Saturday, August 26, 2017

கொசு ஒழிக்க 1 (முக)

                
H 206-TMH-(


         கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல் முறை.
                 இறைவனுக்காக கொசுவை ஒழித்தேன்.
               
1. உங்களைக் கடிக்கும் கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள்ளேயே உற்பத்தியாகின்றன!
 ‘ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள் புத்தகத்தில்  ‘கொசு ஒழிப்புப் பற்றி விரைவில் புத்தகம் வெளியிட இருக்கிறேன் என்று எழுதியிருந்தேன். அதைப் படித்த வாசகர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “கொசு வலையை பயன்படுத்தக்கூடாது; ஜன்னல்களை திறந்து வைத்துப்படுங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் கொசுக்கடி தாங்காமல்தான் ஜன்னல்களை மூடிவைத்திருக்கிறோம். எப்பொழுது கொசு ஒழிப்பைப் பற்றிய புத்தகம் வெளிவரும் என்று கேட்டார்கள். அவர்களின் கேள்விகளிலிருந்து, ‘மக்கள் கொசுக்கடியால் எவ்வளவு துன்பத்திலிருக்கிறார்கள்என்பதை என்னால் அறியமுடிகிறது. உடனே எழுத ஆரம்பித்து விட்டேன்.

2.             கொசுவின் வரலாறு
5-வது படிக்கும் வரை (1953 வரை) பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்தேன். அப்பொழுது கொசுவைப் பற்றி கேள்விப்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. பிறகு எட்டாவது வகுப்பிலிருந்து ளுளுடுஊ வரையிலும் (1960 வரையிலும்) உயர்நிலைப்பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும்போதும், கொசுவைப்பற்றி கேள்விப்படவில்லை. மதுரை கல்லூரியில்  ஓராண்டு பிரீ யுனிவர்சிட்டி கோர்ஸ்க்காக, விடுதியில் தங்கிப்படிக்கும்போதும் கொசுவின் இருப்பை  உணரவில்லை. பிறகு மதுரை திருப்பரங்குன்றத்தில் தியாகராசர் பொறியியற் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் (1962-67) விடுதியில் தங்கிப்படிக்கும் போதும் கொசுவின் தொந்தரவு இருந்ததாக அறியவில்லை. மற்ற நண்பர்களும் கொசுவின் தொந்தரவு இருந்ததாகத் தெரிவிக்கவில்லை. 1968 முதல் மே,1985 வரையிலும் கொசுவைபற்றி நினைத்ததாக ஞாபகமில்லை.   சூன், 1985-க்குப் பிறகுதான் கொசுவலையை பயன்படுத்தி தூங்கியது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. கொசுவின் தீவிர தொல்லையை தூத்துகுடியில் குடியிருக்கும்போது (1994) உணர்ந்தேன் . அதற்கு முன்னால் கொசுவின் தொந்தரவு இல்லை. அதாவது கொசு உற்பத்தி அதிகமாக இல்லை என்றே சொல்லலாம்.

3.             60 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் மற்றும் சிறு நகரங்களில் உள்ள கண்மாய்கள், பரந்த வயல்வெளி, சோளத்தட்டைகள் வளர்ந்த தோட்டம் முதலிய இடங்களில்மலம் கழிக்கச் செல்வார்கள். இப்பொழுதுபோல் அன்றைக்கு தண்ணீருக்குப் பஞ்சமில்லை. கண்மாய், குளங்களில் நீர் நிரம்பியிருக்கும். கிணற்றில் இறைக்கும் தண்ணீர் வாய்க்காலில் ஓடிக்கொண்டிருக்கும். அவைகளில் கை கால்களை அலம்பி சுத்தம் செய்துவிட்டு செல்வார்கள். நிறைய பன்றிகள் வளரும். அவைகள் மலத்தை சாப்பிட்டு விடும். மீதமிருப்பவை வெயிலாலும், காற்றாலும் உலர்ந்து காய்ந்த எருவட்டி போல ஆகிவிடும். அதை மறுநாள் துப்புரவுப் பணிப்பெண் ஒரு நீளமான குச்சியில் பொறுத்தப் பட்ட அகப்பையில் எடுத்து, எடுத்து தனது கூடையில் போட்டு அப்புறப்படுத்திக் கொண்டு போய்விடுவாள்.

சிறிது பெரிய நகரங்களில் காய்ந்த கழிப்பறை (னசல வழடைநவ) என்று சொல்வார்கள். அது வீட்டுக்கு வெளியிலிருக்கும். அந்த கழிப்பறையில் மலம் ஒரு துவாரத்தின் வழியே ஒரு சிறு சாய்வான தொட்டியில் விழும். அதன் மேல் சாம்பலைப் போட்டு துப்பரவு பணியாளர் அப்புறப்படுத்தி கழுவி சுத்தப்படுத்தி விட்டுச் செல்வார். மறுநாள் காலைக்குள் காய்ந்து சுத்தமாகி விடும். மேற்குறிப்பிட்ட முறைகளில் மலம் தேங்கிக் கிடக்கவும் மற்றும் கொசு உற்பத்திக்கும் வழியில்லை. அதேபோல வீடுகளில் பெரும்பாலும் ஒரு நேரம் அல்லது இருநேர சமையல்தான். இடையில் டீ, காபி சாப்பிடும் பழக்கமில்லை. அதனால் கழுவக்கூடிய பாத்திரங்களின் அளவும் குறைவுதான். கழிவுநீர் வீட்டுக்குப் பின்னால் செல்லும். அடிக்கும் காற்றினாலும் வெயிலாலும் காய்ந்துவிடும். ஆகவே கழிவுநீர் தேங்காததால், கொசு உற்பத்தியில்லை.

4.             பின்னாளில் மின்சாரமும், பம்பாய் கக்கூசும் (Bombay toilet) வந்தது. பம்பாய் கக்குசுகள் காம்பவுண்டு சுவற்றில் கட்டப்பட்டது, கழிப்பறைக் கோப்பைக்குக் கீழெ பள்ளம் தோண்டிசெப்டிக் டேங் (Septic tank)’ கட்டி, அதற்குள் மலம் (faeces) விழும்படியாக அமைக்கப்பட்டது. மேலாக நிற்கும் தண்ணீரானது வெளியேறி மண்ணுக்குள் செல்லும்படியாக குழாய்கள் பதிக்கப்பட்டன. இப்படி முதல் முதலாக கொசு உற்பத்திக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஏனென்றால், இந்த முறையில் மலம் காய்ந்து போவதற்கு வழியில்லை. ஆகவே கொசு சுலபமாக உற்பத்தியாகி விடுகிறது.

5.             திருடர்களின் நடமாட்டத்தால் ஏற்பட்ட பயத்தினால், வீட்டுக்கு வெளியே காம்பவுண்டு சுவரில் கட்டப்பட்டிருந்த கழிப்பறை படுக்கை அறைக்குள் வந்து விட்டது. இப்பொழுது கொசு உற்பத்தியை படுக்கை அறைக்குள்ளே கொண்டு வந்து விட்டோம். இதற்கப்புறம்தான் கொசுக்களின் எண்ணிக்கை கூடியது. இந்த கழிப்பறைகளைத் தொடர்ந்து, கழிவுநீரை அப்புறப்படுத்த சாக்கடைக் கால்வாய்கள் (Drainage) பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளால் கட்டப்பட்டன.

6.             கடல் மட்டம் கிழக்கு திசையிலும் தெற்கு திசையிலும் இருக்கிறது. ஆகவே  எல்லா ஊர்களிலும், அவ்வூர்களின் தெருக்களில் மழைநீரோட்டம் மேற்கு கிழக்காகவும், வடக்கு தெற்காகவும் இருக்கும். ஆனால் அமைக்கப்பட்ட சாக்கடைக் கால்வாய்கள் பல கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாக்கடை நீர் வடியாமல் தேங்கிநிற்கின்றன. மக்களும் அறியாமையால், வீட்டின் கழிவுப் பொருட்களை சாக்கடையில் வந்து கொட்டுவார்கள். இவ்வாறு தேங்கிய சாக்கடையில், கொசு உற்பத்தி தங்கு தடையில்லாமல் நடைபெறுகிறது.

7.             குழந்தைகளும், பெரியோர்களும், குடும்பத்திலுள்ளவர்களும் கொசுக்கடியால் அவதிப்பட்டு தூங்கமுடியாமல் துயரப்படுகிறார்கள். கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசுவத்தியைப் (Mosquito coil) பயன்படுத்துகிறார்கள். மின்சார ஆவிக் குடுவையிலிருந்து (Electric vapouriser) புறப்பட்டு வரும் ஆவியும் விஷத் தன்மை உடையது. அவைகளின் விஷபுகை மூக்கின் வழியாக சுவாசிப்பதால் மூளை பாதிக்கப்படுகிறது; உடல் பலவீனமடைகிறது.

8.             இணையதளத்திலிருந்து திரட்டிய தகவல்கள்:
நுரையீரலுக்கு, 100 சிகரட்டுகள் குடித்தால் என்ன கெடுதல் ஏற்படுமோ, அந்த அளவுக்கு, ஒரு கொசுவத்திச் சுருளால் கெடுதி ஏற்படும். - நன்றி:சந்தீப் சால்வி, மார்பு ஆராய்ச்சி பவுண்டேசன் இயக்குநர், www. World of chemicals.com.

               
9. அதிக அளவு ஆவியானது ((vapor)), தோல் எரிச்சல் (skin irritation)> , வயிற்றில் தொந்தரவுகள் (stomach problems),  நரம்பு மண்டலத் தொந்தரவுகள் (nervous system problems) உண்டாக காரணமாகிறது. நன்றி: www.quora.com <http://www.quora.com.


10.          அநேக பக்கவிளைவுகளும், அதாவது, தலைவலி, இருமல் (Cough)>  தொண்டை புண் (sore throat), ஒவ்வாமை (Allergy), கண்ணெரிச்சல் (eye irritation)  போன்றவை கொசுவத்திச் சுருள்களால் ( mosquito coils) உண்டாகின்றன.

11.          வெவ்வேறு கொசு விரட்டிகளால், உடல்நலக் குறைவு பாதிப்புகள் ஏற்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

12.          மூச்சுத்திணரல் பிரச்சனைகள் (Breathing problems)>  கண் எரிச்சல், அதைத் தொடர்ந்து மூச்சுக்குழாய் எரிச்சல் (bronchial irritation)>  தலைவலி (headache)  அல்லது தோலின் எதிர்வினை (skin reaction)  இருமல் (cough)> சளி (cold)  மூக்கில் நீராக ஒழுகுதல் (running nose) அதைத்தொடர்ந்து காய்ச்சல் அல்லது தும்மல் (fever or sneezing)  போன்றவைகள் ஏற்படுவதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.


13.          திரவ ஆவி (Liquid vaporizers)  தலைவலியையும், தொண்டைப் புண்ணையும் உண்டாக்கிறது என்றும் ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். நன்றி: www.hindawi.com <http://www.hindawi.com>

இப்படி கொசுக்களை விரட்ட, அல்லது கொசுக்களை ஈர்த்து மடிய வைக்கும் முறைகள் கொசுவை ஒழிக்க பயன்படவில்லை. அதற்கு பதில் கொசுக்கடியே தேவலை என்பது போல, உடல் நலத்தை கெடுக்கும்படியாகத்தான் அம் முறைகள் பயன்படுகின்றன.     

15.          கொசுவலையைப் பயன்படுத்தாதீர்கள்!
பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, சொந்த ஊரில், எனது சொந்த வீட்டில் குடியேறினேன். அங்கும் கொசுவின் தொல்லை குறைந்த பாடில்லை. சூன் மாதம் ஆரம்பித்து விட்டால் கொசுக்கடி ஆரம்பித்துவிடும். எனது வீட்டில்,மாலைவேளையில் கூடத்தில் விருந்தினருடன் உட்கார்ந்து பேசமுடியாது. கொசுக்கள் சுற்றி சுற்றி வந்து கடிக்கும். சமயலறையில் நிறைய கொசுக்கள் இருந்து சமையல் செய்ய விடாமல் எனது மனைவியை தொந்தரவு செய்து கொண்டிருக்கும். நான் மின்சார கொசு மட்டையால் கொசுக்களை விரட்டிக் கொண்டிருப்பேன். கொசுவத்திப் புகை எனக்குச் சேராது என்பதால் அதைப் பயன்படுத்த மாட்டோம்.

16.          எனது கட்டிலுக்குக் கீழே 10 பெரிய சூடங்களை (campher)  ஒரு சிறிய தட்டில் நீரில் மிதக்கவிட்டேன். இரண்டு நாட்கள் கொசுக்கடி குறைந்தது போல தெரிந்தது. மூன்றாவது நாளில் கொசுகடியில் மாற்றமில்லை. சூடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திப் பார்த்தேன்; பயனில்லை

17.          பெரும்பாலும் எனக்கு கால்ப் பாதங்களில் தான் கொசு கடிக்கும்; அதனால் உடனே ஒவ்வாமை (Allergy) ஏற்பட்டு கடித்த இடத்தில் அரிப்பு ஏற்பட்டு விடும். அரிப்பை குணப்படுத்த உடனே அரிப்புக்குறிய மருத்துவ மனப்பயிற்சியை (Medicinal Meditation) செய்வேன். சிறிது நேரத்தில் அரிப்பு குணமாகிவிடும். குணமாகும்போது, தூக்கம் வரவே தூங்கிவிடுவேன். ஆகவே பாதங்களை மட்டும் போர்வையால் போர்த்திக் கொள்வேன். குளிர்காலங்களில் கத கதப்பிற்காகவும், கொசுக்கடியிலிருந்து தப்பிக்கவும் கொசுவலையை (Mosquito net) பயன்படுத்தினேன்.

18.          தூங்கும் அறையில் வெளியேற்றும் மின்விசிறி (நஒயரளவ கயn) ஒன்றைப் பொருத்தினேன். அந்த விசிறி வெளிக்காற்றை அறைக்குள் அனுப்பும்படியாக அமைக்கப் பட்டது. இதன் மூலம், தலைக்கு மேலே சுற்றும் மின்விசிறியின் (Ceiling fan) காற்றும், வெளியேற்றும் மின்விசிறி (Exast fan) யின் காற்றும் சேர்ந்து கொசுக்களை ஓரளவு விரட்டின. படுப்பதற்கு முன்பு மின்சார கொசு மட்டையால் (Electric mat), கொசுவலைக்குள்ளிருக்கும் கொசுவை மடிய வைத்து விட்டு படுப்பேன். இருந்தாலும் நல்ல தூக்கத்தின்போது நான் புரண்டு படுக்கும்போது கொசுவலை விலகுவதால் ஏற்பட்ட இடைவெளியில் கொசு உள்ளே புகுந்து கடித்துத் தூக்கத்தைக் கெடுத்து விடும். ஆகவே கொசுவலையும் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உதவ முன்வரவில்லை. கொசுவலையை வைத்து அரோமணியின் 7-வது விதியைக் (Aromani’s 7th Principle) கண்டுபிடித்த வரலாறும் உண்டு (தயவுசெய்துஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள், புத்தகத்தைப் படிக்கவும்).

19.          அரோமணியின் 7-வது விதியைக் கண்டுபிடித்த வரலாறு
இரட்டை மருத்துவத்தைக் (Twin Medicine) கண்டுபிடித்து, அதில் அரோமணியின் 6 விதிகளையும் கடைப்படித்து, இளப்பு (Wheezing), தலைவலி (Head ache) முதலிய நோய்கள் லேசாக தலை எடுக்கும்போது மருத்துவ மனப்பயிற்சிகளை செய்து குணப்படுத்திக் கொண்டு வந்தேன். அந்த காலகட்டத்தில் முழுவதுமாக நோய்களிலிருந்து விடுபட்டாலும், குளிர்காலம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை அதாவது நவம்பர் முதல் மார்ச் முதல் வாரம் வரையிலும் இளப்பு மட்டும் விடவே இல்லை. அந்தக் காலம் முழுவதும் கொசுவலைக்குள் தூங்கி வந்தேன்.

20.          இளப்பை முழுவதுமாகக் குணப்படுத்தவும், 7-வது விதியை வெளிப்படுத்தவும் 6-3-2011 தேதியை குறித்திருந்தான் அவன். அன்று அதிகாலையில் இளப்பைப் பொறுக்கமுடியாமல், கொசுவலையை விலக்கிவிட்டு தலையை மட்டும் வெளியில் கொண்டுவந்தேன். நான் வியக்கும்படியாக, இளப்பு என்னை விட்டு சட்டென்று விலகியது. இறைவன், மின்னல் பளிச்சிடும் வேகத்தில், கொசுவலைக்குள் காற்றின் பற்றாக்குறைதான் இளப்புக்குக் காரணம் என்பதையும் , அரோமணியின் 7-வது விதியையும் (காற்றோட்டக் குறைவுக்குத் தகுந்தாற்போல, நோய்கள் தோன்றும் ) வெளிப்படுத்துனான். அன்றையிலிருந்து கொசுவலை பயன்படுத்துவதை விட்டு விட்டேன். அந்தக் காலங்களில் இளப்பிலிருந்தும் முற்றிலும் விடுபட்டேன்.

21.          கொசுவலை பயன்படுத்தும் காலங்களில் எனது பேரக் குழந்தைகளை கொசுவலைகளை பயன்படுத்தச் சொல்லி வற்புறுத்தினேன். அவர்கள் அவைகளை பயன்படுத்த மறுத்துவிட்டார்கள். கொசுவலைக்குள் போதிய காற்று இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் நான் அறியாமல் இருந்து விட்டேன். குழந்தைகளிடமிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே வீட்டுக்குள் போதிய காற்று கிடைக்க வேண்டுமென்றால், ஜன்னல்களுக்கு கொசுவலைக் கம்பி வலை அடிப்பதை விட்டு விடுங்கள். என்னுடைய பேரக் குழந்தைகளைப் போல, கொசு கடித்தாலும் பரவாயில்லை, காற்றுதான் முக்கியம் என்ற நினைப்பை மனதில் பதியுங்கள்.

22.          இப்படி கொசுக்கடியால் குடும்பத்தில் அனைவரும் அவதிப்பட்டிருக்கிறோம். கொசு ஒழிப்பு மருந்துக்காக கடை கடையாக அலைந்தேன். “கொசுவை ஒழிக்க மருந்தில்லை. ஆனால் கொசுவை விரட்டத்தான் மருந்திருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். அப்படியானால் கொசுவை ஒழிக்க வழிதான் என்ன? ஒரே வழி கொசு உற்பத்தியைத் தடுப்பதுதான். ஆனால் கொசு உற்பத்தியை எப்படி தடுப்பது?

23.          இறைவனின் ஆராய்ச்சி துவக்கம்.
2010 ஆம் ஆண்டு சூளை மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள் மாலை நேரத்தில் மொட்டை மாடியில் உட்கார்ந்து வானத்தில் பறவைகள் பறந்து கூடுகளுக்குத் திரும்புவதை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவன், எனது வீட்டின் செப்டிக் டேங்கின் வாயுக் குழாயிற்குள் கையிலிருந்த ஏதோ ஒன்றைப் போட்டான். பிறகு நைலான் பின்னல் வலையை வாயுக் குழாயின் வாயில் இறுகக் கட்டிவிட்டான். சிறிது நேரத்தில் மேலே ஏறி என்னிடம் வந்தான். வந்தவன் என்னிடம், ”செப்டிக் டேங்கில் கொசு மருந்து போட்டு, வலைப் பின்னல் கட்டிவிட்டு, வீட்டுக்காரரிடம் ரூபாய் 20 வாங்கிக்கொள் என்று சானிட்டரி இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டார் என்று சொன்னான். அவன் சொன்னதை, செய்ததை நான் பார்த்ததால், அவனிடம் ரூ.20 கொடுத்து அனுப்பினேன்.

24.          அவன் சென்றவுடன், கொசு உற்பத்தியாகும் இடம் செப்டிக் டேங் என்பதை எனக்கு பளிச்சென்று புரியவைத்தான் இறைவன். இதற்கு முன்னால் வரை கொசுவின் உற்பத்தி இடத்தைப் பற்றி அறியவேண்டும் என்ற எண்ணம் எழுந்ததே இல்லை. அதனை அழிக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. செய்தித்தாழ்களில் கொசுவின் உற்பத்தி இடங்கள் என்று தண்ணீர்த் தொட்டிகள், உபயோகமில்லாத பானைகள், குடங்கள், தண்ணீர் தேங்கும் இடங்கள், வீனான பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்குதல் ஆகியவைகள்தான் கொசு உற்பத்தியாகும் இடங்கள் என்று படித்திருக்கிறேன். செப்டிக் டேங், கோப்பையிலிருந்து செப்டிக்டேங்கிற்குச் செல்லும் குழாய் மற்றும் கழிவுநீர்க்குழாய்கள்தான் முழு முதற் காரணம் என்பதை படித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

25.          மறுநாள் மாலையில், ஒரு பிளாஸ்டிக் வாளியில் நிறைய நீரை நிரப்பினேன். அதில் கழிப்பறையில் இருந்தலைஸால் (டisol)’ என்ற தரையை தூய்மைப் படுத்த வைக்கப்பட்டிருந்த கிருமிநாசினி திரவப் பாட்டிலின் (500 ml) மூடியில் ¾ பாகம் திரவத்தை எடுத்து நீர் நிரப்பிய வாளியில் ஊற்றி நன்றாக கலக்கினேன். கலக்கிய நீரை ஒரு லிட்டர் பிளாஸ்டிக் கப்பில் மோந்து (முக்கால் பாக வாளித் தண்ணீரை) கழிவறைக் கோப்பை வழியாக செப்டிக் டேங்கிற்கு ஊற்றிவிட்டேன். மீத நீரை குளிக்கும் கழிவு நீர்க் குழாயிலும், வாஸ்பேசின் குழாயிலும் சமையலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டியிலும் (Washing tub) ஊற்றிவிட்டேன். ஒருவாரம் தொடர்ந்து ஊற்றி வந்தேன். கொசுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது எனக்கு நன்றாகவே தெரிந்தது. எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. மற்றொன்றையும் கவனித்தேன். காலையில், எனது கொசுவலையின் மேலே கொசுக்கள் இறந்துகிடந்ததை பார்க்கமுடிந்தது.  ‘கொசு உயிரோடிருக்கும் காலம் 24 மணி நேரத்திற்குள் தானோ! உண்மையாக இருக்கலாம்!. கூடுதலான காலமாக இருந்தால் பெருகிக்கொண்டே போகும் அதன் எண்ணிக்கையில் மனிதர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்! ’ என்ற எண்ணம் ஏற்பட்டது. கொசு முற்றிலுமாக குறையவில்லை. ஆனால், கொசு மேட்டைப் (Mosquito mat) பயன்படுத்தும் நிலை இல்லை.

26.          எனது வீட்டின் முன் ஒரு சாக்கடை கால்வாய் இருந்தது. அதில் கிருமிநாசினி நீரை ஊற்றவேண்டும் என்ற எண்ணம் அப்பொழுது தோன்றவில்லை. பிறகு சொந்த ஊரை விட்டு, மதுரையில் வந்து குடியேறினோம். வாடகை வீடுதான். காற்றோட்டமுள்ள வீடு. ஆனால் கொசுவின் தொந்தரவு அதிகமாகவே இருந்தது. வழக்கம்போல கிருமிநாசினி கலந்த நீரை (lizol mixed water)  கழிவறை-,குளிப்பறை ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்த அறையில், கழிவுக் கோப்பை வழியாக செப்டக் டேங்க், கழிவுநீர்க்குழாய், சமயலறை கழிவுநீர்க் குழாய், வாஸ்ப்பேசின் கழுவுநீர்க் குழாய் ஆகியவற்றில் ஊற்றிவிட்டேன். கொசுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

27.          வேப்பெண்ணெயின் சிறப்பறிந்து, பாமாயில் ஒரு லிட்டரில், 25 மிலி அளவு வேப்பெண்ணைய கலந்து, ஒரு மண்சுட்டியில் அதன் கொள்ளளவுக்கு கலவை எண்ணையை ஊற்றி திரி போட்டு இரவு 8.20 முதல் 10.15 வரை எரிய விட்டேன். நல்ல முன்னேற்றம் தெரிந்தது. கொசுக்கள் முற்றிலும் இல்லாமல் இல்லை. எனது முகத்திலும், இரண்டு கால்களின் பாதங்களிலும் வேப்பெண்ணையை தேய்த்து விட்டு, தலையில் துண்டை கட்டிக் கொண்டு படுத்தேன். கொசுக்கடி இல்லாமலிருந்தது. ஒருவாரத்திற்குப் பிறகு கண்களிலிருந்து நீராக கொட்ட ஆரம்பித்தது. வேப்பெண்ணை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். மண்சுட்டியில் விளக்குப் போடுவதால் சுற்றுச்சூழலின் வெப்பம் உயரும் என்பதால் இதற்கு மாற்று ஒன்று காணவேண்டும் என்று விரும்பினேன்.

28.          அதற்கு முதல் கட்டமாக, காலியான மின் ஆவிக் குடுவையில் (electric vapouriser)  மண்ணெண்ணையை நிரப்பி,. அதில் வேப்பெண்ணைய் 15  சொட்டுக்கள் ஊற்றி ஆராய்ச்சி செய்தேன்: இரண்டாவது கட்டமாக, அதே காலியான 2 மின் ஆவிக் குடுவையை எடுத்து, அதில் மண்ணெண்ணைக்குப் பதிலாக ஆல்கஹாலை (spirit) நிரப்பி, அதில் வேப்பெண்ணைய் 15  சொட்டுக்கள் ஊற்றி ஆராய்ச்சி செய்தேன்: நான்காவது கட்டமாக, காலியான 2 மின் ஆவிக் குடுவையில் நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை நிரப்பி,. அதில் ஒவ்வொன்றிலும் 10 சொட்டுகள் வேப்பஎண்ணையை ஊற்றி ஆராய்ச்சி செய்தேன். கொசுக்கடி குறைந்தாலும், இந்த அனைத்து ஆராய்ச்சிகளிலும், பக்கவிளைவுகள் இருந்ததால், அந்த ஆராய்ச்சிகளைத் தொடராமல் விட்டு விட்டேன்

29.          பிறகு ஒரு டெய்லரிடம், கொசுக்கடியிலிருந்து தப்பிக்கமூக்குத் துவாரங்களை மட்டும் விட்டுவிட்டு, முகத்தை முற்றிலும் மூடும்படியாக, ஒரு முகமூடி செய்து தரமுடியுமா!” என்று கேட்டேன். அங்கிருந்த இரண்டு டெய்லர்களும் என்னைப் பார்த்து இலேசாக புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தார்கள். ஒருவர்! செய்து தர முடியுமே!” என்று சொன்னார்.  “அளவு கொடுக்க ஒரு வாரம் கழித்து வருகிறேன்என்று சொல்லிவிட்டு வந்தேன். அதற்குள் இறைவன் முகமூடியைப் போல ஒரு அமைப்பு வீட்டிலேயே இருப்பதை எனக்கு ஞாபகப்படுத்தினான்.

30.          நான் எப்பொழுதும் கை வைத்த பனியனையே அணிந்து வந்தேன். அந்தப் பனியனை எடுத்து, பனியனின் கைகளை விட்டுவிட்டு, தலைப்பகுதியை மட்டும் தலைக்குள் நுழைத்துக் கொள்வேன். அதை அப்படியே மூக்குவரை இழுத்துக் கொண்டு வந்து விடுவேன். இப்பொழுது, கழுத்துப் பகுதி, காதுகள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. கழுத்துப்பகுதியில் பனியனின் மீதப் பகுதி அனைத்தும் அப்படியே கழுத்தில் வசமாக உட்கார்ந்து கொள்கிறது..இதனால் நாம் எப்படி புரண்டு படுத்தாலும் கொசு கடிக்க முடியாமல் போய்விடுகிறது. இந்த ஏற்பாடு முகமூடியைக் காட்டிலும், வசதியானதாக, காற்றோட்டத்திற்குத் தடங்கல் இல்லாமல் இறுகப்பிடிக்காமலிருந்ததுமூக்குக்குக் கீழ்ப் பகுதியை போர்வையைக் கொண்டு போர்த்திக் கொள்ளலாம். இது எனக்கு 75% கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உதவியது என்று சொன்னால் மிகையாகாது.

31.          எனது கவனம் எனது வீட்டுக்குப் பின்னால் தேங்கிக்கிடந்த கழிவுநீர்ச் சாக்கடையின் பக்கம் திரும்பியது. இந்த சாக்கடை மற்ற ஏழு வீடுகளினால் உண்டான கழுவுநீர்ச் சாக்கடையாகும். அந்தச் சாக்கடையிலும் கிரிமிநாசினி கலந்த நீரை நிரப்பி எடுத்துச் சென்று அந்த சாக்கடை நீரில் தெளித்து விட்டேன்.

32.          தினசரி ஊற்றிவிடும் கிருமிநாசினி கலந்த நீராலும் (வெளிச் சாக்கடை உட்பட), சுட்டி விளக்கு ஏற்றினதாலும் இரவு படுக்கப்போவது வரையிலும், படுத்த பிறகும் கொசுக்கடி இல்லாமலிருக்கும். ஆனால் விடியற்காலை 4 மணிக்கு மேல் மிகச் சிறிய கடுகு அளவுதானிருக்கும்; அப்பொழுதுதான் பிறந்திருக்கும். அவைகள் கடிக்க ஆரம்பித்தன. இந்த கொசுக்கள் எங்கே உற்பத்தியாகி வருகின்றன? என்ற வினா எனக்குள் சில நாட்களாக குடைந்து கொண்டே இருந்தன. விரைவில் எனக்கு விடை கிடைக்கச் செய்தான்.

33.          ஒரு நாள் நான் சமயலறையில் நுழைந்தபோது, தவறுதலாக சமயலறையின் கழிவுக் குப்பைக் கூடையை கால் தட்டி விட்டது. அந்த கூடையின் குப்பையிலிருந்து கடுகளவு அளவில் பூச்சிகளாக பறந்து வெளியேறியது. காலையில் கடிக்கும் கொசுக்களின் உற்பத்தி இடத்தைக் கண்டுபிடித்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது, அன்றையிலிருந்து காலையில் 10 மணிக்குள் சமயலறை குப்பைக் கூடையிலிருக்கும் கழிவை அப்புறப்படுத்தி, அந்த கூடையை முதலில் நீர் விட்டு கழுவி பிறகு உட்புறத்தில் தெளிப்பானால் (ளிசயலநச) கிருமிநாசினி நீரை பீச்சி அடிப்பேன்.

34.          ஒரு தடவை பிற்பகல் மூன்று மணிக்கு சமயலறைக் கழிவை அப்புறப்படுத்தி, கூடையைக் கழுவி, கிருமிநாசினி நீரால் சுத்தம் செய்து வைத்துவிட்டேன். பிற்பகலுக்குப் பிறகு பச்சைக் காய்கறிகளின் கழிவும், பழைய சாம்பாரிலிருந்த தக்காழிப்பழம், மிளகாய் போன்ற கழிவுகளும் நிறைய சேர்ந்திருந்தது. இரவு 9 மணிக்கு சந்தேகப்பட்டு, அந்த கூடையை அசைத்தேன். கூடையிலிருந்து புதிய உற்பத்தியான கடுகுக் கொசுக்கள் வெளியேறின. இதிலிருந்துதான் கொசு 6 மணி நேரத்திற்குள் உற்பத்தியாகிவிடும் என்ற உண்மையை அறிந்துகொண்டேன். அன்றையிலிருந்து இரவு 9.30 மணிக்கு மேல் சமயலறைக் கழிவை அப்புறப்படுத்த ஆரம்பித்தேன். காலையில் பேபிக் கொசுக்களின் கடி இல்லாமல் போய் விட்டது.

35.          நாங்கள் குடியிருந்த வீட்டில் மேற்கத்திய கழிப்பறைக் கோப்பை அமைக்கப்பட்டிருந்தது. ஆகவே அவற்றில் கோப்பையின் வெளிப்புறத்தை தெளிப்பானால் (sprayer) கிருமிநாசினி நீரை பீச்சி அடிப்பேன் அல்லது ஸ்பாஞ்சால் (sponge)  கோப்பையின் மீதும், வாஸ்பேசின் (Wash basin) வெளிப்புறத்திலும், சமயலறை கழிவுநீர்த்தொட்டி (Kichen wash tub) வெளிப்புறத்திலும் தடவிவிடுவேன். இதனால் அப்பகுதிகளில் கொசுக்கள் தங்குவது நிறுத்தப்பட்டது.

36.          ஒரு நாள் நானும் எனது மனைவியும் ஒரு விசேஷத்திற்குச் சென்றுவிட்டு, இரவில், தாமதமாக வீடு திரும்பினோம். அதனால் எனது மனைவியால் பாத்திரங்களை கழுவமுடியாத நிலை ஏற்பட்டு விட்டது. காலையில் சந்தேகத்துடன், எழுந்தவுடன் சமயலறை கழிவுநீர்த்தொட்டியைப் பார்வையிட்டேன்தொட்டியில் உள்ள பாத்திரங்களை கையால் தட்டினேன். நான் சந்தேகப்பட்டதைப்போலவே அப்பாத்திரங்களிலிருந்து குழந்தை கொசுக்கள் நிறைய வெளியேறின. அன்றையிலிருந்து இரவில் பாத்திரங்களை கழுவமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால், நான் பாத்திரங்களின் மீது பிளீட்சிங் பவுடரை தூவிவிடுவேன். இவ்வாறு கொசுக்களின் உற்பத்தியை சமயலறை கழிவுநீர்த்தொட்டியில் தடுத்து விட்டேன்.

37.          படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்குக் கீழே பொருட்கள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன். கட்டிலுக்குக் கீழே உள்ள பகுதியில் குப்பை நிரம்பியிருந்தால் கொசுக்கள் அங்கே தங்கி இரவு நேரத்தில் கடிக்க செய்யும். எறும்பு, ஆகியவற்றின் தொந்தரவும் பெருகிவிடும் என்பதற்காக, வாரத்திற்கு ஒரு முறை வீட்டின் அனைத்து அறைகளையும் சமயலறை உட்பட பெருக்கிச் சுத்தப்படுத்தி, கி.நா.திரவ நீரால் துடைத்து விடுவேன். துடைக்கமுடியாத இண்டு இடுக்கு எதுவுமிருந்தால், தெளிப்பானால் (sprayer) கிருமிநாசினி நீரை பீச்சி அடிப்பேன். இதன்மூலம் நல்ல பலன் கிடைத்தது.

38.          மாதத்திற்கு ஒரு முறை கழிப்பறைக் கோப்பையையும், குளிக்கும் அறையையும் கரையைப் போக்கும் கி.நி.திரவத்தைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தினேன்.

39.          நான் செய்த மேலே குறிப்பிட்ட கொசு ஒழிப்பு முறைகளினால் கொசுக்களின் உற்பத்தித் தடுக்கப்பட்டு, கொசுக் கடியிலிருந்து நானும் எனது குடும்பத்திலுள்ளவர்களும் விடுபட்டோம்.

40.          இறைவனின் குரல் கேட்டு எழுந்தேன்!
கொசுவை ஈர்க்கும் விளக்கை (trapper light)  சோதித்துப் பார்க்க விரும்பி அதனை ரூ.1500 விலை கொடுத்து 15-3-2014 அன்று வாங்கினேன். அதைச் சோதிப்பதற்காக,, இரண்டு மூன்று நாட்களுக்கு கிருமிநாசினி நீரை வெளிச் சாக்கடையில் ஊற்றாமல் விட்டு விட்டேன். கொசுவின் நடமாட்டமும் அதிகரித்தது. விளக்கை எரியவிட்டுத் தூங்கினேன். கொசுக்கடி குறைந்தது போல் தெரியவில்லை. மறுநாள் காலையில் கொசு செத்து விழும் பெட்டியை திறந்து பார்த்தால், சில கொசுக்கள்தான் செத்து விழுந்திருந்தன. மற்ற பூச்சிகள்தான் அதிகமாக செத்துக் கிடந்தன. எனக்கு அந்த விளக்கின் மீது அதிர்ப்தி ஏற்பட்டது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். விளக்கினால் மந்தமான வெளிச்சம் அறையில் இருந்து கொண்டே இருந்தது. அதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. அறை இருட்டாக இருந்தால்தான் நல்ல தூக்கம் கிடைக்கும்.

41.          21-3-2014 அன்று நடுஇரவில் நல்ல தூக்கத்திலிருக்கும் போது, திடீரென்று எனக்குள்விளக்கை அணை என்ற குரல் கேட்டு, எழுந்து கொசுவை ஈர்க்கும் விளக்கின் சுவிட்சை அணைத்து விட்டுப் படுத்தேன். உடலெல்லாம் நன்கு வியர்வையில் நனைந்திருந்தது. அதற்குப் பிறகு கொசுகடியும் குறைந்து வியர்வையும் அடங்கி நன்கு தூங்கிவிட்டேன். காலையில் எழுந்தவுடன் விளக்கைப் பற்றிய விளக்கத்தைக் கொடுத்தான். விளக்கானது வீட்டுக்குள்ளிருந்து மட்டுமல்லாமல், வெளியிலிருந்தும் 10 கொசுக்களை ஈர்த்து, 5 கொசுக்களை மடிய வைக்கிறது. மீதம் 5 கொசுக்களை அறைக்குள் நம்மை கடிக்க விட்டு விடுகிறது. அறை பூராவூம் மந்த வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. அல்ட்ரா வைலட் ரேயினால் (ultra violet ray) சிறிது சிறிதாக வெப்பம் ஏறி உடலை வியர்க்க வைக்கிறது. ஆகவே கொசுவை ஒழிப்பதற்கு கொசு ஈர்க்கும் விளக்கு ஏற்ற உபகரணம் இல்லை என்பதை தெரிவித்து விட்டான். அதை அப்படியே எடுத்து பரணில் (Loft) போட்டு விட்டேன். நான் அதனை ஆராய்ச்சிக்காகத்தான் வாங்கினேன் என்பது எனது மனைவிக்குத் தெரியாது. ஆகவே ரூ.1500 வீணாகிவிட்டதற்கு எனது மனைவிக்கு மிகவும் வருத்தம்.

42.          இந்த ஆண்டு 2016-ல் சூளை மாதம் முதல நான் பினையில் (phenyle)  கலந்த நீரை பயன்படுத்தி கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வந்தேன்.

43.          இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2016 முதல்நிமில் (nimyle)|  என்ற மூலிகையால் தயார் செய்யப்பட்ட கிருமிநாசினியைப் பயன்படுத்தினேன்..5-11-2016-லிருந்து பிளீட்சிங் பவுடரை கரைத்து ஊற்றலானேன். நல்ல பலன் கிடைத்தது. செயல்முறையும் எளிமையாகவும் விரைவாகவும் செய்து முடிக்க முடிந்தது.

44.          பேபி கொசுக்களின் மற்றொரு பிறப்பிடத்தைக் கண்டுபிடித்து அழித்தேன்!
கொசு எப்படியெல்லாம் உற்பத்தியாகிறது என்பதைத் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். செப்டம்பர் கடைசி வாரத்தில், எனது மனைவி ஊரிலுள்ள வீட்டுப் பராமரிப்பு வேலை செய்ய ஊருக்குச் சென்று விட்டார்கள். எனது மனைவி இருந்த வரையில் பேபி கொசு கடி இரவு படுக்கும்போதும், காலை 4 மணிக்கும் இல்லாமலிருந்தது. எனது மனைவி போனவுடன் கடிக்க ஆரம்பித்தது. இந்த பேபி கொசுக்கள் எங்கே உற்பத்தியாகின்றன ? இந்த கேள்வி என்னைக் குடைந்து கொண்டே  இருந்தது. அதன் விடை எனக்குச் சில நாட்களில் இறைவன் தெரியப்படுத்தினான்.

45.          மனைவி இல்லாததால், மதியமும், இரவும் ஹோட்டலிலிருந்து சாப்பாடும், இடலியும் வாங்கி வந்து வைத்திருந்து, பசி எடுத்தவுடன் சாப்பிடுவேன். காலையில் வீட்டிலிருக்கும் மாவைக் கொண்டு தோசை போட்டுச் சாப்பிடுவேன். எனது மனைவி இருந்தவரை கழிவுக் கூடையில் கழிவுப் பொருள் நிரம்பியவுடன், தெருவில் வரும் குப்பை வண்டியில் குப்பையைப் போட்டுவிடுவார்கள். இப்பொழுது மனைவி இல்லாததால், குப்பை வண்டி வரும் நேரம் தெரிவதில்லை. ஆகவே நான் சாப்பிட்டு முடித்தவுடன், உணவுக் கழிவுப் பொருட்களை, பிளாஸ்டிக் பையில் போட்டு, எனது படுக்கை அறையின் ஜன்னல் வழியாக, பக்கத்தில் உள்ள காலிமனையில் வீசி எறிந்து விடுவேன். அது வீட்டை ஒட்டித்தான் விழும். இப்படித் தொடர்ந்து போட்டு வந்தேன். ஒரு வாரம் கழிந்திருக்கும். நான் வீசி எறிந்த உணவுப் பொட்டலங்களிருந்துதான் கொசு உற்பத்தியாகி வருகின்றன என்பதை எனக்கு இறைவன் தெரியப்படுத்தினான். அவன் தெரியப்படுத்தியப் பிறகு நான் ஜன்னல் வழியாக அந்த பொட்டலம் விழும் இடத்தைப் பார்த்தேன். அதில் பல்வேறு செடிகள் வளர்ந்து புதராக மண்டிக் கிடந்தது. அதற்குள் விழும் பொட்டலத்திலுள்ள உணவு கழிவுப்பொருடகள் வெயில் படாததால், அப்பொருட்கள் ஈரப்பசையுடனிருக்கும். இந்த ஈரப்பசைதான் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. நான் போடும் உணவுக் கழிவு காய்ந்துவிடும் என்றுதான் பொட்டலமாகப் போட்டு வந்தேன்.

46.          ஆகவே, இறைவனின் அறிவுரையின்படி, ஒவ்வொரு வேளையும், சாப்பிட்ட பிறகு, உணவுக் கழிவுப் பொருட்களின் மீது சிறிதளவு பிளீட்சிங் பவுடரைத் தூவி பொட்டலத்தின் பிளாஸ்டிக் பையை இறுக காற்று புகாதவாறு கட்டி ஜன்னல் வழியாக வழக்கம்போலப் போட்டு விடுவேன். பேபி கொசுக்களின் கடி சிறிது சிறிதாகக் குறைந்து மூன்று நான்கு நாட்களில் அதன் உற்பத்தி முற்றிலும் நின்று விட்டது.

47.          கொசு, எறும்பு, ஆகிய உயிரினங்களின் படைப்பின் நோக்கம் என்ன.?
கொசு, எறும்பு, ஆகிய உயிரினங்களை இறைவன் ஏன் படைத்தான்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இவைகளை மனிதனுக்கு தொந்தரவு கொடுப்பதற்காகவா படைத்தான்? கொசு கடித்து தூக்கத்தை கெடுக்கிறது! எறும்பும் உடல் பூராவும் ஊறி, கடித்து, தூக்கத்தையும் கெடுக்கிறது; உணவுப் பொருட்களில் மொய்த்து சாப்பிடவிடாமல் செய்கிறது! மேலும் நோயைப் பரப்புகிறது! எனக்கு அந்த கேள்வி எழுந்த சில நாட்களில் பதில் கிடைக்கச் செய்தான்!

48.          சுவாமி பரமசுகானந்தா ஒரு சொற்பொழிவில், “கபிலன் அவனுடைய தாயாரிடம் கூறுகிறான் அதாவது முழுப் படைப்பின் ஒவ்வொன்றிலும் மற்றும் ஒவ்வொருபொருளிலும் எல்லாம் வல்ல இறைவன் குடியிருக்கிறான். பிறகு ஒவ்வொரு மனிதனும் அது மனைவியாகட்டும், கணவனாகட்டும், தாயாராகட்டும், தந்தையாகட்டும், ஆசிரியராகட்டும், நண்பராகட்டும், விரோதியாகட்டும், அல்லது யாரை ஒரு முட்டாள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாயோ, அந்த முட்டாளாகட்டும் அவன் ஒரு கோவிலாக இருக்கிறான்; அந்த கோவிலில்தான் இறைவன் குடியிருக்கிறான், என்று கூறினார். நன்றி: ~THE HINDU|> , தேதி:8-4-2015

49.          மனிதனின் உடலில், இறைவன் உடலை வாடகைக்கு எடுத்து, அவனின்  ஊழ்வினக் காலம் முடியும் வரை தங்கியிருக்கிறான். அந்த காலம் வரை உடல் மனம் ஆகிய இரண்டும் நலமாக இருந்தால்தான் அவன் வசதியாக அவ்வுடலில் தங்கியிருக்க முடியும். அதற்காகவே அவன் உடலையும், மனதையும், காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை  இணைந்து செயல்படும்படியாக (கவனவாழ்க்கையில்) மனிதனுடைய உடலை வடிவமைத்திருக்கிறான் (designed). அவ்வாறு செயல்படும்போது, உடல் உறுப்புகளின் தேய்மானம் தடுக்கப்பட்டு, அதனால் வரும் நோய்களும் தடுக்கப்படுகிறது; மனதில் தேங்கியுள்ள மனவழுத்தங்களும் வெளியேற்றப்பட்டு, புதிய மனவழுத்தங்கள் சேராமலும் தடுக்கப்பட்டு மனநலம் காக்கப்படுகிறது.

50.          மேற்கூறியவாறு உடல்மனநலம் அன்றாட நமது செயல்முறைகளிலே நமக்கு எந்த மருந்தும் மாத்திரையும் பயன்படுத்தாமல் கிடைக்கும்படியாக நமது உடலை அவன் வடிவமைத்திருக்கிறான். அவன் வடிவமைத்தபடி இயற்கையான உடல்மனநலம் பெறும் வாழ்க்கையைத்தான் கவனவாழ்க்கை (Attentive Life) என்கிறான். இப்பொழுது நீங்கள் (நான் கவனவாழ்க்கை வாழ்கிறேன்.) வாழும் வாழ்க்கை கற்பனை வாழ்க்கையாகும் (Imagination Life). நோய் நொடிகளும், மனவழுத்தங்களும், துன்பங்களும், துயரங்களும் நிறைந்த வாழ்க்கைதான் கற்பனை வாழ்க்கை.

51.          உடலை இயற்கையான முறையில் உடல்மன நலம் பெற வடிவமைத்து விட்டான். ஆனால் அவ்வுடலில் இயங்கும் ஐம்பூதங்கள் அதாவது இயற்கை சக்திகளான பூமி, நீர், நெருப்பு, காற்று ஆகாயம் ஆகிய ஐந்தும் தூய்மையாக இருந்து செம்மையாக செயல்பட்டால்தானே உடலும் செவ்வையாக செயல்படும். உடல் இயங்க தூய்மையான காற்று, தண்ணீர் மற்றும் ஆகாயம் தேவை. இதற்கு வீடும், சுற்றுப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

52.          கற்பனை வாழ்க்கையில் மனிதன் மனவழுத்த மூட்டையை சுமந்து கொண்டே திரிவான். சோம்பேறித்தனம் மிகுந்திருக்கும்; மனவளம் குறைந்தவனாகவும், அறியாமை மிகுந்தவனாகவும் ஆகிவிடுவான். இந்த வாழ்க்கையில் அவன் தனது உடலை கவனிக்காமல் விட்டு விடுவான். அப்படி விட்டு விட்டால், தான் (இறைவன்) அவன் உடலில் அவனது ஊழ்வினைக்காலம் முடியும் வரை தங்கியிருக்க முடியாது என்பதை எண்ணித்தான், மனிதன் தனது வீட்டையும் மற்றும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே எல்லாம் வல்லவன் கொசு, எறும்பு, ஆகியவற்றைப் படைத்தான். படைப்பின் நோக்கத்தை அறியாத மனிதன் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பதற்குப் பதிலாக, அவற்றை விரட்டுவதற்கு, உடல்மன நலத்தைக் கெடுக்கும்விதமாக (அவன் தங்கமுடியாதபடி), நச்சு வாயுவை வெளிப்படுத்தும் பொருட்களை செலவுசெய்து வாங்கி பயன்படுத்துகிறான்!

53.          கழிப்பறையை தூய்மைப்படுத்துவது இறைவனை வழிபட்டு, அவனுக்குச் சேவை செய்வதாகும்!
கவனவாழ்க்கை வாழும்போது உடலும் மனமும் இணைந்து செயல்பட்டு இயற்கையான உடல்மன நலம் கிடைக்கச்செய்த இறைவன், முழு ஆன்மீகமும் கிடைக்கும்படியாகவும், அதன்மூலம் முழு தெய்வீக ஆற்றல் கிடிக்கும்படியாகவும் உடலை வடிவமைத்திருக்கிறான். எப்படி என்றால், காலையில் எழுந்ததிலிருந்து படுக்கப்போகும் வரை நீங்கள் செய்யும் செயல்களில் வேலைகள் உட்பட அனைத்திலும் உங்கள் கவனம் (மனம் அலைபாய்வதை நிறுத்தி, மீண்டும் மீண்டும் செயல்களில் மனதை திருப்புவது.) நிலைத்திருக்கிறது. இப்படி நிலைத்திருப்பதால், நீங்கள் எண்ணத்தாலும், சொல்லாலும். செயலாலும் எவருக்கும் தீங்கிழைக்க மாட்டீர்கள். இந்த கொள்கைதான் ஆன்மீகத்தின் மையக்கொள்கையாகும். கவனவாழ்க்கையில் இந்த கொள்கையை இயல்பாகவே கடைப்பிடிக்கிறீர்கள். இதனால் இறைவனின் முழு அருளும், ஆசீர்வாதமும், ஆற்றலும் நீங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

54.          கற்பனை செய்தல், திட்டமிடுதல், யோசித்து முடிவெடுத்தல் ஆகிய மூன்றும் கற்பனை வாழ்க்கையின் முக்கிய 3 தூண்களாகும். இந்த மூன்றும்தான் மனிதனின் மனவழுத்தம், நோய் நொடி, துன்பம், துயரம் ஆகியவற்றின் மூலாதாரங்களாகும். கவனவாழ்க்கையில் மேற்குறிப்பிட்ட மூன்றும் தகர்த்தெறியும்படியாக அவன் நமது உடலை வடிவமைத்திருக்கிறான். ஆகவே, கவனவாழ்க்கையில் முழு உடல்மன நலமும் (100%) முழு ஆன்மீக ஆற்றலும் (1000 பங்கு ஆற்றல்) எந்த முயற்சியில்லாமல் இயல்பாக கிடைக்கச்செய்கிறான்.

55.          மேற்சொன்ன ஆன்மீக ஆற்றலைப் பெற, இப்பொழுது மக்கள் உடல், பொருள், ஆவி அத்தனையையும் செலவழிக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு முழு ஆன்மீக ஆற்றல் கிடைப்பதில்லை. கவனவாழ்க்கையில் 1000 பங்கு ஆன்மீக ஆற்றல் கிடைக்கிறதென்றால், தற்பொழுதுள்ள வழிபாடுகளால் 10 பங்கு, 30 பங்கு, 60 பங்கு என்றுதான் கிடைக்கிறது. கவனவாழ்க்கையில் எப்பொழுதும் அவன் உங்களுடனிருக்கிறான்; பேசுகிறான்; வாழ்க்கையின் அனைத்து அம்சங்களின் வளர்ச்சியிலும் பங்கெடுத்துக் கொள்கிறான்.

56.          மனித உடலில் அவன் தங்கியிருப்பதையும், உடல்மன நலம்தான் ஆன்மீகம் என்பதையும், அதனைப் பெற மனித உடல் வடிவமைக்கப்பட்டிருப்பதையும், கொசுவைப் படைத்ததையும் அவன் எனக்குத் தெரிவித்த நாளிலிருந்து, நான் கழிப்பறையை சுத்தப்படுத்துவதையும், வெளியில் தேங்கிக் கிடக்கும் சாக்கடையில் கிருமிநாசினி நீர் தெளிப்பதையும் இறைவனை வழிபடுதாகவும் அவனுக்குச் சேவை செய்வதாகவும் நினைத்து செய்து வருகிறேன். இந்தச் சேவையின் மூலம் அவன் எனது உடலில் வசதிக் குறையில்லாமல் தங்க ஏற்பாடு செய்கிறேன் என்ற மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்கிறது. இதற்கு அவன் எனக்கு அவனது அருளும், ஆசியும், ஆற்றலும் முழுவதுமாக கிடைக்கச்செய்கிறான்.


57.          ‘சுத்தமே பிரம்மன்!’’
உணவின் முக்கியத்தை உணர்த்த, மகான் ஓஷோ, உபநிடத்திலிருந்து கதை ஒன்றினைச் சொன்னார்.

சுவேதகேது படிப்பை முடித்துவிட்டுப் பெரிய அறிஞராக திரும்பி வந்தான். புத்திசாலி மாணவன். எல்லாவிதமான பரிசுகளும், பட்டங்களும் கௌரவங்களும் பெற்றுத் திரும்பி வீடு வந்து சேர்ந்தான். பெருமிதத்தோடு வந்து சேர்ந்தான்.

58.          அவனுடைய வயதான தந்தை உத்தாலக், அவனைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்டார். ‘பிரமாதமான அறிவோடு வந்திருக்கிறாய். ஆனால் அறிந்து கொள்ள வேண்டியவனை அறிந்திருக்கிறாயா? ஏகப்பட்ட தகவல்களைச் சேகரித்துக் கொண்டு வந்திருக்கிறாய். உன்னுடைய மனதில் இரவல் அறிவுதான் இருக்கிறது. ஆனால் உணர்வு என்பது என்ன? நீ யார் என்பது உனக்குத் தெரியுமா

59.          சுவேதகேதுஇந்த கேள்வியை யாரும் எங்கேயும் எழுப்பவில்லையே! வேதங்களைப் படித்திருக்கிறேன்! மொழியைக் கற்றிருக்கிறேன்! தத்துவம், கவிதை, இலக்கியம், சரித்திரம், பூகோளம் ஆகிய அனைத்தையும் கற்றிருக்கிறேன்! ஆனால் இதை யாரும் சொல்லித்தரவில்லையே! வினோதமான கேள்வியைக் கேட்கிறீர்கள். யாரும் இந்த கேள்வியைக் கேட்டதே இல்லை. பாடத் திட்டத்தில் இல்லாத கேள்வியைக் கேட்கிறீர்கள்1.

60.          உத்தாலக், ‘சரி, அப்படியானால் ஒன்று செய். இரண்டு வாரங்கள் உபவாசம் இரு. பிறகு நான் வேறு கேள்வி கேட்கிறேன் என்றார்.

61.          இரண்டு நாட்கள் கழிந்தன. நான்காவது நாள் தந்தை மகனிடம், ‘பிரம்மம் என்பது என்ன என்று கேட்டார். முதலில் என்னவோ பதில் சொன்னான். தான் மனப்பாடம் செய்ததை ஒப்பிவித்தான். ஆனால் வாரக் கடைசியில் சோர்ந்து போனான்.

62.          சரியான பசி! எனவே பிரம்மம் என்றால் என்ன என்று தந்தை கேட்டபோது அவன், ‘இதெல்லாம் அப்புறம். எனக்குச் சரியான பசி. சாப்பாட்டைப் பற்றியேதான் சதா நினைவு இருக்கிறது. நீங்களோ பிரம்மனைப் பற்றிக் கேட்கிறீர்கள். இப்போதைக்குச் சாப்பாடே பிரம்மன்,’ என்றான்.

63.          ’அப்படியானால் உன்னுடைய அறிவெல்லாம் உனக்குக் கிடைத்ததற்குக் காரணம் நீ பசியில்லாமல் இருந்து விட்டதுதான். உன்னைக் கவனித்துக் கொண்டார்கள். நேரத்துக்குச் சாப்பாடு போட்டார்கள். எனவே பெரிய தத்துவங்கள் பற்றிப் பேசுவது சுலபமாக இருந்தது. இப்போது உண்மையான கேள்வி. உன்னுடைய அறிவை எல்லாம் திரட்டிப் பதில் சொல் என்றார் தந்தை..

64.          ’எனக்கு எல்லாம் மறந்து போய் விட்டது. என்னை இப்போது பிடித்து ஆட்டுவது பசி மட்டும்தான். பசியினால் தூங்க முடிய வில்லை. ஓய்வெடுக்க முடிய வில்லை. என்னுடைய வயிற்றில் தீ எரிகிறது. எரிந்து கொண்டிருக்கிறேன். வேறு எதுவும் எனக்கு இப்போது தெரியாது. படித்ததையெல்லாம் மறந்து போனேன்.’, என்றான் சுவேதகேது. ‘பசி வந்தால் பத்தும் மறந்து போம் என்ற பழமொழிப்படி அவனுக்கு எல்லாமே மறந்து விட்டது.

65.          ‘மகனே! உணவே இறைவனை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி. உணவே பிரம்மன்!’

66.          ‘சுத்தம் சோறுபோடும் அதாவது உத்தாலக், சோற்றைப் பிரம்மன் என்கிறான் ஆகவே  ‘சுத்தமே பிரம்மன் (சோறு)’. சுத்தம் எப்படி சோறுபோடும்? அதாவது வீட்டையும், அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருந்தால், நல்ல உடல்மன நலம் கிடைக்கும்; நல்ல உடல்மன நலத்தைப் பெற்ற ஒருவரால் நன்றாக உழைக்க முடியும்; நல்ல உழைப்பு நிறைவான உணவைத் தரும்; உணவு உடலைக் காக்கும்; உடல் உயிரை உடலில் தக்க வைக்கும்; உயிர் ஆத்மாவையும், பரமாத்மாவையும் உடலில் தங்கச் செய்யும். ஆகவே வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது இறைவனை வழிபடுவதாகும்; அவனுக்குச் சேவை செய்வதாகும்.


67.          கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை!.
இப்பொழுது கொசு உற்பத்தியை தடுப்பதற்கு நீங்கள் செய்யவேண்டிய முறைகளை கீழே கொடுத்துள்ளேன். அதன்படி தினசரி தவறாது செய்து வந்தால், கொசுக்கடியிலிருந்து விடுதலை பெற்று, மாலையில் குழந்தைகள் படிக்கவும், இரவில் அனைவரும் நல்ல தூக்கம் தூங்குவதற்கும் முடியும்.


 தினசரி செய்ய வேண்டியது:
1. கூடுதலாகத் தண்ணீர் தேவைப்படும் முறை:
காலை 5 முதல் 10 மணிக்குள மற்றும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு 8 மணியிலிருந்து 10 மணிக்குள் 2 முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை செய்து முடிக்க வேண்டும். ;

குளிக்கும் அறையில் உள்ள 5 லி கொள்ளும் பிளாஸ்டிக் வாளியில், 100 கிராம் பிளீட்சிங் பவுடரைப் (100 கிராம் கொண்ட ஒரு பொட்டலம்) போட்டு, குழாயைத் திறந்து தண்ணீர் நிரப்பி, நன்றாகக் கலக்கிவிட்டு அந்த கலவை நீரை கழிப்பறைக் கோப்பையில் ஊற்றிவிட வேண்டும். இரவில் ஒரு பொட்டல பிளீட்சிங் பவுடரைக் கலக்கி ஊற்றிவிட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு கழிப்பறைக் கோப்பையிலும் ஊற்றிவிடவேண்டும். ஐந்து வீடுகள் கொண்ட குடியிருப்புக்ளில் ஐந்து கழிப்பறைகள் இருக்குமானால், அவற்றில் தனியாக ஒவ்வொன்றிலும் காலையில் ஒரு பொட்டலமும், இரவில் ஒரு பொட்டலமும் பயன்படுத்த வேண்டும். முழுவதும் கொசு உற்பத்தி நின்றுவிட்டால், காலை அரைப்பொட்டலமும், இரவு அரைப்பொட்டலமும் போதுமானதாக இருக்கும்.
                            அல்லது
2. கூடுதலாகத் தண்ணீர் தேவைப்படாத முறை:
கழிப்பறைகளுக்காக மேல்நிலைத் தொட்டித் தனியாகக் கட்டி, அதில் நிரப்பும் நீரில் காலையில் 5 மணியிலிருந்து 10 மணிக்குள் இரண்டு நூறுகிராம் பொட்டலங்கள், இரவில் படுக்கப்போவதற்கு முன்பு 8 மணியிலிருந்து 10 மணிக்குள இரண்டு நூறு கிராம் பொட்டலங்கள் போட்டுக் கலக்கி விட்டு அந்த நீரை கழிப்பறைக் கோப்பைகளைக் கழுவ மட்டும் பயன்படுத்தலாம். கழிப்பறைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல பிளீட்சிங் பவுடர் பொட்டலங்களின் எண்ணிக்கை மாறுபடலாம். கூடுதலாகத் தண்ணீர் தேவைப்படாது.
                                அல்லது
3. கூடுதலாகத் தண்ணீர் தேவைப்படாத, அனைவரும் பங்கு கொள்ளும் முறை
எல்லாக் குடும்பங்களின் நபர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மலம் கழித்த பிறகு, கோப்பையில் மேலாக நிற்கும் மலத்தின் மீது 30 கிராம் அளவு (3 சிறிய பிளாஸ்டிக் ஸ்பூன் நிறைய) பிளீட்சிங் பவுடரைத் தூவிவிட்டு அதற்குப் பிறகு தண்ணீரைத் திறந்து விடலாம். இதே போல சிறுநீர் கழித்த பிறகு 10 கிராம் (ஒரு சிறிய பிளாஸ்டிக் ஸ்பூன் நிறையபிளீட்சிங் பவுடரைத் தூவிவிட்டு அதற்குப் பிறகு தண்ணீரை ஊற்றிவிடவும். இதன் மூலம், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் மலத்திலும், சிறுநீரிலும் பிளீட்சிங் பவுடர் நேரிடையாகக் கலந்து செல்லும்போது 100% கொசு ஒழிப்பு ஏற்பட்டுவிடும். கூடுதலாக நமக்குத் தண்ணீர் தேவைப்படாது.

மேலே 3-ல் சொல்லியபடி,அனைவரும் பங்கு கொள்ள இயலாத நிலையில் அல்லது ஒத்துழைக்காத நிலையில்,, இரண்டு பிளீட்சிங் பவுடர் பொட்டலங்களை கழிவறைக் கோப்பையில் போட்டு, நீரைத் திறந்து விட வேண்டும் (மேற்கத்திய முறைக் கோப்பையாக இருந்தால்). இந்திய முறைக் கோப்பையாக இருந்தால், இரண்டு பிளீட்சிங் பவுடர் பொட்டலங்களை, கழிவறைக் கோப்பையில் போட்டு, ஐந்து லிட்டர் தண்ணீரை ஊற்றிவிட வேண்டும். கரைத்து ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும். இரவிலும் இதேபோல செய்ய வேண்டும்.

ஒரே நாளில் கொசுக்களை ஒழிக்க வேண்டுமென்றால், செப்டிக் டேங்கை திறக்க வேண்டும்; கசடுகள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும்; செப்டிக் டேங்கின் சுவர்களையும் மேற்கூரைச் சுவர் உட்பட பிளீட்சிங் பவுடர் கலந்த நீரால் கழுவ வேண்டும்; பிறகு 0.125 அளவு டேங்கில் பிளீட்சிங் பவுடர் கலந்த நீரை நிரப்பி விட்டு டேங்கை மூடி விட வேண்டும். அதற்குப் பிறகு தினசரி மேலை குறிப்பிட்ட செயல் முறையை செய்து வர வேண்டும்.  

காலை 5-10 மணிக்குள் மற்றும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு 8 மணியிலிருந்து 10 மணிக்குள் 2 முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை ((I to III) செய்து முடிக்க வேண்டும். ;


I              ஒரு லிட்டர்  பிளாஸ்டிக் கப்பில், 20 கிராம் (2 சிறிய ஸ்பூன்கள்) பிளீட்சிங் பவுடரை எடுத்துப் போட்டு, நீர் விட்டு நிரப்பி கலக்கி அதை அப்படியே குளிக்கும் அறையில் ஊற்றிவிட்டு குளிக்கும் அறையை கழுவி விடலாம். இதுதான் ஒரு கல்லில் இரு மாங்காய் அடிப்பது. இங்கு குளிக்கும் அறையைச் சுத்தப்படுத்தவும், பயன்படுகிறது; கொசுக்களை ஒழிக்கும் கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.

II.             அதே கப்பில், 30 கிராம (3 சிறிய ஸ்பூன்கள்) பிளீட்சிங் பவுடரைப் எடுத்துப் போட்டு, நீர் விட்டு நிரப்பி கலக்கி அதை அப்படியே சமையலறை பாத்திரங்களின் மீது ஊற்றி பாத்திரங்களையும், தொட்டியையும் சுத்தப்படுத்தலாம். பாத்திரங்களும், தொட்டியும் பளபளப்பாக மின்னும்.. கழுவுவதற்கு கைகளை நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது.

III.            அதே கப்பில், 10 கிராம (1 சிறிய ஸ்பூன்) பிளீட்சிங் பவுடரை எடுத்துப் போட்டு, நீர் விட்டு நிரப்பி கலக்கி அதை அப்படியே வாஸ்பேசின் கழிவுநீர்க் குழாயில் ஊற்றி கழுவி விடலாம்..

IV.           இரவு படுக்கப்போவதற்கு முன்பு, சமயலறைக் கழிவுக் கூடையில், பிளிட்சிங் பவுடரைக் கழிவின் மீது தூவி வைத்திருந்து,. மறுநாள் காலையில், கழிவை  குப்பை வண்டியில் போட்டு விடலாம். பிறகு கழிவுக் கூடையை நீரை விட்டு நன்றாகக் கழுவி, அதில் பிளீட்சிங் பவுடரை தூவி விடலாம்.

V.            படுக்கப்போவதற்கு முன்பு சமயலறை கழிவுநீர்த்தொட்டியில் சாப்பிட்ட பாத்திரங்களின் மீது சிறிதளவு பிளீட்சிங் பவுடர் கலந்த நீரை ஊற்றி, அவற்றைக் கழுவி முடித்து, தொட்டியிலும், சிறிதளவு பிளீட்சிங் பவுடரை தூவி நீரை விட்டு கழுவி விட வேண்டும்.

VI.           ஓரிரு நாட்கள் பாத்திரங்களை கழுவமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால், பாத்திரங்களின் மீது பிளீட்சிங் பவுடர் கலந்த நீரை ஊற்றி விட வேண்டும். ஏனென்றால் கொசு உற்பத்தி 6 மணி நேரத்திற்குள் நடைபெறுகிறது.

படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்குக் கீழே பொருட்கள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கட்டிலுக்குக் கீழே உள்ள பகுதியில் குப்பை நிரம்பியிருந்தால் கொசுக்கள் அங்கே தங்கி இரவு நேரத்தில் கடிக்க செய்யும். எறும்பு, ஆகியவற்றின் தொந்தரவும் பெருகிவிடும். அதற்காக, வாரத்திற்கு ஒரு முறை வீட்டின் அனைத்து அறைகளையும் சமயலறை உட்பட பெருக்கிச் சுத்தப்படுத்தி, கி.நா.திரவ நீரால் துடைத்து விட வேண்டும்.. துடைக்கமுடியாத இண்டு இடுக்கு எதுவுமிருந்தால், தெளிப்பானால் (sprayer) கிருமிநாசினி நீரை பீச்சி அடிக்க வேண்டும். இதன்மூலம் நல்ல பலன் கிடைக்கும்..


VII.          வெளிச்சாக்கடையிருந்தால் அதிலேயும் பிளீட்சிங் பவுடரைக் கலந்து தெளித்து விடலாம் (தினசரி காலை மற்றும் மாலை);. உங்கள் வீட்டுக்கு முன்னால் மழை நீர் தேங்கியிருந்தால், அதன் மீது பிளீட்சிங் பவுடரை நீரில் கரைத்துத் தெளித்து விட வேண்டும் (காலை அல்லது மாலை). மறுநாள் மழை பெய்தால், புது நீர் பழைய நீரோடு கலந்து விடும். ஆகவே அன்றும் தெளித்து விட வேண்டும். இதனை பிறத்தியார் செய்வார்கள் என்று எதிர்பார்க்ககூடாது. ஏனென்றால் நீங்கள் செய்வது, கடவுளுக்குச் சேவை செய்து அவனை வழிபடுவதாகும்.


IX.           மாதத்திற்கு ஒரு முறை கழிப்பறைக் கோப்பையையும், குளிக்கும் அறையையும் கரையைப் போக்கும் கி.நி.திரவத்தைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம்

69. மேற்குறிப்பிட்ட செயல்முறைகளை செய்யும்பொழுது கொசு ஒழிப்பு முழுமை அடைந்து விடும்;. முதலில் வீட்டிற்குள் நடமாடும் கொசுக்களின் எண்ணிக்கை குறையும். பிறகு, இரவு படுத்திருக்கும்போது இரவிலும் காலையிலும் கொசுக்களின் எண்ணிக்கை கூடித்தான் குறையும். கொசுக்களின் எண்ணிக்கை கூடினாலும் அவை வலுவிழந்து காணப்படும். மேலே வந்து விழும்; ஆனால் கடிக்காது; சுலபமாக நாம் அடித்து விடலாம். அதற்குப் பிறகு சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.
.
மேற்கூறிய செயல்முறைகளை தவறாது தினசரி செய்து வந்தால், கொசுக்களை ஒழித்து, கொசுக்கடியிலிருந்து விடுதலை பெறலாம். இந்த செயல்முறைகள் அனைத்தும், நல்ல தூக்கம் தூங்குவதற்கும், அதன்மூலம் நல்ல உடல்மன நலம் பெறுவதற்கு ஏதுவாகும். நல்ல உடல்மன நலம்தான் ஆன்மீகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறைவன் நமது உடல்களில் தங்கியிருக்க மேற்கூறிய செயல்களைச் செய்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். அதாவது அந்தச் செயல்களின் மூலம் இறைவனை வழிபடுகிறோம்; அவனுக்குச் சேவை செய்கிறோம். அதன்மூலம் இறைவனின் அருளைப் பெருகிறோம்.

71. 2010 ஆம் ஆண்டு சூளை மாதம் முதல் வாரத்தில ஆரம்பித்தகொசு ஒழிப்பு ஆராய்ச்சி 7 ஆண்டுகள் முடிந்து 13-7-2017 அன்று முடிவுற்றது.; இந்த 7 ஆண்டுகளில், எனது கொசு ஒழிப்பு செயல்பாடுகளுக்கு கொசுக்கடி கூடுகிறதா அல்லது குறைகிறதா என்று கண்டறிய, பல இரவுகள், கொசுக்கள் கடிப்பதற்கு ஏதுவாக, வேட்டி, பனியன் இல்லாமல் உள்ளாடையுடன (Underwear); படுத்திருக்கிறேன். மக்களின் நீண்ட நாளைய கஷ்டத்திற்கு, ஒரு தீர்வு கண்டுபிடித்த திருப்தி இப்பொழுது எனக்கிருக்கிறது. ஆராய்ச்சி செய்து முடிவை மக்களின் நலனுக்காக அருளிய எல்லாம் வல்ல இறைவனுக்கு என் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

72.          நீங்கள், கொசுவை ஒழித்து நல்ல தூக்கத்தைப் பெற்று, அரோமணியின் 9 விதிகளையும் கடைபிடித்து, 5 மருத்துவ மனபயிற்சிகளையும் தெரிந்து, அதன் மூலம் கவனவாழ்க்கைக்கு மாறி, முழு உடல்மன நலம் பெற்று, செல்வச் செழிப்புடன்  வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டி வணங்குகிறேன்.
 . 
                                    கவனவாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்!

Healer, Medicinal Meditation Expert, Er.R.A.Bharaman BE.,FRHS.,RMP(AM).,DAcu, former Superintending Engineer, Tamil Nadu Electricity Board. Cell:+91 9442035291;+91 7092209028 Please visit my website www.medicineliving.blogspot.com; email: twinmedicine@gmail.com Copyright to R.A.Bharaman alias Aromani 
 Updated:03-11-2016; 22-8-2017; 24-8-2018
  


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: