Tuesday, September 23, 2014

தங்கைகளுக்காக..(முக0..


பெண்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். (முழு கட்டுரை)



1.உயிரினங்களில் பெண் இனம் இல்லையேல் இவ்வுலகில் இனப்பெருக்கமில்லை. இனப்பெருக்கத்திற்கு அவர்கள் இன்றியமையாதவர்கள். ஆணின் ஒவ்வொறு வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உண்டு என்பார்கள். அதே போல, குடும்பத்தில், உறவுகளில் ஒரு கலகம் ஏற்பட்டால், அதற்கு பின்னாலும் ஒரு பெண் உண்டு என்பதுவும் உண்மை.



2. ஈடன் தோட்டத்தில் கவனவாழ்க்கையிலிருந்து ஆதாமை கற்பனை வாழ்க்கைக்கு மாற்றிய பெருமை ஏவாளுக்குதான் உண்டு. தனது நிர்வாண கோலத்தை இறைவன் பார்த்துவிடுவான் என்று நாணமுற்று ஓடி மரத்துக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டவளும் அவளே! முதன்முதலில் எண்ணங்களை நீடிக்க விட்டு கற்பனையில் மிதந்து சுகம் கண்டவளும் ஏவாளே. அன்றையிலிருந்து இன்றுவரை மக்கள் கற்பனை வாழ்க்கைதான் (Imagination Life) வாழ்ந்து சொல்லொண்ணா துயரங்களை அநுபவித்து வருகிறார்கள். இறைவனோடு இருந்த தொடர்பும் அறுந்து விட்டது. மீண்டும் தொடர்பு கொள்ள பல்வேறு ஆன்மீக வழிகளில் மக்கள் முயற்சித்து வருகிறார்கள். ஆனால் எவரும் இறைவனிடம் பேசியதில்லை. காரணம், அறியாமையால் கடவுள் வழிபாடு என்று வெவ்வேறு முறைகளையும், சடங்குகளையும் அறிமுகப்படுத்துகிறார்களே தவிர, இறைவனோடு ஆதாம் பேசியதைபோல பேசுவதற்கு அடிப்படையாக என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாமலிருக்கிறார்கள்.

3. மக்கள் கற்பனை வாழ்க்கையிலிருக்கும் வரை இறைவனோடு பேசமுடியாது. காரணம், இந்த வாழ்க்கையில், எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் எவருக்கும் தீங்கு செய்யாமலிருக்க முடியாது. முடியாது என்ற பட்சத்தில், இறைவனோடு பேசவும் முடியாது. இறைவனது அருளை பெறவும் முடியாது. கவனவாழ்க்கையை யார் முடித்து வைத்தாரோ அவர்தான், கற்பனை வாழ்க்கையை முடித்து கவனவாழ்க்கையை துவக்க தகுதி வாய்ந்தவர். ஆம். பெண்தான் கற்பனை வாழ்க்கையை முடித்து கவனவாழ்க்கையை துவக்க வேண்டும்.

4. ஏவாளைப் பார்த்துநீ வலி எடுத்து குழந்தைகளைப் பெற்றெடுப்பாய்!” என்று என்றைக்கு இறைவன்  சாபமிட்டாரோ அன்றையிலிருந்து பெண்கள் குழந்தைகளை 10 மாதங்கள் வயிற்றில் சுமந்து வலியெடுத்துத்தான் பெற்றெடுக்கிறார்கள். குழந்தகளைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்குவதில்  அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. கணவனின் அகால மரணத்திற்கு பிறகு, பெண்தான் குடும்ப ஒட்டு மொத்த சுமையையும் சுமக்கிறாள். கணவன் குடும்ப சுமையை தாங்கமாட்டாமல், மனைவி, மக்களை விட்டு கோழையாக ஓடினாலும், துறவியாக மாறி ஓடினாலும் பெண் தான் குடும்பத்தை வீழ்ந்து விடாமல் தாங்கி பிடிக்கிறாள். கணவன் தன் கண் முன்னாலேயே வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தினாலும் அதையும் சகித்து கொண்டு குழந்தைகளை தன்னுடனேயே வைத்துக்கொண்டு, அவர்களை ஆளாக்கும் பெண் தெய்வம் அவள். குடித்துவிட்டு வந்து அடித்தாலும் அவனுக்கும் சேர்த்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பவளே பெண்.

4A. நான் சென்னையில் உள்ள மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் உதவிசெயற் பொறியாளராக பணியாற்றும்போது, எனக்கு உதவியாளராக இருந்தவர் ஒரு பெண். வயது 50 இருக்கும். அவர் திருமணமாகாதவர். ஏழ்மை குடும்பம். அவரது பெற்றோரால், அவருக்கு காலாகாலத்தில் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. அவர்களும் அகால மரணமடைந்து விட்டார்கள். திருமணம் செய்து கொள்ளாமல், தனது தம்பியை படிக்க வைத்து, திருமணமும் செய்துவைத்து தம்பியின் குடும்பத்தோடு தங்கிவிட்டார். அவருடைய வாழ்க்கையை கேட்டபொழுது நான் ;மிகவும் வேதனைக்குள்ளானேன்.

4B. தலைமை அலுவலகத்தில் மாறுதலாகி வேறொரு தொழில்நுட்ப வட்டத்தில் பணியில் சேர்ந்தபொழுது அங்கும் ஒரு பெண்தான் எனக்கு உதவியாளராக இருந்தார். அவருக்கு வயது 40 இருக்கும். அவருக்கு திருமணமாகி ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அவர் எப்பொழுதும் சிரித்த முகத்துடன்தான் காணப்படுவார். எந்த சூழ்நிலையிலும் கோபப்படமாட்டார். அவருக்கு ஒரு தம்பி உண்டு. அவர் திருமணமாகி தனியாக வாழ்ந்து வந்தார். அவரது பெற்றோர்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் இரண்டு தங்கைகள் (14,13) தனிக் குடும்பமாக இருந்தார்கள். திடீரென்று பெற்றோர்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக அகால மரணடைந்து விட்டார்கள். அவரது இரண்டு தங்கைகளையும், அவரது தம்பி ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டான். வேறு வழியில்லாமல், அவர் இரண்டு தங்கைகளையும் தனது வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். இதனால் அவருக்கும், அவரது கணவர் மற்றும் , மாமியாருக்குமிடையே சண்டை மூண்டது. அவரை விவாகரத்து செய்துவிடுவதாக அவரது கணவர் மிரட்டினார். அந்த மிரட்டலுக்கு அவர் பணியவில்லை. இறுதியில் அவர்கள் அவரிடம் சரணடைந்து விட்டனர். இந்த உண்மை கதையை கேட்டபொழுது எனது மனம் கலங்கியது. தனது தங்கைகளுக்காக தனது வாழ்க்கையையும் துறக்க தயாரான அவரது தியாக மனப்பான்மையை இப்பொழுது எழுதும்பொழுது எனது கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவென்று வெளியேறியது.

5. வீட்டுப் பொறுப்பையும் பார்த்துக்கொண்டு வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவர்களுடைய சுமை இரண்டு மடங்காகிறது. வேலை செய்யகூடிய இடங்களில் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கபடுகிறார்கள். தனியாக செல்லும் பெண்களை கேலி செய்தல், பாலியல் தொந்தரவு கொடுத்தல், கற்பலித்து கொலை, கொள்ளையடித்தல். காதலிக்கும் பெண்களை பிரித்தல், வரதட்சிணை கொடுமையால் உயிரோடு எரித்தல்,  முதலியவை பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகளில் சில. இதைதவிர, பெண்களை கடத்திச் சென்று விபச்சார விடுதிகளில் விற்றுவிடுகிற கொடுமையும் நடந்து கொண்டுதானிருக்கிறது. 26-6-2014 அன்று THE HINDU ஆங்கில நாளிதழில் வந்த செய்திபடி, குடிகாரத் தந்தை ஒருவன் குடித்துவிட்டு, தனது வயதுக்கு வராத 15 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதோடு கொலை செய்யவும் முயற்சித்திருக்கிறான்.

5A. பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பதும், பிறந்துவிட்டால் கொலை செய்வதும் இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் கொடுமைகளில் ஒன்றாகும். இந்த கொடுமையில் தாய்க்கு எந்த பங்கும் இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஆனால் பெறப்போகின்ற மற்றும்  பெற்ற தாய்மார்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்! அவ்வாறு கொள்வது தாய்மையையே இழிவுபடுத்துவதாகும்! இது ஆன்மீகத்தையும், இறைவனின் இருப்பையும் மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் தெரிவிக்கிறது. பூனைகளையும் தெருவில் திரியும் நாய்களையும் பார்த்து வியந்திருக்கிறேன். இவைகளுக்கு யார் உணவு அளிக்கிறார்கள்; எப்படி குட்டிகளை ஈன்று, வளர்த்து, இனப்பெருக்கம் செய்கின்றன! கவனவாழ்க்கைக்கு மாறியபிறகுதான் இறைவனின் இருப்பை அறிந்தேன். பூமியில் பிறந்துவிட்ட அனைத்து உயிரினத்தையும் அவன் ஏதோ ஒரு வகையில் காப்பாற்றி வருகிறான் என்பதை அறிந்தேன். இதேபோலத்தான் பூமியில் பிறந்துவிட்ட பெண்பிள்ளைகளையும், அவர்கள் எத்தனை பேராக இருந்தாலும், அவர்களுக்கு வாழ்க்கையை கொடுத்து வாழவைப்பான். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், என்னுடன் பணிசெய்துகொண்டிருந்த செயற்பொறியாளருடைய மனைவிக்கு கூடப்பிறந்தவர்கள் 6 அக்கா தங்கைகள். இவரையும் சேர்த்து 7 பெண்பிள்ளைகள். அத்தனைபேரும் அரசு அதிகாரிகளை மணந்து நன்றாக வாழ்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இதேபோல அதிக பெண்பிள்ளைகளைக் கொண்ட ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திங்களில், அனைத்து பெண்பிள்ளைகளுக்கும் திருமணமாகி நன்றாக வாழுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கொலை செய்வது ஒரு பாவமாகும்.  பெண்குழந்தைகளைக் கருவிலேயும், பிறந்தபிறகும் கொன்று மேலும் சாபத்தை தேடிக்கொள்ளலாமா!

6. “பாலினம் சமமின்மை குறியீட்டு எண்ணில் (Gender IneqaIity Index),  146 நாடுகளின் பட்டியலில் இந்தியா 132 வது எண் தர வரிசையில் உள்ளது.
தேசிய குடுமப நல ஆய்வின்படி (National Family Health Survey) கிடைத்த புள்ளிவிபரங்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 1990க்கும் 2011க்கும் இடையில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதில் 40% காயங்கள் கணவர்களாளோ அல்லது குடும்ப உறுப்பினர்களாலோ ஏற்படுத்தபட்டதாகும்.
திருமணமாகாத பெண்களைக் (16%) காட்டிலும் திருமணமான பெண்களுக்கும், விதைவைகளுக்கும் (37%&38% ) அதிக அளவு வன்கொடுமை நடக்கிறது.
இதே போல கடந்த 12 மாதங்களில் வேலைக்குப் போகாத பெண்களைக்காட்டிலும் (29%), வேலைக்குப் போகும் பெண்களுக்குத்தான் (39-40%), அதிக அளவு வன்கொடுமை நடந்திருக்கிறது. இது வேலைக்குப் போகும் பெண்களின் வருமானத்தால், அவர்களுக்கு எதிரான வன்கொடுமை குறைந்திருக்கிறது என்ற கருத்துக்கு முரண்பட்டதாக இருக்கிறது” நன்றி: சமிகா ரவி மற்றும் அனுராதா சஜ்ஜன்ஹார் ‘THE HINDU’ தேதி: 21-6-2014

7. “பெண்களுக்கு இழைக்கும் கொடுமை மத்தியதர வகுப்பினருக்கும் ஏழைகளுக்கு மட்டும் பொருந்தும் என்ற நியதி உண்மையானதல்ல என்பதற்கு ஒரு உதாரணத்தை கூறலாம். வெற்றிபெற்றுள்ள நடிகையும் கிங்ஸ் 11 பஞ்சாப் கிரிக்கட் அணியின் கூட்டாளிகளில் ஒருவருமான  சிந்தாவுக்கு, அவரது கூட்டாளியும், செல்வந்த வணிகரும், பெயர்பெற்ற குடும்பத்தில் வந்த ஒருவரால் (வாடியாவால்)  பொது இடத்தில் (IPL cricket ground)  அவமானப்படுத்தப்பட்டார். இது ஆற்றல் மிக்க, படித்த பெண்களுக்கும் கூட அவமதிக்கபடும் சாத்தியகூறுகள் உண்டு என்பதையே நிருபிக்கிறது.

7B. காவல் துறையும், நீதித்துறையும் கூட பெண்களுக்கு இழைக்கும் கொடுமையில் விதிவிலக்கல்ல என்பதுபோல செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
(பெண்கள் கூட்டாக, ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால், எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு நடந்த நிகழ்ச்சி ஒன்று அத்தாட்சியாகும்.)
“அக்குயாதவ், 10 ஆண்டுகளுக்குமேலாக நாக்பூர் கஸ்தூர்பா நகர் சேரியில் உள்ள 300 குடும்பங்களை குலைநடுங்க வைத்துகொண்டிருந்த ஒரு மிகவும் மோசமான பயங்கரமான ரவுடி பல பெண்களை கற்பழித்தும், அவர்களில் மூன்று பேரை கொலை செய்தும், அவன்மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு, ஒரு நாள் 200 பெண்கள் ஒன்றாக சேர்ந்து மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அவனை அடித்தே கொன்றார்கள். அவர்கள், தாங்கள்தான் அவனை அடித்து கொன்றதாகவும், தங்கள் அனைவரையும் கைது செய்யும்படி காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார்கள். வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.” நன்றி. மைதிலி சுந்தர், ‘THE HINDU’ தேதி: 23-6-2014     

8. பெண்கொடுமைக்கு எதிராகவும், பெண்விடுதலைக்காகவும் பல சமுதாய தலைவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் தந்தை பெரியாராவார். அரசும் சட்டங்கள் போட்டு பெண்ணுரிமையை காக்கவும் பாதுகாக்கவும் முயற்சிக்கிறது. ஆனால், பெண்களுக்கு இழைக்கபடும் பல கொடுமைகள் ஆண்கள் மது அருந்துவதால்தான் இழைக்கப்படுகின்றன. ஆகவே இதற்கு   ஒரே தீர்வு, பூரணமதுவிலக்கை அமுல்படுத்துவதுதான்.

8A. “பூரண மதுவிலக்கை நோக்கி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி எடுத்துவரும் துணிச்சலான நடவடிக்கைகள் வரவேற்புக்குரியன, பாராட்டுக்குரியன. முதல் கட்டமாக எழுநூறுக்கும் மேற்பட்ட பார்களை மூடிவிட முடிவெடுத்து ஏற்கனவெ 418 பார்கள் மூடப்பட்டு விட்டன. இந்த நிதியாண்டில் மீதமுள்ள 312 பார்களும் மூடப்படும் என்று அறிவித்துள்ளார் உம்மன் சாண்டி. முதல் நாள் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள கேரள அரசு, அக்டோபர் 2 முதல் எல்லா ஞாயிற்றுக்கிழைமைகளையும் விடுமுறையாக அறிவித்துள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில், கேரளத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்ற தொலைநோக்கோடு உம்மன் சாண்டி செயல்பட்டு வருவது மெச்சத்தகுந்தது.

குடிப்பழக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. அது குடும்பப் பொருளாதரத்தை மட்டும் குலைப்பதில்லை; குடும்ப நல்லுறவுகளையும் சீரழிக்கிறது; மனச்சிக்கல்களை உருவாக்குவதுடன் உடல்நலத்தையும் பாதித்துவிடுகிறது. சமுகத்தில் குற்றவாளிகளை அதிகரிக்கச் செய்கிறது.” நன்றி:கல்கி தேதி:7-9-2014

9. சட்டத்தினால் மட்டும் பெண்களுக்கு பெண்ணுரிமை பெற்று தர முடியுமா? முடியாது. போதுமான சட்டங்கள் இருக்கு. ஆனால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மட்டும் குறைய வில்லையே, ஏன்? மக்கள் மனவழுத்தம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். மனவழுத்தம் குறைவதற்கு, மக்கள் தினசரி தவறாது மனபயிற்சி செய்யவேண்டும்.. மனபயிற்சி மக்களுக்கு கிடைக்கும்படியாக . வழிபாட்டு முறையில் மாற்றம் செய்யபட வேண்டும். மனபயிற்சி அதிகரித்து மனவழுத்தம் குறையும் போது, மனவளம் அதிகரிக்கும். மனவளம் அதிகரிக்கும்போது, அறியாமை குறையும்.. அவ்வாறு அறியாமை குறையும் போது, நல்லது கெட்டதை பகுத்தறியவும், சட்டங்களை மதிக்கக் கூடிய மனப்பாங்கும் வளர்கிறது. இந்த நிலையில்தான் பெண்களுக்கு இழக்கபடும் கொடுமைகள் குறையும்.. உதாரணமாக, பிராமணர்கள் கோயில்களில் அர்ச்சகர்களாக இருந்து சாமி சிலைக்கு அர்ச்சணை செய்வதின் மூலம் நல்ல மனபயிற்சி பெறுகிறார்கள். அவர்களது வீடுகளிலும் ’சந்தியா மந்திர’த்தைச் சொல்லி மனபயிற்சி பெறுகிறார்கள். எல்லாவிதமான நல்ல மற்றும் இறப்பு போன்ற காரியங்களுக்கும் மந்திரங்களைச் சொல்லி மனபயிற்சி பெறுகிறார்கள். ஆகவேதான் எனக்குத் தெரிந்த வரையில், அவர்களினத்தில் பெண்கொடுமை என்பது அவ்வளவாக இல்லை என்றே சொல்லலாம்.

10. மனவழுத்தம் இல்லாத கவனவாழ்க்கைதான் மனிதன் வாழும் முழு நிறைவான வாழ்க்கையாகும்; மகிழ்ச்சியான வாழ்க்கையாகும்; அதுவே முழு ஆன்மீக வாழ்க்கையாகும். சமுதாயத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாகும். அவர்கள் ஒழுக்கநெறியுடன் வளர்க்கப்படுகிறார்கள். ஆகவே திருமண வாழ்க்கையில் அவர்களின் எதிர்பார்ப்பும் அதிகம். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதுவே அவர்களிடம் ஏறி உடகாரும் முதல் மனவழுத்தம். காரணம் ஆண்கள் ஒழுக்கநெறியுடன் வளருவதில்லை. இதனால் முதல் மனவழுத்தப் பதிவு தாம்பத்ய உறவின் நெருடலால் ஏற்படுகிறது. மதுப்பழக்கத்தினால் ஆண்கள் குழந்தை பிறப்பிற்கு தகுதி அற்றவர்களாக ஆகிறார்கள். ஆனால், குழந்தை இல்லாத ’மலடி’ என்ற அவப்பெயர் பெண்களுக்குத்தான் சூட்டபடுகிறது. இந்த மனவழுத்தமும் சேருகிறது.

11. ஒரு ஆண் இரு மனைவி உள்ள குடும்பத்தில் அவ்விரு பெண்களுக்கும் உண்டாகும் மனவழுத்தத்தைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை. அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகள் மூலமாகவும், சக பணியாளர்கள் மூலமாகவும் பாலியல் தொந்தரவுகளினால் ஏற்படும் மனவழுத்தம். பணிச் சுமையால் சந்திக்கும் ஏச்சுக்கள், பேச்சுக்கள் இவற்றால் ஏற்படும் மனவழுத்தம்; வீடுகளில் கணவனாலும், குழந்தைகளினாலும், கணவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாலும், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உண்டாகும் பிரச்சனைகளினால் விளையும் மனவழுத்தம்; நிதிப்பற்றாக்குறை, குடியிருக்கும் வீட்டின் இடப் பற்றாக்குறை, உடுத்தும் உடை பற்றாக்குறை ஆகியவற்றால் உண்டாகும் மனவழுத்தம்; வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பும் வரை தான் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளால் உண்டாகும் மனவழுத்தம்-இப்படி மனவழுத்தங்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இளஞிகிகள், பெண்கள் மீது சமிப காலமாக அமிலத் தாக்குதல்கள் அதிகரித்து வருவது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

11A. “BSNL-ன் பணியாளர் P.T.இராஜனின் மகள், அவளுடைய கணவரின் சகோதரியால், தங்க வளையல்கள் வாங்கிக் கொடுக்காததால், தீ வைத்து கொளுத்தி சாகடிக்கப் பட்டாள்.  இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான், அவளுடைய கணவன், அவளை கட்டாயப்படுத்தி வளுக்கட்டாயமாக அமிலத்தை (acid) குடிக்க வைத்தான்.

கவிதா, வடசென்னை, ஆறு வருடங்களுக்கு முன்னால் நடந்த அமிலத்தாக்குதலை( acid attack) சரி செய்ய நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டாள். இருபது வருடங்களுக்கு முன்னால் 

இராணி(48) மீது அவளது கணவன் அமிலத்தை ஊற்றினான்.எனது வாழ்வை கழிக்க தையல் வேலை செய்து பிழைப்பை நடத்துகிறேன். ஆனால் கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை. இன்னும் நான் களைப்பினாலும், தலை வலிகளாலும் துன்பப்படுகிறேன். ஒரு நல்ல உடல்நலமுள்ளவரைப் போல நீண்ட நேரம் என்னால் வேலை செய்ய முடியவில்லை.” என்று அவள் சொன்னாள்.  நன்றி: வித்யா வெங்கட், THE HINDU, தேதி:30-8-2014

11B. இப்படி பெண்கள் அக்கிரமங்களைச் சந்திக்கும் மற்றும் மனவழுத்தத்தின் கூடாரமாக, திகழ்கிறார்கள். இதனால் அவர்கள் தற்கொலை முயற்சிகளில் இறங்குகிறார்கள். பள்ளி மாணவிகள் சமீப காலமாக தேர்வில் தோல்வி, குறைந்த மார்க், பள்ளிகளில் சந்திக்கும் அவமானம் போன்ற பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.

12. மேற்கூறியவாறு நடமாடும் மனவழுத்தமாகத் திகழும் பெண்கள், அதைக் குறைக்க அவர்கள் எடுத்த, எடுக்கும் நடவடிக்கைதான் என்ன? கோயில்களுக்கு தவறாது வாரத்திற்கு ஓரிரு முறை செல்கிறார்கள். ஐந்து நிமிடங்களில் வழிபாட்டை முடித்து கொண்டு திரும்பிவிடுகிறார்கள். இந்த ஐந்து நிமிட வழிபாட்டில் எந்த மனபயிற்சியும் இல்லை. ஆகவே மனவழுத்தம் குறைவதற்கும் வாய்ப்பில்லை. பிராமணப் பெண்களைப் போல கோயிலில் உட்கார்ந்து இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடலாம், பிரார்த்தனை கூட்டாகச் செய்யலாம்; அங்கு அறநெறிச்சொற்பொழிவு, கதாகாலட்சேபம் ஆகியவை இருந்தால், அவற்றை கேட்கலாம். இவை அனைத்துமே மனவழுத்தத்தை குறைக்கும் வழிபாட்டு முறைகளாகும். இந்த வழிபாட்டு முறைகளை தினசரி கடைப்பிடித்தால்தான் சிறிதளவாவது மனவழுத்தம் குறைந்து கொண்டே வரும்.
12A. ”கிறிஸ்தவர்கள், ஞாயிற்றுக்கிழமையானா சர்ச் போயிடுவாங்க. முஸ்லீம்கள் வெள்ளிகிழமையானா மசூதி போயிடுவாங்க. இவங்கள்லாம் கூட்டுபிரார்த்தனை பண்றதால, எல்லா நேரமும் அவங்களுக்கு நல்ல நேரமா இருக்கு. ஆனா நம்ம மதத்துல ஆளாளுக்கு ஒரு உருவத்தைக் கும்பிடறோம். அதனால, நேரம், காலம், பரிகாரம், குறிகேக்கிறது தேவைப்படுது” என்று திருச்சி சகுந்தலாவின் தோழியின் தங்கை கூறினார். நன்றி: சகுந்தலா,, திருச்சி-அவள் விகடன் தேதி: 26-8-14.
”உடல்தான் எனது கோயில். எனது குறிக்கோள் (தேடல்) ஆத்மா.”- உலகப்புகழ்பெற்ற யோகா குரு B.K.S.ஐயங்கார். நன்றி: சவுமோஜித் பானர்ஜி, THE HINDU தேதி:21-8-2014

13. மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களுமே மனவழுத்த எண்ணங்களாக மாறிவிடுகின்றன. வேலைக்குப் போகாமல் வீட்டுப் பொறுப்பைப் பார்த்துகொள்ளும் பெண்களுக்கு, தனிமையில் உடகார்ந்து எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு மனவழுத்தம் அதிகமாகவே இருக்கும்.  ஆகவே தினசரி மனவழுத்த எண்ணங்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இவை ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டும்போதுதான் மனநோய் (depression) தோன்றுகிறது. இதனால்தான், இறைவன் நம்மைப் படைக்கும்போதே, நமது செயல்முறைகளிலேயே, சேர்ந்த மனவழுத்தம் வெளியேறும்படியாகவும், மீண்டும் மனவழுத்தம் சேராதபடியும் இருக்கும்படியாக (கவனவாழ்க்கை வாழும்படியாக) உடலை வடிவமைத்திருக்கிறான். இது தெரியாமல்தான் நாம் மனவழுத்தத்தை சுமந்து கொண்டு திரிகிறோம்.

14. “உங்களது கொள்கைதான் என்ன?” என்று கேட்கும் நிருபருக்கு, ஜென் துறவி “மனவழுத்த மூடையை சுமந்து கொண்டே தூங்காமலிருக்கிறீர்கள்! நாங்களோ அம்மூடையை இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக தூங்குகிறோம். இதுதான் எங்களது கொள்கை!” என்றாராம்.

15. உடற்பயிற்சியாலும் மனபயிற்சியாலும் நமது ஆற்றலை பெருக்கிகொள்ளும் அறிவியல் முறைதான் ஆன்மீகமாகும். அந்த ஆற்றல்தான் ஆன்மீக ஆற்றலாகும். உடற்பயிற்சியிலும் மனபயிற்சியிலும், உடலும் மனமும் இணைந்து செயல்படும்போதுதான் அதிகபட்ச ஆன்மீக ஆற்றல் நமக்கு கிடைக்கிறது. ஆனால் தற்பொழுதுள்ள கற்பனை வாழ்க்கையில் (IL) இரண்டும் இணைந்து செயல்படவில்லை. ஆகவே கிடைக்கும் ஆன்மீக ஆற்றல் மிகவும் குறைவாகத்தான் கிடைக்கிறது. இதனால்தான் மக்கள் கடுமையான துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் அனுபவிக்கும் துயரங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை.

16. இந்த இரண்டையும் இணைந்து செயல்படுவதற்குதான் உலகில் பல மகான்கள் தோன்றி போதனை செய்தார்கள். அவர்களின் போதனைகளின் அடிப்படையில் மதங்கள் தோன்றலாயின. வேறுபலமகான்கள்  தோன்றி மதங்களைச் சாராத மனப்பயிற்சிகளை (தியானங்களை) பரப்பி வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் மகரிசி மகேஷ் யோகி, ஓஷோ, ஜேகே ஆவார்கள். தமிழகத்தில் வேதாத்திரி மகரிஷி முக்கியமானவர்.

17. மகரிசி மகேஷ் யோகியின் ஆழ்நிலைத்தியானத்தையும் (Transcidental meditation) அதன் மேல்நிலைப் பயிற்சியான ’சித்தி’ (Siddi) யையும் பயின்று பயிற்சி எடுத்தவன் நான். தொடர்ந்து எடுத்த பயிற்சி எனக்கு ஏணியாக அமைந்து கவனவாழ்க்கைக்கு என்னை எடுத்துச் சென்று,  என்னோடு இறைவனையும், இறைவனோடு என்னையும் பேச வைத்தது.

18. பெண்கள் தங்களிடம் சேர்ந்துள்ள மனவழுத்த மூடையை எவ்வாறு இறக்கி வைப்பது ! இறைவனால் எனக்கு வெளிப்படுத்திய மருத்துவம் தான் இரட்டை மருத்துவமாகும் (Twin Medicine-TM). இம்மருத்துவத்தில் முதல் மருத்துவம் வாழும் தாய் மருத்துவம் (Living Mother Medicine-LMM). இதில் 11 அரோமணி விதிகள் மிகவும் முக்கியமானதாகும். அந்த விதிகளை மீறும்போதுதான் கழிவுப் பொருட்களின் தேக்கத்தால் நோய்கள் தோன்றுகின்றன.  இரண்டாவது மருத்துவம் மருத்துவ மனபயிற்சி மருத்துவமாகும் (Medicine of Medicinal Meditation-MMM). இம்மருத்துவம் ஒரே நேரத்தில் உடலிலும் மனதிலும்  முறையே அறிவியல் பகுதி, ஆன்மீகப் பகுதி  என்று இரண்டு பகுதிகளாக செயல்பட்டு நோயை குணப்படுத்துகிறது. அறிவியல் பகுதியில் நோய்க்கு இரத்தத்தின் மூலம் ஆற்றல் பரிமாற்றம் நடக்கிறது.   ஆன்மீகப் பகுதியில்தான் நோயின் உணர்வும், மனவழுத்தமும் வெளியேற்றபடுகிறது. நோயின் உணர்வுக்கு உதாரணமாக வலி உணர்வையும், இளப்பு உணர்வையும் சொல்லலாம்.

19. ஒருவருக்கு நீண்டகாலமாக தலைவலி இருந்தால், ஒருவாரம் தொடர்ந்து வலிக்குறிய மருத்துவ மனப்பயிற்சியை செய்து வந்தால், வலியிலிருந்து முற்றிலும் குணம் பெறலாம். மனவழுத்தமும் கணிசமான அளவு வெளியேறியிருக்கும். இந்த பயிற்சி அவர் கவனவாழ்க்கைக்கு மாறுவதற்கு போதுமானதாகும். அவர் கவனவாழ்க்கைக்கு மாறிய பிறகு அவருடைய அனைத்து நோய்களும் இறங்குமுகமாக குறைந்து கொண்டே வரும். உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மருந்து மாத்திரைகள் தேவைபடாது. சேராத உணவுப் பண்டங்களை சேர்த்துக் கொள்ளலாம். கவனவாழ்க்கைக்கு மாறுவதற்கு இது ஒரு வழியாகும்.

20. மற்றொரு வழிமுறையும் இருக்கிறது. கவன ஈர்ப்பு மருத்துவ மனபயிற்சி ஒன்று இருக்கிறது. 15 நிமிடபயிற்சி இது. இந்த பயிற்சியை காலை, பிற்பகல், மாலை, இரவு படுத்து கொண்டே செய்தல் ஆகிய 4 வேளையிலும், வேளைக்கு 15 நிமிடம் என்று ஒரு மூன்று மாதங்களோ அல்லது 5 மாதங்களோ செய்து வர வேண்டும். அதற்கு பிறகு கவனவாழ்க்கைக்கு மாறுவது சுலபமாகி விடுகிறது.

21. மனபயிற்சி (வடமொழியில் தியானம்) என்று சொன்னாலே பொதுவாகப் பெண்களுக்குப் பிடிப்பதில்லை. அதற்கு காரணம், அவர்கள் மனபயிற்சியைப் பற்றி தவறான எண்ணத்திலிருக்கிறார்கள். நமது நாட்டில்தான் முனிவர்களைப் பற்றிய கதைகள் ஏராளம். முனிவர்கள் என்றாலே பிரம்மசரியம் கொண்டு காட்டில் தவம் செய்பவர்கள் என்ற கருத்துத்தான் பெண்களிடம் ஆழப்பதிந்துள்ளது. தவம் செய்தாலோ அல்லது தியானம் செய்தாலோ ஆண்கள் குடும்ப வாழ்க்கையை துறந்து விடுவார்கள் என்ற பயம் அவர்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. 15 நிமிட மனப்பயிற்சிக்கே பெண்கள் பயப்படுகிறார்கள் என்றால், ஒரு நாள் முழுவதும் படுக்கும்வரை (1000 நிமிடங்கள்) நமது உடலையும் மனதையும் மனபயிற்சியில் இணையும்படியாக வைத்து, அதன்மூலம் நமக்கு முழு உடல்மன நலம் கிடைப்பதற்காக நமது உடலை வடிவமைத்திருகிறானே இறைவன், அதற்கு பெண்கள் எவ்வளவு பயப்படுவது!.
இது சம்பந்தமாக எனக்கேற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

22. எனக்கு தெரிந்த ஒருவர், மனபயிற்சி (தியானம்) செய்யும் போதெல்லாம், அவர் மனைவி, தலை வழியே தண்ணீரை ஊற்றி அதை செய்யவிடாமல் தடுத்து விடுவாராம். இதனால் அவர் மனபயிற்சி செய்வதை நிறுத்தி விட்டார். கூட்டு மனபயிற்சியில் கலந்து கொண்ட பிற மதத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென்று நின்றுவிட்டார். ஒரு நாள் அவரை சந்தித்த பொழுது, அவருடைய மதத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளகூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததால் நின்றுவிட்டதாக சொன்னார். மற்றொரு நண்பர் மனபயிற்சி செய்தால், தான் தன் தாய் வீட்டுக்கு சென்றுவிடுவதாக  அவரது மனைவி மிரட்டியிருக்கிறார். இதனால் அந்த நண்பர் மனபயிற்சி செய்வதை நிறுத்தி விட்டார். எனக்கு வியப்பாக இருந்தது! உடல் நலத்திற்கு எப்படி உடற்பயிற்சி செய்கிறோமோ அதைப்போலவே மனநலத்திற்கு மனபயிற்சி செய்கிறோம். இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது!

23, முனிவர்களுடைய வாழ்க்கை வரலாற்றினை பெண்கள் அறியவில்லை.  கவுதம முனிவர் அகல்யாவை மணந்து பல்லாண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்.  முனிவர் உத்தாலகா ஒரு திருமணமான முனிவர். அவருக்கு ஒரு மகனும் உண்டு. முனிவர் வசிஸ்டர் எட்டு குழ்ந்தைகளை பெற்றெடுத்த தந்தை. யாயாதி மன்னன், இரண்டாவது திருமணம் செய்து, தனது மகளுக்கு துரோகம் செய்துவிட்டதாக கோபம் கொண்ட, முனிவர் சுக்குராச்சாரியா, மன்னன் தனது இளம் வயதை இழந்து முதுமையடைய சாபமிட்ட கதையும் உண்டு. மனபயிற்சியை ஆண்கள் செய்வதால்,உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போய்விடுவார்கள் என்று எண்ணி  பெண்கள் பயப்படுகிறார்கள். ஆனால் உண்மை நேர்மாறாக இருக்கிறது. மனவழுத்தம் நிறைந்துள்ள ஆணாலும், பெண்ணாலும் தாம்பத்ய உறவில் இன்பம் காணமுடியாது.

23A. “மதுரை நகர டாக்டர்கள், ஆண்களிடையே ஆண்மை தன்மை குறைந்துகொண்டே வருவது கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதற்கு, மனவழுத்தம் (stress) முதன்மையான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.” நன்றி:THE HINDU தேதி:30-7-2014.

 உடலுறவில் இருபாலாரும் திருப்தியும் மகிழ்ச்சியும் பெறுவதற்கு, மனநலம் அத்தியாவசிய தேவையாகும். அந்த மனநலத்தை மனபயிற்சியில்தான் பெறமுடியும். இன்று மனநலம் குன்றிய அனைவருக்கும் மனநல மருத்துவர்கள் பரிந்துரைப்பது மனபயிற்சியைதான் (தியானத்தைத்தான்).



23B. ‘வாழும்கலை’ நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தங்கையும், ‘வாழும்கலை’ நிறுவனத்தை நிறுபவிப்பருமான திருமதி.பானுமதி நரசிம்ஹன் கூறுகிறார்: “தியானம், தனக்குள் இருக்கும் வளத்தை அறிய உதவும். இதனால் மனப்பாங்கு மாற்றமடையும். சூழலும் மாற்றமடையும். எனவெ, பெண்கள் தினமும் 15 நிமிடங்களையாவது தியானத்துக்கு ஒதுக்க வேண்டும். ‘தியானம் செய்வதால் பிரச்சனையே வராதா’ என்று கேட்டால், அப்படி இல்லை. ஆனால் தியானம் செய்பவர்கள், பிரச்சனைகளை முறையாக கையாளும் திறமை பெறுவார்கள். தியானம் செய்து பாருங்கள்—உங்களுக்கே இன்னும் பலவும் புரியும்!”நன்றி: கணேஷ் வைஷ்ணவி, அவள் விகடன் தேதி:17-6-2014
 

24. காம உணர்வுதான் இனப்பெருக்கத்திற்கு அடிப்படையாகும். இந்த உணர்வை சரியான நேரத்தில் சரியான இடத்தில் பயன்படுத்தும்போது இருபாலாருக்கும் நன்மை பல உண்டாகும். உலகப்புகழ்பெற்ற நடிகையும், உலகச் செல்வந்தர்களில் ஒருவரான, எலிசபெத் டெய்லர் நல்ல தாம்பத்ய உறவுக்குத்தான் ஏங்கினார். இங்கிலாந்து இளவரசி டயானா எப்படி எந்த சூழ்நிலையில் விபத்துக்குள்ளானார். ஒரு இளம் பெண் ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி. 100 கோடிக்குச் சொந்தகாரி, தன்னந்தனியாக ஒரு ஹோட்டல் அறையில் தற்கொலையா அல்லது இயறகை சாவா என்று தீர்மானிக்க முடியாத நிலையில் ஏன் சாக வேண்டும். இதற்கு தாம்பத்ய உறவில் மறைந்திருக்கும் காம உணர்வுதான் அடிப்படை. காம உணர்வு இருந்தால் மட்டும் போதாது. அந்த காம உணர்வினை, பெண் தயாராகும் வரை ஆண் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். அதுவரை ஆணுறுப்பு விறைத்திருக்க வேண்டும். இதற்கு ஆண் பெண் இருபாலாருக்கும் மனவழுத்தம் குறைவாக இருக்க வேண்டும். மனபயிற்சியின் மூலம்தான் மனவழுத்தத்தை குறைக்க முடியும்.

25. பெண்களுக்குண்டாகும் பல பிரச்சனைகள் பெண்களால்தான் உண்டாகின்றன. ஒவ்வொரு பிரச்சனைக்குப் பின்னாலும் ஒரு பெண் தானிருக்கிறாள் என்றால் மிகையாகாது. காரணம் அவர்கள் மனவழுத்தம் நிறம்பியவர்கள். இதனால் ’புறம் பேசுதல்’ குணம் படைத்தவர்கள். இந்த குணம் பல பிரச்சனைகளை தொற்றுவிக்க காரணமாகி விடுகிறது.

26. திருமணமாகும்வரை தாய் தகப்பனார் ஆதரவு பெண்களுக்குக் கிடைக்கிறது. அதற்கப்புறம் உதவிக்கரம் நீட்டுவதற்கு பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசு இருக்கிறார்கள். ஆனால் அந்த உதவிகரம் எவ்வளவு தூரம் நீளும் என்பதுதான் கேள்வி. அதற்கு ஒரு அளவு உண்டு. அவர்களுக்கு அளவில்லாமல் உதவிகரம் நீட்ட முடியும் என்றால், அது நம்மை படைத்த இறைவனால்தான் முடியும். அந்த இறைவனின் முழு அருளையும் பெற்று,  பெண்கள் எதற்கும் அச்சமில்லாமல் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழமுடியும். அதற்கு அவர்கள் கவனஈர்ப்பு மருத்துவ மனபயிற்சியை 3 முதல் 5 மாதங்கள் வரை செய்து பிறகு மெதுவாக கவனவாழ்க்கைக்கு மாறிவிடவேண்டும். நீங்கள் மாறிவிட்டால், உங்களது கணவனால் வேறு பெண்ணை நினைக்க முடியாது. உங்களிடமும் எந்த ஆண்களும் அலுவலகத்திலும், பிற இடங்களிலும் தவறான எண்ணத்தில் நெருங்க முடியாது. இறைவன் பாதுகாப்புக்காக, உங்களது அருகிலேயே இருப்பதை உணர்வீர்கள். தேசத் தந்தை மகாத்மா காந்தி கண்ட கனவு நிறைவேறும். இரவு 12 மணிக்கு கவனவாழ்க்கை வாழும் பெண் நகைகளை அணிந்துகொண்டு  சாலையில் தனியாக எந்த பயமுமின்றி நடந்து செல்லலாம்.

26A. ஒருமுறை எனது மனைவி நகைகளை அணிந்துகொண்டு அதிகாலை 2.30 மணிக்கு மதுரை பெரியார் நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு சென்றார். மற்றொருமுறை ஓரு திருமணத்திற்கு எனது மனைவியும் மகளும் நகைகளை அணிந்துகொண்டு நாகர்கோயிலிலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு இரவு 7 மணிக்கு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒற்றையடிப்பாதையில் நடந்தே சென்றார்கள்.

26B. உங்களது கணவன் தனது காம உணர்வினை முழுவதுமாக உங்களிடமே பிரயோகிப்பான். இருவருக்கிடையே அந்நியோநியம் பூரணமாக நிலவும். வாழ்வின் இதர அனைத்து அம்சங்களிலும் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டே வரும். இறைவன் உங்களிடம் பேசுவான்; நீங்கள் அவனிடம் பேசலாம்.

27. பெண்களே! இப்போழுது நீங்கள் கற்பனை வாழ்க்கை வாழ்கிறீர்கள். மனவழுத்தம் நிறைந்த வாழ்க்கை; மனவழுத்தம் கவனக்குறைவையும் அறியாமையையும் உண்டாக்குகிறது. இவ்விரண்டும் தவறுகளை, குற்றங்களை இழைக்கச் செய்கிறது. இத்தவறுகளும், குற்றங்களும் உங்களுக்கு துயரங்களையும், நோய்களையும் தருவிக்கின்றன. இதனால் உங்களுக்கு ஆற்றல் குறைந்து, மகிழ்ச்சி குறைந்து மேலும் பல தவறுகள் செய்கிறீர்கள். துன்பங்கள் மேலும் அதிகமாகின்றன. இதனால் உங்களைப் படைத்த இறைவனோடு நேரடி தொடர்பு கொள்ள உங்களால் முடியவில்லை. அவனிடமிருந்து நேரடியாக எந்த உதவியையும் உங்களால் பெறமுடியவில்லை.

28. அன்புள்ள சகோதரிகளே! கவனவாழ்க்கைக்கு மாறுங்கள். மனவழுத்தம் காணாமல் போய்விடும்; மனவளம் பெருகும்; அறியாமை விலகும்; நோய்களிலிருந்து குணம் பெறுவீர்கள்; நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்; வேலை செய்ய ஆற்றல் அதிகருக்கும்; செல்வம் பெருகும். காலையிலிருந்து படுக்கைக்குப் போகும் வரை (1000 நிமிடங்கள்) எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் எவருக்கும் தீங்கு செய்ய மாட்டீர்கள். இதுதான் ஆன்மீகத்தின் உயர்கொள்கை.இந்த கொள்கையை கடைப்பிடிப்பதால், இறைவனின் முழு அருளும் (100%) உங்களுக்குக் கிடைக்கும். அந்த நிலையில் ‘தொட்டதெல்லாம் துலங்கும்’ (All possibilities) முயற்சியில்லாமல்; இறைவன் உங்களோடு பேசுவான்; அவனோடு நீங்கள் பேசலாம்.  

”உலகிலுள்ள அனைவருக்கும் நன்மை தருவனவற்றை மனதால் எண்ணவும், வாயால் சொல்லவும், செயலால் செய்யவும் வேண்டும். உண்மையில் மனிதனுக்கு எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.”
-மகான் வேதாத்ரி மகரிஷி

cell:9442035291
Please visit the following website:www. medicineliving.blogspot.com; copyright to R.A.Bharaman alias Aromani
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: