Monday, September 22, 2014

உடலின் துவாரங்கள் (pores) அடைபட்டால் ஒவ்வாமை - 9-வது விதி

 உடலின் துவாரங்கள் (pores)  அடைபட்டால் ஒவ்வாமை (allergy) நோயை தோற்றுவிக்கும் என்று அரோமணியின் 9-வது விதி கூறுகிறது. 

  

உடலின் துவாரங்களை (pores) அடைப்பது, உடலுலில் ஒவ்வாமையும், தொடர்ந்து மற்ற நோய்களும் தோன்ற வழிவகுக்கும் என்று அரோமணியின் 9-வது விதி கூறுகிறது.1.உடலில் உள்ள துவாரங்கள்:  காதில் 2 துவாரங்கள், மூக்கில் 2 துவாரங்கள், கண்களில் 2 துவாரங்கள், வாயில் 1 துவாரம், தொப்புள் துவாரம் (belly button) 1, அபானத்துவாரம் (anus) 1, பெண்ணாயிருந்தால் பெண்ணுறுப்புத்துவாரம் 1, ஆணாயிருந்தால் ஆணுறுப்புப்துவாரம் 1 என உடலில் 10 துவாரங்களும் மற்றும் தோலில் வியர்வைத்துவாரங்களும் இருக்கின்றன. 


காது (Ear)

2. காதில் திரவம் (Fluid in the Ear) செவிக்குழாயில் அடைப்பி ருந்தால், அந்த அடைப்பு காதுத்திரவம் தொண்டைக்குப் பின்புறம் வடிவதை தடுத்து, காதுவழியே அனுப்பிவிடுகிறது. சிலவேளைகளில், இது தொற்று நோயாகவும், அல்லது அதைச் சுற்றியுள்ள அமைப்புகள் அதாவது அடினாய்டுகள் அல்லது சைனஸின்  திசு (adenoids or sinus tissue.,) ஆகியவை விரிவடைவதாலும் வரலாம். செவிக் குழாயைச் சுற்றியுள்ள திசுவால் அடைக்கும் பட்சத்தில், அந்த திசுவை நீக்கிவிடுவது அவசியம்.


 

3. அதிகப்படியான மெழுகு  (Excessive Ear Wax) அதிகப்படியான மெழுகுகூட நமது செவிக்குழாயின் (auditory tube) செயல்பாட்டினை வலிமை இழக்கச் செய்யும். இந்த மாதிரியான மெழுகு அடைப்பை காது மூக்கு தொண்டை மருத்துவர் மூலம் நீக்கிவிடலாம். மெழுகுக்குரிய சொட்டு மருந்தை காதில் ஊற்றி, அதனை இலகச் செய்து சிறப்பான கருவியின் மூலம் இலகிய மெழுகினை, மருத்துவர் வெளியே எடுத்து விடுவார்.


நெருக்கமாக அடைந்திருத்தல் (Congestion) அதிகப்படியான சளி நமது செவிக்குழாயில் கோந்து ஒட்டுவதுபோல, ஒட்டிக் கொள்ளும். இதனால் மத்திய காதுப்பகுதியில், காற்றழுத் தத்தை நிலைநிறுத்துவது கடினமாகிவிடுகிறது.


அடைந்திருப்பதற்கு (congestion) குளிர் வைரசும் (cold virus) ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் இது மூன்று வாரங்களுக்கு மேலாக நீடித்தால், ஒவ்வாமைக்கு எடுக்கவேண்டிய நடவடிக்கையை எடுக்கலாம்.


 


4. நான் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் (Tuticorin Thermal Power Station,) செயற்பொறியாளராக (Executive Engineer) வேலைபார்த்துக் கொண்டிருந்த பொழுது, ‘0’ மீட்டர் தளத்திற்கு (under ground building ) சென்று அங்கு ஒடிக்கொண்டிருக்கும் குளிர்படுத்தும் மோட்டார்களைப் (cooling motors) பார்வையிடச் செல்வது வழக்கம். 


ஓடிக்கொண்டிருக்கும் மோட்டார்களின் ஒலி மிக அதிகமாக இருக்கும். இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பணியாளர்களுக்கும், மேற்பார்வையிடும் அலுவலர்களுக்கும் சத்தம் குறைவாக கேட்பதற்காக காதடைப்பான்கள் (ear plugs), காதை அடைத்துக் கொள்ள கொடுக்கப்பட்டிருந்தது.


 


5. முதல் முறையாக நான் காதடைப்பானை 10 நாட்கள் பயன்படுத்தினேன். எனக்கு நன்றாக சளி பிடித்து மூக்கில் நீராக ஒழுக ஆரம்பித்தது. சில நாட்கள் வரை, திடீரென்று சளி பிடித்ததின் காரணம் தெரியாமல், குழப்பத்தில் மூழ்கிக் கவலைக் குள்ளானேன். கவலைக்குள்ளான ஓரிரு நாட்களில் இறைவன் மின்னல் எண்ணத்தில், காதடைப்பான்தான் காரணம் என்பதை வெளிப்படுத்தினான். உடனே காதடைப்பான் பயன்படுத்துவதை நிறுத்தினேன். நான் ஆச்சரியப்படும்படியாக, சளி இரண்டு நாட்களில் குறைந்து நீங்கிவிட்டது.  இதிலிருந்து காதின் காற்றுப் பாதையை அடைத்தால், ஒவ்வாமை நோய் (சளி, மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல்)தோன்றும்.


 


6. தற்காலத்தில் இசைப்பாடல்களை கேட்பதற்காக இளைங்கர்கள் இரண்டு காதிற்குள்ளும் மின்னிசைக்கருவியின் இரண்டு நுனிகளை காதிற்குள் சொருகி அடைத்து இசையைக் கேட்பதை நாம் பொதுவாக எங்கும் பார்க்கிறோம். இதேபோல சளி பிடிக்காமலிருப்பதற்காக குளிர்காலத்தில், ஈரக்காற்று காதிற்குள் செல்வதைத் தடுப்பதற்கு, இரண்டு காதுகளையும் அடைத்துக் கொள்ளும் தலைக் கவசத்தை அணிந்துகொள்கிறார்கள். இதனால் காதிற்குள் இயற்கையாக நடைபெறும் காற்றோட்டம் தடைபடுகிறது. இதனால் ஒவ்வாமை (allergy) நோயும் அதைத் தொடர்ந்து மற்ற நோய்களும் ஏற்பட அவர்களாகவே வழிவகுக்கிறார்கள்.


 


7. ஒவ்வாமை (allergy) என்பது என்ன?


உடல் தனக்கு விருப்பமில்லாததை நமக்குத் தெரிவிக்கும் அடையாளம்தான் ஒவ்வாமை. அது நோயாக வெளிப்படுத்திக் காட்டுகின்றது. நிறைய உதாரணங்களைக் கூறமுடியும்.


இந்த ஆண்டு (2013) ஜனவரி மாதம் ஆரம்பித்தவுடன், காலை எழுந்ததிலிருந்து, இலேசான தலைவலியும்,  இலேசான இளப்பும் (wheezing) இருந்தது. தயிர் சாப்பிட்டால் சளி அதிகமாக வர ஆரம்பித்தது. சளியை குறைக்க காலை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு துளி வேப்பெண்ணெயை அருந்தி விடுவேன். எனது மனைவி ஊருக்குப் போயிருந்ததால், ஒரு நாள் காலையில் குளிர்சாதன பெட்டியிலிருந்த ஜாமையும் ரொட்டியையும், கடையில் வாங்கி வந்த முருக்கையும், சத்து மாவு கலந்த பாலையும் பருகினேன். அன்று மாலையில் தும்மலாக ஆரம்பித்து, நன்றாக சளி பிடித்து கொண்டது. மூக்கிலிருந்து நீராக ஒழுகியது. மறுநாள் தொண்டை நன்றாக கட்டிக் கொண்டது.8. தும்மல், நீராக ஒழுகுதல், மூக்கடைப்பு சளி, இருமல், தலைவலி ஆகியவற்றிற்கு தொடர்ந்து மருத்துவ மனப்பயிற்சிகளை மாறி மாறி எடுத்து குணப்படுத்திக் கொண்டே வந்தாலும்  முழு குணம் கிடைக்கவில்லை. தயிர் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டேன். எண்ணையால் பொறித்த காய் கறிகளையும் நிறுத்திவிட்டேன். சென்ற ஆண்டு இதே மாததில் நல்ல உடல் நலத்துடன் அனைத்து உணவுகளையும் சாப்பிடமுடிந்த என்னால் இந்த ஆண்டு சாப்பிட முடியவில்லையே ஏன், என்ற குழப்பமும், வருத்தமும் இருந்தது. ஏனென்றால் தயிர் எனக்கு மிகவும் பிடிக்கும். தயிரை எடுத்துகொள்ளவே முடியாதோ! என்று பயந்தேன். அன்று சாப்பிட்ட உணவுதான் (ஜாம், ரொட்டி, கடை முருக்கு), விச உணவாக (food poisioning) மாறிவிட்டது என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.9. சூளை மாத கடைசி வாரத்தில் ஒரு நாள் மிகவும் விடியற்காலை நேரத்தில் தூக்கத்திலிருந்தபோது, திடீரென்று “போர்வையை மாற்று” என்று அவன் உத்தரவிட்டான். உடனே அரைத் தூக்கத்தில் எழுந்து கூடத்தில், துவைத்து, தேய்த்து, மடித்து வைத்திருந்த பருத்தியாலான போர்வைய எடுத்து வந்து போர்த்தி படுத்துக் கொண்டேன். நன்றாக தூங்கினேன். பட்டென்று என்னிடமுள்ள அனைத்து நோய்களும் போய்விட்டன. எனக்கு  “அவன் உத்தரவிட்டதை”  நினைக்கும்போதெல்லாம் மிகவும் வியப்பாக இருக்கும்; உடல் சிளிர்க்கும்.10. இந்த இடைக்காலத் தொந்தரவு ஏன் வந்தது. அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 31-12-2012 அன்று எனது மகள் பஞ்சு போன்ற எடை இல்லாத சிந்தடிக் பொருளால் செய்த போர்வை ஒன்றை போர்த்திக் கொள்ள எனக்குக் கொடுத்தது. அது எடை இல்லாததாலும், குளிர் தாக்காத கதகதப்பைக் கொடுத்ததாலும், பயணத்தின்போது எடுத்துச் செல்வதற்கு சுலபமாக இருந்ததாலும்  எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜனவரி மாதம், பெப்ரவரி மாதத்தில் 15 நாட்கள் மற்றும் மார்ச் மாதங்களில் விடியற்காலை வேளைகளில் மட்டும் குளிருக்கு பயன்படுத்தி வந்தேன். இந்த காலங்களில் நான் இலேசான தலைவலியையும், இளப்பையும் உண்ர்ந்தேன். சென்ற ஆண்டு இதே காலங்களில் நான் நல்ல உடல் நலத்துடனிருந்தேன். இந்த உணர்வுகள் கடுமையாக இல்லாததால், நான் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வெயில் காலத்தில் அதன் உபயோகம் இல்லை. சூன் மாதம் ஆரம்பித்தவுடன் குளிருக்கு அதைப் போர்த்திக் கொள்வேன். அந்தப் போர்வை சிந்தடிக் பொருளால் செய்யப்பட்டதால், உடல் அதனை ஏற்றுக்கொள்ளாமல், ஒவ்வாமையை ஏற்படுத்தி, மேலே கூறப்பட்ட நோய்களைக் கொடுத்து, அவன் ஆராய்ச்சி செய்து, முடிவை மக்களுக்கு தெரியப்படுத்த, எனக்கு வெளிப்படுத்தினான்.       

 


11. காற்றோட்டமில்லாத இடத்தில் நாமிருந்தால், அது தவறு என்று சுட்டிக் காட்டத்தான், சளிப்பிடித்தல், மூக்கில் நீராக ஒழுகுதல், தலைவலி முதலியனவற்றைத் தோன்றச் செய்கிறது. உடை, போர்வை ஆகியவை பருத்தி அல்லது பருத்தி கலந்த டெரிகாட்டன் (90:10) இல்லாமல், வேறு சிந்தடிக் பொருளால் தயாரிக்கப் பட்டிருந்தால், உடல் தனது ஒவ்வாமையை அரிப்பாகவோ அல்லது சளியாகவோ வெளிப்படுத்தலாம்.


 


12. தலைக்கு காற்றோட்டத்தைத் தடுக்குமாறு தலைகவசம் அணிந்தாலும் உடல் ஒவ்வாமையால் வெளிப்படுத்தும். தூசு, பெயிண்ட் வாசனை, சாம்புராணிப் புகை, உடல் நோய்வாய்ப்பட்டபிறகு சில உணவுப்பொருட்கள் ஒவ்வாமை பட்டியலில் வந்துவிடுகின்றன. சமைத்த உணவுப் பொருட்களையும், குடிநீரையும் வெகுநேரம் பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைத்திருக்கக் கூடாது. அவைகள் வேதியல் பொருட்களால் (chemical materials) செய்யப்பட்டவை. அவை நீருடன் வினைபுரிந்து ஒவ்வாமையை ஏற்படுத்தும். எவர்சில்வர், ஈயப் பாத்திரங்களை பயன்படுத்தலாம். சுருங்கச் சொன்னால், ஒவ்வாமைதான் அனைத்து நோய்களையும் தோற்றுவிக்கும் மூல நோயாகும். 


 


13. வலிமை வாய்ந்த டானிக் (tonic) மருந்துகளில்  தூய்மையான ஈரக் காற்றும் (cold air) ஒன்றாகும். வெப்பநிலை (temperature) மிகவும் குறைவாக இருந்து, நமது உடலை குளிருக்கு அதிக நேரம் உட்படுத்தி, அதனால், உடலின் ஒரு பகுதி உறையக் கூடிய நிலை (freeze) ஏற்பட்டால் ஒழிய, மற்றபடி ஈரக் காற்று எவருக்கும் கெடுதல் செய்கிறது என்பதை, நான் தனிப்பட்ட முறையில் நம்புவதற்கில்லை. .பல சமயங் களில், உடலை குளிருக்கு உட்படுத்துவதால், சளிப் பிடிப்பது (Colds),, வெளிப்படை யாகத் தெரிந்தாலும், உண்மையில் அந்த நேரத்தில் தூய்மை யில்லாத (impure condition) இரத்தம் தான் காரணமாகும். மற்றபடி, நல்ல உடல் நலத்தில் சுகம் காணும் ஒருவருக்கு ஈரக் காற்றினால் சளிப்பிடிக்கும் அபாயமில்லை. தூய்மையில்லாத காற்றுதான் (Impure air) கன்சம்ப்சன் (consumption) நோய்க்கு முக்கிய காரணமாகும். ஆகவே குளிர்காலத்தில் காதுகளை அடைப்பது அறவே கூடாது. மேலும் விபரம் அறிய 7-வது அரோமணி விதியை படிக்கவும். மேலே கூறப்பட்ட நோய்கள் 9 அரோமணி விதிகளையும் மீறுவதால்தான் வருகின்றன.


 


14. நாசித்துவாரங்கள் (Nostrils)


அழற்சி இரத்த நாளங்களால் (inflamed blood vessels),  மூக்கு அகவுறையின் சவ்வுகள் (membranes lining the nose)

வீங்கி மூக்கின் துவாரப் பாதைகளை அடைப்பதுதான் நாசி நெரிசல் (Nasal congestion) எனப்படுகிறது. இது நாசி அடைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. நாசி நெரிசல் காதுகளின் இயக்கம், கேட்பது, பேச்சு வளர்ச்சி ஆகியவற்றோடு தலையிடுகிறது. கணிசமான நாசி நெரிசல் தூக்கத்திற்கு தலையீடு செய்கிறது; குறட்டை விடுதல் (snoring), உண்டாகக் காரணமாகிறது; தூங்கும்போது ஏற்படும் மூச்சுத் திணறலோடு (sleep apnea)  தொடர்புடையது. குழந்தைகளுக்குள்ள, விரிவடைந்த அடினாய்டுவினால் உண்டான  நாசி நெரிசல்  -போதுமான ஆக்சிஜன் அளவுக் குறைவுடன் கூடிய, நாள்ப்பட்ட தூக்கக் குறைவினால் மூச்சுத்திணரல் (chronic sleep apnea with insufficient oxygen levels),  உயிர்வளி பற்றாக்குறை ( hypoxia),ஆகியவற்றைத் தோற்றுவிக்கிறது. அதோடு வலது பக்க இருதய செயலிழத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த குறைபாடு, அடினாய்டு மற்றும் டான்சில் (adenoids and tonsils). ஆகியவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டு சரிசெய்யப்படுகிறது.  நாசி நெரிசலானது,  முகம், தலை ஆகியவற்றில் இலேசான வலியும் மற்றும் வசதிக் குறைவும் (discomfort) ஏற்படக் காரணமாகிறது.15. எனக்கு மூக்கினுள் வலது பக்க துவாரப் பாதையில்,  சதை வளர்ந்து துவாரத்தை அடைத்துக் கொண்டது. இந்த அடைப்பானது, மூக்கடைப்பு, சளி, மூக்கிலிருந்து நீராக ஒழுகுதல், ஒற்றைத் தலைவலி, இளப்பு முதலிய நோய்களைத் தோற்றுவித்தது. ஒரு நாளில் அதிக நேரம் வாய் வழியாகதான் என்னுடைய சுவாசம் இருக்கும். இந்நோய்களின் சிதைப்பினால், நான் அடைந்த துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 16. மார்ச், 1979 ல் இந்த சதை (nasal polyp) ஒரு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதோடு சதை வளர்ச்சியின் கதையை முடித்துவிட்டோம் என்று மகிழ்ச்சியில் திளைத்தேன். ஆனால் நான் வேதனைப்படும்படியாக, 3 ஆண்டுகளில் மீண்டும் சதை மூக்கினுள் வளர்ந்துவிட்டது.     ஆகையால், பிப்ரவரி, 1982-ல் இரண்டாவது தடவையாக அறுவை சிகிச்சையின் மூலம் சதை (nasal polyp)  அகற்றப்பட்டது. செப்டம்பர், 1984-ல் சென்னையில் மகரிசி தோட்டத்தில் ஆழ்நிலை தியானம் (Transcetendal Meditation) கற்று தவறாது பயிற்சி செய்து வந்தேன். இதனால் சதை வளர்ச்சியின் வேகம் குறைந்து, முழு வளர்ச்சி அடைய 10 ஆண்டுகள் பிடித்தது. நான் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் செயற்பொறியாளராக சேர்ந்து 2 மாதங்கள் கழித்து மே மாதம் 1992-ல் மூன்றாவது தடவையாக மூக்கினுள் வளர்ந்த சதை அப்புறப்படுத்தப் பட்டது. அங்குள்ள மாசின் அடர்த்தியினால், விரைவில் மூக்குத் துவாரத்தில் சதை வளர்ச்சி துரிதப்படுத்தப் பட்டு மார்ச், 1993-ல் 4-வது முறையாக அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.17. ENT துறையின் தலைமை மருத்துவரிடம் “இந்த சதை வளர்வதற்கு என்ன காரணம்? மீண்டும் வளரவிடாமல் தடுப்பது எப்படி, ஐயா?” என்று மிகவும் வருத்தத்துடன் கேட்டேன்.  அதற்கு அவர் “சதை வளர்வதற்குரிய சில மையப்புள்ளிகள் இருக்கின்றன. அவைகள் காலியாகும்வரை சதை வளர்ச்சி இருக்கத்தான் செய்யும்!” என்றார். அவர் சொன்னதைக் கேட்டவுடன், மிகவும் நொந்து மனவேதனைக்குள்ளானேன். என்னுடைய வேதனையைக் கண்ட மற்றொரு மூத்த மருத்துவர்,  “சளிபிடிக்காமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று அறிவுறுத்தினார்.18. அரோமணியின் முதல் விதியைக் கண்டுபிடித்து வயிற்றின் அளவறிந்து சாப்பிட்ட பிறகு, தலைமை மருத்துவரின் கருத்து தவறானது என்பது தெரியவந்தது. மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு முதல் நாள், ஒரு இளம் மருத்துவர் எனது மூக்குத் துவாரங்களைச் சொதித்து அவற்றில் ஒட்டிக் கொண்டிருப்பவைகளையெல்லாம் நீக்கிய பிறகு,  “சளிபிடிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “உங்கள் மூக்கு இலேசாக வளைந்திருக்கிறது. அதை நிமித்தி சரி செய்தாலொழிய, சளிப் பிடிப்பதை தவிர்க்க முடியாது” என்றார். தலைமை மருத்துவர் நோயாளிகளை பார்வையிட்டுகொண்டே வந்து என்னிடம் வந்தபொழுது, “சதையை அப்புறப்படுத்தும்பொழுதே, வளைந்த மூக்கையும் சரி செய்திருக்கலாமே, ஐயா” என்று வேதனையுடன் கேட்டேன். அதற்கு அவர், “நீஙகள் மிகவும் பலவீனமாக இருந்ததால், அந்த அறுவை சிகிச்சையை செய்யவில்லை!” என்றார். சளிப்பிடித்து அடிக்கடி, மூக்குச் சிந்துபோது மூக்கை வளைத்து அழுத்தி சளியை வெளியேற்றியிருக்கிறேன். இப்படியே நீண்டகாலம் தொடர்ந்ததால், மூக்கு வளைந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.19. இறைவனின் அருளால், 04-12-1993 அன்று சாப்பிடும்போது வயிற்றின் அளவறிந்து சாப்பிடுவதற்குறிய அரோமணி தொழிற் நுட்பத்தை (Aromani Technique) கண்டுபிடித்தேன். வயிற்றின் அளவறிந்து சாப்பிட்டவுடன், மூக்கினுள் வளரும் சதையின் வளர்ச்சி மிகவும் தாமதமாக ஏற்பட்டுக் கொண்டிருந்தது..  காரணம் மூக்கு வளைவு இருந்ததால், குளிர்காலத்திலும், மழைகாலத்திலும் சளிப்பிடிப்பதும், மூக்கில் நீராக ஒழுகுதல், ஒற்றை தலைவலி, இளப்பு ஆகியவை தொடர்ந்தன. இதற்கு நான் மருந்து எடுத்துக் கொண்டேன். ஆனால் மூக்கடைப்பு இல்லை.20. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், நாம் உண்ணும் வெவ்வேறு வெப்பநிலை (different temperature) உணவுகளும், பழங்கள் போன்ற இயற்கை உணவுகள் மற்றும் தாகம் எடுக்காமல் குடிக்கும் தண்ணீரும் நோய்களை தோற்றுவிக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தேன். அதிலிருந்து, சூடான உணவுகளை (50 டிகிரி செண்டிகிரேடு) ஆறவைத்தும் (37 டிகிரி செண்டிகிரேடு), பழங்களை இட்லி பானையில் ஆவியில் வேகவைத்தும் சாப்பிட்டேன்; தாகம் எடுத்தபிறகுதான் நன்றாக கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை அருந்தினேன்.21. இந்த கண்டுபிடிப்புகளெல்லாம் 12-12-2000 க்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டன. அந்த தேதியில்தான், மனதின் மூலமாக நோய்களைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தைக் (Medicine of Medicinal Meditation-MMM) கணடுபிடித்தேன்.22. இரட்டை மருத்துவத்தில் முதல் மருத்துவம் வாழும் தாய் மருத்துவம் (Medicine of Living Mother-MLM). இந்த மருத்துவம் உடல் சிகிச்சையை கவனித்துக் கொள்கிறது. நோய்களின் தீவிரம் வெகுவாகக் குறைந்திருந்தாலும் அவைகளிலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. ஆகையால் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டுதானிருந்தேன்.23. இரண்டாவது மருத்துவத்தை அதாவது மருத்துவ மனப்பயிற்சி மருத்துவத்தை  (மமம) (Medicine of Medicinal Meditation), கணடுபிடிப்பதற்கு முன்னால், சேராத உணவுகளான எண்ணெய் பலகாரங்கள், நெய், தயிர், பிரியாணி முதலியனவற்றில் ஏதாவது ஒன்றினை சேர்த்தாலும், உடல் நலம் குன்றி, சளி, மூக்கில் நீராக ஒழுகுதல், தலைவலி, இளப்பு ஆகியவற்றிற்கு அதிக அளவு மாத்திரைகளும் வலிநிவாரண மாத்திரைகளும் (antibiotic and pain killer tablets) எடுத்துக் கொள்வேன். மருந்து மாத்திரைகளைத் தவிர்ப்பதற்காகவே, சேராத உணவுப் பதார்த்தங்களைச் சாப்பிடுவதை தவிர்த்து வந்தேன். ஆனால், மமம கண்டுபிடித்து நடைமுறைக்குக் கொண்டு வந்தபிறகு, சேராத உணவுகளையும் சாப்பிட துணிச்சல் வந்தது. காரணம், அவ்வுணவுகளால் சளிப்பிடித்தால், சளிக்குரிய மருத்துவ மனப்பயிற்சியை (மம) செய்து குணப்படுத்தி  விடுவேன். தலைவலி வந்தால், அதற்குரிய மம வைச் செய்து குணப்படுத்திவிடுவேன். இளப்பு வந்தால் அதற்குரிய மம வைச் செய்து குணப்படுத்திவிடுவேன். சில சமயம் சளிக்கும், இளப்புக்கும் சேர்ந்து இரண்டு மனப்பயிற்சிகளை ஒரே நேரத்தில் செய்து இரண்டையும் குணப்படுத்துவேன். இவ்வாறு மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தாமல், பக்கவிளைவுகள் இல்லாமல் நோய்களைக் குணப்படுத்தியதால், சேராத உணவுகளை பயப்படாமல் சாப்பிட ஆரம்பித்தேன்.          24. நான் இயற்கை உணவை சாப்பிட்டு ஆராய்ச்சி செய்ததில், ஹெர்னியா (hernia) நோயால் பாதிக்கப் பட்டிருப்பது எனக்கு 10-03-1997 அன்றுதான் தெரியவந்தது. குடல் தனது இடத்தை விட்டு இறங்கி விடுவதைத்தான் குடல் இறக்கம் என்கிறோம். சில நாட்களில் இரவில் தூங்கும்போது, அது மேலே தனது முதலிடத்திற்கு சென்று, காலையில் கீழே மெதுவாக கீழிறங்கி வந்துவிடும். அப்படி வரும்போது கடுமையான வலி ஏற்படும். அந்த நாட்களில், வலிக்குறிய மருத்துவ மனப்பயிற்சியை (medicinal meditation for pain) செய்யும்போது, 20 முதல் 30 நிமிடங்களுக்குள் வலி விட்டு விடும். இதேபோல 3 மாதங்கள் மம வை செய்து ஹெர்னியாவிலிருந்து  குணம் பெற்றேன்.  அதற்குப்பிறகு 15 ஆண்டுகளாக இன்றுவரை அதன் வலி இல்லை. ஆகவே நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை.25. கண்கள் (Eyes)

கிளகோமா (Glaucoma) என்பது கண்ணில் ஏற்படும் நோய். இதில் பார்வை நரம்பு ஒரு சீரான முறையில் சேதமடைந்திருக்கும். இதற்கு சிகிச்சை எடுக்காமல் விட்டுவிட்டால், பாதிக்கப்பட்ட கண்(கள்) நிரந்தரமாகப் பழுதாகி, பார்வை தெரியாத நிலைக்குக் (blindness) கொண்டு சென்றுவிடும். இருதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுக்குக் காரணமாகி விடுகின்றன; உயர் இரத்த அழுத்தத்திற்கு (higher BP) சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், நமது கண்பார்வையையும் பாதித்து, கண்நோய் வந்துவிடும். இரத்த அழுத்தம் (Hypertension), கண்ணுக்குப் பின்புறமுள்ள பரப்பில் அதாவது ரெடினாவில் (retina) உள்ள இரத்த நாளங்களையும் பழுதடையச் செய்து விடும்.26. ஆகவே இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை எடுக்கா விட்டால், பழுது அதிகமாகி மோசமான நிலைக்குப் போய்விடும். ஓய்விலிருக்கும்போது, நலமான இரத்த அழுத்தம் 100 முதல் 140 mmHg (top reading) and 60-90 mmHg (bottom reading). 140/90 mmHg யிலேயே நீடித்து நிலைத்திருந்தாலும் அல்லது அதற்கு அதிகமாக இருந்தாலும் உயர் இரத்த அழுத்தம் (High blood pressure) இருப்பதாக கூறுகிறோம். கண்புரை (cataract) லென்ஸ் கேப்சுலில் மேகத்தைப் போல ஒரு திரை சிறுகச் சிறுக படர்ந்து இலேசாக சிறிது சிறிதாக மறைத்து முழுசாக வளர்ந்து முழு ஒளி புகா நிலையை உருவாக்கிறது. பொதுவாக கண்புரைகளுக்கு, சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், கண்குருடு (blinding) ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வழக்கமாக இரண்டு கண்களையும் தான் பாதிக்கும். ஆனால் பலவீனமான கண் மற்ற கண்ணைக்காட்டிலும் வேகமாகப் பாதிப்படையும்.27. கண்களுக்கும் மூளைக்கும் இரத்தம் அளிக்கும் முக்கியமான கரோடிட் தமனிகள் (carotid arteries)

நமது கழுத்தில் அமைந்துள்ளன. கரொடிட் தமனி வழியாக செல்லும் இரத்தம் குறைந்தாலோ அல்லது தடைபட்டாலோ கண்களும் மூளையும் போதுமான இரத்தத்தை பெறமுடியாது. இதனால் மூளையின் செயல்பாடும், பார்வையும் பெரிதும் பாதிக்கப்படும்.28. வாய் (Mouth) மற்றும் தொண்டை (Throat)

உணவு விழுங்குவதில் சிரமம் (dysphagia) ஏன் ஏற்படுகிறது? உணவையும் திரவங்களையும் நமது வாயின் பின்புறத்திலிருந்து நமது வயிற்றுக்கு நகர்த்தக்கூடிய, தொண்டையில் உள்ள சதை குழாயின் (muscular tube)  ஒரு குறைபாட்டினால்தான்   உணவை விழுங்குவதில்  சிரமம் ஏற்படுகிறது.   மூளை அல்லது நரம்பு மண்டலத்தில் கோளாறுகள் இருந்தால், உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படும் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை உணவை விழுங்குவதில் சிரமம் இருந்தால் தவறில்லை. பயப்பட வேண்டியதில்லை. தொடர்ந்து இந்த இடர்பாடு இருந்தால் கட்டாயம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏதோ ஒன்று நமது தொண்டையை அடைத்துக் கொண்டிருக்கும். இது தவறாது வயிற்றிலிருந்து அமிலம் (stomach acid) நமது தொண்டைக்கு வருவதால்தான் ஏற்படுகிறது. இது, தொண்டையில் அல்சர்களை (ulcers) தோற்றுவிக்க காரணமாகிறது. இவைகள் வடுக்கள் (scars) தோன்றுவதற்கு காரணமாகி விடுகிறது. இந்த வடுக்கள் நமது உணவுக் குழாயை (esophagus) குறுகலாக்கிவிடும். இந்த நோய்க்கு கெர்டு (GERD) என்று பெயர். இது உணவு அல்லது காற்றில் உள்ள பொருட்கள் உண்டாக்கும் ஒவ்வாமை எதிர்ப்பும் (allergic reactionக்காரணமாகும்.29. தொண்டையில் வளரும் கட்டிகள் புற்றுக்களாகவும் (cancerous)  அல்லது வெறும் கட்டிகளாகவும் இருக்கலாம். தொண்டைக்கு வெளியில் உள்ள சதைகள் (masses) தொண்டைக்கு அழுத்தம் கொடுக்கலாம். உலர்ந்த வாய் (dry mouth) உணவு விழுங்குவதில் உள்ள சிரமத்தை (dysphagia disease) அதிகப்படுத்துகிறது. ஏனென்றால், நமது வாயிலிருந்து உணவை தொண்டை வழியாக நகர்த்த உதவுவதற்கு வேண்டிய உமிழ்நீர் (saliva) போதுமானதாக இல்லாமலிருக்கலாம். மருந்துகளாலோ அல்லது வேறொரு உடல் நலக் கோளாறாகவோ இருக்கலாம்.30. சிகரட் பிடிப்பதால், அதன் புகை நுரையீரல், தொண்டை, வாய், மூக்கு முதலியனவற்றில் உள்ள காலியிடங்கள் அடைபடுகின்றன. இதனால் புற்று நோய்கள் உண்டாகின்றன. மூக்குப் பொடி போடுவது, புகையிலை போடுவதும் மூக்கு, வாய் ஆகியவற்றின் காலியிடங்கள் அடைபடுகின்றன. இதனால் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.31. தொப்புள் (Bellybutton)

தொப்புளிலிருந்து திரவம் ஒழுகினால், ஒரு வகை தொற்று நோய்தான் காரணம். அந்த நோய் தொப்புளின் ஆழத்திலிருந்து உருவாகிறது. அந்த திரவம் சிறிய அளவிலும், நாற்றத்துடனும் இருக்கும். ஒழுகும் திரவம் அதிக அளவிலிருந்தால், சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.  32. குரோன் நோய் (Crohn's disease)  என்பது என்ன?

கிரோன் நோய் இருந்தால் குடல் (bowel) மீது வீக்க தடிப்புகள் (patches of inflammation) இருக்கும். இந்த வீக்கம் தீவிரமாகவும் ஆகலாம். குடலில் அடைப்புப் போன்ற திவிர சிக்கல்களை உண்டாக்கலாம். குரோனுடைய நோயை குணப்படுத்துவது கடினம்; நீண்ட காலம் நீடித்திருக்கும். இருந்தாலும் நோய்க்குரிய அடையாளங்கள் வரும் போகும். அடையாளங்களே வராத நேரங்களும் உண்டு.

 


33.அபானம் (Anus)


piles


அபானத்துக்குள் இருப்பது ,உள்மூலம், அபானத்துக்கு வெளியிலிருப்பது வெளிமூலம். பொதுவாக உள்மூலம் மலத்துவாரத்துக்கு மேலே உள்ளுக்குள் 2 முதல் 4 செமீ ஆழத்திலிருக்கும். வெளிமூலம் மலத்துவாரத்திற்கு வெளி ஓரத்திலிருக்கும். பொதுவாக உள்மூலம்தான் அதிகமாக காணப்படுகிறது.34. ஆணுறுப்பு (Penis)

சிறுநீர் புறவழியின் வெளியே உள்ள தடை (Extrinsic Obstruction of the Ureter)


சிறுநீர் புறவழி (ureter) என்பது ஒரு குழாயாகும். இது  தடித்த சுவரைக்கொண்டது; இது சிறுநீரை (urine) சிறுநீரகத்திலிருந்து (kidney)   சிறுநீர்ப்பைக்கு (bladder) மாற்றுகிறது;  10 அங்குலம் நீளமுள்ளது. இதன் மேல் பாதி அடிவயிற்றிலும் (abdomen), கீழ்ப் பாதி இடுப்புப் பகுதியிலும் (pelvic region) அமைந்திருக்கிறது. இந்த குழாய் (ureter)  அடைபட்டால் என்ன நடக்கும்?

உறுப்புகளும் (organs) , நோய்களும் சேர்ந்து அழுத்துவதால், சிறுநீர் புறவழிக் குழாயிற்குள் {சிபுவகு (ureter)} அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பு சிபுவகு (ureter) வழியாக வரும் சிறுநீரக ஓட்டத்தை தடுத்து, சிறுநீரகத்தில் (kidney) அளவுக்கு அதிகமாக சிறுநீர் (urine) சேரும் நிலை ஏற்படுகிறது. இதனால் சிறுநீரகம் (kidney) சேதமடைகிறது.35. எப்படி ஆண்குறி விறைப்புத்தன்மையில் தோல்வியடைகிறது? (How the erection system of penis fails)

ஆண்மையின்மைக்கு (impotence) உடல் மற்றும் மன ரீதியான குறைபாடுகள்தான் காரணமாகும். உதாரணமாக, ஆணுறுப்பில் உள்ள பஞ்சுபோன்ற திசுக்களுக்குச் செல்லும் நரம்புகள், நீரிழிவு நோயால் (diabetes) சேதமடைவதால் ஆண்மையின்மை   வரலாம்; தமனி இரத்தக் குழாய்களின் (arteries) தடைகள் மற்றும் பல மருந்துகள் ஆகியவற்றின் தலையீடுகள் காரணமாக  ஆணுறுப்புக்குச் சேல்லும் இரத்த ஓட்டம் பலவீனமடையும் அல்லது குறையும் (impaired). கவனத்தை சிதற விட்டாலும் ஆணுறுப்பு விறைக்காது. 

 


36. உங்களுடைய ஆணுறுப்பு எவ்வாறு வேலை செய்கிறது? (How your penis works)


ஆணுறுப்பு முக்கியமாக பஞ்சு போன்ற திசு மற்றும் இரத்த நாளங்களானது (spongy tissue and blood vessels.). சிறுநீரையும் (urine), விந்துவையும் (semen) எடுத்துச் செல்லும் குழாய் மத்தியில் அமைந்துள்ளது. அது  உரித்ரா (urethra) என்றழைக்கப்படுகிறது. பஞ்சு பத்திகளில் (spongy columns ) இரத்தம் நிறைந்தவுடன், விறைப்புப் (erection) பெற்று வலிமையுடனிருக்கும் (get stiff) .    

 


37. எப்படி ஆணுறுப்பு விறைக்கிறது? (How you get an erection)


ஆணுறுப்பில் உள்ள  நரம்புகள் சில வேதியல் பொருட்களை (chemicals) வெளியிடுகிறது. அந்த பொருட்கள் அதிகபடியான இரத்தத்தை arteries என்றழைக்கப்படும் இரத்த நாளங்கள் மூலம் ஆணுறுப்புக்கு அனுப்பிவிடுகின்றன. அதனால் ஆணுறுப்பு விறைப்பு பெறுகிறது.


 


38. அறிவியல் பூர்வமாக (Scientifically) மேலே கூறப்பட்ட உண்மை சரியானது. ஆனால் ஆன்மீக ரீதியாக (spirituality) சரியல்ல. அதிகபடியான இரத்தம் தானாகவே (automatically ) ஆணுறுப்புக்கு போகாது. எப்படி என்பதை கீழே விளக்கியிருக்கிறேன்.


நமது உடலில் அதிகப்படியான ஒதுக்கப்பட்ட சிறப்பு இரத்தம்-அஒசிஇ {Special Reserved Extra Blood (SREB)} இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது (stored). இந்த இரத்தம்,  ஒதுக்கப்பட்ட சிறப்பு ஆயுதப் படையைப் {Special Armed Reserve Police (SARP)} போன்று, நமது உடலில் வேலை செய்கிறது. பலாத்காரம் வெடிக்கும்பொழுது, இந்த சிறப்பு ஆயுதப்படை   மேலிடத்து உத்தரவின் பேரில், அங்கு அனுப்பபட்டு, மக்களுக்கும், அவர்களது உடமைகளுக்கும், அரசின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படா வண்ணம் பலாத்காரத்தை அடக்கிப் பாதுகாக்கிறது.    அந்தமாதிரி நேரங்களில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் உள்ளூர் காவல்துறை தொந்தரவு செய்யப்படமாட்டாது.39. மேற்கூறியுள்ளதை போலத்தான் அஒசிஇ (SREB) நமது உடல் மன நலத்தைப் பாதுகாக்கிறது. நாம் வேலை செய்யும்பொழுதெல்லாம், அஒசிஇ (SREB) உடலின் வேலை செய்யக்கூடிய உறுப்புகளுக்கு (organs) விரைந்து சென்று, தன்னுடன் கொண்டு வந்துள்ள ஆற்றலை உறுப்புகளுக்கு (organs) மாற்றுகிறது. இதன்மூலம் வேலை செய்யும் உறுப்புகள் (organs) உராய்வினால் சேதமாகாமல் தடுக்கப்பட்டு நோய்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால்  அஒசிஇ (SREB) தானாக அந்த உறுப்புகளுக்குச் செல்வதில்லை; செல்லமுடியாது. அது, எப்படி சிறப்பு ஒதுக்கப்பட்ட ஆயுதப் படை(SARP) மேலதிகாரியின் உத்தரவுப்படி செயல்படுகிறதொ அதேபோல, மனதின் உத்தரவின் பேரில்தான், வேலை செய்யும்; உறுப்புகளுக்குச் செல்லமுடியும். (by the order of the mind like the movement of the special police by an order of the appropriate authority). பணியாள் அல்லது தொழிலாளி அல்லது அலுவலர், மனதினை அலைபாயவிடாமல் அப்போதைக்கப்போது தடுத்து நிறுத்தி, முழு ஈடுபாட்டுடன்  பணியைச் செய்தால்தான், அஒசிஇ (SREB) பணியில் ஈடுபடும் உறுப்புகளுக்குச் செல்லும்.  40. மேற்கூறியுள்ளதை போலத்தான், நீங்கள் உங்களுடைய கவனத்தை உடலுறவு செயல்களில் (sexual actions) முழுவதுவும் செலுத்தும்போதுதான், அஒசிஇ (SREB) விறைப்புக்காக ஆணுறுப்புக்குச் செல்கிறது. இவ்வாறு எல்லாம் வல்லவன் மனிதன், எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் பிறருக்கு கெடுதல் செய்யாமலிருக்க, நமது உடலின் இயக்கத்திலேயே ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறான். இந்த அமைப்பு அறநெறியை (ethical condition) நிலை நாட்டி, நல்ல உடல்மன நலத்தை மானிட இனத்திற்கு அளிக்கிறது.41. மன நலத்தை எப்படி அளிக்கிறது என்பதை இப்பொழுது பார்ப்போம். மனம், அஒசிஇரத்தத்தை (SREB) ஐ ஆணுறுப்புக்கு அனுப்பும் அதே வேளையில், அலைபாய்தலின் மூலம் மன அழுத்த எண்ணங்களை (stressed thoughts) தன்னிடமிருந்து வெளியேற்றி மனநலத்தை அளிக்கிறது. இதை உடலுறவுக்கு மறுநாள் மகிழ்ச்சியாகவும்,  நோய்களின் தீவிரம் குறைந்திருப்பதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.42. நீங்கள், உங்கள் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது, உங்களுடைய எண்ணங்கள் வேறு பெண்ணைப் பற்றியதாக இருந்தால், மனமானது, அஒசிஇரத்தத்தை (SREB), உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் உறுப்புகளுக்கு குறிப்பாக ஆணுறுப்புக்கு (penis) அனுப்பாமல், மூளைக்குச் அனுப்பிவிடுகிறது. ஏனென்றால், அப்பொழுது மூளைதான் வேலை செய்கிறது (வேறு பெண்ணைப் பற்றி நினைப்பதால்). இரத்தம் ஆணுறுப்புக்குச் (penis) செல்லாததால், அதற்கு விறைப்பு (erection) ஏற்படாது. இப்படி தொடர்ந்து நடக்கும் போது ஆண்மையின்மை (impotence) ஏற்படும். மேலும், அஒசிஇ (SREB) செல்லாத மற்ற கைகளும் கால்களும் மற்றும் உடல்முழுக்கவும் உராய்வினால், சேதமாகி நோய்களாக பரிணமளிக்கும்.     

 


43. ஹார்மோன்களின் அளவு (Levels of hormones)


போதுமான விறைப்பு ஹார்மோன் (hormone,)  இல்லாவிட்டாலும், விறைப்பு கோளாறுகள் வரலாம். அதிக அளவு புரோலாக்டின் (prolactin)_ஹார்மோன் இருந்தாலும் விறைப்புக் கோளாறுகள் வரலாம்.


கருப்பையில் இருந்து பிறப்புறுப்புக்கு வரும் பாதை44,  (vagina)

இடுப்பெலும்பு அழற்சி நோய் {Pelvic inflammatory disease-(PID)} உடலுறவு கொள்வதால் உண்டாகும் தொற்று நோய்தான் (infection) இடுப்பெலும்பு அழற்சி நோயாகும் (இஅநோ). முதலில் இந்த நோய் பிறப்புறுப்பில் (vagina) ஆரம்பித்து இனப்பெருக்க உறுப்புகள் (reproductive organs) அனைத்திற்கும் பரவுகிறது.45. கருமுட்டை குழாய்கள் (fallopian tubes) முட்டைகளை கருமுட்டைப் பைகளிலிருந்து (ovaries) கருப்பைக்கு (womb) எடுத்துசெல்கின்றன. இந்த குழாய்களில் அழற்சி (inflame) ஏற்பட்டால்,  வடு திசு (scar tissue) அமைந்து, அவற்றில் அடைப்பு ஏற்படலாம். இது, கருவுறுவு பெறுவதை கடினமாக்கலாம். அப்படியும் மீறி கருத்தறித்தால்,  குழந்தை கருப்பையில் வளருவதற்குப் பதில், கருமுட்டை குழாய்களின் (fallopian tubes) பகுதியிலேயே  வளர ஆரம்பிக்கலாம். இந்த நிலை ஆபத்தை விளைவிக்கலாம்.46. அறிகுறிகள் என்ன?

அடிவயிற்றின் (abdomen) கீழ்ப்பகுதியில் வலி இருக்கும்; உடலுறவின்போது வலி; மாதவிலக்குக்கிடையில் அல்லது உடலுறவுக்குப் பிறகு இரத்தம் வழிதல் (bleeding); யோனியிலிருந்து (vagina) கெட்ட நாற்றத்துடன் கூடிய (திரவ) வெளியேற்றம் (discharge). சில பெண்கள் அடிப் பின்பகுதியில் குளிர்ச்சி அல்லது வலியை உணரலாம்; உடல் நலக் குறைவை உணரலாம்; அடிக்கடி சிறுநீர் வரலாம்; சிறுநீர் வரும்போது வலியை உணரலாம்.

மாதவிலக்கின்போதோ அல்லது மாதவிலக்கு வருவதற்கு முன்பு மத்தியிலோ (middle of  menstrual cycle) வலி அதிகமாக இருக்கலாம்; மாதவிலக்கு மொத்தமாக வராமல் போகலாம்.

 


47. எப்படி பிறப்புறுப்பு புற்று நோய் கண்டறியபடுகிறது? (How is vaginal cancer diagnosed?)


10 பெண்களில் 8 பேருக்கு invasive vaginal cancer இருக்கிறது. அதனுடைய  அறிகுறிகள்:


A.     பிறப்புறுப்பில் அளவுக்கு அதிகப்படியான (Abnormal) இரத்த ஒழுகல் (discharge) (எப்பொழுதும் உடலுறவுக்குப் பிறகு) அளவுக்கு அதிகபடியான பிறப்புறுப்பில் வெளியேற்றம் (vaginal discharge)

B.     ஒரு சதை (mass) இருப்பதை உணரமுடியும்

C.     உடலுறவின் (intercourse) போது  வலி

பிறப்புறுப்பு புற்றுநோய் (vaginal cancer) முற்றிவிட்டதின் அறிகுறிகள்:

A.     சிறுநீர் கழிக்கும் போது வலி;

B.     மலச்சிக்கல் (constipation),

C.     தொடர்ந்து இடுப்பில் (pelvis). வலி.

மேற்குறிப்பிட்ட வலிகள் இருந்தால் புற்று நோயாகத்தான் இருக்கும் என்றும் எண்ணிவிடக் கூடாது. ஆனால் மேலே கூறப்பட்ட அறிகுறிகள் தெரிந்தவுடன், காரணம் கண்டறிந்து சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. அப்படிச் செய்யும்போது, சிகிச்சையும் உடனே பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.

 


48. யோனியில் உள்ள வீக்கங்கள் (Bumps on the Vagina)


பிறப்புறுப்பு பகுதியில் (genital area) வில் ஒரு வீக்கத்தை (bump) நீங்கள் உணரும்போது, தொற்று நோயாக (infection) இருக்குமோ, பால்வினை நோய்களாக (sexually transmitted diseases) இருக்குமோ என்று பலவாறு எண்ணி அச்சம் கொள்வீர்கள்.  
49. கட்டிகளும், வீக்கங்களும் (lumps and bumps)

பிறப்புறுப்பிலும் அதைச் சுற்றிலும் தோன்றுவது  ஒரு சாதாரண விசயமாகும். அதைபற்றி பயப்பட வேண்டியதில்லை. அநேக கட்டிகளும் வீக்கங்களும் (lumps and bumps) பெண்ணின் கருவாய்க்கு (vulva) வெளியில்தான் காணப்படுகின்றன.   பிறப்புறுப்பிற்கு (genitalia) உள்ப்பகுதியில், பெரிதாகவும், சிறிதாகவும் வலியுடனிருக்கலாம், வலியில்லாமலுமிருக்கலாம். சிலவேளைகளில் வீக்கத்திலிருந்து (bump) வெளியேற்றமிருப்பதை (discharge) அறிந்தால், அந்த நேரம்தான் சிகிச்சை எடுப்பதற்குரிய நேரமாகும். வெது வெதுப்பான இளஞ்சுடு நீரில் ஒரு குளியலே சில வீக்கங்களைக் குணப்படுத்தமுடியும்.50. பிறப்புறுப்பில் உள்ள வீக்கங்களின் காரணங்கள்  (Causes of Bumps on the Vagina)

அனேக பொதுவான தீங்கு செய்யாத காரணங்களில் (benign causes) ஒன்று, பிறப்புறுப்புப் பரப்பில் (vaginal area) உள்ள கட்டிகள் (lumps) நீர்க்கட்டிகளாகும். இவைகள் வலியுடன் கூடிய, அடைபட்ட சுரப்பிகளின் (blocked glands) வீக்கத்தால் உண்டாவதாகும். சில சமயங்களில், அவைகள் பருக்களைப் (pimples) போல இருக்கும். அவைகள் உண்டாக்கும் வலி மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபட அவற்றைப் பிதுக்க (to squeeze) உந்துதல் ஏற்படலாம். இது பொதுவாக நல்ல முடிவு அல்ல. ஏனென்றால் பிதுக்குவதின் மூலம் கருவாயின் (vulva) மற்ற பகுதிகளுக்கும் தொற்றிக்கொள்ள திறந்து விடுகிறோம். இந்த நீர்க்கட்டிகள் (cysts), தானாகவே உடைந்து, இயற்கையாகவே வடிந்து செல்ல அனுமதிப்பது நல்லது.


 


51. பெரிதா மிகவும் வலியுடன் கூடிய நீர்க்கட்டிகளாக (cysts) இருந்தால், வடிவதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.  அடைபட்ட மயிர்க்கால்கள் (Blocked hair follicles) பிறப்புறுப்பு பகுaதியில் genital region பொதுவாக இருக்கின்றன; கருவாயின் (vulva) உள்ளேயும் ஏற்படலாம். இது, உள்வளர்ச்சி முடி (ingrown hair) என்று அழைக்கப்படுகிறது. அவைகள் பெரிதாக, வலியுடன் இருந்தால், அவைகள் வடிக்கப்பட வேண்டும். மற்றபடி, அவைகள் தானாகவே தங்களது முடிவைத் தேடிக்கொள்கின்றன. இதேபோல, பிறப்புறுப்புப் பகுதியில், அடைபட்ட வியர்வை சுரப்பி (clogged sweat gland) ஏற்படலாம். இது சுலபமாக தொற்று நோயாக மாறி வலியை உண்டு பண்ணலாம்.
52. கணவனும் மனைவியும் உடலுறவு கொள்ள சரியான நேரம் எது? (What is the best time for intercourse between husband and wife?)

தூக்கத்திற்கு படுக்கைக்குப் போன உடனே உடலுறவு கொள்வது நல்ல தல்ல.  ‘உழைப்பு*ஓய்வு’ என்பது இயற்கையின் தாரக மந்திரம். பகலில் முழுவதும், உடலின் ஆற்றலைப் பயன்படுத்தி வேலை செய்கிறோம். ஆகையால், காலையிலிருந்து இரவு படுக்கப்போகும் வரை உடலின் ஆற்றல் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், படுக்கப் போகும்போது நமது உடலின் ஆற்றல் மிகவும் குறைவான அளவில், சோர்வடைந்த நரம்பு மண்டலத்தைப் பெற்ற நிலையிலிருக்கும். படுக்கைக்குப் போனவுடன் உடலுறவு கொண்டால், நரம்பு மண்டலம் சோர்வான நிலையில்,  விந்து வெளியேற்றம் விரைவில் ஏற்படும். அந்த சூழ்நிலை தம்பதியர் இருவருக்கும் தர்மசங்கடத்தை கொடுக்கலாம். ஆகவே, ஆழ்ந்த தூக்கத்திற்குப் பிறகு, பாலியல் உணர்வினால் உந்தப்பட்டு விழிப்பு ஏற்பட்டால், அதுதான் உடலுறவு கொள்ள தக்க நேரமாகும்.        53. தோல் (Skin)

நமது உடல், அதன் வெப்பநிலை (temperature) 37ºC ஆக  இருக்கும்போது நன்றாக வேலை செய்கிறது. நமது உடலின் வெப்பநிலை அதற்கு மேல் இருந்தால், அதனை நமது மூளை விரும்புவதில்லை. அது எப்பொழுதும் நமது உடல் குளிர்ச்சியாகவும், வசதியாகவும் இருக்கத்தான் விரும்புகிறது. ஆகையால், நமது மூளையின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட பகுதி, நமது உடலுக்கு    வியர்க்க வேணடும் என்ற செய்தியை சொல்லி அனுப்புகிறது. பிறகு, நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் (sweat glands) என்றழைக்கப்படும் சிறப்பு சுரப்பிகள் வியர்க்க ஆரம்பிக்கிறது. போர்ஸ் (Pores) என்றழைக்கப்படும் சிறிய துவாரங்கள் வழியாக வியர்வை வெளியேறுகிறது. வியர்வை காற்றை மோதியவுடன், காற்றானது வியர்வையை ஆவியாக்குகிறது (evaporate). அதாவது அது திரவத்திலிருந்து ஆவியாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றுவதற்கு வெப்பம் தேவை. அந்த வெப்பத்தை நமது உடலிலிருந்து காற்று எடுத்துக் கொள்கிறது. வெப்பத்தை இழந்த உடல் குளிர்ச்சியடைந்து வெப்பநிலை (temperature) 37ºC க்கு வந்துவிடு கிறது. இவ்வாறு நமது உடல் எப்பொழுதும் வெப்பநிலை (temperature) 37ºC ஆக  இருக்கும்படியாக மூளை பார்த்து கொள்கிறது.54. வியர்வை வருவது நின்றுவிட்டால், நமது உடல் தொடர்ந்து வெப்பமடைந்து அதிக வெப்பமாகிவிடுகிறது. இந்த கூடுதலான வெப்பத்தால், நமது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த இருதயம் (heart) அதிகமாக வேலை செய்கிறது. சில வேளைகளில், எண்ணெய் மற்றும் இறந்த தோல் செல்களின் (oil and dead skin cells) அடைப்பு pores களில் ஏற்பட்டு, தோல் அரிப்புகளும், பருக்களும் (pimples, blackheads, whiteheads, cysts. and acne)  தோன்ற வழிவகுத்துவிடும்.,   55. காலியிடம் (Vacant space)

காலியிடம் அதிகமாக உள்ள ஒரு பெரிய உறுப்பு வயிறு. மக்கள் எப்பொழுதும் வயிற்றின் அளவுக்கு அதிகமாகவே சாப்பிடுகிறார்கள். காரணம் சாப்பிடும்போது, வயிற்றின் அளவறிந்து சாப்பிடும் அரோமணி தொழில் நுட்பத்தை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மறந்துவிட்டார்கள். வயிற்றை நிரப்புவதில், உணவு, தண்ணீர் மற்றும் காலியிடம் ஆகிய மூன்றும் சரியான விகிதாசாரத்தில் இருக்கும்படியாக நாம் சாப்பிடவேணடும். அப்படி அமையாவிட்டால், உணவும், தண்ணீரும் காலியிடத்தைக் குறைத்து,  அதிகப்படியான உணவை செரிக்க (digest) வயிறு அதிகப்படியாக வேலை செய்கிறது. அதிகப்படியான உணவை சளியாகவும், அதிகபடியான வாயுவாகவும், சிறுநீராகவும், வியர்வையாகவும் மற்றும் மலமாகவும், நெஞ்சில் சளி அடைப்பாகவும், இரத்த அழுத்த அதிகரிப்பாகவும், இருதய பாதிப்பாகவும், தேவைக்கு அதிகமான இன்சுலின் சுரக்கும்படியாகவும், கல்லீரல் பாதிப்பாகவும் மற்றும் இன்னும் பல வியாதிகளாகவும் மாற்றிவிடுகிறது.56. இன்சுலின் உறுப்பு அதிகமாக வேலை செய்து, பிறகு பழுதடைந்து, சுரக்காமல் நீரிழிவு நோய் வந்து விடுகிறது. இதேபோலத்தான், அதிகப்படியான உணவினை செரிக்க தேவைக்கும் அதிகமான என்சைம் (enzym), ஹைடிரோகுளோரிக் அமிலம் (hydrochloric acid) பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு பயன்படுத்துவதால், செரிமான உறுப்புப் பாதித்து, செரிமான கோளாறாக ஆகி, மற்ற உறுப்புகளும் பாதிப்படைந்து நீண்ட கால நோய்களாக நிலைத்து நின்று விடுகின்றன.57. அதிகபடியான உணவினால் உண்டாகும் மேலே கூறப்பட்ட கழிவுப் பொருட்களும், வாயுவும் வயிறு, சிறு குடல், பெறுங்குடல், சிறுநீரகம் மற்றும் உடலின் மற்ற அனைத்து   காலியிடங்களையும் அடைத்துக் கொண்டு வயிற்றுப் பொருமளையும், அசவுகரியத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும். மேலும் அடுத்தடுத்து ஏற்படும் கழிவுப் பொருட்கள் தங்குவதற்கு இடநெருக்கடி ஏற்படும். ஆகவே அளவுக்கு அதிகப்படியாக மக்கள் உண்ணும் உணவுதான் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாகும்.58. மேலே கூறப்பட்டதற்கு ஒரே தீர்வு அரோமணி தொழில் நுட்பப்படி வயிற்றுக்கு அளவாக சாப்பிடுவதுதான். இவ்வாறு சாப்பிடுவதாலும், தாகம் எடுத்துத் தண்ணீர் குடிப்பதாலும் வயிற்றை நிரப்புவதில், உணவு, தண்ணீர் மற்றும் காலியிடம் ஆகிய மூன்றும் சரியான விகிதாசாரத்தில் அமைந்துவிடும்; செரிமானம் சரியான முறையில் நடைபெறும்.  அதற்குப் பிறகு மக்களை நோய்கள் அண்டாது.59. தாகம் எடுத்தபிறகு தண்ணீர் குடிக்கும்போது, என்ன காரணத்திற்காக தாகம் எடுத்ததோ அதற்கு அந்த தண்ணீரை உடல் உடனே பயன்படுத்திவிடும்.     அப்படியில்லாமல், தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிக்கும்போது, அந்த தண்ணீரை உடல் பயன்படுத்தாது. ஏனென்றால் அந்த நேரத்திற்கு அந்த தண்ணீர் தேவையில்லாத தண்ணீராகும். அந்த தண்ணீர், உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ள காலியிடங்களில் தேங்கி நின்று, திசுக்களில் உள்ள தாதுக்களையும் மற்றும் வைட்டமின்களையும் (minerals and vitamins) அரித்து  எடுத்துக்கொண்டிருக்கும் (eroding).  அந்த தண்ணீர், தான் அரித்தெடுத்த தாதுக்களையும் (தா), வைட்டமின்களையும் (வை) மற்றும் மாசுக்களையும் (மா) (impurities) தன்னுடன் இழுத்து வருகிறது. எங்கெல்லாம் அந்த கலவைத் தண்ணீர் தங்குகிறதோ, அங்கெல்லாம் தான் கொண்டுவந்த மூன்றையும் (தா.வை.மா) deposit செய்கிறது. அந்த டெபாசிட்கள்தான், கல் (stone), கட்டி (tumors), புற்றுநோய் (cancer) முதலியன என்று அந்த டெபாசிட்டுகளில் அடங்கியுள்ள வேதியல் பொருட்களின் (chemicals) குணங்களுக்கு தகுந்தாற்போல அழைக்கப்படுகின்றன.60. மேலும் கல் (stone), கட்டி (tumors), புற்றுநோய் (cancer) முதலியனவும் உடலின் காலியிடத்தை அடைத்து, செரிமானத்திற்கும். வியர்வை, சிறுநீர், மலம், வாயு, சளி ஆகிய கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதற்கும் தடங்களை ஏற்படுத்துகின்றன.     மேலே கூறியபடி தாகம் எடுக்காமல் குடிக்கும் தண்ணீர் உடலிலுள்ள இடங்களை அடைப்பதோடு இல்லாமல் கெடுதல்களையும் செய்கிறது என்பதைப் பார்த்தோம்.61. தாகம் எடுக்காமல் குடிக்கும் தண்ணீர் உடலுக்குத் தேவையில்லாத தண்ணீர். ஆகவே உடலானது, தனது, கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்புக்களைக் (kidney, skin, liver, lung, blood and heart) கொண்டு, அந்த தேவையில்லாத தண்ணீரை வெளியேற்றுகிறது. இவ்வாறு மனிதன் செய்த தவற்றை சரி செய்ய, உடல் அந்த உறுப்புக்களை, அதிக வேலை செய்ய வைக்கிறது. இவ்வாறு செய்யும் அதிக வேலையால், அந்த உறுப்புகள் பழுதடைந்து (defetive) நோய்வாய்படுகின்றன (kidney failure, skin diseases, liver failure, lung diseases like wheezing, sputum etc., blood pressure, blood cancer, heart attack, heart failure etc,)62. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், 8 அரோமணி விதிகளை மீறுவதாலும், சேரும் அதிகப்படியான மலம் பெருங்குடலை அடைத்து சவுகரியக் குறைவை ஏற்படுத்தும்.63. பூமியில் ஆகாயம், உடலில் காலியிடம் என்பதை புரியவைத்து, ஆகாயத்தை அதிகபடியான வெப்பம் அடைத்ததால் ஓசோனில் ஓட்டை ஏற்பட்டதையும் உதாரணமாக எடுத்துச் சொல்லி, என்னுடைய காதுகளிலும், மூக்குத் துவாரங்களிலும் உண்டான காற்றடைப்பும் அதன் மூலம் என்னை வைத்து இறைவன் ஆராய்ச்சி செய்து அதன் முடிவை தெரிவித்ததில் 9-வது அரோமணி விதி பிறந்தது.    64. 9-வது அரோமணி விதி (9th Aromani Principle) என்னுடைய காதுகளிலும், மூக்குத் துவாரங்களிலும் உண்டான காற்றடைப்பும் அதன் மூலம் என்னை வைத்து இறைவன் ஆராய்ச்சி செய்து அதன் முடிவை தெரிவித்ததில் 9-வது அரோமணி விதி பிறந்தது.    

நமது உடலிலுள்ள  துவாரங்களும், காலியிடமும் அடைபடும்பொழுது (when blocking), அந்த அடைப்பானது (கன அளவில் கணக்கிடபடுகிறது) உடலை பலவீனப்படுத்தவும், புதிய நோய்கள் தோன்றவும், பழைய நோய்கள் தீவிரமடையவும் வழிவகுக்கும்.65. அரோமணியின் 9-வது விதிப்படி, உடலிலுள்ள துவாரங்கள், காலி இடங்கள் அடைபடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதைக் கடைப்பிடிப்பதின் மூலம் எல்லாவிதமான ஒவ்வாமைகளிலிருந்தும் (allergies) அதைத் தொடர்ந்து வரும் பல்வேறு நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம். 


இரட்டை மருத்துவம்-வாழும் தாய் மருத்துவம்- முதல் மருத்துவம்
              அரோமணி 9-வது விதி ( Aroman 9th  Principle).

       ஆகாயம்(Space -one of the 5 natural agents)
A 233-MLM-Aromani's 9th Principle
Please visit websites: www.medicineliving.com; www.medicineliving.blogspot.com; Email:twinmedicine@gmail.com

R.A.Bharaman (Aromani), 9442035291.
    


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: