Tuesday, September 23, 2014

போதனை-


D 222-TMS-போதனை             
       
கடவுளின் போதனை.
1.தனிமையில் உடகார்ந்து, நீண்டநேரம் யோசித்துக் கொண்டிருக்கும் நேரம் முழுவதும், கடவுள் வழிபாட்டில் இல்லாத நேரமாகும்.முழுவிழிப்புணர்வுடன் (எண்ணங்களை நீடிக்கவிடாமல்), செய்யும் வேலையில்/செயலில்  ஐக்கியமாகும் நேரம்தான், இறைவனை வழிபடும் நேரமாகும்.

2.  ஒருவர் ‘இக்கணத்தில் வாழுகின்ற (presently living)’   வாழ்க்கைதான் அவர் வாழுகின்ற வாழ்க்கையாகும். இக்கணத்திற்கு முந்திய நொடி கடந்த காலம். அந்த காலம் வாழ்ந்து முடிந்த காலம். இனி அதனைப் பின்னோக்கிப் பார்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. இக்கணத்திற்கு அடுத்து வரக்கூடிய ஒரு நொடிகூட அவருக்குச் சொந்தமில்லை. அந்த நொடியில் அவருக்கு எதுவும் நேரலாம். ‘இக்கணம்தான்’ அவர்,  வாழ்வதற்கு இறைவன் தரும் நேரமாகும்.

3.  வேலை செய்வதில் ‘இக்கணத்தில் வாழ்வது’ என்பது என்ன? 
‘இக்கணத்தில்’ ஒரு வேலையை செய்யும்பொழுது, முழு விழிப்புணர்வுடன், ஈடுபாட்டுடன், எண்ணங்களை நீடிக்கவிடாமல் செய்யவேண்டும். அந்த வேலை சிறப்பாக, நுணுக்கமாக அமைந்து விடும். மனதில் உள்ள மனவழுத்தங்கள் வெளியேறி மனம் தூய்மையாக இருக்கும்.   அவ்வாறு செய்வதுதான், இறைவன் நமக்கு வாழக்கொடுத்த நேரத்தை, நல்லமுறையில், முழுமையாக வாழ்வதாகும்.

4. ‘செயல்களில்’இக்கணத்தில் வாழ்வது’ என்பது என்ன? காலையில் எழுவது, கழிப்பறை செல்வது, குளிப்பது, உண்பது, நடப்பது, எழுதுவது, பிறர் பேச்சைக் கேட்பது, உட்காருவது, நிற்பது, படுத்திருப்பது, தாம்பத்ய உறவில் ஈடுபடுவது ஆகிய அனைத்தும் செயல்களே. 
‘இக்கணத்தில்’ ஒரு ‘செயலை’ செய்யும்பொழுது, முழு விழிப்புணர்வுடன், ஈடுபாட்டுடன், எண்ணங்களை நீடிக்கவிடாமல் செய்யவேண்டும். அந்த செயல் சிறப்பாக, நுணுக்கமாக அமைந்து விடும். மனதில் உள்ள மனவழுத்தங்கள் வெளியேறி மனம் தூய்மையாக இருக்கும்.  அவ்வாறு செய்வதுதான், இறைவன் நமக்கு வாழக்கொடுத்த நேரத்தை, நல்லமுறையில், முழுமையாக வாழ்வதாகும்.

5) கல்வி பெறுவது, அனைத்து மதத்தினரும், அவர்களின் மதங்களின் வழிபாடுகளினால் பெறும் மனப்பயிற்சிகளும் மனித நிலையை மேம்படுத்தும், கவன வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் வழிமுறைதான்; மனித நிலையிலிருந்து மாறி தெயவ நிலைக்குக் கொண்டு செல்வது.

6. கனவு காண்பது, திட்டமிடுவது, நீண்ட நேரம் யோசித்து முடிவெடுப்பது ஆகியவை மனித இனத்தை அழித்து கொண்டிருக்கிறது (Attachment).

7. இறை நிலைக்கு மாறிய பிறகு மனச்சாட்சியின் கட்டுப்பாட்டில் மனம் இயங்க ஆரம்பிக்கிறது.

8. கி.மு.காலத்து தமிழர்கள் கவன வாழ்க்கை (Attentive life) என்னும் விழிப்புணர்வு வாழ்க்கை (Attentive life) வாழ்ந்தார்கள். அவர்களின் மரபு அணுக்களின் தொடர்ச்சியால், இன்றைய தமிழர்களும் பண்பாட்டில் சிறந்தவர்களாக, வந்தவர்களை வாழவைத்து கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். வேறு மொழி பேசும் மாநிலத்தவரிடம் கடுமையான பிரச்சனைகள் ஏற்பட்டாலும், எந்த சூழ்நிலையிலும், அவர்களை துன்புறுத்துவதோ, துரத்துவதோ இல்லை. அந்த அளவுக்கு பொறுமை காட்டும் பண்பாளர்களாகவும், அவர்கள் மீது அன்பு காட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

9. கிமு காலம் முடிந்து, கி.பி. காலம் ஆரம்பித்த பிறகுதான் தமிழர்கள் இறை வாழ்க்கையிலிருந்து மாறி (கவன வாழ்க்கையிலிருந்து மாறி) மனித வாழ்க்கைக்கு தங்களை மாற்றி கொள்கிறார்கள். அதாவது ஈடன் தோட்டத்தை விட்டு வெளியேறிய ஆதாம் ஏவாளின் வாழ்க்கைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.

10.  “வாழ்க்கை ஆனந்தமயமானது என்று அடிக்கடி சொல்கிறீர்களே! அப்படியானால் நீங்கள் ஏன் துறவி ஆனீர்கள்?” என்று வெளிநாட்டு நிரூபர்கள் மகான் மகரிசி மகேஸ் யோகியை கேட்டபொழுது “நான் துறவியாகும் பொழுது வாழ்க்கை ஆனந்தமயமானது என்று எனக்குத் தெரிய வில்லையே!” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்திருக்கிறார்.

11. இறைவனின் குறிக்கோள், உயிரினம் சிறப்பாக மனிதயினம், இப்பூமியில் தோன்றி, அறவழியை அடிப்படையாக்கொண்டு தனது சந்ததியர்களை விட்டு செல்ல வேண்டும் என்பதுதான். ஆகவேதான் ’அவனே குழந்தையாக பிறக்கிறான்.

12.ஒருவரை பொய் சொல்லத் தூண்டினாலோ அல்லது அதற்குறிய சூழ்நிலையை ஏற்படுத்தினாலோ அச்செயல் பாவச் செயல்தான்.

13. காலணிக்கு (செருப்புக்கு), தவறாது வாரத்திற்கு ஒரு முறை பாலிஷ்  போடுவதற்கு கூட மனவளம் தேவை. அப்படியிருக்க, வாழ்க்கையின் மற்ற செயல்முறைகளுக்கு மனவளம் எவ்வளவு அவசியம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை!

14. ஒருவர் சிகரட் பிடிப்பதில்லை; குடிப்பதில்லை; எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அப்படியிருந்தும், அவருக்கு இல்லாத வியாதிகளே கிடையாது! ஆனால், மனதளவில் கெட்டு போயிருந்தால், உடல் நலம் கெடத்தானே செய்யும்!

15. பல்வேறு சமயங்களில், பல்வேறு நிகழ்வுகளினால் மனவழுத்தங்கள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.  இந்த அழுத்தங்கள் வெளியேற இடம் கொடுக்காமல், சதா எதையாவது நினைத்து கொண்டே யிருக்கிறோம். இதனால் மேலும் மனவழுத்தங்கள் சேருகின்றன. இது முற்றும்போதுதான் மனநோய் பற்றுகிறது.

16. இரட்டை மருத்துவத்தில் மனபயிற்சி செய்யும்போது மனவழுத்தம் வெளியேற இடமளிக்கபடுகிறது. அந்த இடத்தின் வழியே மனவழுத்தம் வெளியேறிவிடுகிறது. இதன் மூலம், இறைவனின் புதிய கருத்துக்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தோன்ற மனம் திறந்து வைக்கபடுகிறது.

17. மனவழுத்தங்களே இல்லாத வாழ்க்கைதான் இயல்பான வாழ்க்கையாகும்; அந்த வாழ்க்கையில்தான் முழு வெற்றியும் கிடைக்கும்; முழுமையாக அனுபவித்து வாழமுடியும்; அந்த வாழ்க்கைதான் கவனவாழ்க்கையாகும்.

18. தானாக வெளியேறும் எண்ணங்கள் மனவழுத்த எண்ணங்கள். கற்பனையில், மன அலைபாய்தலை நீடிக்கவிட்டு, அதனால் விளையும் எண்ணங்கள், மனவழுத்தங்களை தோற்றுவிக்கும் எண்ணங்களாகும். இரட்டை மருத்துவத்தின் மனபயிற்சி, மனவழுத்தங்கள் தானாக வெளியேற வழிவகுக்கிறது.

19. பிரார்த்தனை செய்யும்போதும், இறைவனைப் பற்றிய பாடல்களை பாடும்போதும் மனவழுத்தம் வெளியேற இடம் கொடுப்பதில்லை; ஆனால், மனவழுத்த எண்ணங்கள் சேருவதற்கும் இடம் கொடுப்பதில்லை. ஆழ்நிலை மருத்துவ மனபயிற்சியில்தான் (medicinal meditation) மனவழுத்த எண்ணங்கள் வெளியேற இடம் கொடுக்கிறோம்; அவைகள் சேருவதற்கும் இடம் கொடுப்பதில்லை.  

20. மனவழுத்தம் சேரவிடாமலும், சேர்ந்த மனவழுத்தத்தை வெளியேற்றுவதிலும்தான் முழு ஆன்மீகம் (100%) அடங்கியருக்கிறது. உதாரணமாக நெற்றியில் திருநீறு பூச 10 நொடி எடுத்துகொள்கிறோமென்றால், அந்த நேரத்தில் மனவழுத்தம் சேருவதில்லை; மனவழுத்தமும் வெளியேறுவதில்லை. அந்த நொடிகளில் ஆன்மீகத்தின் உயர்கொள்கையான, ‘எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் எவருக்கும் கெடுதல் செய்யாத’ ஆன்மீகத்தின் உயர்கொள்கையை கடைபிடிக்கிறீர்கள். ஆகவே, அந்த 10 நொடிகள்தான் உங்களின் ஆன்மீக நேரமாகும். அந்த நேர அளவுக்குதான் இறைவனின் அருள் கிடைக்கும். 1000-ல் 1/6 பகுதி என்ற அளவில்தான் இறைவனின் அருள் கிடைக்கும்.

21. அரை மணி நேர பிரார்த்தனைக்கு இறைவனின் அருள் எவ்வளவு கிடைக்கும்? அரை மணி நேர பிரார்த்தனைக்கு 1000-ல் 30 பகுதிகள் (parts) என்ற அளவில் இறைவனின் அருள் கிடைக்கும்.

22. 20 நிமிட தியானம் என்கின்ற மனபயிற்சிக்கு இறைவனின் அருள் எவ்வளவு கிடைக்கும்? 20 நிமிட  மனபயிற்சிக்கு 1000-ல் 20 பகுதிகள் (parts) என்ற அளவில் இறைவனின் அருள் கிடைக்கும்.

23. ‘இக்கண வாழ்க்கை’ வாழும் போதுதான் அதாவது “செய்யும் தொழிலே தெய்வம்” என்ற கோட்பாடின்படி வாழும்போதுதான் 1000-ல் 1000 பகுதிகள் என்ற அளவில்  (100%) இறைவனின் அருள் கிடைக்கும்.

24. உலகின் தாழ்ந்த, பிற்படுத்தபட்ட மற்றும் பிற்பட்ட சாதிகள், இனங்கள், ஆப்ரிக்க மக்கள் ஆகிய அனைத்து மக்களும் மனவளம் குன்றியவர்கள்; மனவளத்தை அதிகரிக்கும்படியான மனபயிற்சியை அவர்கள் அறிந்திருக்கவில்லை; அறிந்தவர்களும் அதனை இவர்களுக்கு பகிரவில்லை. இதை வைத்துத்தான் சுவாமி விவேகானந்தர் உயர்சாதியினரை சாடுகிறார்.

25. யோசித்து முடிவெடுத்தாலே, அது, நீ இறைவனுக்கு மேலானவன் என்று பொருள்படும். ’தான்’ என்ற அகங்காரத்திற்கு இடம் கொடுத்ததாகிவிடும். ஏனென்றால் நீ யோசித்து முடிவெடுக்க ஒன்றுமே இல்லை. உனக்கு எப்போது எது நடக்க வேண்டும், எந்த முடிவு உனக்கு நன்மையை தரும் என்பன போன்றவை, ஏற்கனவே நிகழ்ச்சிகளாக தொகுத்து வைக்கபட்டிருக்கின்றன. அதுபோலத்தான் நடக்கும். “எல்லாம் இறைவன் செயல்” என்ற இறை பழமொழியை மறக்க வேண்டாம்.     

Please visit website www.medicineliving.blogspot.com;        
இரா.அ..பரமன்.(அரோமணி) 9442035291


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: