Saturday, September 20, 2014

புகழ்பெற்ற நடிகை! -8

எட்டு முறை திருமணம் செய்தும் உடலுறவில் (sex) திருப்தி அடையாத உலக புகழ்பெற்ற நடிகை! 


C 247-MM 2-க.வா 8-இம           எட்டுமுறை திருமணம் செய்திருக்கிறேன்ஆனால்உண்மையிலேயே குறுகிய காலத்தைத் தவிரதாம்பத்திய உறவில் எனக்கு இன்பம் கிட்டியதில்லை!” இரட்டை மருத்துவம்-மருத்துவ மனபயிற்சி மருத்துவம் பகுதி 2
            Twin Medicine- Medicine of Medicinal Meditation II-ATTENTIVE LIFE 8-TAMIL   
                   கவன வாழ்க்கை 8.

திட்டமிடுதல்

1.திட்டமிடுதல் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையை அமைத்துக் கொடுக்குமா, கொடுக்காதா! மனிதன் மூன்றுவிதமான கால நேரங்களில் அநுபவப் படுகிறான். அவற்றில், இறந்த காலம் ஒருவனுக்கு பயனில்லாத காலம்; செல்லாக் காசு;கடைக்காரனிடம் அதைக் கொடுத்து எந்தப் பொருளையும் வாங்க முடியாது. நிகழ்காலம் மட்டும்தான் அவன் செயல்படக்கூடிய காலமாகும்; செல்லுகின்ற காசாகும். நிகழ்காலத்திலும் அவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிற நேரம்தான் (இக்கணம்தான்) அவனுக்குப் பயன்தரக்கூடிய நேரம். அதுதான் அவனுக்கு நிகழ்காலமாகும். அந்த நேரத்தைத் தாண்டியிருக்கிற அடுத்த நொடிகூட எதிர்காலத்தைச் சேர்ந்தாகும். அந்த எதிர்காலமும், அந்த நேரத்திற்கு (இக்கணத்திற்கு) பயனோ, செல்வமோ கொண்டுவராது. ஆகவே அவனுக்குக் கிடைக்கின்ற நேரத்தைப் பயன்படுத்தி, அவன் தனக்கு வேண்டிய பொன்னையோ, பொருளையோ, மண்ணையோ, மங்கையையோ மற்ற தனக்கு மகிழ்ச்சியளிக்கும் இன்பந்தரும் எதையோ தேடிக் கொள்ளலாம்.

2. “மெய்யறிவு உள்ள மனிதனுக்கு நிகழ்காலம்தான் அதிமுக்கியமானது.‘இக்கணமே’ (presently) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; நாளை அன்று. இப்பொழுது நிகழும் கணத்திலே மனதின் செயல்பாட்டை புரிந்து கொள்வதே அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த முழுமையான மாற்றமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது”.
மகான் J.கிருஷ்ண மூர்த்தி. JK பவுண்டேசன்.

ஆகவே, திட்டமிடுவது என்பது ஒரு குறிக்கோளைத் தொலை நோக்காகக் கொண்டு எதிர்காலத்தில் செய்யக்கூடிய செயல்களைஇக்கணத்தில் (செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரம்)’ வடிவமைப்பதாகும்.

3. பன்னீர்செல்வம் ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குள் வீடு கட்டி முடித்து குடியேறத் திட்டமிடுகிறான். ஆனால், அவன் திட்டமிட்டபடி நிதி கிடைப்பதில் காலதாமதம், வீட்டு மனையில் சட்டச் சிக்கல், வீட்டை கட்டும் ஒப்பந்தக்காரர் ஏமாற்றி இடையிலேயே விட்டுச் செல்வது, இதனால் பெரு இழப்பு என பல இடர்பாடுகளைச் சந்தித்து வீட்டை கட்டி முடிக்கிறான். முடித்தவுடன், கடனுக்கு வட்டி ஏறுதல், கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமை என்று பல துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்க நேரிடுகிறது. ஆகவே திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை!. திட்டமிட்டதினால் அவனுக்குக் கிடைத்தப் பரிசு என்ன தெரியுமா? ஒப்பந்தக்காரர் மீது கோபம் கொள்கிறான்; அவரைப் பழிவாங்க நினைக்கிறான். கடனைத் திருப்பிக் கேட்பவர்களுக்குப் பயந்து ஓடி மறைகிறான்; உலகத்தையே வெறுக்கிறான்; இறுதியில் தன்னையே வெறுக்கிறான்; இவ்வுலகில் வாழ்வதேவேஸ்ட்என்று நினைக்கிறான். ஆகவே திட்டத்தின் மறுபக்கம் எதிர்மறைக் குணங்கள்தான். இந்தகுணங்களினால், மனவழுத்தங்கள் அவனுக்குள் குடிபுகுந்து விடுகின்றன. மனவழுத்தங்களின் மறுபக்கம் நோய்கள்தான் என்று சொல்லத் தேவையில்லை.

4. திட்டமிட்டபடி லாபம் கிடைக்காமல், நஷ்டத்திலிருக்கும் வியாபாரி, லாபத்துடன் கடை நடத்திக் கொண்டிருக்கின்ற எதிர்க்கடைக்காரரை அழிக்கத் திட்டமிடுகிறார்.

5. ஒருவர் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கோடித் தொகையை லாபமாக எடுத்து வருகிறார். அந்தத் தொகைக்குக் கூடுதலாக ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்க்கிறார். இதற்கு பங்கம் ஏற்படுவதுபோல மற்றொருவர் அவர் நடத்தும் நிறுவனங்களில் ஒன்றினை அருகிலேயே புதிதாக ஆரம்பிக்கிறார். பல நிறுவனங்களின் அதிபர்ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் லாபம் குறைந்துவிடப்போகிறதே!’ என்று கோபம் கொண்டு, புதிதாக நிறுவனம் தொடங்கிய தொழிலதிபரை கூலி ஆட்களை வைத்து கொலை செய்துவிடுகிறார். திட்டமிடுதலினால் விளையும் எதிர்பார்த்தல்ஒரு கொலை செய்வதில் முடிந்து விடுகிறது.

6. ஒரு குடும்பத்திற்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றையும் இறைவன் வரையறுத்து(limit) வைத்திருக்கிறான். அதிகமாக உண்ணமுடியாது; அப்படி உண்டால் நோய்கள் வந்துவிடும்; குடியிருக்கும் பகுதியில் நிலவும் தட்ப வெட்ப நிலைக்குத் தகுந்தாற்போல்தான் உடை உடுத்துவதுதான் உடலுக்கு நல்லது. இந்தியாவுக்குப் பருத்தி உடைதான் உடல் நலத்துக்கு நல்லது. இருப்பிடம்- குடும்பத்திலுள்ள அனைவருக்கும் போதுமான காற்றோட்டமான அறைகள் வேண்டும். ஒவ்வொருவருக்கும் அறையில் 6’*4’ அளவுள்ள கட்டில், மெத்தை, தலையணைகள் போதும். இதற்குமேல் தேவையில்லை. இவ்வாறு இறைவன் மனிதனின் தேவையை குறுக்கி, சுருக்கி வைத்திருக்கிறான்.

7. ஒவ்வொருவரும் மேற்குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதோடு, சேமிப்பாக வருவாயில் 20% ஒதுக்கலாம். இதற்கு மேல் எவ்வளவு வருவாய் வந்து சொத்துக்கள் சேர்த்தாலும், கோடி கோடியாக வந்தாலும், போன ஆண்டு 500 கோடி, இந்த ஆண்டு 1000 கோடி வந்தது; அடுத்த ஆண்டு 5000 கோடி வரும் என்று எண்ணிக்கையைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கலாமே தவிர அதன் பயன்பாடு ஒன்றுமே இல்லை. இந்த ஆண்டு 1000 கோடி லாபம் வந்திருக்கிறதே என்று படுக்கும் கட்டிலின் அளவை 6’*4 லிருந்து 6’*6 அல்லது 6’*8 என்று கூட்ட முடியுமா? அப்படி கூட்டினால், “கணவனுக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பிருக்கு; அதனால்தான் கட்டிலைப் பெரிதாக்கி, இடைவெளிவிட்டு தன்னிடமிருந்து விலகிப் படுக்கிறார்”, என்று மனைவி மனதிற்குள்ளே எண்ணி, மனவழுத்தத்தை வரவழைத்துக் கொள்வாள். குடும்பத்தில் மகிழ்ச்சி போய்விடும். வாரிசுகளுக்கு(தவறான வழியில் சேர்த்த) சொத்துக்களைச் சேர்த்து வைக்காதீர்கள்; அவர்களுக்குத் தேவைகளைச் சேர்த்து வையுங்கள்.

8. 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலேயே மிகவும் வலிமை பொருந்திய நாடாக ஸ்பெயின் நாடு விளங்கியது. மேற்கிந்தியத் தீவுகளையும், அமெரிக்காவையும் கண்டுபிடித்த நாடு; அவைகளை ஆண்ட நாடு. அந் நாட்டின் வல்லமை மிக்க அரசராக முதலாம் சார்லஸ் விளங்கினார். ஐந்தாம் சார்லஸ் பட்டத்துடன் புனித ரோமப் பேரரசையும் ஆட்சிபுரிந்தார். ரோமப் பேரரசர் தேர்தல் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்படுவார். இப்பதவிக்கு முதலாம் சார்லஸைத் தவிர, இங்கிலாந்து மன்னர் 8 ஆம் ஹென்றியும், பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்ஸிசும் போட்டி போட்டனர். வோட்டுப் போடும் உரிமையுள்ள ஜெர்மானிய சிற்றரசர்கள் பெருந்தொகைகளை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டே முதலாம் சார்லசுக்கு ஓட்டுப் போட்டு வெற்றிபெறச் செய்தனர். இதனால் ஐரோப்பாவிலேயே உள்ள இரு பெரும் வங்கிகளில் பெரும் தொகையைக் கடனாகப் பெற்றார் சார்லஸ். சார்லஸின் பேரரசு ஐரோப்பா முழுவதும் அதற்கு அப்பாலும் விரிந்து கிடந்தது. அமைதியோ ஓய்வோயின்றி 40 ஆண்டுகள் இடைவிடாது போர்களையும் பூசல்களையும் சமாளிக்க வேண்டியிருந்ததால், சார்லசுக்கு அரச பதவியே கசந்தது. விரக்தியடைந்த நிலையில், தனது பேரரசை தனது மகனுக்கும், தம்பிக்கும் பகிர்ந்தளித்து விட்டு, ஸ்பெயினில் ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் சேர்ந்து, விரைவிலேயே மரணமுற்றார். திட்டமிட்டுப் பல வெற்றிகளைக் குவித்த ஒரு மாபெரும் சக்கரவர்த்திக்கு ஏன் மகிழ்ச்சி கிட்டவில்லை!

9. மனைவியை திருப்தி செய்யவேண்டியது ஒவ்வொரு கணவனின் கடமையாகும். எலிசபெத் டெய்லர் உலகப் புகழ்பெற்ற நடிகை; இங்கிலாந்து நாட்டின் மகாராணி வைத்திருந்த நகைகள், வைரம், வைடூரியம் போன்ற விலையுயர்ந்த பொருட்களின் அளவுக்கு அடுத்தடியாக எலிசபெத் டெய்லர்தான் வைத்திருந்தார். லட்சக்கணக்கான கோடி ரூபாய் பெருமான கலைப் பொருட்களைச் சேகரித்து வைத்திருந்தார்.

10. அவர் வாழ்ந்த் தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றி என்ன சொல்கிறார்? ஒரு முறை தாஜ்மகாலைப் பார்வையிட்டபோதுஇந்த மாதிரி ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுவதற்கு அவர் (சாஜஹான்) அவளை (மும்தாஜை) எந்த அளவுக்குக் ஆழமாகக் காதலித்திருக்க வேண்டும்!” என்று கண்ணீர் மல்க வியந்து கூறியிருக்கிறார். அவர் ஏன் அவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்? தனது திருமண வாழ்க்கையைப் பற்றிநான் எட்டுமுறை திருமணம் செய்திருக்கிறேன். ஆனால், உண்மையிலேயே குறுகிய காலத்தைத் தவிர, தாம்பத்திய உறவில் எனக்கு இன்பம் கிட்டியதில்லை!” என்று வருத்தமிகுந்து கூறியிருக்கிறார். உலகப் பணக்கார முதல் வரிசையில் உள்ள ஒருவர் எதற்காக ஏங்கினார்? நல்ல தாம்பத்திய உறவுக்கு ஏங்கினார்!

11. ஒவ்வொருவரும் மனைவிக்குத்தாஜ்மஹால்மாதிரி நினைவுச் சின்னம் கட்ட வெண்டுமென்றால், அவர்கள்  ‘கவன வாழ்க்கை’ வாழ்ந்தால்தான் முடியும். அந்த அளவுக்கு அந்நியோநியத்தையும் அன்பையும் இருவருக்கிடையில் செழிக்க வைப்பது கவன வாழ்க்கைதான்.

12. மனைவியை திருப்தி செய்யவேண்டியது ஒவ்வொடு கணவனின் கடமையாகும். இது நல்ல குடும்ப வாழ்க்கைக்கு இறைவன் அளித்த கட்டளைகளில் முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு செய்யத் தவறினால், அவன் அக்குடும்பத்திற்கு அந்நியனாகிவிடுகிறான்; தனிமைப்படுத்தப்படுகிறான்; உதாசீனப்படுத்தப்படுகிறான்.

13. லட்சியத்தில் பிடிப்புள்ளவராக இருக்கலாம்; கட்சியில், பதவியில் உயர்ந்த இடத்தில் இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரையும் தாங்கி நிற்கும் அடிக்கட்டிடம் நல்ல தாம்பத்திய உறவுதான் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

14. செய்தியில் வந்த தகவல். கொள்கைப் பிடிப்புள்ள, தேசிய அளவிலான கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர், “கட்சியின் உயர்வுக்கு உழைத்த நான், அதன் மூலம் பல உயர் பதவிகளைப் பெற்ற நான், என் குடும்பத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன். என் சாவுக்கு யாரும் காரணமில்லை”, என்று எழுதி வைத்து விட்டு நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.

சீரான தாம்பத்திய உறவுக்குக் கோடியாக கோடியாக பணம் வேண்டியதில்லை; பட்டம் வேண்டியதில்லை; பதவி வேண்டியதில்லை. மனவழுத்தமில்லாத மனம் வேண்டும்; தாம்பத்திய உறவின்போது, அச் செயல்களில் முழு ஈடுபாடு கொள்வதற்குறிய மனக்கட்டுப்பாடு வேண்டும்; சுருங்கச் சொன்னால், மன வளம் வேண்டும்; சிதைவடையாத உணர்வாற்றல் வேண்டும். இதனை, கவன வாழ்க்கையில் சுலபமாகப் பெறமுடியும். தாம்பத்திய உறவு என்பது ஒரு புனிதமான உறவாகும். அதனை உதாசீனப்படுத்தி துறவு கொள்வதை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.

15. மார்டின் லூதர் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் புரட்சியைத் தோற்றுவித்தவர்; ஒரு ஜெர்மானியர்; புதியபுராடஸ்டண்ட்(Protestant)’ கிறிஸ்தவப் பிரிவு தோன்றக் காரணமானவர். துறவறம் இறைக் கொள்கைக்கு எதிரானது என்று, தான் பூண்டிருந்த துறவறத்தைக் களைந்துவிட்டு, திருமணம் செய்து கொண்டார்.

16. ஒரு வெளி நாட்டு நிரூபர் ஒருவர், மகான் மகரிஷி மகேஷ் யோகியிடம்உலகம் முழுவதும் செல்கிறீர்கள்! செல்லுமிடங்களிலெல்லாம். ‘வாழ்க்கை இன்பமயமானதுஎன்று சொல்லி வருகிறீர்கள்! அப்படியிருக்கும் போது, நீங்கள் ஏன் துறவியானீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மகரிஷி அவர்கள், சிரித்துக்கொண்டேநான் துறவியாகும்போது, ‘வாழ்க்கை இன்பமயமானதுஎன்பது எனக்குத் தெரியாமப் போச்சே!” என்று சொல்லியிருக்கிறார்.

17. லாபத்தை எதிர்பார்த்துத் திட்டமிடும் வியாபாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் அனைத்து வகை மக்களுக்கும் ஏற்படும் நிலை இதுதான். திட்டமிடுதல் மனிதனை உயரவைக்கவில்லை; நடு நிலையிலும் வைக்கவில்லை. சுருங்கச் சொன்னால் அவனை வாழவைக்கவில்லை. மன வழுத்தங்களின் கூடாரமாகத் திகழும் இவர்கள் நோய்களின் கோரப்பிடிக்குத் தள்ளப்படுகிறார்கள். திட்டமிடும் தனிப்பட்ட மனிதராக அல்லது சமுதாயமாக இருந்தாலும், குழப்பமடைந்தும், ஊழல் மிகுந்தும், வன்முறைகள் மிகுந்தும் காணப்படுகிறது. ஆகவே, எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தில் (இக்கணத்தில்) திட்டமிடாதீர்கள். நிகழ்காலம் செயல்களை/பணிகளைச் செய்வதற்குத்தான் படைக்கப்பட்டதே தவிர திட்டமிடுவதற்கல்ல. திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்பதை, தனது அநுபவத்தில் அறிந்த, சுவாமி விவேகானந்தர், அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், திட்டமிடுவதை நிறுத்திவிட்டார் என்பது, நமக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். நாமும் திட்டமிடுவதை நிறுத்திவிடுவோம்!.

18. ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுத்தல்.:

ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பது நல்ல முடிவாக அமையுமா?

மற்றவர்கள் பிரச்சனைகளில் தவிக்கும்போது அனைவரும் அவர்களுக்குச் சொல்லும் அறிவுரையோசித்து நல்ல முடிவாக எடுங்கள்என்பதுதான். இன்று சமுதாயத்தில் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிகளில் சேர்த்தால் மற்றும் எந்த கல்வியியல் துறையில் உயர்கல்வி படிக்க வைத்தால், அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று தலையை பிய்த்துக் கொண்டு யோசிக்கிறார்கள். அதற்குறிய தகவல்களை பல பத்திரிகைகள் மற்றும் நண்பர்கள் வாயிலாகவும் அறிந்து ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு முடிவெடுக்கிறார்கள். முடிவுப்படி பள்ளிகளில், உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்க்கிறார்கள். அப்படியிருந்தும் பெற்றோர்களுக்குத் திருப்தி ஏற்படுவதில்லை; தவறான பள்ளிகளில் தவறான கல்வியியல் துறைகளில் சேர்த்து விட்டோமோ என்ற தவிப்பும் குழப்பமும் இருந்துகொண்டே இருக்கும். LKG,UKG படிப்பதற்கு பக்கத்தில் இருக்கும் பள்ளிகளை விட்டுவிட்டு, 10, 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பார்கள். குழந்தைகள் அடிபட்டு, கைகளின் பாதங்களில் சிவந்து வரும்போதும், பெண்மாணவிகள், ஆசிரியர்களால் பாலியியல் தொந்தரவுக்குள்ளாகும் போதும், வகுப்பில் பல பேர் முன்னிலையில் ஆசிரியைகள் இழிவாகப் பேசியதினால், அவமானம் தாங்காது தற்கொலை செய்துகொள்ளும் போதும் ஏற்கனவே தவிப்பும் குழப்பத்திலுமிருக்கும் பெற்றோர்கள், தாங்கள் ஆராய்ந்து யோசித்து எடுத்த முடிவு தவறாகி விட்டதே என்று மிகவும் வருத்தப் படுகிறார்கள்.

19. மிகவும் நல்ல பள்ளிகள் என்று பெயரெடுத்திருக்கும் பள்ளிகளிலும் கூட, வகுப்பறைகளில் பாடங்களை ஒழுங்காக நடத்தாமல், காலத்தை ஓட்டும் ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது எப்படி முடிகிறது என்றால், அந்த ஆசிரியர்கள் ‘supply and service’என்று சொல்லப்படும் சேவையை தலைமை ஆசிரியருக்கும், தாளாளருக்கும் வாரி வழங்குவார்கள். ஆகவே பள்ளியின் தலைமை நிர்வாகத்திலுள்ளவர்கள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை. இது எல்லா நிர்வாகங்களிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான். நமது குழந்தைகள் இந்தமாதிரி ஆசிரியர்களிடம் மாட்டாமலிருப்பதற்கு இறையருள் இருக்கவேண்டும்.

20. இன்னும் சில பெயரெடுத்த பள்ளிகளில் சிறு குழந்தைகளுக்கே பாடத்தைச் சுருக்கி நகல்கள் (xerox copies) எடுத்து திரும்ப திரும்ப எழுதவைத்து மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள். இதனால் குழந்தைகளின் படைப்புத் திறன் (originality) அற்றுப்போய் விடுகிறது. எல்லாப் பெற்றோர்களும், தங்கள் பிள்ளைகளை டாக்டராக படிக்க வைக்கத்தான் விரும்புகிறார்கள். டாக்டரின் மறுபக்கத்தை யாரும் பார்ப்பதில்லை.

21. நான் மணப்பாறையில் மின்சார வாரியத்தில் உதவி செயற் பொறியாளராக வேலை பார்க்கின்ற காலம். ஒரு வயர்மேன் மின் விபத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான்.அவனைப் பார்க்க அங்கு நான் சென்றிருந்தேன். அங்குள்ள பணி டாக்டரிடம் வயர்மேனின் உடல்நிலையைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். விசாரணையை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்படும் பொழுது அந்த டாக்டர் என்னைப் பார்த்துச் சொன்னது இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. “உங்களுக்கு என்ன! 5 மணி ஆனவுடன்பைலைவீசி எறிந்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவீர்கள்! ஆனால் என்னைப் பாருங்கள்! இனிமேல்தான் எங்களுக்கு வேலையே ஆரம்பம் (அப்பொழுது மாலை 5 மணி). இந்த டாக்டர் தொழிலே பிடிக்கலைங்க! வேலை முடிஞ்சுச்சா, வெளியேஹாயாவீட்டுக்குப் போனோமான்னு இருக்கனும்!” என்றார் அவர். அவருடைய பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில்தான் மருத்துவப் படிப்பைப் படித்திருக்க வேண்டும். இப்படி விருப்பமில்லாமல் டாக்டராக ஆனதால் அப்பணியில் ஆர்வமிருக்காது. மேலே அவர் என்னிடம் பேசிய பேச்சு இதை உறுதிப்படுத்துகிறது. தொழிலில் ஆர்வமின்மையினால் அதில் திறமையை வளர்த்துக் கொள்ள எந்த முயற்சியையும் எடுக்கமாட்டார். ஆகையால் அத்துறையில் எந்த சாதனையோ அல்லது புதிய கண்டுபிடிப்போ அவரால் நிகழ்த்த முடியாது.

22. பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பங்களைக் கேட்டு அவர்களுக்கு விருப்பமான படிப்பை படிக்க அனுமதிப்பதில்லை. பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்புகிறவர்களை டாக்டர் படிப்பிலும், சரித்திரம் பயில விரும்பும் மாணவர்களை பொறியியல் கல்லூரிகளிலும் சேர்த்து விடுகிறார்கள். இதனால், ஆர்வமின்மையினால் பணிகளில் குறைபாடு ஏற்பட்டு தங்களது நிர்வாகத் துறைகளில் கெட்டபெயரை வாங்கிக் கொள்கிறார்கள். இதனால் சாதனைபடைக்க வல்லவர்கள், அது முடியாதபோது சொல்லிக் கொள்ள முடியாத அளவிற்கு துயரத்திற்கு ஆட்படுகிறார்கள்.

23. +2 மதிப்பெண்களின் பட்டியலில் (mark sheet) வேதியியல் (chemistry), இயற்பியல் (physics), கணக்கு (mathematics), உடற்கூற்றியல் (biology) ஆகியவற்றில் உள்ள மதிப்பெண்களை பரிசீலனை செய்யுங்கள்; ‘அக்கணத்தில் அல்லது நிகழ்காலத்தில்வாழவேண்டும் என்பதுதான் பெரிய மகான்கள் காட்டும் வழியாகும். ஆகவேஅக்கணத்தில்அந்த மதிப்பெண்களின் தாளில் (mark sheet) நான்கில், வேதியியலில் (chemistry) அதிகமாக மதிப்பெண்கள் வாங்கியிருந்தால், B.Sc வேதியியலில் (chemistry) அல்லது வேதியியல் பொறியியலிலும் (chemical engineering), கணக்கில் (mathematics) அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தால் B.Sc (mathematics) அல்லது எஞ்சினியரிங்கிலும், இயற்பியல் (physics) அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தால் B.Sc இயற்பியலிலும்(physics), உடற்கூற்றியலில் (biology) அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தால் மட்டும் டாக்டர் படிப்புக்குச் சேர்த்துவிடுங்கள். இப்படிச் சேர்த்துவிட்டால், அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்கள் பிற்காலத்தில் சாதனை படைப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

24. வியாபாரத்திலும், தொழில் துவங்குவதிலும், அலுவலகம் நடத்துவதிலும் மற்றும் பிற துறைகளில் பணிகள்புரிவதிலும் மக்கள் தவறான முடிவெடுக்கிறார்கள். உதாரணமாக செய்தித் தாழில் வந்த செய்தி ஒன்றினை கூற விரும்புகிறேன். 2006- ஆண்டு நடைபெற்ற தேர்தலை ஒட்டி பாலன் என்பவர், தேர்தல் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு குடும்பத்தாரையும், உறவினர்களையும், நண்பர்களையும் கலந்தாலோசித்து ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு பிளக்ஸ் பிரிண்டிங் ஆரம்பிக்க முடிவெடுத்தார். ஏன் இந்த முடிவுக்கு வந்தார்? தேர்தல் காலத்தில், பிரமாண்டமான பானர்களுக்கு ஆர்டர் கொடுப்பார்கள்; போட்ட முதலை அந்த ஒரு மாததில் எடுத்துவிடலாம்; பிறகு வருவதெல்லாம் லாபம்தான். இப்படி கணக்குப் போட்டுத்தான் சொத்தை அடமானம் வைத்து வங்கியில் ரூபாய் 25 லட்சத்திற்கு கடன் பெற்று, இயந்திரஙகளை வரவழைத்துப் பொருத்திவிட்டார். ஆனால் நடந்தது என்ன? தேர்தல் கமிசன் தேர்தலை அறிவித்துவிட்டு, தேர்தலில் அரசியல் கட்சிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளையும் அறிவித்தது. அதில் பானர்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது. பாலனும் அவரது குடும்பத்தாரும், 25 லட்ச ரூபாய் வங்கிக் கடனை அடைத்து, எவ்வாறு சொத்தை மீட்கப்போகிறோம், என்ற கவலையில் ஒடிந்துபோய் விட்டார்கள். இவ்வாறு நஷ்டமடைந்தவர்களும், தொழில்களை மூடியவர்களும் ஏராளம்.

25. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் அவர்கள் எடுக்கும் முடிவுகள் (decisions) ஒரு பக்கம் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் புதுப்பிரச்சனையை தோற்றுவித்துவிடுவதாக அமைந்துவிடும். இதனால் மக்கள் தங்கள் முடிவுகளில் நல்ல பலன்களை எதிபார்க்கிறார்கள். அந்தப் பலன்கள் கிடைக்காதபோது ஏமாற்றத்திற்குள்ளாகிறார்கள். ஏமாற்றமடைந்த மக்கள் சாத்தான் குணங்களில் அரவணைக்கப்பட்டு மன அழுத்தங்களில் சிக்கித் தவிக்கிறார்கள். பிறகு டாக்டரைப் பார்க்கவும் மருந்துக் கடைக்குமாக அலைகிறார்கள். ஆகவே சிந்தித்து முடிவெடுப்பதை நிறுத்திவிடுங்கள்!

26. கற்பனை, திட்டமிடுதல், ஆழ்ந்து யோசித்து முடிவெடுத்தல் ஆகிய மூன்றுமே மக்களை எதிர்பார்க்க வைத்து, ஏமாற்றும் வேலையைத்தான் காலம் காலமாக செய்துவருகின்றன. ஏமாற்றத்தினால் தோல்வியைத் தழுவியவர்களும், துன்பங்களில் துவண்டவர்களும் ஏராளம்!, ஏராளம்!. மேற்கூறிய மூன்றுமே கற்பனை வாழ்க்கையைத் தாங்கி நிற்கும் தூண்களாகும். இந்தத் தூண்களை வெடிவைத்துத் தகர்த்துவிட்டு, அந்த இடத்தில் வாழ்க்கையை வளமாக்கும், பூசலற்ற சமுதாயத்தை உருவாக்கும் கவன வாழ்க்கையை எழுப்புவோம்! மனித இனம் சமாதான சக வாழ்வை வாழ கவன வாழ்க்கையை உலகம் முழுவதும் பரப்புவோம்.
Please visit websites: www.medicineliving.com; www.medicineliving.blogspot.com; Email:twinmedicine@gmail.com
. ஹீலர், மருத்துவ மனபயிற்சி நிபுணர், பொறிஞர்.ஆர்..பரமன்(அரோமணி), மேற்பார்வை பொறியாளர் (ஓய்வு)/தமிழ்நாடு மின்சார வாரியம், செல்:9442035291.
Copy right to R.A.Bharamanமுந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: