Tuesday, December 25, 2018

மூச்சு திணறல்

A 198-MM Part 1-மருத்துவ மனபயிற்சி 3-
   மூக்கடைப்பு, மூக்கில் சளி, மூச்சிறைப்பு, நெஞ்சில் சளி கட்டுதல், இளப்பு ஆகிய நோய்களுக்கு மருந்தில்லா சிகிச்சை 1

மூச்சிறைப்பு, நெஞ்சில் சளி கட்டுதல், ஆஸ்த்மா ஆகியவற்றிற்கு மிக மிக மிக எளிய மருந்தில்லா மருத்துவம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். மூன்று மிக போடுவதற்கு தகுந்தவாறு எளிமையானது. இதற்குத்தான், நீங்கள் எத்தனை டெஸ்ட்கள், ஸ்கேன், எக்ஸ்ரே என்று எடுக்க வேண்டியதிருக்கு. எவ்வளவு நேரம் காத்திருப்பு; எவ்வளவு பணச்செலவு. உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வளவு துயரங்கள்! 

மேற்கூறிய நோயுள்ளவர்கள், சளி துப்புவதற்கு ஒரு குவளையை பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்தமான புத்தகத்தை அல்லது அன்றைய செய்தித் தாளை எடுத்துக்கொள்ளுங்கள். சிறுபிள்ளைகள் சத்தம் போட்டுப் பாடங்களைப் படிப்பது போல உரக்கச் சத்தம் போட்டுப் படியுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து சளி வர ஆரம்பிக்கும். வரக்கூடிய சளியை துப்புங்கள். அப்படி தொடர்ந்து படிக்கும்போது, சளியும் நீர் கலந்து இருமலுடன் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தேங்கியிருக்கும் சளியின் அளவுக்குத் தகுந்தாற்போல, முழு சளியும் வெளியேறுவதற்கு அரை மணி நேரம் அல்லது கூட ஆகலாம். முழுச் சளியும் வெளியேறிவிட்டால், மார்பில் உங்களை அழுத்திக் கொண்டிருந்த இறுக்கம் அல்லது பிடிப்பு முழுவதும் நீங்கி சுலபமாக உங்களால் மூச்சு விட முடியும்.

இது எப்படி வேலை செய்கிறது?
வேகமாகச் சத்தம் போட்டுப் படிக்கும்போது, காற்று வேகமாகச் உள்ளே செல்லுகிறது; சென்ற காற்று,, காற்றுப் பாதையில் உள்ள உறுப்புகளின் செல்களில் உராய்வை ஏற்படுத்துகிறது; உராய்வினால், வெப்பம் உற்பத்தியாகிறது. இந்த வெப்பத்தினால், நுரையீரல், மார்புப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் சளி பெயர்ந்து விடுகிறது. வேகமாகச் செல்லும் காற்றும் வெப்பமும் இணைந்து இருமலைத் தோற்றுவிக்கிறது. இருமல் பெயர்ந்து கிடக்கும் சளியை நீருடன் கொண்டுவந்து வாய் வழியாக வெளியேற்றுகிறது.. தொடர்ந்து வெளிவரும்பொழுது மார்பு இறுக்கம் குறைந்து மூச்சு விடுவது சுலபமாகிவிடும்.

சளி உற்பத்தியை குறைக்காவிட்டால், தினசரி சத்தம் போட்டுப் படித்துக்கொண்டிருக்க வேண்டும். அதற்குத்தான் அரோமணியின் 11 விதிகளையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் சளி உற்பத்தியைக் குறைக்க முடியும். சளியின் தேக்கத்தால்தான் மூச்சிறைப்பு ஏற்படுகிறது; நெஞ்சில் சளி கட்டுகிறது,. ஆஸ்த்மா வருகிறது. கிருமிகளால் நோய்கள் உண்டாவதில்லை என்பதை இனிமேலாவது நீங்கள் நம்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
                 கவன வாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்!



முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: