Wednesday, September 12, 2018

“சிறுநீரக கல்


“சிறுநீரக கல்லை தடுக்க!
A 205-MLM-அ.11 விதிகள்
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை,
              57/176A6, மூன்றாவது தெரு, பேரையூர் சாலை,
          உசிலம்பட்டி-625532.  செல் எண்கள் : 9442035291, 7092209028
.
அன்புள்ள ஐயா,
வணக்கம். நான் தினத்தந்தி சந்தாதாரர். 3-8-2018 நாளிதழில், தலையங்கம்./கட்டுரை பகுதியில், டாக்டர்.சவுந்திர ராஜன் எழுதிய “சிறுநீரக கல் பாதிப்பைத் தடுக்க என்ன வழி? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறீர்கஅந்தக் கட்டுரையில் “சிறுநீரகக் கல் வராமலிருக்க காலையில் வெறும் வயிற்றில் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இது தவறான கருத்து.. இன்று மக்கள் தாகம் எடுக்காமல் அதிகத் நீர் அருந்துவதால்தான், சிறுநீரகக் கல்லால் (kidney stone) பாதிக்கப்பட்ட நோயாளிகளும், சிறுநீரகச் செயலிழப்பு (kidney failure) நோயாளிகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறார்கள்.

தாகம் எடுத்துத் நீர் அருந்தும்போது, அந்த நீர் முழுவதையும் உடல் பயன்படுத்தி விடுகிறது. தாகம் எடுக்காமல் குடிக்கும் தண்ணீர், உடலின், தசைகளில் உள்ள மினரல்ஸ் (minerals), வைட்டமின் (vitamin) ஆகியவற்றை அரித்து, மாசுக்களையும் சேர்த்துக் கொண்டு, இரத்தத்துடன் சென்று ஆங்காங்கே தங்கிச் செல்லும்போது, அரித்த மினரல்ஸ்யும், வைட்டமின் மற்றும் மாசுக்களையும் டெபாசிட் செய்கிறது. டெபாசிட் செய்யும் இடங்களுக்குத் தகுந்தாற்போல, வயிற்றுக் கல், சிறுநீரகக் கல் என்ற பெயர்களைப் பெறுகிறது. இதுதான் கற்களின் வரலாறு.

தாகம் எடுக்காமல் குடிக்கும் தண்ணீர், உடலுக்குத் தேவயில்லாத தண்ணீர். ஆகவே அந்த நீரை வெளியேற்ற இருதயம், இரத்தம் கல்லீரல், தோல், சிறுநீரகம், முதலியன அதிகம் வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. அதனால் அந்த உறுப்புகள் அதிக வேலை செய்வதால் பழுதாகி நோய்களாக வெளிப்படுகின்றன. இருதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, மற்றும் பல்வேறு நோய்கள், (என்னுடைய இணைப்புக் கட்டுரைகளில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்) தாகம் எடுக்காமல் குடிக்கும் நீரால்தான் தோன்றுகின்றன.

என்னுடைய ஆராய்ச்சியின் படி, குளிர் காலத்தில் 500 மிலி, கோடைகாலத்தில் 1000 மிலி மற்றும் வசந்தகாலத்தில் 700 மிலிதான் எனக்குத் தேவைப்பட்டது. இப்படி வானிலை மாற்றம், உழைப்பு, உணவு, உடல் நிலை ஆகியவற்றிற்குத் தகுந்தாற்போல, மேலே குறிப்பிட்ட அளவுகளில் சிறிது வேறுபடலாம். ஒரு நிலையான அளவு நீரை எல்லாக் காலங்களிலும் அருந்துவது நோய்கள் தோன்றுவதற்கு வழி வகுக்கும்.
இப்படிக்கு
ஹீலர் R.A.பரமன் என்ற அரோமணி
3-9-2018  
இணைப்பு-2

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: