Thursday, September 18, 2014

எல்லோருக்கும் தேவையான வார்த்தை-11

அனைவராலும் அறிவுறுத்தப்படும் வார்த்தை  (word); ஆனால் பின்பற்றப்படாத வார்த்தை!


C 250-MM 2-கவனவாழ்க்கை 11-இம

இரட்டை மருத்துவம்-மருத்துவ மனபயிற்சி மருத்துவம் பகுதி 2
   Twin Medicine- Medicine of Medicinal Meditation Part II-Attentive Life 11-TAMIL                    
                                  
                         கவன வாழ்க்கை 11


1.கவனம் என்ற வார்த்தை மக்களின் வாழ்க்கை நீரோட்டத்தில், அவர்கள் அன்றாடம் பேசும் வழக்கில் இரண்டரக் கலந்து பின்னியிருப்பதை இப்பொழுது பார்ப்போம்.



2. குறைந்த மார்க்குகள் பெற்ற மகனைப் பார்த்து “வகுப்பில் டீச்சர் சொல்லிக்கொடுக்கும் போது கவனத்தைச் சிதறவிட்டால் மார்க் எப்படி நிறையவரும்!என்று தந்தை திட்டுகிறார்.



3. பையன் வீட்டிற்குள் நுழையும்போது தடுமாறி விழுந்து பெருவிரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டுவதைப் பார்த்துப் பதறிய அவனது தாய் “என்னப்பா!கவனமாகப் பார்த்து வரக் கூடாது என்று ஓடிவந்து பையனை அணைத்து ஆறுதல் சொல்லி காயத்துக்குக் கட்டுப் போடுகிறார்.



4. மனைவி காய்கறி நறுக்கும்போது தவறி விரல் அறுபட்டு ரத்தம் சொட்டுவதைப் பார்த்தக் கணவன் “என்னம்மா! கவனமாகப் பார்த்து அறுக்கக்கூடாது!என்று சொல்லி காயத்துக்குக் கட்டுப் போடுகிறார்.



5. சைக்கிள் ஓட்டும் போது தவறி விழுந்து விட்ட பையனைப் பார்த்து “கவனமாகப் பார்த்து சைக்கிள் ஓட்டக் கூடாதா! என்று ஆறுதல் கூறி சைக்கிளையும் பையனையும் தூக்கி விடுகிறார், பெரியவர் ஒருவர்.



6. சாலையில் இருவர் பேசிக் கொள்கிறார்கள், “பஸ்டிரைவர் கவனமாகப் பஸ் ஓட்டாததால், ஆக்சிடண்ட் ஆகி 40 பேருக்குக் காயமாப் போச்சு!”.

7. வியாபாரி ஒருவர் தன் நண்பரிடம் கூறுகிறார் என்னுடைய பையனை கல்லாவில் உட்கார வைத்துவிட்டு வந்தேன். அவன் ஒரு கஸ்டமருக்கு மீதிப் பணம் கொடுக்கும் போது ஒரு 100 ரூபாயை கவனக் குறைவினால் அதிகமாகக் கொடுத்து விட்டான்!

8. மார்க் குறைவாகப் பெற்றதற்கும், தடுமாறி கீழே விழுந்ததிற்கும், விரலை அறுத்துக் கொண்டதிற்கும், சைக்கிளோட்டும்போது தவறிவிழுந்ததிற்கும், பஸ் ஆக்சிடண்ட் ஆனதற்கும், வியாபாரத்தில் ஏற்பட்ட பண இழப்பிற்கும்  கவனக் குறைவுதான் காரணமாகச் சொல்லப்படுகிறது.  கவனக் குறைவு வார்த்தையை மக்கள் வார்த்தைக்கு வார்த்தை சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். அதாவது செய்யும் செயல்களில், வேலைகளில் கவனக்குறைவு இல்லாமல் இருந்தால், பையன்கள் நல்ல மார்க்குகள் வாங்குவார்கள்; விபத்துக்கள் ஏற்படாது; பண நட்டம் ஏற்படாது என்பது உறுதியாகிறது. ஆனால் மக்கள்,  கவனம் என்றால் என்ன?  கவனமாக இருப்பது எப்படி என்று அறியாமலிருக்கிறார்கள்.

9.வாழ்க்கை இலக்கணத் தத்துவங்கள் (The Principles of Life Grammer)

 எண்ணங்களை நீடிக்கவிட்டு செய்யப்படும் கற்பனையில் விளையும் தீமைகள் 5 தத்துவங்களில் செயல்படுகின்றன.

