Saturday, August 10, 2019

தமிழ்மொழியும், இன்றைய தலைமுறையும்

“தமிழ்மொழியும், இன்றைய தலைமுறையும்…..”-இம
     
அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை
              57/176A6, 3-வது தெரு, பேரையூர் சாலை,
                 உசிலம்பட்டி-625532.
                  செல் எண்கள்: 9442035291, 7092209028.

       தமிழ்மொழியும், இன்றைய தலைமுறையும்
பெறுநர்
ஆசிரியர்,
‘தினத்தந்தி’ நாளிதழ்.
சென்னை-600007.

அன்புள்ள ஐயா,
வணக்கம். நான் தினத்தந்தி சந்தாதாரர். 10-7-2019, தேதி,  தினத்தந்தி நாளிதழின் கட்டுரை பக்கத்தில், “தமிழ்மொழியும், இன்றைய தலைமுறையும்…..” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறீர்கள். அதன் ஆசிரியர் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தைப் பற்றி சொல்லி வருத்தமும் எச்சரிக்கையும் விட்டிருக்கிறார்.

”வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்” என்பதைப்போல, ஆங்கிலத்தைக் கட்டுப்படுத்த அந்த ஆங்கிலத்தைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும். அதற்குதான், பள்ளிகளில் 6-வது வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையிலும் அடைப்புக் குறிக்குள் ஆங்கில தொழில் நுட்ப சொற்கள் பயன்படுத்தலாம் என்றும், கல்வியின் அனைத்து படிப்புகளிலும் தமிழை ஒரு பாட மொழியாக வைக்கலாம் என்றும் எனது திட்டத்தினை 2002-ம் ஆண்டு முதல் எழுதி போராடி வருகிறேன். எனது இரண்டு கட்டுரைகளையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

என்னுடைய கருத்தை சுமார் 2 3/4  கோடியை நெருக்கி வாசகர்களைக் கொண்டுள்ள “தினத்தந்தி” நாளிதழில் வெளியிட்டால், மக்கள் விழிப்புணர்வு பெற்று, அவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்போது,  எனது திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம் என்ற நம்பிக்கை உண்டு. ஆகவே எனது கருத்தை வெளியிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                 இப்படிக்கு
                                          தங்கள் உண்மையுள்ள 
                                   ஹீலர் R.A.பரமன் (அரோமணி)
                                            
 இணைப்பு 2 கட்டுரைகள்.

MISC-TAMIL EDUN-HC PANEL-16-3 18; MISC-TAMIL EDN-INT-12-7-19
EMAIL SENT ON 12-7-19 AT 8.15PM

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: