Tuesday, September 23, 2014

அவனால் மட்டும்


 
இளைங்கர்களோடு இறைவனும் அவர்களது பாதுகாப்பிற்கு விமானத்தில் ஏறிவிடுவான்! 

வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இளைங்கர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

1.இன்று இளைங்கர்கள் ஆயிரக்கணக்கில் வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் வேலை தேடிச் செல்லும் அவல நிலையைப் பார்க்கிறோம். வளைகுடா நாடுகலிலிருந்தோ, சிங்கபூர், மலேசியா நாடுகளிலிருந்தோ இந்தியாவுக்கு வேலை தேடி எவரும் வருவதில்லை. அது ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள்.

2. அந்த இளைங்கர்களுக்குதான் எத்தனை சோதனைகள்! ஏழ்மையான குடும்பம். பணப்பிரச்சனை, ஏஜண்டுகளிடம் பிரச்சனை, சென்ற இடத்தில் உறுதிமொழி கொடுத்த வேலையில் மாற்றம், சமபளத்தில் ஏமாற்றம், கடுமையான தட்பவெட்ப நிலையில் பணிசெய்தல், தங்குமிடத்தில் வசதியின்மை, அந்நாட்டு சட்டங்களை ஏற்று கடைபிடிப்பதில் பிரச்சனை, ஊருக்கு பணம் அனுப்புவதில் பிரச்சனை, ஊரில் உள்ள மனைவி, குழந்தைகளைப் பற்றிய கவலை. விடுமுறை கிடைப்பதில் பிரச்சனை, விடுமுறைக்கு ஊருக்கு வந்து திரும்புவதில் பிரச்சனை, அந்நாடுகளில் போர் வந்து விட்டால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத பிரச்சனை- இப்படி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, சமாளித்து வாழவேண்டிய பயங்கரமான சூழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனைகள் இல்லாமல் அல்லது இந்த பிரச்சனைகள் அவர்களை தாக்கி அழித்து விடாமல், சுலபமாக அந்நாடுகளில் வேலைபார்த்து, அவர்களது குடும்பங்களை வாழவைக்கமுடியாதா! முடியும்! இப்பொழுது அவர்களது பலமே மனித அறிவுதான். அந்த அறிவை வைத்துக் கொண்டுதான் மேற்குறிப்பிட்ட அத்தனை பிரச்சனைகளையும் அவர்கள் சமாளித்தாக வேண்டும்.

3. மனித அறிவை மூலதனமாக வைத்து, கற்பனையில் உதித்த எண்ணங்களை சொல் வடிவமாகவும், செயல் வடிவமாகவும் கொண்டு, திட்டமிட்டு, யோசித்து செயல்படுகிறார்கள். திட்டமிட்டபடி யோசித்து முடிவெடுத்தபடி செய்யகூடிய செயல்பாடுகள் அனைத்தும் எதிர்காலத்தைச் சேர்ந்தவை. அக்காலத்தில் நாம் நினைத்தபடி, நினைத்த நேரத்தில் திட்டமிட்ட காரியத்தை நிறைவேற்ற முடியுமா! எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். நமது திட்டமிட்ட காரியம் நடக்காமலும் போகலாம். அப்போது ஏற்படும் ஏமாற்றத்தை உங்களால் தாங்கிக்கொள்ளமுடியுமா!  

3A. ‘THE HINDU’ ஆங்கில நாளிதழ் தேதி 18-7-2014 அன்று வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கவில்லையா! மலேசியா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அவ்விமானத்தில் பயணித்த 295 பயணிகளும் மாண்டு போனார்கள். அத்தனை பேரும் திட்டமிட்டு, யோசித்து முடிவெடுத்த ஏதோ ஒரு காரியத்தை ஆற்றுவதற்குதான் பயணித்திருக்கிறார்கள். அவர்கள் திட்டம் என்ன ஆனது! யோசித்து முடிவெடுத்தது வெற்றி அடைந்ததா! திட்டமிட்டு, யோசித்து முடிவெடுக்க அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம், வங்கியில் பணம் எடுத்து, விமான டிக்கட் எடுத்து, நேரத்திற்கு விமான நிலையத்திற்கு சென்றது போன்ற முயற்சிகள் அனைத்தும் வீண்தானே! இதில் நீ தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்: எதிர்காலம் உனக்குச் சொந்தமல்ல! அந்தகாலத்தில், செயல்படும் செயல்களுக்காக, நீ திட்டமிட்டு யோசித்து முடிவெடுக்காதே! இதுதான் உனது முதல் பாடம்.

4. வெளிநாடுகளுக்கு உன்னை அனுப்பும் ஏஜண்டுக்கு முன்னால் நீ உட்கார்ந்திருக்கிறாய். லட்சக் கணக்கில் பணம் கட்ட தயாராயிருக்கிறாய்.  அவன் நல்லவனா கெட்டவனா என்பதை நீ எப்படி அறிவாய்! நீ விசாரித்த அளவில் நேற்றுவரை நல்லவன்தான் இன்றும் அவன் நல்லவனாகதான் இருக்க வேண்டும் என்பதற்கு உன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. பேராசை வந்துவிட்டால், கற்பனை வாழ்க்கையில் மனிதன் எப்பொழுதும் மாறிவிடுவான். பேராசைக்காரனாக மாறியிருந்தால் லட்சகணக்கான ரூபாயை இழந்து பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகி விடுவாய்!. அந்த நிலையில் அவன் நல்லவனா கெட்டவனா என்று எடுத்துரைக்கும் ஆற்றல் இறைவன் ஒருவனுக்குதான் உண்டு

5. நீ பயணிக்கும் பஸ், ரயில், விமானம், பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்நிய நாடுகளில் வேலை செய்யும் இடங்களில் உனக்கு போதுமான பாதுகாப்பு வேண்டும்.

5A. (THE HINDU) 2-7-2014-ல் படித்த செய்தியின்படி,  “ஈராக்கில் நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போரில், 46 இந்திய செவிலியர்கள் (nurses) கிர்குக் நகரில் உள்ள மருத்துவமனையில் மாட்டிகொண்டு “தங்களைக் காப்பாற்றும்படி” அபயக்குரல் கொடுத்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களின் மருத்துவமனை அருகில் குண்டு வெடிக்கும் சத்தமும், துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது”.

6. திரு.விஜயகுமார் (42),  மின்னியலில் டிப்ளமோ படித்த (DEE) தொழில் நுட்ப பணியாளர், மெக்காமண்டபம், கன்னியாகுமரி மாவட்டம், ஈராக் உள்நாட்டுப் போரின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறுகிறார்: “ அநேக இந்தியர்கள் அடிமை கூலிகளாகதான் ஈராக்கில் வேலை செய்து வருகிறார்கள். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து 10 மாதங்களாக, 20,000 பணியாட்களை வைத்து வேலைவாங்கும் கொரிய நிறுவனம் என்னை அடிமையாக நடத்தித்தான் வேலை வாங்கியது. என்னை, வேலைக்குச்  சேர்ந்த நாளையிலிருந்து, ஒவ்வொரு நாளும், 48 டிகிரி செண்டிகிரேடு வெயிலில், 12 மணிநேரம் இடைவேளை இல்லாமல் தொடர்ச்சியாக, கடுமையாக வேலை வாங்கினார்கள்.

கடந்த அக்டோபர் மாதம், இராமநாதபுரத்திலிருந்து வந்த ஒருவர் பணியாற்றிய இடத்திலேயே இறந்துவிட்டார். அந்த இறப்பை அந்த நிறுவனம் விசாரணை எதுவுமின்றி மறைத்து விட்டது. பல நாட்களாக குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

அங்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தினால், அநேக இந்திய பணியாளர்கள் உயிர் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாததாலும், சுரண்டலை எதிர்த்தும் ஒரு மாத காலம் போராடினோம். முடிவாக அந்த நிறுவனம், நான் உட்பட 65 பேர்களை இந்தியா திரும்ப அனுமதித்தது. இந்தியாவில், வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களில், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. என்னைப்போன்ற தொழில் நுட்பம் படித்தவர்களுக்கு (technical education) நல்லவேலை, உயர்ந்த சம்பளம் என்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். ஆனால் அந்த நாடுகளுக்குச் சென்றபிறகு குறைவான சம்பளமே தருகிறார்கள். என்னுடன் வேலைபார்த்த ஏராளமான பணியாளர்களுக்கு உறுதிமொழி அளித்த சம்பளத்தில் பாதிதான் கொடுக்கிறார்கள். இந்தியாவிலிருந்து ஏழ்மைக் குடும்பத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த பணியாளர்கள், உணவு விநியோக துறையில் வேலை விசா (work visa) இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள்’” (நன்றி- THE HINDU தேதி: 8-7-2014) இவர் கூறியது வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்திய பணியாளர்களின் அவல நிலையை தெளிவாக அறிய முடிகிறது. இந்த அவல நிலையை மாற்றியாக வேண்டும். மாற்ற முடியும்! அந்த மாற்றத்திற்கு நீ தயாராக வேண்டும்.

7. விடுமுறை காலங்களில் பாதுகாப்பாக போய்திரும்ப  வேண்டும். ஏனென்றால் உனது வருமானத்தை நம்பி உனது ஊரில் உனது மனைவி மக்கள் இருக்கிறார்கள். நீ வெளிநாட்டில் இருக்கும் காலங்களில், உனது மனைவி மக்களிடமிருந்து நீ அனுப்பும் பணத்தை பிறர் பறித்துவிடக் கூடாது. நீ இல்லாவிட்டாலும், உனது பிள்ளைகளின் படிப்பு, வளர்ச்சி ஒரே சீராக இருக்க வேண்டும். நீ அவர்களின் கவலையை மறந்து நிம்மதியாக வேலை பார்க்க வேண்டும். இதற்கு ஒரே வழி நீ தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் கற்பனை வாழ்க்கையிலிருந்து கவனவாழ்க்கைக்கு மாறவேண்டும். அப்படி மாறிவிட்டால், உனது அறிவு மனித அறிவிலிருந்து மாறி இறை அறிவாக மாறிவிடுகிறது. இதற்குப் பிறகு உனது செயல்கள் அனைத்தும் இறை அறிவினால் இயக்கபடும்.   உன்னுடனுடனே விமானத்தில் இறைவனும் ஏறிவிடுவான். அவன் எங்கும் நிறைந்தவன். அவனுடைய நகலை உனது குடும்பப் பாதுகாப்பிற்கு அனுப்பிவைப்பான்.

8. உன்னுடன் வந்தவன், விசா, பாஸ்போர்ட், கம்பெனி, சம்பளம், இருப்பிடம், நண்பர்கள், அந்நாட்டின் அதிகாரிகள், தீவிரவாதிகள், உள்நாட்டுப் போர் முதலியவற்றில் பிரச்சனை வராமல் உன்னுடனிருந்து, உனக்கருகிலிருந்து உதவிபுரிவான். அவன் அருகிலிருப்பதை நீ உணர்வாய். எந்த நோய் வந்தாலும், மருந்துகடையை தேடி அலைய வேண்டாம். மருத்துவ மனபயிற்சி மூலம், நீ இருக்கும் இடத்திலேயே எந்த செலவும் இல்லாமல் குணப்படுத்திக்கொள்ளலாம். குண்டு வெடிப்பதை நீ கேட்பாய். ஆனால் உனக்கருகில் வெடிக்காது. போர் ஏற்பட்டாலும், அக்காலங்களில் உணவு, தண்ணீர், உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகியவற்றில் உனக்கு மட்டும் பஞ்சம் ஏற்படாது, பாதுகாப்பாக வீடு வந்து சேர்வாய்!

9. நீ வெளிநாடு செல்ல தீர்மானித்து விட்டால், பாஸ்போர்ட், விசா முதலியன எடுக்க முயற்சியில் இறங்குவதற்கு முன்பே கவனவாழ்க்கையை உனதாக்கிக் கொள். அப்பொழுதுதான் உனதுமுயற்சிகள் தடங்கல் இல்லாமல் சுலபமாக நல்லதாக முடியும். நீ செய்ய வேண்டியதெல்லாம் இரட்டை மருத்துவத்தின் மூலம் உனது நோய்களுக்கு சிகிச்சை எடுத்து கொள். முழு உடல்மன நலம் பெறுவாய். பிறகு கவனவாழ்க்கைக்கு மாறுவது சுலபமாகிவிடும்.
Please visit website www.medicineliving.blogspot.com;       
ஹீலர், மருத்துவ மனபயிற்சி நிபுணர் பொறிஞர்.இரா.அ..பரமன்.(அரோமணி) 9442035291
மேற்பார்வை பொறியாளர் (ஓய்வு)/தமிழ்நாடு மின்சார வாரியம்.
Copyright to R.A.Bharaman 


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: