Wednesday, September 12, 2018

தற்கொலைக்கு மூல வேர்

B 204-MM 1-மருத்துவ மனபயிற்சி 1
            அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை,
              57/176A6, மூன்றாவது தெரு, பேரையூர் சாலை,
          உசிலம்பட்டி-625532.  செல் எண்கள் : 9442035291, 7092209028
.
அன்புள்ள ஐயா,
வணக்கம். நான் தினத்தந்தி சந்தாதாரர். 10-8-2018 நாளிதழில், கட்டுரை பகுதியில், முனைவர் மு.யூசின் ரோசிட்டா  எழுதிய “வாழப் பிறந்தோமே….!” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறீர்கள். தற்கொலைக்கு காரணத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை. அனைத்து விதமான தற்கொலைகளுக்கும் மூல வேர் மனவழுத்தில்தான் இருக்கிறது. அவ்வழுத்தத்திலிருந்து விடுபட, ஆசிரியர் கூறுகின்ற, சிறந்த மன நல ஆலோசனை பெறுதல், ஆதங்கத்தை பிறரிடம் கொட்டித் தீர்த்தல், போன்றவை சிறந்த பலனைத் தரும் என்று சொல்ல முடியாது.

மக்கள் அனைவரையும் சிறந்த மனப்பயிற்சி பெற வழிவகை செய்து மனவளத்தைப் பெருக்க வேண்டும். நமது வழிபாட்டு முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நமது மக்கள் கோயில்களுக்குச் சென்று சாமி உருவத்தைப் பார்த்துவிட்டு, பிறகு திருநீரைப் பூசிவிட்டு வருவதுதான் வழிபாடு என்று நினைத்து ஆலயத்தை விட்டு வந்துவிடுகிறார்கள். அப்படி வரக்கூடாது, ஆழ்வார்களும், நாயன்மார்களும், மற்ற மதப் பெரியவர்களும் இறைவனைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள் ஆலயத்திலேயே உட்கார்ந்து,,அவற்றிலிருந்து இறைப்பாடல்கள் ஒன்றிரண்டைப் பாடலாம். கடவுளை வேண்டிப் பிரார்த்தனை செய்யலாம். மருத்துவ மனப்பயிற்சி செய்யலாம். இந்த மாதிரி செயல்களில் ஒரு அரை மணி நேரம் செலவிட்டு, அதற்குப் பிறகு பிரகாரத்தை ஒன்பது முறை கடவுளின் எண்ணத்தை மனதில் கொண்டு சுற்றி வரலாம். இந்த மாதிரி வழிபாட்டில் மனவளம் பெருகும்; மனவழுத்தம் குறையும். அவர்கள் வீடுகளில் தினசரி காலையும் மாலையும் இதேபோல கடவுள் வழிபாடு செய்து வர வேண்டும். இது ஒரு வகை மனவழுத்தத்தைப் போக்கும் வழி முறையாகும்.

மற்றொரு சிறந்த வழிமுறையை சொல்லப் போகிறேன். கிராமத்தில் இரு பெண்கள் சண்டை யிட்டுக் கொள்ளும் பொழுது, உண்மையில் பாதிக்கப்பட்ட பெண் “நீ எனக்குப் பண்ணின கொடுமையை நினைக்கும்போது, என் நெஞ்சு கணக்குது!” என்று வேதனையுடன் சொல்வதை அறிந்திருக்கலாம். அதற்கு என்ன பொருள், அவளுக்கு உள்ள மனவழுத்தம்  வேதனையாக மாறி,, அந்த வேதனை நெஞ்சில் நிறைந்து கணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் பொருளாகும். அதாவது எப்படிப்பட்ட மனவழுத்தமாக இருந்தாலும், அது நெஞ்சில் அதாவது மார்பில்தான் வந்து சேர்கிறது. மார்பில் சேர்ந்துள்ள மனவழுத்தத்தைப் போக்க எல்லாம் வல்ல இறைவன் எனக்கு ஒரு மருத்துவ மனப்பயிற்சியை (மம) வெளிப்படுத்தினான்.

’தினத்தந்தி’ நாளிதழ் வாயிலாக மக்கள் மனநலம் பெற அந்த மருத்துவ மனப்பயிற்சியை இங்கு சொல்லித்தரப்போகிறேன். .
நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். தலையை சுவற்றில் சாயாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தலையை இலேசாக கீழே சாய்ந்தவாறு இருக்கட்டும். உடல் தளர்வாக இருக்கட்டும். இடுப்புப் ’பெல்ட்டும்’ தளர்வாக இருக்கட்டும். மெதுவாகக் கண்களை மூடவும். ஒரு இருபது நொடிகள் எண்ணங்கள் இல்லாத வெறும் மனமாக வைத்திருந்து,கண்களை மெதுவாக மூட வேண்டும். அதற்குப் பிறகு மம ஆரம்பிக்கும்போது பயிற்சி நன்றாக அமைந்து விடும்.

இப்பொழுது மனக்கண்ணால் மார்பைப் பார்க்கவும். பிறகு மார்பு சுருங்கி விரிவதைப் பார்க்கவும். அதோடு மனவழுத்தத்தால் ஏற்பட்ட கணம் அல்லது இறுக்கம் அல்லது மார்பை பிடிக்கும் உணர்வையும் சேர்த்து நினைக்கவும். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே, வேறு எண்ணம் (வீட்டைப்பற்றி, குழ்ந்தைகளைப் பற்றி…….) வரும். அந்த எண்ணத்தை நிறுத்திவிட்டு, மீண்டும் மார்பு சுருங்கி விரிவதையும், மனவழுத்தக் கண உணர்வையும் நினைக்க வேண்டும். இப்படி எண்ணங்களை நீடிக்க விடாமல், தடுத்து நிறுத்தி மார்பு சுருங்கி விரிவதையும், மனவழுத்தக் கண உணர்வையும் மீண்டும் மீண்டும் நினைக்க வேண்டும். நீங்கள் பயிற்சி செய்யச் செய்ய, மனவழுத்தம் உங்களை விட்டு வெளியேறிக்கொண்டே இருக்கும். மனவழுத்தம் முழுவதும் நீங்கும்போது உங்கள் மனம் இலேசாக இருக்கும். உங்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

உங்கள் மனதில் உள்ள மனவழுத்தத்திற்குத் தகுந்தாற்போல, குணமாக, பத்து நிமிடத்திலிருந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகலாம். இடையில் யாராவது பார்க்க வந்தால், பயிற்சியை ஐந்து நொடிகள் நிறுத்திவிட்டு, மெதுவாகக் கண்களைத் திறந்து அவரிடம் பேசி அனுப்பிவிட்டு, மீண்டும் மம-வைத் தொடரலாம்.

வீட்டைத் தினசரி பெருக்கிச் சுத்தப்படுத்துவதைப்போல, நமது மனதையும் அன்றாடம் பெருக்கி, சேர்ந்துள்ள மனவழுத்தத்தை நீக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். காலையில் எழுந்ததிலிருந்து மதியம் 12 மணிக்குள் மம-வை பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் செய்ய வேண்டும்; 12 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் செய்ய வேண்டும். இரவு படுக்கையில் படுத்துக் கொண்டே தூக்கம் வரும் வரை செய்ய வேண்டும்.

மிகவும் முற்றிய மனவழுத்தத்தைக் கொண்ட  (Depression) இருவரை மேற்குறிப்பிட்ட மம-வைக் கொண்டுதான் குணப்படுத்தியிருக்கிறேன். பனிரெண்டு வயதில் மனவழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பையன் 20 வயது வரை யாரிடமும் சொல்லாமல் தன்னுடைய குடும்பம் உட்பட, தனக்குள்ளே வைத்து மிகவும் வேதனையிலிருந்தான். திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்  கொண்டு வந்தான். என்னிடம் சிகிச்சை எடுத்த பிறகு நலமாகி, திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான். மதுரையில் உள்ள கல்லூரி பேராசிரியர் ஒருவர் மனவழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு நலம் பெற்றார். தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்பதற்காக தான் நடத்தும் பத்திரிகையில் ஒரு கவிதை மூலம் மம-வை வெளியிட்டார். அந்தக் கவிதை இதோ:
“இயல்பாய் அமர்ந்து கண்களை மூடி
எண்ணங்கள் விலகிய மனதைப்  பெறுவோம்
இயல்பாய் சுவாசம் நடக்கும் நிகழ்விலே
மார்பும் வயிறும் சுருங்கி விரியுமே
அந்தக் காட்சியை மனதில் இருத்தி
எண்ணத்தை ஆங்கே குவியச் செய்வோம்.
குறுக்கிடும் சிந்தனைகள் அனைத்தும் அகற்றி
அந்நிலை காப்போம் இருபது நிமிடங்கள்
ஒரே சிந்தனையில் இருக்கும் இத்தியானம்
பெரிதும் நல்லதாம். உடல் உள்ள நலத்திற்கு!”

மேலே குறிப்பிட்ட மனப்பயிற்சியை செய்து வரும்போது, மனவழுத்தம் முற்றிலும் நீங்கிவிடுகிறது. மனம் இலேசாக ஆகிறது; முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது; கணவன் மனைவி ஆகிய இருவரிடையே அன்பு அதிகரிக்கிறது; இறைவனின் இருப்பை உணரமுடிகிறது; இறைவன் எந்தச் சூழ்நிலையிலும் கை விட மாட்டான் என்ற நம்பிக்கை வலுக்கிறது; ஆகவே எதிர்காலத்தைப் பற்றிய பயம் நீங்கிவிடுகிறது; குடும்பம் முன்னேறுவதற்குரிய சூழ்நிலை உருவாகிறது. இன்னும் பல நேர்மறை மாற்றங்கள் ஏற்படுவதை சொல்லிக் கொண்டே போகலாம். தாங்கள் எனது மடலை, மக்கள் பத்திரிகையான ‘தினத் தந்தி’ யில் வெளியிட்டு மக்களை மனவழுத்தத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறென்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
R.A.பரமன் என்கின்ற அரோமணி 11-9-2018

இணைப்பு: ஒன்று  book 1-brochu

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: