Saturday, April 11, 2020

உங்களுக்குள் ஈர்ப்பு! (முக)



இரட்டை மருத்துவம்.
மருத்துவ மனபயிற்சி மருத்துவம் (மமம)-பகுதி 1
(copy right registration No:L-21259/2003 dated 25.03.2003)
உடலின் ஈர்ப்பு விசை அதிசயங்களைச் செய்கின்றன!  

மருந்தில்லாமல் நோய்களை குணபடுத்துதல்!

மேலே கூறிய மருத்துவத்தை கண்டுபிடித்த அந்த நாள் இன்றும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.  அந்த நாளில் நான், கோயம்புத்தூர் மேற்பார்வை பொறியாளராக (Superintending Engineer) வேலை பார்க்கிறேன். 12-12-2000-ந் தேதி அன்று பல்லடம் கோட்டத்தில் முகாமிட்டிருந்தேன். அங்கு 12 மணிக்கு நடந்த விழாவில் சாப்பிட்ட சிற்றுண்டி சேராததால், தலைவலிக்க ஆரம்பித்தது. எனது அலுவலகத்தில் இருந்த அவசர வேலையின் நிமித்தம், அலுவலக காரில், கோயம்புத்தூருக்கு திரும்பி கொண்டிருந்தேன். காரின் பின்பக்கத்தில் உட்கார்ந்து வந்தேன்.  வலியை பொறுக்க முடியாமல், கண்களை மூடினேன். என்னை அறியாமலே என்னுடைய கவனம் வலி உணர்வின் மேல் இருந்திருக்கிறது. நடுநடுவே பல்வேறு எண்ணங்களும் வந்து போய்கொண்டிருந்தன. வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைவதையும் உணர்ந்தேன். நான் 45 நிமிடத்தில் வீடு வ்ந்து சேரவும். எனது தலைவலி குணமாகவும் சரியாக இருந்தது. எனக்குள் ஒருவிதமான மகிழ்ச்சி பொங்கியதை உணர முடிந்தது; புத்துணர்ச்சியை உணர்ந்தேன். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அன்று ஒரு புதிய மருத்துவம் உதயமானது.
டாக்டரை பார்க்காமலே வீட்டுக்கு திரும்பினேன்.
எனது நண்பர்களெல்லாம், ஒரு ஸ்பூன் பிராந்தி மூன்று நேரமும் எடுத்துகொண்டால், எனது எடை கூடும் என்று சொன்னார்கள். 7, பிப்ரவரி, 2001-ம் ஆண்டு மூன்று வேளையும், சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூன் பிராந்தி குடித்துவந்தேன். சரியாக ஒரு மாதம் இருக்கும். பிற்பகல் 4 மணிக்கு வயிற்றுவலி கடுமையாக இருந்தது. அதோடு, மலம் வருகிற உணர்வு ஏற்படும். ஆனால், கழிப்பறையில் உட்கார்ந்தால், மலம் வராது. எனக்கு நரக வேதனையாக இருந்தது.  டாக்டரை பார்க்கலாம் என்றால், எல்லா டாக்டர்களும் மாலை 6 மணிக்கு மேல்தான் வருவார்கள். அதை நினைத்த போது, வலியின் வேதனை இன்னும் அதிகமாகியது. பிறகு கால் மணி நேரம் கழிந்திருக்கும். திடீரென்று, 12-12-2000 அன்று தலைவலிக்கு செய்த மனபயிற்சி ஞாபகத்துக்கு வந்தது. உடனே அந்த மன பயிற்சியை செய்ய ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக வலி குறைய ஆரம்பித்தது. மாலை 6 மணிக்கெல்லாம், வலி பொறுக்கிற அளவுக்கு குறைந்திருந்தது. மலம் வெளியேறுவது போன்ற உணர்வும் நீங்கி விட்டது. இருந்தாலும் டாக்டரை பார்த்து ‘கன்சல்ட்’ செய்வது நல்லது என்ற எண்ணத்தில், வீட்டுக்கு அருகில் உள்ள டாக்டரைப் பார்க்க போனேன். என்னை அழைக்கக்கூடிய நேரத்திற்காக காத்திருந்தேன். அப்பொழுதும் வலி மனபயிற்சியை செய்து வந்தேன். அரை மணி நேரம் ஆகியிருக்கும். என்னுடைய வயிற்று வலி முழுவதும் குணமாகிவிட்டது. வலியே இல்லை. “இனி எதற்கு டாக்டரை பார்க்க வேண்டும்” என்ற எண்ணம் ஏற்படவும் டாக்டரை பார்க்காமலே எழுந்து வந்து விட்டேன். எனக்கு ஒரே வியப்பாகவும், வார்த்தைகளால் விபரிக்க் முடியாத மகிழ்ச்சியாகவும் இருந்தது.

2001 ஆம் ஆண்டு, பிப்ரவரி, 18-ந் தேதி அன்று இரவு 7 மணிக்கு பூச்சி ஒன்று, இடது பக்கம் தொள்பட்டையில் கடித்துவிட்டது. உடனே பயங்கரமான வலி எடுத்தது. நான் அறியாமலே எனது கவனம் வலியின் மீது இருந்தது. ஒரு சில நிமிடங்களில் வலி நின்றுவிட்டது. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. உடனே எனக்கு தெரிய வந்தது என்னவென்றால், உடலில் எந்த வலியாக இருந்தாலும்,. புதிய மனபயிற்சி கண்டுபிடிப்பு குணபடுத்திவிடும் என்பதுதான்.

அந்த ஆண்டு, பிப்ரவரி மாத கடைசி நாளில், அதிகாலை 3 மணிக்கு, இளப்பினால்  (wheezing) மூச்சு திணறல் ஏற்பட்டுவிட்டது. ஆழந்த தூக்கத்தில் இருந்ததால், எழுந்து உறிஞ்சு மருந்து எடுத்துகொள்ள முடியாமல் போய்விட்டது. தானாகவே எனது கவனம் மார்பில் உள்ள இறுக்க உணர்வில் இருந்தது. இறுக்க உணர்வை பொறுக்க மாட்டாமல், திரும்பி திரும்பி படுத்தேன். அவ்வாறு படுக்கும்போதெல்லாம் மனபயிற்சி தொடர்ந்து கொண்டிருந்தது. எப்பொழுது தூங்கினேன் என்பது நினைவில்லை. காலை 9 மணிக்கு எழுந்தேன். மூச்சுத் திணறல் எதுவும் இல்லாமல் இருந்தது. இரவில் மூச்சு திணறல் கனவு கண்டது போல ஆகிவிட்டது. புதிய மனபயிற்சி நல்ல தூக்கத்தில், நமது முயற்சி இல்லாமலே, தானாகவே ஆரம்பித்து நோயை குணபடுத்திவிடும் என்பதை அறிந்து வியப்பும்,
மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

அதிகமாக சாப்பிட்டதால், வயிற்றில் ஏற்பட்ட மந்த உணர்வு அரை மணி நேர்த்தில் குணமானது.
2 நாட்கள் கழித்து, இரவு 11 மணிக்கு ரயிலில் கோயம்புத்தூரிலிருந்து மதுரைக்கு போய்க்கொண்டிருந்தேன். அதிகமாக சாப்பிட்டதால், வயிறு மந்தமாக உணர்ந்தேன். அது எனக்கு கஷ்டமாக இருந்தது. பயண பையிலிருந்து ‘டய்ஜீன்’ மாத்திரை எடுக்கலாம் என்றால், ரயிலில் நல்ல கூட்டம்; அதனால் மாத்திரையை எடுக்க முடியவில்லை. திடீரென்று மனபயிற்சி நினைவுக்கு வந்தது. உடனே எனது கவனத்தை வயிறு சுருங்கி விரிவதின் மீதும், மந்த உணர்வின் மீதும் செலுத்தினேன். வேறு எண்ணங்கள் வரும்போதெல்லாம், அவற்றை நிறுத்திவிட்டு, கவனத்தை மீண்டும், மீண்டும் செலுத்தினேன். மந்த உணர்வு குறைய ஆரம்பித்தது. அவ்வுணர்வு மிகவும் குறைந்த நிலையில், சில நொடிகள் மூச்சற்ற நிலையும், பெருமூச்சும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. சில நிமிடங்களில் மந்த உணர்வு இல்லாமல் போய் விட்டது. அரை மணி நேரத்தில் அந்த மந்த உணர்வு என்னை விட்டு நீங்கியது. நான் இனந்தெரியாத மகிழ்ச்சியில் திளைத்தேன். அன்றையிலிருந்து அஜீரண மாத்திரை எடுத்துக்கொள்வதை விட்டுவிட்டேன்.
ஹெர்னியா வலி ஒரு மணி நேரத்தில் குணமானது.
2001-ம் ஆண்டு, நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மாலை 5 மணியைப் போல, ஹெர்னியா வலி ஆரம்பித்துவிட்டது. அடுத்த சில் நிமிடங்களில் வலி பொறுக்க முடியாத அளவுக்கு போய்விட்டது. மருத்துவ மனபயிற்சியை உட்கார்ந்து கண்களை மூடிச் செய்ய வேண்டும். ஆனால், நான் நோயினால் கஷ்டபட்டால் என் மனைவி பொறுக்க மாட்டாள். ஆகவே அது ஒரு நீளமான ஹால், அதில் நடந்துகொண்டே மருத்துவ மனபயிற்சியை செய்யலானேன். சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்த எனது மனைவி “ என்ன செய்றீங்க?” என்று கேட்டாள். அதற்கு நான் “மழைக் காற்று வீசிக்கிட்டுறுக்கு; வெளியே குளிரா இருக்கு; அதனால உள்ளேய நடந்திட்டிருக்கேன்” என்று சொன்னேன். ஒரு மணி நேரத்தில் வலி இல்லாமல் போய் விட்டது. அனைத்து நோய்களையும் எனது மனைவிக்கு கூட தெரியாமல் குணபடுத்தியதால், அந்த மருத்துவத்திற்கு இரகசிய மருத்துவ மனபயிற்சி மருத்துவம் என்று பெயரிட்டேன். எந்த நோயையும் பிறருக்கு தெரியாமல் சிகிச்சை எடுத்து நோய்களை குணபடுத்தி கொள்ளலாம்.

எல்லாம் வல்லவனிடமிருந்து, இரகசிய மருத்துவ மனபயிற்சி மருத்துவம் எதன் அடிப்படையில் வேலை செய்கிறது என்பதற்கான விளக்கத்திற்காக காத்திருந்தேன். நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்திலிருந்து, விளக்கம் குற்றால அருவியில் வீழ்வதைப் போல, வந்து கொட்டிக்கொண்டிருந்தது.
கோட்பாடு
ஒரு எடையுள்ள பொருளை அதாவது கல் என்று வைத்துகொள்வோம். மேலே தூக்கி எறிந்தால், அந்த கல் பூமியின் ஈர்ப்பு விசையால், கீழ் நோக்கி வந்து பூமியில் விழும். அதற்கு நியூட்டனுடைய புவி ஈர்ப்பு விசை என்று சொல்லுகிறோம். அதேபோலதான், மனிதர்களுடைய ஆசைகள், குறிக்கோள்கள், பிரார்த்தனைகள், ஆழ் மனதால் ஈர்க்கபடுகின்றன. அது ஆழ்மனதின் ஈர்ப்பு விசை என்று அழைக்கபடுகிறது.

எண்ணங்களை நீர்க் குமிழ்களோடு ஒப்பிடலாம். குளத்தின் ஆழத்தில் குமிழ்கள் மிக சிறியதாக ஆரம்பிக்கும். மேலே வர வர பெரியதாகிக்கொண்டே வந்து, மேல்பாகத்திற்கு வரும்போது பெரிய குமிழ்களாக ஆகிவிடும் அதேபோலதான் எண்ணங்களும் ஆழ் மனதில் மிக நுண்ணிய நிலையில் ஆரம்பித்து, மேல் நோக்கிய பயணத்தில் பெரியதாக வளந்து கொண்டே வருகிறது. மேல் மனதின் மேல் மட்டத்திற்கு வரும்போது, எண்ணனகளை புரிந்துகொள்ள முடிகிறது. பஞ்சுவுக்கு எடை அவ்வளவாக இல்லை. ஆகவே அதை பூமி ஈர்ப்பதில்லை; ஆகவே, அது கீழ் நோக்கி வராமல், காற்று அடிக்கும் திசைக்கெல்லாம் பறந்து செல்லும். அதைப்போலதான், எடையுள்ள எண்ணங்களைதான் ஆழ் மனம் ஈர்க்கும்; அவைகள் “அதுவுடன்” இணைக்கபடுவதனால், அவை பலன் பெறுகின்றன.  

கவுதமும், விஜையும், கவுதமின் வீட்டிக்குள்ளிருந்து கல்லூரிக்குப் போவதற்காக, வெளியே வருகிறார்கள். அதே நேரத்தில், எதிர் வீட்டிலிருந்து பிரீத்தி, கல்லூரிக்குச் செல்வதற்காக வெளியில் வந்து கொண்டிருக்கிறாள். பிரீத்தி குடும்பம், முதல் நாள்தான், கவுதம் வீட்டுக்கு எதிர் வீட்டிற்கு குடி வந்தது.

பிரீத்தியைப் பார்த்த, கவிதமுக்கு இன்ப கிழு கிழுப்பு ஏற்பட்டு, “ஆஹா! என்ன பியூட்டி, பாருடா! விஜை” என்று விஜையைப் பார்க்காமலே, அவனிடம் கூறுகிறான். விஜையும் “ஆமாம். பியூட்டிதான். அதனால் என்ன!” என்று சாதாரணமாக எடுத்துக் கொள்கிறான். கவுதம் அவளை பார்த்துக் கொண்டே “அவளை நான் அடைந்தே தீருவேன்” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் விஜை, அவனை வியப்புடன் பார்த்தான்.

கவுதம் பிரீத்தி மேல் காதல் கொள்கிறான். அவன் எண்ணத்தில் தோன்றிய வார்த்தைகளில் ஒரு குறிக்கோள் வந்து விடுகிறது. அதாவது அவனுடைய எண்ணங்களில் எடை வந்து விடுகிறது. ஆகவே, எடையுள்ள பொருளை பூமி ஈர்ப்பது போல, எடையுள்ள எண்ணங்களை ஆழ் மனது (Subconscious Mind) ஈர்க்கிறது. அதன்படி, கவுதமின் வார்த்தைகள் ஆழ்மனதால் ஈர்க்கபடுகிறது.  விஜையின் வார்த்தைகளில் ஒரு லட்சியமும் இல்லாததால், அவை ஈர்க்கபடவில்லை. காற்றில் மிதக்கும் பஞ்சு போல, அவனுடைய வார்த்தைகள் காற்றில் கலந்து காணாமல் போய் விடுகிறது.
மன அழுத்தம்:
வாழ்க்கையில் நடக்கும், சில நிகழ்வுகள், கண்முன்னால் நடக்கும் விபத்துக்கள், அடிதடி கலாட்டாக்கள், கொலைகள், நட்பில் விரிசல், உறவுகளிடையே நல்லிணக்கம் இல்லாததால் ஏற்படும் மனமுறிவுகள், திருமண முறிவுகள், கோபம், பயம், பதட்டம், பொறாமை, வெறுப்பு, தாழ்வு மனபானமை முதலியன மனதில் ஆறாத காயங்களாகி மன அழுத்தங்களை தோற்றுவிக்கிறது.

ஈர்க்கபட்ட எண்ணத்தின் பயணத்தின்போது நடக்கும் எதிர் வினகள்.
பூமியைச் சுற்றிலும், 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு காற்று சூழ்ந்திருக்கிறது. ஒரு கல்லை விட்டு எறிந்தால், அந்த கல், காற்றை கிழித்துகொண்டு மேலே போகும்போது, போகும் வழியில் உள்ள காற்றுக்கு அழுத்தம் கொடுக்கபடுகிறது அழுத்தபட்ட காற்று ஒட்டியுள்ள காற்றுக்கு அழுத்தம் கொடுக்கிறது. மற்றொரு எதிர்வினை என்னவென்றால், கல் போகும் வழியெல்லாம் காற்றை உரசிக்கொண்டு செல்வதால், வெப்பம் உற்பத்தியாகிறது. ஆக கல் மேல் நோக்கிச் செல்வதால், மேற்குறிப்பிட்ட இரண்டுவிதமான எதிர்வினகள் ஏற்படுகின்றன.

மேற்சொன்னதைப் போலவே, மேல் மனம், ஆழ்மனதால் ஈர்க்கபட்டு, எடையுள்ள எண்ணத்தை எடுத்துகொண்டு, கீழ்நோக்கி பயணிக்கிறது. அடி மனதில் பயணத்தின்போது, அங்கு சூழ்ந்துள்ள மன அழுத்தத்தை ஊடுருவிச் செல்கிறது. அழுத்தத்திற்குள்ளான மன அழுத்தம், மன அழுத்த எண்ணங்களாக மனதை விட்டு வெளியேறுகிறது. குறிக்கோள் எண்ணத்தோடு, மன அழுத்தம் உராய்வினால், வெப்பம் உற்பத்தியாகி, உடல் முழுவதும் பரவுகிறது. மேல்மனம் பயணத்தை முடித்துக்கொள்ளும்போது, குறிக்கோள் எண்ணமும் இருக்காது; மன அழுத்த எண்ணங்களும் இருக்காது. அந்த நிலையில், மேல் மனமானது ஆழ்மனதோடு இணைகிறது.

மேல்மனம் குறிக்கோளுடைய எண்ணத்தை, அதுவின் ஈர்ப்பினால், கீழ்நோக்கி பயணிக்கும்போது, எதிர்வினையால், மன அழுத்தம், மனவழுத்த எண்ணங்களாக மனதை விட்டு வெளியேறுகின்றன. இதைத்தான் மனம் அலைபாய்தல் என்கிறோம். மனம் அலைபாயாவிட்டால், பூமியில் மனித இனம் நிலைத்திருப்பது கேள்விகுறியாகிவிடும். காரணம், மனவழுத்தம் மனதிலிருந்து வெளியேறாவிட்டால், மனிதர்கள் மன நோய்களால் பாதிக்கபட்டு, நடைபிணங்களாகதான் வாழ்வார்கள்; அவர்கள் வாழவிரும்பாமல், தற்கொலை செய்து கொள்வார்கள். எல்லாம் வல்ல இறைவன், எப்பொழுதெல்லாம், மக்கள் துன்பங்களிலிருக்கிறார்களோ, அப்பொழுதெல்லாம், மனம் அலைபாய்தலின் மூலம், அவர்களுடைய துன்பங்களை குறைக்கச் செய்கிறார்.

கருப்பணன் சுப்புவை கொலை செய்தானா இல்லையா!
சுப்பு, கருப்பணனுடைய எதிரியின் மகன். அவன் கருப்பணனுடைய மகளை பொது இடத்தில் வைத்து கேலி செய்தான். அதை கேட்டவுடன், கருப்பணன், அடங்காத கோபத்தில், கையில் கத்தியுடன், சுப்புவை கொலை செய்வதற்கு அவனுடைய வீட்டிற்கு வேகமாக போய்க்கொண்டிருக்கிறான். அதை கவனித்த, கருப்பணனுடைய நண்பன் கார்த்திகேயன், அவனை இடைமறித்து, அறிவுரை கூறி, அவனுக்குப் பிடித்த சினிமா மற்றும் மற்ற கேளிக்கைகளுக்கும் அழைத்து சென்று, அவனுடைய வீட்டில் கொண்டுபோய் சேர்க்கிறான். அவ்வாறு 24 மணி நேர்த்தில், கருப்பணனுடைய கோபத்தை தணித்து, சாந்தபடுத்த கார்த்திகேயனுக்கு 24 மணி நேரம் தூங்கும் நேரம் உட்பட, தேவைபட்டது.  கருப்பணனின் கோபத்தை தணிகக கார்த்திகேயன் இரண்டு விதமான செயல்களை செய்கிறான். ஒன்று கருப்பணனை, கொலை செய்ய நினைக்கும் இடத்திலிருந்து கார்த்திகேயன் அப்புறபடுத்துகிறான். இரண்டாவது, நண்பனின் கோபம் தணிய, அவனுக்கு பிடித்த கேளிக்கைகளுக்கு (Entertainments) அழைத்து செல்கிறான். அந்தவிதமாக, கருப்பணனுடைய கோபத்தை தணிக்க, அவனுடைய கவனத்தை, கொலை செய்யும் எண்ணத்திலிருந்து திசை திருப்புகிறான்.
அந்த நிகழ்வு நடந்த இடத்தில் கார்த்திகேயன் இல்லாவிட்டால், கருப்பணனுக்கு என்ன ஆகும்? கருப்பணன் சுப்பு வீட்டிற்குச் சென்றிருப்பான். சுப்பு வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் கோபத்தோடு திரும்புகிறான். கருப்பணனை அழைத்துகொண்டு கார்த்திகேயன், கொலை நடக்ககூடிய இடத்தை விட்டு அப்புற படுத்தியதைப் போல,  கோபத்தை எடுத்துக்கொண்டு, மேல் மனமானது கீழ்நோக்கிப் பயணிக்கிறது. கோபத்தை கருப்பணனாகவும், மேல்மனதை கார்த்திகேயனாகவும் பாவித்துக்கொள்ளுங்கள். கோபத்திற்கு எடை இருப்பதால், அதை ஆழ்மனம் (Subconscious) ஈர்க்கிறது. கோபத்தை எடுத்துக்கொண்டு மேல் மனம் கீழ்நோக்கி பயணிக்கிறது. மனம் அலை பாய்தலின் மூலம் கருப்பணனின் மகளின் எதிர்காலம், குடும்ப நிலை, மற்ற குழந்தைகளின் முன்னேற்ற பாதிப்பு முதலியன, மனவழுத்த எண்ணங்களாக வெளியேறுகின்றன. கோபமும் குறைந்து கொண்டே வருகிறது. இடையில் சில்லரை வேலைகளை செய்து கொண்டும், தொலைதூர பாடலை கேட்டுக்கொண்டும், சிற்சில வேளைகளில் மகிழ்ச்சி தரகூடிய எண்ணங்களும் வந்து போகின்றன. தொடர்ந்து மேல்மனம் கோபத்தை குறைத்துக்கொண்டும், மன்வழுத்த எண்ணங்களை வெளியேற்றி கொண்டும் கீழ் நோக்கி பயணித்து, 24 மணி நேரம் கழித்து, மேல்மனம் அடி மனதில் 6-வது புள்ளி இருப்பிடத்தை வந்து சேருகிறது. மேல் மனதின் ஆரம்ப புள்ளி 10 என்று வைத்துகொள்வோம். அந்த புள்ளி 6-ல் கருப்பணனுடைய கொலை வெறிக் கோபம் குறைந்து விடுகிறது.
கருப்பணன் சுப்புவை மன்னித்துவிட்டானா! கோபம் புள்ளி 6-ல் இருக்கும்போது, சுப்பு எதிரில் வந்தால், அவனை கத்தியால் குத்தி விடுவான். அடுத்த 24 மணி நேரம் மேல் மனம் கோபத்துடன் பயணித்து புள்ளி 2-க்கு வருகிறது. அந்த புள்ளியில் கோபம் மேலும் குறைந்து, மனவழுத்த எண்ணங்களும் குறைந்து விடும். அந்த நேரத்தில், சுப்பு எதிரில் வந்தால், கருப்பணன் அவனோடு சண்டைதான் போடுவான். கொலை செய்ய விரும்ப மாட்டான்.
வத்சலா தற்கொலை முயற்சியை மனம் எப்படி தடுக்கிறது?
வத்சலா தற்கொலை எண்ணத்தில், உடல் முழுவதும் மண்ணெண்ணையை தலையிலிருந்து, உடல் முழுவதும் ஊற்றிக்கொள்கிறாள். தீப்பெட்டியை தேடுகிறாள். அப்பொழுது, தற்கொலை எண்ணத்திற்கு எடை ஏற்பட்டுவிடுவதால், அந்த எண்ணத்தை ஆழ்மனம் ஈர்க்கிறது. மேல்மனம் வதசலாவின் தற்கொலை எண்ணத்தை எடுத்து கொண்டு, கீழ்நோக்கி பயணிக்கிறது. அந்த நேரத்தில், வத்சலாவின் மகள் “மம்மி, பசிக்குதுமா, ஏதாவது டிபன் கொடுமா!” என்ற குரல் கேட்டு, வத்சலா, டிபன் தயாரிக்கிறாள். அதே நேரத்தில், மேல்மனம், தற்கொலை எண்ணத்தை எடுத்துகொண்டு மேலும் பயணிக்கிறது. மனம் அலைபாய்தலால், மகள், தான் செத்த பிறகு, மகள் மாற்றாந்தாயிடம் படும் கொடுமைகள் போன்ற மனவழுத்த எண்ணங்கள் வந்து போகின்றன. வழிநெடுக தற்கொலை எண்ணம் வலுவிழந்து கொண்டே வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில், அந்த எண்ணம் புள்ளி 3-ன் இடத்திற்கு வரும்போது, மனவழுத்த எண்ணங்களும் கணிசமான அளவில் குறைந்துவிட்டது.  வதசலாவிடமிருந்து தற்காலிகமாக, தற்கொலை எண்ணம் விடை பெறுகிறது. இதை வைத்துதான் “ஆறின கஞ்சி, பழங் கஞ்சி!” என்ற பழமொழி வந்தது.

நடைமுறை வாழ்க்கையில், கருப்பணனின் கொலை வெறிக் கோப குணமும், வத்சலாவின் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும குறைவதற்கு 48 மணி நேரம் பிடிக்கிறது. கருப்பணனும், வத்சலாவும் ஒரு சிறப்பான மனபயிற்சியை செய்யும்போது ஒரு மணி நேரத்தில், அவர்களுடைய முறையே கொலை வெறிக் குணமும், தற்கொலை எண்ணமும் மாறி, சரியான நிலைக்கு வந்து விடுகிறார்கள். அந்த மனபயிற்சிதான் மருத்துவ மனபயிற்சி (மம) ஆகும்.

கருப்பணன் தனது மகளை கேலி செய்துவிட்டான் என்ற தகவலால் ஏற்பட்ட மனவழுத்தத்தால், கோபம் கொண்டு சுப்புவை கொலை செய்ய புறப்படுகிறான். வத்சலாவுக்கும், அவளது கணவனுக்கும் ஏற்பட்ட மனவேறுப்பாட்டினால் ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்ட துன்பத்தாலும் துயரத்தாலும்  வத்சலா தற்கொலை செய்ய முடிவெடுக்கிறாள். கருப்பணனுக்கு ஏற்பட்ட கோபத்தால் உண்டான மனவழுத்தமும், வத்சலா துயரத்தால் ஏற்பட்ட மனவழுத்தமும் அவர்களுடைய மார்பில்தான் தேங்கி, தாக்கத்தை ஏற்படுத்தி, மார்பில் ஒரு கணத்தை, இருக்கத்தைக் கொடுக்கிறது.

கருப்பணன் கோபத்துடன் கையில் கத்தியுடன் சுப்புவை கொலை செய்ய போவதற்கு பதில், நேரே அவனுடைய் வீட்டிற்கு வந்து, ஒரு தனி அறையில் ஒரு சாய்வு நாற்காலியில் வசதியாக உட்கார வேண்டும்; மெதுவாக கண்களை மூட வேண்டும்; 20 நொடிகள் மனதில் வேறு எண்ணங்கள் எதுவும் இல்லாமல் வெறுமனே மனதினை வைத்திருக்க வேண்டும். பிறகு மனகண்ணால், மார்பு சுருங்கி விரிவதையும், கோபத்தால் மார்பில் ஏற்பட்ட இருக்கத்தையும் (கவன ஈர்ப்பு பொருள்-க.ஈ.பொ) கவனிக்க வேண்டும். உடனே ஆழ்மனதின் ஈர்ப்பால், மேல்மனமானது, கோப உணர்வை எடுத்துக் கொண்டு கீழ்நோக்கி பயணிக்கிறது. அப்படி கவனித்துகொண்டிருக்கும்போது, அவனுடைய மகளின் எதிர்காலம், பையனின் படிப்பு, தான் செய்யும் தொழில் தொடர்பான எண்ணங்கள் வரும். அப்படி வரும்போது அதை நிறுத்திவிட்டு மனதை க,ஈ.பொ-வை தொடர்ந்து கவனிக்க வேண்டும். கோப உணர்வுடன் பயணிக்கும் மேல் மனமானது, வழிநெடுக, தேங்கியுள்ள கோப உணர்வினை குறைத்துக்கொண்டும்,  மேற்குறிப்பிட்ட மனவழுத்த எண்ணங்களை வெளியேற்றிக்கொண்டும் செல்லும் அது, மிக நுண்ணிய நிலையை அடையும்போது, கருப்பணனுக்கு தான் எங்கிருக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது எதுவுமே தெரியாது. அது ‘0’ நிலைக்கு வரும்போது, அதில், கோப உணர்வும் இருக்காது; மனவழுத்த எண்ணங்களும் இருக்காது. அந்த நிலையில் ஒரு அதிசயம் நடக்கிறது. காலியான மேல் மனமானது அதுவுடன் இணைகிறது. இணைந்த மேல்மனமானது அதில் உள்ள நித்திய ஆற்றலை எடுத்துக்கொண்டு மேல்நோக்கி வந்துவிடுகிறது. இந்த நிலையில் கருப்பணன் மனதில் கோபம் சிறிதளவும் இருக்காது; மனவழுத்த இருக்கம் போய் மனம் இலேசாக இருக்கும். மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி நிரம்பியிருக்கும். மம செய்து முடிக்க, அதாவது ஒரு மணி நேரம் கழித்து,   சுப்பு எதிரில் வந்தால், கருப்பணன் விலகி சென்றுவிடுவான் அல்லது காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்க சென்று விடுவான்.

வத்சலாவும் தற்கொலை எண்ணத்துடன், வீட்டில் உட்கார்ந்து, கண்களை மூடி, எண்ணமில்லாமல் சிறிது நொடிகள் இருந்துவிட்டு, மம- வை ஆரம்பிக்க வேண்டும். அவள், மார்பு சுருங்கி விரிவதையும், தற்கொலை எண்ணத்தால் ஏற்பட்ட மன இறுக்க உணர்வையும் மனதால் கவனிக்க வேண்டும். மன கவலை உணர்வை எடுத்துக்கொண்டு, மேல் மனம் கீழ்நோக்கி பயணிக்கிறது. வழிநெடுக, வருத்த உணர்வை மனதை விட்டு சிறிது சிறிதாக வெளியேற்றிக்கொண்டும், தற்கொலைக்குக் காரணமான மனவழுத்த எண்ணங்களை வெளியேற்றி கொண்டும் செல்கிறது. ஆழ்மனதை சென்றடையும் போது மேல்மனதில் கவலையும் இருக்காது; மனவழுத்த எண்ணங்களும் இருக்காது. தற்கொலை எண்ணம் இல்லாமல் மனம் இலேசாக இருக்கும். இந்த மம-வுக்கு ஒரு மணி நேரம் ஆகியிருக்கிறது. வத்சலா தற்கொலை செய்வதிலிருந்து தப்பிவிடுகிறாள். மனவழுத்தத்தால் பாதிக்கபட்ட பெண்கள், அவர்கள் அடைக்கலமாகும் கடைசி புகலிடம் தற்கொலைதான். அதை தடுக்க மருத்துவ மனபயிற்சியைவிட சிறந்த மருந்து கிடையாது. மனவழுத்தம் என்பது கண்களால் பார்க்க முடியாத உண்ர்வுதான்; அது பருப்பொருள் கிடையாது. ஆகவே அதற்கு பருப்பொருளான மாத்திரைகள் சிறந்த பலனை கொடுக்காது. உருவமற்ற மனபயிற்சிதான் அதற்கு சரியான மருந்தாகும்.

இந்த மம-வுக்கு அதிக முயற்சியும், ஆற்றலும் தேவையில்லை. அந்த மனபயிற்சிக்கு ஒரு மணி நேரம் போதும் (மனபயிற்சி செய்யாவிட்டால் 48 மணி நேரம் தேவைபடுகிறது.). அந்த ஒரு மணி நேரத்தில், கருப்பணனுடைய கோபமும், வத்சலாவின் தற்கொலை எண்ணமும் இல்லாமல் போய் விடுகிறது. பயிற்சிக்கு முன்பிருந்த மார்பின் இருக்கமும் இல்லாமல் போய், மனம் இலேசாக ஆகிவிடுகிறது. மனதில் இனம்புரியாத மக்ழ்ச்சியும் தாண்டவமாடும்.

மேலே கூறப்பட்டதிலிருந்து, ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். கருப்பணனுடைய கோபம் இயற்கையான முறையில் குறைவதற்கு 48 மணி நேரம் ஆகிறது. அதே அளவு கோபத்தை குறைப்பதற்கு மருத்துவ மனப்பயிற்சி (ம.ம) ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆனால், ம.ம வில் கருப்பணனுடைய முயற்சி இருக்கிறது. வேறு எண்ணங்களில் இருக்கும்போதெல்லாம், மனதை நிறுத்தி, க.ஈ.பொ-க்கு கொண்டு வர வேண்டும்.
  கோபம் மட்டும் அல்ல. ஆனால் மற்ற பயம், துக்கம், வேதனை,   பதட்டம், மற்றும் மற்ற எதிர்மறை உணர்வுகளையும் வெற்றி   கொள்ள, இந்த ம.ம. பயன்படும்.                  

மருத்துவ மனபயிற்சிகளால் குணமாகும் நோய்கள்: வலிகள், துயரங்கள், அசவுகரியங்கள் (Uneasiness) ஆகிய உணர்வுகள் மனதால் உணரபடுகின்றன. ஆழ்மனதின் ஈர்ப்பினால், மேல் மனமானது, வலி உணர்வை எடுத்துகொண்டு கீழ்நோக்கி பயணிக்கிறது. எதிர்வினையால், மனம் அலைபாய்தலின் மூலம், அது வழிநெடுக மனவழுத்த எண்ணங்களை வெளியேற்றி கொண்டும், வலி உணர்வை குறைத்து கொண்டும் செல்கிறது. ,மிக மிக் நுண்ணிய நிலைக்கு செல்லும்பொழுது, நாம் என்ன செய்கிறோம், எங்கே இருக்கிறோம் என்பது எதுவும் நமக்கு தெரியாது. மைக்ரோ அளவுக்குப் போகும்போது, மேல்மனம் ஆழ்மனதை வந்தடைகிறது. அங்கு வரும்போது, மேல் மனதில், வலி உணர்வும் இல்லை, மனவழுத்த எண்ணங்களும் இல்லை. இப்பொழுது அங்கு அதிசயம் ஒன்று நடக்கிறது. மேல் மனம் ஆழ்மனதில் அதுவுடன் இணைகிறது.  அதுவில் காலியான மேல்மனம் நித்திய ஆற்றலை எடுத்துகொண்டு மேல் நோக்கி பயணிக்கிறது. வலி குணமானதுடன், ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியும் மனதில் குடிகொண்டிருக்கும். உடனே வேலை செய்வதற்குரிய சுறுசுறுப்பையும் உணரலாம். இதைத்தான் நான் முதன் முதலில் 12-12-2000 அன்று தலைவலியிலிருந்து குணமானபோது உணர்ந்தேன்.

எல்லாம் வல்ல இறைவன், தலைவலியை குணபடுத்திய பிறகு, மருத்துவ மனபயிற்சியை கொண்டு, எல்லா நோய்களையும் குணபடுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்படியான சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும் வழங்கினான். மருத்துவ மனபயிற்சியால் குணப்படுத்தப்பட்ட நோய்கள்: தலைவலி, ஒற்றைத் தலைவலி, தும்மல், மூக்கில் நீராக வடிதல், மூக்கடைப்பு, இளப்பு, செரித்தலின்மை, வயிற்றின் மந்த உணர்வு, வயிற்று வலி, ஹெர்னியா வலி, மூட்டு வலி, மலசிக்கல், கால் ஆணி, பல் வலி, பல்லீரல் வலி, சிறு சிறு விபத்துக்களால் ஏற்படும் வலி, பூச்சுக் கடி வலி முதலியன.  

கவன ஈர்ப்பு உணர்வு:
மனம் அலைபாயும்போதெல்லாம், அதன்  எண்ணத்தை நிறுத்தி,  அதை, அதனில் இருக்கும் வேறொரு உணர்வுக்கு (உதாரணமாக வலி உணர்வு), அதன் கவனத்தை திருப்புவதுதான் கவன திருப்பு மனபயிற்சியாகும். அந்த வேறொரு உணர்வுதான் கவன திருப்பு உணர்வாகும். கவன திருப்பு மனபயிற்சியைதான் மருத்துவ மனபயிற்சி (மம) என்று அழைக்கிறோம். மொத்தம் 6 மனபயிற்சிகள்தான், அனைத்து நோய்களையும் குணபடுத்துகின்றன. அதனால், நோய்களுக்கு மருத்துவ மனபயிற்சியை தேர்ந்தெடுப்பது சுலபம். இன்னும் சுருக்கமாகவும் சொல்லலாம். மனதின் கவனத்தில், உடலின்  அசவுகரிய உணர்வை (Uneasy Feeling) வைத்து அந்த உணர்வை குணபடுத்த செய்யும் மனபயிற்சிதான் மருத்துவ மனபயிற்சியாகும். மருத்துவ மனபயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

மருத்துவ மனபயிற்சியின் இயக்க விளக்கம்.
மருத்துவ மனபயிற்சி, ஆன்மீக பகுதி, அறிவியல் பகுதி என்று இரண்டு பகுதிகளாக பிரிந்து, இணைந்து இயங்கி பலன் அளிக்கிறது.

ஆன்மீக பகுதி
ஆழ்மனத்தின் ஈர்ப்பால், மேல் மனமானது கவன ஈர்ப்பு உணர்வை (கஈஉ)எடுத்துக்கொண்டு, கீழ்நோக்கி பயணிக்கிறது. அது செல்லுமிடமெல்லாம், பூமியைச் சுற்றி காற்று நிறைந்திருப்பதைப் போல, கஈஉ-ஐச் சுற்றிலும் மன அழுத்தம் நிரம்பியிருக்கிறது. அந்த மன அழுத்தப் பகுதியில் உள்ள மன அழுத்தத்தை கிழித்துக்கொண்டு கஈஉ-ஆனது, செல்லும்போது உராய்வு ஏற்படுகிறது. அந்த உராய்வினால், வெப்பம் உற்பத்தி செய்யபடுகிறது. அது கிழித்துக்கொண்டு செல்லும்போது கொடுக்கும் அழுத்தத்தால், இட நெருக்கடி ஏற்பட்டு, மன அழுத்தம் எண்ணங்களாக வெளியேறுகின்றது. அதைத்தான், மனம் அலை பாய்கிறது என்கிறோம். அந்த மனதைதான் நிறுத்தி, அதன் கவனத்தை கவன ஈர்ப்பு உணர்வுக்கு திருப்புகிறோம். அந்த முறையில், வழி நெடுக, கஈஉ-வையும், மன அழுத்தத்தையும் சிறிது சிறிதாக, வெளியேற்றிக்கொண்டே செல்கிறது.   மனம் கவன ஈர்ப்பு உணர்வை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்நோக்கிப் பயணிக்கிறது. அப்படிப் போய்க்கொண்டே, நுண்ணிய நிலையை அடைந்து, கஈஉ-வையும் மன அழுத்தத்தையும் வெளியேற்றிக் கொண்டே செல்கிறது. அப்படிப் போகும்போதுதான், அந்த பாதையில், சில இடங்களில், சில நொடிகள் நாம் எங்கிருக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. அந்த நிலையில் நாம் அண்டத்துடன் இணைந்துவிடுகிறோம் என்று சொல்லபடுகிறது. இறுதியில் மிகவும் நுண்ணிய நிலையில், ஆழ்மனதைச் சென்றடைகிறது. அங்கு சென்றடையும்போது, கவன ஈர்ப்புப் உணர்வும் இருக்காது; மன அழுத்தமும் இருக்காது. இந்த நிலையில்தான், மேல்மனம் ஆழ்மனதுடன் (இறைவனோடு) இணைகிறது. இணைந்த மேல் மனம் நித்திய ஆற்றலை எடுத்துக்கொண்டு மேல் நோக்கி வந்து விடுகிறது. உங்களுக்கு தூங்கி எழுந்தது போன்ற உணர்வு மேலோங்கியிருக்கும்; மனம் இலேசாக இருக்கும்; மகிழ்ச்சி மயமாக இருக்கும். சுறு சுறுப்புடன் வேலை செய்ய தயார் நிலையில் இருக்கும்.

அறிவியல் பகுதி
காவல் துறையில் ‘ஒதுக்கபட்ட ஆயுதப் படை போலீஸ் (Armed Reserve Police) ’ என்ற சிற்ப்பு பிரிவு இருக்கிறது. கலவரம் நடக்கும்போதுதான், அந்த கலவரத்தை அடக்க, மேலிடத்தின் உத்தரவின் பேரில்,  அந்த படை விரைந்து சென்று கலவரத்தை அடக்கி, பொது மக்களின், உயிருக்கும் உடமைக்கும் ஏற்படும் சேதத்தைத் தடுத்து நிறுத்தி விடும்.

அதேபோலதான், உடலில் ‘ஒதுக்கப்பட்ட சிறப்பு ரத்தம்’ இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ரத்தம், மனதின் உத்தரவின் பேரில், நோயுள்ள இடத்திற்குச் சென்று, தான் கொண்டுவந்த வெப்ப ஆற்றலை நரம்புகளுக்கு அளிக்கிறது; வெப்பத்தினால், அந்த நரம்புகள் விரிவடைந்து, அடைபட்டிருந்த ரத்தத்தை ஓடச் செய்கிறது; நோயும் குணமாகிவிடுகிறது. வெப்ப ஆற்றலானது, மேல் மனம் கீழ் நோக்கிப் பயணிக்கும்போது, மன அழுத்தத்தோடு ஏற்படும் உராய்வினால் வெப்பம் உற்பத்தியாகிறது என்பதை மேலே சொல்லியிருக்கிறேன்.

மனதின் உத்தரவு என்பது, உங்களது மனதின் கவனம் நோயினுடைய உணர்வின் மீது இருந்தால்தான், ரத்தம், வெப்பத்தை எடுத்துக்கொண்டு, நோயினுடைய இடத்துக்குப் போகும். மனம் ஆன்மீகத்தின் பிரதிநிதியாகவும், ரத்தம் அறிவியலின் பிரதிநிதியாகவும் இருந்து, இணைந்து, தனித்தனியாக செயல்பட்டு நோய்களைக் குணப்படுத்துகின்றன.
உண்மைக் கடவுளை வணங்குவீர்; மிக உயர்ந்த நிலை அடைவீர்!
ஹீலர்: தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் மனிதனிடத்திலும் இருக்கிறான். மனிதனிடத்தில்  மார்பில் உண்மை வடிவில் குடியிருக்கிறான். அங்கிருந்து கொண்டு அவனின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறான். அவனை வணங்குவோம்.
வணங்கும் முறை
இப்ப, அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க மார்பையும்,  அது விரிஞ்சு சுருங்குவதையும், அதில் உள்ள இருக்க உண்ர்வையும் மனக்கண்ணால கவனிக்கவும்; அப்படி செய்யும்போது, வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, விரிஞ்சு சுருங்குவதையும், மற்றும் அதில் உள்ள இருக்கம் அல்லது பிடிப்பு உணர்வையும் கவனியுங்க;  மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க!  20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். இப்படி தினசரி, காலை, மாலை 20 நிமிடங்கள் வீதம் செய்யவும். இரவில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும் வரை செய்யவும்.

மருத்துவ மனபயிற்சி செய்வதற்கு நடைமுறை விதிகள்
சாய்ந்து உட்கார்ந்து கொள்ளலாம்; உடலை தளர்ச்சியாக வைத்திருக்கவும்; பெல்ட்டைப் போட்டு இறுக்கியிருந்தால், அதை தளர்த்தி விடவும். மனதை 10 நொடிகள் எந்த எண்ணமும் இல்லாம வைத்திருந்து ஆரம்பிக்க வேண்டும் பசியிருக்கும்போது மருத்துவ மனபயிற்சி (மம) செய்யகூடாது. ஆண்மைக் குறைவுக்கு செய்யும் மம-வை சாப்பிட்டு அரைமணி நேரம் கழித்து செய்யலாம். வலிகளுக்கு செய்யும் மம- சாப்பிட்ட உடனே கூட செய்யலாம்

செய்யும்போது யாராவது பார்க்க வந்தால், மம-வை சில நொடிகள் நிறுத்திவிட்டு மெதுவாக கண்களை திறந்து, பேசிவிட்டு மீண்டும் மம-வை தொடரலாம்.. ஐந்து நிமிடங்கள் செய்தால் கூட வலி குறையும். ஆகவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் மம-வை செய்யலாம். மம-வில் நல்ல அனுபவமாகிவிட்டால், வலிக்கு நடந்து கொண்டே மம-செய்யலாம்.

மலம் சுலபமாக வெளியேற செய்ய வேண்டிய மருத்துவ மனபயிற்சி. (Get out of the shit easily)
கழிப்பறையில் மலம் கழிக்க உட்கார்ந்திருக்கிறீர்கள். மலம் வெளியேற தாமதமாகிறது. கவலை வேண்டாம். அடி வயிற்றில் இரு கைகளையும் தடவி மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். தடவக்கூடிய பகுதியை கவனித்துக்கொண்டே தடவிக் கொண்டிருங்கள். சில நிமிடங்களில் மலம் வெளி வந்து விடும். மலம் முழுவதும் வெளியேறும் வரை தடவிக்கொண்டே கவனித்துக் கொண்டிருங்கள்.

ஆண்மை குறைவு, பெண்மை குறைவு, மன நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, சர்க்கரை சத்து,. தூக்கமின்மை, மற்றும் வலி வெளியில் தெரியாத அனைத்து  நோய்களுக்கும் மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: மன அழுத்தமும், மனகவலையும் மார்பில்தான் சேருகிறது. அதனால, மன அழுத்தம், மனகவலை அதிகமாகும்போது நெஞ்சு கணக்கிறது. நெஞ்சை இருக்கமாக அமுக்குவது போல உணருவீர்கள். அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணியாக விளங்குவது மன அழுத்தமும், மனகவலையும் தான். அதை போக்கிவிட்டால், நோய்களை குணபடுத்துவது சுலபம்.

இப்ப, அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க மார்பையும்,  அது விரிஞ்சு சுருங்குவதையும், மற்றும் அதில் உள்ள இருக்கம் அல்லது பிடிப்பு உணர்வையும்  மனக்கண்ணால கவனிக்கவும், நினைக்கவும், உணரவும் செய்யனும்.

அப்படி செய்யும்போது, வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, விரிஞ்சு சுருங்குவதையும், மற்றும் அதில் உள்ள இருக்கம் அல்லது பிடிப்பு உணர்வையும் கவனியுங்க;  மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க!  கழிவுப்பொருட்கள், வியர்வையாகவும், வாயுவாகவும், ஏப்பங்களாகவும், சளியாகவும் வெளியேறும், அவை வெளியேற, வெளியேற
இருக்கம் சிறிது சிறிதாக குறைந்து, இருக்கமும் விலகி மனம் இலேசாக ஆகும்.

தலை அடிபடுதல் போன்ற சிறு சிறு விபத்துக்களின் போது செய்யும் மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
பஸ்ஸிலிருந்து இறங்கும்போது கீழை விழுந்து தலை இலேசாக அடிபட்டு வலி ஏற்படுகிறது. உடனே மருத்துவ மனபயிற்சியை (மம) ஆரம்பித்துவிடுங்கள்: மனதால் வலியை கவனியுங்கள்: பத்து நிமிடங்களில் வலி இல்லாமல் போய் விடும்: தலையை தடவிப்பார்த்தால் அடிபட்ட இடத்தில் வீக்கம் எதுவும் இருக்காது.

அதேபோல பஸ்ஸில் கண்டக்டர் காலை மிதிப்பதால் பயங்கர வலி ஏற்படலாம். வீட்டில் எதாவது ஒரு பொருள் தலையிலோ, கை, கால்களிலோ விழலாம். கதவிடுக்கில் கை மாட்டி நசுக்கப்பட்டு வலி ஏற்படலாம். பூச்சிக் கடியால் வலி ஏற்படலாம். உடனே மம-செய்து, மனதால் வலியை கவனித்து பத்து நிமிடங்களில் வலியை இல்லாமல் செய்து விடலாம்.


கழுத்துச் சுழுக்கு, விலா பக்கம் வலி-மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
மேலே குறிப்பிட்ட இரண்டும் இருக்கும்போது, கழுத்தை இந்தப்பக்கம் அந்தப் பக்கம் திருப்ப முடியாது.  அப்போது கழுத்தை இலேசாக திருப்பி வலியை ஏற்படுத்திக்கொண்டு மருத்துவ மனபயிற்சி (மம) செய்யுங்கள். மனதால் வலியை கவனிங்கள் அல்லது நினையுங்கள். சில நொடிகளில் கழுத்துச் சுழுக்கு விட்டு, சரியான நிலைக்கு வந்துவிடுவீர்கள்.

அதே போல, விலா எலும்புப் பக்கம் பிடிப்பு ஏற்பட்டால், திரும்பும் போது பொறுக்க முடியாத வலி ஏற்படும். அந்த வலியை வைத்து மம-செய்யுங்கள். சில நொடிகளில் பிடிப்பு விட்டு விடும்.

பல் வலி, பல்லீரல் வலிக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க பல்லீரல் வலி இருக்கும் ஈரல் பகுதியை பெருவிரல், ஆள்காட்டி விரல் இரண்டையும் சேர்த்து வலி பகுதியை அழுத்தி பிடித்துக்கொள்ளுங்கள். அந்த இடத்தில் ஏற்படும் வலியை வைத்து மருத்துவ மனபயிற்சியை செய்யுங்கள். மனதால் அந்த வலியை  கவனிங்க அல்லது நினைங்க  வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வலி உணர்வை மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க!! கழிவுப்பொருட்கள் வெளியேறும்; வலி குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு மெதுவாக கண்களை திறங்க.

கால் ஆணி  வலிக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க கால் ஆணியால் ஏற்படும் வலியை மனதில் உணருகிறீர்களா? ஆம் என்றால் மருத்துவ மனபயிற்சியை (மம) ஆரம்பிங்க! அந்த வலியை  கவனிங்க அல்லது நினைங்க  வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வலி உணர்வை மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க!! கழிவுப்பொருட்கள் வெளியேறும்; வலி குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு மெதுவாக கண்களை திறங்க.

சிலருக்கு நடக்கும்போதுதான் வலிக்கும்; நடக்காத போது வலிக்காது. அப்படிப்பட்டவர்கள் காலை தரையில் அழுத்தி வலியை உண்டாக்கி, அந்த வலியை கவனிக்க வேண்டும்.

கால் பாதத்தில், தரையில் படாத பகுதிகளில்தான் ரத்த ஓட்டக் குறைவினால் கால் ஆணி வருகிறது.

நெஞ்சு  வலி, நெஞ்சி கரிப்புக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: விமானப் பயணத்தின் போதோ, இரவில் தூக்கத்திலிருக்கும்போதோ திடீரென்றுநெஞ்சு வலிவரலாம். பயப்பட வேண்டியதில்லை. வலி வந்த உடனே மனதில், வலியின் மீது உங்கள் கவனத்தைச் செலுத்தி மருத்துவ மனபயிற்சி செய்யுங்கள். வேறு எண்ணங்கள் வந்தால், அவற்றை நிறுத்தி, வலியையே கவனியுங்கள் அல்லது நினையுங்கள். தொடர்ந்து பத்து நிமிடங்கள் கவனிக்கும்போது, வலி இல்லாமல் போய்விடும்

அதே போல, இரவில் திடீரென்றுநெஞ்சு கரிப்பு
ஏற்படலாம், உடனே மருத்துவ மனபயிற்சியை ஆரம்பித்துவிடுங்கள். நெஞ்சு கரிக்கும் உணர்வை கவனியுங்கள் அல்லது நினையுங்கள்; பத்து நிமிடங்களில் சரியாகிவிடும்; உங்களை அறியாமல் தூங்கிவிடுவீர்கள்.

நகசுத்தி, வாய்புண், மூக்குப் புண் ஆகியவற்றிற்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
நகசுத்தி: கையின் பெருவிரலில் வரும் நோய்தான் நகசுத்தி. நகசுத்தி வந்தால் பெருவிரல் சிறிது வீக்கமாக இருக்கும்; ஆனால் வலி இருக்காது; அதனால், விரலை இலேசாக அழுத்தி, வலி பொறுக்கின்ற அளவுக்கு வைத்துக்கொண்டு, மருத்துவ மனபயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்; வலியிலேயே கவனத்தைச் செலுத்த வேண்டும்; 10 நிமிட கவனத்தில் வலி குறைந்து நகசுத்தி குணமாகி விடும்.

வாய்புண்: புண்ணை தடவிக்கொண்டே அதில் கவனத்தைச் செலுத்தி மருத்துவ மனபயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிட கவனத்தில் புண் ஆறிவிடும்.

மூக்குப்புண்: மூக்கினுள், ஒரு பக்கத்தில் புண் இருக்கும். ஆனால் வலி இருக்காது.
அப்பக்கத்தை வளைத்து வலி ஏற்படுத்தி மருத்துவ மனபயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிட கவனத்தில் புண் ஆறிவிடும்.

மூட்டு வலிக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: மூட்டு வலி நடக்கும்போதுதான் வலிக்கும். உட்கார்ந்திருக்கும்போது வலிக்காது. ஆகவே கண்களை மூடிக்கொள்ளுங்கள்; வலிக்கும் மூட்டுப் பகுதியை கையால் தடவிக்கொடுங்கள்;  மருத்துவ மனபயிற்சி (மம) செய்து, கவனத்தை தடவும் பகுதியிலேயே செலுத்துங்கள்; தொடர்ந்து அப்படியே ஒரு அரை மணி நேரம் செய்து கொண்டிருங்கள்; கழிவுப்பொருட்கள் வெளியேறும். இப்பொழுது மெதுவாக கண்களை திறந்து, எழுந்து நடந்து பாருங்கள்; வலி குறைந்திருப்பதை அறிய முடியும். இப்படி தினசரி காலையிலும், மாலையிலும் செய்து வந்தால், மூட்டு வலியை குணபடுத்தி விடலாம்.  

இது மற்றொரு முறை. சித்தா அல்லது ஆயுர் வேதா மருத்துவ மூட்டு வலி தைலத்தை வலிக்கும் மூட்டுப் பகுதியில் தேய்த்துக்கொண்டே மேலே சொன்ன மம-வை அரை மணி செய்யுங்கள்; மாலையிலும் செய்யுங்கள்;  மூட்டு வலிக்குரிய மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்; விரைவில் மூட்டு வலியிலிருந்து குணம் பெறுவீர்கள்.

(அரோமணி) தொண்டையின்கரகரப்பு:” “தைராய்டு” ஆகிய வற்றிற்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: தொண்டையை உங்களது ஒரு கையால வருடுங்க! அப்படிச் செய்யும்போது தொண்டைப் பகுதியை மனதால், கவனிச்சுக்கிட்டே இருங்க! ஒவ்வொரு தடவையும் 10 நிமிடங்கள் வீதம், ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்யுங்கள். தொண்டையில் ஒட்டிக் கொண்டிருக்கும் சளி வெளியேறிவிடும்;  ”கரகரப்புஉணர்வு தொண்டையிலிருந்து முற்றிலுமாக நீங்கிவிடும். தைராய்டு பிரச்சனையிலிருந்தும் விடுபடுவீர்கள்.

கோடை காலங்களில் மழை நேரமாக இருக்கும் நேரங்களிலும், தயிர் சேராதவர்கள் திடீரென்று சேர்க்கும்போது தொண்டையில் இலேசாக சளி சேருவதால் இந்தகரகரப்புஏற்படும்.
ஹெர்னியா  வலிக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வலியை மனதில் உணருகிறீர்களா? ஆம் என்றால் அதையே  கவனிங்க அல்லது நினைங்க  வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வலி உணர்வை மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம செய்யுங்க! வியர்வை, வாய்வு, வாய்வு ஏப்பங்கள், சளி, சிறுநீர் முதலிய கழிவுப்பொருட்கள் வெளியேறும்.

வலி குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. வலி முற்றிலும் குணமான பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

சளியும், மலசிக்கலும் அதிகரிக்கும்போது குடல் இறக்கம் என்னும்ஹெர்னியாநோய் வருகிறது.
தலை வலி, ஒற்றைத் தலைவலிக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வலியை மனதில் உணருகிறீர்களா? ஆம் என்றால் அதையே  கவனிங்க அல்லது நினைங்க  வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வலி உணர்வை மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம செய்யுங்க!

வலி குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. வலி முற்றிலும் குணமான பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ, பசிக்காமல் சாப்பிட்டாலோ, மலச்சிக்கல் அதிகரித்தாலோ, சளி அதிகரித்தாலோ தலை வலி வரலாம். நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

நெஞ்சு சளி, மூச்சுத் திணறல், இளப்பு, ஆஸ்த்மா ஆகியவற்றிற்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க மார்பையும்,  அது விரிஞ்சு சுருங்குவதையும், மற்றும் அதில் உள்ள இருக்கம் அல்லது பிடிப்பு உணர்வையும்  மனக்கண்ணால கவனிக்கவும், நினைக்கவும், உணரவும் செய்யனும்.

அப்படி செய்யும்போது, வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, விரிஞ்சு சுருங்குவதையும், மற்றும் அதில் உள்ள இருக்கம் அல்லது பிடிப்பு உணர்வையும் கவனியுங்க;  மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம செய்யுங்க! எண்ணங்களை நீடிக்கவிடாமல், உங்கள் கவனத்தை மார்பை நோக்கி செய்யும் பயிற்சிக்கு திருப்புங்கள்.

சளி வாய் வழியாக வெளியேறிக்கொண்டே இருக்கும்; சளியை வெளியில் துப்பி விடுங்கள்; மார்பில் உள்ள இருக்க பிடிப்பும் குறைந்துகொண்டே வரும். சளி முழுவதும் வெளியேறியவுடன் இருக்கமும் முழுவதுமாக நீங்கிவிடும்; மூச்சு விடுவது சுலபமாகிவிடும். பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

அரோமணியின் 11 இயற்கை விதிகளை மீறும்பொழுதுதான் சளி உற்பத்தியாகிறது.


அரிப்புக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: உங்களுக்கு இப்ப அரிப்பு இருக்குது நனறாக ஆசை தீர சொறிங்க. அரிப்பு இருக்குற இடத்தில எல்லாம் சொறிங்க. சொறிந்து முடித்தவுடன், உங்க உடம்புல சொறிந்ததால் ஏற்பட்ட காந்த உணர்வு இருக்கும்.

இப்ப அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!


அந்த காந்த உணர்வை கவனியுங்க அல்லது நினையுங்கள் அல்லது உணருங்கள்!
அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போது, வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, காந்த உணர்வை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டே இருங்க! எண்ணங்களை நீடிக்கவிடாம,தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருங்க! கெட்ட நீர், வாயு, சளி முதலிய கழிவுப் பொருட்கள் வெளியேறும்.

அரிப்பு குறைந்து கொண்டே வரும்! அரிப்பு குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

கழிவுப் பொருட்களான கெட்ட நீர், சளி, வாயு முதலியன வெளியேறமுடியாமல் தோலுக்குக் கீழ் தேங்கும்போது அரிப்பு ஏற்படுகிறது. கழிவுப் பொருட்களின் தேக்கத்தைக் குறைக்க,  அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

வயிற்று வலிக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வயிறு விரிஞ்சு சுருங்குவதை மனக்கண்ணால பாருங்க அல்லது கவனியுங்க! அதோடு வயிற்றில் உள்ள வலியையும், சேர்த்து கவனியுஙக அல்லது நினைச்சுக்கிட்டே இருங்க அல்லது உணருங்க!

வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வயிறு சுருங்கி விரியுறதையும், வலி உணர்வையும் மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம செய்யுங்க!  கெட்ட நீர், வாயு, சளி முதலியன வெளியேறிக்கொண்டே இருக்கும்.

வலி குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ, உரப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டாலோ வயிற்று வலி வரலாம். நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், மூக்கில் சதை வளர்ச்சி ஆகியவற்றிற்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்களுடைய மூக்கில் விடும் சுவாசத்தையும், மேற்சொன்ன நோய்களால் மூக்கில் உண்டானசுறு,சுறுஎன்று நீங்கள் உணரும் அசவுகரிய உணர்வையும் மனக்கண்ணால கவனியுங்க அல்லது நினையுங்க!

வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டால், அவற்றை நிறுத்திட்டு, சுவாசத்தையும், அசவுகரிய உணர்வையும் மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம செய்யுங்க!

மூக்கிலிருந்து தும்மலுடன் நீர் கலந்த சளி வந்துகொண்டே இருக்கும். அந்தச் சளியை, மூக்கை வளைக்காமல் துடைத்து அப்புறப்படுத்திக் கொண்டே இருங்கள். மூக்கடைப்பும், சளியும் குறைந்து கொண்டே வரும்! மூக்கடைப்பு இல்லாமல், காய்ந்த மூக்காகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க.

அரோமணியின் 11 இயற்கை விதிகளை மீறுவதால்தான், மேற்சொன்ன நோய்கள் வருகின்றன.

வாந்தி, வயிற்றுக்கடுப்பு, வயிற்றோட்டம் ஆகியவற்றிற்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா குனியும்படியா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வயிறு விரிஞ்சு சுருங்குவதை மனக்கண்ணால பாருங்க அல்லது கவனியுங்க! அதோடு வயிற்றில் இலேசான வலியோ அல்லது அசவுகரிய உணர்வோ இருந்தால், அதையும் சேர்த்து கவனியுஙக அல்லது நினைச்சுக்கிட்டே இருங்க!

வேறு எண்ணங்கள், உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வயிறு சுருங்கி விரியுறதையும், வலி உணர்வையும் மீண்டும் மீண்டும் கவனித்துக்கொண்டே இருங்க! தொடர்ந்து கவனத்தைச் சிதறவிடாம செய்யுங்க! கெட்ட நீர், வாயு, சளி முதலியன வெளியேறிக்கொண்டே இருக்கும்.


வலி குறைந்து கொண்டே வரும்! வலி குறைந்து சரியாகும் வரை மம-வைச் செய்யுங்க. பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறங்க. இரவிலும் படுத்துக்கொண்டே செய்யலாம்.

குணமாகும் வரை, வாந்தி, வயிற்றோட்டம் உள்ளவர்கள் பசி எடுக்காமல் சாப்பிடக்கூடாது. வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் உரப்பு சேர்க்கக்கூடாது. நோய்களிலிருந்து நிரந்தரக் குணம் பெற, அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

மலசிக்கலுக்கு மருத்துவ மனபயிற்சி சிகிச்சை.
ஹீலர்: அப்படியே நன்றாக சாய்ந்து உட்காருங்க. தலையை முன்னால இலேசா சாய்ச்சிக்குங்க! இப்ப மெதுவா கண்களை மூடுங்க! ஒரு பத்து நொடிகள் எதுவும் நினைக்காம வெறுமனே மனசை வச்சுக்கங்க!........ இனி ஆரம்பிங்க!

இப்ப உங்க வயிறு விரிஞ்சு சுருங்குவதை மனக்கண்ணால பாருங்க! அதையே பாத்துக்கிட்டே இருங்க! வேறு எண்ணங்கள் உங்கள் வீட்டைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ  குறுக்கிட்டா, அவற்றை நிறுத்திட்டு, வயிறு சுருங்கி விரியுறதையே மீண்டும் மீண்டும் பாத்துக்கிட்டெ இருங்க எண்ணங்கள் வரும்போதெல்லாம் நீடிக்க விடாம, உங்க கவனம் முழுவதும் வயிற்றைப் பார்ப்பதிலேயே தொடர்ந்து  அப்படியே இருங்க! கெட்ட நீர், வாயு, சளி முதலியன வெளியேறிக்கொண்டே இருக்கும். ஒரு இருபது நிமிடஙகள் அப்படியே இருங்க! அதற்குப் பிறகு மருத்துவ மனபயிற்சியை நிறுத்தி சில விநாடிகள் கழித்து மெதுவாக கண்களை திறக்கலாம்.

இந்த பயிற்சியை சாப்பிட்ட பிறகு காலை 20 நிமிடங்கள், மாலை 20 நிமிடங்கள், இரவில் படுக்கையில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும்வரை செய்யலாம். ஒரு வாரத்திற்குள் மலசிக்கல் குணமாகிவிடும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்யும்போது, மலசிக்கல் விரைவில் குணமாகும். மலசிக்கல் நிரந்தரமாக குணமாக வேண்டுமென்றால் அரோமணியின் 11 இயற்கை விதிகளை தவறாது கடைப்பிடித்து வர வேண்டும்.

ஹீலர்: தினசரி இரு வேளை காலையிலும் மாலையிலும் இருபது நிமிடங்கள் வீதம் செய்யலாம். இரவில் படுக்கையில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும்வரை செய்யலாம். ஐந்து நாட்களில் குணம் கிடைக்கும். மலசிக்கல் விரைவில் குணமாக, தினசரி நேரம் கிடைக்குப் போதெல்லாம மம-வைச் செய்யலாம். மம-வை பசியிருக்கும்போது செய்ய வேண்டாம். சாப்பிட்டு முக்கால் மணி நேரம் கழித்துச் செய்யலாம். இடையில் எவரிடமும் பேச நேரிட்டால், மம-வை நிறுத்திவிட்டு 10 நொடிகள் ஆனபிறகு மெதுவாக கண்களை திறந்து பேசி அனுப்பிவிட்டு பிறகு வந்து மம-வை தொடரலாம். கண்களை மெதுவாக திறந்து நேரத்தைப் பார்த்துக் கொள்ளலாம். எவ்வளவு சத்தத்திற்கிடையிலும் மம-வை செய்யலாம்.; மம-செய்வதற்கு இடைஞ்சலாக இருக்காது; ரயிலில், பஸ்ஸில் பயணத்தின் போதும் செய்யலாம்.

சிகிச்சையின் போது, உடலில் உள்ள எவை இரண்டும் சேர்ந்து நோய்களை குணப்படுத்துகின்றன!

மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, உடலில் ஏற்படும் நிகழ்வுகள்
மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, வெப்பம் உடல் முழுவதும் பரவுகிறது; வியர்வை தோன்றுகிறது; வாயு வெளியேறுகிறது; சளி தொண்டையிலிருந்தும், நெஞ்சிலிருந்து வெளியேறுகிறது;  தும்மல் வெடிக்கிறது; அதைத்தொடர்ந்து நீர் கலந்த சளி மூக்கு வழியாக வெளியேறுகிறது; அதிக உமிழ்நீர் சுரக்கிறது; கொட்டாவி வெளியேறுகிறது; சுவாசம் படிப்படியாக குறைந்து, மிக நுண்ணிய அளவுக்குக் குறைகிறது. பெரு மூச்சு அப்போதைக்கப்போது வந்து போகிறது. மருத்துவ மனபயிற்சியின் போது வலி குறைவது, sine அலை வடிவில் குறைந்து கூடி பிறகு குறைந்து விடும். வலி முற்றிலுமாக குறைந்து, வலி இல்லாமல் போகும்போது, முழு ஓய்வுத் தூக்கத்திலிருந்து எழுந்தது போல இருக்கும்; இனம்புரியாத மகிழ்ச்சி மனதில் நிரம்பியிருக்கும்; பிறகு அந்த நாள் முழுக்க, புத்துணர்ச்சியுடனும், சுறுறுப்புடனும் வேலை செயவதற்கு ஏதுவாகிவிடும்.

மருத்துவ மனபயிற்சியின்போது, உடலில் மனம் ஆன்மீக பகுதியிலும், வெப்பம் அறிவியல் பகுதியிலும் செயல்பட்டு,  இணைந்து பணியாற்றி  நோய்களை குணப்படுத்துகின்றன.

கேள்விப்படாத ஆன்மீக தகவல்!
உடலில் மனதின் செயல்பாடு: இப்பொழுது மருத்துவ மனபயிற்சியின் போது, மனம் ஆன்மீக பகுதியில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். அப்போது, மேல் மனம் வலிக்குரிய உணர்வை எடுத்துக்கொண்டு, கீழ்நோக்கிப் பயணிக்கிறது; அப்படி பயணிக்கும்போது, மனமானது வலியையும், மனதில் உள்ள மனவழுத்தத்தையும் வெளியேற்றிக்கொண்டே செல்கிறது.

வெளியேற்றும்போது, மனதிற்கும், வலிக்கும், மனவழுத்தத்திற்கும் ஏற்படும் உராய்வினால், வெப்பம் பக்க விளைவாக உற்பத்தியாகி, உடல் முழுவதுவும் பரவுகிறது. வலியும், மனவழுத்தமும் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் மனம் கீழ்நோக்கிப் போகும்போது, வலியும், மனவழுத்தமும் மேலும் குறைகிறது. இறுதியில் மனம் மிகவும் நுண்ணிய நிலைக்குச் செல்லும்போது, நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கே இருக்கிறீர்கள் எனபது எதுவுமே உங்களுக்குத் தெரியாது. வெளியில் நடக்கும் நிகழ்வுகள் எதுவும் உங்கள் கவனத்துக்கு வராது. இந்த மாதிரி அனுபவம் ஓரிரு முறை உங்களுக்கு ஏற்படலாம்.
மேல் மனம் ஆழ்மனதுடன் இணையும்போது அற்புதம் நடக்கிறது!
வலிக்குரிய மருத்துவ மனபயிற்சியின் (மம) செய்யும் போது, மேல்மனம் மிகவும் ஆழ்மனதிற்கு செல்லும்போது, வலியும் இருக்காது; மனவழுத்தமும் இருக்காது. இந்த இடத்தில்தான் ஒரு அற்புத நிகழ்வு நடக்கிறது; இரு மனமும் இணைகின்றன; இணையும்போது, மேல்மனம், நித்திய ஆற்றல் என்னும் இறை ஆற்றலை எடுத்துக் கொண்டு மேல் நோக்கி வந்து விடுகிறது.

இப்பொழுது வந்திருக்கும் மனம் மாறுபட்ட மனம்; நோயிலிருந்து குணமான மனம்; மன அழுத்தத்திலிருந்து விடுபட்ட மனம்;  ஆன்மீக ஆற்றலால் நிரப்பப்பட்ட மனம். அதனால்தான், மம-வை நிறுத்தி, கண்களைவிழித்தவுடன், ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து, இனம் புரியாத மகிழ்ச்சியுடன், அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் வேலை செய்யவும் முடிகிறது. வாழ்க்கை முன்னேற்றப்படிகளில் ஒன்று ஏறியது போன்றது.

நோய்களை குணப்படுத்தும் வெப்ப டாக்டர்!
உடலில் வெப்பத்தின் செயல்பாடு: வலிக்குரிய மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, மனதின் செயல்பாட்டினால் வெப்பம் உற்பத்தியாகிறது. அந்த வெப்பத்தினால், அடைபட்டிருக்கும் வாயு விரிவடைந்து, அதனுடைய அழுத்தம் அதிகரிக்கிறது. அந்த வாயு அழுத்தம் உடலுக்கு வெளியில் உள்ள காற்றின் அழுத்தத்தைவிட அதிகமாக இருப்பதால், நெஞ்சை அடைத்துக்கொண்டிருந்தால், ஏப்பமாக வாய் வழியாக வெளியேறுகிறது; வயிற்றை அடைத்துக்கொண்டிருந்தால், மல ஆசன வழியாக வெளியேறுகிறது.

வெப்பப் பரவலால், உடலில் சளி ஒட்டிக்கொண்டிருக்கும் தொண்டை, நெஞ்சு மற்றும் வயிறு ஆகிய இடங்களில் தசைகள் விரிவடைவதால், தசைகள் பிடித்து வைத்திருந்த சளியை விட்டு விடுகின்றன. மம-வின் போது நாம் விடும் பெருமூச்சு இருமலை உற்பத்தி செய்து, இருமல், அச் சளியை நீருடன் கலந்து, மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் வெளியேற்றுகிறது;

தும்மல் கிருமிகளால் தோன்றுவதில்லை!
நோய்குரிய மருத்துவ மனபயிற்சி செய்யும்போதுமனதின் செயல்பாட்டினால் வெப்பம் உற்பத்தியாகிறதுவெப்பத்தினால்தோல் விரிவடைவதால்வியர்வைத்துவாரங்களும் விரிவடைகின்றனதோலுக்குக் கீழ் அடைபட்டுக் கிடக்கும் கெட்ட நீர் வியர்வையாக வெளியேறுகிறது.

முகத்தில் சளியுடன் கூடிய கெட்ட நீரும், நாம் வெளிவிடும் கெட்ட காற்றும் (கார்பண்டை ஆக்சைடும்) கலந்த கலவை குளிர்ச்சியினால் வெளியேறமுடியாமல் அடைபட்டிருக்கும்; மம-வின் வெப்பப் பரவலால்,  வாயுவையும், சளியுடன் கூடிய நீரையும் விரிவடையச் செய்து அதன் அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது. அந்த அதிகரித்த அழுத்தம், மூக்குக்கு வெளியே உள்ள காற்றின் அழுத்தத்தைவிட அதிகமாக இருப்பதால், பெரிய தும்மல் சத்தத்துடன் நீர் கலந்த சளியுடன் மூக்கு வழியாக வெளியேறுகிறது.  

சிகிச்சையின் போது, மலம் வெளியேறி குணமாவது எப்படி?
மருத்துவ மனபயிற்சியின்போது உற்பத்தியாகும் வெப்பம் உடல் முழுவதும் பரவுகிறது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, அதிக ரத்தத்தை சிறுநீரகங்களுக்கு அனுப்பி, அதிக சிறுநீரைச் சுரக்கச் செய்கிறது. இதேபோல, வெப்பத்தைனால், நாக்கு நாளங்கள் விரிவடைவதால், அதிக உமிழ்நீர் சுரக்கிறது. இந்த உமிழ்நீர் செரித்தலை அதிகப்படுத்துகிறது;

வெப்பமானது, அடைபட்டிருக்கும் மலத்தை இலகச் செய்து, மல ஆசனவாயையும் விரிவடையச் செய்து அதனுடைய அழுத்தத்தையும் அதிகப்படுத்தி, மலத்தை ஆசனவாயிலிருந்து வெளியேற்றுகிறது. இவ்வாறு கழிவுப் பொருட்களை வெளியேற்றி, நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. கிருமிகளால் நோய்கள் தோன்றுவதுமில்லை;

1864-ஆம் ஆண்டிலிருந்து உலக மக்கள் பயமுறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு ஆதாரம்!
1864-ஆம் ஆண்டு லூயிஸ் பாஸ்டர் என்கின்ற விஞ்ஞானி, “நோய்கள் கிருமிகளால் தோன்றுகின்றன; அக்கிருமிகள், காற்றின் மூலமும், நீரின் மூலமும் நோய்களை பரப்புகின்றன!  ” என்ற கொள்கையை பிரகடனப்படுத்தினார். அன்றையிலிருந்து இன்றுவரை அந்த கொள்கையை நிலைக்கச் செய்து, மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை வேறு விதமாக இருக்கிறது. அது எப்படி என்று பார்ப்போம்.

வீடுகளில் கழிவுப் பொருட்கள் குப்பை கூளங்களாக சேருவதைப் போல, உங்களது உடலிலும் கழிவுப் பொருட்கள் சேர்ந்து, தேங்கிவிடுகின்றன. உடலின் பராமரிப்பு சக்தியானது, அக்கழிவுப்பொருட்களை வெளியேற்றுகிறது; வெளியேற்றும்போது ஏற்படும் தொந்தரவுகளைத்தான்நோய்கள்என்று சொல்கிறோம். கெட்ட நீர், சளி ஆகிய இரண்டும் கழிவுப் பொருட்கள்; அவை மூக்கு முகம், தலை ஆகியவற்றில் தேங்கி நிற்கும் கழிவுப்பொருட்களாகும்;  மேலும் வரக்கூடிய கழிவுப் பொருட்களை தேக்கி வைக்க இடப் பற்றாக்குறை வரும்போது, உடல் பராமரிப்பு சக்தி அவற்றை வெளியேற்றுகின்றன. அப்படி வெளியேற்றும்போது, தும்மல்களுடன், சளியுடன் கலந்த நீரும் வெளியேறுகிறது. அதைத்தான் நோய் என்று சொல்கிறோம். அதற்கு ஆதாரம், மருத்துவ மனபயிற்சிகளின்போது, கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுத்தான் அனைத்து நோய்களும் மன நோய் உட்பட குணப்படுத்தப்படுகின்றன.

பெண்கள் குழந்தைகளை சுலபமாகப் பெற்றெடுக்கலாம்!
பெண்கள் கர்ப்பகாலத்தில் பல்வேறு தொந்தரவுகளிலிருந்து மீண்டு வர வேண்டியதிருக்கிறது. அவைகள்: முதுகு வலி, ஒற்றைத் தலைவலி, மலசிக்கல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தூக்கமின்மை, முடி உதிருதல், மன உளைச்சல் முதலிய தொந்தரவுகளை சந்திக்க வேண்டியதிருக்கிறது. முதுகுவலி, ஒற்றைத் தலைவலி மற்றும் வேறு வலிகளுக்கும் வலிக்குரிய மருத்துவ மனபயிற்சி (மம) செய்து உடனுக்குடன் குணப்படுத்தி விடலாம்.

மன உளைச்சல் உட்பட, மற்றவற்றிற்கு பொது உடல் மன நலத்துக்குரிய மார்பு மருத்துவ மனபயிற்சியை செய்து வரும்போது, அவற்றிலிருந்து முழுவதுமாக விடுபடலாம். பிரவசத்தைப் பற்றிய பய உணர்வு இல்லாமல் போய்விடும். அதேபோல பிரசவத்தின்போது ஏற்படும் வலியை வலிக்குரிய மம குறைத்து விடும்.

எனக்கு மூக்குச் சதையை அறுத்து (Operation) அப்புறப்படுத்திக்கொண்டிருக்கும்போது, அதனால் ஏற்பட்ட வலியை மம-செய்துதான் குறைத்துக்கொண்டே வந்தேன்.

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு ஒரு எளிய தீர்வு!
பெண்களுக்கு மாதவிடாயின் (Menstruation) போது, உடல் அளவிலும், மனதளவிலும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. மாதவிடாயின் போது, பெண்கள், தாங்க முடியாத வயிற்று வலி, ஏழு நாட்களுக்கும் மேலாக, ரத்தப் போக்கு ஏற்படுவது, மிகவும் பலவீனமாகவும், சோர்வாகவும் உணருதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கிறது.

அதேபோல, மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும்போதும் (Menopause) பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். சிலவேளைகளில் அதிக எடை மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது, முடி இழப்பு மற்றும் மெலிதான முடி, மார்பக சுருக்கம், மன அழுத்தம் (Depression) மற்றும் குறைந்த மனநிலை (Low mood), தூங்குவதற்கு கடினமாக இருத்தல். போன்ற பிரச்சனைகளால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

மேலே குறிப்பிட்ட இருபாலாரும், வலிக்குரிய மனபயிற்சியையும், பொது உடல் மன நலத்துக்குரிய மார்பு மருத்துவ மனபயிற்சியையும் செய்து வரும்போது, அவர்களுடைய பிரச்சனைகளை சுலபமாக சந்தித்து, அவற்றிலிருந்து மீள முடியும்.

விமானப் பயணத்தின் போதுநெஞ்சு வலிவந்துவிட்டால்….!
விமானத்தில், இருதய பிரச்சனை, இரத்த அழுத்தம், மனவழுத்தம், உடல் பருமனாக இருப்பவர்கள், சர்க்கரை நோயுள்ளவர்கள்-இப்படி உடலில் பல்வேறு தொந்தரவுள்ளவர்கள் பயணம் செய்வார்கள். அவர்களில் ஒருவருக்குநெஞ்சு வலிதிடீரென்று வந்து விடுகிறது; அவர் மாத்திரையை மாற்றி எடுத்து வந்து விட்டார்; விமானத்தில் டாக்டர் எவரும் இல்லை; என்ன செய்வது! பயப்படத்தேவையில்லை: வலிக்குரிய மருத்துவ மனபயிற்சியை (மம) அறிந்து வைத்திருந்தால், உடனே அதனைச் செய்து வலியை குணப்படுத்திவிடலாம். இவ்வாறு எந்தச் சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் ஆறு மருத்துவ மனபயிற்சிகளை தெரிந்து வைத்திருந்தால், அவைகளைக் கொண்டு நெருக்கடி காலங்களில் நோய்களிலிருந்து நலம் பெறலாம்.   

சாதாரண நடை, மருத்துவ மனபயிற்சி நடையாக மாறும்போது…….!
நடக்கும்போதும், உடற்பயிற்சியின் போதும், உறுப்புகளின் அசைவில் கவனத்தைச் செலுத்தி மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, அவை இரண்டும் செய்வது சுலபமாக உணர்வீர்கள். ஒருவிதமான இனம்புரியாத மகிழ்ச்சி உடல், மனம் இரண்டிலும் பரவி நிற்கும். நடக்கும்போது, கால் எடுத்து வைப்பதுவும், காலிலிருந்து தொடை வரையிலும், அவற்றின் அசைவில் கவனத்தைச் செலுத்துவதும் மருத்துவ மனபயிற்சியில் சேரும். அப்படி சாதாரண நடை மருத்துவ மனபயிற்சி நடையாக மாறும்போது நடையினால் ஏற்படக்கூடிய சிரமம் அல்லது உடல் வலிகள் இல்லாமல் போய்விடுகின்றன. நடப்பவருடைய திறன் கூடிவிடுகிறது. வழக்கமாக மூன்று கிலோ மீட்டர் வரை நடப்பவர் ஆறு கிலோ மீட்டர் தூரம் வரை நடப்பார். நடந்து முடித்தவுடன் ஒருவிதமான இனம்புரியாத மகிழ்ச்சி உடல், மனம் இரண்டிலும் பரவி நிற்கும் இதேபோல, இன்னும்  பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன.

நடந்துகொண்டே சிகிச்சை!
மதியம், ஒரு ஹோட்டலில், ஆசையை அடக்க முடியாமல்,நீங்கள் ஆஸ்த்மாவுக்கு சேராத உணவுப் பொருளை சாப்பிட்டுவிட்டு, தாகம் எடுக்காமல், நிறைய தண்ணீரும் குடித்து விட்டதாக வைத்துக் கொள்வோம். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உங்களது வீட்டிற்கு நடந்து செல்லும்போது, இளப்பு (Wheezing) வந்து விட்டது. அப்பொழுது மாத்திரையோ, உறிஞ்சு மருந்தோ இல்லை; நீங்கள் பயப்பட தேவையில்லை; உடனே நடப்பதை நிறுத்துங்கள்; உட்காருவதற்கு ஒரு இடத்தை கண்டுபிடித்து உட்காருங்கள்; இளப்புக்குரிய மருத்துவ மனபயிற்சியை (மம) 15 நிமிடங்கள் செய்யுங்கள்; இளப்பு குறையும் விதமாக,நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் சளி வெளியேறும்; நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் ஏப்பம் வெளியேறும், வயிற்றை அடைத்துக்கொண்டிருக்கும் வாயு வெளியேறும்; இளப்பின் கடுமை குறைந்திருக்கும். மீண்டும் எழுந்து நடங்கள்; மீண்டும் இளப்பு வரும்; மீண்டும் மம-செய்யுங்கள்; இளப்பு நன்றாக குறைந்திருக்கும்; உடற்பயிற்சியும், மனபயிற்சியும் மாறி மாறி செய்யும்போது, நிறைய கழிவுபொருட்கள் வெளியேறுகின்றன;  இப்படி தொடர்ந்து செய்து வந்து,, வீட்டிற்குள் நுழையும்போது இளப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டிருப்பீர்கள்; மனதில் இனம்புரியாத மகிழ்ச்சியை உணருவீர்கள். மனதின் மனபயிற்சியால் கிடைக்கும் ஆற்றலோடு, நடப்பதால் (உடற்பயிற்சியால்) கிடைக்கும் ஆற்றலும் சேரும்போது இளப்பு விரைவில் குணமாகிறது.

நடு இரவில், ஆழ்ந்த தூக்கத்தில் சிகிச்சை!
டி.வி.பார்க்க ஆசை; ஆனால் தலைவலி இருக்கிறது. மெதுவாக கண்களை மூடி, 10 நொடிகள் வெறுமனே மனதை வைத்துவிட்டு, தலைவலிக்குரிய மருத்துவ மனபயிற்சியை (மம) செய்யலாம். டி.வி.யிலிருந்து வரும் உரையாடல்களை கேட்கவும், அதே நேரத்தில் தலைவலி குறைந்து கொண்டே வரும். சீரியல் எபிசோடு முடியும்போது, தலைவலியிலிருந்து விடுதலையும் கிடைக்கும்..

ஒருவர் டி.வி. படத்துடன் சீரியல் பார்க்க விரும்புகிறார். தாராளமாக பார்க்கலாம். டி.வி. ஓடிக்கொண்டிருக்கும் கூடத்தில், நடந்து கொண்டேயும், படத்தைப் பார்த்துக்கொண்டேயும், தலைவலிக்குரிய மம-வை செய்து, தலைவலியை குணப்படுத்திக் கொள்ளலாம். ஆகவே மமம வளைந்து கொடுக்கக்கூடியது; எந்த சூழ்நிலைக்கும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் மாறிக்கொள்ளும்.

நடந்துகொண்டே மருத்துவ மனபயிற்சி செய்யும்போது, உட்கார்ந்து கண்களை மூடி செய்யும்போது குணமாகும் நேரத்தைக் காட்டிலும் பாதி நேரம்தான் ஆகும். அதற்கு காரணம் உடற்பயிற்சியும், மனபயிற்சியும் ஒரே நேரத்தில் சேர்ந்து செய்வதால் உண்டாகும் பலன்தான்.

மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தோடு, அரோமணியின் 11 விதிகளையும் தவறாது கடைப்பிடிக்கும்போது, எந்த நோயையும் மூன்று மாதத்திற்குள் குணபடுத்திவிடலாம். குணமாவதோடு, ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உள்ளத்தில் குடிகொண்டிருக்கும்.

36. உங்கள் உடலில் “Armed Reserve Police!
மருத்துவ மனபயிற்சி மருத்துவத்தின் கொள்கை {(Theory of the Medicine of Medicinal Meditation (MMM)}.
சிறப்பு ரிசர்வு போலீஸ் இருப்பதைப் போல, உங்கள் உடலிலும் சிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்தம் (சிஒர) இருக்கிறது. ஒரு ஊரில் கலகம் ஏற்பட்டு விட்டால், அந்த கலகத்தை அடக்க, சிறப்பு ரிசர்வு போலீஸ், மேலிடத்தின் உத்தரவின் பேரில், அங்கு சென்று கலகத்தை அடக்கிவிட்டு திரும்பும். அதே போலத்தான், உங்களது உடலிலுள்ள சிஒர, வேலை செய்யும்போது, வேலையில் ஈடுபடுகின்ற உறுப்புகளுக்குச் (organs) சென்று, அது கொண்டு வந்த ஆற்றலை (Energy) அவ்வுறுப்புகளுக்குக் கொடுத்து, அவைகளின் தேய்மானத்தைத் தடுக்கும். அதன் மூலம் உடலின் பலவீனம் குறைக்கப்பட்டு, தேக்கமுறும் கழிவுகளும் குறைக்கப்படுகின்றன. உடலின் பராமரிப்பு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. இவ்வாறு நோய்கள் தோன்றுவது தடுக்கப்படுகின்றன.

உதாரணமாக, சாப்பிடும்போது, டி.வி. பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால், வைத்துக்கொள்வோம். ஒரு பலாத்கார காட்சி வருகிறது; அதைப் பார்த்தவுடன் மூளையில் அதிர்ச்சி ஏற்படுகிறது; மூளை பாதிக்கக்கூடாது என்பதற்காக, சிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்தம் (சிஒர) மூளைக்குச் சென்றுவிடுகிறது. ஆனால் சிஒர சாப்பிடும் வேலை செய்யக்கூடிய கண்கள், கைகள், உதடுகள், பற்கள், நாக்கு, தொண்டை, இரப்பை ஆகிய உருப்புகளுக்குச் செல்ல வேண்டும். சிஒர அவைகளுக்குச் செல்லாததால், அவ்வுறுப்புகளில் தேய்மானம் ஏற்பட்டு, பலவீனமாகி, நோய்கள் தோன்றுகின்றன  

கவன குறைவால் நோய்கள் தோன்றுகின்றன.
செய்கின்ற வேலையில் முழுக் கவனத்தைச் செலுத்தும்போதுதான், அந்த ரத்தம் அவ்வுறுப்புகளுக்குச் செல்லும். அதாவது மனதின் (ஆன்மீகப் பிரதிநிதி) உத்தரவின் பேரில்தான் சிஒர (அறிவியல் பிரதிநிதி) அவ்வுறுப்புகளுக்குச் செல்லும். இங்குகவனம்எனபது வேலையில் கவனம் இருக்கும்போது, வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற உறுப்புகளுக்குச் சென்று, சிஒர, தான் கொண்டு வந்த வெப்ப ஆற்றலைக் கொடுத்து, அவ்வுறுப்புகளின் தேய்மானத்தைத் தடுத்து, பலவீனத்தைக் குறைக்கிறது. பலவீனம் குறைவதால், தேக்கமுறும் கழிவுகள் குறைகின்றன; நோய்களும் குறைகின்றன. இதில் முக்கியமான ஒன்று, சிஒர வேலை செய்கின்ற உறுப்புகளுக்குத் தானாக போகாது வேலையில் கவனத்தை திருப்பும்போதுதான் போகும்.

ஒருஅன்பானவேண்டுகோள்.
மருத்துவ வசதிகள் எட்டாத வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்துவதறகு, பார்வையாளர்கள்ரீடு பவுண்டேசன்டிரஸ்டிற்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். நிதி அளிப்பவருக்கு டிரஸ்டின் ரசிது வழங்கபடும். தயவுசெய்து பணத்தை கீழே கொடுத்துள்ள கணக்குக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 
READ FOUNDATION, STATE BANK OF INDIA, USILAMPATTI BRANCH,; A/C NO. 30929651933, IFSC CODE NO. SBIN0002284  


Healer, Medicinal Meditation Expert, Researcher, Er.R.A.Bharaman (அரோமணி)
email:twinmedicine@gmail.com; Please visit www.medicineliving.blogspot.com :
© Er.R.A.Bharaman alias Aromani

A









a


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: