Monday, October 21, 2019

யாதும் ஊரே!


    ஜாதகம் பார்ப்பதால் பலன் உண்டா?          

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.


பலன் உண்டா இல்லையா என்பது முக்கியமல்ல. ஐ.நா. சபை கூடத்தில் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்! தீதும் நன்றும் பிறர் தர வராது” என்ற தமிழ்புலவர் கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடல் இடம் பெற்றிருக்கிறது. அந்த பாடலைத்தான், சமீபத்தில், அமெரிக்காவில், நமது பாரத பிரதமர் ஐ.நா. பொதுக்குழு மாநாட்டில் பேசும்போது,மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.

அந்த பாடலின்படி, தீமையும், நன்மையும் பிறரால் வருவதில்லை. வெள்ளத்தின் வழியே தெப்பம் செல்லுவதைப் போல, உயிரின் வழியே ஊழ்வினை பயணிக்கிறது. ஊழ்வினை என்ற விதியின்படியே ஒருவருக்கு தீமையும், நன்மையும் நடக்கிறது. அதை எவராலும் மாற்ற முடியாது. இப்படி வேதமும், கீதையும் கூறியிருக்கிறது., விவேகானந்தரும் சொல்லியிருக்கிறார்.

மாற்ற முடியாத ஒன்றை ஜாதகத்தின் மூலம் அறிவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது. மருத்துவ மனபயிற்சிகளின் மூலம் நோய்களை குணபடுத்திக்கொண்டு, அதன் அனுபவத்தைக்கொண்டு கவனவாழ்க்கை வாழும்போதுதான் புலவர் சொன்ன உண்மையைக் காண்பீர்கள். மேலும் வரக்கூடிய தீமையையும், நன்மையையும் சமமாக பார்ப்பீர்கள். இயற்கை என்ற இறைவன், துயர காலங்களில் உங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுப்பதை நன்கு உணருவீர்கள்.
                ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: