Friday, April 12, 2019

சுவாமி விவேகானந்தர்,

D 190-TM-இமஆ-
           வழிபாடுகளில் தாழ்ந்தது உருவவழிபாடு!
ஏற்கனவே  ”பரிணாம வளர்ச்சி” அல்லது “ஆக்க அறிவு” கடவுளைப் பற்றி விளக்கினேன் இரண்டாவது உண்மைக் கடவுள் இருக்கும் இடத்தைக் காட்டி விட்டேன். இப்பொழுது காட்டப் போவது “தொழில் தெய்வத்தைக்” காட்டப் போகிறேன். இந்த தெய்வத்தை வழிபடும்போதுதான், “தொட்டதெல்லாம் துலங்கும் (Field of all possible )” நிலையும், உங்களது அனைத்து செயல்பாடுகளும் அவனிருக்குமிடத்திலிருந்து மேற்கொள்ளப்படும். “அவனோடு நீங்கள் பேசலாம்; உங்களோடு அவன் பேசுவான்!”

இதுவரை நான் சொல்லிவந்ததிலிருந்து நீங்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்; இறைவனை பரிணாம வளர்ச்சி அல்லது ஆக்க அறிவு என்றும், உண்மை என்றும் தொழில் என்றும் சொல்லியே வருகிறேன். ”கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல் முறை” புத்தகத்தில் “உணவே பிரம்மன்” என்று  மகான் ‘ஓஷோ’ உபநிடத்திலிருந்து ஒரு கதையின் மூலம் விளக்கியிருப்பதை சொல்லியிருக்கிறேன்.. ஆகவே இறைவன் என்பவன் உருவமில்லாதவன்; அவன் இருப்பை உணர மட்டும் செய்யலாம். ஆகவே அவனை உருவமாக்கி வழிபடுவது, அவனை தரம் தாழ்த்தி வழிபடுவதாகும். சுவாமி விவேகானந்தர், “உருவ வழிபாடுதான், இந்து மததின் வழிபாடுகளில் தாழ்ந்தது” என்று கூறியிருக்கிறார்.

            ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: