Friday, October 26, 2018

செரிக்க விதி 10

A 203-MLM-அ.11 விதிகள்-இ.ம
         TO READ IN ENGLISH PLEASE CLICK ARO MEDICINE-ENG BELOW.
அரோமணியின் 10-வது விதி-செரிக்க,பசி உண்டாக,  மலச்சிக்கல் நீங்க, மருந்தில்லா மருத்து.
           
ARO MEDICINE-ENG      



அரோமணியின் 10-வது விதி: செரிக்க, பசி உண்டாக, மலச்சிக்கல் நீங்க,  மருந்தில்லா மருத்து., 
இரட்டை மருத்துவத்தில் அரோமணியின் 10-வது இயற்கை விதி

.கடந்த ஓராண்டாகவே, எனக்குள் “உணவை வயிற்றில் நிரப்பிவிட்டு, அலுவலகத்தில் மூளை சார்ந்த வேலைகளை செய்வது அறிவியல் ரீதியாக சரியா? காரில் பெட்ரோல் டேங்கில், பெட்ரோலை நிரப்பி செட்டில் அடைத்து வைப்பதறகும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்கப்போகிறது!” இந்த கேள்வி வந்து கொண்டே இருந்தது. 5-10-2018 அன்று இறைவன் என்னை ஆராய்ச்சிக் களத்தில் இறக்கிவிட்டான். அன்றையிலிருந்து காலை, மாலை ஆகிய இருவேளையும் சாப்பிட்ட பிறகு எனது நடைப்பயிற்சியை மேற்கொண்டேன். என்னை நீண்டகாலமாக வருத்திக் கொண்டிருந்த மலச்சிக்கலிலிருந்து விடுபட்டேன். பசி அதிகரித்திருப்பதையும் உடல் வலிமை பெற்று வருவதையும் உண்ருகிறேன். நான் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

10-அரோமணி விதி, “வெறும் வயிற்றில் செய்யும் உழைப்புக்கு (அல்லது உடற்பயிற்சிக்கு அல்லது நடைப்பயிற்சிக்கு) செலவழிக்கும் நேரத்திற்குத் தகுந்தாற்போல, உடல் பலவீனப்படும், பலவீனப்பட்ட உடலில், புதிய நோய்கள் தோன்றும், பழைய நோய்கள் தீவிரம் காட்டும்.

ஆதிகாலத்தில்,மற்ற உயிரினங்களோடு மனித இனமும் பகலில் இரை தேடுவது, இரவில் ஓய்வு என்ற முறையில்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இரை தேடுவதில் உழைப்பு முதன்மை பங்கு வகிக்கிறது. உழைப்பு, வயிற்றில் போட்ட உணவை செறிக்கச் செய்கிறது; செறித்தலால் கிடைக்கும் ஆற்றல் உழைப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. உழைப்பு முடியும் தருவாயில் பசி தூண்டப்படுகிறது;  பசி எடுத்தவுடன் உணவு உட்கொள்கிறான். மீண்டும் உழைக்கச் சென்றுவிடுகிறான். ஆதிகால மனிதனின் வாழ்க்கை சுழற்சி இதுதான்.

நாகரீக வளர்ச்சியில் மனிதனின் வாழ்க்கை சுழற்சி மாறியது போலக் காணப்பட்டாலும், அடிப்படை மாறாமல்தானிருக்கிறது. உழைப்பு x ஓய்வு என்பது மாறவில்லை. எது மாறியிருக்கிறது என்றால், உடலால் உழைக்கும் உழைப்பு குறைந்து, மூளையால் செய்யும் உழைப்பு அதிகமாகிவிட்டது. உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கையை நோக்கி மனித இனம் போய்க் கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடங்களில் உடற்பயிற்சிக்குரிய வகுப்பு எடுக்கப்பட்டு, அந்த நேரத்தையும் படிப்புக்கு எடுத்துக்கொள்கிறார்கள். மாலையில் வீட்டுக்கு வந்து பெண்பிள்ளைகளும், பையன்களும் வெளியில் சென்று தோழிகளுடனும் நண்பர்களுடனும் விளையாடும் பழக்கமும் மறைந்து அந்த நேரத்தில், வீடியோ கேம்ஸ் விளையாடவும், TV பார்க்கவும் செய்கிறார்கள். இப்படி உடலுழைப்பு மறைந்து அதற்குப் பதில், உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியை மக்கள் மேற்கொள்கிறார்கள்.

இரவில் உண்ட உணவின் ஆற்றலில்,  பெறும்பகுதி, இரவில்,  உடல் உறுப்புகளில் உள்ள சிறு சிறு பழுதுகளை செப்பனிட்டு சரி செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள ஒரு பகுதி, தசைகளில் சேமித்து வைக்கபடுகிறது. மற்றொரு பகுதி, காலையில் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கும், குளித்து முடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. பிறகு காலையில் உணவு உட்கொள்கிறோம். உழைக்கச் செல்கிறோம். 

சாப்பிட்டுவிட்டு நடைப்பயிற்சி செய்யும் பொழுது அது உழைப்பாகிவிடுகிறது. நடைப்பயிற்சியின்போது மேல் மூச்சு கீழ் மூச்சு ஏற்படுகிறது. அதாவது காற்று வேகமாக உள்ளே சென்று வெளியில் வருகிறது. அதனால் வயிறு அதிகமாக சுருங்கி விரிவடைவதோடு, வேகமும் அதிகரிக்கிறது; உணவு நன்கு நொறுக்கப்படுகிறது; அரைபடுகிறது; தண்ணீர் சுழற்சி ஏற்பட்டு உணவோடு நன்கு கலக்கப்படுகிறது. சுரப்பி நீர்களும், ஹைடிரோ குளோரிக் அமிலமும் நன்கு கலக்கப்படுகிறது. நடப்பதால் உடல் உறுப்புகளின் உராய்வினால், வெப்பம் உற்பத்தியாகி, ஆக்சினால் உணவு நன்கு எரிக்கப்பட்டு செரித்தல் நன்கு நடந்தேறுகிறது. தவிர, ஏற்கனவே தேங்கியுள்ள கழிவுபொருட்களான கெட்ட நீர், வியர்வையாகவும், சிறுநீராகவும் வெளியேறுகிறது; வாய்வு, வாய்வாகவும், வாய்வு ஏப்பங்களாகவும் சளி, சளியாகவும் வெளியேறுகிறது. மேலும், செரித்தலின்போது உற்பத்தியாகும் கழிவுப்பொருட்களான மலம், கெட்ட நீர், வாய்வு, முதலியன பெருங்குடலில் மேலே குறிப்பிட்ட படி குடலில் மேலிருந்து கீழே தேங்குகின்றன. நடைப்பயிற்சியால், வயிறு சுறுங்கும்போது கழிவுப்பொருட்களுக்கு அழுத்தம் கொடுத்து கீழே தள்ளுகின்றது. காலையில் முதலில் வாயு வெளியேறுகிறது. அதற்கு பிறகுதான் மலம் வெளியேறும். நடைபயிற்சி இல்லாவிட்டால், மலத்தை வெளியேறவிடாமல், வாயு தடுத்து நிறுத்தி விடும்; அதனால்தான் மலசிக்கல் ஏற்படுகிறது. 

காலையில், இயற்கை உபாதைகளைக் கழித்துவிட்டு (,வாய்வு, சிறுநீர், மலம் ஆகிய கழிவுப் பொருட்களின் வெளியேற்றம்)  நடைப்பயிற்சியை காலையில், வெறும் வயிற்றில் மேற்கொள்ளுகிறோம்.

அதிகாலையில் ஒரு காப்பி குடித்து விட்டு, வெறும் வயிற்றில்  நடந்தால் நோய்கள் வரும், எப்படி? உழைப்பு என்னும் நடை பயிற்சி 3 பணிகளை செய்கிறது. 1. உணவை செரிக்க செய்கிறது.2. கழிவு பொருட்களை வெளியேற்றுகிறது. 3. மலத்தையும், வாய்வையும் குடலில் கீழ் நோக்கி இறங்க செய்து, காலையில் மலம் சுலபமாக இறங்க வழி செய்கிறது.


வெறும் வயிற்றில் நடக்கும்போது, 1. உணவு இல்லை செரிப்பதற்கு. காப்பி. முழு உணவாகாது. 2. புறப்படுவதற்கு முன்பு..வாய்வு, சிறுநீர், மலம் ஆகியவை வெளியேறி விட்டது. ஆகவே கழிவு பொருட்கள் வெளியேற ஒன்றும் இல்லை. 3. குடலில் இறங்க மலமோ, வாய்வோ இல்லை. ஆக வெறும் வயிற்றில்  நடக்கும் போது, 3 பணிகளும் செய்ய வாய்ப்பில்லை. அதாவது, எந்த பயனும் இல்லாமல் உடலின் ஆற்றல் வீணடிக்க படுகிறது. .

மற்றொரு இழப்பும் ஏற்படுகிறது. அந்த நடைக்கு ஆற்றல் செலவாகிறது. அந்த ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது? செல்கள், அதன் சேமிப்பில் இருந்து கொடுக்கிறது. சேமிப்பு குறைவதால் உடல் பலவீனம் ஆகிறது. அது நோய்களை கொண்டு வருகிறது. சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுத்தால், பொருளாதார நிலை கூடுமா, குறையுமா! ஆகவே, காலையும் மதியமும் சாப்பிட்ட பிறகு நடப்பதுதான் உடல் மன நலத்திற்கு. சிறந்தது.


ஆனால், உணவை வயிற்றில் நிரப்பிவிட்டு, டூ வீலரிலோ, காரிலோ, பஸ்ஸிலோ சென்று அலுவலகத்தில் உட்கார்ந்து மூளை சார்ந்த வேலையைத் தொடங்கிவிடுகிறீர்கள். அவ்வாறு வேலை செய்யும்பொழுது, சுவாசம் சீராககத்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தச் சுவாசம் செரித்தலை விரைவு படுத்தப் போதுமானதல்ல; வெப்பம் உற்பத்தியாவதில்லை; நீர் சுமாரான அசைவற்ற நிலையில்தான் இருக்கிறது. அதனால் நீர் சுற்றிவந்து அரைப்பது சீராக இருக்காது. இவ்வாறு ஐம்பூதங்களின் செயல்பாடும் முடங்கிய நிலையில்தானிரிருக்கிறது. மேலும் உற்பத்தியாகும் கழிவுப்பொருட்கள் வெளியேறாமல், தங்கிவிடுகின்றன. அவை தங்கும்போதுதான் மலசிக்கல் ஏற்படுகிறது..
  நாம் செய்யும் பணியிலேயே நடைப்பயிற்சியை இணைப்பதின் மூலம் நடைப்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.

இரவில் சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஏன்?
பகலில் 30 நிமிடங்கள் உட்பயிற்சி செய்தால், இரவில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 10 நிமிடங்கள் உடற்பயிற்சி or நடை பயிற்சி. செய்ய வேண்டும். 30 நிமிடங்கள் செய்யும் போது, இரவில் பசி எடுத்து தூக்கம் கெட்டுவிடும்.

அவ்வாறு 10 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்யும்  போது வாயுவும், வாய்வு ஏப்பங்களும், சளியும் வெளியேறும். அவை வெளியேறுவதால், இரவில் ஏற்படும் மூக்கடைப்பு, நெஞ்சு கரிப்பு, நெஞ்சு வலி, மூச்சு திணறல், போன்ற தொந்தரவுகள் இருக்காது. காலையில் சுலபமாக மலம், வாய்வு வெளியேற குடலில் அவை கீழே இறங்குகிறது


ஆகவே, அரோமணியின் 10-வது விதியின் படி வெறும் வயிற்றில் உடலுழைப்போ, உடற்பயிற்சியோ அல்லது நடைப்பயிற்சியோ செய்யக் கூடாது. உடலுழைப்புத்தான் செரித்தலை நல்ல முறையில் நடந்தேற வைக்கிறது. செரித்தல் நல்ல முறையில் அமைந்துவிட்டால், மற்ற உடல் நலத்துக்குரிய அனைத்து செயல்களும் அதாவது கழிவுப்பொருள் வெளியேற்றம், அதைத்தொடர்ந்து வரும் பசி, தூக்கம் ஆகிய அனைத்தும் தானாகவே நன்றாக அமைந்து விடும். அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கல் இருக்காது; உடல் வலிமை பெறும்.

                     கவனவாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்!