Thursday, March 12, 2020

வழிபாட்டை பூசாரிகளிடம் ஒப்படைத்தார்கள்

இந்தியா அந்நிய படைஎடுப்புகளில் வீழ்ந்தது ஏன்?

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.


சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028

D 6-TM-இம.ஆ

மனம் சார்ந்த வழிபாட்டை பூசாரிகளிடம் ஒப்படைத்தார்கள்!  
மன்னர்களும் மக்களும் மனம் சார்ந்த வழிபாட்டை பூசாரிகளிடம் ஒப்படைத்ததின் பலனாகவும், இறைவனோடு உள்ள நேரடி தொடர்பை இழந்ததாலும். போர்முறையில் புது யுக்தி கையாள இயலவில்ல; புது யுத்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கும் திறனற்று, பழைய வில், வாள், ஈட்டி, போன்ற ஆயுதங்களையே பயன்படுத்துகின்ற நிலைக்கு தள்ளபட்டார்கள்.

அதே காலகட்டத்தில், ஐரோப்பாவில் உள்ள நாடுகள், துப்பாக்கி, பீரங்கி ஆகிய தூரத்திலிருந்து எதிரிகளை கொல்லும் ஆயுதங்களை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்தார்கள். 

முதலில் முகலாயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து 200 ஆண்டுகள் ஆண்டார்கள். அதற்குபிறகு, வெள்ளையர்கள் வியாபாரிகளாக வந்தவர்கள், மன்னர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையை பயன்படுத்தி அடிமைபடுத்தி 200 ஆண்டுகள் காலம் ஆண்டார்கள். 

கம்யூனிசத்தின் தந்தை காரல் மார்க்ஸ் “பிரிட்டீஷ் அரசுக்கு இந்தியா காலனி நாடாக மாறியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காரணம் இங்கு மட்டும்தான் மக்கள் தங்களுக்குள் அனைவரும் அனைவருக்கு எதிராக இருக்கின்றனர். இந்தியாவின் சமூக கட்டமைப்பில் மிகவும் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக புரோகித வர்க்கம் விளங்கியது” என்று ‘மூலதனம்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இந்தியா 400 ஆண்டுகள் அடிமைபட்டதற்கு முக்கிய காரணம் மக்கள் மனம் சார்ந்த வழிபாடுகளை விட்டுவிட்டு உடல் சார்ந்த செயல்பாடுகளை வழிபாடுகளாக செய்து இறைவனின் அருளை பெறவில்லை. மனவளம் குறைந்து, அறியாமை பெருகி, அறிவுடமை குறைந்து, மூடநம்பிக்கைகள் அதிகரித்து அந்நியர் ஆட்சிகளில் சொல்லொணாத துயரங்களை அனுபவித்து வந்தார்கள். இன்றளவும் நிலமை மாறவில்லை



                    ஹீலர் அரோமணி
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
      


        



முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: