Thursday, April 18, 2019

ஆணி வேர்

இம--நோய்களின் ஆணி வேர் எது?
             
இளப்பு (Wheezing) எப்படி தோன்றுகிறது? நீங்கள் அரோமணியின் 11 இயற்கை விதிகளை மீறுகிறீர்கள். அதில் முக்கியமானது உழைப்பு (Labour) குறைகிறது என்று வைத்துக்கொள்வோம். உழைப்பு குறைந்தவுடன், செரித்தல் குறைகிறது; இதனால், செரிக்கும் உணவின் அளவு குறைகிறது. 

உதாரணமாக 100% உழைப்பு இருக்கும் போது 500 கிராம் சோறு சாப்பிடுவீர்கள்; உழைப்பு 20% குறைகிறது; செரித்தல் குறைந்து 20% உணவு செரிக்கப்படாமல் போய்விடுகிறது; செரிக்கப்படாத உணவு கழிவுப்பொருட்களாக மாற்றப்படுகின்றன. அப்படி மாற்றப்படும் கழிவுப்பொருட்கள்தான், துர்நீர், வாயு, சளி ஆகியவை. 

துர்நீரின் ஒரு பகுதி வியர்வையாக வெளியேற முடியாமல் தோலுக்குக் கீழே தங்கிவிடுகிறது; மற்றொரு பகுதி  மூக்கைச் சுற்றியுள்ள காற்றறை மற்றும் முகத்திலும், தலைப்பகுதியிலும் தங்கிவிடுகிறது. சளி காற்றுப் பாதைகளில் உள்ள சதைச் சுவர்களில் ஒட்டி தங்கிவிடுகின்றன. வாயு மார்புப் பகுதி மற்றும் வயிற்றுப்பகுதிகளில் உள்ள காலியிடங்களில் நிரம்பி நிற்கின்றன.

மேற்கூறிய. கழிவுப்பொருட்கள் தேக்கி வைப்பதற்கு இடம் இல்லாத நிலை வரும்போது, உடல் தனது பராமரிப்பு வேலையைத் (Body's maintenance work) துவக்குகிறது. எந்த கழிவுப்பொருள் அதிகமாகச் சேர்ந்துவிட்டதோ அதை முதலில் வெளியேற்றுகிறது. காற்றறை, முகம், தலை இவற்றில் அதிகமாக துர்நீர் சேர்ந்திருந்தால், தும்மல் மூலம் அந்த நீரை வெளியேற்றுகிறது. கொஞ்சம் அதிகமாக நீர் சேர்ந்திருந்தால், தலைவலியை ஏற்படுத்தி, அதைக் குணப்படுத்தியவுடன் தும்மலை ஏற்படுத்தி குணப்படுத்துகிறது. ஆகவே நோய்களின் ஆணி வேர் உழைப்புக் குறைவுதான்.

Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: