A 228-MLM-
மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், மூக்கில் சதை வளர்ச்சி, தலைவலி, ஆஸ்த்மா ஆகியவற்றிலிருந்து நலம் பெற மருந்தில்லா மருந்து.அரோமணி
4-வது விதி (Aromani 4th Principle)
நீர்- 5 இயற்கை ஆற்றல்களில் ஒன்று (water- one
of the 5 natural agents)
தாகம் (thirsty) எடுத்த பிறகுதான், தண்ணீர் குடிக்க வேண்டும்.
1 .நான் அரோமணியின் மூன்று விதிகளையும் கண்டுபிடித்து, அதனைத் தவறாது கடைப்பிடித்தும் நோய்கள் முழுவதும் குணமாகவில்லை. மருத்துவர்களும், பத்திரிகைகளும், எலக்ட்ரானிக் ஊடகங்களும் (media) தினசரி 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள் என்று அறிவுரை கூறின. அதனால், நானும் தினசரி 8 டம்ளருக்குக் குறையாமல் நீர் பருகி வந்தேன். ஓராண்டிற்குப் பிறகு, என்னுள் ஆழத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் ஆக்க அறிவாக விளங்கும் இறைவன் விழித்துக் கொண்டான். அவன், டாக்டர் உருவில் நான்காவது கண்டுபிடிப்பை வெளிப்படுத்த வந்தான்.
2.
டாக்டர் எனது நண்பர். எனது கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் கொடுத்தவர். மதுரையில் ஒரு
திருமணத்தில் அவரைச் சந்தித்தபொழுது, அவர் சொன்னார் “சாப்பிட்டு 1 ½ மணி நேரம்
கழித்து தண்ணீர் குடிக்கிறேன்; நன்றாக இருக்கிறது”. நான் சாப்பிட்டவுடன் தண்ணீர்
குடிக்கும் பழக்கம் உள்ளவன். நான் வளர்த்து வந்த பூனைக்குட்டி, கிளிக்குஞ்சு ஆகிய
இரண்டுக்கும் அவைகளுக்கு உணவு கொடுத்தபிறகு குடிக்க தண்ணீர் வைப்பேன். ஆனால்
அவைகள் குடிக்காது. டாக்டர் சொன்னவுடன் இதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. 5
நாட்களுக்குப் பிறகு மின்னலைப் போன்று ‘தாகம் எடுத்த பிறகுதான் தண்ணீர் குடிக்க
வேண்டும்’ என்ற எண்ணத்தை எனக்குள் பளிச்சிட வைத்தான்.
“இறைவனின் கருணையோ கருணை!” என்று
எனக்குள் வியந்து, அன்றையிலிருந்து தாகம் எடுத்துத் தண்ணீர் அருந்தலானேன். முதல்
நாளிலேயே எனது இளப்பு (wheezing) முழுவதும் குறைந்துவிட்டது என்றுதான் சொல்வேன்.
நான்காவது அரோமணி விதி பிறந்தது.
3. அரோமணி விதி-4 (Aromani Principle-4) :- தாகம் எடுக்காமல் குடிக்கும் தண்ணீரின் (water drunk without thirsty) அளவுக்கு தகுந்தாற்போல நேர்விகிதத்தில், உடல் பலவீனப்படும்; பலவீனப்பட்ட உடலில் புதிய நோய்கள் உண்டாகும்; பழைய நோய்கள் தீவிரம் காட்டும்.
4. உடலானது சில உணர்வுகளாலும், ஒலிகளாலும், தனது தேவைகளை நமக்குத் தெரிவிக்கின்றது. அப்போது, அதன் தேவைகளைத் தவறாது பூர்த்தி செய்து விட வேண்டும். பசி, சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், வலி, பாலியல் உணர்வு (sexual feeling) ஆகியவற்றிற்கு உணர்வுகளின் மூலம் தனது தேவைகளை, உடல் வெளிப்படுத்துகிறது. தூக்கம், வயிறு நிரம்புதல் ஆகியவற்றை கொட்டாவி, ஏப்பம் ஆகிய ஒலிகளின் மூலம் உடல் தெரிவிக்கிறது. இதேபோலத்தான் ‘தாகம்’ என்ற உணர்வு, உடலின் தண்ணீர்த் தேவையை உணர்த்துகிறது. அவ்வாறு உணர்த்தும் போது மட்டும், தண்ணீர் அருந்தி, உடலின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்துவிட வேண்டும். தாகத்தினால் அருந்தும் தண்ணீரை, உடலின் உறுப்புகள் உறிஞ்சி உபயோகத்துக்குக் கொண்டு வந்து விடுகிறது.
5. தாகம் எடுக்காமல் குடிக்கும் தண்ணீர், பயன்படுத்தப்படாமல், குளம், குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைப் போல, உடலில் தங்கி கெடுதலைச் (பல்வேறு கெடுதல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது) செய்கிறது. மேலும் தாகமெடுத்துத் தண்ணீர் குடிக்கும்போது, தண்ணீர் சுவையுள்ளதாகவும், இன்பம் தரக்கூடியதாகவும், மகிழ்ச்சி கொடுக்கக்கூடியதாகவும், இருக்கும்.
6. நாம் சாப்பிட்ட பிறகு, தண்ணீர் குடிக்கிறோம். இந்த நீர் செரித்தல்(digestion) வேலையில், ஏதாவது பங்கு வகிக்கிறதா என்றால், எந்த பங்கும் வகிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மேய்கின்ற மாட்டினை நக்குகின்ற மாடு கெடுப்பதைப் போல, செரிமான உறுப்புகள், செரிமானத்தொழிலில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, செரிமானத்தொழிலில் எந்தப் பங்கும் வகிக்காத தண்ணீர், கெடுதலையே செய்கிறது. உதாரணமாக, இரைப்பையில் சுரக்கும் ஹைடிரோ குளோரிக் அமிலத்தில் அதிகப்படியான நீர் சேர்வதால், அமிலம் நீர்த்துவிடுகிறது. நீர்த்த அமிலத்திற்கு, நோய்களை உண்டாக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் திறன் குறைந்துவிடுகிறது. பசி உணர்வுக்கும் பாதகம் ஏற்படுகிறது. செரிமான உறுப்புகளில் (organs of digestion) சுரக்கும் சுரப்பி நீர்களை (enzimes) நீர்த்துவிடுகிறது. நீர்த்துவிடும் சுரப்பி நீர்கள் வீரியம் இழந்து, செரிமானத்தைப் பாதித்து, நோய்களைத் தருகிறது.
7. தண்ணீர்த் தேவைக்கு, உடலானது, வேண்டிய அளவு தண்ணீரை அதுவே உற்பத்தி செய்து கொள்கிறது. உதாரணமாக அமில உணவுப் பொருட்களும், கார உணவுப் பொருட்களும் சமநிலைப் படுத்தப்படும்பொழுது (neutralization) உப்பும், நீரும் கிடைக்கிறது.
8. இதேபோல, நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையை, சுக்ரோஸ் என்று சொல்லுகிறோம்; இது, நமக்கு ஆற்றலை கொடுக்கிறது. ஆக்ஸிசனில் எரிந்து, கார்பன்டை-ஆக்ஸைடும், நீரும் கிடைக்கிறது. உடல் தனக்குத் தேவையான உப்பையும் நீரையும் எடுத்துக் கொண்டு, மீதத்தை வியர்வையாகவும், சிறுநீரா கவும் மற்ற கழிவுப் பொருட்களின் மூலமாகவும் வெளியேற்றுகிறது.
9. நீருக்கென்று பல குணங்கள் உண்டு. அவைகள் தான் உடலுக்குக் கேடு விளைவித்து நோய்கள் வரக்காரணமாக இருக்கின்றன. கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு நீரில் (தாகம் எடுக்காமல் குடிக்கும் நீர்) கரைகிறது. இந்த நீர் நாசியில் சேருவதால்தான் தும்மல்கள் ஏற்படுகின்றன. தாகம் எடுக்காமல் குடிக்கும் நீர் காரங்களைக் கரைத்து எரிகாரங்களாக மாற்றுகின்றன. இந்த எரிகாரங்களினால் குடல், தோல் முதலியன் அரிப்புக்குள்ளாகின்றன.
10. இரண்டு தொடைகளின் இடுக்குகளிலும், மல ஆசன வாயைச் சுற்றிலும் சில சமயங்களில் அரிப்பு ஏற்படுவதை அநுபவத்தில் அறிந்திருப்பீர்கள். அந்த இடங்களில் அரிப்பு ஏற்பட்டவுடன் சொறிவீர்கள்; உடனே அந்த இடங்களில் புண்ணாகி காந்தல் ஏற்படும். இதற்குக் காரணம் என்ன?குளித்தவுடன் அந்த இடங்களிலுள்ளத் தண்ணீரைத் துண்டால் துடைத்து எடுக்காததுதான் காரணம். துடைக்காததால்,அந்தத் தண்ணீர் அந்த இடங்களில் தங்கி, அரிப்பை ஏற்படுத்துகிறது.
11. நீர் ஒரு சிறந்த கரைக்கும் பொருள். உடலில் உள்ள சிலவகைத் தாதுக்கள் (minerals) நீரில் கரையக் கூடிய தன்மை வாய்ந்தவை. தாகம் எடுக்காமல் குடிக்கும் நீரானது (தாஎகுநீ), இவ்வகைத் தாதுக்களைக் கரைத்துப் பிறகு அரித்துத் தன்னுடன் கடத்திச் செல்கிறது. தாஎகுநீரில் கரையும் வைட்டமின்களும் (vitamins) மேற்படி நீரோடு கலந்து விடுகிறது.
12. தாதுக்களில் சில தாஎகுநீரின் சேர்க்கையால் வேதியல் (chemical) மாற்றத்திற்கு உள்ளாகின்றன. வேதியல் மாற்றத்திற்கு உள்ளான இரும்பு, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் (minerals) சிதைந்து உறுப்புகளின்(organs) பாகங்களிலிருந்து பெயர்ந்து வந்துவிடுகின்றன. வெப்ப வேறுபாடுடைய (difference in temperature) உணவுகளினால், தொய்வு ஏற்பட்ட உறுப்புகளின் தசைகளிலுருந்து (tissues) தாதுக்கள் சுலபமாக பெயர்ந்து தாஎகுநீரோடு கலந்து விடுவதை ஏற்கனவே அரோமணி 3வது விதியில் கூறியுள்ளேன். இவ்வாறு நீரில் கரையும் தாதுக்களும், அரித்து வரும் தாதுக்களும், பெயர்ந்து வரும் தாதுக்களும், கரைக்கப்பட்ட வைட்டமின்களும், மற்ற அசுத்தங்களும் கலந்த கரைசலை தாகம் எடுக்காமல் குடிக்கும் தேவையற்ற தண்ணீர் (water drunk without thirsty) கடத்திச் செல்கிறது. இந்த தண்ணீர் இரத்தத்தில் கலந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று, அங்கெல்லாம் தங்கிவிட்டு, பிறகு சிறுநீரகத்திற்குச் செல்கிறது. அங்கே சிறுநீர் கழிக்கும்வரை அடக்கி வைக்கிறோம். அவ்வாறு தங்குகின்ற நேரத்தில், தங்குகின்ற இடங்களில், தண்ணீரில் கரைந்துள்ள தாதுக்களும் வைட்ட மின்களும் அசுத்தப் பொருட்களும் டெபாசிட் (deposit) ஆகிறது. இந்த டெபாசிட் மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில் நடைபெறும்பொழுது, அந்த டெபாசிட் கல்லாக (stones of stomach, kidney etc ) மாறிவிடுகிறது. உதாரணமாக கால்ஷியம் ஆக்ஸலேட்டும், கால்ஷியம் பாஸ்பேட்டும் சிறுநீரகக் கற்களாகும். இதில் கால்சியம், பாஸ்பேட் ஆகியவை தாதுக்களாகும்( நன்றி- தினமணி மருத்துவமலர் 2003 ).
13. டெபாசிட் ஆனதுபோக மீதமான தாதுக்களும் வைட்டமின்களும் சிறுநீரோடு வெளியேறுகின்றன. இந்த தாதுக்களும், வைட்டமின்களும் தான் ‘யூரினல் தெரபி’ (Urinal Therapy ) என்னும் சிறுநீரை அருந்தும் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர்களான சரன்சிங்கும், மொரார்ஜி தேசாயும் ‘யூரினல் தெரபி’ சிகிச்சையை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் அசுத்தங்களின் கரைசல் வெவ்வேறு பாகங்களில் டெபாசிட் ஆகி அந்த டெபாசிட்டின் பண்புகளுக்குத் தகுந்தாற்போல், அவைகள் கேன்சர் (cancer), கட்டி (tumor), கல் (stone) என்று வகைப்படுத்தப்படுகின்றன. உடலிலுள்ள மினரல்களும், வைட்டமின்களும் தாகம் எடுக்காமல் குடிக்கும் நீரோடு வெளியேறி ஒரு பகுதி டெபாசிட் ஆகிறது. மீதமுள்ள பகுதி சிறுநீரில் வெளியேறிவிடுகிறது. இதனால் தோன்றும் சில நோய்களை ஆதாரத்துடன் கீழே கொடுத்துள்ளேன்.
(அ) பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் முதலிய தாதுக்கலும், ‘D’ வைட்டமினும் வெளியேறுவதால் எலும்புகளின் வளர்ச்சி குன்றி பலம் இழந்துவிடுகின்றன (ஆதாரம்: டாக்டர் டான் பிராட்லி, அமெரிக்கா). நன்றி- THE HINDU தேதி: 17.07.2005 மற்றும் எனது 27 ஆண்டுகால ஆராய்ச்சி அநுபவம்.
(ஆ) சிங் (zinc) காப்பர் (copper) முதலிய தாதுக்களும், A, C, E முதலிய வைட்டமின்களும் வெளியேறிவிடுவதால், பார்வைக் குறைவு அதிகரிக்கிறது (ஆதாரம்: டாக்டர் சூசன் J லேண்டர்ஸ், டாக்டர் ஸ்டீபன் J ரியான், அமெரிக்கா). நன்றி- THE HINDU தேதி:28.08.2006 மற்றும் எனது 27 ஆண்டுகால ஆராய்ச்சி அநுபவம்.
(இ) வைட்டமின் C வெளியேறிவிடுவதால் அடிக்கடி ஜலதோசம் (Cold/Flue) புளூ காய்ச்சல் முதலிய நோய்கள் வருகின்றன (ஆதாரம்: டாக்டர் ஜான் பிரிப்பா அமெரிக்கா). நன்றி- THE HINDU தேதி:7.08.2005 மற்றும் எனது 27 ஆண்டுகால ஆராய்ச்சி அநுபவம்.
(ஈ) மினரல் இரும்பு (Iron) வைட்டமின் B12, C வெளியேறி (Anameia) நோய் தோன்றுகிறது. (ஆதாரம்: டாக்டர் சர்தா ஜெயின் ). நன்றி-THE HINDU தேதி:04.09.2005.
14. தற்பொழுது, தவறான அறிவுரையின் பேரில்,தாகம் எடுக்காமல் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கிறார்கள். எனது ஆராய்ச்சின்படி, சராசரி 795 (0.795 லிட்டர்) மில்லி லிட்டர் தண்ணீர்தான் உடலுக்குத் தேவைப்படுகிறது. ஆகவே தாகம் எடுக்காமல் குடிக்கும் மீதம் 1.2 லிட்டர் முதல் 2.2 லிட்டர் வரை உடலுக்குத் தேவையற்ற தண்ணீராகும். இந்தத் தண்ணீரும் உப்பைப் போல உடலுக்கு அந்நியப் பொருளாகும். இந்த அந்நியப் பொருளை உடல் வெளியேற்றியாக வேண்டும்.
15, இந்த தாகம் எடுக்காமல் குடிக்கும் நீர் மலம், சிறுநீர், வியர்வை, கார்பண்டை-ஆக்சைடு ஆகிய கழிவுப் பொருட்களுடன் கழிவுப்பொருளாக வெளியேறுகின்றது. இந்தக் கூடுதலான கழிவுப் பொருளை வெளியேற்ற கழிவு நீக்கப் பணியைச் செய்கின்ற நுரையீரல் (lung), இருதயம் (heart), இரத்தம் (blood), கல்லீரல் (liver), சிறுநீரகம் (kidney), தோல்(skin) ஆகிய உறுப்புக்கள் அதிகமான வேலை செய்கின்றன. ஆகவேதான் சிறுநீரகங்கள் பழுதடைகின்றன. இருதயக் கோளாறுகள், ஹார்ட் அட்டாக், இரத்த அழுத்தம், இரத்தப் புற்றுநோய், மஞ்சக்காமாலை, கல்லீரல் பழுதடைதல், காசநோய், ஆஸ்த்மா, சளித்தொந்தரவு, மூக்கடைப்பு, மூக்கில் சதை வளருதல் (nasal polip) மூக்கிலிருந்து நீராக ஒழுகுதல் ஆகிய நோய்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
16. . வேறு ஒரு கோணத்திலும் தாகம் எடுத்துத்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை கீழே கொடுத்துள்ளவாறு விளக்குகிறேன்.
17. பூமியைப் போலவே, உடலும் ஐந்து இயற்கைச் சக்திகளால் (Natural Agents) இயக்கப்படுகின்றன. அவைகள், நீர் (Water), நெருப்பு (Fire), காற்று (Air), காலியிடம் (Space), உடல் (பூமி). அவற்றில் முதல் 4 ம் சமநிலையில் இருக்கும்வரை பூமியில் பேரழிவு எதுவும் உண்டாவதில்லை. பெருத்த மழை பெய்வதினால், நீரின் சமநிலை மாறி, பெருத்த வெள்ளம் ஏற்பட்டு சேதமேற்படுகிறது. காற்றின் அளவு மாறி காற்றழுத்த மாறுபாட்டினால், புயலும், காற்றும், மழையும் ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்துகின்றன. தற்பொழுது சுற்றுப்புறச் சூழ்நிலை மாற்றத்தால் உலகிற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பேராபத்தைப் பற்றித்தான் உலகெங்கும் பேசப்படுகிறது.
18. இதேபோல, உடலில், முதல் 4 ம் (Fire, Air, water and Space) சமநிலையில் இருக்கும்வரை உடல் நலத்திற்குக் குறைவே இல்லை. அதாவது ஒவ்வொரு உடலும் வடிவமைக்கப்பட்ட (designed) நிலைக்குத் தகுந்தவாறு, மேற்கூறிய 4 உம் அளவுக்குக் குறையாமல் கூடாமல் இருக்க வேண்டும். அந்த அளவு மாறும்போது உடல் நலக் குறைவு ஏற்படும்.
19. உடல் முழுவதும் ஒரே அளவு (uniform heat) வெப்பம் இருக்க வேண்டும். ஆனால் வெப்பநிலை வேறுபாடுடைய உணவுகளை (சூடான உணவு, காபி, குளிர்ச்சியான இயற்கை உணவு,ஐஸ் வாட்டர் (ice water), ஐஸ்கிரீம் முதலியன) சாப்பிடுவதின் மூலம், உடலில் வெப்ப வேறுபாட்டினை ஏற்படுத்தி விடுகிறோம். இதனால் நோய்கள் உண்டாகின்றன.
20. தாகம் எடுக்காமல் தண்ணீர் குடித்து, அளவுக்கு அதிகமாக உடலில் நீரைச் சேர்த்து வருகிறோம். இதனால் நோய்கள் உண்டாகின்றன.
21. கொசுவைக் கட்டுப்படுத்த, கொசுக் கம்பி வலைப் பின்னலை (mosquito metal net) ஜன்னல்களில் அடைத்தும், கொசுவலைக்குள் (mosquito net) தூங்கியும், வீடுகளில் சரியாக வெண்டிலேசன் செய்யாமலும் போதுமான காற்றோட்டம் இல்லாமலும் செய்துவிட்டோம். இதனால், உடலில் உள்ள காற்றின் அளவும் மாறி நோய்கள் உண்டாகின்றன.
21A. உடலிலுள்ள துவாரங்களை, புகை பிடித்தல், புகையிலை, மூக்குப் பொடி மற்றும் தலைக் கவசம், இசை கேட்பதற்கும் அடைத்துவிடுகிறோம். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு காலியிடத்தை அடைத்து விடுகிறோம். இதனாலும் நோய்கள் உண்டாகின்றன.
22. மேற்கூறியவாறு உடலில் உள்ள இயற்கைச் சக்திகளின் அளவுகளை மாற்றியதால், உடலில் பல்வேறு நோய்கள் பற்றுகின்றன.
23. மனித உடலையும் ஒரு ஆட்டோமொபைல் எஞ்சின் ரேடியேட்டரையும் ஒப்பிடுதல்.
24. ஒரு காரில் ஏராளமான அசையக்கூடிய பாகங்கள் (moving parts) இருக்கின்றன. எங்கெல்லாம் அசைவு இருக்கிறதோ அங்கெல்லாம் உராய்வு (friction) உண்டு. உராய்வு வெப்பத்தைத் (heat) தோற்றுவிக்கிறது. இங்கேதான் எஞ்சினில் ரேடியேட்டரின் (radiator) பங்கு வருகிறது. அதிக வெப்பமடைதல் (overheating), மற்றும் அசையும் பாகங்களை அசையவிடாமல் பிடித்துக் கொள்ளுதல் (seizure.) போன்ற கடுமையான பிரச்சனைகள் வராமலிருக்க, எஞ்சினின் பாகங்களை, எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அதிகளவு உராய்வினால் (excessive friction), பிஸ்டன்கள் சிலிண்டர்களுக்குள் சுலபமாக சருக்கிச் (slide) செல்லாமல்,
இறுதியில் அவைகள் சேதமாகி, மொத்த இயந்திரப் பாகங்களும் பழுதாகிவிடுகின்றன. இது நிகழாமலிருக்க, தண்ணீரையும், உறைதலெதிரி (anti-freeze) யையும், அதற்குரிய பம்பின் மூலம் அனுப்பப்படுகிறது. அந்தத் தண்ணீர், அதிகப்படியான வெப்பத்தை, முக்கியமான பாகங்களிலிருந்து, ஈர்த்துக்கொண்டு ரேடியேட்டருக்கு வருகிறது. ரேடியேட்டர் நீரிலுள்ள வெப்பத்தை வெளியில் காற்றில் விட்டுவிடுகிறது.
25. ஒரு கார் எஞ்சினைப் போலவே, நமது உடலிலும் ஏராளமான அசையக்கூடிய பாகங்கள் (moving parts) இருக்கின்றன. அந்தப் பாகங்களில் அசைவு ஏற்படும்பொழுது, உராய்வு (friction) உண்டாகிறது. உராய்வு வெப்பத்தைத் (heat) தோற்றுவிக்கிறது. அதிக வெப்பமடைதல் (overheating), மற்றும் அசையும் பாகங்களை அசையவிடாமல் பிடித்துக் கொள்ளுதல் (seizure.) போன்ற கடுமையான பிரச்சனைகள் உடலுக்கும் வரலாம். அதிக உராய்தலினால், உடலின்; அசையக்கூடிய பல்வேறு மூட்டுக்களில் பிடிப்பு ஏற்பட்டு அவற்றை அசைக்க முடியாத நிலை ஏற்படலாம். காலப்போக்கில், அவை சேதமடைந்து பழுதடையலாம். இது நிகழாமலிருக்க, உடலின் உறுப்புக்களை, எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இந்த அதிகப்படியான வெப்பத்தை ஈர்ப்பதற்குதான் நாம் நீர் அருந்துகிறோம். இந்த வெப்பத்தை ஈர்த்தத் தண்ணீர், கழிவுப் பொருளை அகற்றும் உறுப்புகளுக்கு (excretion organs) எடுத்துச் சென்று,உடலை விட்டு வெளியேற்றுகிறது. உதாரணமாக, கடுமையான உடலுழைப்பு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டம் முதலிய செயல்களின் போது, உடலின் தோலின் மேல்ப் பகுதியில் வியர்வை தோன்றுகிறது. வியர்வை உடலின் வெப்பத்தை எடுத்துக்கொண்டு, ஆவியாகிறது. வெப்பயிழப்பால், உடல் குளிர்ச்சியடைகிறது. ஆகையினால், தண்ணீர் இங்கே உடலை குளிரவைக்கும் திரவமாகப் பயன்படுகிறது.
26. ரேடியேட்டர் இயங்குவதினால், நிரப்பப்பட்ட தண்ணீரின் அளவு குறைந்துகொண்டே வரும். அப்போதெல்லாம், குறையும் அளவை. நீர் ஊற்றி முழு அளவுக்கு ஈடுகட்டி (top up) நிரப்புகிறோம்.
27. இதேபோல, குழந்தை, தாயின் வயிற்றில் வளர்ந்து, பிறக்கும்போதே, உடலில் முழு அளவில் தண்ணீர் நிரப்பப் பட்டு வெளியே அனுப்பப்படுகிறது. உடலின் செயல்பாடுகளினால், தண்ணீர் குறையும்போது, தாகம் எடுக்கிறது. ரேடியேட்டரை ஈடுகட்டும் தண்ணீரை (‘top up water’) ஐக் கொண்டு நிரப்புவதைப் போல, தாகம் எடுத்தவுடன், தண்ணீர் குடித்து, உடலில் ஏற்படும் நீர்க் குறைவை சரி செய்கிறோம்.
28. ரேடியேட்டரில் அசுத்தம் சேரும்பொழுது, அதனை தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்தப்படுத்தப் படுகிறது. இதனால், ரேடியேட்டருடைய திறன் அதிகரித்து, எஞ்சின் அதிக வெப்பமாகாமல் தடுத்துவிடும்.
29. இதேபோல, நமது உடலிலும் மாசுக்கள் (impurities) சேர்ந்துவிடும். அதைச் சுத்தப்படுத்தினால்தான், தண்ணீரின் வெப்ப ஈர்ப்புத் திறன் அதிகரித்து, உடல் அதிக வெப்பமாகாமல் தடுத்துவிடும். மேற்குறிப்பிட்டபடி, நாம் தாகத்திற்காக குடிக்கும் நீர், உடலை குளிர்ச்சியாக்கவும், கழுவி சுத்தப்படுத்தவும் பயன்படுகிறது.
30. கார், வேன், பஸ், லாரி, டிரக் என வெவ்வேறு எஞ்சின் திறன்களில் ஆட்டோமொ பைல்ஸ் வாகனங்கள், பயன்பாடுகளில் உள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட ஆட்டோமொபைல்ஸ் எஞ்சின்களின் திறன்களுக்கு தகுந்தாற்போல, ரேடியேட் டர்களின் அளவும், நீர்க் கொள்ளளவும் வேறுபடும். ஆகையால், அந்த ரேடியேட்டர்களின் தண்ணீர்த் தேவையும், ஈடுகட்டும் (top up) தண்ணீரின் அளவும் வேறுபடும்.
31. அந்த ரேடியேட்டர்களின் ஈடுகட்டும் (top up) தண்ணீரின் தேவை கோடை காலத்தைக்காட்டிலும், குளிர்காலத்தில் குறைவாக இருக்கும்; கோடை காலத்தில் அதிகமாக இருக்கும்.
32. இதேபோல, மக்களின் வெவ்வேறு வயது, உயரம், பருமன், செய்யும் வேலையின் தன்மை (கடுமையான உடலுழைப்பு, உடலுழைப்பற்ற ஒயிட் காலர் ஜாப் முதலியன) ஆகியவற்றிற்குத் தகுந்தாற்போல, தாகம் எடுக்கும் தண்ணீரின்(Top up water) அளவும் வேறுபடும். இந்த அளவும் குளிர்காலத்தில் குறைவாகவும், கோடைகாலத்தில் அதிகமாகவும் தேவைப்படும். என்னுடைய ஆராய்ச்சியில், குளிர்காலத்தில் சராசரி 580 மி.லி (0.58 லி)- தண்ணீரும், கோடை காலத்தில் 990 (0.99 லி) மி.லி- தண்ணீரும் தேவைப்பட்டது. ஆகவே எல்லாக் காலங்களிலும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது அற்வியலின்படி (as per scientific reason) பொருந்தாது.
33. மிருகங்களைக் காட்டிலும் மனிதனுக்குத்தான், அதிகத் தாகம் எடுக்கிறது. இது எதனால்? நீரும், உப்பும் உணவுப் பொருட்களாகாது. நாம் உண்ணும் உணவு பொருட்களிலேயே உப்பு அடங்கியுள்ளதை மேலே கூறியுள்ளேன் (நன்றி- மீனாட்சி மருத்துவமலர் மே, 2004). பித்த நீரில் சோடியம் குளோரைடு, சோடியம் பாஸ்பேட்டு போன்ற உப்புகளும், பித்த உப்பும் உள்ளன (நன்றி-தினமணி மருத்துவமலர் 2003). ஆகையால் உப்பை உணவோடு சேர்த்துச் சாப்பிடவேண்டிய அவசிய மில்லை. ஆனால் சுவைக்காகச் சேர்க்கிறோம்.
34. உடலுக்குத் தேவையற்ற எதையும், அது தனக்குள் வைத்துக் கொள்வதில்லை. கடலுக்குள் விழுந்த ஒருவரை, கடல் தன்னுள் வைக்காமல், கடல் ஓரத்தில் பிணமாக ஒதுக்குவ தில்லையா, அதைப் போலத்தான். உடலுக்கு உப்பு ஒரு வேண்டாத பொருள்; அந்நியப் பொருள் (foreign material). ஆகவே அந்நியப் பொருளான உப்பை வெளியேற்ற, உடலுக்கு நிறையத் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆகவே தான் மிருகங்களைக் காட்டிலும் மனிதர்களுக்குத் தாகம் அதிகமாக எடுக்கிறது. இதை வைத்துத்தான் ‘உப்பைத் தின்றவன், தண்ணீர் குடித்துத் தான் ஆகவேண்டும்’ என்ற அறிவியல்(science) பழமொழி பழக்கத்தில் வந்திருக்கிறது. உப்பைக் குறைவாகச் சேர்த்தாலும், அதிகமாகச் சேர்த்தாலும், சேர்த்த உப்பு முழுவதையும் உடலானது சிறுநீர், வியர்வை மூலமாக வெளியேற்றி விடும். இதற்கு கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்புக் களான நுரையீரல், கல்லீரல், இருதயம், இரத்தம், தோல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் அதிகப்படியாக வேலை செய்கின்றன. இதனால் அவ்வுறுப்புகள் சேதமடைந்து இருதயக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் பழுதடைதல், இரத்த புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு இலக்காக வேண்டியதிருக்கிறது. ஆகவே ஒரு நாளில் 3 கிராம் உப்பு மட்டுமே சேர்த்துக் கொளவது உடல் நலத்துக்குப் பாதுகாப்பானதாகும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு 1.5 கிராம் உப்பு ஒரு நாளில் போதும் (நன்றி- மீனாட்சி மருத்துவமலர் மே, 2004 )
35. {அமெரிக்காவில் விளையாட்டு வீரர்களுக்கான
அமைப்பு, ஜாக்ஸ், சைக்கிள் அல்லது பவர் வாக்ஸ் (jogs, cycles or power walks) ஆகிய பயிற்சிகளை தவறாது செய்பவர்கள், அதிக அளவு
தண்ணீர் குடிக்கக்கூடாது என்று சுற்றறிக்கை விட்டுள்ளது.
36. பிரிட்டன் நிபுணர்கள் மற்றும் டாக்டர்.டான் டன்ஸ்டால்-பீடோர், பார்தோலோமியு மருத்துவமனை, லண்டன், “ ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தண்ணீர் குடிப்பது, தண்ணீர் போதை (water intoxication) போன்ற கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும், இது இரத்தத்தில் உள்ள சோடியம் உப்பு மற்றும் உடலின் மற்ற உப்புக்களையும் அல்லது எலக்ட்ரோலைட்ஸ் ஐ நீர்த்துபோகச் செய்கிறது. இதனால் தலைச்சுற்று (dizziness) மற்றும் சுவாச பிரச்சனைகள் வந்து சேருகின்றன”, என்று சொல்லுகிறார்கள்.
37. மேலும் சமீபத்திய கண்டுபிடிப்புகள் “நாம் ஒரு காலத்தில் நினைத்ததைப் போல நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியதில்லை”, என்று தெரிவிக்கின்றன.} நன்றி ‘THE HINDU’ தேதி:27.7.2003 (Attachment-1)
உணவுப் பழக்கங்களை சொல்லிவரும்பொழுது, “நீங்கள் தாகமாக இருந்தால் தண்ணீர் குடியுங்கள்,” என்று சூடி செப்பர்டு மிஸ்ஸட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் சிண்டிகேட் கூறுகிறார். நன்றி: ‘THE HINDU’ தேதி: 30.5.2004(Attachment-2)
38. “ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர், அல்லது எட்டு டமளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர். டாக்டர்களும் அப்படித்தான் சொல்லி வருகின்றனர். ஆனால், அதிலும் உண்மை இல்லை. ஒருவர் உடலுக்கு வேண்டிய தண்ணீர் சத்தை அது தானாகவே எடுத்துக் கொள்ளும். அதற்காக, ஒரு நாளைக்கு இத்தனை டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில்லை. நாம் குடிக்கும் காபி, டீ, பால் முதல் பல உணவு வகைகளிலிருந்து நம் உடலுக்கு தண்ணீர் சத்து கிடைக்கிறது. உடலில் தண்ணீர் குறைந்து போனால், நமக்கு தாகம் ஏற்படும். அப்போது தானாகவே தண்ணீர் குடிப்போம். அதனால் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.”. என்று அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள இண்டியானா போன்ஸ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்களான மருத்துவ பேராசிரியர்கள் டாக்டர்கள் ராக்செல் பிரீமென் மற்றும் அரோன் கரெல் கூறுகிறார்கள். நன்றி: தினமலர், தேதி: 6-1-2008(Attachment-3).
39. அமெரிக்காவின் பெனிசில்வேனியா பல்கலைக் கழகத்தின் சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள் (kidney experts) டாக்டர் ஸ்டான்லி கோல்டுபார்ப் மற்றும் டாக்டர் டான் நெகோய்அனு “சராசரி உடல் நலமுள்ள ஒருவர் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் பூர்வ நிரூபணமில்லை; மோசமான தீங்கைத்தான் விளைவிக்கும்.” என்று ஜர்னல் ஆப் தி அமெரிக்கன் சொஸைட்டி ஆப் நெப்ராலாஜியில் சொல்லியிருக்கிறார்கள். நன்றி ‘THE HINDU’:தேதி: 5.4.2008(Attachment-4).
40. "உண்மையில், அதிக அளவு குடிக்கும் தண்ணீர், ,சிறுநீரை வடிகட்டும், சிறுநீரக திறனை, வியப்பூட்டும் வகையில் குறைக்கிறது,” என்று டாக்டர் ஸ்டான்லி கோல்டுபார்ப் இணையதளத்தில் கூறியுள்ளார். “(www.npr.org)”
41. 20.11.1998 அன்றுதான் நான்காவது அரோமணி தத்துவத்தை கண்டுபிடித்தேன். அன்றையிலிருந்து இன்றுவரை தாகம் எடுத்த பிறகுதான் தண்ணீர் அருந்தி வருகிறேன். உடல் நலம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆகவே, மக்கள் பயம் எதுவுமில்லாமல் தாகம் எடுத்த பிறகு தண்ணீர் குடிக்கலாம்; உங்களிடமுள்ள பல நோய்களிலிருந்து வியப்பூட்டும் வகையில் குணம் பெறுவீர்கள்.
42. மேலே குறிப்பிட்ட விளக்கங்களின்படி, அரோமணியின் 4 வது விதியின்படி, தாகம் எடுத்தபிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும். சில சமயங்களில் நன்றாகக் காற்றடித்துக் கொண்டிருக்கும் போதே உடல் முழுவதும் வியர்க்கும். அப்பொழுது தண்ணீர் குடிக்க வேண்டும். வியர்வை உடனே அடங்கி விடும். அதேபோல, உடலைச் சுற்றிலும் நெருப்பிலிருந்து வெப்பம் வந்து சுடுவதைப்போல உணர்ந்தால், அப்பொழுதும் தண்ணீர் குடித்தால், அந்த வெப்பம் இல்லாமல் போய் விடும். இதைக் கடைப்பிடிப்பதின் மூலம், இளப்பு (freezing), மூக்கடைப்பு (nasal block), சளித்தொந்திரவு, மூக்கில் நீராக ஒழுகுதல் (watering), இருதய நோய் (heart disease), சிறுநீரகக் கோளாறுகள் (kidney troubles), இரத்த அழுத்தம் (blood pressure), கல்லீரல் நோய் (liver disease), காசநோய் (TB), தோல் சம்பந்தமான நோய்கள் (skin diseases) ஆகியவற்றை குணப்படுத்தி வராமல் தடுத்துவிடலாம்.
Please visit websites: www.medicineliving.com; www.medicineliving.blogspot.com; Email:twinmedicine@gmail.com
R.A.Bharaman (Aromani), 9442035291.
Attachments-4
0 Post a Comment: