Tuesday, September 23, 2014

உடலின் உணவின் வெப்பநிலை வேறுபாடு அரோமணி விதி 3



-A 227-MLMஅரோமணியின் 3-வது விதி 

பல் வலி, பல்,ஈரல்,நாக்கு,தொண்டை,இரப்பை-நோய்களிலிருந்து நலம் பெற மருந்தில்லா மருந்து

அரோமணி 3 - வது விதி  (Aromani 3rd Principle)





1..எனக்கு சாதா தலைவலி, ஒற்றைத்தலைவலி ஆகிய இரண்டும் மாறி மாறி வந்து என்னை வேதனைக்குள்ளாக்கும். அப்பொழுதெல்லாம் தலைவலி மாத்திரைகளை எடுத்துக் கொள்வேன். 28 வயதிற்குள் மூன்று பற்களை எடுத்து விட்டேன். பல்கூச்சம், பல்லீரல் வலி, நாக்கில் புண், சாப்பிடும்போது உதட்டை கடித்துக் கொள்ளுதல் முதலியன இருந்து கொண்டே இருந்தது. அந்த காலகட்டத்தில், மிகவும் சூடாக டீ, காபி குடிப்பதையும், உணவு உண்பதையும் எனது சாதனையாக மற்றவர்களிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வேன்.



2. தொடர்ந்து செய்து வந்த மனப்பயிற்சியால் (Transcendental Meditation)  மனவளம் பெருகியது. பெருகிய மனவளத்திலிருந்து, பேரறிவாளன் வெப்ப வேறுபாட்டு (difference in temperature) விதியை மெல்ல மெல்ல புரியவைத்து 3.11.1997 அன்று தெளிவுபடுத்தினான். அப்படி வெளிவந்ததுதான்  அரோமணியின் மூன்றாவது விதியாகும். இதனைக் கடைபிடித்த பிறகு, தலைவலியிலிருந்தும் மற்றும் உணவு மண்டல நோய்களிலிருந்தும்  முற்றிலும் விடுபட்டேன். பயணத்திலிருக்கும்போது சூடாக பால் குடிக்க வேண்டியதிருக்கும். அப்பொழுது இலேசாக தலைவலி ஆரம்பிக்கும். உடனே அதற்குறிய மருத்துவ மனப்பயிற்சியை (medicinal meditation) செய்து முற்றவிடாமல் குணப்படுத்தி விடுவேன்.



4. நாம் உண்ணும் உணவின் வெப்பநிலை (temperature) நமது உடலின் வெப்பநிலையான (temperature) 37.0 °C க்கு சமமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் என்ன நடக்கும்? தொடர்ந்து படியுங்கள்.

5. சூரிய வெப்பத்தால், பாறைகள் பகலில் விரிவடைகின்றன. இரவில், குளிர்ச்சியால் சுருங்குகின்றன. இவ்வாறு தினசரி சுருங்கி விரிவதால் பாறைகளில் விரிசல் ஏற்படுகிறது. காலப்போக்கில் உடைந்து கற்களாகிறது. இறுதியில் மண்ணாகிறது.

6. இதேபோல சூடு மற்றும் குளிர்ச்சி உள்ள உணவுகளை மாறி மாறி உண்ணுகிறோம். இதனால், உதடுகள், வாய், பல்லீரல், நாக்கு, தொண்டை, உணவுக்குழல், இரப்பை ஆகிய உறுப்புகளும் சுருங்கி விரிகின்றன. எனவே இதனால் அவ்வுறுப்புகளும் பெரும் சேதமடைந்து வலுவிழந்து நோய்வாய்ப்படுகின்றன.

7. பாறைகளானது, மெக்னீசியம் (Magnesium), பொட்டாசியம் (Potassium),, கால்சியம் (Calcium), பாஸ்பரஸ் (Phosphorus) இரும்பு (Iron), சோடியம் (Sodium), குளோரைடு (Chloride), சல்பர் (Sulfur), மாங்கனீஸ் (Manganese), தாமிரம் (Copper), ஐயோடின் (Iodine) துத்தநாகம் (Zinc), புளோரைடு (Fluoride), மற்றும் செலினியம் (Selenium) போன்ற பலவித தாதுக்களால் (minerals) ஆனவை. இந்த தாதுக்களும், பகலில் சூரிய வெப்பத்தாலும், இரவில் குளிர்ச்சியாலும் அவைகளின் பண்புகளுக்குத் தகுந்தாற்போல வெவ்வேறு அளவுகளில் விரிந்து சுருங்குகின்றன. இதனால் பாறைகள் மேலும் வலுவிழக்கிறது.

8. நமது உடலிலும் மேலே குறிப்பிட்ட தாதுக்கள் இருக்கின்றன. இவைகளும் சூடு மற்றும் குளிர்ச்சி உள்ள உணவுகளை மாறி மாறி உண்ணுவதால், இந்த தாதுக்களும் அவைகளின் பண்புகளுக்குத் தகுந்தாற்போல விரிந்து சுருங்குகின்றன. இதனால் உணவு மண்டல உறுப்புகளும் சுருங்கி விரிகின்றன. இந்தச் செயலால் அவ்வுறுப்புகள் மேலும் வலுவிழந்து நோய்வாய்ப்படுகின்றன.

9. ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம். முதலில் சூடான இட்லி (50 °C) சாப்பிடுகிறோம். நமது உடலின் வெப்பநிலை 37.0 °C (98.6 °F) ஆகும்.   ஆகவே உணவின் வெப்பநிலைக்கும் உடலின் வெப்பநிலைக்கும் வித்தியாசம் 13 °C (50 °C -37.0 °C=13°C ).  இதனால் உதடுகள், வாய், பல்லீரல், நாக்கு, தொண்டை, உணவுக்குழல், இரப்பை ஆகிய உறுப்புகளும் அவ்வுறுப்புக்களில் உள்ள தாதுக்களும் விரிவடைகின்றன.

10.  பிறகு குளிச்சியான ஐஸ் வாட்டர் (23 °C) குடிக்கிறோம். ஆகவே ஐஸ் வாட்டரின் டெம்பரேச்சருக்கும் உடலின் வெப்பநிலைக்கும்  வித்தியாசம் -14°C  டிகிரி c(23 °C-37.0 °C). இதனால் மேற்கூறிய உறுப்புகளும் தாதுக்களும் சுருங்குகின்றன.

11. மீண்டும் சூடாகக் காபி (50 °C) குடிக்கிறோம். இதனால் மேற்கூறிய உறுப்புகளும் தாதுக்களும் விரிவடைகின்றன.

12. பிறகு மிகவும் குளிர்ச்சியான ஐஸ்கிரீம் (-10 °C) சாப்பிடுகிறோம். ஆகவே ஐஸ் கிரீமின்  வெப்பநிலைக்கும் உடலின் வெப்பநிலைக்கும்  வித்தியாசம் -47.0 °C  (-10 °C-37.0 °C).  இப்போது மேற்கூறிய உறுப்புகளும் தாதுக்களும் மிக அதிகமாகச் சுருங்குகின்றன. 

13. இவ்வாறு நாம் வெப்ப வேறுபாடுடைய (difference in temperature: 50 °C, 23 °C , 50 °C , -10 °C) உணவுகளைச் சாப்பிடுவதால் உணவு மண்டல உறுப்புக்களும் அவ்வுறுப்புக்களில் உள்ள தாதுக்களும் சுருங்கி விரிகின்றன. இதனால் உணவு மண்டல உறுப்புகள் வலுவிழந்து நோய்வாய்ப்படுகின்றன.

14. ஒரு நீளமான ரப்பர் துண்டினை அதிக தடவை, இழுத்தும் சுருங்கவும் செய்தால் என்ன ஆகும்?. அந்த ரப்பர் துண்டு நார் நாராகப் பிரிந்து தொய்வு ஏற்பட்டுவிடும். நார்களுக்கு இடையில் இடைவெளி பாளம் பாளமாக இருக்கும். இந்த இடைவெளியில் காற்றில் வரும் தூசி தும்புகள் ஒட்டி அந்த ரப்பர் துண்டைப் பலவீனப்படுத்தி விடும். இதற்கு வெட்கிரைண்டரின் ரப்பர் பெல்ட்டே சிறந்த உதாரணமாகும். கிரைண்டர் மோட்டார் ஓடும்போது விரிவடைகிறது. ஓடாமலிருக்கும்போது சுருங்குகிறது. இதனால் பெல்ட் சேதமாகிவிடுகிறது.  

15. இதே போலத்தான் சுருங்கி விரியும் நமது உணவு மண்டல உறுப்புகளில் தொய்வு ஏற்பட்டு, கீரல் கீரலாக பிளவுகள் ஏற்பட்டுவிடும். அந்த பிளவு இடுக்குகளில் உணவுப் பொருட்கள் தங்கி அழுகிவிடும். இந்த அழுகலால், வாய்த்துற்நாற்றம் ஏற்படும்.

16. இந்த அழுகலில் கிருமிகளும், பாக்டீரியாக்களும் உற்பத்தியாகி வாய், தொண்டை, இறைப்பை ஆகியவற்றில் புண், கட்டி, முதலிய நோய்கள் தோன்றுகின்றன. இதனை டாக்டர்கள் ஆபரேசன் செய்து அகற்றுகிறார்கள். அவை மீண்டும் வளருகின்றன.

17. மேலும் வெப்ப வேறுபாடுடைய (difference in temperature) உணவுகளினால், சுறுங்கி விரிந்து கொண்டே இருப்பதால், தொய்வு ஏற்பட்ட உறுப்புகளின் தசைகளிலிருந்து, கால்சியம், காப்பர் (copper) இரும்பு (iron), துத்தநாகம் (zinc) பொட்டாசியம் (potassium ) முதலிய தாதுபொருட்கள் (minerals) பெயர்ந்து, தேவையற்ற நீரோடு (தாகம் எடுக்காமல் குடிக்கும் நீரோடு) சென்று கழிவுநீராக மாறி, சிறுநீராக வெளியேறிவிடுகின்றன. இதனாலும் உணவு மண்டல உறுப்புகள் பலவீனமடைகின்றன.

18. பல் ஈரல்களில் தொய்வு அதிகமாகும்போது, பற்களைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஈரல்கள் பற்களை விட்டுவிடுகின்றன. இப்படி பற்கள் சுலபத்தில் கழன்று விழுந்து விடுகின்றன.

19.ஈரலுக்கும் பல்லுக்குமிடையே ஏற்படும் இடுக்கில், உணவுப் பொருள் தங்கி, பிறகு அழுகி கிருமிகளும் நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களும் பெருகுகின்ற்ன. இவைகள் ஈரலையும் பற்களையும் சிறிது சிறிதாக அரித்து பற்களை சொத்தையாக்கி விடுகின்றன.

20. சொத்தையான பற்களைப் பிடுங்கி எறிவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிப் பற்களைப் பிடுங்கி எறியும்போது முக அழகு கெட்டுவிடுகிறது. பற்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடுகிறது. இதனால் உணவை மெல்லும்போது நாக்கைக் கடித்துக் கொள்ளும்படியாக வரும்.பல்போனால் சொல் போச்சுஎன்ற பழமொழிப்படி தெளிவாகச் சொற்கள் வராது. பேச்சில் குழறுபடி இருக்கும்.

21. சூடான உணவு சாப்பிடும்போது,  உணவை மெல்லக் கூடிய இடங்களில் உள்ள ரத்த நரம்புகள், உணவில் உள்ள சூட்டினால் விரிவடைகின்றன. இந்த விரிவடைந்த நரம்புகள், அதற்குப் பக்கத்தில் உள்ள விரிவடையாத ரத்த நரம்புகளை நெருக்குகின்றன. இந்த நெருக்குதலால், அந்த ரத்த நரம்புகளில் ரத்த ஓட்டம் குறைந்து தலைவலியை ஏற்படுத்திவிடுகிறது.

22. குளிர்ச்சியான உணவுப் பொருள்களினால், இரத்த நரம்புகளில் சுருக்கம் ஏற்படுவதால், இரத்தத்தின் அளவு குறைந்து, இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, தலைவலி ஏற்படுகிறது; மேலும் செரிதல் தாமதமாக நடைபெறும். இதனால், உணவினால் கிடைக்க வேண்டிய ஆற்றலும் நமது உடலுக்கு தாமதமாகவே கிடைக்கும்.

23. ஆகவே சூடான அல்லது குளிர்ச்சியான உணவாக இருந்தால், அந்த  உணவை ஆறவைத்தோ அல்லது சுட வைத்தோ (37 டிகிரி c ) சாப்பிட வேண்டும்.
அதாவது, உணவை மெல்லும்போதும், விழுங்கும்போதும், சூடாகவோ, குளிர்ச்சியாகவோ உணரக்கூடாது. இது அரோமணியின் 3-வது  விதியாகும். இதைக் கடைப்பிடிப்பதின் மூலம், தலைவலி, பல் சம்பந்தமான நோய்களையும், வாய், உதடுகள், நாக்கு, தொண்டை, இரைப்பை புண்களையும், கட்டிகளையும்  குணப்படுத்திவிடலாம்.


Please visit websites: www.medicineliving.com; www.medicineliving.blogspot.com;Email:twinmedicine@gmail.com
R.A.Bharaman (Aromani), 9442035291.
























முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: