்றுண்டியை தவிர்த்து விடுவேன். உடல்நலம் நன்றாக இருக்கிறது

.ஒவ்வொரு உணவு வேளை வரும்பொழுதும் உங்களுடைய வயிற்றுடன் பேசுங்கள்; அதனைக் கவனியுங்கள்; பசி உணர்வு இருந்தால் சாப்பிடுங்கள்; இல்லாவிட்டால் உணவைத் தவிர்த்து விடுங்கள். நோய்கள் உங்களை அண்டுவதற்குப் பயப்படும் இரண்டு உணவு வேளைகளிலும் மறந்து பசி எடுக்காமல் சாப்பிட்டுவிட்டால், பரவாயில்லை. மாலை சிற்றுண்டியை தவிர்த்து விடுங்கள். கெட்டுப்போகும் உடல்நலம் சரியாகிவிடும்.  

13. ஆகவே ஒரு உணவுக்கும் அடுத்த உணவுக்கும் இடைவெளி 4 மணி நேரம் விட்டு பசி எடுத்த பிறகு உண்ண வேண்டும். . இந்த இடைவெளியில் தாகத்திற்குக் குடிக்கும் தண்ணீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. இது அரோமணியின் 5 வது தத்துவ விதியாகும்.  இதை கடைபிடிப்பதின் மூலம் மேலே கூறப்பட்ட நோய்களிலிருந்து குணம் பெறலாம்.
“காலை உணவு 7-9 மணிக்குள். பிறகு  4 மணி நேர இடைவெளிவிட்டு மதிய உணவு. பிறகு இதே இடைவெளி கொடுத்து மாலை நேர ஸ்நாக்ஸ் (சுண்டல் உள்ளிட்டவை). பிறகு இதே இடைவெளி கொடுத்து இரவு உணவு. இரவு உணவு மற்றும் காலை உணவுக்கு 12 மணிநேர இடைவெளி (Breakfast). இப்படி சாப்பிடும்போதுதான், உடலானது அடுத்தடுத்த வேலைகளைச் சரிவரச் செய்வதற்கு தகுந்தாற்போல தயாராக இருக்கும்,” என்று உலகலவில் புகழ்பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த செப் சுல்தான் மொகைதீன் கூறுகிறார். நன்றி: சா.வடிவரசு, அவள் விகடன், 
தேதி:26-8-14

Please visit websites: www.medicineliving.com; www.medicineliving.blogspot.com; Email:twinmedicine@gmail.com
Healer, Medicinal Meditation Expert, Er.R.A.Bharaman (Aromani), 9442035291.







முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: