Friday, October 21, 2016

பரிணாம வளர்ச்சிதான் இறைவன்!(Evolution is the Lord!)


 1. D 213-TMS-அறியாமை.-
 2.  
 3. பரிணாம வளர்ச்சிதான் இறைவன்!
 4. 1.   ஓரு நாள் எப் எம் (FM) ஒலி பரப்புக் கேட்டுக் கொTMSண்டிருந்தேன். அப்பொழுது நிகழ்ச்சி நடத்துபவர், நேயர்களைதவறுகளின் தாய் யார்?” என்று கேட்டார். நேயர்கள் ஆசை, கோபம், பொறாமை, நாவடக்கம் இல்லாமை என்று பல்வேறு பதில்களைச் சொன்னார்கள். அப்பொழுது எல்லோரையும் கேட்டபின்பு அவர்உங்கள் பதில் எதுவும் சரியில்லை. சரியான பதில்அறியாமை’” என்று சொன்னார். இது 10 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.
 5. 2.   விதி (fate) அல்லது ஊழ்வினை என்பது என்ன?
 6. நாம் முற்பிறவியில் மற்றும் இப்பிறவியில் நிகழ்காலத்தில் செய்யும் நன்மைகள் மற்றும் தவறுகள் நமக்குள் பதியப்பட்டு சேர்ந்து கொண்டே வரும். அந்த நல்லது கெட்டதுக்குத் தகுந்தாற்போல, எதிர்ச்செயலாக  எதிர்காலத்தில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இப்படி மாறி மாறி வருவது பல பிறவிகள் தொடரலாம். இதைத்தான் ஊழ்வினை என்கிறோம்.
 7. ஊழ்வினையால் பாதிக்கப்படாதவர்கள் எவரும் இல்லை என்று சொல்லலாம். புத்தர் ஊழ்வினையால் பாதிக்கப்பட்டவர்தான். அரச குடும்பத்தில் பிறந்து, அனைத்து விதமான வசதிகளுடன் வாழ்ந்து, அழகான மனைவியையும், ஒரு குழந்தையையும் விட்டு விட்டு, சந்நியாசம் மேற்கொண்டு, துறவற வாழ்க்கையை மேற்கொண்டது ஊழ்வினையால்தான். இல்லறவாழ்க்கையின் இன்பத்தை அநுபவித்துவிட்டு, பிறகு துறவற வாழ்க்கையை மேற்கொண்டவர்தான் புத்தர்.
 8. ஏசுநாதர் மக்களின் துயர் துடைக்க, இல்லற வாழ்க்கை வாழாமல், துறவரவாழ்க்கை வாழ்ந்து, தனது, 32 வயதிலேயே சிலுவையில் அறையப்பட்டு இறந்ததும் ஊழ்வினையால்தான்.
 9. சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள்,அரசகுடும்பத்தில் பிறந்து துறவறம் பூண்ட ஊழ்வினைவாதி என்று சொல்லலாம்.
 10. விவேகானந்தர் உயர்குடும்பத்தில் பிறந்து, உயர் கல்வி கற்று, அரசு உயர் வேலைக்குப் போக வாய்ப்பிருந்தும், துறவறம் பூண்டு, இந்து மதக் கோட்பாடுகளை உலகம் முழுக்கப் பரப்பி, தனது 39 வயதிலேயும் இறந்ததுவும் ஊழ்வினையால்தான். சுருங்கச் சொன்னால், மகான்கள் அனைவரும் ஊழ்வினையால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.  
 11. 3.   இப்படி மனிதனை ஊழ்வினையுடன் ஏன் படைக்க வேண்டும்? அவன் ஏன் நன்மைகள், தவறுகள் செய்ய வேண்டும்? அது விதியாக மாறி மனிதனை ஏன் ஆட்டுவிக்க வேண்டும்? அப்படி ஆட்டுவிப்பவன் யார்? அவனுக்கு யார் அந்த சக்தியைக் கொடுத்தது? மேற்குறிப்பிட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைக்க வேண்டுமென்றால், பூமி தோன்றிய வரலாற்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
 12. 4.   பூமியின் வரலாறு
 13. பல்லாயிரக்கணக்கான கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனிடமிருந்து வெடித்துச் சிதறிய ஒரு சிறிய வெப்பத் துண்டுதான் பூமி. இதில் வெடித்துச் சிதறிய ஒரு சிறிய துண்டுதான் சந்திரன் என்னும் நிலவு. வெப்பக் கோளப் பூமியானது குளிர்ச்சியடைய கோடிக்கணக்கான ஆண்டுகளானது. அப்படி குளிர்ச்சியடைந்த பூமியில், உயிரினம் தோன்றுவதற்குரிய தட்ப வெட்ப நிலை, நீரின் இருப்பு ஆகியவை இருக்கவே, அமீபா என்று சொல்லப்படும் ஒரு செல் உயிரினம் முதன் முதலில் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பரிணாம வளர்ச்சிதான் மனிதனும் மற்ற உயிரினங்களும். இந்த பரிணாம வளர்ச்சியை ஆக்க அறிவு (Creative Inteligence) அல்லது இயற்கை (Nature) அல்லது இறைவன் (God) என்றும் சொல்லலாம்.
 14. 5.   மனிதன் ஏன் நன்மைகள், தவறுகள் செய்ய வேண்டும்? அவை ஊழ்வினையாக மாறி அவன் துன்பத்திலும் துயரத்திலும் ஏன் அல்லல்பட்டு வாழவேண்டும்?
 15.  
 16. ஊழ்வினை என்பது இன்பம் துன்பம் இரண்டும் கலந்துதானிருக்கும்.
 17. பூமியில் தோன்றும் மனிதர்களில், உயிரினங்களில் தட்ப வெட்பம், வளம், இட அமைப்பு ஆகியவற்றிற்குத் தகுந்தாற்ப்போல வலியவர்களாகவும், வலிமை குன்றியவர்களாகவும் தோன்றலாம். வலியவன் எளியவனை அழித்து விடலாம். அப்படி அழிக்கும்போது உயிரினம் அழிந்து விடலாம். ஆனால் பரிணாம வளர்ச்சியின் நோக்கம் இந்த அண்டத்தில் வளர்ச்சியைத் தூண்டி நிலை நிறுத்துவதுதான்..
 18. 6.   அண்டத்தில் எண்ணிலடங்காத நட்சத்திரங்கள் (stars) என்னும் வின்மீன்கள் இருக்கின்றனசூரியனும் ஒரு வின்மீன்தான். ஆனால் சிறியது. மற்ற வின்மீன்கள் வெகுதூரத்தில் இருப்பதால், இரவில் சிறிய நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருக்கின்றன. பரிணாம வளர்ச்சியால் அண்டம் விரிந்துகொண்டே இருக்கின்றது. இப்பொழுதும் புதிது புதிதாக வின்மீன்கள் தோன்றிக் கொண்டுதானிருக்கின்றனவலியவன் எளியவனை அழித்து விட்டால், இறுதியில் ஒருவன்தான் மிஞ்சுவான். இப்பூமியில் வளர்ச்சி நின்றுவிடும். ஆகவே இந்த வளர்ச்சி நின்றுவிடக் கூடாது என்பதற்காகவே பரிணாம வளர்ச்சி என்னும் ஆக்க அறிவு என்னும் இயற்கை என்னும் இறைவன்  ஒரு முதல் இயற்கைச் சட்டத்தை (Natural law) இந்த அண்டத்தின் மாபெரும் சபையில் நிறைவேற்றுகிறது.
 19. 7.   முதல் இயற்கைச் சட்டம்.
 20. நிகழ்காலத்தில் எந்த ஒரு செயல் செய்தாலும், அதற்குச் சமமான எதிர்ச் செயல் எதிர்காலத்தில் உண்டு. நிகழ்காலத்தில் நீ நல்லது செய்தால், எதிர்காலத்தில் உனக்கு நல்லது நடக்கும். நிகழ்காலத்தில் நீ கெட்டது செய்தால், எதிர்காலத்தில் உனக்குக் கெடுதல் நடக்கும். இதுதான் முதல் இயற்கைச் சட்டம். பல்லாயிரக் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றிய திருவள்ளுவப் பெருமான் இந்தச் சட்டத்தைத் தெளிவுபடக் கூறியிருக்கிறார்.
 21. பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்
 22. 8.   ஒருவன் பிறர்க்கு முற்பொழுதில் துன்பம் செய்தால், அவனுக்குத் துன்பம் பிற்பொழுதில் பிறர் செய்யாமல் தானே வரும்
 23. 9.   ஆங்கிலேய விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் பொருள் அறிவியலில் “For an every action there is an equal and opposite reaction (ஒவ்வொரு செயலுக்கும் ஒரு சமமான எதிர்ச்செயல் உண்டு)” என்று மூன்றாவது விதியாகக் கூறியுள்ளார்.
 24. 10.  முதல் இயற்கைச் சட்டம் வந்தபிறகுதான் நியாயம், தர்மம், அறநெறிகள் போன்ற வார்த்தைகள் மக்களிடையே தோன்றலாயின. தனித் தனியாக வாழ்ந்த மனிதன் கூட்டாக வாழ்ந்து, சமுதாயமாக மாறி நாடுகளாக வளர்ச்சி பெற்றுள்ளன. தனி மனிதனிலிருந்து நாடு வரை இயற்கைச் சட்டத்தை தங்களதாக ஆக்கிக் கொண்டார்கள். காரணம் அதில்தான் வளர்ச்சி காணமுடியும் என்பதை நடைமுறையில் கண்டு கொண்டார்கள்
 25.  
 26. 11.  இயற்கைச் சட்டத்தை நடைமுறைப் படுத்துதல்
 27. பரிணாம வளர்ச்சி என்னும் ஆக்க அறிவு என்னும் இயற்கை என்னும் இறைவன் அடுத்த கட்டமாக இயற்கைச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்இயற்கைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால் வளர்ச்சி தடைபட்டு விடும். வலியவன் எளியவனை எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அழித்து விடுவான். ஆகவே ஒருவன் எண்ணத்தாலும் நல்லதும் கெட்டதும் செய்யலாம்; ஒருவன் இன்னொருவனை மனதார வாழ்த்துவது, இறைவனிடம் அவன் நலத்திற்கு பிறார்த்திப்பதுதான், எண்ணத்தால் நல்லது செய்வது. பொறாமையால் இன்னொருவனை மனதால் சபிப்பதுதான் எண்ணத்தால் கெடுதல் செய்வது. பலபேர் முன்னிலையில் ஒருவனது சிறப்பை எடுத்துச் சொல்வது சொல்லால் நன்மை செய்வது; பலபேர் முன்னிலையில் அவனை வசைபாடுவது சொல்லால் தீமை செய்வது;கஷ்டத்தில் இருப்பவனுக்கு கஷ்டத்தைப் போக்குவிதமான உதவியைச் செய்வது செயலால் நல்லது செய்வது; ஒருவருக்குக் கிடைக்கும் நன்மையை தடுத்து நிறுத்துவது செயலால் கெட்டது செய்வது.  
 28. 12.  மேற்குறிப்பிட்டபடி ஒருவன் நிகழ்காலத்தில் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நல்லது கெட்டது செய்தால் அவற்றை பதிவு செய்ய வைத்து பதிவின்படி அவனுக்கு எதிர்காலத்தில் இன்பமும்துன்பமும் கிடைக்கச் செய்ய வேண்டும். இன்பம் மொத்தத்தையும் ஒரே தடவை அநுபவிக்கக் கொடுத்துவிட்டு, அடுத்துத் துன்பம் மொத்தத்தையும் ஒரே தடவை அநுபவிக்க நேரிட்டால், அவன் துவண்டு தன்னைத்தானே அழித்துக்கொள்வான். ஆகவே பரிணாம வளர்ச்சி என்னும் ஆக்க அறிவு என்னும் இயற்கை என்னும் இறைவனின் குறிக்கோள்அவன் அழிந்துவிடக் கூடாது; வளர வேண்டும்ஆகவே அப்படி தரப்படும் இன்பமும் துன்பமும் மாறி மாறி அநுபவிக்க வேண்டும். இதற்குஊழ்வினைஎன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினான்.
 29. 13.  ஊழ்வினையானதுமேலை கூறியபடி நடைமுறைப்படுத்த பல சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல்களைத் தவிர்த்து நல்லபடி நடைமுறைப்படுத்தத் தனக்கு இரண்டு திறமையான ஆட்கள் வேண்டும்என்று பரிணாம வளர்ச்சியிடம் வேண்டுகோள் விடுக்கிறது. ஊழ்வினையின் வேண்டுகோளை அண்டத்தின் மாபெரும் சபையில் வைத்து பரிசீலனைக்கு வைக்கப்படுகிறது. ஊழ்வினையின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு இரண்டு திறமையான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவ்வாறு நியமிக்கப்பட்டு வந்த திறமைசாலிகள்தான்அறியாமைமற்றும் ஞானம் என்னும் மெய்யறிவு.
 30. 14.  ஆக்க அறிவினால்  ஊழ்வினைக்கு அதிகாரம் வழங்கப்டுகிறது. ஊழ்வினை தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப்பற்றி கூறுவதைக் கேளுங்கள் இதோஇந்த அண்டத்தில் சிறப்பாக இவ்வுலகில் என்னைவிட ஆற்றல் மிக்கவன், வலிமை மிக்கவன் எவனும் கிடையாது. இதை நான் சொல்வதில் எனக்குப் பெருமையில்லை! வியாசர் முனிவர் பகவத்கீதையில்ஒருவன் ஊழ்வினையை அநுபவித்தே ஆக வேண்டும். அதை மாற்ற என்னைப் படைத்த உங்களைப் படைத்த இறைவனால் கூட முடியாது: என்று சொன்னதை, கீதை கதாகாலச்சேபத்தில் போய்க் கேளுங்கள். என்னுடைய அதிகாரத்தைப் பற்றி உங்களது திருவள்ளுவர், அவரது 380- வதுகுறளில் பாடியிருக்கிறார்! போய்ப் படித்து விட்டு என்னிடம் வந்து பேசுங்கள்என்று சொன்னது.   நானும் திருக்குளை வேகமாகப்  புரட்டினேன். அந்தக் குறள் 
 31. 15.           “ஊழிற் பெருவலி யாவுல மற்றொன்று
 32.          சூழினுந் தான்முந் துறும்.”
 33. அதாவது “ஊழைவிட மிகுந்த வலிமையுடையவை எவை இருக்கின்றன? அதைத் தவிர்ப்பதற்கு ஏற்ற உபாயத்தைச் செய்தாலும், அது அதனைத் தடைப்படுத்திக் கொண்டு முன் வந்து நிற்கும்” என்பது பொருளாகும்.
 34. 16.  இராமகிருஷ்ண பரமஹம்சர் அளித்த அருள்வாக்குஒரு மனிதன், அவன் செய்த செயல்களால் ஏற்படும் விளைவுகளை அநுபவிக்காமல் தப்பிக்க ஒரு வழியும் இல்லை”..
 35. 17.  அறியாமை
 36. ஊழ்வினையின் இருண்டு அங்கங்களில் ஒன்றுதான் ‘அறியாமை’. அறியாமை மனித வாழ்வின் இறக்கத்திற்கு எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒருவனின் துயரத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவது அறியாமைதான். அதேமாதிரியான துன்பம் தனக்கும் வராது என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. ஒருவனின் பலவீனத்தை பலபேர் முன்னிலையில் எகத்தாளமாக எடுத்துரைத்து இழிவுபடுத்தி மகிழ்வது அறியாமைதான். பலவீனமில்லாமல் எவரும் பிறக்கவில்லை என்பதை அறிந்தும் ஒருவரை இழிவுபடுத்துவது அறியாமைதான். தவறு என்று தெரிந்தும் கொலை, திருடு செய்வது அறியாமைதான்.
 37. 18.  முதல்நாள் செய்தித் தாளில், ’மனைவியைக் கொன்றவனுக்குத் தூக்குஎன்று படிக்கிறான். மறுநாள் அவனே சொத்துப் பிரிவினைத் தகராறில் அண்ணனைக் கொலை செய்து விடுகிறான். கொலை செய்தால் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்து விடுகிறான். இது அறியாமையால்தான் நடக்கிறது. பள்ளிக் குழந்தைகளை அடித்துக் காயப்படுத்தினால், போலீஸ் விவகாரமாகிவிடும் என்று தெரிந்தும்ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மீண்டும் மீண்டும் அடித்து கைதாகிரார்களே! எதனால்? அறியாமையால்தான். நாவடக்கத்துடன் பேசாவிட்டால், அரசியல் வாழ்க்கை ஸ்தம்பித்து விடும் என்று தெரிந்தும் நாவடக்கம் இல்லாமல் பேசி சிலர் பலபேரின் விமர்சனத்துக்குள்ளாகிறார்களே! அதுவும் அறியாமைதான். ஆகவே ஒருவர் அனைத்துச் சட்டவிதிகளையும், ரூல்ஸ், ரெகுலேசன்ஸ்களையும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தாலும், அறியாமை வந்து தாக்கும்போது அவர் அவரையறியாமலே தவறு செய்து விடுகிறார்.
 38. 19.  அறியாமையானது வெறுப்பு, கோபம், பொறாமை, வயிற்றெரிச்சல், பயம், பதட்டம்,அடுத்துக் கெடுக்கும் குணம், தாழ்வு மனப்பான்மை, பிடிவாதம், பொறுமையின்மை, தான் என்ற அகங்காரம், குழந்தத்தனம், அவசரக் குணம், திருட்டுக் குணம், கொல்லை,கொலை செய்யும் குணம், காமவெறி முதலிய எதிர்மறைக்குணங்களைக் (negative characters) கொண்டுத்தான் செயல்படுகிறது[புரணி பேசுதல், வதந்தியை பரப்புதல் (spreading rumours) ஆகியனவற்றில் மகிழ்ச்சி காண்பதுவும் அறியாமையால் உந்தப்பட்டு நடப்பதுதான். இன்று கூட (17-10-2016) தமிழக முதலமைச்சர் உடல் நலம் பற்றி வதந்தி பரப்பியதாக சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நடக்கக்கூடிய காரியத்தைத் தள்ளிப்போடுவதும் அறியாமைதான். உதாரணமாக, உங்கள் பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ, மணப்பெண்ணோ அல்லது மாப்பிள்ளையோ பார்ப்பீர்கள். எங்கோ எங்கோ தேடுவீர்கள். நாலைந்து ஆண்டுகளுக்குப் பின்பு உங்கள் வீட்டிற்கு அருகிலேயே மணப்பெண்ணோ அல்லது மாப்பிள்ளையோ அமையும். இவ்வாறு நாலைந்து வருடங்கள் உங்கள் அறிவுக்கு எட்டாதபடி அந்த பெண்ணையோ அல்லது மாப்பிள்ளையையோ மறைத்து வைப்பதுவும் அறியாமைதான்.
 39. 20.  செய்யும் வேலைகள் நுணுக்கமாக, சிறப்பாக அமைய உள்ள தொழில்நுட்பங்களை தாமதமாக தெரிய வைப்பதுவும் அறியாமைதான். உதாரணமாக, உங்கள் வீட்டிலேயே ஒரு பொருள் அடைத்துக்கொண்டிருக்கும்; காற்றோட்டத்தையும், வெளிச்சத்தையும் தடுத்துக் கொண்டிருக்கும்; அந்தப் பொருளை கடந்து பல நாள், பல தடவை  போய் வந்து கொண்டிருப்பீர்கள்; ஆனால் அந்தப் பொருளைத் தள்ளி வைத்துப் பார்ப்போம் என்ற எண்ணம் வராது; அறியாமை விலகுவதற்கு ஒரு நேரம் குறிக்கப்பட்டிருக்கும். அந்த நேரம் வந்தவுடன், அறியாமை அகன்று உங்களுக்கு அந்தப் பொருளைத் தள்ளி வைத்துப் பார்ப்போம் என்ற எண்ணம் தோன்றும். உடனே அந்தப் பொருளை தள்ளி வைப்பீர்கள். அறையில் காற்றும், வெளிச்சமும் பரவுவதைப் பார்ப்பீர்கள். நீங்கள் மகழ்ச்சி அடைவீர்கள்.அப்பொழுதுஇந்தப் பொருளை முன்னமே தள்ளி வைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏன் வரவில்லை?” என்று எண்ணி வருத்தப்படுவீர்கள். சில காலம் வெளிச்சம், காற்றோட்டம் கிடைக்காமல் கஷ்டப்பட வைக்க வேண்டும், உங்களை கஷ்டத்தில் வைத்து வருத்தப்பட வைக்க வேண்டும். அதுதான் அறியாமையின் விருப்பம்; அதன் நோக்கம் நிறைவேறி விட்டது; ஊழ்வினை நடந்தேறிவிட்டது.
 40. 21.    நான் ஒரு பெடஸ்டல் மின் விசிறியை வாங்கினேன்தினசரி இரவில் படுக்கப்போகும்போது கட்டிலுக்கு அருகில் இழுத்து வந்து வைத்துப் பயன்படுத்துவேன்காலையில் மீண்டும் அதனை இழுத்து வந்து சுவரோரம் வைத்து விடுவேன்இழுக்கும்போது கவனத்துடன் இழுக்க வேண்டும்ஏனென்றால் அந்த பேன் முழுக்க முழுக்க பிளாஸ்டிக் பொருளால் செய்யப்பட்டதுமுரட்டுத்தனமாக இழுத்தால்அதன் மேல் மண்டைப் பகுதி யின் எடை தாங்காமல் முறிந்து உடைந்து விடும்அதற்காக நான் குனிந்து பேனின் அடித் தண்டைப் பிடித்து மெதுவாக இழுத்து வருவேன்தினசரி இது சிரமமான வேலையாக ஆகஸ்ட், 2014 லிலிருந்து இரண்டாண்டாகச் செய்து வந்தேன்ஆகஸ்ட், 2016 முடிய ஒரு நாள்திடீரென்று தலையைத் துடைக்கும் துண்டைப் பார்த்தவுடன், “பேனை இழுக்க இந்தத் துண்டை ஏன் பயன்படுத்தக்கூடாது”, என்ற எண்ணம் ஏற்பட்டவுடன்எனது இரண்டாண்டு காலச் சிரமம் இல்லாமல் போய்விட்டதுநெம்புகோல் தத்துவம்இன்னும் என்னன்னவோ தத்துவங்களையும், செய்முறைகளையும் படித்திருக்கிறென்ஆனால்அது எதுவும் பயன்படவில்லை.  அறியாமை இரண்டாண்டு கழித்து அகன்றதுஎனக்கு இருந்த சிரமும் விலகியதுஇதேபோல எனது செயல்களில்நான் செய்யும் வேலைகளில் சிரமத்தை சில காலம் கொடுத்துஅந்தக் காலம் கழிந்தபிறகு சிறப்பான தொழில் நுட்பங்கள் தெரிவிக்கப்பட்டுஎன்னுடைய சிரமங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றனஇதேமாதிரியான அநுபவங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
 41. 22.    தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிக்கச் சொல்வதும்அதைக் கேட்டு அப்படியே நடப்பதுவும் அறியாமையால்தான் நடக்கிறதுநோய்கள் கிருமிகளால்தான் உண்டாகின்றன என்ற தவறான தகவல் 1864-ம் ஆண்டிலிருந்து இன்றும் மக்களால் நம்பப்பட்டு நிலைத்திருக்கின்றன என்றால் அதுவும் அறியாமையால்தான்எனது ஆராய்ச்சிக்காகவும், கிருமிகளைப்பற்றிய மக்களின் பயத்தைப் போக்கவும், கடந்த 1 ஆண்டாக கை கழுவாமல்தான் சாப்பிட்டு வந்தேன். கழிவுப் பொருளை மற்றும் கிருமிநாசினித் திரவத்தைக் கையாளும்போதுதான் கைகழுவுவேன். இதனால் எனக்கு, கிருமிகளால் எந்த நோயும் பற்றவில்லை. எனது அடுத்தப் புத்தகத்தில், கிருமிகளப் பற்றிய விளக்கமான கட்டுரை வெளிவரும் 
 42. 23.    கிருமிகளைப்பற்றிய அறியாமை அகல வேண்டுமென்றால்டாக்டர்கள் ஏதோ ஒரு வலி உதாரணத்திற்கு தலைவலிக்குரிய மருத்துவ மனப்பயிற்சியை செய்தால் போதும்உடனே உடலிலுள்ள கழிவுப்பொருள்களான வாயு (gas)சளி (sputum)நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் ஏப்பம் (belching) மட மடவென்று வெளியேறும்மலம் அடைத்திருந்தால் மலம் வெளியேறும்சிறுநீர் அதிகமாக வெளியேறும்தலைவலியும் முற்றிலுமாக நீங்கிவிடும்இதிலிருந்து நோய்கள் கிருமிகளால் உண்டாவதில்லைகழிவுப்பொருட்களின் தேக்கத்தால்தான் உண்டாகின்றன என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள்.
 43. 24.  நமது உடலுக்கு இயற்கையிலேயே நோய்களைக் குணப்படுத்தும் குணம் உண்டு. அந்தக் குணத்தினால்தான், வயிறு கெட்டுபோகும்போது, வாந்தி எடுக்க வைக்கிறது. இதன்மூலம் உடல் சொல்கிறதுவயிற்றில் கழிவுப்பொருள் அதிகமாகச் சேர்ந்து விட்டது. அதனால் வயிறு உணவை செரிக்க மறுக்கிறது; ஆகவேதான் அதில் சேர்ந்துள்ள கழிவுப் பொருளை வெளியேற்ற வாந்தி எடுக்க வைக்கிறேன்; அது முடியும் வரை உணவு எதையும் எடுத்துக் கொள்ளாமல் சும்மா ஓய்வில் இரு!” இதை நோயாளிக்கு உடல் சொல்கிறது. ஆனால் மக்கள் அறியாமையால், வாந்தி வந்தவுடன், வாந்தியை நிறுத்த மருந்தைத் தேடி ஓடுகிறார்கள். வாந்தியை நிறுத்தி உடல் நலம் பெற, அடுத்த நேர உணவைத் தவிர்த்து, பசி வரும் வரை ஓய்வில் இருந்து பிறகு சாப்பிடுவதுதான் மருந்தில்லா மருத்துவமாகும்.
 44. 25.  இன்னொன்று மக்களுக்குத் தெரிந்த ஒன்று திடீரென்று காலையில் தும்மல் வருவது. இதுவும் தலையில் நீர் அதிகமாகச் சேந்துவிட்டால், உடல் அதிகமான நீரை வெளியேற்றத்தான் தும்மலை ஏற்படுத்துகிறது. இதை நோய் என்று எடுத்துக் கொண்டு மருந்து எடுத்துக்கொள்ள அலையக் கூடாது. இதற்கு தலையில் நீர் கோர்க்கும் உணவையும், தலைவழியே பச்சைத் தண்ணீரைக் கொண்டு குளிப்பதையும் நிறுத்தினால் போதும். இப்படி எல்லா நோய்களும் உடலில் தேங்கும் கழிவுப் பொருட்களாலும்மனதில் தேங்கும் கழிவுப் பொருட்களாலும்தான் உண்டாகின்றன. இதன் அடிப்படையில்தான், நான் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ மனப்பயிற்சிகள் செய்யும் போது, உடலின் கழிவுப்பொருட்களான வாயு, ஏப்பம், தும்மல், நீர் வடிதல், சளி, மலம், சிறுநீர் ஆகியவை வெளியேறும்; மனதின் கழிவுப் பொருட்களான மனவழுத்தம், மனக்கவலை ஆகியவை வெளியேறும். ஆக இரண்டு விதமான அதாவது உடல் கழிவு, மனக்கழிவு ஆகிய இரண்டும் வெளியேறி நோய்கள் குணமாகின்றன
 45. 26.  அறியாமைக்குச் சிறந்த இன்னொரு உதாரணத்தைச் சொல்லியாக வேண்டும். மனம் ஒரு உருவமில்லாத அருவம். அந்த அருவத்தில் ஏற்படும் கழிவுதான் மனவழுத்தம், மனக்கவலை. இது மனநோயாக முற்றி நிரந்தரமாகிவிடுகிறதுஅசைவ உணவு சாப்பிடுகிறவர்கள், ஈரலில் நோயிருந்தால், ஆட்டு ஈரலைச் சாப்பிடுவார்கள். நுரையீரல் சமபந்தப்பட்ட நோய்களுக்கு நுரையீரலைச் சாப்பிடுவார்கள்; வயிற்றில் நோயுள்ளவர்கள் குடலைச் சாப்பிடுவார்கள். இதேபோல, மனம் என்னும் அருவத்தில் ஏற்படும் நோய்க்கு மருந்து அருவமாகத்தான் இருக்க முடியும்உருவமான உடலுக்குத் தரும் மாத்திரை, அருவமான மனநோய்க்கு எப்படி பொருந்தும். என்னுடைய மருத்துவமனைக்கு வரும் மனநோயாளிகள்மாத்திரை எதுவும் கொடுக்க மாட்டீர்களா?” என்றுதான் கேட்கிறார்கள். மனம் என்னும் அருவத்திற்கு உருவத்துக்கு அதாவது உடலுக்குக் கொடுக்கும் மாத்திரை சரிப்பட்டு வராது. ஏனென்றால் மாத்திரையும் உருவம்தான். ஆகவே மனமென்னும் அருவத்தில் உண்டாகும் நோய்க்கு அந்த அருவத்திலே பயிற்சி கொடுப்பதுதான் சிறந்த மருந்தாகும். அதுதான் இறைவனால் மனநோயாளிகளைக் குணப்படுத்த எனக்கு அளித்த மருத்துவ மனப்பயிற்சியாகும். இதைக் கொண்டு மனநோயாளியைக் குணப்படுத்தியிருக்கிறேன். பழைய நிலைக்கு, கலகலப்பாகப் பேசி சிரிக்கும்படியாக மாற்றியிருக்கிறேன். மனப்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு அக்குபங்சரில் தொடு சிகிச்சை அளிக்கலாம்.  
 46. 27.    சுருங்கச் சொன்னால்அறநெறிகளையும்சட்டதிட்டங்களையும் தெரிந்து நடப்பவர்களாக இருந்தாலும்அப்படி நடக்க விருப்பம் இருந்தாலும்அதையும் மீறித் தவறுகள் செய்ய வைப்பதுதான் அறியாமையின் பணியாகும். இந்த அறியாமையின் மேற்பார்வையில்தான், உலகில்விதவிதமான நோய்கள்விபத்துகற்பழிப்புகொலைகொள்ளைஏமாற்றுதல்ஏமாறுதல்திருடுபெண்களைக் கடத்துதல்குழந்தைகளைக் கடத்தி பாலியல் சித்திரவதைஆசிட் வீசுதல்காதல் சிக்கல்தற்கொலைகள்தனிப்பட்டகுடும்ப பிரச்சனைகள்சமுதாயத்திற்குள் ஏற்படும் பிரச்சனைகள்நாடுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் இப்படி மொத்தத்தில் அனைத்துப் பிரச்சனைகளும் நடந்தேறுகின்றன.
 47. 28.  கெடுதல்கள் கெட்ட நேரத்தால்தான் வருகிறது என்று நேரத்தின்மீது பழிபோடுவதும், வாஸ்து சாஸ்திரப்படி இல்லை என்று வீட்டில் மாற்றத்தை செய்யச் சொல்லும் ஜோதிடர்களும், அதை நம்பி செயல்படும் மக்களும் அறியாமையில்தான் செயல்படுகிறார்கள்.
 48. 29.    ஞானம் என்னும் மெய்யறிவு 
 49. அறியாமை செய்யும் அக்கிரமங்களைக் கேட்க நாதியே இல்லையாஅதற்குப் பரிகாரம் உண்டா இல்லையா?  பரிகாரம் உண்டுஅந்த பரிகாரத்தைச் செய்தால்தான் அறியாமை உங்களை விட்டு அகலும்நீங்கள் ஞானம் என்னும் மெய்யறிவு பெற வேண்டும்அதாவது உங்களது எதிர்மறை நிலை மனதை (negative state of mind), நேர்மறை நிலை மனதாக (positive state of mind) மாற்ற வேண்டும்அறியாமை எதிர்மறைக் குணங்களின் நிலைப்பாட்டிலிருக்கிறதென்றால்ஞானம் நேர்மறைக்குணங்களின் நிலைப்பாட்டிலிருக்கிறதுஅதாவதுஅன்புநியாயம், நேர்மைகோபம்பொறாமையின்மைவயிற்றெரிச்சல் படாத குணம்பதட்டமின்மைபயமின்மைதாழ்வு மனப்பானமை இல்லாத குணம்குழந்தைத் தனம் இல்லாத குணம்ஆணவம் இல்லாமைஅகங்காரம் இல்லாமை,போன்ற குணங்களைக் கொண்டு வேலை செய்கிறதுஅறியாமையும்ஞானமும் மனதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறதுமனவழுத்தம் (depression) உள்ளவர்களுக்குத்தான் எதிர்மறைக் குணங்களின் தாக்கம் இருக்கும்மனவழுத்தம் இல்லாதவர்களுக்கு நேர்மறைக் குணங்களின் தாக்கம் இருக்கும்மனவளம் குறைவாக இருந்தால் அறியாமையின் ஆதிக்கம் இருக்கும்மனவளம் அதிகமாக இருந்தால்ஞானத்தின் ஆதிக்கம் இருக்கும்இவ்வாதிக்கம் அதிகரிக்கஅதிகரிக்கவிதவிதமான நோய்கள்விபத்துகற்பழிப்புகொலைகொள்ளைஏமாற்றுதல்ஏமாறுதல்திருடுபெண்களைக் கடத்துதல்குழந்தைகளைக் கடத்தி பாலியல் சித்திரவதைஆசிட் வீசுதல்காதல் சிக்கல்தற்கொலைகள்தனிப்பட்டகுடும்ப பிரச்சனைகள்சமுதாயத்திற்குள் ஏற்படும் பிரச்சனைகள்நாடுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் இப்படி மொத்தத்தில் அனைத்துப் பிரச்சனைகளும் குறைந்து கொண்டே வரும்.
 50. 30.  மனவளத்தை அதிகரிக்க மனப்பயிற்சிதான் (mental exercise) ஒரே வழி. இந்த அறியாமையை அகற்றி ஞானத்தைப் பெறத்தான் மகான்கள் தோன்றி அறநெறிகளைப் போதித்தார்கள்; மதங்களை நிறுவினார்கள். சில மதங்கள் மனப்பயிற்சியை அடிப்படையாகக் கொண்டது. உதாரணத்திற்குப் புத்த மதத்தைச் சொல்லலாம். இந்து மதத்தில் திருநீரைப்பூசிவிட்டால் வழிபாடு முடிந்தது என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்தவிதமான வழிபாட்டில் மனப்பயிற்சியே இல்லை; மதச்சடங்குகள்தான் (rituals) ஏராளம். மனப்பயிற்சி இல்லாவிட்டால் மனவளம் பெருக வாய்ப்பில்லை; அறியாமையும் அகலாது; ஞானமும் பிறக்காது; நமது துன்பங்களும், துயரங்களும் ஓயாது.
 51. 31.  அறியாமை விலகி ஞானம் பிறக்க என்ன செய்ய வேண்டும். கோவில்களுக்குச் சென்றால், அங்கு அரை மணி நேரத்திற்குக் குறையாமல் இறைவனைப்பற்றிய பாடல்களைப் பாடி, பிரார்த்தனை செய்ய வேண்டும். தினசரி வீட்டிலேயும் இதேபோல இருவேளையும் மனப்பயிற்சி செய்யலாம். இந்த மனப்பயிற்சியை கூட்டாகச் செய்தால் மிகச் சிறப்பாக இருக்கும். அறியாமை அகன்றுகொண்டே வரும். இந்தவிதமான மனப்பயிற்சியில் அதிகப் பலனில்லாவிட்டாலும் ஓரளவு பலன் கிடைக்கும்
 52. 32.  சிறந்த மனப்பயிற்சி எது வென்றால், எந்த மனப்பயிற்சி மனவழுத்தத்தைக் குறைத்து, நோய்களைக் குணப்படுத்துகிறதோ, அந்த மனப்பயிற்சிதான் சிறந்த மனப்பயிற்சியாகும்; அதோடு நமது ஆற்றலைச் செலவழிக்காமல், ஆன்மீக ஆற்றலைப் பெறுவதுதான் சிறந்த மனப்பயிற்சியாகும். இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடிப் பிறகு செய்யும் பிரார்த்தனையில் நமது ஆற்றலைச் செலவழித்து ஆற்றலைப் பெறுகிறோம்.
 53. 33.  இன்னொரு வகை மனப்பயிற்சி இருக்கிறது. அந்தப் பயிற்சியானது மார்பை நோக்கிச் செய்யும் பயிற்சியாகும். காலை 15 நிமிடங்கள், பிற்பகலில் 15 நிமிடங்கள், மாலையில் 15 நிமிடங்கள் மற்றும் இரவு படுக்கையில் படுத்தபிற்கு தூக்கம் வரும்வரையிலும் செய்யலாம். இந்த மனப்பயிற்சியில் உங்களது ஆற்றலை செலவழிக்காமல், மனவளத்தைப் பெருக்குகிறீர்கள் இதேமாதிரி  மனப்பயிற்சியை 1600 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டிலிருந்து சீனாவுக்குச் சென்ற போதி தர்மர் அங்கு பரப்பியிருக்கிறார்.
 54. 34.  மேலே கூறப்பட்டதைத் தவிர, இறைவன் மக்களது நோய்கள் நீங்கி, மக்களுக்கு ஞானம் பிறக்க வேண்டும் என்பதற்காகவே, இறைவன் எனக்கு இரட்டை மருத்துவத்தை (Twin Medicine-TM)  அளித்தார். இரண்டு மருத்துவங்களுமே ஞானம் பிறக்கும்படியாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாழும் தாய் மருத்துவத்தின் (Medicine of Living Mother-MLM) 9 விதிகளையும் கடப்பிடிப்பதில் ஞானத்திற்கு மிகவும் அவசியமான, கவனம் என்னும் விழிப்புணர்வு வந்துவிடுகிறது; விழிப்புணர்வு மனவளம் பெருகுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அடுத்து அவசரம் காணாமல்போய் பொறுமை வந்து விடுகிறது. பொறுமையும் மனவளம் பெருகுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இரண்டாவது மருத்துவம் மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம் (Medicine of Medicinal Meditation-MMM). இந்த மருத்துவம் அனைத்து நோய்களையும் 5 மனப்பயிற்சிகளால் குணப்படுத்தக் கூடியது. மருத்துவத்தின் பெயரிலேயே மனப்பயிற்சி இருப்பதால், சொல்லாமலே அப்பயிற்சிகள் நோய்களைக் குணப்படுத்துவதோடு, மனவளத்தையும் பெருக்குகிறது என்பதை அறியமுடியும்: அறியாமையை அகற்றி, ஞானத்தை வளர்க்கிறது. அதனால், அறியாமையால் விளையும் துன்பங்களும் துயரங்களும் காணாமல் போய்விடுகின்றன.
 55. 35.  100% அறியாமை விலகி, 100% ஞானம் என்னும் மெய்யறிவு வெளிப்படுவதற்குத்தான் கவனவாழ்க்கை (Attentive Life-AL) என்னும் விழிப்புணர்வு வாழ்க்கை (Awareness Life-AL)  வாழ வேண்டும். மருத்துவ மனப்பயிற்சி மருத்துவம் நோய்களைக் குணப்படுத்துவதோடு, அதில் பெற்ற அநுபவம் விழிப்புணர்வு வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. இதில் அநுபவம் பெறும்போது ஒருவர் நடந்துகொண்டே மனப்பயிற்சிகள் செய்து அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்படியான நிலைக்கு வந்து விடுகிறார். இனி அவர் ஒரு நாளில் அவர் செய்யும் செயல்களில், வேலைகளில் விழிப்புணர்வுடன் (கவனமாக) இருக்க முடியும். குளிக்கும்போதும், நடக்கும்போதும் கவனத்தைக் கடைப்பிடிக்க முடியும். வேலை செய்யும் போதும், வேலை செய்யும் உறுப்புக்களில் கவனத்தைச் செலுத்த முடியும். இந்தமாதிரி எழுந்ததிலிருந்து படுக்கப்போகும் வரை அதாவது 16 ½ மணி நேரம் (1000 நிமிடங்கள்) மனப்பயிற்சியிலிருக்கிறீர்கள். தனைமையில் உட்கார்ந்து யோசிக்க மாட்டீர்கள்; திட்டமிடமாட்டீர்கள்; யோசித்து முடிவெடுக்க மாட்டீர்கள். இதனால் உங்கள் உடம்பிலுள்ள உறுப்புகளின் தேய்மானம் தடுக்கப்பட்டு, மனவழுத்தம் முழுவதும் நீக்கப்பட்டு 100% நோய் எதிர்ப்புச் சக்தியைப் (immunity) பெறுகிறீர்கள்; அறியாமை முற்றிலும் அகற்றப்படுகிறது; முழு மெய்யறிவைப் பெறுகிறீர்கள். இந்த நிலையில் நீங்கள்தொட்டதெல்லாம் துலங்க (all possible)’ ஆரம்பித்து விடுகிறது.
 56. 36.  இரட்டை மருத்துவத்தை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து, அறியாமையைப் போக்கி, ஞானம் என்னும் மெய்யறிவை பெருக்கி, ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.Please visit website www.medicineliving.blogspot.com;       ஹீலர், மருத்துவ மனபயிற்சி நிபுணர் பொறிஞர் இரா.அ..பரமன்.(அரோமணி) BE.,FRHS.,RMP(AM).,DAcu. +91 9442035291; +91 7092209028முன்னாள் மேற்பார்வை பொறியாளர் (Superintending Engineer)/தமிழ்நாடு மின்சார வாரியம்   cell:+91 9442035291; +91 7092209028Email: twinmedicine@gmail.com; COPY RIGHT TO R.A.Bharaman
 57. updated:14-11-2016
 58. அறியாமை (ignorance)
 59.  
 60. TM-EVOLUTION GOD-3-5-20

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: