A 226-MLM-Aromani's 2nd Principle
நோயுண்டாக்கும் உணவை ஆற்றல் மிகுந்த உணவாக மாற்றும் மருந்தில்லா மருந்து
நோயுண்டாக்கும் உணவை ஆற்றல் மிகுந்த உணவாக மாற்றும் மருந்தில்லா மருந்து
4. பேராற்றலாக விளங்கும் இறைவன், மனிதனின் நாகரீக வளர்ச்சிக்காக, மனிதனுக்கு அளித்த பரிசுதான் வெப்ப ஆற்றல் (heat energy). தீப்பாறைகள் உறுதியானவை. இவற்றை, காற்று, ஆறு மற்றும் கடலலை போன்ற இயற்கை சக்திகள் எளிதில் அரிக்க இயலாது. ஆனால் வெப்பம் (heat) இப்பாறைகளை எளிதில் சிதைத்துவிடுகிறது. ஆகவே வெப்பம் எவ்வளவு பெரிய ஆற்றல் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அத்தகைய ஆற்றலைத்தான் நமது உணவில் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.
5. பச்சைக்
களிமண்ணால் செய்த செங்கலைச் சுட்டவுடன் சக்தி வாய்ந்த சுட்ட செங்கலாக மாறுகிறது. பெரிய அணைக்கட்டுகளையும், பலமாடிக் கட்டிடங்களையும் தாங்கும் சக்தியை சுட்ட செங்கல் கொடுக்கிறது. இதேபோலத்தான், இயற்கை உணவான பழங்களை சமைத்தவுடன் சக்திவாய்ந்த சமைத்த பழங்களாகிறது.
இயற்கை உணவு + வெப்ப ஆற்றல் = சமைத்த உணவு
Raw food + heat energy = cooked food
6.. இயற்கை உணவைச் சமைத்து உண்பதின் மூலம், இயற்கை உணவினால் கிடைக்கும் வெப்பச் சக்தியைத் தவிர, வெப்ப ஆற்றலைச் சேர்த்துச் சமைப்பதால் உண்டாகும் வெப்பச் சக்தியும், கூடுதலாகக் கிடைக்கிறது. உதாரணமாக அரிசியின் வெப்பநிலை
28 டிகிரி சென்டிகிரேடு (room temperature) என்றால்,
சமைப்பதின் மூலம், அரிசியின் வெப்பநிலை
அதிகரித்து ஆறிய
நிலையில் சோறாக 37.0 °C ல் நமக்குக் கிடைக்கிறது. 9 டிகிரி செண்டி கிரேடுக்கு (37-28) உரிய வெப்ப ஆற்றல் நமக்குக் கூடுதலாகக் கிடைக்கிறது.
7. ஆகவே இயற்கை உணவை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும் சமைத்து உண்பதால் கூடுதல் வெப்ப ஆற்றல் (additional calories) நமக்குக் கிடைக்கிறது என்பது உண்மையாகும். ஆகவே சமைத்த உணவு மனிதவர்க்கத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். மற்ற உயிரினங்களிலுருந்து வேறுபட்டு, மனிதன் அடைந்த நவீனகால நாகரீக வளர்ச்சிக்கு இறைவன் கொடுத்த பரிசுதான் இந்தக் கூடுதல் வெப்ப ஆற்றலாகும். (Additional heat energy).
8. இதைத்
தவிர, மனிதன் நெருப்பின் உபயோகத்தைத் தெரிந்து கொண்ட காலத்திலிருந்து, சமைத்த உணவையே, அதன் சுவை காரணமாக, விரும்பிச் சாப்பிட்டு வந்தான். சமைப்பது ஒரு கலையாகவே வளர்ந்து வந்திருக்கிறது. இதற்கு சரித்திரத்தில் ஒரு சான்று கிடைத்திருக்கிறது. 16 ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டின் மன்னன் 14-ம் லூயி உணவில் ஒரு உருப்படி
(item) நன்றாக இல்லை என்று முகம் சுளித்துவிட்டான். இதனால் சமையல்காரன் தற்கொலை செய்து கொண்டான்.
9. ஆதிகாலத்திலிருந்து மனிதன் பழங்களை மிகவும் குறைவாகவே உணவில் சேர்த்துக் கொண்டான். இதனால் நமது உடலின் செல்கள் சமைத்த உணவை ஏற்றுக் கொண்டன. சமைக்காத இயற்கை உணவினை ஏற்காமல் மறுதலித்து, ஒவ்வாமையை (allergy) ஏற்ப்படுத்துகின்றன. இந்த ஒவ்வாமை உடலைப் பலவீனப்படுத்தி நோய்களை வளர்க்கின்றன.
10. மேலும்
இயற்கை உணவு இயல்பியல் (physical) குணம் கொண்டது. சமைத்த உணவு வேதியல் (chemical) குணம் கொண்டது. ஆகவே இரண்டுக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. சமைப்பதின் மூலம், இயற்கை உணவானது, கெமிக்கல் மாற்றமடைந்து, இயற்கை உணவின் பண்புகளை இழந்து புதிய பண்புகளைப் பெற்று புதிய பொருள்களாக மாறுகின்றன. உதாரணமாக செடியிலிருந்து பிடுங்கிய கத்தரிக்காயை, சமைத்துவிட்டால், சமைத்த கத்தரிக்காய் ஒரிஜினல் கத்தரிக்காயாக இருப்பதில்லை. சமைத்த
உணவின் வெப்பநிலை (37.0 °C ), உடலின்
வெப்பநிலைக்கு (37.0 °C) சமமாக இருப்பதால்
செரித்தல் வேகமாக நடக்கிறது. இயற்கை உணவின் வெப்பநிலை குறைவாக இருப்பதால் (room
temperature), தாமதமாக செரிக்கிறது. இதேபோன்ற இன்னும் சில முக்கிய வேறுபாடுகளினால், நமது செல்கள் சமைத்த உணவை ஏற்றுக் கொண்டு, இயற்கை உணவை ஒதுக்கித் தள்ளிவிடுகின்றன; நோய்களாக வெளிப்படுகின்றன.
11. “இயற்கை உணவு வெவ்வேறு அளவுகளில் செரிமானத்தை
எதிர்க்கிறது. வாழைப்பழம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றின் இயற்கை ஸ்டார்ச் அதிக
அளவில் (செரிமானத்தை) எதிர்த்து 90% வரை செரிமானம் ஆகாமலேயே சிறுகுடல் (small intestine) வழியாக கடக்கிறது.
இயற்கை வெள்ளை கோதுமை மாவு மெதுவாக செரிமானம் ஆகிறது. அதையே சமைத்த ரொட்டியாக மாற்றும்போது
செரிமானம் ஆகக்கூடிய உணவாக மாறுகிறது”. நன்றி: B.சிரீலட்சிமி, NUTRITION SCIENCE,
Text Book for College Attachment -1
12. “பச்சைக் காய்கறிகள் பெரும்பாலும் நல்லதல்ல. அவற்றின் செல் அமைப்பு எளிதில் ஜீரணமாகத் தடையாக உள்ளது. சமைத்த காய்கறிகள் நன்மையைத் தரும்.” என்கிறார் இங்கிலாந்தில் உள்ள ஊட்டச்சத்து அறிவியல் ஆய்வுப் பிரிவின் ஆசிரியர் (ஆதாரம்: நன்றி தினமலர் 3.01.2005)- Attachment-2
13. “மனிதர்களுடைய
மூளை அளவு, மாபெரும் ஏப்ஸ் குரங்குகளின் (great apes) மூளையின் அளவை காட்டிலும்
அதிகரித்திருப்பதற்குக் காரணம் அவர்கள் (மனிதர்கள்) சமைத்த உணவை சாப்பிட
ஆரம்பித்ததுதான். சமைத்த உணவில் இயற்கை உணவைக் காட்டிலும் அதிக ஆற்றல் இருக்கிறது;
சமைத்த உணவு எளிதில் செரிக்கிறது (digested); இயற்கை உணவில் உள்ள கெடுதல் செய்யும்
கிருமிகளை (pathogens) அழித்து விடுகிறது” என்று பிரேசின் ஆராய்ச்சியாளர்கள்
போன்செகா-அழிவேடோ, ஹெர்குலனோ-ஹவுசல் மற்றும் அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர் டாக்டர்
ரிச்சார்டு ராங்கன் கண்டுபிடித்துள்ளனர். நன்றி: ‘THE HINDU’ தேதி: 1.11.2012 Attachment-3
14 ஆகவே
நோய்களிலிருந்து, பூரணமாகக் குணம்பெற வேண்டுமென்றால், பழங்களை இட்லிப் பானையில் இட்லியை வேகவைப்பதுபோல ஆவியில்
2 அல்லது மூன்று நிமிடங்கள் வேகவைத்து, ஆறிய (37.0 °C ) பிறகு சாப்பிட வேண்டும். இது அரோமணியின் 2-வது விதியாகும்.
இதைக் கடைப்பிடிப்பதின் மூலம், ஒவ்வாமை (allergy) அகற்றப்பட்டு, நோய்கள் நீங்கி, உடல் வலிமையடைகிறது.
Please visit websites: www.medicineliving.com; www.medicineliving.blogspot.com; Email:twinmedicine@gmail.com
R.A.Bharaman
(Aromani), 9442035291. Attachments-3
0 Post a Comment: