Sunday, August 25, 2019

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”-


             ”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”-இம            
     அரோமணி ஆராய்ச்சிமைய  மருந்தில்லா  மருத்துவமனை.
                         செல் எண்கள்: 9442035291; 7092209028/

                            

v  உங்களுடைய கடின முயற்சிக்குப் பிறகு “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது::
v  உங்களது கடின முயற்சிக்குப் பிறகு “எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது”
v  உங்களது பெரு முயற்சிக்குப் பிறகு “எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்”---அதுதான் கற்பனை வாழ்க்கை!

v  உங்களது கடின முயற்சி இல்லாமல் “எது நடந்ததோஅது நன்றாகவே நடந்தது!

v  உங்களது கடின முயற்சி இல்லாமல் “எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது”
v  உங்களது பெரு முயற்சி இல்லாமல் “எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்”---இதுதான் கவன வாழ்க்கை!
 
      அரோமணியின் 11 விதிகள் உடல்மன நலத்தைக் காக்கும்.
                ஹீலர் அரோமணி. 

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.




 
      



Tuesday, August 20, 2019

பிரிட்டீஷ் பார்லிமெண்டில் விஞ்ஞானி!

பார்லிமெண்டில் சில வார்த்தைகள் மட்டும் பேசிய எம்.பி!-இம
         
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை. செல் எண்கள்: 9442035291; 7092209028.

   பிரிட்டீஷ் பார்லிமெண்டில் விஞ்ஞானி!

பிரிட்டீஷ் பார்லிமெண்டில் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன், எம்.பி. அவர்கள் ஒரே ஒரு தடவைமட்டும் தான் “ஜன்னலை திறந்து விடுங்கள், காற்று வரட்டும்!” என்று சேவகர்களிடம் கூறியிருக்கிறார். அதேபோல, ”உங்கள் வீடுகளின் ஜன்னல்களை, திறந்து விடுங்கள். காற்று வரட்டும்” என்று உங்களிடம் கூறுகிறேன்.

காற்று இல்லாமல் ஒரு சில நொடிகள் கூட இருக்க முடியாது. வாழ்வில், உடல்மன நலத்திற்கு முக்கியமான, ஐந்து முக்கிய ஆற்றல்களில் ஒன்றுதான் காற்று.

அந்த ஆற்றல் மிகுந்த காற்று இல்லாமல், ஒரு நாளில்,மூன்றில் ஒரு பங்கு நேரம்  இருக்கும் படுக்கை அறையில், ஜன்னல்களை மூடி தூங்குகிறீர்கள். அதற்கு கொசு, திருடர் பயம் காரணமாக கூறப்படுகிறது.

கொசுவிற்கு ‘பிளீட்சிங் பவுடர் அல்லது லைசாலை கழிப்பறைகோப்பையில் கரைத்து ஊற்றியும், , குளியலறையிலும், சமயலறையிலும் தூவி, அதை ஒழித்துவிடலாம். திருடர் பயத்திற்கு, ‘உண்மைக் கடவுளை’ வழிபடுங்கள். அவன்உங்கள் வீட்டுக்கு காவலாளியாக இருப்பான்.

நோய்களிலிருந்து விடுபட அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடியுங்கள். 
       
                ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். 


 ,

Monday, August 19, 2019

“தற்கொலை” எண்ணத்திலிருந்து மீள


      “தற்கொலை” எண்ணத்திலிருந்து மீள எளிய சிகிச்சை!-இம            
        அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை. 
                           செல்கள்: 9442035291; 7092209028.
தற்கொலை எண்ணம் மீண்டும் மீண்டும் வரும்போது, பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதாக உணறுகிறார்கள்; “உலகில் வாழ்வதில் இனி அர்த்தமில்லை” என்ற முடிவுக்கு வருகிறார்கள்; அந்த முடிவுக்கு வந்தவுடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்..இதற்கு எளிய சிகிச்சை முறைகள் இருக்கு.

தலைப்பயிற்சி: மெதுவாக கண்களை மூடவும்
.சில விநாடிகள் கழித்து, தலையை மனதால் கவனிக்கவும். இலேசான வலியை, தலைக் கணத்தை உணருவார்கள். அதை கவனித்துக்கொண்டே இருக்கவும் வலி முழுவதும் தீரும்வரை மருத்துவமனபயிற்சி செய்யவும். மாலையும் செய்யவும். ஒரே நாளிலே தற்கொலை எண்ணம் அவர்களை விட்டு நீங்கி விடும். தினசரி செய்ய வேண்டும்.
                       அல்லது
மார்புப் பயிற்சி:: கண்களை மூடி மார்பையும், அதில் உள்ள இருக்க (Tightness) உணர்வையும் கவனிக்கவும். இருக்கம் விலகும்வரை செய்யவும். காலையும், மாலையும் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். இரவில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும்வரை செய்யவும். தற்கொலை எண்ணஙகள் தலைகாட்டாது.   
                    ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

தய்

Saturday, August 17, 2019

ஆதிகால மனிதன் சாப்பிட்ட பிறகுதான்

 சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்யவேண்டும்! ஏன்?-இம
          அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை. 
                      செல் எண்கள்: 9442035291’ 7092209028.
ஆதிகால மனிதன் சாப்பிட்ட பிறகுதான் வேட்டையாடச் சென்றான். 


ஆதிகால மனிதன் மிருகங்களை வேட்டையாடச் செல்லும்போது, சாப்பிட்டுவிட்டுத்தான் சென்றான். அப்படிச் சென்றதால், சாப்பிட்ட உணவு செரித்தல் ஆனது; செரித்தலினால் பசி எடுத்தது; பசியினால் மீண்டும் உணவு உண்டான். ஆகவே அவனுடைய வாழ்வின் வாழ்வாதாரம் உழைப்பு. உழைப்பு செரித்தலுக்காக; செரித்தல் பசிக்காக; பசி உணவுக்காக; உணவு உழைப்புக்காக.

நவீன கால மனிதனுக்கும் உழைப்புதான் வாழ்வாதாரம். ஆனால்,  உழைப்பு குறைந்துவிட்டதால், உழைப்பை ஈடுகட்ட உடற்பயிற்சி, நடைப்பயிற்சி வழக்கத்திற்கு வந்தது. அப்படி வரும்போது, அவன் சாப்பிட்டுவிட்டு உழைக்கச் சென்றதைப் போல, இவனும் சாப்பிட்ட பிறகுதானே நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், அதை மாற்றி வெறும் வயிற்றிலோ அல்லது ஒரு காபி மட்டும் குடித்துவிட்டு நடைப்பயிற்சி செய்து நோய்களை வரவழைத்துக் கொள்கிறான். ஆகவேதான் அரோமணியின் 10-விதி காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு நடக்க வலியுறுத்துகிறது..

அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடித்து நோயின்றி வாழுங்கள்.

                           ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.





                       ஹீலர் அரோமணி

!உடலின் கழிவுப் பொருட்கள் தேங்குமிடம்!


உடல் மற்றும் மனச் சோர்வுகளை குணப்படுத்தும் எளிய சிகிச்சை

அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.  
           செல் எண்கள்: 9442035291; 7092209028.
உடலின் கழிவுப் பொருட்கள் தேங்குமிடம்!

உடலின் கழிவுப் பொருட்கள்: கார்பன் –டை- ஆக்ஸைடு, துர்நீர், வாய்வு, ஏப்பம், சளி, சிறுநீர், மலம், சர்க்கரை அந்த கழிவுப்பொருட்கள் உழைப்பினாலும், உண்ணும் உணவுகளாலும், விதி மீறல்களாலும் உடலின் தலையிலும் தேங்குகின்றன. அதனால் தலைக்கனம் ஏற்படுகிறது. ஆனால் அந்த கனம், உங்களால் உணராத அளவில் இருக்கும். அந்த கனம்தான் உங்கள் உடலில் சோர்வையும் மனதில் சோர்வையும் தோற்றுவிக்கிறது. அந்தச் சோர்வுகளினால், அன்றாட பணிகளைச் சரிவர செய்ய முடியாது.

அந்தக் கனத்தைப் போக்க, கண்களை மூடுங்கள் நெற்றிப்பொட்டையும், தலையையும் மனகண்ணால் கவனியுங்கள். இலேசானை வலி தோன்றும், அந்த வலியை கவனியுங்கள்; நினையுங்கள்; உணருங்கள். அந்த வலி கூடிக்கொண்டே குறைந்து வரும். வலி முழுவதுமாக தீரும்வரை மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். மாலையிலும் நேரம் இருந்தால் செய்யுங்கள். உடல் மற்றும் மனச்சோர்வுகள் இருக்காது.

அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் தவறாது கடைப்பிடிக்கும்போது, தலைக்கனம் குறைந்துவிடும். காலை, மதியம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் நடைபயிற்சி செய்யுங்கள்.
              ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.







                              ஹீலர் அரோமணி

தங்குமிடங்கள்,

நோய்க்காரணிகள், தங்குமிடங்கள், நோய்கள்!-இம
  A 73-MLM           
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை. 
                        செல் எண்கள்: 9442035291; 7092209028.
உடலிலுள்ள கழிவுப்பொருட்கள்: கார்பன் –டை- ஆக்ஸைடு, துர்நீர், வாய்வு, ஏப்பம், சளி, சிறுநீர், மலம், சர்க்கரை. இந்த கழிவுப்பொருட்கள் (க.பொ) தலையில் தேங்கும்போது, தலைக்கனம்,கிறுகிறுப்பு, மயக்கம், தலைவலி, மூட்டுவலி, உடல் மனச் சோர்வுகள், உடல் வலிகள், சோம்பேறித்தனம், மறதி, அறியாமை.முதலிய நோய்கள் உண்டாகின்றன..

முகம், மூக்கு ஆகியவற்றில் தேங்கும்போது, தும்மல், மூக்கில் நீராக ஒழுகுதல், மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்ச்சி முதலியன. தொண்டையில் தேங்கும்போது “கரகரப்பு” நோய். மார்பு மற்றும் நுரையீரல்களில் தேங்கும்போது சளி, மூச்சுத்திணறல், இதய நோய்கள்.

வயிற்றில் தேங்கும்போது, அஜீரணம், மந்தம், வலி, கால் பாத, விரல் நரம்புகளை சுண்டி இழுத்தல். சிறுநீரகத்தில் தேங்கும்போது, கற்கள், சிறுநீரக நோய்கள், சிறுநீரக செயலிழப்பு.. தோலில் தேங்கும்போது, நீர்க்கட்டிகள், அரிப்பு. மார்பில் தேங்கும்போது மனம் சம்பந்தபட்ட நோய்கள். கணயத்தில் தேங்கும்போது சர்க்கரை குறைவு நோய்.

அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடிக்கும்போது, உடல் வலிமை பெற்று, தேங்கும் கழிவுப்பொருட்கள் குறைந்துவிடுகின்றன. நோய்களுக்குரிய மருத்துவ மனபயிற்சிகளைச் செய்து அவற்றிலிருந்து குணம் பெறுங்கள்.
                ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்


 

Thursday, August 15, 2019

உடலின் முயற்சி!

உடலின் முயற்சியை தடுப்பதா!-இம அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை. செல் எண்கள்: 9442035291; 7092209028.

உடல், தன்னிடமுள்ள நோய்களை குணபடுத்த எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருக்கிறது. கண்களின் பார்வைக் குறைபாட்டை கண்ணாடி அணிந்து சரிசெய்து விடுகிறோம். சரி செய்து விடுவதால், விதிமீறல்களை திருத்திக் கொள்வதில்லை. உடல், கண் குறைபாட்டை சரிசெய்யும் முயற்சியை கைவிட்டுவிடுகிறது. அதாவது, செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு விடுகிறது. தவழும் குழந்தையிடம் சிறிது தூரத்தில் கிடக்கும் பொம்மையை, தூக்கிக் கொடுப்பதைப்போல.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலினை உடலில் செலுத்தி, இன்சுலின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. அதனால்தான் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் செலுத்தும் சர்க்கரை நோயாளிகளாக மாறிவிடுகிறார்கள். உடலின் முயற்சி தடுக்கபடுகிறது.

சர்க்கரை நோயிலிருந்து விடுபட, உடலின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தரும் அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைபிடியுங்கள்.

          ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.                            

Saturday, August 10, 2019

தமிழ்மொழியும், இன்றைய தலைமுறையும்

“தமிழ்மொழியும், இன்றைய தலைமுறையும்…..”-இம
     
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை
              57/176A6, 3-வது தெரு, பேரையூர் சாலை,
                 உசிலம்பட்டி-625532.
                  செல் எண்கள்: 9442035291, 7092209028.

       தமிழ்மொழியும், இன்றைய தலைமுறையும்
பெறுநர்
ஆசிரியர்,
‘தினத்தந்தி’ நாளிதழ்.
சென்னை-600007.

அன்புள்ள ஐயா,
வணக்கம். நான் தினத்தந்தி சந்தாதாரர். 10-7-2019, தேதி,  தினத்தந்தி நாளிதழின் கட்டுரை பக்கத்தில், “தமிழ்மொழியும், இன்றைய தலைமுறையும்…..” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறீர்கள். அதன் ஆசிரியர் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தைப் பற்றி சொல்லி வருத்தமும் எச்சரிக்கையும் விட்டிருக்கிறார்.

”வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்பதைப்போல, ஆங்கிலத்தைக் கட்டுப்படுத்த அந்த ஆங்கிலத்தைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும். அதற்குதான், பள்ளிகளில் 6-வது வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையிலும் அடைப்புக் குறிக்குள் ஆங்கில தொழில் நுட்ப சொற்கள் பயன்படுத்தலாம் என்றும், கல்வியின் அனைத்து படிப்புகளிலும் தமிழை ஒரு பாட மொழியாக வைக்கலாம் என்றும் எனது திட்டத்தினை 2002-ம் ஆண்டு முதல் எழுதி போராடி வருகிறேன். எனது இரண்டு கட்டுரைகளையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

என்னுடைய கருத்தை சுமார் 2 3/4  கோடியை நெருக்கி வாசகர்களைக் கொண்டுள்ள “தினத்தந்தி” நாளிதழில் வெளியிட்டால், மக்கள் விழிப்புணர்வு பெற்று, அவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்போது,  எனது திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம் என்ற நம்பிக்கை உண்டு. ஆகவே எனது கருத்தை வெளியிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                 இப்படிக்கு
                                          தங்கள் உண்மையுள்ள 
                                   ஹீலர் R.A.பரமன் (அரோமணி)
                                            
 இணைப்பு 2 கட்டுரைகள்.

MISC-TAMIL EDUN-HC PANEL-16-3 18; MISC-TAMIL EDN-INT-12-7-19
EMAIL SENT ON 12-7-19 AT 8.15PM

Thursday, August 8, 2019

எடை குறைய!

உடல் எடையைக் குறைக்க எளிய சிகிச்சை!--இம
  அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.


    செல் எண்கள்: 9442035291; 7092209028              
.வெளிப் பலகாரங்களும், அரோமணியின் 11 இயற்கை விதி மீறல்களும், கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றின் உபயோகம், பெயிண்ட், சிமெண்ட், பஞ்சு ஆகிய பொருட்களிடையே தொழில் செய்வதாலும் உடல் பலவீனமாகி, அதிக அளவு கழிவுப்பொருட்கள் தேங்குகின்றன. 

அப்படி தேங்கும் கழிவுப்பொருட்கள் : கார்பன்-டை- ஆக்ஸைடு, வாய்வு, சளி, ஏப்பம், துர்நீர், சிறுநீர், மலம் முதலிய கழிவுப்பொருட்கள் ஆகும்.. இந்த கழிவுப்பொருட்கள்தான் உடல் எடை கூடுவதற்கு முக்கிய காரணமாகும்! உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா! 

அவை முதலில் தலையில்தான் தேங்குகின்றன. அதனால் தலை கணக்க ஆரம்பிக்கிறது. ஆனால், அந்தக் கணத்தை நீங்கள் உணரமாட்டீர்கள்.

காலையில், படுக்கையைவிட்டு எழுந்தவுடன், அப்படியே உட்கார்ந்து அல்லது படுத்துக்கொண்டே, கண்களை மூடிய சிறிது நேரத்தில் அந்த கணத்தை, இலேசான வலியின் மூலம் உணரலாம். தொடர்ந்து அந்த வலியைக் கவனித்து மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். வலி கூடிக்கொண்டே சென்று பிறகு குறைந்து சரியாகிவிடும். இரண்டு மூன்று  மாதங்களில் எடை குறைந்து விடும்.

காலை, மதியம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கட்டாயம் நடக்கவும். நோய்களிலிந்து குணமாகவும், வராமலிருக்கவும், அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் தவறாது கடைப்பிடிக்கவும். 

                     ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..

Monday, August 5, 2019

உடல் வெளியேற்றும் கழிவுப் பொருடகள்.


அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.

    செல் எண்கள்: 9442035291; 7092209028

உடல் வெளியேற்றும் கழிவுப் பொருடகள்.


சிறுநீர், மலம், சளி, வாய்வு, ஏப்பம், ஆகியவைதான் உடல் வெளியேற்றும் கழிவுப் பொருடகள். இந்த கழிவுப் பொருட்கள் அன்றாடம் வெளியேறிக்கொண்டிருந்தால், உடல்மன நலம் நன்றாக இருக்கும். இவற்றில் சிறுநீரும், மலமும் அன்றாடம் வெளியேறிவிடுகின்றன. அதிக அளவு விதி மீறல்களால், சளி, வாய்வு, ஏப்பம் ஆகிய மூன்றும் உடலிலே தங்கி தேக்கமுற்ற கழிவுகளாக மாறிவிடுகின்றன. அந்த தேக்கமுற்ற கழிவுகளால்தான், நோய்கள் தோன்றுகின்றன.

அடக்கி வைத்திருந்த சிறுநீர் வெளியேறும்போது, ஆஹா என்ன மகிழ்ச்சி! காலையில் மலம் வெளியேறும்போது, ஆஹா என்ன மகிழ்ச்சி! மூச்சுத் திணரலை ஏற்படுத்தும் சளி வெளியேறினால், ஆஹா என்ன மகிழ்ச்சி! நெஞ்சை அடைத்துக்கொண்டிருக்கும் ஏப்பமும், வாயுவும் வெளியேறும்போது, ஆஹா என்ன இன்பம்! மகிழ்ச்சி!

பசி எடுத்து உண்ணும்போது, உணவு சுவைக்கிறது; உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது; தாகம் எடுத்துத் தண்ணீர் குடிக்கும்போது தண்ணீரும் சுவையாக இருக்கிறது; உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது.

மேற்கூறியவாறு உடலில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் அந்த கருணை உள்ளம் படைத்த இறைவனா. உடலில் கிருமியைப் படைத்து நோய்களை உண்டாக்குவான்! மக்களே! சிந்தியுங்கள்


காலை, மதியம் சாப்பிட்ட பிறகு அரை மணி 

நேரம் கட்டாயம் நடக்கவும். நோய்களிலிந்து 

குணமாகவும், வராமலிருக்கவும், 

அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் 

தவறாது கடைப்பிடிக்கவும்.


          ஹீலர் அரோமணி

தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு 

செய்யவும்.



P


Thursday, August 1, 2019

அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட உணவு



அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட உணவு 

கழிவுப்பொருளாக மாற்றபடுகிறது.

அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது, அதிகமாக, சாப்பிட்ட உணவு கழிவுப்பொருளாக மாற்றப்பட்டு, தேக்கி வைக்கபடுகிறது. ஆரம்ப கட்டங்களில் வயிற்றில் மந்த உணர்வை ஏற்படுத்தி, உங்களுக்கு “ஜாக்கிரதை! அளவாக சாப்பிடு” என்ற தகவலை உடல் அனுப்புகிறது. 

நடு நடுவே வயிற்றோட்டத்தைத் தோற்றுவித்து, உடல் மீண்டும் அளவாகச் சாப்பிடச் சொல்லி எச்சரிக்கிறது. இதையெல்லாம் தாண்டி, காலபோக்கில், கழிவுப் பொருட்கள் அதிகமாகி, தேக்கி வைக்க இடமில்லாத நெருக்கடி வரும்போதுதான், தாங்க முடியாத வயிற்று வலியின் மூலம் “அளவாக சாப்பிட”  ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை தகவலை உடல் அனுப்புகிறது.

அரோமணியின் தொழில் நுட்பத்தின்படி, நன்றாக 30 முறை மென்று வரக்கூடிய மூன்று ஏப்பங்களில், எது உங்களுக்குரியது  என்று, உங்கள் அனுபவத்தின் மூலம் கண்டுபிடித்து சாப்பிடுவதுதான் அளவோடு சாப்பிடுவதாகும். 

வயிற்று வலிக்கு, வயிற்றை கவனித்து செய்யும் மம-வை செய்ய, வலியிலிருந்து நலம் பெறலாம். காலையும் மதியமும் சாப்பிட்டுவிட்டு அரைமணி நேரம்  நடக்க வேண்டும்.

நோய்களிலிந்து குணமாகவும், வராமலிருக்கவும், அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடிக்கவும்.

அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.

    செல் எண்கள்: 9442035291; 7092209028

வயிற்று வலிக்குறிய காரணமும், அதற்குரிய சிகிச்சை முறையும்!-இம

ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும். 

அரோமணி தொழில் நுடபம் உதவும்


அளவாக சாப்பிடுவது எப்படி?--இம


அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை.

    செல் எண்கள்: 9442035291; 7092209028

     அரோமணி தொழில் நுடபம் உதவும்.

இப்பொழுது மக்கள் எல்லோரும் மூன்று வேளையும் அளவுக்கு அதிகமாகத்தான் சாப்பிடுகிறார்கள். அளவைக் கண்டுபிடிக்க உங்களுக்கு அரோமணி தொழில் நுடபம் உதவியாக இருக்கும்.


ஒவ்வொரு உணவுக் கவளத்தையும் வாயில் போட்டு, 30 முறை மென்று விழுங்க வேண்டும். காபி, டீயாக இருந்தாலும் 30 முறை அசைபோட்டுதான் விழுங்க வேண்டும். சராசரி 30 கவளங்கள் சாப்பிட்டவுடன் முதல் ஏப்பம் வரும்,

தொடர்ந்து சாப்பிடும்போது மூன்றாவது ஏப்பம் வரை வரும். மூன்றாவது ஏப்பத்தில் வயிறு மந்தமாக உணர்ந்தால், இரண்டு ஏப்பத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு ஏப்பமே போதுமானதாக இருக்கும் அவரவர் அனுபவத்தில்தான் அதை முடிவு செய்ய முடியும். கவனம் முழுக்க சாப்பிடுவதில்தான் இருக்க வேண்டும். 
           
காலை, மதியம் சாப்பிட்ட பிறகு அரை மணி 

நேரம் கட்டாயம் நடக்கவும். நோய்கள் 

குணமாகவும், வராமலிருக்கவும், 

அரோமணியின் 11 இயற்கை விதிகளையும் 

தவறாது கடைப்பிடிக்கவும். 



ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.





                             ஹீலர் அரோமணி