வாழ்க்கைத் தத்துவம் (Principle of Life)-1

அலைபாயும் மனதினை  நீடிக்க அனுமதிக்கும் நேரத்திற்குத் தகுந்தாற்போல நேர்விகிதத்தில்  எதிர்பார்த்தல் (expectation) வலிமை பெறும்.

வாழ்க்கைத் தத்துவம் (Principle of Life)-2

அலைபாயும் மனதினை  நீடிக்க அனுமதிக்கும் நேரத்திற்குத் தகுந்தாற் போல நேர்விகிதத்தில்  ஏமாற்றம் (disappointment)வலிமை பெறும்.

வாழ்க்கைத் தத்துவம் (Principle of Life)-3

அலைபாயும் மனதினை  நீடிக்க அனுமதிக்கும் நேரத்திற்குத் தகுந்தாற் போல நேர்விகிதத்தில்,  கோபம், பயம், பதட்டம், வெறுப்பு, பொறாமை, விரக்தி, தாழ்வு மனப்பான்மை, அவநம்பிக்கை, சந்தேகம், கோழைத்தனம், திருட்டுக் குணம் வெறித்தனம், கொலைவெறி ஆகிய  சாத்தானின் குணங்கள் என்று சொல்லப்படும் எதிர்மறைக் குணங்கள் (negative senses)
மேலோங்கி நிற்கும்.

வாழ்க்கைத் தத்துவம் (Principle of Life)-4

அலைபாயும் மனதினை  நீடிக்க அனுமதிக்கும் நேரத்திற்குத் தகுந்தாற் போல நேர்விகிதத்தில், மனவழுத்தங்கள் மனதில் தஞ்சம் புகும். இதனால், உடல் பலவீனப்படும்; பலவீனப்பட்ட உடலில் புதிய நோய்கள் தோன்றும்; ஏற்கனவே உள்ள நோய்கள்  தீவிரத்தன்மை அடையும்.

வாழ்க்கைத் தத்துவம் (Principle of Life)-5

அலைபாயும் மனதினை  நீடிக்க அனுமதிக்கும் நேரத்திற்குத் தகுந்தாற் போல நேர்விகிதத்தில், செய்யும் வேலையில் (work), செயலில்(action), தொழிலில் (profession) ஆர்வம் குறையும், குறைபாடு ஏற்படும்.

10. வாழ்க்கைத் தத்துவங்கள் ஐந்தினையும் சோதித்து அறியமுடியும். ஒரே நோயுடையவர்கள் [ஆஸ்த்மா(asthma) அல்லது சர்க்கரைச் சத்து (diabet) அல்லது இருதய நோய்   (heart disease)] 20 பேர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 10 பேர்களைக் கொண்ட இரண்டு குழுக்கலாகப் பிரிக்கலாம். குழு 1ஐச் சேர்ந்தவர்களை ‘இககணத்தில் வாழும் அல்லது நிகழ்காலத்தில் (living presently) வாழும் முறையை அதாவது கவன வாழ்க்கை முறையைக் கற்றுத் தந்து ஆறு மாதங்களுக்குப் பயிற்சி செய்துவரச் செய்யலாம் (அதாவது அக்கணத்தில்  செய்யும் செயல்களில்/வேளைகளில் முழுக்கவனத்தில் ஈடுபடவேண்டும். கற்பனை காண்பது, திட்டமிடுவது, யோசித்து முடிவெடுப்பது ஆகியவற்றையும் நிறுத்திவிடவேண்டும்). இரண்டாவது குழு நோயாளிகளை வழக்கமாக வாழும் முறையில் அதாவது கற்பனை வாழ்க்கை முறையில்,  ஆறு மாதங்களுக்கு இருக்க வைக்கலாம். ஆறு மாதங்கள் கழித்து முடிவுகளைச் சோதித்து பார்க்கலாம்.

11. முதல் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு நோய் இறங்கு முகமாகவும், மாத்திரைகளின் அளவு குறைந்தும், மகிழ்ச்சியுடையவர்களாகவும் காணப்படுவார்கள். அவர்கள் செய்யும் வேலைகளில் ஒரு நேர்த்தி துல்லியம் (finness, good finishing) காணப்படும். மற்றவர்களோடு பழகும் விதத்தில் மனிதநேயம் வெளிப்படும்.

12. இரண்டாவது குழுவைச் சேர்ந்தவர்களிடம் எந்த மாற்றமும் இருக்காது. நிகழ்காலத்தில் அதாவது செயல்கள் நிகழ்கின்ற காலத்தில் வாழுவதால் மேலும் மூன்று முக்கிய சிறப்பான பலன்கள் கிடைக்கின்றன. இதற்கு முன்பு செய்த வேலையின் அளவை விட 100 மடங்கிற்கு மேல் வேலையின் அளவு அதிகரிக்கும். புதிய கண்டு பிடிப்புகள் (discoveries, invention etc) கண்டுபிடித்து சாதனைகள் படைக்கும் ஆற்றல் கிடைத்து விடுகிறது. உடலுக்கு மட்டும் வயசாகி, மனம் இளமையுடன் இருக்கும். இதனால் நீண்ட காலம் உயிர் வாழுவதுடன், வயதான காலத்திலும் ஏதாவது சாதனை செய்துவிட்டுதான் இவ்வுலகை விட்டு மறைவார்கள்.

13. ரவீந்திரநாத் தாகூரிடம் நிரூபரொருவர் கேட்கிறார், “இறைவனை எங்கே காணமுடியும்?என்று. அதற்குத் தாகூர் “கல்லுடைப்பவனிடம் போங்கள்! அவனிடம் இறைவனைப் பார்க்கலாம்என்று சொல்லுகிறார். அவருக்கு மிக அருகில் உழைப்பாளி மூட்டை தூக்குபவன் இருக்கிறான்; வண்டி இழுப்பவன் இருக்கிறான். இவர்கள் இருவரையும் சொல்லாமல், கல் உடைப்பவனை ஏன் தேர்ந்தெடுத்தார்? மூன்று தொழில்களில் கல் உடைப்பதற்குத்தான் அதிகக் கவனம் தேவை. கவனம் சிதறினால் சுத்தியல் கையைப் நசித்துக் காயமாக்கிவிடும். புத்தரும் விழிப்புணர்வுடன் வாழ்க்கையைப் பாருங்கள் என்கிறார். மகான்கள் ஓஷோவும், ஜே.கே வும், மகரிஷியும் எப்பொழுதும் விழிப்புணர்வுடனிருங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.  எனவே, கவனத்தில்தான், விழிப்புணர்வில்தான் இன்பமிருக்கிறது; வளமிருக்கிறது; உடல், மனநலமிருக்கிறது; ஒட்டுமொத்த வாழ்க்கையே  இருக்கிறது; ஏன்? அதில் இறைவனே இருக்கிறான்!

14. பஸ்ஸில் செல்லும் போது காட்சிகளைக் கவனமாகப் பாருங்கள்! ஒருவரைப் பார்க்கும்போது முழுமையாகப் பாருங்கள்! அங்கங்களைப் பார்த்தால் மனம் அவற்றைப் பற்றி ஆராயப் புறப்பட்டுவிடும். நடக்கும்போது கால்கள் எட்டு வைப்பதில் கவனத்தைச் செலுத்துங்கள், கவனமுடனிருப்பது அல்லது விழிப்புணர்வுடனிருப்பதுதான் இறைவனின் இருப்பை அறியவும், அருளைப் பெறவும், அவனது ஆற்றலைப் பெறவும் உள்ள வழிமுறையாகும் என்று மகான் ஓஷோ வலியுறுத்திக் கூறுகிறார்.

15. உலகின் அனைத்து மதங்களின் இறை கோட்பாடுகளையும், பல மகான்களின் கண்டுபிடிப்புகளையும் உள்ளடக்கி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் மூன்று வார்த்தைகளில் இறைவனை அடையாளம் காண்பித்துவிட்டது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. “செய்யும் தொழிலே (/செயலே) தெய்வம்என்ற பழமொழியை உச்சரிக்கும்போது எனது உடல் புல்லரிக்கிறது. மீண்டும் வியக்கிறேன்! “ என்னே தமிழன்! என்னே அவன் பெருமை! என்னே அவன் புகழ்! இந்தப் பழமொழியை உருவாக்கிய அத்தமிழனுக்கு நாம் தலை வணங்குவோம்!

16. காலையில் எழுந்தவுடன் மலம் வெளியேற்ற கழிவறைக்குச் செல்கிறோம். மனம் அலைபாயும் போதெல்லாம் அதனை நிறுத்தி, மலம் வெளியேறுவதில் கவனத்தைச் செயலுத்தவெண்டும். குளிக்கும்போது தண்ணீரை மோந்து உடலில் விடுவதிலும், சோப்பை உடம்பில் தேய்ப்பதிலும் விழிப்புணர்வுடன் செய்ய வேண்டும். மனம் அலைபாய்தலில்தான் இறைவன் அறிவு செயல்படுகிறது. மனம் அலைபாய்வதைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கக் கூடாது; அது முடியவும் முடியாது. ஆனால் எண்ணங்களை நீடிக்கவிடாமல் தடுக்க முடியும். ஆகவே, அலைபாய்தலில் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய எண்ணங்களாக இருக்கிறது என்பதற்காக நீடிக்க விடவும் கூடாது. நாம் சோப்புப் போடுவதில் நமது கவனம் இல்லாமலிருக்கிறது என்று எண்ணம் வரும்போது, மன ஓட்டத்தினை நிறுத்தி அப்பொழுது செய்யும் சோப்புப் போடுவதில் கவனத்தைச் செலுத்த வேண்டும். நடக்கும்போது கவனம், கால்கள் எட்டுவைப்பதிலும், பார்வை பாதையிலும் இருக்கவேண்டும்.

17. இவ்வாறு ஒரு நாள் முழுவதும் நாம் செய்யும் செயல்களில் (வேலைகளில்) நமது கவனத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது மூன்றுவிதமான பலன்கள் ஏற்படுகின்றன. ஒன்று நாம் செய்யும் வேலையும், அந்த வேலையைச் செய்வதினால் ஏற்படும் கஷ்ட உணர்வும் (சிரம உணர்வும்-difficulty feeling) ஆழ்மனத்திற்கு (Sub Conscious Mind) எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆழ்மனதுடன் ஐக்கியமாகும்போது (yoga-இணைதல்) சிரம உணர்வு இல்லாமல் போய்விடுகிறது. இதனால் தொடர்ந்துவேலையைச் செய்வதில் ஒரு உற்சாகமும், இனம்புரியாத மகிழ்ச்சி உணர்வும் உள்ளத்தில் பொங்குகின்றதை உணரலாம். செய்யும் வேலை சிறப்புத் தன்மையை  (finness, good finishing etc) அடைகிறது. இரண்டாவது பலன் தேவையில்லாத குப்பைகளான கோபம், பயம், பதட்டம், வெறுப்பு, பொறாமை, சந்தேகம், விரக்தி, அவநம்புக்கை போன்றவைகள் மனவழுத்தங்களாக (stresses) மாறி மனதினுள் நிரப்பப்படுவது தடுக்கப்படுகிறது. மனவழுத்தம் இல்லையென்றால் அதனின் மறுபக்கம் நோயுமில்லை. மூன்றாவது பலன், மனம் அலைபாயும்போது ஏற்கனவே உள்ள மனவழுத்தங்கள் வெளியேறுகின்றன. ஆகவே மனம் அலைபாயாவிட்டால், மனவழுத்தங்கள் வெளியேறாமல் மக்கள் மனநோயாளிகளாகவும், நடைபிணங்களாகவும் மாறிவிடுவார்கள். ஆகவே மனம் அலைபாயுதல், மனிதனின் உடல் நலத்தில் முக்கிய பங்கினை வகிக்கிறது.

18. மனம் அலைபாய்வதைத் தொடர்ந்து அனுமதித்தால், அது மனிதனின் அறிவில் வேலை செய்ய ஆரம்பிக்கிறது; மனிதனின் பாதையாகிவிடுகிகிறது. அலைபாய்தலைத் தடுத்து நிறுத்தி, வேலையில்/செயலில் கவனத்தைச் செலுத்தும்போது இறைவனின் அறிவில் இயங்குகிறோம்; இறைவனின் பாதையாகிவிடுகிறது. நன்மை தீமை அறியத்தக்க பழங்களை, ஆதாமும் ஏவாளும் சாப்பிடுவதற்கு முன்பிருந்த நிலைக்கு வந்துவிடுகிறோம்.

                                                                                                    ஆர்.எ.பரமன்(அரோமணி)    
                               Er.R.A.Bharaman alias Aromani)          
                                      cell:9442035291, 8754880126.

Please visit the following websites: nomedicine-tamil.com; twinmedicine.com for English
copyright to R.A.Bharaman alias Aromani.

 
   





முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: