Thursday, September 18, 2014

மூன்று வார்த்தைகள்-12!   வாழ்க்கை அகராதியிலிருந்து (dictionary) எடுத்தெறிய வேண்டிய மூன்று வார்த்தைகள்!       

C  251-MM 2- கவனவாழ்க்கை 12-      
இரட்டை மருத்துவம்-மருத்துவ மனபயிற்சி மருத்துவம் பகுதி 2 
                                                    Attentive  Life-12
                     
                   கவன வாழ்க்கை 12

 1. மேல் மனம் (top mind), ஆழ்மனதுடன் (Sub conscious mind) இணையவைக்கும் முயற்சியைத்தான் (effort)எல்லாவகை மனப்பயிற்சிகளும் (தியானம்-meditation) மேற்கொண்டுள்ளன.  

2. தியோசோபிகல் சொஸைட்டி என்னும் உலகலாவிய ஆன்மீக நிறுவனத்தை நிறுவிய அன்னை அன்னிபெசண்ட் அம்மையாரின் வளர்ப்பு மகன் J.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உலக முழுவதும் பயணம் மேற்கொண்டு  விழிப்புணர்வு (அக்கண வாழ்க்கை) வாழ்க்கையைத்தான் வற்புறுத்தி வந்தார்.

3. “மனச்சிதறல்கள் நீக்கப்பட்ட ஒரு நிலையுடன் முழு வாழ்க்கையைப் புரிந்து கொள்வதுதான் தியானம் (மனப் பயிற்சி)- மகான் J.K.

4. “எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்மானிப்பதற்கான புத்திசாலித்தனம் உங்களிடம் இல்லையா?

ஒன்று செய்யுங்கள். இப்போது எந்தச் செயலில் இருந்தாலும், அதில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். செய்வதை நூறு சதவீத ஈடுபாட்டுடன் செய்தால், உங்கள்  உள்ளுணர்வு உங்களைச் சரியான பாதைக்குத் தானாக அழைத்துச் செல்லும்.
-சத்குரு ஜக்கி வாசுதேவ்.(நன்றி-ஆனந்த விகடன்)

5. . “அமெரிக்க நாடுகளில் இன்று அதிகம் பேசப்படுவதும் பயன்படுவதும் ‘உள்ளுணர்வு காட்டும் வழி என்னும் முறைதான்
-எம்.எஸ்.உதயமூர்த்தி, மக்கள் சக்தி இயக்கத் தலைவர்.

6.. When your attention wanders, bring it back to the contemplation of your good or goal. Make a habit of this. This is called disciplining the mind.
-Dr.Joseph Murphy, U.S.A. in the book ‘The Power of your Sub conscious mind.
good or goal என்பதை இங்கு வேலை அல்லது செயல் அல்லது தொழிலாக எடுத்துக்கொள்ளலாம். கவனமுடன், விழிப்புண்ர்வுடன் செயல்படுவதை ‘மன ஒழுங்கு என்கிறார், அமெரிக்கர் டாக்டர் ஜோசப் மர்பி. இதையே நமது மகான்கள் ‘மனவளம் என்கிறார்கள்.

7. கற்பனை (பகற்கனவு), திட்டமிடுதல், யோசித்து முடிவெடுத்தல் ஆகியவை இல்லாவிட்டால்
வாழ்க்கையின் முன்னேற்றம் தடைபடுமா?

தடைபடாது. முன்னேற்றம் பல மடங்கு அதிகரிக்கும். பறவைகள் விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை. அவைகள் வாழவில்லையா? மேலே குறிப்பிட்ட மூன்றும் மேல் மனதில் உள்ள அறிவினால் செயல்படுகிறது. இது, மனம் அலைபாய்தலை நீடிக்கவிட்டால் ஏற்படும் அபாயமாகும். நீடிக்கவிடாமல் தடுத்துவிட்டால், இறைவனின் அறிவுவேலை செய்ய ஆரம்பிக்கிறது. உங்களுக்காக, மனம் அலைபாய்தலிலேயே, இறைவன் பகற்கனவு காண்கிறார்; திட்டமிடுகிறார்; முடிவெடுக்கிறார். ஆனால், உங்கள் முன்னேற்றத்திற்காக இறைவன் காணும் பகற்கனவும், திட்டமிடுதலும், மனம் அலைபாய்தலில் சில நொடிகள்தான் இருக்கும். ஆனால், அந்த பகற்கனவும், திட்டமிடுதலும் எந்த அப்பழுக்கும் இல்லாமல் நிறைவேறும். உங்கள் பிரச்சனைக்கு மனம் அலைபாய்தலில் முடிவு கிடைக்கும்; பெற்றேர்களிடமிருந்தும், சகோதர, சகோதரிகளிடமிருந்தும், மனைவியிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும்; இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்களின் விளையாட்டிலிருந்தும் நல்ல முடிவு கிடைக்கலாம்;. தெருவில் செல்லும் இருவர் உரையாடலிலிருந்தும் கிடைக்கலாம; டி.வி. நிகழ்ச்சிகளிலிருந்தும் கிடைக்கலாம்.

8. நான் தூத்துக்குடியில் அனல்மின் நிலையத்தில் செயற்பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, கடலின் செடி, கொடி, பாசிகளினால் பிரச்சனை ஏற்பட்டது. அந்தப் பிரச்சனைக்கு எனக்கு டி.வி. நிகழ்ச்சி ஒன்றிலுருந்துதான் ஒரு நல்ல முடிவு கிடைத்தது. ஆகவே மேற்கூறியவாறு முடிவைப் பெறுவதற்கு பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். அவசரப்பட்டு யோசிக்க ஆரம்பித்துவிடக் கூடாது.

மனதினுள் தேடும் விடைகளுக்கு சில சமயங்களில் வெளியிலிருந்து விடை கிடைக்கின்றனவே! அது எவ்வாறு சாத்தியமாகிறது?

9. ஓய்வு பெற்றபிறகு, மதியம் தூங்கும் பழக்கமிருந்தது. அப்படித் தூங்கினால், 2 மணிநேரத்துக்குத் தூங்கியபிறகுதான் எழுந்திருக்க முடியம். ஒரு மணி நேரத்திற்கு மேல் தூங்காமல் எழுந்திருக்க விரும்பினேன். அலாரக் கடிகாரத்தைப் பயன்படுத்த எனது மனைவி ஆலோசனை கூறினார். எனக்கு இந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லை. எனக்கு காவலாளியாகவும், சேவகனாவும், வேலைக்காரனாகவும், ஆலோசகராகவும், பாதுகாவலராகவும் செயல்படும் இறைவன் தங்கியுள்ள ஆழ்மனம்(sub-conscious mind) இருக்கும் போது, நான் ஏன் அலார மணியை நாடவேண்டும்!

10. ஒரு மணி நேரத்திற்குள் தூக்கத்திலிருந்து எழுந்து விடவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே படுப்பேன். சரியாக ஒரு மணி நேரம் கழித்து எழுப்பப்பட்டு விடுவேன். பிற்பகல் 3.15 க்குப் படுப்பேன். எழும்போது பார்த்தால், மணி 4.15 இருக்கும். மறுநாள் எறும்பு காதுக்குள் சென்றதினால் எழுந்து விடுவேன். அப்பொழுது நேரத்தைப் பார்ப்பேன். நேரம் 4.15 மணி இருக்கும். படுக்கும்போது எனது படுக்கையில் எறும்பு ஊறின அடையாளமே இருந்ததில்லை. ஒரு நாள், எனது மனைவி வந்து, கதவைத் தட்டி, ஒருவர் என்னைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்லி எழுப்பும்போது, நேரம் 4.15 மணி ஆக இருக்கும். இன்னொரு நாள் திடீரென்று நாய்கள் அல்லது ஆட்கள் போடும் சத்தங்களினால் எழுந்து விடுவேன். அப்பொழுது நேரம் 4.15 மணி ஆக இருக்கும். இவ்வாறு என்  மனதில் நினைப்பது வெளி உலக நிகழ்வு மூலம் நிறைந்தேறுவது, எவ்வாறு என்று, பல நாட்கள் நான் வியப்பில் மூழ்கியிருக்கிறேன்.

11. இதற்கு விளக்கத்தினை இறைவன் தெள்ளத் தெளிவாக விளக்கி எடுத்துரைத்தான். அது ‘மனமானது இந்த அண்டத்தின் (Universe) விரிவாக்கம்தான் (extention) என்பது தான். இரண்டும் தனித்தனி அல்ல. ஆகவேதான், மனதினுள் நினைப்பது, வெளியிலிருந்தும் நடந்தேறுகிறது. மனதினை ஒரு குட்டிப் பிரபஞ்சம் என்கிறார் மகான் ஓஷோ.

12. ஆகவே ஒரு நாள் முழுவதும் செய்யும் வேலையில், கவனமுடன் (with attention) விழிப்புணர்வுடன் (awareness) இருங்கள். வேலை செய்யாத நேரங்களில் படிப்பது, டி.வி. பார்ப்பது, விளையாடுவது, நண்பர்களுடன் உரையாடுவது, மாலை நேரங்களில் பறவைகள் கூடுகளுக்குத் திரும்பும் காட்சி போன்ற இயற்கைக் காட்சிகளைக் காண்பது, போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.

13. இரவுப் படுக்கையில் படுத்தவுடன், உங்களின் செயல் என்ன என்று எண்ணிப்பாருங்கள்! படுத்திருப்பது ஒரு செயல். உதாரணமாக அறையின் மேல் கூரையை பார்த்தபடி மல்லாக்கப் படுத்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது, முதுகின் கீழ்ப்பாகம் அழுத்தத்திலிருக்கும். அந்த அழுத்தத்தை மனதில் நினைத்துக்கொண்டே தூங்கவேண்டும். சிறிது நேரத்தில் தூக்கம் வந்துவிடும். இதனால் தூக்கம் வருவதுடன், முதுகுத்தண்டும் வலிமை பெறுகிறது. இதேபோல பக்கவாட்டில் படுத்தாலும், அப்பொழுது ஏற்படும் அழுத்ததை மனதில் நினைத்துக் கொண்டே தூங்கினால், தூக்கம் தானாக வந்துவிடும். எந்தச் சூழ்நிலையிலும் கற்பனை செய்வது, திட்டமிடுவது, சிந்தித்து முடிவெடுப்பது ஆகிய மூன்றையும் தவிர்த்துவிடுங்கள். சும்மா யோசித்துக் கொண்டு இருந்தேன்; தனிமையில் யோசித்க் கொண்டிருந்தேன் என்ற வார்த்தைகளை, உங்களது வாழ்க்கை அகராதியிலிருந்து எடுத்து விடுங்கள். எனது இந்த ஆராய்ச்சிக் கருத்தை பிரிட்டீஷ் உளவியல் ஆராய்ச்சியாளர் டிஜ்க்ஸ்டெர்கூயிஸ், அம்ஸ்தர்டம் பல்கலைக்கழகம், லண்டன், அவர்கள் தனது ஆராய்ச்சியில் பிரதிபலிக்கிறார்.  அவர் மிகவும் சிக்கலான பிரச்சனைக்கு முடிவு எடுக்க வேண்டுமா? நினைப்பதை நிறுத்திவிடுங்கள்! ஒரு பிரச்சனையைப்பற்றி அதிகமாக எண்ணும்போது, மோசமான முடிவுகளுக்குக் கொண்டு செல்கிறது!என்கிறார். உதாரணமாக, ஒருவர், நேரமின்மையால், கார்களைப்பற்றி ஆராயாமல் ஒரு காரை வாங்குகிறார். அந்தக் கார் நன்றாக அமைந்து, நீண்ட காலம் பிரச்சனை இல்லாமல் உழைக்கிறது. ஒருவர் எஞ்சினின் அமைப்ப்பு, ஒரு லிட்டர் எரிபொருளுக்குக் கொடுக்கும் தூரம் ஆகியவற்றைப் பரிசீலித்து, ஏற்கனவே கார்கள் வாங்கியவர்களிடம் அறிவுரை பெற்று, மிகவும் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அந்தக் கார் அடிக்கடி பிரச்சனைகள் கொடுக்கக்கூடியதாக அமைந்துவிடுகிறது. உணர்வற்ற மனதின் (ஆழ்மனதின்) (Unconscious mind)   திறமைக்கு அளவில்லை. உணர்வற்ற மனதின் எண்ணத்தின்போது, ஏராளமான தகவல்களை ஒருங்கிணைத்து,  ஒரு மதிப்பீடு செய்த சுருக்கமான நல்ல முடிவை அளிக்கிறது  (Thanks to THE HINDU dated: 18-02-2006.)

14. நீங்களும் இன்றே இக்கணத்தில் வாழும் அல்லது நிகழ்காலத்தில் வாழும் (living presently) முறைக்கு மாறுங்கள். குழந்தைகளை வளர்க்கும்போது இம்முறைக்கும் பயிற்சி கொடுங்கள்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் இறைவனால் குறிக்கோள் வழங்கப்படும். புதியன (new thing) படைப்பார்கள்.சாதனை படைத்து, இவன் தந்தை என்நோற்றான் கொல்! எனுஞ் சொல், என்ற வள்ளுவன் வாக்குப்படி பெற்றோரின் புகழையும், பரப்புவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

15. இரட்டை மருத்துவம் (Twin Medicine) புதிய வாழும் முறைக்கு, கவன வாழ்க்கை முறைக்கு மாறுவதற்கு, அடிப்படை அமைத்துக் கொடுப்பதுடன், நோய்களை விரைவில் குணப்படுத்தவும், வராமல் தடுத்தும் விடும்; நிரந்தர நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்; பிரச்சனைகளுக்கு குழப்பமற்ற நல்ல முடிவுகள் கிடைக்கும்; மனவழுத்தமற்ற வாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையில் நெருக்கமான தாம்பத்திய வாழ்க்கை, எதிர்மறை உணர்வுகள்  நீக்கப்பட்ட வாழ்க்கை, விபத்துக்கள் நீங்கிய வாழ்க்கை ஆகியவை உறுதிசெய்யப்படுகின்றன. வேலை செய்யும் திறமை 100%க்கு மேல் அதிகரித்து, தொழில் சிறக்கும்.  செல்வமும் அதிகரிக்கும். இறைவனின் பாதுகாப்பு வளைத்துக்குள் கொண்டுவரப்பட்டு, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பாதுகாப்புடன் கூடியமுன்னேற்றம் கிடைக்கும். கவன வாழ்க்கையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வயது வரம்பு கிடையாது..

16. ஒருவர் கவனவாழ்க்கை வாழும்போது, அதன் நன்மை, அவரது குடும்பத்துக்கு மட்டுமல்லாமல், அவரது நலன் நாடுபவர்களாகிய உறவினர்கள், நண்பர்கள் ஆகிய 100 பேர்களுக்கு நன்மை கிடைக்கும்.   உலகின் 1% மக்கள் தொகை கவனவாழ்க்கைக்கு மாறினால் உலகை ஒரு சமாதான அமைதிப் பூங்காவாக மாற்றிவிட முடியும். அதற்கு அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்(NGO)  கவனவாழ்க்கை முறையை மக்களிடையே பரப்ப உதவ முன்வர வேண்டும்.

17. இரட்டை மருத்துவத்தில், அனைத்து நோய்களுக்கும் 9 மனபயிற்சிகள்தான் இருக்கின்றன. ஒருவருக்கு நீண்டகால நோய் ஒன்று இருந்தால், அதற்குரிய மனபயிற்சியை செய்து நோயை குணபடுத்திகொள்ள முடியும் அந்த மனபயிற்சி,  கவனவாழ்க்கைக்கு மாறுவதை சுலபமாக்கிவிடும்.. அதற்குபிறகு வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கேளிக்கைகளில் விருப்பம் குறைந்து வேலைசெய்வதில் ஆர்வம் கொள்வீர்கள். வீண்வம்பு, விதண்டாவாதம் ஆகியவற்றிற்கு இடம் கொடுக்க மாட்டீர்கள். வாழ்க்கையைப்பற்றிய எதிர்காலபயம் நீங்கிவிடும். உங்களது குறிக்கோளை அடைவதற்கு குறுக்கிடும் தடங்கல்கள் ‘சூரியனைக் கண்ட பனிபோல்’ விலகிவிடும். இன்பமும் துன்பமும் உங்களின் உடல்மன நலத்தை பாதிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி கூடிக்கொண்டே வந்து, முழு உடல்மன நலத்திற்கு கொண்டுவந்துவிடும். தாம்பதய உறவு சிறக்கும். உங்களது ஒவ்வொரு செயலிலும் இறைவன் உங்களோடு இருந்து, உங்களுக்கு உதவுவதை உணர்வீர்கள். சுற்றியுள்ள மனிதர்கள், ஊடகங்கள்,  மூலம் உங்களுக்கு வேண்டிய தகவல்களை, பிரச்சனைகளுக்கு முடிவுகளை தருவார். சில சமயங்களில் உங்களுக்கு நேரிடையாகவும் தருவார். நீங்கள் அவரோடு பேசலாம்; அவர் உங்களோடு பேசுவார்.
                                  
                        ஆர்.எ.பரமன்(அரோமணி)    
                                                                              
                       (Er.R.A.Bharaman alias Aromani)          
                                      cell:9442035291
Please visit the following websites: nomedicine-tamil.com, For English- twinmedicine.com 

copyright to R.A.Bharaman alias Aromani.

 
   

முந்தைய விளம்பரம்
First

0 Post a Comment: