இம--உண்மைக் கடவுளை வணங்குவீர்; மிக உயர்ந்த நிலை அடைவீர்!
வாழ்நாள் முழுவதும் வணங்கி வரும்போது, உங்களது வாழ்க்கை உயர்ந்து கொண்டே போகும்.
ஹீலர்: தூணிலும்
துரும்பிலும் இருக்கும் இறைவன் மனிதனிடத்திலும் இருக்கிறான். மனிதனிடத்தில் மார்பில் உண்மை வடிவில் குடியிருக்கிறான்.
அங்கிருந்து கொண்டு அவனின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறான். அவனை வணங்குவோம்.
வணங்கும் முறை
இப்ப, அப்படியே
நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க!
இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை
வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!
இப்ப உங்க
மார்பையும், அது விரிஞ்சு சுருங்குவதையும்,
அதில் உள்ள இருக்க உண்ர்வையும் மனக்கண்ணால கவனிக்கவும்; அப்படி செய்யும்போது, வேறு
எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப்
பற்றியோ குறுக்கிட்டா, அவற்றை
நிறுத்திட்டு, விரிஞ்சு சுருங்குவதையும், மற்றும் அதில் உள்ள இருக்கம் அல்லது
பிடிப்பு உணர்வையும் கவனியுங்க; மீண்டும்
மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! 20
நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். இப்படி தினசரி, காலை, மாலை 20 நிமிடங்கள் வீதம்
செய்யவும். இரவில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும் வரை செய்யவும்.
ஹீலர், ஆர்.எ.பரமன்
(அரோமணி)
0 Post a Comment: