Saturday, August 17, 2019

ஆதிகால மனிதன் சாப்பிட்ட பிறகுதான்

 சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்யவேண்டும்! ஏன்?-இம
          அரோமணி ஆராய்ச்சி மைய மருந்தில்லா மருத்துவமனை. 
                      செல் எண்கள்: 9442035291’ 7092209028.
ஆதிகால மனிதன் சாப்பிட்ட பிறகுதான் வேட்டையாடச் சென்றான். 


ஆதிகால மனிதன் மிருகங்களை வேட்டையாடச் செல்லும்போது, சாப்பிட்டுவிட்டுத்தான் சென்றான். அப்படிச் சென்றதால், சாப்பிட்ட உணவு செரித்தல் ஆனது; செரித்தலினால் பசி எடுத்தது; பசியினால் மீண்டும் உணவு உண்டான். ஆகவே அவனுடைய வாழ்வின் வாழ்வாதாரம் உழைப்பு. உழைப்பு செரித்தலுக்காக; செரித்தல் பசிக்காக; பசி உணவுக்காக; உணவு உழைப்புக்காக.

நவீன கால மனிதனுக்கும் உழைப்புதான் வாழ்வாதாரம். ஆனால்,  உழைப்பு குறைந்துவிட்டதால், உழைப்பை ஈடுகட்ட உடற்பயிற்சி, நடைப்பயிற்சி வழக்கத்திற்கு வந்தது. அப்படி வரும்போது, அவன் சாப்பிட்டுவிட்டு உழைக்கச் சென்றதைப் போல, இவனும் சாப்பிட்ட பிறகுதானே நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், அதை மாற்றி வெறும் வயிற்றிலோ அல்லது ஒரு காபி மட்டும் குடித்துவிட்டு நடைப்பயிற்சி செய்து நோய்களை வரவழைத்துக் கொள்கிறான். ஆகவேதான் அரோமணியின் 10-விதி காலையும், மதியமும் சாப்பிட்ட பிறகு நடக்க வலியுறுத்துகிறது..

அரோமணியின் 11 இயற்கை விதிகளை கடைப்பிடித்து நோயின்றி வாழுங்கள்.

                           ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.





                       ஹீலர் அரோமணி

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: