Wednesday, April 17, 2019

நீண்ட நேரம் இருக்காது


எந்தக் கவலையும் (worries) என்னிடம் நீண்ட நேரம் இருப்பதில்லை!

a 163 இம-
15-2-2006-ந் தேதியன்று இறைவன் கவனவாழ்க்கை என்னும் புதிய வாழ்க்கைக்கு என்னை மாறச் செய்தான். இந்த வாழ்க்கையில், கற்பனை செய்வதையும், திட்டமிடுவதையும், யோசித்து முடிவெடுப்பதையும் இல்லாமல் செய்துவிட்டான். அதனால் எந்தக் கவலையும் என்னிடம் நீண்ட நேரம் இருப்பதில்லை. எனது மனம் எப்பொழுதும் தெளிவாக இருந்தது. எந்த நோய் வந்தாலும், அதன் காரணம் உடனே தெரிந்து விடும். சுற்றுப்புற சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் எனக்குச் சாதகமாக மாற ஆரம்பித்தன்.  

7-வது விதியை 6-3-2011-அன்று இறைவன் எனக்கு வெளிப்படுத்தினான். அன்று இளப்பு சட்டென்று விலகியது. அந்த விதி, தூங்கும் அறையில் நல்ல காற்றோட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. கொசுவத்தி, கொசு வலை பயன்படுத்துவதைத் தடை செய்கிறது. இந்த விதிகளைக் கடைப்பிடித்த பிறகு 15, டிசம்பர், 2008 லிருந்து குளிர்காலத்தில் இளப்புக்கு மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். விதிகளை மீறும்பொழுதெல்லாம், சளித்தொந்தரவுகள் தோன்றின. அப்பொழுதெல்லாம், மருத்துவ மனப்பயிற்சிகளைச் (மம) செய்து அவற்றை சரி செய்துவிடுவேன்.

                    ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
Please register your comment.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: