Saturday, August 26, 2017

சிறுநீரக செயலிழப்பினால் குடும்பமே தற்கொலை!


 சிறுநீரக செயலிழப்பினால் குடும்பமே தற்கொலை! (முழு கட்டுரை)

சிறுநீரக செயலிழப்பு (kidney failure)குடும்ப தற்கொலைக்கு காரணமாகிறது.
சிறுநீரக செயலிழப்பால் ஒரு கூலி குடும்பத்துடன் தற்கொலை!

20-3-2015 -ந் தேதி THE HINDU ஆங்கில நாளிதழில் செய்தி வந்திருக்கிறது
கணக்கன்ஒரு கூலிஅவருடைய மனைவிமகன் மூவரும் விஷம் அருந்தியதில்கணக்கன் இறந்துவிட்டார்மனைவி சூரியகாந்தியும்மகன் சுடலைக்கனியும் உயிருக்குப் போராடும் நிலையில் தென்காசி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்இந்த தற்கொலைக்குக் காரணம் மகன் சுடலைக்கனி சிறுநீரக நோயாளிமேலும் காய்ச்சலாலும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறான்நடந்த SSLC பரிட்சையில் கலந்து கொள்ள முடியாத நிலையில் தன் மகன் இருந்ததைதாங்கமுடியாத கணக்கன் தற்கொலை முடிவுக்கு வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.


1.         தாகம் எடுத்துத் தண்ணீர் குடிக்க மக்கள் அஞ்சுகிறார்கள்!
; அநேகமாக எல்லா டாக்டர்களும்நிறைய தண்ணீர் குடியுங்கள் என்றுதான் நோயாளிகளிடம்  அறிவுறுத்துகிறார்கள். மக்களிடம் செல்வாக்குள்ள தினசரி நாளிதழ் ஒன்றுதினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்று வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறது. ஒரு தமிழ் டி.வி. ஒளிபரப்பில், ஒரு நாட்டு மருத்துவர் தினசரி 5 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது என்று அறிவுறுத்துகிறார். இவற்றை படிக்கும்போதும், பார்க்கும்போதும் எனது மனதில் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது; ”உண்மைக்கு மாறானதைச் சொல்லி மக்களுக்கு நோய்களை வலிய திணிக்கிறார்களே!”,என்ற எண்ணத்தினால் எனக்கு மனவழுத்தம்கூடுகிறது. இது தினசரி எனக்கு நடந்து கொண்டிருக்கிறது.

2.         எனது ஒன்றுவிட்ட அண்ணன் நீண்டகாலமாக நடமாட்டத்துடன் வீட்டிற்குள்ளேயே இருந்தார். அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். உடல்நலத்தைப் பற்றி பேச்சு வரும்போது, அவரிடம்  “தாகம் எடுத்துத் தண்ணீர் குடியுங்கள். உடம்புக்கு நல்லது என்றேன். உடனேஅய்யய்யோ! அதெல்லாம் முடியாதப்பா! டாக்டர் நிறைய தண்ணீர் குடிக்கச் சொல்லியிருக்கிறார்! அவர் சொன்னபடிதான் செய்வேன்!” என்று பாம்பைக் கண்டவர்போல பதறியபடி சொன்னார். அவருடைய பதட்டம், டாக்டருடைய சொல்லை மீறும்போது பெரும் ஆபத்து விளைந்துவிடும் என்பதைப்போல அவருடைய பதில் இருந்தது. இவரைப் போலவே அனைத்து நோயாளிகளும் டாக்டரை கடவுளாக மதித்து, அவருடைய சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொண்டு தினசரி அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

3.         டாக்டர்கள் நோயாளிகளிடம்அதிகமாக தண்ணீர் குடியுங்கள் என்று அறிவுறுத்துவதற்கு அடிப்படை அவர்களது பாடத்திட்டத்தில் (M.B.B.S-CURRICULUM;)  இருக்கலாம் என்ற  ஐயப்பாடு எனக்கு ஏற்பட்டது. அந்த அய்யப்பாட்டினை நீக்குவதற்கு எனது உறவினரை அனுகினேன். அவரது மகன் அரசு பணியில் டாக்டராகப் பணிபுரிகிறார். அவரிடம்டாக்டர் தம்பியிடம், அவர் படித்த படிப்பில் (MBBS COURSE), உடலுக்குப் பயன்படும் தண்ணீரைப் பற்றிய பாடம் சம்பந்தமான பாடப் புத்தகம் வேண்டும். வாங்கிக் கொடுங்கள். படித்து விட்டு தருகிறேன் என்று கேட்டேன்.

4.         ஒருவாரம் கழித்து அவர் என்னிடம் பேசினார்தண்ணீரைப் பற்றிய பாடம் அவர்கள் படிப்பில் இல்லை என்று சொன்னார். கேட்டவுடன், எனக்குப் பெரு வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. பாடத்திட்டத்தில் இல்லாத ஒன்றை அதாவதுநிறைய தண்ணீர் குடியுங்கள் என்று எதன் அடிப்படையில் டாக்டர்கள் தங்களது நோயாளிகளுக்கு அறுவுறுத்துகிறார்கள் என்று எனக்கு விளங்காத புதிராக இருந்தது. தவறான அறிவுரையைக் கொடுத்து, அதன் மூலம் உடல் நலமுள்ளவர்களை நோயாளிகளாக்குவதும் பாவச் செயலாகும்.

5.         கற்கள், (சிறுநீரகக் கற்கள் உட்பட)’ உண்டாகமலிருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று சொல்கிறார்கள். இறைவன் செய்த ஆராய்ச்சியில், கற்கள் உண்டாவதே நிறைய நீர் அருந்துவதுதான் காரணம் என்ற முடிவுதான் எனக்குத் தரப்பட்டிருக்கிறது. அவன் அதற்குரிய அறிவியல் விளக்கத்தையும் அளித்தான். கற்கள் எப்படி உருவாகின்றன என்பதைஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள் புத்தகத்தில் தெளிவுபடக் கூறியிருக்கிறேன்.

6.         சிறுநீரக நோயாளிகளின் பரிதாப நிலை!
என்னிடம் சிறுநீரகம் (Kidney) பழுதான நோயாளி வந்துஎனது பழுதான சிறுநீரகத்தை சரி செய்யமுடியுமா?” என்று கேட்டார். நான் மிகவும் வேதனையுடன்சிறிதளவாவது சிறுநீரகம் வேலை செய்தால்தான் சரிசெய்ய முடியும் என்றேன். “ தினசரி அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டேன். “ஆம் என்றார்.

7.         7-12-2014 அன்று காரைக்குடியிலிருந்து திரு.முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கைத்தொலைபேசியில் (Cell) பேசினார்அரோமணி சாருங்களா! உங்க புத்தகம்ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள் படித்து, அதன்படி கடைப்பிடித்து வருகிறேன். இப்பொழுது நன்றாக இருக்கிறேன்.”

8.         “உங்களுக்கு உடலில் ஏதாவது பிரச்சனை இருக்கா?” என்று கேட்டேன். அதற்கு அவர்எனக்கு ஒரு கிட்னி வேலை செய்யலையாம்! ஒரு கிடனிதான் வேலை செய்கிறதாக, டாக்டர்கள் சொல்லுகிறார்கள்! வயிற்றிலேயும் கோளாறு இருக்கு!” என்று சொன்னார்.

9.         அதற்கு நான்நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கம் உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்முன்னாள் இருந்தது. உங்கள் புத்தகத்தைப் படித்த பிறகுதாகம் எடுத்த பிறகுதான் தண்ணீர் குடிக்கிறேன். மருத்துவ மனபயிற்சிகளைப் பற்றி விபரமா புத்தகத்தில் போடல! நேர வந்து தங்களைப் பார்க்கிறேன் என்று சொன்னார்.

10.       தினசரி நாளிதழ்களில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மோசடி என்ற செய்திகளைப் பார்க்கும் போதல்லாம் எனது நெஞ்சு கனக்க ஆரம்பித்து விடுகிறது. சிறுநீரக இயக்க நிறுத்தம் (Kidney failure) இயற்கையான முறையில் ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் செயற்கையான முறையில் ஏற்படுத்தி விட்டு, பிறகு அதற்கு பரிசோதனைகள் (Tests) சிகிச்சைகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Kidney transplant) என்று செய்வதைத்தான் என் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நெஞ்சு பொறுக்க முடியாமல்தான் இந்த கட்டுரையை எழுதினேன்.

11.       உடல் பேசுகிறது!
உடலானது தனது தேவைகளை உணர்வுகளாலும், ஒலிகளாலும் வெளிப்படுத்துகிறது. அப்பொழுது அவற்றை நிறைவேற்றி விட்டால், உங்களுக்கு எந்த நோயும் வராது. உணவு தேவையை பசி உணர்வாலும், தண்ணீர்த் தேவையை தாக உணர்வாலும், தாம்பதய உறவுக்கு பாலியல் உணர்வாலும், சிறுநீர் கழிப்பதற்கு அந்நீர் கழிக்கும் உணர்வாலும், மலம் கழிப்பதற்கு அம்மலம் கழிக்கும் உணர்வாலும், உடலில் நோய் வந்துவிட்டால் வலி உணர்வாலும் (சிகிச்சை எடுப்பதற்காக),  வயிறு நிறைந்து விட்டதை ஏப்பத்தாலும், தூங்குவதற்கு கொட்டாவியாலும், உடல் தனது தேவைகளை வெளிப்படுத்துகிறது.

12.       “தாகம் எடுத்தபிறகு தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது என்ற உண்மையை ஆராய்ச்சி செய்து டாக்டர்களே உறுதி செய்ய முடியும். செழுமையான நிதி வசதி கொண்ட டாக்டர்களும், தனியார் மருத்துவமனைகளும் இவ்வாராய்ச்சியை மேற்கொள்ள முடியும். சராசரி உடல்நலம் கொண்ட 20 நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பத்து, பத்துப் பேராக 2 குழுக்கலாக பிரிக்க வேண்டும்.

13.       குழு ஒன்றுக்கு தினசரி 2 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடித்துவரச் சொல்ல வேண்டும். குழு இரண்டுக்கு தாகம் எடுத்துத் தண்ணீர் குடித்து வரச் சொல்லவேண்டும். தண்ணீர் குடிக்கும் காலம் குளிர்காலம் 3 மாதங்கள், கோடை காலம் 3 மாதங்கள் என்று 6 மாதங்கள் இருக்கலாம். அவர்கள், தினசரி தண்ணீர் குடிக்கும் அளவையும், சிறுநீர் கழிக்கும் அளவையும் பதிவு செய்ய வேண்டும். ஆங்கில மருத்துவ முறையில் உள்ள உடல்நலத்தைக் காட்டும் அனைத்து சோதனைகளையும் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு செய்து முடிவுகளை பதிவு செய்யலாம்.

14.       இறுதி முடிவு குழு ஒன்றில் உள்ளவர்களின் கழிவு நீக்கப் பொருட்களை வெளியேற்றும் உறுப்புக்கள் சேதமடைந்திருப்பதையும், குழு இரண்டில் உள்ளவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதையும் தெரியப்படுத்தும் என்பதில் எனக்கு எந்த அய்யப்பாடும் இல்லை.


15.       என்னை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினான்!
4-வது விதியை அதாவது  ‘தாகம் எடுத்தபிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உண்மையை கண்டறிய என்னையே இறைவன் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினான். 1998-1999-ம் ஆண்டு, குளிர்காலம், கோடைகாலம், வசந்த காலம் ஆகிய மூன்று பருவ காலங்களிலும் நான் தினசரி தாகம் எடுத்துத் தண்ணீர் குடித்து வந்ததையும், சிறுநீர் கழித்ததையும் பதிவு செய்தேன். அதன் அட்டவணைகள்-1 மற்றும் 2-களில் உள்ள  அந்த பதிவுகளைப் இறுதியில் கொடுத்துள்ளேன்! தயவுசெய்து பாருங்கள்!

a..        தாகம் எடுத்துத் தண்ணீர் குடிக்கும்போது, குளிர்காலத்தில்
சராசரியாகதேவைப்படும்நீர்(அட்டவணை-1) = 494 =500 மி.லி                             . 
b. கோடைகாலத்தில்சராசரியாகதேவைப்படும்நீர்= 986= 1000 மி.லி
(அட்டவணை-1) 
c. வசந்தகாலத்தில்சரசரியாகதேவைப்படும்நீர்(அட்டவணை-2)=705=700 மி.லி                          .

d.         மூன்று காலத்திற்குச் சேர்ந்து சராசரியாக தேவைப்படும்நீர்= 730 = 700 மி.லி

e.         ஒரு நாளைக்கு சராசரி சிறுநீரின் வெளியேற்றம்
                                                          { 16-5-99 to 11-8-99 (54 நாட்கள்)}            = 550 மி.லி
16.       மேலே கொடுக்கப்பட்ட ஆராய்ச்சித் தகவலின் படி பார்த்தால், குளிர்காலத்தைக் காட்டிலும், கோடை காலத்தில்;, இரு மடங்கு நீர் அருந்துகிறோம்.

17.       அட்டவணை 2-ல் பார்த்தால் ஒரு உண்மை தெரியும். குடிக்கும் நீரி்னுக்கு தகுந்தாற்போல சிறுநீரின் வெளியேற்றம் இல்லை. எல்லா நாட்களிலும் குடித்த நீரைக்காட்டிலும் மிகவும் அதிகமாக சிறுநீரின் வெளியேற்றம் இருக்கிறது...       
வ.எதேதி         குடித்த நீர்     வெளியேறிய சிறுநீர்
i.          07-7-1999-      600 மி.லி           700 மி.லி
ii.          19-7-1999      300 மி.லி           1100 மி.லி
iii.         01-8-1999     400 மி.லி             500 மி.லி
iv.         10-8-1999      500 மி.லி            700 மி.லி


18.       மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்பு எதை காட்டுகிறது? தண்ணீரின் தேவை பருவகாலத்திற்குத் தகுந்தாற்போலவும், உண்ணும் உணவிற்குத் தகுந்தாற்போலவும், உடலுழைப்பிற்குத் தகுந்தாற்போலவும் கூடும் குறையும். அதை உடலே தீர்மானிக்கிறது. அப்படி இல்லாமல் தினசரி 2 லிட்டர் (2000 மி.லி) நீர் குளிர்காலத்திலும் அருந்தினால் என்ன நடக்கும்? அதாவது குளிர்காலத்தில் 4 மடங்கு கூடுதலாக குடிக்கப்படுகிறது. 500 மி.லி நீருக்காக வடிவமைக்கப்பட்ட சிறுநீரகங்கள், கூடுதலாக 1500 மி.லி. (2000-50=1500) நீரை உடலைவிட்டு வெளியேற்றியாக வேண்டும். சிறுநீரகங்கள் பழுதாகுமா! பழுதாகாதா! இதனால்தான் சிறுநீரகங்கள் பழுதான நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகிறது. .

19.       கோடை காலத்தில் சராசரியாக 1000 மி.லி நீர் தேவைபடுகிறது. 2 லிட்டர் நீர் என்பது 2000 மி.லிட்டராகும். அதாவது கோடைகாலத்திலும் 2 மடங்கு.(2000-1000=1000)  கூடுதலாக குடிக்கச் சொல்கிறார்கள். வசந்த காலத்தில் 1300 மி.லி (2000-700 = 1300) நீரை கூடுதலாக குடிக்கச் சொல்கிறார்கள் இந்தக் கூடுதலான நிரை (முறையே 1000 மி.லி, 1300 மி.லி) சிறுநீரகங்கள் வெளியேற்றியாக வேண்டும். அதற்கு அவைகள் அதிகமாக வேலை செய்தாக வேண்டும். இவ்வாறு அதிகமாக வேலைசெய்வதால் நமக்கு எதாவது பலன் உண்டா? இல்லையே! அதற்கு பதில் மக்களின் உயிர்களைப் பறிக்கும்படியான சிறுநீரகங்கள் பழுதானதுதான் லாபம். சிறுநீரகங்கள் மட்டுமா பழுதாகிறது! ரத்தம், நுரையீரல், இருதயம், தோல், இரப்பை, மூளை ஆகிய உறுப்புக்களும் சேதமாகின்றன. இதற்கு சிறுநீரகங்களையும், மற்ற உறுப்புக்களையும் தேடி அவர்கள் அலையும்போது, ‘மக்களின் அறியாமையால் இவ்வளவு நட்டம் வரவேண்டுமா!’ என்று என் மனம் வேதனைப்படுகிறது.

20.       நான், பத்து நாட்களாக தண்ணீர் குடிக்கவில்லை!
டெல்லியில் பெரிய தங்கும் விடுதிகளில் வாடிக்கையாளர்களை ஒரு 300 மி.லி. நீர் நிரம்பிய கிளாஸ் கொடுத்து குடிக்கச் சொல்லி வரவேற்கிறார்கள். தாகம் எடுக்காமலே நிறைய நீர் அருந்தும் பழக்கம் டெல்லியில் இருக்கிறது என்பதைத்தான் அது காட்டுகிறது. மத்திய வெளியுறவு அமைச்சரும், பாரதிய.ஜனதா.கட்சியின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் (64) சிறு நீரகக் கோளாறு காரணமாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 18-11-2016 அன்று அனுமதிக்கப்பட்டு, ‘டயலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியறிந்து மக்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள். இறைவன் அருளால் அவர் நலமாகி மீண்டும் திரும்பி வந்து, அமைச்சக அலுவலக அலுவல்களைத் தொடர்ந்ததற்கு, எல்லாம் வல்ல இறைவனுக்கு  நன்றி தெரிவித்துக் கொள்வோம்

21.       டெல்லியில் மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் [(Central Council for Research in Yoga and Naturopathy (CCRYN)]  என்பது ஒரு மத்திய அரசு நிறுவனம். யோகா மற்றும் இயற்கை மருத்துவ வளர்ச்சிக்காக நிறுவப்பட்டது. அந்த நிறுவனத்தில் எனது இரட்டை மருத்துவத்தை (Twin Medicine) அங்கீகரிக்கச் செய்துவிட்டால், பிறகு அந்த மருத்துவம் மக்களிடம் போய் சேர்ந்து ஏழை எளியவர்கள் பயன்பெறுவார்கள் என்று எண்ணி 15 ஆண்டுகளாக  (3-6-1998-4-6-2013) முயற்சி செய்தேன்.

22.       ஏனென்றால் அன்றைக்கு 70 வயது ஆகிவிட்ட நிலையில் என்னால் ஊர் ஊராகச் சென்று இந்த அற்புதமான மருத்துவத்தைப் பரப்ப முடியாது என்ற காரணத்தினால்தான் என்னுடைய முயற்சியை தொடர்ந்தேன். ஆனால் அங்கீகாரம் பெறுவதற்கு பல படிகள் கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது என்பதை அறிந்து அந்த முயற்சியை கைவிட்டு விட்டேன். அப்படி போகும்போதுதான் 22-06-2011 அன்று, ஆயுர்வேத மருத்துவத்தை சொல்லிக் கொடுத்த புகழ்பெற்ற பல்கலைக் கழக ஓய்வுபெற்ற பேராசிரியரை டெல்லியில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் சொன்னார்நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது ஒரு தவறான கொள்கை! அந்தக் கொள்கையைப் பின்பற்றியதால், நான் இன்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன், என்று வேதனையுடன் சொன்னார்

23.       ஒன்று சொன்னால் நீங்கள் வியப்படைவீர்கள். நான் கோயம்புத்தூரில் மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றும்போது, குளிரும், மழையும் சேர்ந்திருந்த போது 10 நாட்களாக தாகம் எடுக்கவில்லை; தண்ணீரும் குடிக்கவில்லை. நான் குடித்த பால், உணவு, சுவாசித்த ஈரக் காற்று ஆகியவற்றிலிருந்து உடல், தனக்கு வேண்டிய தண்ணீரை அந்த நாட்களில் எடுத்துக் கொண்டது. ஆகவே தாகம் எடுக்கவில்லை.

24.       கடந்த 19 ஆண்டுகளாக தாகம் எடுத்துத்தான் தண்ணீர் குடிக்கிறேன்; குளிர்காலத்தில் சராசரி 500 மி.லி ;, கோடைகாலத்தில் 1000 மி.லி. மற்றும வசந்த காலத்தல்; 700 மி.லி நீரும்தான் குடிக்கிறேன். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரிலோ (Urine) எந்த கோளாறும் எனக்கு ஏற்பட்டதில்லை. எந்தவிதமான கற்களும் உண்டானதில்லை. மற்ற உறுப்புகளிலும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை.

25.       உடலின் இயக்கத்தையும் கார் இயந்திர ரேடியேட்டரையும் ஒப்பிடுதல்.

காரிலிலுள்ள ரேடியேட்டலிருந்து தண்ணீர், அதிகப்படியான வெப்பத்தை, கார் எஞ்சின் முக்கியமான பாகங்களிலிருந்து, ஈர்த்துக்கொண்டு ரேடியேட்டருக்கு வருகிறது. ரேடியேட்டர் நீரிலுள்ள வெப்பத்தை வெளியில் காற்றில் விட்டுவிடுகிறது.

26.       ஒரு கார் எஞ்சினைப் போலவே, அதிக வெப்பமடைதல்(over heating), மற்றும் அசையும் பாகங்களை அசையவிடாமல் பிடித்துக் கொள்ளுதல் (seizure.) போன்ற கடுமையான பிரச்சனைகள் உடலுக்கும் வரலாம். அதிக உராய்தலினால், உடலின், அசையக்கூடிய பல்வேறு மூட்டுக்களில் பிடிப்பு ஏற்பட்டு அவற்றை அசைக்க முடியாத நிலை ஏற்படலாம். காலப்போக்கில், அவை சேதமடைந்து பழுதடையலாம்.

27.       மேற்கூறியது நிகழாமலிருக்க, உடலின் உறுப்புக்களை, எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இந்த அதிகப்படியான வெப்பத்தை ஈர்ப்பதற்குதான் நாம் தாகம் எடுத்து, நீர் அருந்துகிறோம். இந்த வெப்பத்தை (Heat), தண்ணீர் ஈர்த்துக் கழிவுப் பொருளை அகற்றும் உறுப்புகளுக்கு (excretion organs) எடுத்துச் சென்று,உடலை விட்டு வெப்பத்தை வெளியேற்றுகிறது. உதாரணமாக, கடுமையான உடலுழைப்பு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டம் முதலிய செயல்களின் போது, உடலின் தோலின் மேல்ப் பகுதியில் வியர்வை தோன்றுகிறது. வியர்வை உடலின் வெப்பத்தை எடுத்துக்கொண்டு, ஆவியாகிறது. வெப்பயிழப்பால், உடல் குளிர்ச்சியடைகிறது. ஆகையினால், தண்ணீர் இங்கே உடலை குளிரவைக்கும் திரவமாகப் பயன்படுகிறது.

28.       ரேடியேட்டர் இயங்குவதினால், நிரப்பப்பட்ட தண்ணீரின் அளவு குறைந்துகொண்டே வரும். அப்போதெல்லாம், குறையும் அளவை. நீர் ஊற்றி முழு அளவுக்கு ஈடுகட்டி (Top up) நிரப்புகிறோம்.

29.       . ரேடியேட்டரை ஈடுகட்டும் தண்ணீரை (Top up water) ஐக் கொண்டு நிரப்புவதைப் போல, தாகம் எடுத்தவுடன், தண்ணீர் குடித்து, உடலில் ஏற்படும் நீர்க் குறைவை சரி செய்கிறோம்.

30.       ரேடியேட்டரில் அசுத்தம் சேரும்பொழுது, அதனை தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்தப்படுத்தப் படுகிறது. இதனால், ரேடியேட்டருடைய திறன் அதிகரித்து, எஞ்சின் அதிக வெப்பமாகாமல் தடுத்துவிடுகிறது.

31.       இதேபோல, நமது உடலிலும் மாசுக்கள் (impurities) சேர்ந்துவிடும். அதைச் சுத்தப்படுத்தினால்தான், தண்ணீரின் வெப்ப ஈர்ப்புத் திறன் அதிகரித்து, உடல் அதிக வெப்பமாகாமல் தடுத்துவிடும். மேற்குறிப்பிட்டபடி, நாம் தாகத்திற்காக குடிக்கும் நீர், உடலை குளிர்ச்சியாக்கவும், கழுவி சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது.
தாகம் எடுத்துக் குடிக்கும் நீர் செரித்தலுக்குப் பயன்படுகிறது. வயிறானது 100 பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. உணவானது 80 பாகங்களுக்கு நிரம்புகிறது. பசி எடுத்துச் சாப்பிடும்போது 80 பாகங்களில் வயிறு நிரம்பிய உணர்வு உங்களுக்கு ஏற்படும். அதோடு நிறுத்திவிட்டால் தாகம் எடுக்கும். தாகம் எடுத்துக் குடிக்கும்போது 10 பாகங்களில் நீர் நிரம்பி தாக உணர்வு இல்லாத உணர்வு ஏற்படும். மீதம் 10 பாகங்கள் வயிறு காலியாக இருக்கும். இப்படி காலியாக இருந்தால்தான், உணவை, வயிற்றால் நன்றாக அரைக்கமுடியும். பசி எடுக்காமல் சாப்பிட்டாலோ அல்லது அதிகமாக சாப்பிட்டாலோ சரியான விகிதத்தில் (80:10:10) வயிறு நிரம்பாது. அதனால், செரிமானக் கோளாறு ஏற்பட்டு, பல்வேறு நோய்கள் தோன்றும்

32.       நிறைய தண்ணீர் குடிப்பதால் ரத்தத்தில் ஏற்படும் நோய்கள்:
ரத்தம், நாம் வேலை செய்வதால் உண்டாகும் வெப்பத்தை (Heat) உடலிலுள்ள  எல்லா பாகத்திற்கும் கொண்டு சென்று உடலை எப்போழுதும் வெதுவெதுப்பாக வைக்கிறது. .

33.       தாகம் எடுக்காமல் .குடிக்கும் .நீர் ரத்தத்தோடு கலக்கும்போது உடலின் வெப்பநிலை வெதுவெதுப்பாக இருப்பது மாறி, குளிர்ந்த வெப்பநிலைக்கு மாறிவிடும். அதாவது உடலின் வெப்பநிலை 37 டிகிரி செ.கிரெடுக்குக் கீழ் போய்விடும். இதனால் குளிர்காய்ச்சல் போன்ற நோய் தோன்ற வாய்ப்பேற்படுகிறது

34.       70 கிலோ எடையுள்ள ஒருவருக்கு 4.5 லிட்டர் அளவு ரத்தம் அவரது உடலில் இருக்கிறது. அவர் 3 காலங்களிலும் தாகம் எடுக்காமல் 2 லிட்டர் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? இந்த ரத்தத்தோடு குளிர்காலத்தில் தாகம் எடுக்காமல் குடிக்கும் 1.50 லிட்டர் நீரும் (2-0.5=1.50), கோடை காலத்தில் 1 (2-1=1) லிட்டர் நீரும், வசந்த காலத்தில் (2-0.7=1.3) 1.3 லிட்டர் நீரும ;கூடுதலாகக் கலக்கிறது. அதாவது இரத்தத்தின் அளவு குளிர்காலத்தில் 6 லிட்டராகவும், கோடை காலத்தில் 5.5 லிட்டராகவும், வசந்த காலத்தில் 5.8 லிட்டராகவும் அதிகரிக்கிறதுஇந்தக் கூடுதலான நீரால் ரத்தம் நீர்த்துப்போய்விடுகிறது. இதனால் அதனுடைய கூறுகள் மாறுபட்டு, குறைபாடுகள் ஏற்பட்டு, ரத்தப்புற்று நோய், ரத்தச் சோகை போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகின்றன.

35.       தாகம் எடுக்காமல் நிறைய தண்ணீர் குடிப்பதால் இருதயத்தில் (Heart) ஏற்படும் நோய்கள்:
ரத்தத்திற்கு தானாகவே நகரக்கூடிய ஆற்றல் கிடையாது. அதை இருதயம்தான் பம்ப் (Pump) செய்து நகர வைக்கிறது. தாகம் எடுக்காமல் குடிக்கும் நிறைய நீர் ரத்தத்தோடுதான் நகருகிறது. இருதயமானது 4.5 லி இரத்தத்திற்குப் பதிலாக, முறையே குளிர்காலத்திலும், கோடை காலத்திலும் மற்றும் வசந்த காலத்திலும் 6, 5.5, மற்றும் 5.8 லி இரத்த-நீர் கலவையை பம்ப் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறது இப்பொழுது இருதயம் மூன்று காலங்களிலும் அதிக வேலை செய்ய வேண்டியதாகிறது. இதனால்தான் இருதயம் பழுதடைந்து, இயங்காமல் நின்று விடுகிறது (Heart failure) மற்றும் இருதயம் சம்பந்தமான பிறநோய்களும் தோன்றுகின்றன

36.       தாகம் எடுக்காமல் நிறைய தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் (Kidney) ஏற்படும் நோய்கள்:


சிறுநீரகம் உடல் சரியாக இயங்க பல பணிகளைச் செய்கின்றன. அவைகளில் சில:


a.         உடலிலுள்ள நீரின் அளவை கூடாமலும், குறையாமலும் ஒரு நாள் முழுவதும் சரியான அளவில் வைத்திருக்கும். உடலிலுள்ள நீரின் அளவு குறையுமானால், சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவை குறைத்து, உடலின் நீரின் அளவை சரியானஅளவிலே வைத்திருக்கும் (water level balancing).

b.         சிறுநீரகங்கள் கழிவுப்பொருட்களை வடிகட்டுவதற்கு, ரத்தத்தின் அழுத்தம் (blood pressure) சரியான அளவில் நிலைத்து நிற்கவேண்டும். ரத்த அழுத்தம் மிகவும் குறையுமானால், நீரையும் சோடியத்தையும் (Sodium) உடலை விட்டு வெளியேற்றாமல் தடுத்து, சிறுநீரகம் அதன் அழுத்தத்தை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் கூடுமானால், நீரையும் சோடியத்தையும் உடலை விட்டு அதிக அளவு வெளியேற்றி, சிறுநீரகம் அதன் அழுத்தத்தை குறைக்கிறது (blood pressure regulation). சிறுநீரகத் திறமைக்கு மேல் நீரும், சோடியமும் அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகமாகும், குறையுமானால் இரத்த அழுத்தம் குறையும்.

c.         நமது உடல் நன்றாக செயல்படுவதற்கு, அமில உற்பத்தியை சரியான அளவில் வைத்திருக்கும் பணியைச் செய்கிறது (Acid regulation).  

37.       மேலே குறிப்பிட்டுள்ள சிறுநீரகப் பணி 36(a)-யில் உடலில் ஒரே அளவில் நீரின் அளவு இருக்கும்படியாக சிறுநீரகம் பார்த்துக் கொள்கிறது என்று பார்த்தோம். தாகம் எடுக்காமல் நிறைய நீர் (2 லிட்டர்குடிக்கும்போது, உடலின் நீரின் அளவு கூடிவிடுகிறது. இந்த சூழ்நிலையில் சிறுநீரகங்கள் குளிர்காலத்தில் 3 மடங்கும், கோடைகாலத்தில் ஒரு மடங்கும், வசந்த காலத்தில் 1.3 மடங்கும் அதிகமாக வேலை செய்து, அதிகபடியான நீரை சிறுநீராக (Urine) வெளியேற்ற வேண்டியதிருக்கிறது. இதனால்தான் சிறுநீரகங்கள் விரைவில் பழுதாகி, இயங்காது  (Kidney failure) பயனற்றுப்போகின்றன. சிறுநீரகக் கற்களும் உருவாகின்றன.

38.       சிறுநீரகப் பணி 36(b)-யில் ரத்த அழுத்தத்தை சரியான அளவில் நிலைத்திருக்க, உடலிலுள்ள நீரையும், சோடியத்தையும் கூட்டவும் குறைக்கவும் செய்கிறது என்று பார்த்தோம். குடிக்கும் நீரில் சோடியம் இருக்கிறது. ஆகவே தாகம் எடுக்காமல் குடிக்கும் நிறைய நீர் (2லி), உடலின் நீரின் அளவையும் சோடியத்தின் அளவையும் பருவகாலத்திற்குத் தகுந்தாற்போல, மேற்குறிப்பிட்ட அளவுகளில ;( குளிர்காலத்தில் 3 மடங்கும், கோடைகாலத்தில் ஒரு மடங்கும், வசந்த காலத்தில் ஒரு மடங்குக்கும் கூடுதலாக   அதிகப்படுத்துகிறது. இந்தச் சூழ்நிலையில், நீரின் அளவும் அதிகமாகி, சோடியமும் அதிகமாகி, உடலின் ரத்த அழுத்தம் (Blood pressure) மேற்குறிப்பிட்ட அளவுகளில அதிகமாகிவிடுகிறது. உடனே இரத்த அழுத்த மாத்திரையை எடுத்துக் கொள்கிறீர்கள். இது தேவையா?

39.       சிறுநீரகப் பணி 36(c)-யில் நமது உடல் நன்றாக செயல்படுவதற்கு, அமில உற்பத்தியை சரியான அளவில் வைத்திருக்கும் பணியைச் செய்கிறது (Acid regulation). என்று பார்த்தோம்.. தாகம் எடுக்காமல .குடிக்கும் நிறைய நீர் (2 லிட்டர்), உற்பத்தியான அமிலத்தை நீர்த்துப்போகச் செய்கிறது. இதனால் அமிலத்தின் ஆற்றல் குறைந்து, அது ஆற்றும் பணியில் குறைபாடு ஏற்படுகிறது. இதனாலும்  உடலில் நோய்கள் உண்டாகின்றன.

40.       தாகம் எடுக்காமல நிறைய தண்ணீர் குடிப்பதால் மூளையில் (Brain) ஏற்படும் நோய்கள்:
மூளையில், உடலின் வெப்பநிலையை (body temperature) நிலையாக 37 டிகிரி செண்டிகிரேடில் வைப்பதற்கு முறைப்படுத்தும் மையம் ஒன்றிருக்கிறது. அந்த மையம், வியர்வைச் சுரப்பிகள் மற்றும் தசைகளின் (sweat glands and muscles) உதவிகொண்டு, உடலின் வெப்பநிலையை நிலையாக 37 டிகிரி செண்டிகிரேடில் வைத்திருக்கிறது.

41.       குளிர்காலத்தில் 3 மடங்கு அதிகமாகவும், கோடை, வசந்த காலங்களில் ஒரு மடங்கு மற்றும 1.3 மடங்குக்கு மேல் அதிகமாகவும் குடிக்கிறோம். இந்த சூழ்நிலையில் மூளையின் முறைபடுத்தும் மையம், வியர்வைச் சுரப்பிகள் மற்றும் தசைகள் உடலின் வெப்பநிலையை (Body temperature) நிலையாக 37 டிகிரி செண்டிகிரேடில் வைப்பதற்கு, மேற்குறிப்பிட்ட அளவுகளில் குளிர்காலத்தில் 3 மடங்கு அதிகமாகவும், வெயில் மற்றும் வசந்த காலங்களில் ஒரு மடங்கு மற்றும 1.3 மடங்குக்கு அதிகமாகவும் வியர்வையாக வெளியேற்ற வேலைசெய்ய வேண்டியதிருக்கிறது. இதனால் மூளையின் முறைபடுத்தும் மையத்தின் ஆற்றல் வெகுவாகக் குறைந்து நோய்வாய்ப்படுகின்றது. இதேபோல வியர்வைச் சுரப்பிகள் மற்றும் தசைகள் (sweat glands and muscles) வலுவிழந்து தோல், தசைகள் சம்பந்தப்பட்ட நோய்கள் தோன்றுகின்றன.      

42.       தாகம் எடுக்காமல நிறைய தண்ணீர் குடிப்பதால், வயிற்றில் ஏற்படும் நோய்கள்:
வயிற்றுக்குள் சுரக்கின்றஇரப்பைச் சாறானது (Gastric juice)  நீர், மினரல் உப்புக்கள், சளி, ஹைடிரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid)  முதலியனவற்றை தன்னுள் கொண்டுள்ளது.

43.       மேலே குறிப்பிட்டபடி, உணவு செரிப்பதற்கு வேண்டிய நீரை, இரப்பைச் சாறுமூலம், வயிறு தானே உற்பத்திசெய்துகொள்கிறது என்பது தெளிவாகிறது. ஆகவே வெளியிலிருந்து நாம் உடலுக்குள் தண்ணீரை (தாகம் எடுக்காமல்) செரிப்பதற்காக, அனுப்பவேண்டியதில்லை.

44.       ஹைடிரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid)  உணவை அமிலமயமாக்குகிறது; உணவிலுள்ள நோய்க்கிருமிகளை அழித்து உணவை தூய்மையாக வைத்திருக்கிறது; உணவு செரிப்பதற்கு வேண்டிய அமிலத்தேவையை வழங்குகிறது. தாகம் எடுக்காமல் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதால ஹைடிரோ குளோரிக் அமிலம்  நீர்த்துப்போய்விடுகிறது. அதனால், அமிலத்தின் வலிமை குன்றி, அது செய்யும் பணிகளில் குறைபாடுகள் ஏற்பட்டு, அமிலம் சம்பந்தமான நோய்கள் வயிற்றில் தோன்றுகின்றன.

45.       சளி (Mucus), வயிற்றிற்குள்ளிருக்கும் பொருட்களுக்கு, வழவழப்பைக் கொடுத்து, வயிற்றிற்கு ஏற்படும் விபத்துக் காயத்தை தடுக்கிறது; அரிக்கும் இரைப்பைச் சாறுக்கு (Gastric juice), சளியானது, ஒரு தடையாகச் செயல்பட்டு, வயிற்றிற்கு ஏற்படும் வேதியல் காயத்தை (chemical injury) தடுக்கிறது. தாகம் எடுக்காமல் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் சளியின் வழவழப்புத் தன்மை நீர்த்துப்போய்விடுகிறது. அதனால் சளியின் வழவழப்புததன்மையில் வலிமை குறைந்து, அது செய்யும் பணிகளில் குறைபாடுகள் ஏற்பட்டுசளி சம்பந்தமான  நோய்கள்  வயிற்றில் தோன்றுகின்றன.

46.       செரித்தல் (Digestion):
செரித்தலை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. இயந்திர செரித்தல் (mechanical digestion) 2. வேதியல் செரித்தல் (chemical digestion)
இயந்திர செரித்தலில், வயிற்றின் மிருதுவான தசைகளால் உண்டாகும் கலக்கும் அலைகள் (mixing waves) என்றழைக்கப்படும் சுருக்கங்களால் (contractions) உணவுத் துண்டுகள் (boluses of food) வயிற்றுச் சாற்றுடன கலக்கப்படுகிறது. அப்படி கலக்கும்போது சைம் (chvme) என்று சொல்லக்கூடிய கெட்டியான திரவமாக மாறுகிறது. தாகம் எடுக்காமல் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதால், வயிற்றின் மிருதுவான தசைகளால் உண்டாகும் சுருக்கங்களுக்கு, தண்ணீர் அழுத்தம் கொடுத்து எதிர்க்கிறது. அதனால் சைம் திரவம் கெட்டிப்படாமல் நீர்த்துப்போகிறது. அதனால் செரிமானத்தில் குறைபாடு ஏற்பட்டு நோய்கள் தோன்றுகின்றன.

47.       வயிற்றுச் சாற்றில் உள்ள நொதிகளால் (enzymes) மிகச் சிறிய உண்வுத்துகள்கள், மிக நுண்ணிய உணவுத்துகள்களாக வேதியல் முறையில் மாற்றப்படுகின்றன. ஒரு நொதி கொழுப்பை, கொழுப்பு அமிலமாக மாற்றுகிறது. மற்றொரு நொதி புரோட்டினை அமினோ அமிலமாக (amino acid) மாற்றுகிறது. தாகம் எடுக்காமல் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதால நொதிகள் நீர்த்துப்போகின்றன. அதனால் உணவுச்சத்துக்களை நுண்ணிய சத்துக்களாக மாற்றுவதில் குறைபாடு ஏற்படுகிறது. இதனாலும் வயிறு சம்பந்தமான நோய்கள் தோன்றுகின்றன.

48.       உப்பை உணவில் சேர்ப்பதால் இருதயம், ரத்தம், சிறுநீரகம், தோல், மூளை ஆகியவற்றின் வேலைப்பழு கூடுகிறதா?அதனால் அந்த உறுப்புகளுக்கு ஏற்படும் சேதங்கள் யாவை?

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும், என்ற பழமொழி பிரபலமானது. உப்பைத தின்றவன் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? உப்பு உணவைச் சேர்ந்ததல்ல;. உடலுக்குள்ளிருக்கும் பொருள். அந்த உப்பை வெளியிலிருந்து செலுத்தும்பொழுது வேண்டாத பொருளாகிவிடுகிறது. வேண்டாத பொருள் எதையும் உடல் தனக்குள் வைத்திருக்காது. அதை (உப்பை) வெளித்தள்ள தண்ணீரை குடிக்க வேண்டியதிருக்கிறது. ஆகவேதான் மேற்கூறிய பழமொழி வந்தது. மிருகங்கள் உணவில் உப்பு சேர்ப்பதில்லை. ஆனால் மனிதன் உப்புச் சேர்ப்பதால், தாகம் அதிகமெடுத்துத் அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறான்,

49.       அந்த பழமொழியை நிரூபிக்கமுடியும். அட்டவணை-1 பாருங்கள். 7-4-1999, 8-4-1999 ஆகிய இரு தேதிகளிலும் மூன்று வேளைகளிலும் உப்பு சேர்க்கவில்லை. ஆகவே 6-4-1999-ந் தேதி குடித்த நீரான 1200 மில்லி லிட்டரிலிருந்து மேற்குறிப்பிட்ட இரு தேதிகளிலும் 500 மி.லி ஆகவும் 700 மி.லி ஆகவும் முறையே குறைந்துவிட்டது. 9-4-1999, 10-4-1999 ஆகிய தேதிகளில் உணவில் பாதி (50%) உப்புத்தான் சேர்த்தேன். அப்பொழுது முறையே 900 மி.லி, 800 மி.லி ஆக கூடிவிட்டது. நாம் உப்பு சுவைக்காகத்தான் சேர்க்கிறோம். அதனால் வேறு எந்த பயனும் இல்லை.

50.       உப்பு சேர்த்து சாப்பிடுவதால் 1200 (6-4-1999 தேதி குடித்த நீரின் அளவு) மி.லி. நீர் தேவைப்படுகிறது. உப்பை உணவில் சேர்க்காதபோது சராசரி 600 [500 (7-4-1999)+ +700 (8-4-1999)=1200/2=600] மி.லி நீர்தான் தேவைப்படுகிறது. உப்பைப் சேர்ப்பதால் கூடுதலாக 600 (1200-600=600) மி.லி நீர் குடிக்கிறோம். இந்த கூடுதலான் நீர், உணவில் சேர்தத உப்பை வெளியேற்ற பயன்படுத்தப்படுகிறது. ஆகவே நமது உடலுக்கு எந்த பயனும் இல்லாத உப்பை வேளியேற்ற, நமது இருதயம், ரத்தம், சிறுநீரகம், மூளை,, தோல் ஆகிய உறுப்புகள் (Organs) கூடுதலாக வேலை செய்து, இந்த 600 மி.லி நீரை வெளியேற்றுகிறது. இதனாலும் அந்த உறுப்புகள் வலுவிழந்து, பழுதாகி நோய்வாய்ப்படுகின்றன. ஆகவே உப்பின் உபயோகத்தை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள்.

51.       உயர் ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது?
a.         உடலே உணவிலிருந்து சோடியத்தை உற்பத்தி செய்கிறது.
b.         தாகம் எடுக்காமல் நீர் குடிக்கிறீர்கள்; அந்த நீரில் சோடியம் (Sodium) இருக்கிறது.
c.         உணவில் உப்பு சேர்க்கிறீர்கள்; அதில் சோடியம் இருக்கிறது.
d.         அந்த உப்பை வெளியேற்ற கூடுதலாக நீர் குடிக்க வேண்டியதிருக்கிறது. அதில் சோடியம் இருக்கிறது.

52.       மேற்கூறியவற்றில், உணவிலிருந்து உற்பத்தியாகும் சோடியம் உடலுக்குப் போதுமானதாகும். மற்ற கீழே உள்ள மூன்றின் மூலமும் சோடியத்தின் அளவும், நீரின் அளவும் உடலில் கூடிவிடுகிறது. அதனால், மேலே பத்தி 36(b)-ல் சொல்லியபடி ரத்த அழுத்தமும் கூடுவிடுகிறது. உடனேநீரையும் சோடியத்தையும் உடலை விட்டு வெளியேற்றி, சிறுநீரகம், அதன் வடிவமைத்த அளவுக்கு  ரத்த அழுத்தத்தை குறைக்கிறது (blood pressure regulation);;;.> அதனால் அதற்கு மேல் ரத்த அழுத்தத்தை குறைக்க இயலாத நிலைக்குச் சென்றுவிடும்போது, உயர் ரத்த அழுத்தம் (high blood pressure) மக்களுக்கு ஏற்படுகிறது.

53.       உயர் ரத்த அழுத்தத்தால், பக்கவாதம் (stroke), கரோனரி இதய நோய் (coronary artery disease)> இதய விரிவு (heart enlargement) இதய இயக்க நிறுத்தம் (heart failure), டிமென்ஷியா (dementia), தூக்கத்தில் மூச்சுத்திணறல் (sleep apnea), சிறுநீரக இயக்க நிறுத்தம் (kidney failure), பாலியல் பிறழ்ச்சி (sexual dysfunction), கண் பாதிப்பு (damage to the eye), எலும்பு இழப்பு (bone loss)) முதலிய நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள்.

54.       நான் மேற்குறிப்பிட்ட உண்மை தெரிந்தவுடன் தயிர் ஊற்றி சோறு சாப்பிடும்போது உப்பு சேர்ப்பதை நிறுத்திவிட்டேன். சில நாட்களுக்கு சிரமமாக இருந்தது. இப்பொழுதெல்லாம் உப்பு சேர்த்தால் தயிறு சோறு சாப்பிடப்பிடிப்பதில்லை. ஒரு சில நாட்கள் குழம்பில் உப்பு இல்லாவிட்டாலும் அல்லது சோற்றில் மற்றும் வதக்கிய காய்கறிகளில் உப்பு இல்லாமலிருந்தால் அதை ஒரு குறையாகச் சொல்லாமல் சாப்பிட்டுவிடுவேன்.

55.       தாகம் எடுக்காமல், நிறைய தண்ணீர் குடிப்பதால், நுரையீரலில் சேரும் திரவம் (Fluid), மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள்:
தாகம் எடுத்துத் தண்ணீர் குடிக்கும்போது, அந்த நீர் அனைத்தையும் உடல் பயன்படுத்திவிடுகிறது. ஆகவே ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளில் ரத்தம் மட்டும்தான் செல்லும். தாகம் எடுக்காமல் நிறைய தண்ணீர் குடிக்கும்போது, அந்தத் தண்ணீரை உடல் பயன்படுத்துவதில்லை. அந்தத் தண்ணீர் ரத்தத்தோடு செல்லுகிறது. நுரையீரல்களில் உள்ள நரம்புகளில் (veins) ரத்தமும் தண்ணீரும் சேர்ந்து செல்லும்பொழுது, இரண்டும் கொடுக்கும் அழுத்தத்தால் அந்நரம்புகளில் ஒழுக்கு (leakage) ஏற்பட்டு திரவம் (fluid) நுரையீரல்களில் சேருகிறது. காலப்போக்கில் இந்தத் திரவ சேர்க்கை அதிகமாகிக்கொண்டே போகும்.

56.       மேலே 51-ல் நான்கு விதங்களில் சோடியம் உடலில் சேர்கிறது என்பதைப் பார்த்தோம். 51(a)-வது எண்ணில் உடல், உணவில் உற்பத்தி செய்யும் சோடியம்தான் சரியான அளவாகும். மற்ற மூன்றும 51(b,c,d); அதிகப்படியான சோடியமாகும். உடலில் அதிக அளவு சோடியம் சேரும்போது, நுரையீரல்களில் திரவம் (நீர்) , சேர்ந்து கொண்டே போகும் (water retention).

57.       மேற்கூறிய இரண்டு வழிகளில் இந்தத் திரவ சேர்க்கை நுரையீரல்களில அதிகமாகும்போது, மூச்சுத் திணரல்(shortness of breath) களைப்பு (Fatigue)> பலவீனம் (Weakness), பதட்டம் (Anxiety), ஓய்வு இல்லாமை (restlessness), அதிகப்படியாக வியர்த்தல் (Excessivesweating), தோல் வெளுத்துப் போதல்(Paleskin), இருமல் (Cough) ஆகிய நோய்கள்  தோன்றும்.

58.       20-11-1998 அன்று நான் தாகம் எடுத்துத் தண்ணீர் குடித்த நாள். அன்று காலை 10 மணியைப் போல தூத்துக்குடி அனல்மின்நிலைய கட்டுப்பாட்டு அறைகளைக் கடந்து, என்னுடைய அலுவலகத்துக்கு மெதுவாக நடந்து போய்க்கொண்டிருந்தேன். திடீரென்று எனது மார்புப் பகுதியில் என்னை அழுத்திப்பிடித்துக் கொண்டிருந்த பிடிப்புபட்டென்று விலகியதுஎனக்குள் ஒருவிடுதலை (Relief)’ கிடைத்தது போன்ற ஒரு மகிழ்ச்சி பொங்கியது. என்னை அறியாமலே நான்விசுக்விசுக் என்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன். இதுநாள்வரை என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தஇளப்பு (Wheezing)’ என்னை விட்டு விலகியதில் எனக்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. அன்றுதான் அரோமணியின் 4-வது விதியை இறைவன் எனக்கு வெளிப்படுத்தினான். அந்த விதி,  “தாகம் எடுக்காமல் குடிக்கும் தண்ணீரின் அளவுக்குத் தகுந்தாற்போல நோய்கள் தோன்றும், என்று கூறுகிறது.  

59.       தாகம் எடுக்காமல், நிறைய தண்ணீர் குடிப்பதால், கல்லீரலில் (Liver) ஏற்படும் நோய்
தாகம் எடுக்காமல 2லி என்று தண்ணீர் குடிக்கும் போது, மேலே 51(bcd)-ன் படி சோடியத்தின் அளவு அதிகமாகும்போது, கல்லீரலில் திரவம் சேர்ந்து கொண்டே போய் (water retention) (Swelling) அதனை வீங்க (Swelling) வைத்துவிடும். இந்த நோய்கொழுப்பு கல்லீரல் நோய்(fatty liver disease)’ என்று அழைக்கப்படுகிறது

60.       தாகம் எடுக்காமல், நிறைய தண்ணீர் குடிப்பதால், மண்ணீரலில் (Spleen) ஏற்படும் நோய்
ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள், ,புத்தகத்தில், உடலுறவு செயல்களின்போது, சிறப்பு ஒதுக்கப்பட்ட கூடுதலான ரத்தம்(SREB-special reserved extra blood) ஆணுறுப்புக்குப் போனால்தான், அது விறைக்கும். என்று சொல்லியிருந்தேன். உறுப்புகள் வேலைகளில் ஈடுபடும்போதுதான், அந்த சி..கூ.ரத்தம் அவைகளுக்கு செல்லும். மற்ற நேரங்களில், அதாவது தூங்கும்போது, அந்த ரத்தம் மண்ணீரல் கிட்டங்கியில்தான் (godown) இருப்பு (Stock) வைக்கப்படும். இதனால் அதன் உருவம் ரத்தம் கூடும்போது விரிவடையும், குறையும்போது சுருங்கும். தாகம் எடுக்காமல் குடிக்கும் 2லி நீரினால் ரத்தத்தின் கன அளவு கூடி அதன் உருவம் விரிவடைந்து பெரியதாகி விடுகிறது. பிறகு அது சுருங்குவதே இல்லை. அதுவிரிவடைந்த மண்ணீரல் (enlarged spleen)என்ற நோயாகிவிடுகிறது. இந்த நோயுள்ளவர்களுக்கு வயிற்றின் மேல் இடது பக்கம் வலி ஏற்பட்டு, தோள்பட்டை வரை வலி பரவும் (pain in the upper left abdomen that may spread to the shoulder) ,களைப்பு (Fatique), அனிமியா (anemia), சுலபத்தில் ரத்த ஒழுக்கு (bleeding easily), சாப்பிடாமலே வயிறு நிரம்பிவிட்டது போன்ற உணர்வு (feeling full without eating) ஆகியவை ஏற்படலாம்.

61.       தாகம் எடுக்காமல், நிறைய தண்ணீர் குடிப்பதால் கால் மூட்டில் (மநெந) ஏற்படும் வலி.
மூட்டு வீக்கமாக (swollen knee) இருக்கும். இதை மக்கள்நீர்க்கட்டு (water on the knee)|’, என்பார்கள். இது எப்படி ஏற்படுகிறது? மூட்டு அசைந்து கொடுத்து நடப்பதற்கு ஏதுவாக, மூட்டு இணைப்பில், ‘சைனோவியல் (synovial)என்ற வழவழப்புக் கொடுக்கிற லூப்ரிக்கேட்டிங் திரவம் (lubricating liquid) இருக்கும். அதாவது நாம் ஆயில் எஞ்சின் நகரும் இணைப்புகளுக்கு (Joints) ‘கிரீஸ் என்கின்ற கட்டியான திரவத்தை பூசிவிடுவோம். உடனே அது சத்தம் இல்லாமல் நன்றாக வேலை செய்யும். அதைப்போலத்தான் இந்தத்சைனோவியல் திரவம், நாம் சிரமம் இல்லாமல் நடப்பதற்கு வேண்டிய வழவழப்பைக் கொடுத்து உதவுகிறது.

62.       2 லிட்டர் தாகம் எடுக்காமல் குடிக்கும் அதிகப்படியான நீர் ரத்தத்தோடு கலந்து நரம்புகளில் செல்லும்போது, இரண்டினுடைய அழுத்தத்தாலும் மூட்டு இணைப்பில் ஒழுக்கு (leakage)  ஏற்படுகிறது. இந்த ஒழுகிய திரவம் சிறிது சிறிதாகச் சேர்ந்து கொண்டே வருகிறது. இதைத் தவிர பத்தி 51-ல் நான்கு விதங்களில் சோடியம் உடலில் சேர்கிறது என்பதைப் பார்த்தோம். உடலில் அதிக அளவு சோடியம் சேரும்போது (51 bcd), மூட்டில் திரவம் (நீர்) , சேர்ந்து கொண்டே போகும் (water retention)

63.       மேற்கூறிய இரண்டு வழிகளில் இந்தத் திரவ சேர்க்கை அதிகமாகும்போது காலப்போக்கில் மூட்டு வீக்கத்தைக் கொடுத்துவிடுகிறது. அந்தப் பகுதி, அதாவது மூட்டின் பின்பகுதி வீங்கியும், வெதுவெதுப்பாகவும், சிகப்பாகவும், வலித்துக் (pin) கொண்டிருக்கும். தண்ணீர் சேர்ந்த கிரீஸ் கெட்டி இருகிப் போய், இணைப்புகளை பிடித்து எஞ்சினை ஓடவிடாமல் செய்துவிடும். இதேபோலத்தான், நீரும் ரத்தமும் கலந்த திரவ ஒழுக்கால், ‘சைனோவியல் திரவம் வழவழப்புத் தன்மையை இழந்து வலியுடன் மூட்டுவை நகர முடியாமல் செய்து விடுகிறது.,

64.       தாகம் எடுக்காமல், நிறைய தண்ணீர் குடிப்பதால் கணையம் (Pancreas) எப்படி பாதிக்கப்படுகிறது?
கணையம், சிறுகுடலில் உணவு செரிப்பதற்காக, ஆற்றல் வாய்ந்த செரிப்பு சுரப்பி நீர்களை (enzymes) வெளியேற்றுகிறது. அடுத்து, உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றலை உடல் நன்கு பயன்படுத்துவதற்கு உதவி செய்ய, கணையமானது, இன்சுலின் (Insulin), குளுகோகான் (glucogon) என்னும் இரண்டு ஹார்மோன்களை (Harmones) வெளியேற்றுகிறது.

65.       2 லிட்டர் என்று குடிக்கும் அதிகப்படியான நீரானது மேற்குறிப்பிட்ட செரிப்பு சுரப்பு நீர்களையும், ஹார்மோன்களையும் நீர்த்துப்போகச் செய்கிறது. அதனால், சிறுகுடலில் உணவு செரிப்பதில் குறைபாடு ஏற்படுகிறது; ஹார்மோன்களும் நீர்த்துப் போய், உணவினால் கிடைக்கும் ஆற்றல் குறைந்து அதன்பயன்பாட்டில் குறைபாடு ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் குறைபாடுகளில் ஒன்றுதான் சர்க்கரைச் சத்து நோயாகும்.

66.       தாகம் எடுக்காமல், நிறைய தண்ணீர் குடிப்பதால் தைராய்டு (Thyroid) எப்படி பாதிக்கப்படுகிறது?
ரத்தத்தில் உள்ள தைராய்டு ஹார்மோன்கள் உடல் வளர்சிதை (metabolism) வளர்ச்சி, மேம்பாடு, நிலைத்த உடலின் வெப்பநிலை மற்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2 லிட்டர், 3 லிட்டர் என்று குடிக்கும் அதிகப்படியான நீரானது ரத்தத்தையும், தைராய்டு ஹார்மோன்களையும் நீர்த்துப்போகச் செய்கிறது. இதனால் தைராய்டில் கோளாறுகள் ஏற்பட்டு, அதில் பல்வேறு நோய்கள் தோன்றுகின்றன.

67.       தாகம் எடுக்காமல், நிறைய தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ரத்த அழுத்தத்தால் கண்கள் (Eyes) எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?
மேலே 51-ல், நிறைய தண்ணீர் குடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் எப்படி ஏற்படுகிறது என்பதைப் பார்த்தோம். உங்களுடைய கண்ணுக்குப் பின் ரெடினா தசை(Retina tissue) உள்ளது. இதுதான் நீங்கள் பார்க்கும் பொருளிலிருந்து வரும் வெளிச்சத்தை சிகனல்களாக மாற்றி அந்தப் பொருளை மூளை அடையாளம் காணும்படியாகச் செய்கிறது. உங்களுடைய ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருக்கின்ற பொழுது, ரெடினாவின் ரத்தக்குழாய்களின் சுவர்கள் தடித்து, சுருங்கி விடுகின்றன. இதனால், ரெடினாவுக்குப் போகும் ரத்தத்தின் அளவு குறைந்து அது வீங்கி (Swollen) விடுகிறது. நாளடைவில், உயர் ரத்த அழுத்தம், ரெடினாவின் ரத்தக் குழாய்களை சேதமாக்கி, பார்வைக் கோளாறுகளை (Vision problems) ஏற்படுத்திவிடும்.  

68.       அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று 2 லிட்டர், 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால், மேலே சொன்னபடி உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிப்படைவதையும் முக்கியமான நோய்கள் பல தோன்றுவதையும் பார்க்கிறீர்கள். உங்களுடைய தவறுகள் எதுவும் இல்லை. உங்களுடைய மற்றும் சொன்னவர்களுடையஅறியாமை என்னும் ; தவறால் வந்தவை. யார் சொன்னாலும் அதில் அனுபவப்பட வேண்டும்; அனுபவம் ஆராய்ச்சியைக் கொண்டுவரும்; ஆராய்ச்சி உண்மையை அளிக்கும். மேல்மனதில் இருப்பது அறியாமை; ஆத்மா; ஆழ்மனதில் இருப்பது உண்மை; பரமாத்மா. அறியாமையை வெற்றிகொள்வது பற்றிய கட்டுரையை, அடுத்து வரக்கூடிய கட்டுரையில் படித்துப் பலனைப் பெறுங்கள்.

69.       தாகம் எடுத்துக் குடித்தால் எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும்?
இந்த கேள்வியை பல பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இந்த கேள்வி எதைக் காட்டுகிறது என்றால், பலபேர் தாகம் எடுத்துத் தண்ணீர் குடிப்பதை மறந்தே போய்விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. தாகம் எடுத்துத் தண்ணீர் குடித்தால், அந்த தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். தண்ணீர் குடிக்க குடிக்க சுவை குறைந்து கொண்டே வரும். தாகமும் குறைந்துகொண்டே வரும். சுவையும், தாகமும் முழுவதும் குறைவது வரையில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுதான் அளவு.

70.       மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடித்தால் போதும் என்று கூறியதை  எனதுஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள் என்ற புத்தகத்தில் விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன்

71.       மேலே கூறப்பட்டதைப்போல, இறைவன்,உடலை தானியங்கியாகத்தான் (Automation),  வடிவமைத்திருக்கிறான். உதாரணமாக சிறுநீரகங்கள் உடலின் ரத்த அழுத்தத்தை நிலையாக வைத்திருப்பதற்கும், உடலின் நீரின் அளவை ஒரே மாதிரி வைத்திருப்பதற்கும் தானியங்கும் முறையில்தான் வேலைசெய்கிறது.   உடல் செம்மையாக இயங்குவதற்கு நீங்கள் வெளியிலிருந்து எதையும் நீர் குடிப்பது, மருந்து உட்பட செய்ய வேண்டியதில்லை. உடல் சொல்வதைக் கேட்டு அதன்பிறகாரம் நடந்தாலே போதும். நோய் நொடியில்லாமல் நீண்டகாலம் உயிர் வாழலாம். ஆகவே தாகம் எடுத்துத் தண்ணீர் குடியுங்கள்; உடலின் முக்கிய உறுப்புக்களான ரத்தம், சிறுநீரகங்கள், மூளை, இருதயம், நுரையீரல், தோல், வயிறு, கணையம், கல்லீரல், கண்கள், தைராய்டு, மூட்டுக்கள் ஆகிய உறுப்புகளில் ஏற்படும் நோய்களை, வராமல் தடுத்து விடலாம்

72.       சிறுநீரக செயலிழப்பால் ஒரு கூலி குடும்பத்துடன் தற்கொலை!
நான் இத்துடன் இந்த கட்டுரையை முடிக்க நினைத்தேன். ஆனால், அதை நீடிக்கும்படியாக, 1-3-2015 அன்று கோயம்புத்தூரிலிருந்து ஒருவர்எனக்கு இரு சிறுநீரகங்களும் பழுதுபட்டுவிட்டது. அதைத் தாங்கள் குணப்படுத்த முடியுமா?” என்று மிகவும் வருத்ததுடன் கேட்டார். அதற்கு நான்சிறிதளவாவது வேலை செய்யும் திறன் சிறுநீரகங்களுக்கு உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்ஒரு 10% வேலை செய்கிறது என்று சொன்னார்.” அதற்கு நான்தாகம் எடுத்துத் தண்ணீர் குடியுங்கள்; நீங்கள் வாங்கியஆரோக்கியத்திற்கு அரோமணியின் 9 விதிகள் புத்தகத்தின் 9 விதிகளை அப்படியே முழுக்க பின்பற்றுங்கள். உங்கள் சிறுநீரகங்களின் செல்கள் வளர்ச்சியடையலாம், என்று சொன்னேன். “அப்படியே செய்கிறேனுங்க, என்று சொல்லும்போது அவர் சிறிதளவு ஆறுதல் பெற்றார் என்பதை என்னால் தொலைபேசியின் மறுமுனையிலிருந்து அறிய முடிந்தது.

73.       13-3-2015-ன் ‘THE HINDU ஆங்கில நாளிதழில் செய்தி வந்திருக்கிறது. உலக சிறுநீரக நாளின்போது, சிறுநீரக மருத்துவ நிபுணர்கள் (Nephrologists)குறைந்த பட்சம் 2.5 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்கச் சொல்லி மக்களுக்கு அறிவுறுத்திருக்கிறார்கள். இதைப் படித்தவுடன் நான் மிகவும் வேதனைப்பட்டேன். இதைப்படித்தவுடன்தான் இந்த கட்டுரையை தொடர்ந்து எழுதவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டேன். இவர்கள் சொன்னதைப்போல 2500 (2.5 லி) மி.லி நீர் குடித்தால், 2.லி. குடிப்பவரைக்காட்டிலும், 2.5 லி. நீர் குடிப்பவருக்கு முன்கூட்டியே சிறுநீரகம் பழுது ஏற்பட்டு வேலைசெய்யாமல் போய்விடும்; இருதயம் வேலை செய்யாமல் போய்விடும், ரத்த புற்று நோய் விரைவில் வந்துவிடும்; தோல் வியாதிகள், மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், செரித்தல் சம்பந்தப்பட்ட நோய்கள் மூட்டு வலி, கல்லீரல், மண்ணீரல், கணையம், தைராய்டு, கண்கள் ஆகியவற்றில் ஏற்படும் நோய்கள் முன்கூட்டியே வந்துவிடும் ஒரு சிறுநீரக நோயாளியிடம் ஒருவர்நீ நிறைய தண்ணீர் குடி!”, என்று அறிவுறுத்தினால், “நீ விரைவில் சாவுக்குழிக்குப் போ!” என்று அறிவுறுத்துவதாகும்.

74.       20-3-2015-ன் ‘THE HINDU ஆங்கில நாளிதழில் செய்தி வந்திருக்கிறதுகணக்கன், ஒரு கூலி, அவருடைய மனைவி, மகன் மூவரும் விஷம் அருந்தியதில், கணக்கன் இறந்துவிட்டார். மனைவி சூரியகாந்தியும், மகன் சுடலைக்கனியும் உயிருக்குப் போராடும் நிலையில் தென்காசி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தற்கொலைக்குக் காரணம் மகன் சுடலைக்கனி சிறுநீரக நோயாளி. மேலும் காய்ச்சலாலும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறான். நடந்த SSLC பரிட்சையில் கலந்து கொள்ள முடியாத நிலையில் தன் மகன் இருந்ததை, தாங்கமுடியாத கணக்கன் தற்கொலை முடிவுக்கு வந்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

75.       மருத்துவப் பத்திரிகை மற்றும் புத்தக எழுத்தாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!
ஆக்கத்திற்குப் படைக்கப்பட்டவர்கள்அழிக்க அறுவுறுத்தலாமா? ஆம். டாக்டர்கள் ஆக்கப் படைக்கப்பட்டவர்கள். அவர்களை மக்கள் கடவுளாக மதிக்கிறார்கள்; வணங்குகிறார்கள். அவர்கள் சொல்லுவதை வேத வாக்காக எடுத்துக்கொள்கிறார்கள்; அதன்படியே நடக்கிறார்கள். ஆகவே, நான், மருத்துவக் கட்டுரை எழுத்தாளர்களையும், டாக்டர்களையும், பத்திரிகையாளர்களையும், தொலைக்காட்சியினரையும் மற்றும் மற்ற மருத்துவ தொழில் செய்பவர்களையும் தாழ்மையுடன் தலை வணங்கி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்தயவுசெய்து, தாகம் எடுத்துத் தண்ணீர் குடிக்க அறிவுறுத்துங்கள். விரைவில் சிறுநீரகங்களின் பழுதுகளையும், இருதய நோய்களையும், ரத்த நோய்களையும், தோல் நோய்களையும், வயிறு, மூளை, நுரையீரல், கணையம், கல்லீரல், தைராய்டு, கண்கள்ஆகியவற்றில் ஏற்படும் நோய்களையும் மூட்டு வலியையும் மக்களிடம் இல்லாமல் செய்துவிடலாம்.

ஆராய்ச்சிப் பதிவு:

                         அட்டவணை-1
16-12-1998 முதல்  15-05-1999 வரை தாகம் எடுத்துத் தண்ணீர; குடித்த அளவின் ஆராய்ச்சிப் பதிவு


வ.எ;
தேதி
  குடித்த நீர் மிமி

கருத்து     
 வ.எ   

 தேதி      
குடித்த நீர் மிமி 
l

           கருத்து
1
16-12-1998
400

1
27-02-99
800

2
17-12-98
0

2
28-02-99
600

3
18-12-98
200

3
01-03-99
800

4
19-12-98
200

4
02-03-99
800

5
20-12-98
700

5
04-03-99
1000

6
21-12-98
300

6
05-03-99
1000

7
22-12-98
400

7
06-03-99
700

8
23-12-99
0
தாகமில்லை.
8
07-03-99
800

9
24-12-98
400

9
08-03-99
200
மழைக்குணம்;
10
25-12-98
400

10
09-03-99
800

;
10 days average
3000
300

10 நாட்களின் சராசரி

7500
750
1
26-12-98
200

1
19-03-99
800

2
27-12-98
800

2
22-03-99
900

3
04-01-99
800

3
23-03-99
1400

4
05-01-99
600

4
24-03-99
1000

5
06-01-99
300

5
25-03-99
1200

6
07-01-99
900

6
29-03-99
1200

7
08-01-99
0

7
30-03-99
1200

8
09-01-99
500

8
31-03-99
1200

9
10-01-99
800

9
01-04-99
1200

10
15-01-99
400

10
02-04-99
1300

10
ehl;fs;
ruhrup
msT
5300
530

;
10 ehl;fspd; ruhrup msT
11400
1140
1
17-01-99
800

1
03-04-99
1200

2
18-01-99
400

2
06-04-99
1200

3
19-01-99
400

3
07-04-99
500
மூன்று நேரமும் உப்பு சேர்க்கவில்லை.
4

20-01-99
800

4
08-04-99
700
மூன்று நேரமும் உப்பு சேர்க்கவில்லை.
5
21-01-99
----
தா.இல்லை
5
09-04-99
       900
50% உப்பு சேர்க்கவில்லை>

6
22-01-99
1000

6
10-04-99
       800
50% உப்பு சேர்க்கவில்லை.


7
23-01-99
----
தா.இல்லை
7
11-04-99
800
ம.குணம்
8
24-01-99
800

8
12-04-99
1000

9
25-01-99
400

9
13-04-99
1200

10
26-01-99
800

10
14-04-99
1400


10 days average

5400
540

10 நாட்களின் சராசரி

9700
970
1
27-01-99
1000

1
15-04-99
1200

2
28-01-99
---
தா.இல்லை.
2
16-04-99
1200

3
30-01-99
800

3
17-04-99
1400

4
31-01-99
400

4
18-04-99
1400

5
01-02-99
400

5
19-04-99
900
ம..குணம்.;
6
02-02-99
1100

6
20-04-99
900
c ம..குணம் ;
7
03-02-99
200

7
21-04-99
900
ம..குணம் ;
8
08-02-99
1000

8
22-04-99
900
ம..குணம்
9
10-02-99
400

9
23-04-99
900
ம..குணம்
10
12-02-99
200
556 (10 நாட்களின் சராசரி
)
10
24-04-99
900
1060 (10 நாட்களின் சராசரி
;
1
14-02-99
600

1
25-04-99
900

2
15-02-99
600

2
26-04-99
1200

3
17-02-99
600

3
27-04-99
900

4
18-02-99
200

4
28-4-99
1200

5
19-02-99
700

5
29-4-99
1200

6
20-02-99
500

6
30-4-99
1200
986
7
23-02-99
600

7
1-5-99
800

8
24-02-99
600

8
2-5-99
700

9
25-02-99
600

9
4-5-99
1200

10
26-02-99
600
560(10 நாட்களின் சராசரி

)
10
5-5-99
-------- 10 நாட்களின் சராசரி
--
800
1010

1
6-5-99
800

2
10-5-99
1100

3
12-5-99
1100

4
13-5-99
1200

5
15-5-99
12005400
--------  5 நாட்களின் சராசரி

1080 (


அட்டவணையைப் பாருங்கள். தாகமில்லாத நாட்களில் நீர் அருந்தாமலிருந்திருக்கிறேன். வானிலை மப்பும் மந்தாரமாக மழைக்குணத்துடன் இருக்கும்போது தாகம் குறைந்து, குடிக்கும் நீரின் அளவு மிகவும் குறைந்து விட்டது.
அட்டவணை-2

                           அட்டவணை- 2
16.05.99லிருந்து 11.08.99 வரை சிறுநீர; வெளியேற்றம் மற்றும் தாகம் எடுத்துத் தண்ணீர; குடித்தது குறித்த ஆராய்ச்சி பதிவு.                                                                        

வ.எ
தேதி
குடித்த நீரின் அளவு மி.மி
சிறுநீர் மி.மி;
கருத்து
வ.எ;.
தேதி
குடித்த நீரின் அளவு மிமி
சிறுநீரின் அளவுமிமி;
கருத்து
1
16.05.99
800
900

1
27.06.99
-
700

2
17.05.99
700
450

2
28.06.99
1300
350
நீர் அதிகம். சிறுநீர் குறைவு.
3
18.05.99
-
950

3
29.06.99
1000
1200
நீரைக்காட்டிலும் சிறுநீர் அதிகம்.
4
25.05.99
-
350

4
04.07.99
-
500

5
26.05.99
-
650

5
06.07.99
1200
800
நீரைக்காட்டிலும் சிறுநீர் குறைவு
6
28.05.99
-
500

6
07.07.99
600
700
நீரைக்காட்டிலும் சிறுநீர் அதிகம்
7
30.05.99
-
400

7
08.07.99
875
500

8
31.05.99
-
600

8
14.07.99
-
600

9
01.06.99
-
350

9
15.07.99
-
6501002.06.99-
500
565 (10 நாட்களின் சராசரி)
1017.07.99600
630 (6  நாட்களின் சராசரி))
நீரைக்காட்டிலும் சிறுநீர் மிகக் குறைவு
1
03.06.99
-
550

1
18.07.99
800
700

2
04.06.99
-
500

2
19.07.99
300
1100
நீரைக்காட்டிலும் சிறுநீர் மிக அதிகம்  
3
05.06.99
-
500

3
20.07.99
900
600

4
06.06.99
-
400

4
21.07.99
300
400

5
08.06.99
-
500

5
22.07.99
600
500

6
09.06.99
-
350

6
01.08.99
400
500

7
10.06.99
-
750

7
02.08.99
1100
850

8
11.06.99
-
750

8
03.08.99
1000
600
நீரைக்காட்டிலும் சிறுநீர் குறைவு.
9
12.06.99
-
350

9
04.08.99
700
700
நீர் = சிறுநீர்

10

13.06.99

-

600
525 (10  நாட்களின் சராசரி)


10
05.08.99
1200
730(
10  நாடகளின் சராசரி)
350
630


நீரைக்காட்டிலும் சிறுநீர் மிகக் குறைவு.


1
14.06.99
1400
500
நீரைக்காட்டிலும் சிறுநீர்  மிகக் குறைவு..

1
06.08.99
1200
500
நீரைக்காட்டிலும் சிறுநீர்  மிகக் குறைவு.
2
18.06.99
1000
---
2
07.08.99
800
800
நீர் = சிறுநீர்
3
19.06.99
850
600
3
09.08.99
1100
550
நீரைக்காட்டிலும் சிறுநீர்  நீர் மிகக் குறைவு.
4
20.06.99
1000
700
4
10.08.99
500
700


5

21.06.99
1500
350
-do-
5
11.08.99
600

420 (5day நாடகளின் சராசரி)s average)
700

325 (5 5days average)நீரைக்காட்டிலும் சிறுநீர் அதிகம்
6
22.06.99
1000
250
-do-.

7
23.06.99
1200
700
-do-

8
24.06.99
1250
700
-do-

9
25.06.99
1200
700
-do-


10

26.06.99

-
1040(
10  நாட்களின் சராசரி  )

450
550
 
அட்டவணையைப் பாருங்கள். தாகமில்லாத நாட்களில் நீர் அருந்தாமலிருந்திருக்கிறேன். வானிலை மப்பும் மந்தாரமாக மழைக்குணத்துடன் இருக்கும்போது தாகம் குறைந்து, குடிக்கும் நீரின் அளவு மிகவும் குறைந்து விட்டது.
               
                                                                                                                       
மேற்குறிப்பிட்ட குறிப்பு  எதை காட்டுகிறது? தண்ணீரின் தேவை மற்றும் சிறுநீரின் வெளியேற்றம். பருவகாலத்திற்குத் தகுந்தாற்போலவும், உண்ணும் உணவிற்குத் தகுந்தாற்போலவும், உடலுழைப்பிற்குத் தகுந்தாற்போலவும் கூடும் குறையும். அதை உடலே தீர்மானிக்கிறது. மனிதனின் அறிவு தீர்மானிக்கக் கூடாது

பசி எடுத்து உண்ணுதல், தாகம் எடுத்துத் தண்ணீர் குடித்தல் போன்ற 9 இயற்கை விதிகளையும் கடைப்பிடித்து, மனப்பயிற்சி மருத்துவத்தை அறிந்து, கவனவாழ்க்கைக்கு மாற, முழு உடல்மன நலம் பெற்று, இறைவனின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து, வாழ்க்கையில் வளம்பெற, உங்களுக்காக, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

உடலின் உறுப்புகளில் (Organs) தீராத நோய்கள் தோன்றுவதற்கு மனிதனின் அறியாமைதான் (Ignorance) வினையாக வந்து நிற்கிறது.மனிதனால் உருவாக்கப்பட்ட நோய்தான் சிறுநீரக செயலிழப்பு (kidney failure)                     கவனவாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்!

Healer, Medicinal Meditation Expert, Er.R.A.Bharaman BE.,FRHS.,RMP(AM).,DAcu, former Superintending Engineer, Tamil Nadu Electricity Board. Cell:+91 92035291;+91 7Please visit my website: nomedicine-tamil.com; email; twinmedicine@gmail.com Copyright to R.A.Bharaman alias Aromani 7854880126; 9442035291
 Updated:03-11-2016; 22-8-2017
A 208-MLM-அ,விதி 4-

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: