Monday, July 29, 2019

தினசரி சொர்க்கம்!


தினசரி சொர்க்கம்தான்! வீட்டில் தயாரிக்கப்படாத பலகாரங்களை சாப்பிடுவதாலும், அரோமணியின் 11 இயற்கை விதி மீறல்களாலும் செய்யும் தொழில்களின் மூலமும் உடலில் கழிவுப்பொருட்கள் தேக்கமடைகின்றன. அந்த கழிவுப்பொருட்கள் தலையில் கணத்தை தோற்றுவிக்கிறது.அந்த கணம்  ‘சைனசிடீஸ்” தொந்தரவுள்ளவர்களுக்கு அதிகமாக இருக்கும். அந்த கணம் இலேசாக இருக்கும்போது, உங்களால் உணர முடியாது; ஆனால் சுறு சுறுப்பு குறைந்திருக்கும்.

நாளடைவில் கழிவுப்பொருட்களின் அதிகரிப்பால், தலைக் கணம் அதிகரித்து, திடீர் மயக்கம், கிறுகிறுப்பு, உடல் சோர்வு, உடல் முழுவதும் இலேசான வலி, மூட்டு வலி ஆகியவற்றின் மூலம் உடல் உங்களுக்கு”ஜாக்கிரதை, விதி மீறல்களை சரி செய்” என்று தகவல் அனுப்புகிறது.

எல்லோருக்கும் தலைக் கணம் இருக்கும், ஆனால் வெளியில் உணரமாட்டார்கள். ஆகவே கண்களை மெதுவாக மூடுங்கள்.. உங்கள் மனதில் இலேசான அந்தக் கண உணர்வை உணருவீர்கள். அதையே கவனித்து மம-செய்யுங்கள். செய்யும்போது தலைக் கணம் கூடுவதை உங்களால் உணர முடியும். அந்தக் கணம் முழுவதுமாக நீங்கும் வரை செய்யுங்கள். இவ்வாறு தினசரி, அந்த தலைக் கணத்தை காலையில் நீக்கிவிட்டீர்கள் என்றால், உங்களுக்கு தினசரி சொர்க்கம்தான்!

நோய்கள் வராமல் தடுப்பதற்கும், நலம் பெறவும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வாருங்கள்.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: