Monday, April 29, 2019

வாந்தி (vomiting வயிற்றோட்டத்திற்கு (Diarrhea) மருத்துவ மனபயிற்சி


வாந்தி (vomiting),  வயிற்றோட்டம் (Diarrhea), வயிற்று கடுப்பு ஆகியவற்றிற்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.


A 126-MM Part 1-மருத்துவ மனபயிற்சி 5

ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வயிறு விரிஞ்சு சுருங்குவதை மனக்கண்ணால பாருங்க அல்லது கவனியுங்க! அதோடு வயிற்றில் இலேசான வலியோ அல்லது அசவுகரிய உணர்வோ இருந்தால், அதையும் சேர்த்து கவனியுஙக அல்லது நினைச்சுக்கிட்டே இருங்க!

வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வயிறு சுருங்கி விரியுறதையும், வலி உணர்வையும் மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம செய்யுங்க!

வலி குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

குணமாகும் வரை, வாந்தி, வயிற்றோட்டம் உள்ளவர்கள் பசி எடுக்காமல் சாப்பிடக்கூடாது. வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் உரப்பு சேர்க்கக்கூடாது. நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

                   ஹீலர். ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.



முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: