Monday, October 21, 2019

யாதும் ஊரே!


    ஜாதகம் பார்ப்பதால் பலன் உண்டா?          

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.


பலன் உண்டா இல்லையா என்பது முக்கியமல்ல. ஐ.நா. சபை கூடத்தில் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்! தீதும் நன்றும் பிறர் தர வராது” என்ற தமிழ்புலவர் கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடல் இடம் பெற்றிருக்கிறது. அந்த பாடலைத்தான், சமீபத்தில், அமெரிக்காவில், நமது பாரத பிரதமர் ஐ.நா. பொதுக்குழு மாநாட்டில் பேசும்போது,மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.

அந்த பாடலின்படி, தீமையும், நன்மையும் பிறரால் வருவதில்லை. வெள்ளத்தின் வழியே தெப்பம் செல்லுவதைப் போல, உயிரின் வழியே ஊழ்வினை பயணிக்கிறது. ஊழ்வினை என்ற விதியின்படியே ஒருவருக்கு தீமையும், நன்மையும் நடக்கிறது. அதை எவராலும் மாற்ற முடியாது. இப்படி வேதமும், கீதையும் கூறியிருக்கிறது., விவேகானந்தரும் சொல்லியிருக்கிறார்.

மாற்ற முடியாத ஒன்றை ஜாதகத்தின் மூலம் அறிவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது. மருத்துவ மனபயிற்சிகளின் மூலம் நோய்களை குணபடுத்திக்கொண்டு, அதன் அனுபவத்தைக்கொண்டு கவனவாழ்க்கை வாழும்போதுதான் புலவர் சொன்ன உண்மையைக் காண்பீர்கள். மேலும் வரக்கூடிய தீமையையும், நன்மையையும் சமமாக பார்ப்பீர்கள். இயற்கை என்ற இறைவன், துயர காலங்களில் உங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுப்பதை நன்கு உணருவீர்கள்.
                ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Tuesday, October 8, 2019

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி!


                  

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

      மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி! 
      
மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு என்பது பெரியாருக்கும் தெரியும். மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மதச் சடங்குகள் ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதற்கு, வேறுவழியில்லாமல், “கடவுள் இல்லை’ என்ற கோட்பாட்டை கையிலெடுத்தார். மாற்றங்களை கொண்டு வந்தார். ஆனால் அவை நீடிக்கவில்லை.

அதற்கு காரணம், மக்களின் ஆன்மீகத்தின் வடிகாலாக,  புதிய வழிபாட்டு முறையை, பெரியார், அறிமுகபடுத்தி முற்றுப்புள்ளி வைக்காமல் மறைந்துவிட்டார். அதனால், தாய்க்கழகமான, திராவிட கழகத்தில் உள்ளவர்களைத் தவிர, பிரிந்து சென்றவர்கள் மூட மத சடங்குகளை கடைபிடிப்பதில் வழிகாட்டிகளாக மாறிவிட்டார்கள்.

தற்காலத்தில் ஊழ்வினையால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க, உதவ பெற்றோர்,உறவினர், நண்பர்களால் இயலாது. ஏனென்றால் அவர்களுடைய ஆற்றல் வரையறுக்கபட்டது. அளவில்லாத ஆற்றலைப் பெற்ற இறைவனால்தான் முடியும் என்ற நம்பிக்கைக்கு மக்கள் வந்து விட்டார்கள். ஆகவே வழிபாடு அவசியம் என்றாகிவிட்டது.

அந்த குறையை நிவர்த்தி செய்யதான், ‘கவனவாழ்க்கையை’ இறைவன் அறிமுகபடுத்தியிருக்கிறான். இந்த வாழ்க்கை முறையில், வழிபாடு முறை உள்ளடங்கியது. மூட நம்பிக்கைகள்,, பழக்கவழக்கங்கள் மத சடங்குகளுக்கு இடமில்லை. ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது, அந்தஸ்து பேதங்களுக்கு இடமில்லை. எவர் கவனவாழ்க்கை வாழ்கிறாரோ அவர் உயந்த நிலையில் இருப்பார்..
                          
              ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.



Wednesday, October 2, 2019

இப்பொழுது இரவு 7 மணி.


   திட்டமிடுதல் ஆக்கிரமிப்புக்குச் சமம்!                

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

         இப்பொழுது இரவு 7 மணி.

இப்பொழுது இரவு 7 மணி. இந்த நேரத்தில் இந்த கட்டுரையை படிக்கும் தொழிலைச் செய்கிறீர்கள். 7.00.01 நேரம் தள்ளி வருகிறது. உங்களது உழைப்பும் தள்ளிப் போகும்.

நீங்கள் உழைக்கும் 7 மணிதான் உங்கள் நேரம்; ‘அக்கண நேரம்’; அதாவது செயல் நிகழக்கூடிய ‘நிகழ்காலம்’; அதை அடுத்து வரக்கூடிய காலம்கூட எதிர்காலம்தான். 7.00.01 நேரமும் எதிர்காலம்தான்; உங்களுக்கென்று, உறுதிப்படுத்தப் படாத காலம். 

அந்த உறுதிப்படுத்த படாத காலத்தில் நடக்கும் நிகழ்வுகளைத்தான் கற்பனையிலும், திட்டமிடுதலிலும்,யோசித்துமுடிவெடுத்தலிலும் நேரத்தைச் செலவிடுகிறீர்கள். 

அதனால் தோன்றும் எண்ணங்களால் விளையும் மனவழுத்தத்தால்தான் 50% துன்பங்களை அனுபவிக்கிறீர்கள். அதாவது துன்ப நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காமலே துன்பங்களை அனுபவிக்கிறீர்கள்.  

இறைவன், நீங்கள் ஏற்கனவே செய்த நல்லது, கெட்டதுக்கு ஏற்றாற்போல, உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் துன்ப நிகழ்வுகளை, எதிர்காலத்தில்தான் திட்டமிட்டு வைத்திருக்கிறான். அதில் நீங்கள் திட்டமிடுவது அவனுடைய கால நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாகும். ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதுபோல, உங்கள் கற்பனை, திட்டம், முடிவெடுத்தல் ஆகிய மூன்றும் தவிடுபொடியாக்கப்படுகிறது.

ஆகவே ‘அக்கணம்’ என்னும் ‘நிகழ் காலத்தில்’ வாழ மருத்துவ மனபயிற்சிகளில் அனுபவம் பெற்று, கற்பனை வாழ்க்கையிலிருந்து, கவனவாழ்க்கைக்கு மாறுங்கள்; புதிய மகிழ்ச்சியான, உலகைக் காண்பீர்கள்!
                 ஹீலர் அரோமணி. 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Tuesday, October 1, 2019

எது உங்கள் நேரம்?


      24 மணி நேரத்தில் எது உங்கள் நேரம்                                       

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028. 

A 50- 




உங்கள் நேரம் என்பது, உங்களை வளமாக்க, நீங்கள் உழைக்கும் நேரம்தான் உங்கள் நேரம்.

கடந்த காலம் உங்களை கடந்து போய்விட்டது. அதில் நீங்கள் உழைக்க முடியாது. ஆகவே அதில் உங்க நேரம் கிடையாது.

நிகழ்காலத்தில்தான் நீங்கள் உழைக்க முடியும். நிகழ்காலத்திலும், இந்த கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் உழைப்பை செய்துகொண்டிருக்கிறீர்கள். உழைக்கக்கூடிய அந்த நேரம்தான் உங்கள் நேரம்.

இரவு 7.40-க்கு படிக்கிறீர்கள் என்றால், அந்த நேரம்தான் உங்களுக்குச் சொந்தமான நேரம். மணி 7.41- கூட உங்களுக்குச் சொந்தமில்லை. அந்த நேரத்தில் நீங்கள் உழைக்கவில்லை. ஆகவே, அது எதிர்காலத்தைச் சேர்ந்தது. அக்காலம் இறைவனுக்குச் சொந்தம்.

நீங்கள் நிகழ்காலத்தில் செய்யகூடிய நல்லது, கெட்டதுக்குத் தகுந்தாற்போல, உங்களுக்கு மகிழ்ச்சியோ, துன்பமோ இறைவனால் கொடுக்கப்படும் காலம்தான் எதிர்காலம். அதாவது ஊழ்வினை என்னும் விதியின் காலம்.


அந்த 7.40-துதான் ‘அக்கணம்” என்பது, ‘நிகழ்காலத்தில் வாழ்வது (Presently living)’ என்பது. ஆகவே ‘அக்கணத்தை’ பயனுள்ளதாக மாற்றி வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். வேலையில் கவனத்தைச் செலுத்தும்போதுதான், அந்த வேலை பயனுள்ள வேலையாக மாறும். எண்ணங்களை நீடிக்கவிடாமலிருப்பதுதான் கவனம் என்பது.  

               ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..