Monday, February 4, 2019

தமிழர்களே வெட்கப்படுங்கள் (shame) வேதனைப்படுங்கள்


தமிழர்களே வெட்கப்படுங்கள் (shame) வேதனைப்படுங்கள் (முக)


K 196-TMK-தமிழ் கல்வி- (
,         தமிழர்களே வெட்கப்படுங்கள்! வேதனைப்படுங்கள்
தாய்மொழி தமிழ்மொழிக் கல்வி அழியும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது!

1.     இன்றைக்கு ஆங்கில மொழி வழிக் கல்வியானது பெருநகரம் முதல் சிறிய குக்கிராமம் வரை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தாய்மொழி தமிழ்மொழிக்கல்வி கொஞ்சம் கொஞ்சமாக விலகி இடம் கொடுத்துக் கொண்டே போய் கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைக்கு உண்மை நிலவரம்.

2.     ஆங்கிலமொழிவழிக் கல்வியின் சில முக்கிய குறைபாடுகள் பற்றி நடுத்தர மக்கள் அறியாமையிலிருக்கிறார்கள். இதில் எனது அனுபவத்தைப் பற்றிச் சொல்வது நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

3.     சென்னையில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது எனது மகளை  ஆங்கிலப் பள்ளியில் L.K.G. சேர்த்து விட்டேன் . நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக டியூசன் (Tution) வேறு வைத்திருந்தேன். அது படித்த விதத்தைப் பார்த்தேன்.  ஒவ்வொரு வார்த்தையையும் மற்றும் வாக்கியத்தையும் திரும்பத் திரும்ப எழுத வைக்கிறார்கள். குழந்தைக்கு மனப்பாடச் சக்தி அதிகமிருப்பதாலும் வேறு கவனச் சிதறல்கள் இல்லாததாலும் ஆங்கில வார்த்தைகளையும் வாக்கியங்களையும் விரைவில் மனப்பாடம் செய்து ஒப்பித்து விடுகிறார்கள். மற்றபடி அர்த்தம் தெரிந்து படிப்பதில்லை.

4.       உதாரணமாக Sikh’s golden temple is in Amirssthar. இந்த வாக்கியத்தில் மூன்று வயது குழந்தைக்கு சீக்கீயர்கள் யார் என்பது தெரியுமா? அமிஸ்தர் என்பது ஊரின் பெயர் என்பது தெரியுமா ? எதுவுமே தெரியாது. ஆனால் திரும்பத் திரும்ப எழுதி மனப்பாடம் ஆகிவிடுகிறது. இதுவே, சீக்கியர்களின் தங்கக் கோவில் அமிஸ்தரில் இருக்கிறது என்று இருந்தால் என் குழந்தைக்கு நன்கு புரியும். காரணம் தாயார் கூட கோயிலுக்கு  போயிருக்கும். அம்மா போட்டிருக்கும் நகை தங்க நகை என்பது தெரியும். அமிஸ்தர் என்பது சென்னை போல அதுவும் ஒரு ஊர் என்று தெரிந்திருக்கும். ஆனால் இதுபோல எந்த அர்த்தமும் தெரியாமல்தான் அது   ஆங்கிலத்தில் படித்துக் கொண்டிருக்கிறது.

வகுப்பு ஆசிரியை  வீட்டுப்பாடம் (Home Work)  கொடுத்திருப்பார். டியூசன் (Tution) ஆசிரியையும் தன் பங்குக்கு வேறு வீட்டுப்பாடம் கொடுத்திருப்பார். இந்த இரண்டு வீட்டுப்பாடத்திற்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரவு நேரத்தில் தூக்கத்தில் என் குழந்தை. ‘அய்யோ ! ஹோம் ஒர்க் செய்யலியே ! டியூசன் மிஸ் (Tution Miss) அடிப்பாங்களே !’ என்று புலம்ப ஆரம்பித்தது. எனது மகளின் உடலும் தேறாமல் மிகவும் ஒல்லியாகவே இருந்தது. இதைக் கவனித்து வந்த எனக்கு மனதில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. குழந்தையுடன் தினசரி ஆங்கிலத்தில் உரையாட வேண்டும். அது படிக்கும் அத்தனைக்கும் தமிழ் அர்த்தமும் தெரிந்திருக்கும்படியாக வீட்டில் சொல்லித்தர வேண்டும். ஆனால் இதை என்னால் செய்யமுடியாது. எனது வேலைப்பளு அவ்வாறு இருந்தது. ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வந்து சேர இரவு 10 மணி ஆகிவிடும். மேலும் எனக்கு ஆஸ்துமா, மூக்கடைப்பு, தலைவலி போன்ற வியாதிகள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தன. எனது மனைவியால் எனது குழந்தைக்கு சொல்லித் தருகின்ற அளவுக்கு ஆங்கில அறிவு கிடையாது.  U.K.G யும் படித்து முடித்தது. ஆனால் நான் ஒரு தெளிந்த முடிவு எடுத்து விட்டேன்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து தாய்மொழி வழிக் கல்வியில் சேர்த்துவிட்டு விட வேண்டும்  என்று முடிவெடுத்து மாற்றாலாகிச் சென்ற ஊரில் அப்படியே சேர்த்து விட்டேன். நன்றாகவும் படிக்க ஆர்ம்பித்துவிட்டது. எனது மனைவியும் குழந்தையின் கல்விக்கு உதவி செய்ய முடிந்தது. ஒல்லியாக இருந்த உடம்பு தேறி சரியான எடை பெற்ற உடலாக தேறிவிட்டது. தாய்மொழிவழிக் கல்வி பயின்றே (மேல்நிலைப்பள்ளி வரை) எனது மகள் பொறியியல் பட்டமும், மகன் M.SC(MATHS).M.A.,B.L. , பட்டங்களும் பெற்றிருக்கிறார்கள்.

சென்னையில் நான் குடியிருந்த வீட்டுக்காரர் ஒரு ஒப்பந்தக்காரர். பணவசதி படைத்தவர். ஆனால் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில்  உரையாடுகின்ற அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்.  அவருடைய மனைவியும் குறைந்த அளவே படித்தவர்.  ஆனால் அவர் தன் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.  சில வருடங்கள் கழித்து அவருடைய வீட்டிற்கு நானும் எனது மனைவியும்  சென்றிருந்தோம்.  அவர்கள் குழந்தைகள் மூவரில் ஒருவர் கூட S.S.L.C. வரை கூடச் செல்லவில்லை.  இந்த நிலைதான் இன்று பிற்பட்ட மிகவும் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களில் நடுத்தர வர்க்கத்தில் காணப்படும்  புரையோடிவிட்ட புண்ணாகும்.  அவர்களுக்கு தங்கள் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில்  உரையாட முடியாது.  ஆங்கிலத்தில் சொல்லித்தர தெரியாது.  குறைந்த பட்சம் தனது குழந்தைகளிடம் சில ஆங்கில வார்த்தைகளால் கேள்விகள் கேட்டு குழந்தைகளின் கல்வி அறிவை சோதிக்கத் தெரியாது. இது எதில் கொண்டு போய்விடுகிறது என்றால், இடையிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தக் கூடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மக்கள் வேண்டுமென்றே  ஆங்கில மோகம் பிடித்துத் தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.  ஆங்கிலப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும்படியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைய தமிழ்மொழிவழிக் கல்வி படித்த பையன் எலக்டிரிக் சாமான்கள் வாங்கக் கடைக்குப் போகிறான் என்று வைத்துக் கொள்வோம். மின் பொருட்களும் (Electrical materials) மின் அணுப்பொருட்களும் (Electronic materials) மற்றும் பொறியியல் பொருட்களும் (Engineering materials) மற்ற மாநிலங்களில்தான் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகவே அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே ஏஜன்சி (Agency) எடுத்துக் கடைகள் வைத்திருக்கிறார்கள். அந்த மாதிரி கடைக்காரரிடம் சென்று இந்தப் பையன் காப்புப் பொருள் (Insulation tape ) ஒன்று கொடு. ஈயப்பற்ற வைப்புக்கோல் (Soldering iron) உங்களது கடையில் இருக்கிறதா? ஐந்து குதிரைத் திறனுள்ள மோட்டாருக்குத் (5 HP motor) ;துவக்கி’ (Starter) கிடைக்குமா என்று கேட்கிறான். வேறு மொழியைப் பேசும் கடைக்காரர் திறுதிறுவென்று முழிக்கிறான். நீ கேட்பது எதுவுமே என் கடையில் இல்லை என்று சொல்லிவிடுவான். Insulation tape, Soldering iron, starter ஆகியவற்றைத்தான் தமிழில் பையன் கேட்கிறான்.

மேற்கூறியவாறு தன் பையன் தான் செய்யும் தொழிலுக்குப் பயன்படும் பொருட்களையே வாங்குவதற்கு அவன் படித்தத் தாய்மொழிவழிக்கல்வி பயன்படவில்லை என்றால் அந்த மாதிரி கல்வி எதற்கு என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள். அந்தக் கடைக்காரனைத் தூய தமிழில்தான் பொருட்களின் பெயர்களை உச்சரிக்க வேண்டும் என்று உத்தரவு போடவும் முடியாது. அடிப்படை உரிமை பாதிக்கிறது என்று கோர்ட்டுக்குப் போய்விடுவான்.

அலுவலகத்தில் நிலவும் சூழ்நிலையைச் விளக்குகிறேன். “ உயர்மின் அழுத்தக் கம்பியில் ஏறி, கம்பியாளர் வேலை செய்யும் பொழுது, தவறி விழுந்து இறந்துவிட்டார். அவர் கையுறை அணியவில்லை. இடுப்புக் கயிற்றை கம்பத்துடன் கட்டிக்கொள்ளவில்லை என்பது போன்ற விபரங்கள் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும் கம்பிப் பாதுகாப்பு சான்றிதழும் அதற்குரிய அதிகாரம் பெற்றவரிடம் வாங்கிக் கொள்ளவில்லை. ஆகவே இறந்த கம்பியாளருக்கு எந்த நட்ட ஈட்டுத் தொகையும் அரசுச் சட்டப்படி வழங்க இயலாது. உத்தரவுக்கு வைக்கப்படுகிறது”. என்று குறிப்புடன் அதிகாரியின் அறைக்குள் உதவியாளர் செல்கிறார். அந்த அதிகாரி ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த I.A.S அதிகாரி. வேலையில் சேர்ந்து சில வருடங்களே ஆகிறது. தமிழ் நன்றாகப் படிக்கத் தெரியாது. குறிப்பைப் பார்த்த அவர் “ What is this? Call that P.A. Don’t you know English? Please put that it in English.” P.A. வைப் பார்த்து “ I have already given instruction that all notes must be put up in English. What are you doing?” வெளியே வந்த P.A. மற்றவர்களையும் பார்த்துஉங்களுக்கு சந்தோசம் தான! என்னை இப்படி மாட்ட வைச்சுட்டீங்க ! இந்த ஆளை ஏன் குறிப்பு எழுதச் சொன்னீங்க!” கோபிக்கிறார். தமிழ்வழிக் கல்வியில் பயின்ற உதவியாளர் தாழ்வு மனப்பான்மையால் கூனிக் குறுகி நிற்கிறார். இந்த நிலை தன் மகனுக்கு வர எந்தப் பெற்றோர்களாவது விரும்புவார்களா! மாட்டார்கள்!

ஆகவே தான் பெற்றோர்கள் ஆங்கிலவழிக் கல்வியைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். இந்த சூழ்நிலையை மாற்றி அனைவரும் தமிழ்மொழிவழிக் கல்வியை ஏற்று கொள்ளச் செய்ய பாடத்திட்டத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்படவேண்டும். இந்தப் பாடத்திட்டம் ஏற்கனவே இருந்த ஒன்றுதான். அந்த மாற்றத்தைச் செய்து விட்டால் மக்களுக்கு தங்கள் குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க ஆர்வம் கொள்வார்கள். மாற்றம் செய்ய வேண்டிய திட்டத்தைக் கீழே சமர்ப்பித்துள்ளேன்.   
நான் 1960-ல் S.S.L.C. தேறினேன். அப்பொழுது பாடத்திட்டம் கீழே சமர்ப்பித்துள்ளவாறு அமைந்திருந்தது.

ரெசிஸ்டன்ஸ் (Resistance) எனப்படுவது வோல்டேஜ்க்கும் (Voltage) கரண்டுக்கும் (Current) இடையே உள்ள ரேசியோ (ratio)ஆகும்.

கெமிக்கல் காம்பவுண்ட்கள் (Chemical compound) அவற்றின் பிசிக்கல் (Physical), கெமிக்கல் (Chemical) பண்புகளின் அடிப்படையில் ஆசிட்டுகள் (Acids), ஆல்கலைன்கள் (Alcalines), சால்ட்டுகள் (Salts) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பூமியைச் சுற்றி அட்மாஸ்பியர்  (Atmosphere) இல்லாமல் இருந்தால் பூமி (Earth) பகலில் தான் பெற்ற வெப்பத்தை -(Heat)-விட அதிகமான வெப்பத்தை இரவில் இழந்துவிடும்.

மேற்குறிப்பிட்டமாதிரி, பாடத்திட்டம் இருந்ததினால் எனக்கு P.U.C. யில் ஆங்கிலவழிக் கல்வியில் மாறுவதற்கு சிரமமே ஏற்படவில்லை. பொறியியற் கல்லூரியிலும் சிரமம் ஏற்பட்டதில்லை. ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருத்தமும் வந்ததில்லை.

இப்பொழுது உள்ள பாடத்திட்டத்தினை கீழே சமர்ப்பித்துள்ளேன்.
மின்தடை எனப்படுவது மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் ஆகும்.

வேதிச் சேர்மங்கள் அவற்றின் இயற்பியல், வேதியியல் பண்புகளின்  அடிப்படையில் அமிலங்கள், காரங்கள், உப்புகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பூமியைச் சுற்றி வளிமண்டலம் இல்லாமல் இருந்தால் பூமி பகலில் தான்         பெற்ற வெப்பத்தை விட அதிகமான வெப்பத்தை இரவில் இழந்துவிடும்.

மேலே குறிப்பிட்டப் பாடத்திட்டத்தில் ஆங்கில வாத்தை முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டது. இதனால் தமிழ்மொழிவழிக் கல்வி பயின்றவர்கள் நடைமுறை வாழ்க்கையில் பின்னடைந்து விடுகிறார்கள் என்பதை ஏற்கனவே விவரித்திருக்கிறேன். எனது குழந்தைகள் இருவரும் கல்லூரி கல்விக்கு மாறும்பொழுது, தூய தமிழ் கல்வி அவர்களுக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் பாதிப்பை இன்னும் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கிராமப்புற மாணவர்களின் ஆங்கில அறிவும் குறைந்து விடுகிறது. இதன் பாதிப்பு தமிழ்மொழிவழிக் கல்வி சொல்லித் தருகிற ஆசிரியருக்கும் ஏற்படுகிறது. இத்திட்டத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கிராமப்புற ஏழை விவசாயிகள் மற்றும் நகர்ப்புற ஏழைக் குழந்தைகள் தான். மூன்று வயது குழந்தை கூடஎங்கள் வீட்டில்கரண்ட் இல்லை,உங்கள் வீட்டில் இருக்கிறதா!” என்று மழலை சொல்லில் பேசும் சூழ்நிலையிருக்கும்போது, மாணவ மாணவிகள் தூய தமிழில் படிக்கச் சிரமப்படுகிறார்கள். ஆகவேதான் படிக்கமுடியாமல் வீட்டை விட்டு ஓடும் மனப்பாங்கு மாணவ மாணவிகளிடேயே அதிகரித்து வருகிறது.

இறைவன் எனக்கு அருளிய புதிய பாடத்திட்டத்தினை கீழே சமர்ப்பித்துள்ளேன்.


மின்தடை (Resistance) எனப்படுவது மின்னழுத்தத்திற்கும் (Voltage)  மின்னோட்டத்திற்கும் (Current) இடையே உள்ள விகிதம் (Ratio) ஆகும்.
வேதிச் சேர்மங்கள் (Chemical Compounds)அவற்றின் இயற்பியல், (Physical) வேதியியல் (Chemical) பண்புகளின் அடிப்படையில் அமிலங்கள், (ACIDS) காரங்கள், (Alkalines) உப்புகள் (Salts) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பூமியைச் சுற்றி வளிமண்டலம் (Atmosphere) இல்லாமல் இருந்தால், பூமி (Earth) பகலில் தான் பெற்ற வெப்பத்தை (Heat) விட அதிகமான வெப்பத்தை இரவில் இழந்துவிடும்.

மேற்கூறியபடி பாடத்திட்டம் அமைந்தால் படிக்கும் பையன் பல்லாயிரக்கணக்கான தொழில் நுட்ப வார்த்தைகளைத் தூயத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தெரிந்து கொள்கிறான். நடைமுறை வாழ்க்கையின் நீரோட்டத்தில் சேர்ந்து விடுகிறான். ஆங்கில அறிவும் மேம்படுகிறது. ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் கற்றதை மறக்காமல் இருக்க முடிகிறது. பையன் பரீட்சையில் ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைகளையும் ஆங்கிலத்திலேயே எழுதவேண்டும். அதற்குத் தனியாக மார்க்குகள் வழங்கப்படவேண்டும்

மேற்கூறிய திட்டத்தை மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். தமிழ்மொழிவழிக் கல்வியும் மேன்மை நிலையை அடையும். பள்ளிப்படிப்பை விட்டு நிற்கும் (Drop out) மாணவர்களின் எண்ணிக்கையும், படிக்க முடியாமல் வீட்டைவிட்டு ஓடும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கையும் குறையும். தமிழ்வழிக் கல்வியில் மாணவர்களும் ஆர்வத்துடன் சேர்வார்கள். உயர்கல்வி பயிலும்போது ஆங்கிலவழிக் கல்விக்கு மாறுவது மாணவர்களுக்குச் சுலபமாக இருக்கும். ஆங்கிலம் தெரியாததால் தற்கொலை செய்து கொள்ளும் தொழில்கல்வி மாணவர்களின் எண்ணிக்கையும் குறையும்.

27-11-2007 அன்று தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணப்புரத்தைச் சேர்ந்த பொறியியற்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் விது, ஆங்கில அறிவு இல்லாமையால், தற்கொலை செய்து கொண்டது அரசியல் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், அறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்லலாம்.

மேற்குறிப்பிட்டத் திட்டத்தை விரைவில் அமுல்படுத்தாவிட்டால் விது போன்ற பல தமிழ்வழிக் கல்வியில் படித்துவரும் ஏழைவிவசாயிகளின், விவசாயக் கூலிகளின் மற்றும் நகர்புற ஏழை உழைக்கும் மக்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்யக்கூடிய நிலை தொடரும்.

மேற்கூறிய திட்டப்படி படித்ததால், P.U.C யில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பொறியியற் கல்லூரியில் சேரமுடிந்தது. மற்றொன்றையும் இங்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். என்னோடு தமிழ்வழிக்கல்வி பயின்றவர்கள்தான் முதலாமாண்டு பல்கலைக்கழக தேர்வில் முதல் ரேங்க் பெற்றவர்கள். ஆங்கிலமொழி வழியாகக் கல்வி பயின்றவர்கள் பல பேர் தேறமுடியவில்லை. சிலர் படிப்பைத் தொடரமுடியாமல் கலைக்கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். இதற்குக் காரணம், தமிழ்மொழிக் கல்வி மாணவர்கள் அறிவியலையும் கணிதத்தையும் புரிந்து படிக்கிறார்கள். ஆனால் ஆங்கிலமொழி கல்வி பயின்றவர்களுக்கு ஆங்கிலம் நன்றாகப் பேசுவதற்குத் தெரியுமே தவிர, அறிவியல் கணிதப் புரிதல் குறைவாகவே இருக்கும்

டாக்டர்.வா.செ.குழந்தைசாமி, அகில உலக தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் (International Institute of Tamil Studies) துணைத் தலைவர்மதிவளம் நமது செல்வம்என்ற நூலில் மையத் தேர்வுகளில் தமிழகத்தின் சரிவு அறுபதுகளிலேயே தொடங்கிவிட்டது என்பது பற்றி புள்ளிவிபரங்களுடன் விளக்கியுள்ளார்

டாக்டர் ஐயா குறிப்பிட்ட I.A.S தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டினரைப் பற்றிய அட்டவணை.


1.      ஆண்டு
2.      மொத்தம் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்
3.      தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழ்நாட்டினர்
4.      தமிழ்நாட்டினர்%
5.      1950-54
6.      169
7.      41
8.      24.3
9.      1955--59
10.  287
11.  89
12.  31
13.  1960-64
14.  422
15.  79
16.  18.7
17.  1965-69
18.  534
19.  43
20.  7.4

21.  1970-74
22.  592
23.  49
24.  6.8
25.
 
1950-54-ல் தேர்ந்து எடுக்கப்பட்டத் தமிழ்நாட்டினர் 24.3% ஆக இருந்து 1970-74-ல் 6.8% ஆக குறைந்து விட்டது. அடைப்புக் குறிக்குள் இருந்த ஆங்கில தொழில் நுட்பச் சொற்களை முழுவதுமாக நீக்கிவிட்டது, ஆசிரியர்களின் ஆர்வக் குறைவும், மாணவர்களிடையே கவனச்சிதறல்களும், லட்சிய மற்றப் போக்கும் இதற்குக் காரணமாய் கூறமுடியும்.

இதனால் மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லும் பொழுது குறைந்த ஆங்கில அறிவை வைத்துக்கொண்டு பார்வை நூல்களையோ (Reference books) ஆய்வுத் தாள்களையோ (Research journals) படித்துப் புரிந்து கொள்ளும் திறமை அற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். டாக்டர் அவர்கள் எழுதிதைப்போல மையத் தேர்வுகளில் முதன்மைத் தேர்வு (Main examination) எழுதும் நிலையை எட்டுபவர்களே மிகக் குறைவு.

ஆங்கில மொழியின் முக்கியத்தைப்பற்றி டாக்டர் ஐயா அவர்கள் தனது ;தாய்மொழி பெறாததை சமுதாயம் பெறாதுஎன்ற நூலில் கீழே கொடுத்துள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல், தொழில் நுட்பம், உயர்கல்வித் துறைகள் ஆகியவற்றில் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகள் கூட ஆங்கிலத்தை அறிவியல்-தொழில் நுட்ப உலகின் மொழியாக ஒப்புக் கொள்ளத் தொடங்கிவிட்டன. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி, இந்த உண்மைக்குச் சான்று பகிர்கிறது.

ஆங்கிலம், பிரஞ்ச் ஆகிய இரண்டிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் பிரஞ்ச் விஞ்ஞானிகள், தாங்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டக் கருத்துக்கள், பிரஞ்ச் மொழியில் வெளியிட்ட கருத்துக்களைவிட மிக அதிகமாக மற்ற ஆய்வாளர்களால் மேற்கோல் காட்டப்படுவதை உணர்ந்தனர். ஆகவே சில ஆண்டுகளாக தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைப் பெரிய அளவில் ஆங்கிலத்திலேயே வெளியிடுகிறார்கள். Journal of Information Science-1983-6(2-3) 75-80 என்ற இதழில் வெளியிடப்பட்டிருந்த ஒரு ஆய்வுப்படி, 1976-80 ஆண்டுப் பகுதியில் ‘Endocriminology and Bio-Chemistry of Lactation & Reproduction’ என்ற துறையில் பிரஞ்ச் அறிவியல் அறிஞர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளில் 71 சதவீதம் ஆங்கிலத்தில் இருந்தன.

இது மிகப்பெரிய மாற்றம். ஏனெனில் 1960 களில் இத் துறையில் இக்குழுவினர் பிரசுரித்த எல்லாக் கட்டுரைகளும் பிரஞ்சு மொழியில்தான் இருந்தன”.


தாய்மொழி பெறாததை சமுதாயம் பெறாது!’ என்ற நூலில் மேலும் டாக்டர் ஐயா அவர்கள், “ஆங்கில நூல்களைப் பயன்படுத்தும் வாய்ப்பும் திறனும் நமது மாணவர்களுக்கு வேண்டும். அவற்றை அவர்கள் பயன்படுத்த வேண்டும்”,.என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் டாக்டர் ஐயா அவர்கள் கூறியதைப் போல தமிழ் வழிக் கல்வி என்பது தமிழ்வழிக் கற்பவர் நலனுக்காகவேயன்றி, தமிழுக்காகவன்று

துணைவேந்தர், பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் அவர்கள், “மாணவர்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெற வேண்டுமென்றால், மாணவர்கள், தொடர்பு கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ளவும், ஆங்கிலத்தில் உரையாற்றும் திறமையையும் வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்”, என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருப்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

டாக்டர் ஐயா அவர்கள், அந்நூலில் பண்டைய இலக்கிய மொழியான தமிழை அறிவுத் துறைகள் அனைத்திலும் ஆங்கிலம் போல பயன்படும் மொழியாக மாற்ற வேண்டும். தமிழில் அறிவியல் நடை உருவாக வேண்டும் என்று மேலும் கூறுகிறார்.

தற்போதுள்ள அறிவியல் புத்தகங்கள் தமிழ் அறிவியல் நடைமுறையில் எழுதப்படவில்லை அறிவியல் பாடங்கள் அனைத்திலும் அநேக வார்த்தைகள் தமிழிலேயே பொருள் புரியாமல் இருக்கும்போது மாணவர்கள் அவ்வார்த்தைகளை எப்படி நினைவில் கொள்ள முடியும். தமிழ் மொழியாக்கம் அறிவியல் நடைத் தமிழில் செய்யப்படவில்லை. சங்ககால நூல்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் மாணவர்கள் மனதில் நினைவில் வைத்துக் கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் ஆர்வம் குறைந்து வகுப்பறைகளை விட்டு வெளியிலேயே இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களது ஆங்கில அறிவும் குறைந்து மங்கி இறுதியில் இல்லாமல் போய்விடும் பரிதாபமான நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாணவர்கள் சிறு துண்டுத் தாள்களில் (bits) எழுதி திருட்டுத் தனமாக எழுதும் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் தாய்மொழி தமிழ்வழிக் கல்வியின் தரம் குறைந்து கொண்டு வருகிறது. இதனால் புற்றீசல்கள் போல ஆங்கில வழிக் கல்வியைப் போதிக்கும் நர்சரிப் பள்ளிகளும், மெட்ரிகுலேசன் பள்ளிகளும் பெருகிக்கொண்டு வருகின்றன. ஆங்கிலமொழிக் கல்வியில் படிப்பதற்கு நூறு மடங்குக்கு மேல் செலவு அதிகரித்துவிட்டது அச்செலவை ஈடுகட்ட லஞ்சம், தவறான வழிகளில் பொருள் ஈட்டுதல் அதிகரித்துவிட்டது. இந்த நிலை நீடித்தால் தமிழ்மொழி வழிக் கல்விப் பள்ளிக் கூடங்களை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழ்மொழி வழிக் கல்வியில் ஆங்கில அறிவு வளர்வதற்கு வேண்டிய மாற்றம் (எனது திட்டம்) செய்யப்படாவிட்டால், தற்கொலை செய்து கொண்ட தேனி மாவட்டம் பண்ணப்புரத்தைச் சேர்ந்த விது மாணவனைப் போல இன்னும் பல ஏழை மாணவர்களின் தற்கொலைச் செய்திகள் செய்தித் தாள்களில் வந்த வண்ணம் இருக்கும்

தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில்கோரிகிராவ்நன்றாக இருக்கிறது,கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட ஆகவில்லை’, ‘எனர்ஜி லெவல்’, ஆரம்பத்தில் இருந்து பிறகு குறைந்துவிட்டது, கோ-ஆர்டினேசன்உங்கள்டீமில்இல்லை, ‘பாடி லாங்குவேஜ்சரளமாக வெளிவர வேண்டும் போன்ற ஆங்கிலக் கலப்பு வார்த்தைகளை சரளமாக பயன்படுத்துகிறார்கள். இதனை மாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. ஆனால், ஏழை மாணவர்களை மட்டும் தூய சங்ககால ஆங்கிலக் கலப்பில்லாத படி உள்ள பாடங்களைப் படிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது?.

இன்று தொலைக்காட்சி (Televison), கணினி (Computer)ஆகியவை ஓங்கி  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தூய தமிழில் படிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்த ஒரு அரசியல் தலைவரின் புதல்வர், தலைவருக்கு அடுத்த பதவியில் இருந்தவர், 8-5-2016 அன்றுபுதிய தலைமுறைதொலைகாட்சி பேட்டியின்போதுதான் வெளியூருக்குப் போகும்போது மட்டும்வெஜ் (veg)’ தான் சாப்பிடுவேன். வீட்டுக்கு வந்தால் மட்டும்நான் வெஜ் (non-veg)’ சாப்பிடுவேன்”, என்று பேட்டியளித்தார். 26-7-2016 ந் தேதியிட்ட அவள் விகடன் இணைப்புப் புத்தகத்தில், “30 வகை ஆயில் ப்ரீ ரெசிப்பி”, என்று தலைப்பில் ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதியிருக்கிறார்கள். காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும்வரை அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆங்கில வார்த்தைகளையே பயன்படுத்துகிறார்கள். (.ம்) காலையில் எழுந்தவுடன்பற்பசைஎன்று யாரும் சொல்வதில்லை. ‘பேஸ்ட்எனவும், ‘வழலைக்கட்டியை’ ‘சோப்எனவும் சொல்லுகிறோம். ‘கொட்டை வடிநீருக்கு’ ‘காப்பிஎனவும், ‘தேநீருக்கும்’  ‘டீஎனவும், மதிய உணவுக்குலஞ்ச்எனவும் சிற்றுண்டிக்கு  ‘டிபன்எனவும் இரவு உணவுக்குடின்னர்எனவும் , விளக்கை எரியவை என்று சொல்லாமல், ‘லைட்டை ஆன் செய்என்றுதான் சொல்லுகிறோம்.   இப்படி எல்லாமே ஆங்கிலம் கலந்த தமிழ் பேசும்போது ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பாலகர்கள், இளம் மாணவர்கள் மட்டும் தூய தமிழில் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில் நியாயமில்லை.

இன்னும் நீதி மன்றங்களில் தமிழ் வழக்காடும் மொழியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. அரசு அலுவலகங்களில் மேல்மட்டங்களிலிருந்து (Higher offices) கீழ்மட்ட அலுவலகங்களுக்கு (Lower offices) வரும்  வழிமுறைகள் (instructions), கருத்துக்கள் (suggestions), ஆணைகள் (orders), குறிப்பாணைகள் (memorandams) ஆகியவை அனைத்தும் ஆங்கிலத்தில்தான் வருகின்றன. மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு வரும் மடல்கள் (letters) அனைத்தும் ஆங்கிலத்தில்தான் வருகின்றன. இந்த நிலையில் ஆங்கிலம் தெரியாமல் ஒருவர் அலுவலகங்களில் எப்படி பணியாற்ற முடியும். இதனால்தான் ஆங்கில அறிவு இல்லாமல், தூயதமிழில் மட்டும் படிக்க ஆர்வம் இல்லாததால், தமிழ்வழிக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டு வருகிறது.

கீழ்க்கண்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தலாம்..

மின்தடை (Resistance) எனப்படுவது மின்னழுத்தத்திற்கும் (Voltage) மின்னோட்டத்திற்கும் (current) இடையில் உள்ள விகிதம் (Ratio) ஆகும்.

வேதிச் சேர்மங்கள் (Chemical compound) அவற்றின் இயற்பியல்,வேதியியல் (Physical), (Chemical) பண்புகளின் அடிப்படையில்  அமிலங்கள் (Acids), காரங்கள் (Alcalines),  உப்புகள் (Salts) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பூமியைச் சுற்றி வளிமண்டலம்   (Atmosphere) இல்லாமல் இருந்தால் பூமி (Earth) பகலில் தான் பெற்ற வெப்பத்தை -(Heat)-விட அதிகமான வெப்பத்தை இரவில் இழந்துவிடும்.

மேற்கூறியபடி,  அறிவியல் (science), சமூகவியல் (social science), கணிதம் (mathematics) உட்பட அனைத்துப் பாடங்களிலும் அடைப்புக்குறிக்குள் ஆங்கில தொழில்நுட்ப வார்த்தைகளையும் போட்டு, 6-வது முதல் +2 வரையிலும் கற்றுத்தரவும், தமிழ்மொழியை ஒரு பாடமொழியாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை (post graduate) , ஆராய்ச்சி (Research), பொறியியல் பட்டம், முதுநிலை, ஆராய்ச்சி, , மருத்துவப் பட்டம், முதுநிலை, ஆராய்ச்சி, சட்டப் பட்டப்படிப்பு, முதுநிலை மற்றும் சட்ட ஆராய்ச்சிப் படிப்பு ஆகிய துறைகளிலும் பயிலுவித்தால், மாணவர்களின் ஒழுக்கம், பண்பாடு உயரும், ஆகவே மேல்நிலைத் தட்டுகளிலும் தமிழைப் பாடமொழியாக ஆக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மொழியில் மலிந்து கிடக்கும் ஒழுக்க நெறிமுறைகளை அறிந்துகொள்வதின் மூலம் மாணவர்களின் மூலமாக ஒழுக்கமும் பண்பாடும் தமிழ்க்கலாச்சாரமும் உலகம் முழுவதும் செல்வதற்கு ஏதுவாகலாம

மேற்கூறிய திட்டத்தை நிறைவேற்றினால்தான் தாய்மொழி தமிழ்மொழிக் கல்வி அழியாமல் காப்பாற்ற முடியும், பொதுமக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ஹீலர், மருத்துவ மனப்பயிற்சி நிபுணர், பொறிஞர் இரா..பரமன் (அரோமணி), BE.,FRHS.RMP(AM.).,DAcu. முன்னாள் மேற்பார்வைப் பொறியாளர் (Superintending Engineer,), தமிழ்நாடு மின்சார வாரியம். கைதொலைபேசி (cell): +91 9442035291; +91 7092209028.  www.medicineliving.blogspot.com                                                                 












முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: