Friday, April 12, 2019

மனவழுத்தமும், மனகவலையும் எங்கே சேருகிறது


மனித உடலில் மனவழுத்தமும், மனகவலையும் எங்கே சேருகிறது?

மார்பில்தான் மனவழுத்தமும் மனக்கவலையும் நிரம்புகிறது! அதை எப்படி அறிய முடியும்!

மார்பில்தான் மனகவலை நிரம்புகிறது என்பதை இறைவன் மக்களுக்கு தொன்றுதொட்ட காலத்திலிருந்தே தெரிவித்து வருகிறான்.  இதனை விளக்கவும் மறுபடியும் கிராமத்துக்கே வருகிறேன். பள்ளிக்கூடத்திற்கே செல்லாத இரு பெண்கள் சண்டை போடுகிறார்கள். அந்தச் சண்டையில், பாதிக்கப்பட்ட பெண், மற்றொரு பெண்ணைப் பார்த்துக் கோபத்திடன் சொல்லுகிறாள் “நீ எனக்குச் செய்த துரோகத்தை நினைத்தால், என் நெஞ்சே கணக்குது!” அந்தப் பெண் செய்த துரோகத்தினால் ஏற்பட்ட மனவழுத்தமும், மனக்கவலையும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மார்பில்தான் சேர்ந்திருக்கிறது; அதனுடைய சேர்க்கையினால்தான் மனம் கணக்கிறது.

மேற்கூறிய நிகழ்விலிருந்து, நாம் ஒரு முடிவுக்கு வரலாம். அதாவது, மார்பில் சேர்ந்துள்ள மன அழுத்தமும் (மஅ), மனக்கவலையும்தான் (மக) மார்பின் அடியில் உள்ள இறைவனை (உண்மையை) உணர முடியாமல், அறிய முடியாமல் மற்றும் இணையவிடாமல் தடுக்கிறது. மனவழுத்தத்தையும், மனக்கவலையையும் அகற்றிவிட்டால், இறைவனை (உண்மையை) உணர முடியும்; அறிய முடியும்; அவனோடு இணையவும் முடியும். மதங்கள் அளிக்கும் மனபயிற்சி மேற்கூறிய இரண்டையும் (மனவழுத்தத்தையும், மனக்கவலையையும்) முற்றிலுமாக அகற்ற முடியவில்லை. அதனால்தான், அந்த மதத்தினரிடையேயும் பிறருக்கு, எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் கெடுதல் செய்யும் மனபாங்கு இருக்கத்தான் செய்கின்றன. இந்து மத வழிபாட்டில் மனபயிற்சியே இல்லாததால், மஅ,மக-யும் அப்படியே அகற்றபடாமலிருக்கிறது. அதனால் இந்து மக்களிடையை துன்பமும் துயரங்களும் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கின்றன.

அந்த இரண்டும்தான் நீங்கள் இறைவனைப் பார்க்க முடியாமலும், இறைவனோடு ஐக்கியமாக முடியாமலும் தடுத்துக் கொண்டிருக்கிறது. மேற்கூறிய இரண்டையும் நீக்கி இறைவனோடு ஐக்கியமாவதற்குதான், மதங்கள் தோன்றி, அவற்றில் மனபயிற்சியை புகுத்தி வழிபாட்டு முறைகள் தோன்றின. அந்த  வழிபாட்டு முறைகள் முழுமை பெறாததால், இறைவனின் இருப்பை உணர்ந்து, இறைவனோடு ஐக்கியமாகாததால், இன்றளவு உலகில் அமைதி நிலவவில்லை. அப்பாவி ஈழத்தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். மியான்மரில் முஸ்லீம்கள் பலர் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கானோர் அகதிகளாக பங்களா தேசத்தில் தஞ்சம் புகுந்தார்கள். சிரியாவின் மூஸ்லீம் அகதிகள் மேற்கு நாடுகளில் பல்வேறு சொல்லொணாத துயரத்திற்குள்ளான பிறகு அகதிகளாக அனுமதிக்கப்பட்டார்கள். ஆகவே மதங்களின் நோக்கங்கள் நிறைவேறவில்லை என்றுதானே பொருளாகிறது.

            ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: