Monday, July 29, 2019

தினசரி சொர்க்கம்!


தினசரி சொர்க்கம்தான்! வீட்டில் தயாரிக்கப்படாத பலகாரங்களை சாப்பிடுவதாலும், அரோமணியின் 11 இயற்கை விதி மீறல்களாலும் செய்யும் தொழில்களின் மூலமும் உடலில் கழிவுப்பொருட்கள் தேக்கமடைகின்றன. அந்த கழிவுப்பொருட்கள் தலையில் கணத்தை தோற்றுவிக்கிறது.அந்த கணம்  ‘சைனசிடீஸ்” தொந்தரவுள்ளவர்களுக்கு அதிகமாக இருக்கும். அந்த கணம் இலேசாக இருக்கும்போது, உங்களால் உணர முடியாது; ஆனால் சுறு சுறுப்பு குறைந்திருக்கும்.

நாளடைவில் கழிவுப்பொருட்களின் அதிகரிப்பால், தலைக் கணம் அதிகரித்து, திடீர் மயக்கம், கிறுகிறுப்பு, உடல் சோர்வு, உடல் முழுவதும் இலேசான வலி, மூட்டு வலி ஆகியவற்றின் மூலம் உடல் உங்களுக்கு”ஜாக்கிரதை, விதி மீறல்களை சரி செய்” என்று தகவல் அனுப்புகிறது.

எல்லோருக்கும் தலைக் கணம் இருக்கும், ஆனால் வெளியில் உணரமாட்டார்கள். ஆகவே கண்களை மெதுவாக மூடுங்கள்.. உங்கள் மனதில் இலேசான அந்தக் கண உணர்வை உணருவீர்கள். அதையே கவனித்து மம-செய்யுங்கள். செய்யும்போது தலைக் கணம் கூடுவதை உங்களால் உணர முடியும். அந்தக் கணம் முழுவதுமாக நீங்கும் வரை செய்யுங்கள். இவ்வாறு தினசரி, அந்த தலைக் கணத்தை காலையில் நீக்கிவிட்டீர்கள் என்றால், உங்களுக்கு தினசரி சொர்க்கம்தான்!

நோய்கள் வராமல் தடுப்பதற்கும், நலம் பெறவும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வாருங்கள்.

பாலியல் குற்றங்கள்!


பாலியல் குற்றங்களிலிருந்து தப்ப முடியுமா?-இம

அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.

    செல் எண்கள்: 9442035291; 7092209028
முடியாது. இன்றைய கற்பனை வாழ்க்கை, சினிமா, டிவி, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்றவை அக் குற்றங்களைச் செய்ய ஊக்குவிக்கும்படியாகத்தான் இருக்கிறது. 

எண்ணங்களை தடுக்கவோ, காட்டாற்று வெள்ளத்திற்கு கரை போடவோ முடியாது. அதைப் போலத்தான், பாலியியல் உணர்வின் தூண்டல் இருபாலருக்கும் வேகம் நிறைந்தது. அந்த வேகம் இல்லாவிட்டால், இப்பூமியில் உயிரினங்கள் தோன்றி நிலைத்திருக்க முடியாது. 

இருபாலாருக்கும் பாலியல் உணர்வுத் தூண்டல் வரும்போது, அந்த உணர்வை போக்கிக் கொள்ள வடிகால் தேவை. ஆனால், சமூக நலன் கருதி, பாலியல் செயலை குற்றமாக்கி சட்டங்கள் இயற்றபட்டிருக்கின்றன.,

முடியும் என்பதற்கு நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். இறைவனை வழிபாடு செய்யும் முறையான, மார்பை நோக்கிச் செய்யும் மருத்துவ மனபயிற்சியை காலை, மாலை, இரவு தவறாது செய்து வர வேண்டும். அந்த அனுபவத்தைக் கொண்டு கவனவாழ்க்கைக்கு மாற வேண்டும். 

அவ்வாழ்க்கை, உங்களுக்கு வடிகாலை அமைத்துக் கொடுக்கும். குற்றங்கள் செய்யாத சூழ்நிலையை உருவாக்கும்.

நல்ல உடல்மன நலம் பெற, அரோமணியின் 11
இயற்கை விதிகளை தவறாது கடைபிடித்து வாருங்கள்.

ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
இமெயில்: twinmedicine@gmail.com

Saturday, July 27, 2019

கவன திருப்பு மனபயிற்சி


மருத்துவ மனபயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!-இம

அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.

    செல் எண்கள்: 9442035291; 7092209028

          கவன திருப்பு மனபயிற்சி.
மனம் அலைபாயும்போதெல்லாம், அதன்  எண்ணத்தை நிறுத்தி,  அதை, அதனில் இருக்கும் வேறொரு உணர்வுக்கு (உதாரணமாக வலி உணர்வு), அதன் கவனத்தை திருப்புவதுதான் கவன திருப்பு மனபயிற்சியாகும். அந்த வேறொரு உணர்வுதான் கவன திருப்பு உணர்வாகும். கவன திருப்பு மனபயிற்சியைதான் மருத்துவ மனபயிற்சி (மம) என்று அழைக்கிறோம். 

மொத்தம் 5 மனபயிற்சிகள்தான், அனைத்து நோய்களையும் குணபடுத்துகின்றன. அதனால், நோய்களுக்கு மருத்துவ மனபயிற்சியை தேர்ந்தெடுப்பது சுலபம். இன்னும் சுருக்கமாகவும் சொல்லலாம். மனதின் கவனத்தில், உடலின்  அசவுகரிய உணர்வை (Uneasy Feeling) வைத்து மனபயிற்சி செய்வதுதான் மருத்துவ மனபயிற்சியாகும்.

நோய்கள் வராமலும், நலம் பெறவும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடிக்கவும்.

             ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும்.




Thursday, July 25, 2019

கோபம் குறைய!

கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?-இம

அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.

    செல் எண்கள்: 9442035291; 7092209028

நியாயமான கோபம் நல்ல உடல்மன நலத்தை குறிக்கும். வங்கிக்கு பணம் செலுத்தப் போகிறவர், தாமதமாகச் சென்று, பணம் வாங்க மறுக்கும் வங்கி காசாளரிடம் சண்டை போடுவது.நியாயமில்லாத கோபம்;

நியாயமில்லாத கோபம் நோயைக் குறிக்கும். அந்தமாதிரி கோபமுள்ளவர்களுக்கு உடலில் கழிவுப் பொருள் தேங்கியிருக்கிறது. அந்த தேக்கம்தான் கோபத்தைத் தூண்டிவிடுகிறது. அந்த மாதிரி கோபப் படுபவர்களால், அவர்களுக்கும், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நிம்மதி இருக்காது. அவர்களிடம் தேங்கியுள்ள கழிவுப் பொருளை வெளியேற்ற வேண்டும்.

அதற்கு உட்கார்ந்து கண்களை மூடி, விரிஞ்சு, சுருங்கும் மார்பை  மனதில் கவனிக்கும் மருத்துவ மனபயிற்சியை செய்ய வேண்டும். எண்ணங்களை நீடிக்க அன்மதிக்கக் கூடாது. தொடர்ந்து 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். கழிவுப் பொருட்கள் வெளியேறிவிடும். கோபமும் குறைந்து கட்டுக்குள் வந்துவிடும்.

தினசரி காலை, மாலை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். இரவில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும் வரை செய்ய வேண்டும். அநியாயமாக கோபப்படுவதை விட்டு விடுவீர்க்ள்.

நோய் வராமலிருக்கவும், நலம் பெறவும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வாருங்கள்.

          ஹீலர் அரோமணி
தயவு செய்து உங்களது கருத்தைப் பதிவு செய்யவும்.

Tuesday, July 23, 2019

அனுமதித்தேன்!;

அனுமதித்தேன்; பல நோய்களிலிருந்து 

விடுவிக்கப்பட்டேன்!.- இம


அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா 

மருத்துவமனை.

    
     செல் எண்கள்: 9442035291; 7092209028 

பத்து ஆண்டுகளாக, இரவில் சிறிது அதிகமாகச் சாப்பிட்டாலும், நல்ல தூக்கத்திலிருக்கும்போது ஒரு கால் விரல்களை சுண்டி இழுக்கும்; அது இல்லாவிட்டால், காலையில் வயிற்று வலி இருக்கும், இரண்டுமே பயங்கரமான வலி எடுக்கக் கூடிய நோய்கள். அப்பொழுதெல்லாம் வலிக்குறிய மருத்துவ மனபயிற்சி செய்து அவற்றிலிருந்து தற்காலிகமாக நலம் பெறுவேன்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-வது வாரம் வந்தால், இருமல், சளி வந்து விடும். இருமல் பயங்கர சத்தத்துடனிருக்கும்; சுற்றிலுமுள்ளவர்களின் பேச்சுக்குப் பயந்து, வீட்டாரின் வற்புறுத்தலின் பேரில் மாத்திரைகள் சாப்பிட்டு இருமல், சளி இல்லாமல் செய்துவிடுவேன். அப்பொழுது நோய்களைப் பற்றிய புரிதலும் இல்லாமல் இருந்தேன்.

இந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி இருமலுடன் சளி ஆரம்பித்தது. இரு வேளையும் சாப்பிட்டுவிட்டு நடந்ததால், இருமல் அதிக சத்தமில்லாமல் இருந்தது. எனது குடும்பத்தாறும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வற்புறுத்தவில்லை. ஜூலை மாதம் 7-ந்தேதிதான் அவை நின்றன. எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதோடு மேலே குறிப்பிட்ட இரண்டு நோய்களும் காணாமல் போய்விட்டன. கழிவுப் பொருட்களை வெளியில் செல்ல அனுமதித்தால் நோய்களிலிருந்து நலம் பெறலாம் என்பதை கண்டுபிடித்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி.

நோய்கள் வராமலும், நலம் பெறவும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடியுங்கள்.  

              ஹீலர் அரோமணீ..
தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும்.
Email: twinmedicine@gmail.com



Tuesday, July 16, 2019

இயக்கும் ஆற்றல்!


    உடலை இயக்கும் ஆற்றல் எங்கே இருக்கிறது?-இம       



 அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா 
            மருத்துவமனை.

            செல் எண்கள்: 9442035291; 7092209028 
எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் மூலம் உடலை இயக்குவது “மனம்”. இறைவனை வழிபடுவது மனதினால்தான். மனதினை எடுத்துவிட்டால் மனிதனின் நடமாட்டம் நின்றுவிடும். ஆகவே ’மனமே கோயில்’ என்ற பழமொழி வழக்கில் வந்திருக்கிறது.

இந்த மனம் மூளையில் இருக்கிறதா? மார்பில் இருக்கிறதா அல்லது இதயத்தில் இருக்கிறதா? ஆனால் உடலில் மனம் எங்கிருக்கிறது என்பதை மக்கள் எல்லோரும் அறியாமலே அறியும்படியாக, அவர்களை சொல்ல வைத்திருக்கிறான்.

இரு பெண்கள் இருவரும் தோழிகள். “நடக்கக்கூடாத ஒன்று நடந்து விட்டதாக”, ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் சொல்லுகிறாள். நம்பமுடியாத பெண், சொன்னவளிடம் “ஒன் மனசைத் தொட்டு சொல்லு! நீ சொல்வது உண்மையா?” என்று அவள், , சொன்னவளின் மார்பைத் தொட்டு கேட்கிறாள். ஆகவே உடலை இயக்கும் மாபெரும் ஆற்றலான மனம், உடலில் மார்பிலிருக்கிறது.

             ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும்.
Email: twinmedicine@gmail.com

Sunday, July 14, 2019

சளிப் பிடிக்கிறதா?


தயிர், மோர் சேர்த்தால் சளிப் பிடிக்கிறதா? இதைச் செய்யுங்கள் சளி பிடிக்காது!-இம-



அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.

    செல் எண்கள்: 9442035291; 7092209028

தயிர், மோர் சேர்த்தால் சளிப் பிடிக்கும் என்று பலர் அவற்றை தவிர்க்கிறார்கள். தயிரினாலோ, மோரினாலோ சளி பிடிப்பதில்லை.

உடலின் பராமரிப்பு சக்தியானது, சளி உடலில் சேர்ந்து விட்டால், அதை வெளியேற்ற தேர்ந்தெடுத்த பருவ காலம் குளிர்ச்சி. அதனால்தான், இலேசான தூறல் விழுந்தால் கூட மறுநாள் பலருக்கு தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், நெஞ்சில் சளி கட்டுதல் முதலியன ஏற்படுகின்றன. உடல் இப்படித்தான் உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றுகின்றன.

நீங்கள் தயிர் மோர் சாப்பிடும்போது, உங்கள் உடலில் நீர், சளி நிறைய தேங்கியிருக்கின்றன. அதை வெளியேற்ற உடல் சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அந்த சமயத்தில்தான், நீங்கள் தயிர், மோர் சாப்பிடுகிறீர்கள்; அவை குளிர்ச்சி குணத்தைக் கொண்டது; இந்த குளிர்ச்சியைப் பயன்படுத்தி, , உடலானது தேங்கியிருக்கின்ற நீரையும் சளியையும் வெளியேற்ற, தும்மலையும், நீர் வடிதலையும், சளியையும் தோற்றுவிக்கிறது. “காக்காய் உடகார பனம்பழம் விழுந்த” கதைதான் இது.

ஆகவே தயிர், மோர் சேர்த்துக்கொள்வதால் சளி பிடிப்பதில்லை. உடலில் நீரும், சளியும் தேங்காமல் இருந்தால், தயிரும் மோரும் சேர்த்துக்கொள்ளலாம். இருமல், சளி வெளியேற்றத்தை,தடை செய்யும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. சளியை வெளியேற்ற துணையாக இருக்கும் மருத்துவ மனபயிற்சி சிகிச்சையை செய்து கழிவுப்பொருட்களை உடலில் தேங்க விடாமல் செய்யலாம்.(இந்த வெப்சைட்டில் சிகிச்சை முறை விளக்கப்பட்டிருக்கிறது)

நோய்கள் வராமலும், குணமாகவும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடிக்கவும்.   
          
          ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்களது கருத்தினை பதிவு செய்யவும்.

Friday, July 12, 2019

அரிப்பு எதனால் ஏற்படுகிறது


அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா  மருத்துவமனை.
         செல் எண்கள்: 9442035291; 7092209028. 
        அரிப்பு எதனால் ஏற்படுகிறது?
அரிப்பு எதனால் ஏற்படுகிறது? துர்நீர் கழிவுப் பொருள்,, வியர்வை துவாரங்களை அடைத்து, துர்நீர் கட்டிகளை உண்டாக்கி, வெளியேற முடியாமல், தோலுக்குக் கீழ் தங்கிவிடுகின்றது. இந்த அடைப்பை அரிப்பின் மூலம் உடல் நமக்கு தெரியபடுத்துகிறது; 

உடல், சொரண்டுவதின் மூலம் துர்நீர் கட்டிகளை உடைத்து, அடைபட்டிருந்த துவாரங்களை திறக்கச் செய்கிறது.

வியர்வைத் துவாரங்களின் அடைப்பை நீக்க,  ஒரே ஒரு வழிதான் உண்டு. காலையும் மதியமும் சாப்பிட்ட பிறகு உழைப்போ, உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ, ஓட்டப் பயிற்சியோ மேற்கொள்ள வேண்டும்.: வியர்வைத் துவாரங்கள் திறந்து கொள்ளும்; அடைபட்டிருந்த கழிவுப் பொருட்கள் வெளியேறிவிடும்; அரிப்பும் நின்றுவிடும். அரிப்புக்குரிய மருத்துவ மனபயிற்சி சிகிச்சையை (இந்த வெப்சைட்டில் பார்க்கவும்) செய்து விரைவில் அரிப்பிலிருந்து குணம் பெறலாம்.

உடலில் தேய்க்கும் எண்ணெய், வியர்வைத் துவாரங்களை அடைத்துவிடும்; ஆகவே அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

நோய்களிலிருந்து விடுபடவும், வராமலிருக்கவும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைபிடித்து வரவும்.

           ஹீலர் அரோமணி
இ.மெயில்: twinmedicine@gmail.com 
தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

Wednesday, July 10, 2019

பசி (appetite) இல்லையா!


    பசி (appetite) இல்லையா! கவலையை விடுங்கள்!!    

பசி எடுக்காமல் போவதற்கு .இரண்டு வாழ்வியல் விதிகளை மீறுவதுதான் காரணம். ஒன்று உழைப்பு குறைவு. இரண்டு தூக்கக் குறைவு. இதைத் தவிர, மற்ற அரோமணியின் 9 இயற்கை விதி மீறல்களுக்கும் ஓரளவு பங்கு உண்டு.

உழைப்போ, உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ அல்லது ஓட்டப்பயிற்சியோ காலை மதியம் இரண்டு வேளையும் சாப்பிட்ட பிறகு மேற்கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் உழைப்பது உடலின் ஆற்றலைதான் குறைக்கும்.

மன அழுத்தமும், மன கவலையும்தான் இரவில் தூங்கமுடியாததற்கு முக்கிய காரணமாகும். அதற்கு மார்பை நோக்கிச் செய்யும் மருத்துவ மனபயிற்சியை காலை மாலை இருவேளையும், இரவில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும் வரை செய்ய வேண்டும். அந்த பயிற்சியைப் பற்றி இதே வெப்சைட்டில், தூக்கத்துக்குரிய மருத்துவ மனபயிற்சி சிகிச்சையில் கூறியிருக்கிறேன்.

அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட, வராமல் தடுக்க அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்,
           ஹீலர் அரோமணி
அரோமணி ஆராய்ச்சி மைய                      மருந்தில்லா மருத்துவமனை.

           செல் எண்கள்: 9442035291; 7092209028.


தயவு செய்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்.

Monday, July 8, 2019

உடல் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது?.


 உடல்  எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது?.      
தினசரி உடலின் கழிவுப் பொருட்களான சிறுநீர், மலம், வாய்வு, நெஞ்சை அடைத்துக்கொள்ளும் ஏப்பம், சளி ஆகியவை வெளியேறும்படியாகத்தான் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குகை மனிதர்களுக்கு அப்படித்தான் கழிவுப்பொருட்கள் வெளியேறிக்கொண்டிருந்தன.

சமவெளிக்கு வந்து, நெருப்பின் உபயோகத்தைக் கண்டுபிடித்து வாழும்போதுதான். முதன் முதலாக இரண்டு வாழிவியல் விதிகளை மீறுகிறான். முதலாவதாக, இயற்கை உணவையும், சமைத்த உணவையும் சேர்த்தே சாப்பிடுகிறான்.

இரண்டாவதாக  தாகம் எடுத்து ஆறுகளில் தண்ணீர் குடித்து வந்தான். மண்பானையைக் கண்டுபிடித்தவன் வீட்டிற்கே தண்ணீரை கொண்டு வந்து தாகம் எடுக்காமல் தண்ணீர் குடித்தான். ஆக இந்த இரண்டு விதி மீறல்களால், அவனது உடலில் வாய்வு, ஏப்பம், சளி ஆகியவை அதிகமாக உற்பத்தியாகி  வெளியேறின. அதனைக் கண்டு பயந்த ஆதி மனிதன் மருந்தைக் கண்டுபிடித்தான். அதில் சில மருந்துகள் கழிவுப் பொருட்களை தினசரி வெளியேற்றின. சில உடனடி நிவாரணியாக, அந்த கழிவுப்பொருட்களை வெளியேற்றாமல்    உள்ளேயே தேங்க வைத்தன.

உடல் பராமரிப்பு செய்து தேங்கிய கழிவுப் பொருட்களை வெளியேற்றின; வெளியேறும்போது, வாந்தி, பேதி, மயக்கம், தும்மல் போன்ற தொந்தரவுகளைக் கொடுத்துக்கொண்டு வெளியேறின; அந்த தொந்தரவுகளைத்தான் நாம் நோய்கள் என்று சொல்கிறோம். 
           ஹீலர் அரோமணி
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா        மருத்துவமனை, செல் எண்: 9442035291, 

தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


Friday, July 5, 2019

பல்லீரலுக்கு சிகிச்சை


  பல்லீரலுக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை!-இம  
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை, செல் எண்: 9442035291,

பற்கள் ‘எனாமல்’ என்னும் கெட்டியான மேலுறைப் பகுதியையும், வழவழப்பு தன்மையையும் கொண்டது; ஆகவே அவற்றில் உணவு துணுக்கல் ஒட்டினால், உமிழ்நீர் சுத்தமாக்கிவிடும். 

பற்களை ‘பிரஸ்’ செய்து முடித்தவுடன், விரலைக்கொண்டு, ஈரலை தேய்க்கும்போது, உங்களது கவனம் உங்களை அறியாமலே துலக்குகின்ற ஈரல் பகுதியில் நிலைக்கிறது. அதாவது ஈரலிலிருக்கிற சிறு சிறு வலிகள், வீக்கங்கள் ஆகியவற்றிற்காக மருத்துவ மனபயிற்சி சிகிச்சை எடுக்கிறீர்கள். அதன்மூலம் அப்பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரித்து வலி, வீக்கங்களை குணப்படுத்துகின்றன.


                ஹீலர் அரோமணி

தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


Monday, July 1, 2019

மலச்சிக்கலுக்கு காரணம்,


  .    மலச்சிக்கலுக்குரிய காரணங்களும், சிகிச்சை முறைகளும்.
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை, செல் எண்: 9442035291,

லசிக்கல் தோன்றுவதற்கு உழைப்பின்மையும், தூக்கமின்மையும் பெரும் பங்கு வகிக்கின்றன. அரோமணியின் மற்ற 9 இயற்கை விதிகளும் இதில் பங்கு வகிக்கின்றன.

உழைப்பின்மையை, காலையிலும், மதியமும் சாப்பிட்ட பிறகு வயது, உடல் வலிமைக்குத் தகுந்தாற்போல உழைக்கவோ, உடற்பயிற்சியோ, நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ செய்து போக்கலாம்.

தூக்கமின்மைக்கு மன அழுத்தமும், மனகவலையும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதற்கு மார்பை நோக்கிச் செய்யும் மருத்துவ மனபயிற்சியை மேற்கொள்ளலாம். அந்த மருத்துவ மனபயிற்சி சிகிச்சையை ஏற்கனவே இதே வெப்சைட்டில் வெளியிட்டிருக்கிறேன்.

மற்றொன்று செய்ய வேண்டியது, வயது, உடல் வலிமைக்குத் தகுந்தாற்போல, மசாலா சேர்த்திருக்கும், குழம்பு, கூட்டு, பொறியல் ஆகியவற்றை அளவாக எடுத்துக் கொள்ளவேண்டும். உரப்பை அளவாக சேர்த்துக்கொள்ளவேண்டும்.

                               ஹீலர் அரோமணி

உங்களுடைய கருத்தை தெரிவிக்கவும்.