Saturday, September 20, 2014

பேரழகி அகல்யா-6A


             
 பேரழகி அகல்யாவை (akalya) தவறான வழியில் அனுபவித்த இந்திரன்

C 245-கவனவாழ்க்கை 6 A- 

 இரட்டை மருத்துவம்- மருத்துவ மனபயிற்சி மருத்துவம் பகுதி 2
  Twin Medicine- Medicine of Medicinal Meditation Part II-Attentive Life 6-TAMIL                                 
                                                                  கவன வாழ்க்கை 6A
மூலவேரை அறுக்கவேண்டும்.(6-ன் தொடர்ச்சி) 

21. கவன வாழ்க்கையில் இடி விழுந்தது போன்ற நிகழ்வு நடந்து துயரம் ஏற்பட்டாலும் மிக விரைவில் சகஜ நிலைக்கு வந்து விட முடியும்.

22. பாபு தனது வீட்டின் வெராந்தாவில் உள்ள திண்டில் உட்கார்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். அவனுடைய நண்பன் ராகவன் தன் அருகில் வந்து நின்றதைக் கூடக் கவனிக்காமல் பாபு சிந்தனையிலேயே மூழ்கியிருந்தான்.

பாபு! புரட்சி பண்ணி எந்த கோட்டையைப் பிடிக்கப் போறே!” சத்தத்தைக் கேட்ட பாபு சிந்தனையிலிருந்து விடுபட்டவனாய் ராகவனைப் பார்த்தான்.

23. இருவரும் நீண்ட நாளைய நண்பர்கள். ஒரு பள்ளியில் ஒன்றாகவே படித்தவர்கள், கல்லாரிலேயும் ஒன்றாகவே சேர்ந்து படிப்பை முடித்தவர்கள். ராகவன் கிடைத்த வேலையை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டவன். படிப்புக்கேத்த வேலைக்காகக் காத்திருப்பவன் பாபு. மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

24. “வாடா! இன்னிக்குப் பேப்பர் பாத்தியா! மகாப் பெரிய ஊழலைச் செஞ்சிருக்காங்க! இதுக்குத் தாண்டா மக்கள் புரட்சி ஏற்ப்பட்டு புரட்சி அரசாங்கம் வரனுமின்னு சொல்றது!” என்றான் பாபு. அவன் கண்களில் கோப வெறி தெரிந்தது.

25. ராகவன் அவன் தோலைத் தட்டியவாறுஅமைதி மகனே அமைதி! புரட்சி அரசாங்கம் வந்துட்டா மட்டும் ஊழல் ஒழிஞ்சுடுமா? ஆட்சிக்கு வந்த சில வருடங்களிலேயே காடுகளில் வாழ்ந்த புரட்சித் தலைவர்கள் பதவி சுகத்தில் திலைத்துப் பிறகு ஆடம்பர சுகத்தில் மிதப்பார்கள். ஆடம்பரம் நிலைக்க சொத்துக்களைக் குவிப்பார்கள். தவறாக சேர்த்தச் சொத்துக்களை அனுபவிக்க, அதிகாரம் எப்பொழுதும் தங்களைவிட்டுப் போகக்கூடாது என்பதற்காக சர்வாதிகாரிகளாக மாறுவார்கள்.. அவர்களின் காலம் முடியும்போது, தங்களது வாரிசுகளை தங்களுக்குப் பின் சர்வாதிகாரிகளாக்கிவிட்டுச் செல்வார்கள். மக்கள் ஆட்சியில் ஊழலுக்கு எதிராக போராட்டம் செய்யலாம். சர்வாதிகாரி நாட்டில் போராட்டத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது”.

26. “ உன்னுடைய வாதத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது! லெனின், மாசெதுங், பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்கள் சிறந்த ஆட்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள்”.

27. அதற்குப் பிறகு என்ன ஆச்சு! ருஷ்யா துண்டு துண்டாப் போகல! ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் தங்களை சுதந்திர நாடுகளாப் பிரகடனப்படுத்தல! மனிதசமுதாயம் தோன்றிய காலத்திலயிருந்து பிரச்சனைகள் இருந்து கொண்டுதானிருக்கு. 1,76.000 மற்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்னால நடந்தாகச் சொல்லப்படுகிற கதைகள்தான் இராமாயானமும் மகாபாரதமும். சுக்ரீவன் மனைவியை அவன் அண்ணன் வாலி அபகரிக்கல! ஆட்சிக்காக, பாண்டவர்கள் தங்கியிருந்த அரக்கு மாளிகையை தீ வைத்து அவர்களைக் கொள்ள துரியோதனன் சதித் திட்டம் தீட்டல! கி.பி. 2-ம் நூற்றாண்டில பொற்கொள்ளனின் மோசடித் திருட்டினால் கோவலன் வெட்டிக் கொள்ளப் படல! ஒளரங்கசீப் சக்கரவர்த்தி, முடிசூட்டுவதற்குரிய வாரிசான தனது அண்ணன் தாரா சுகோவை (DARA SHUKOH) ஓட ஓட விரட்டி கொலை செய்து, தனது தந்தை ஷாஜஹானை சிறையில் அடைத்துவிட்டு ஆட்சிக்கு வரல! கி.பி. 15-ம் நூற்றாண்டில, சூரியனைச்சுற்றி பூமி முதலிய கோள்கள் சுற்றி வருகின்றன என்ற வானியலின் உண்மைத் தத்துவத்தை வெளியிட்டதற்காக புரூனோ என்ற இத்தாலியரை தீயிட்டுக் கொழுத்தியது திருச்சபை. இதே நூற்றாண்டில இங்கிலாந்து மன்னர் ஹென்றி தனது ஆசை நாயகியை மணப்பதற்காக, 25 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்து 7 குழந்தைகளைப் பெற்றெடுத்த தனது மனைவி காதரினை விவாகரத்து பெறுவதற்காக மதகுருவான போப்பாண்டவரையே தூக்கி எறிந்தார். கத்தோலிக்க திருச்சபையை முடக்கிவிட்டு, ஆங்கிலேய திருச்சபையை(Church of England) நிறுவினார். அதற்குப் பிறகும் அவரது ஆசை அடங்கல. தொடர்ந்து நான்கு பெண்களை ஒன்றன் பின் ஒன்றாக மணந்து கொண்டார். ஹைச்ஐவி(HIV) யால் பாதிக்கப்பட்டவர்களைமனித நேயத்துடன் பாருங்கள்என்று மக்களுக்கு அறிவுறுத்த கோடிக்கணக்கான பணத்தை இந்திய அரசு ஆண்டுதோறும் விளம்பரமாகச் செலவழிக்கிறது. ஆனால் நாட்டின் பொருளாதாரச் சுமை என்பதற்க்காக அந்நாட்டின் குடிமக்களில் ஓரினச் சேர்க்கையாளர்களையும், மாற்றுத் திறனாளிகளையும் (handicapped persons). மனநலம் குன்றியவர்களையும் லட்சக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறான் ஒரு கொடுங்கோலன்.

28. “ அவன் யாரப்பா?”

யாரு! சர்வாதிகாரி ஹிட்லர்தான்!அவன் மாதிரி ஆட்களின் பிறப்பை உன்னால் தடுக்கமுடியுமா? பாபு! சில சமயம் மக்களும், அரசாங்கமும், மதங்களும் கூட தஙகளுடைய கொள்கைகளிலிலும். கோட்பாடுகளிலும் சமரசம் செய்துகொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்திருக்கிறாயா? அரசும், மிருகங்கள் மற்றும் பறவைகளை வதைப்பதிலிருந்து பாதுகாக்கும் ஆர்வலர்கள் மிருகங்களை சர்க்கசில் பயிற்சி கொடுத்து வேடிக்கை காட்டுவது, பறவைகளை கூண்டில் அடைத்து மகிழ்வது ஆகியவற்றைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள். பறவைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம் என்று சரணாலயங்களை நிறுவி பறவைகளையும் மிருகங்களையும் அரசு பாதுகாக்கிறது. ஆனால் தினசரி கோடிக்கணக்கில் ஆடுகளும், மாடுகளும், பறவைகளும், மீன்களும் மனிதர்களின் உணவுக்காக கொன்று குவிக்கப்படுகிறதே! இதற்கு நீ புரட்சி செய்யமுடியுமா! ஆக்கப்பட்டப் பொருள்கள் அனைத்தும் மனிதனுக்குச் சொந்தம் என்று யேசுநாதர் போதித்து, கிறிஸ்தவர்கள் அசைவ உணவு சாப்பிடுவதற்கு சமரசம் செய்து கொண்டார். ஜப்பான் 3500 தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. அவர்களுக்கு மீன்தான் முக்கிய உணவு. ஆகவே ஜப்பானில் வேறூன்றியுள்ள, அஹிம்சையைப் போதிக்கும் புத்தமதம், மீனை உணவாகச் சாப்பிடுவதை ஏற்றுக் கொண்டது! சமரசம் செய்துகொண்டு போய்க்கொண்டிருப்பதே வாழ்க்கை! உலக இயல்புபடி அதாவது மக்களின் இயல்புபடி, அதனை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையை நடத்திச் செல்வதுதான் புத்திசாலிதனம். எந்தப் பிரச்சனையானாலும் நீ திருவள்ளுவர் பெருமானை அனுகலாம். ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்என்று அவர் தெள்ளத் தெளிவாச் சொல்லியிருக்கிறாரே! ‘இக்கரைக்கு அக்கரை பச்சைஎன்பதை மறந்து விட்டாயா?”

29. “எல்லாம் முடிஞ்சு போச்சு....” என்று வாய்க்குள்ளேயே பாபு முணுமுணுத்தான்.

30. “என்னவோ முணுமுணுத்தாயே!!”

31. “இல்ல! ஒன்னுமில்ல!” பாபுவின் முகத்தில் கவலையின் சாயல் பளிச்சிட்டுத் தெரிந்தது. “அப்பா உன்னைப் பார்த்தாரா?”

என்னுடைய ஆபிசுக்கே வந்திருந்தார். எப்பப் பார்த்தாலும் தனியா உட்கார்ந்து எதையாவது யோசிச்சுக்கிட்டே இருக்கயாம்! அடிக்கடி அடையாளம் தெரியாத ஆட்கள் உன்னிடம் வந்து பேசிட்டுப் போறாங்களாம். சில சமயம் அவர்களோடு போனால் இரண்டு மூன்று நாட்கள் கூட வீட்டுக்கு வராம இருந்துடுறியாம். ஏன் இப்படி இருக்க? அவங்களெல்லாம் யாருன்னு கேட்டா, ஒன்னும் பதில் சொல்லாம பேசாம இருக்கியாம்!” அந்த நேரத்தில் பாபுவின் அம்மா இருவருக்கும் காபி கொண்டுவரவே இருவருடைய பேச்சும் தடைபட்டது.

32. மறுநாள் காலையில் பாபுவின் அப்பா சோமசுந்தரம் அவனின் படுக்கையிலிருந்து ஒரு கடிதத்தை எடுக்கிறார். பதட்டத்துடன் அதில் உள்ளவற்றைப் படிக்கிறார்.

அப்பா! அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்! நான் புரட்சி இயக்கத்தில் சேர்ந்து விட்டேன். சேர்ந்தது சரியா தவறா என்ற விவாதம் இப்போது தேவையில்லை. நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை ஒழித்துக் கட்ட என்னுடைய பங்கை அளிக்க புரட்சி இயக்கத்தில் சேர்ந்துள்ளேன். இனி எனக்கு எல்லாமே புரட்சி இயக்கம்தான். பக்கத்தில் ஒரு மஞ்சள் பையில ரூபாய் இரண்டு லட்சம் இருக்கு. அதை அவர்கள் கொடுத்ததுதான். தங்கையின் திருமணத்தை முடித்துவிடுங்கள். தம்பியை நன்றாகப் படிக்க வையுங்கள். என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்காதீர்கள். எந்த உதவி தேவைப் பட்டாலும் ராகவனைப் போய்ப் பாருங்கள். அவன் எனக்காகச் செய்வான்.

புரட்சி ஓங்குக! புரட்சி வெல்க!
இப்படிக்கு
அன்புள்ள மகன்
எஸ்.பாபு.
கடிததைப் படித்த முடித்த அவரின் கண்களில் கண்ணீர் துளிர்த்து வெளியேறியது. “ எப்படி லட்சுமியிடம் சொல்லுவேன்.....” என்று சோமசுந்தரத்தின் வாய்முணுமுணுத்தது.

33. ராகவன் போஸ்ட்மென் கொடுத்துவிட்டுச் சென்ற கடிததைப் பிரித்துப் படித்தான்.

அன்புள்ள நண்பன் ராகவனுக்கு, வணக்கம். இந்தக் கடிதம் உன் கையில் இருக்கும் போது நான் காட்டுக்குள் சென்றிருப்பேன். ஆம்! புரட்சி இயக்கத்தில் சேர்ந்துவிட்டேன். நீ எனக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறியிருந்தாய். கிடைத்த வேலையை ஏற்றுக்கொள்ளச் சொன்னாய். படிப்புக்கேத்த வேலைக்காகக் காத்திருந்தேன். இந்தியன், ரமணா போன்ற படங்களை அடிக்கடி பார்க்காதே! தனிமையில் உட்கார்ந்து யோசிக்காதே! உணர்ச்சி எழுப்பக்கூடிய செய்திகளைப் படிக்காதே; அதுவும் முடியாது என்றால், செய்தித் தாழ்களைப் படிப்பதை கொஞ்சகாலத்துக்கு நிறுத்தி வை. செய்திகள் அனைத்தும் செத்துப் போன செய்திகள்; கடந்த காலச் செய்திகள்; அந்தச் செய்திகளால் உனக்கு எந்தப் பயனும் இல்லை. இப்பொழுது வேலைக்கு அப்ளிகேசனை நிரப்பிக் கொண்டிருக்கிறாயே, அதுதான் உனக்குப் பயன்படும் செய்தி. இப்படி நீ சொன்ன எந்த அறிவுரையையும் நான் கேட்க வில்லை. இரண்டு நாளைக்கு முன்பு கூட நீ சொன்ன அறிவுரைகள் என்னை மிகவும் பாதித்து விட்டது உண்மைதான். ஆனால் காலம் கடந்த அறிவுரை. நான் பல முறை காட்டுக்குள் சென்று மூளைச் சலவைக் (brain wash) குள்ளாக்கப் பட்டிருக்கிறேன். அவர்கள் பயிற்சி எடுக்குமிடங்களுக்கெல்லாம் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆகவே இனி நான் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. அப்படி திரும்பினால், அவர்களது ரகசியங்களைத் தெறிந்தவன் என்பதினால், அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள். இனி எனது வாழ்க்கை, புரட்சி முத்திரை குத்தப் பட்ட வாழ்க்கைதான். என் குடும்பத்தை என் ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள். என் தந்தைக்கு உடந்தையாக இருந்து என் தங்கையின் திருமணத்தை நடத்து. என் தம்பியின் உயர் படிப்புக்கு என் தந்தையை வழி நடத்திச் செல். புரட்சி ஓங்குக! புரட்சி வெல்க!
இப்படிக்கு
அன்புள்ள ஆருயிர் நண்பன்
எஸ்.பாபு.
34. பாபு தன் மனதினை கட்டுக்குள் வைக்காமல், கற்பனையில் சதா மூழ்கியதின் பலன், அவனை தீவிரவாதியாக்கியது. அவன் வாழ்க்கை பாழானதோடு, அவனது பெற்றோரையும் மீளாத் துயரத்திற்குள்ளாக்கிவிட்டான்; உடன்பிறப்புக்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டுச் சென்றுவிட்டான்.

35. பிரம்மன் அகழ்யாவை எந்த ஆடவரும் பார்த்தவுடன் பிரமிப்பு அடையும்படியான பேரழகியாக படைத்திருந்தார். பல பேர் அவளுடைய கையைப் பிடிக்க விரும்பினாலும், பிரபலமான ஏழு முனிவர்களில் ஒருவரான கவுதம் முனிவர்தான் அவளுக்கு மாலை சூடினார்.
36. அகல்யா கிடைக்காததினால் பெருத்த ஏமாற்றமடைந்தவர்களில் மிக முக்கியமான ஒருவன் இந்திரன். அவள் மீது கொள்ளை ஆசை வைத்திருந்தான். அவனின் மனக்கண் முன்னாள் அவளுடைய உருவம் தொடர்ந்து வந்து போய்க் கொண்டிருந்தது. அவளோடு உடலுறவு கொள்வதுபோல கற்பனையில் மூழ்கி செயற்கை இன்பத்தை அனுபவித்து வந்தான். இது முற்றி, அவளை ஒரு நாளாவது அனுபவித்தே தீரவேண்டும் என்பதில் பைத்தியமாகி விட்டான். அதற்கான சந்தர்ப்பத்திற்காக ஆவலோடு காத்திருந்தான்.

37. கவுதமும் அகல்யாவும் ஒருவருக்கொருவர் அன்புகொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அவளை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை இந்திரனால் அடக்கமுடிய வில்லை. ஆகவே சேவல் கூவுவதுபோல ஒலியை எழுப்பி கவுதமரை கங்கைக் கரைக்கு காலைக் கடன்களை முடிப்பதற்காகச் செல்வதற்கு தூண்டுதல் செய்தான். பிறகு கவுதமராக உருமாறி அகல்யாவை அணைத்தான்.

38. ஆரம்பத்தில் அகல்யா, கவுதமர் வெளியில் சென்றுவிட்டு விரைவில் திரும்பியதை நினைத்து ஆச்சரியமடைந்தாள். ஆனால் சிறிது நேரத்திற்குள் தன்னைத் தழுவி அணைத்துக் கொண்டிருப்பவன் கவுதமராக உருமாறி வந்திருக்கும் இந்திரன் என்பதை அவளது கூர்மையான மூளை கண்டுபிடுத்து விட்டது. இருந்தாலும் அவள் அவனுடைய ஆசைக்கு இணைங்கினாள். உண்மையில் இந்திரனே தன் அழகில் மயங்கினதை நினைத்து அவள் பெருமையே கொண்டாள்.

39. கங்கைக் கரையிலிருந்து திரும்பிய கவுதமர் இருவர்களின் தகாத உறவைக் கண்டு கோபமுற்றார். இருவரையும் சபித்தார். அவரின் சாபத்தால், இந்திரன் ஆண்மையை இழந்தான் மற்றும் அகல்யா சாப்பாடு இல்லாமல் ஆயிரம் ஆண்டுகள் பிறர் கண்களுக்குத் தெரியாமல் காற்றோடு காற்றாகக் கலந்து அந்த ஆசிரமத்தையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தாள்.

40. இந்திரனின் கற்பனையின் பலனால் அகல்யாவுடன் தகாத உறவு கொண்டான்; அதனால் அவன் தன் ஆண்மையை இழந்தான். அகல்யாவை தன்னுடன் தகாத உறவு கொள்ள தூண்டும் பாவத்தைச் செய்தான்; அதனால் அவளும் சாபத்திற்குள்ளானாள். அன்பினால் பிணைக்கப்பட்ட தம்பதியரைப் பிரித்தப் பாவத்திற்கும் உள்ளானான் இந்திரன்.

41. ஆகவே கற்பனையில் வாழும் மனிதன் அரைமனிதன்; ஆன்மீக ஆற்றல் வெளியிலிருந்து கிடைக்கிறது என்று நம்புவான்; அந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தாதவன்; சாஸ்திரங்களை அதிக அளவு நம்புகின்றவன். துன்பவலையைத் தனக்குத்தானே பின்னிக்கொள்பவன்; கவன வாழ்க்கை வாழும் மனிதன்தான் முழு மனிதன்; ஆன்மீக ஆற்றல் தனக்குள்ளிருந்து வருவதை உணர்பவன்; அவ்வாற்றல் முழுமையாகப் தனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பாய்ந்தோடிப் பயனளிப்பதை தெளிவாக உணர்பவன்; சாஸ்திரங்களைப் பற்றிக் கவலையில்லாதவன்; துன்பவலையைப் பின்னத் தெரியாதவன்.

42. ‘கற்பனைஆலகால விஷம். அதைத் தினந்தினம் பருகுகிறிர்கள். அதைத் தூக்கி எறியுங்கள். புதுக் கிண்ணத்தில்கவனம் என்னும் அமிர்தத்தை நிரப்புங்கள், குடியுங்கள், மகிழ்ச்சியில் மிதங்கள். சாதனைகள் பல புரியுங்கள்.

ஹீலர், மருத்துவ மனபயிற்சி நிபுணர், பொறிஞர்.ஆர்..பரமன்(அரோமணி)
மேற்பார்வை பொறியாளர் (ஓய்வு)/ தமிழ்நாடு மின்சார வாரியம். செல்:9442035291. www.medicineliving.blogspot.com, copyright to R.A.Bharaman 


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: