Saturday, September 20, 2014

தற்காலிக ஆண்மையற்றவர்-7

தற்காலிகமாக ஆண்மையற்றவராகி  விட்டார் M.L.A. -

C 246-MM 2-க.வா 7-

இரட்டை மருத்துவம்-மருத்துவ மனபயிற்சி மருத்துவம் பகுதி 2-
Twin Medicine- Medicine of Medicinal Meditation Part II-Attentive Life 6-TAMIL                                
                                                            கவன வாழ்க்கை 7

கற்பனை மனித இனத்தின் நாச வேர்!.
1. வசந்தா கூடத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள். அழுது அழுது முகமெல்லாம் வீங்கிப் போயிருந்தது. காலையில் தெருவில் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது, அவளது கணவரால், அவளுக்கு ஏற்பட்ட அவமான தலைக்குனிவு ஏற்படுத்திய நிகழ்ச்சியே அவளின் மனக்கண்ணிலிருந்து அகலாமலிருந்தது. அவள்அந்த முட்டைக் கண்ணுக்காரி, பராரித் தேவடியா இன்னும் பத்துப் பேரிருக்க என் பக்க நியாயத்தைக் கேக்காம என் தலை முடியைப் பிடிச்சு அடிச்சு தர தர வென்று இழுத்து வந்தாரே! அவளுக மூஞ்சியில எப்படி முழிப்பேன்! என் மானமே போச்சே! நான் உயிரோடு இருக்கக் கூடாது!” என்று முணு முணுத்தபடி வேகமாக எழுந்தாள்; கதவைத் தாழ்ப்பாளிட்டாள். ஒரு சேலையை எடுத்தாள்; மின்விசிறிக்கு மேலே உள்ள கம்பியில் சேலையை சொருகி கழுத்திலும் கட்டி தொங்கி, கால்கள் நிற்கும் ஸ்டூலையும் கால்களால் உதைத்துத் தள்ளிவிட்டாள். சிறிது நேரத்தில் வசந்தாவின் உடல் மட்டும் தொங்கியது; அவளுக்குச் சொந்தமில்லாத உயிர் அவளை விட்டுப் பிரிந்தது.

2. வசந்தா தனது உயிரை மாய்த்துக் கொண்டதால் யாருக்கு நஷ்டம்? இப்பொழுது அவளது ஆண் மற்றும் பெண்குழந்தையும் தாயில்லாக் குழ்ந்தைகளாகிவிட்டன! மாற்றாந்தாய்க் கொடுமைக்காளாகப் போகின்றன! அவள் மட்டும் எண்ணங்களை நீடிக்கவிடாமலிருந்து, செய்யும் வேலையில் கவனத்தைச் செலுத்தியிருந்தால், மனம் அமைதியடைந்து தெளிவு பெற்றிருக்கும்! தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியிருக்காது, வீட்டை வேறு இடத்திற்கு மாற்றிச் சென்றிருக்கலாம். கணவனிடம் சொல்லி உத்தியோக மாறுதலுக்கு ஏற்பாடு செய்து வேறு ஊருக்கே மாற்றிச் சென்று விடலாம்.

3. கவன வாழ்க்கைக்குப் பயிற்சி எடுத்துக் கொண்டால், எண்ண ஓட்டத்தை நிறுத்தி, கையிலிருக்கும் வேலையில், கவனத்தைச் செலுத்த முடியும்.

4. ஜெய்சர்மா மைனப்பூரின் சட்டமன்ற உறுப்பினர். அரசு விருந்தினர் மாளிகையில் கட்டிலில் படுத்திருந்தார். அவருடைய நிழல், எடுபிடி, பிஏ இப்படி இடத்துக்குத் தகுந்தபடி பல பெயர்களைக் கொண்ட முனிராம் அவருடைய கால்களை அமுக்கிவிட்டுக் கொண்டிருந்தான்.

5. ஜெய்சர்மா முனிராமைப் பார்த்துக் சொன்னார்அவ அழகுன்னா அப்படியொரு அழகு! ருஷ்மாவைத்தாயா சொல்றேன்! இன்னிக்காவது பாவை படியுமா? போய் முயற்ச்சிக்கலாமா?”

6. முனிராம் சில விநாடிகள் பேசாமலிருந்து விட்டு சொன்னான்படியாதுயா! நீங்களும் நிறைய தடவை முயற்சி செஞ்சீங்க! முடியலையே! ஒரு தடவை கதவு ஜன்னல்களை திறந்து வச்சுட்டா! இன்னொரு தடவை பக்கத்து வீட்டுப் பிள்ளையை கூட்டி தன்னோடு வச்சுக்கிட்டா! இப்படி ஏதாவது செஞ்சு தப்பிச்சுடுறா!”

7. சிறிய இடைவெளிக்குப் பிறகுஐயா! ஒன்னு சொல்லட்டுங்களா! கோபிக்கமாட்டீங்களே!” என்று கேட்டான்.

அவனை கேள்விகுறியுடன் பார்த்து சொன்னார்எதிருந்தாலும் சொல்லு! கோபிக்கமாட்டேன்!” “

8. ஐயா!.....பாவமாயிருக்குயா! இப் பொண்ணை விட்டிடுங்க! வேற படியுற பொண்ணுக நிறைய வந்து விழுதுங்களே! அந்தப் பொண்ணு தன் புருசனை விரும்பி கலியாணம் பண்ணியதால இரண்டு வீட்டுத் தொடர்பும் அத்துப் போச்சு. இவளை ஒரு குழந்தையோடு விட்டுட்டு புருசங்காரன் துபாய்க்கு சம்பாதிக்கப் போயிட்டான். நீங்க அடிக்கடி அங்க போறதால, அக்கம் பக்கத்தில கச,கசன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்கன்னு, அந்தத் தெருவில குடியிருக்கிற என் நண்பன் சொன்னான். பாவம்யா!” என்று சொல்லிவிட்டு அவரையே பார்த்தான்.

9. ஜெய்சர்மா கோபமாகப் பேசினார்போடா மடப்பயலே! பாவம் பார்த்தா சந்தோஷம் கிடைக்குமாடா? புருசந்தான் இல்லியே, என் ஆசைக்கு இணங்க வேண்டியதுதானே! நான் அவளுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுப்பேன்ல! என் மனைவிகூடப் படுத்திருக்கும் போது கூட அவளைப்பற்றித்தாண்டா எண்ணம் மனசில ஓடிக்கொண்டே இருக்குது! ஒன்னு தெரியுமா? என் மனைவியோட தாம்பத்திய உறவு கொள்ளவே முடியலடா! ருஷ்மா அப்படி ஆட்டிப் படைக்கிறாடா!.”

10. “ ஊர்ப் பொமபளைங்களை ஓம் பொண்டாட்டிகள்ன்னு நினைச்சா ஓம் பொண்டாட்டி அடுத்தவன் பொண்டாட்டிதான!’’ என்ற எண்ணங்கள் முனிராம் மனதில் ஓடின.

என்னடா யோசிக்கிற!
ஒன்னும் இல்லீங்கய்யா!

நான் முடிவு பண்ணிட்டேன். அடுத்த வாரத்தோடு சட்டசபை முடிஞ்சிறும், அவளையும் அவ குழந்தையையும் கடத்திட்டுப் போயி டார்ஜிலிங்கில உள்ள நம்ம பங்களாவில ஒரு வாரம் வச்சிருந்து என் ஆசையைத் தீத்துக்கப் போறேன்!” என்று தீர்க்க ஒரு முடிவுக்கு வந்ததுபோலப் பேசினான்.

11. ரேஸ்பிருந்தா ருஷ்மாவின் வீட்டுக் கதவை நீண்ட நேரம் தட்டியபிறகு கதவு திறந்தது. கதவைத் திறந்த ருஷ்மாவின் முகத்தைப் பார்த்த ரேஸ்பிருந்தாஅழுதிட்டுருந்தியா!” என்று கேட்டாள். அழுது அழுது ருஷ்மாவின் முகம் வீங்கியிருந்தது. இருவரும் கூடத்திலிருந்த சாய்வு பிளாஸ்டிக் நாற்காலிகளிகளில் சென்றமர்ந்தனர்.

12. ரேஸ்பிருந்தா ருஷ்மாவின் முகத்தைப் பார்த்து வருத்தத்துடன் கேட்டாள்நேற்று ராத்திரி வந்து தொந்தரவு கொடுத்தானா?”
நேற்று ராத்திரி வரல! நேற்று ராத்திரி தலையில இடி விழுந்தமாதிரி ஒருதகவலைசொல்லிஅனுப்பிச்
சிருக்காரு!”
13. “ யாரு அவன் பிஏ முனிராமா? நாசகாரப் பயகிட்ட இப்படி ஒரு நல்ல மனுசன் வேலை பாக்கிறாரே!

14. “ அவருமட்டும் அப்போதைக்கப்போது எனக்குத் தகவல் கொடுக்கல, எப்பவோ அவன் என்னைச் சீரழிச்சிருப்பான்!”

15. “ என்ன தகவலாம்?”

16. “ ஒரு வாரம் கழித்து என்னை டார்ஜிலிங்குக்கு கடத்திக்கிட்டுக் கொண்டு போகப் போறானாம்! இந்த ஊரை விட்டே போகச் சொல்ராறு முனிராம்! நான் எங்க போவேன்!” என்று சொல்லிக் கொண்டே குலுங்கி குலுங்கி அழுதாள்.

ரேஸ்பிருந்தா எழுந்து அவளுடைய தோள்களை ஆதரவாக பிடித்து அணைத்துக் கொண்டாள். ரேஸ்பிருந்தாவின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்து வெளியேறியது.

17. “புதிய ரேசன் கார்டு வாங்க அப்பிளிகேசனை அவன்கிட்ட கொடுக்கப் போயிருக்கக் கூடாது! தாசில்தாரு ஆபிசில கொடுத்திருக்கனும்!” என்று முணுமுணுத்தவாறுநான் தப்புப் பண்ணிட்டேன்! தப்புப் பண்ணிட்டேன்!” என்று சொல்லிக் கொண்டே, தன் தலையிலேயே இரு கைகளாலும் மடார் மடார் என்று அடித்துக் கொண்டாள். ரேஸ்பிருந்தா அவளுடைய கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

18. “ உன் அம்மா அப்பா ஊருக்கே போயிரே!”

19. “நானும் அவரும் ஒரே ஊர்தான். இரண்டு வீட்டிலேயும் ரொம்பவும் கோபமாக இருந்தாங்க! ‘உங்க உயிருக்கு பாதுகாப்பு எப்பவும் எங்களால கொடுக்கமுடியாது!; ரொம்ப தூரமா போயிடுங்கன்னு போலீசுல சொல்லிட்டாங்க! அதனாலதான் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால வந்து இங்க குடியேறினோம்”.

20. “அம்மா பசிக்குதம்மா!” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்த ஐந்து வயது பையன் தோள்பட்டையில் உள்ள புத்தகப் பையை கீழே இறக்கி வைத்தான்.

21. “ருஷ்மா, எம் பொண்ணும் வந்திருப்பா. உங்க ஊருக்கே போகமுடியுமான்னு நல்லா யோசித்துப் பாரு. நான் வர்றேன்!” என்று சொல்லிக்கொண்டே ரோஸ்பிருந்தா புறப்பட்டாள்.

22. எம்.எல். ஜெய்சர்மா அவனுடைய அரசு வழங்கிய அலுவலகத்தில் ஒருவர் கொடுத்த மனுவை படித்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் முனிராம் நின்றுகொண்டிருந்தான். ஜெய்சர்மாவுக்கு பக்கத்தில் இருபக்கங்களிலும் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவருடைய அறைக்கு எதிர் கூடத்தில் பொதுமக்கள் இருபது பேர்கள் ஆண்களும் பெண்களுமாக இரும்பு நாற்காலிகளில் எம்.எல். விடம் மனுக்கொடுப்பதற்காக உட்கார்ந்திருந்தனர். வெளியில் வந்த ஒரு ஆள்நீ உள்ள போமா!” என்று சொன்னான். முக்காடு போட்டிருந்த பெண் உள்ளே போனாள். எம்.எல். விடம் மனுவை நீட்டினாள். குனிந்து எழுதிக்கொண்டிருந்த ஜெய்சர்மா அப்பொழுதுதான் நிமிர்ந்து அந்த பெண்ணைப் பார்த்தார். முக்காடு விலகிய சிறிது இடைவெளியில் முகத்தைப் பார்த்தவுடன் அவரின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

23. கண்ணிமைக்கும் நேரத்தில் செத்துப்போடா! செத்துப்போடா! பொம்பளை பொருக்கி!” என்ற குரல் அந்த அறையே அதிரும்படியாக கேட்டதில் அறையில் இருந்த அனைவரும் அந்த காட்சியை பார்த்து உறைந்து விட்டனர். ருஷ்மா ஜெய்சர்மாவை சரமாரியாக கத்தியால் குத்திக்கொண்டிருந்தாள். எவருக்கும் அதைத் தடுக்கவேண்டும் என்ற எண்ணம் எழவே இல்லை. அந்த அளவுக்கு அவளுடைய சத்தமும் செயலும் இருந்தது. ஜெயசர்மாவின் தலை தொங்கி உடல் சரிந்து கீழே சாய்ந்தது. ருஷ்மா குத்துவதை நிறுத்திக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தவள்யாரும் என்கிட்ட வராதீங்க! நானே போலீசுல சரணடையிறேன்!”

24. போலீஸ் ஸ்டேசனுக்குள் ஓரு பெண் கையில் இரத்தம் படிந்த கத்தியுடன் நுழைவதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் பதட்டத்துடன் எழுந்து நின்றார். தன் மேஜைக்கருகில் வந்து நின்ற ருஷ்மாவைப் பார்த்து 

அந்த கத்தியை அப்படியே மேஜை மேலே வச்சிரும்மா! என்னம்மா நடந்தது?”

25. “காமவெறிபிடித்த எம்.எல். வைக் கொன்னுட்டேன்! ”

எதுக்காகம்மா கொலை செஞ்ச?”

26. “எனக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு(sexual torture) கொடுத்துக் கொண்டே யிருந்தான். என்னால பொறுக்கமுடியல. அவனை இந்தக் கத்தியால குத்தியே கொன்னுட்டேன்!”

27. எம்.எல். ஜெய்சர்மா, ருஷ்மாவின் அழகை எப்பொழுதும் தன் மனக்கண்முன் கொண்டுவந்து ரசித்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார். அவர் செய்த கற்பனை அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அதனால் அவர் தன் தொகுதி மக்களுக்கு செய்யவேண்டிய பணிகளை ஒழுங்காக செய்யமுடியவில்லை. ருஷ்மாவின் வீட்டுக்கு அடிக்கடி போனதால் அவருடைய நேரம் வீணானதுடன் அவளுக்கு பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்தார். அதனால் கணவன் அருகில் இல்லாத நிலையில், ருஷ்மா, தன் கற்புக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப் பட்டாள். ஜெய்சர்மா அடிக்கடி செய்த கற்பனையால், தன் மனைவி கூடச் செய்யும் தாம்பத்திய உறவின் போது, தற்காலிகமாக ஆண்மையற்றவராகி (temporarily impotent) விட்டார்; மனைவிக்குத் துரோகம் செய்தார்; ருஷ்மாவை கொலைகாரியாக்கிவிட்டார்; அவரும் கொலைசெய்யப்படுகிறார்; அவருடைய குடும்பமும் ருஷ்மாவின் குடும்பமும் அனாதைகளாகி நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றன.

28. மேற்குறிப்பிட்டதைப் போல, தினசரி கோடிக்கணக்கான நிகழ்வுகளும் அதனால் விளையும் துன்பங்களும், ஏமாற்றுதல்களும், மோசடிகளும், பித்தலாட்டங்களும், வழிப்பறிகளும்,திருட்டுகளும்,குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகளும், கற்பழிப்புகளும், தற்கொலைகளும், கொலைகளும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. இவ்வளவுக்கும் ஒரே ஒரு காரணம்கற்பனை’. இதில் இறைப் பணியில் ஈடுபட்டுள்ள சாமியார்களும், பாதிரியார்களும் விதி விலக்கல்ல. பாதிரியார்கள் குழந்தைகளைப் பாலியல் தொந்தரவுகள் (sexual torture) கொடுத்ததற்காக ஆஸ்திரிலேயாவுக்குச் சென்ற போப் ஆண்டவர் அங்கு தவறு செய்த பாதிரியார்களுக்காக மன்னிப்புக் கோரினார்.

29. இரண்டாம் உலகப் போர் துவங்கியதற்கும், அந்தப் போரில், ஏழு கோடியே இருபது லட்சம் பேர் மாண்டதற்கும் காரணம் அந்த ஒரே ஒரு வார்த்தைகற்பனைதான்.முதல் உலகப் போர் முடிவுக்கு வந்துஅதில் ஜெர்மனி
அடைந்த தோல்வியைப் போரில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை
 எடுத்துக் கொண்டிருந்த போர்வீரன் அடால்ப் ஹிட்லர் கேள்விபட்டவுடன் தேம்பித் தேம்பி அழுதான்ஜெர்மனி அடைந்த தோல்விக்கு முழுக்க முழுக்க தன் நாட்டில் வாழ்ந்த யூதர்கள்தான் காரணம் என்று அவர்கள் மீது கோபவெறி கொண்டான்அவர்களை நினைக்கும் போதெல்லாம் கோப உணர்வு கொழுந்து
விட்டு எரிந்ததுஅதன் விளைவு ஐம்பத்தைந்து லட்சம் யூதர்கள் பெண்கள்
குழந்தைகள் உட்பட பட்டினி போட்டும் இன்னும் பல படுமோசமான முறைகளில் முகாம்களில் அடைத்து கொலை செய்தான்.

30..இத்தாலியின் சர்வாதிகாரி முஸோலினி. அவன் இத்தாலியை சீசர் காலத்திய ரோமப் பேரரசாக்க கற்பனையால் கனவுக் கோட்டை கட்டினான். அதன் விளைவு ஜெர்மானிய சரவாதிகாரியோடு கைகோர்த்தான். ஜப்பானின் ஆதிக்கத்தை விரிவாக்கி கொரியா மற்றும் சைனாவின் கனிவளத்தை சுரண்ட கற்பனை கனவு கண்டனர் அதன் துருப்புக்களின் படைத் தளபதிகள். ஆகவே அச்சு நாடுகளின் ஒரு அங்கமாகச் சேர்ந்து முதல் அணுகுண்டுகளின் தாக்குதலுக்காளான நாடு என்ற பெயரைப் பெற்றது.

கற்பனை மனதில் எவ்வாறு வேலை செய்கிறது!

31. அனைத்து எதிமறை உணர்வுகளான கோபம், பொறாமை, வெறுப்பு, பயம், படபடப்பு, ஏமாற்றும் குணம், பொறுமையின்மை, திருட்டு குணம் காமவெறி, கொலை வெறி முதலிய உணர்வுக் குணங்களும் மற்றும்  நேர்மறை உணர்வுகளான அமைதி, அன்பு, பொறுமை, நிதானம், ஈவு, இரக்கம், நேர்மை முதலிய உணர்வுக் குணங்களும் ஆழமான மனதில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.இந்த இரண்டு விதமான உணர்வுக் குணத் தொகுதிகளிலிருந்து மனமானது ஆழ்மனதிற்குச் சென்று அப்போதைக்கப்போது நடக்கும் நிகழ்ச்சியின் தேவைக்குத் தகுந்தாற் போல ஒரு உணர்வை எடுத்து மேல் மனதிற்கு வந்து பயன்படுத்துகிறது.

32. மனதில் தானாக தோன்றும் எண்ணங்களை நீடிக்கவிட்டு தனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய எண்ணங்களை தோற்றுவித்து அதிலேயே மூழ்கிக் கிடப்பதுதான் கற்பனை. அவ்வாறு செய்யும் கற்பனைதான் மேற்குறிப்பிட்ட உணர்வுகளை, ஆழ்மனதில் தோண்டி, மேல் மனதிற்குக் கொண்டுவரும் வாகனமாகும்.

33. கற்பனையில் தனது உடன்பிறப்புக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின்மீதுள்ள அன்பினால், பெரிய தொகையைக் கொடுத்து அதை வைத்து முன்னேறுவதைப் போல எவரும் கற்பனை செய்து கனவு காண்பதில்லை.

34. ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்திருக்கும் மருதநாயகத்திற்கு, தான் உட்கார்ந்திருக்கும் மேஜைக்கு முன்னால் ஒரு கூலிக்காரன் அழுக்கு உடையுடன் பல நாட்களாக சவரம் செய்யாத முகத்தோற்றத்துடன் உட்காருகிறான். கூலிக்காரன் மீது மருதநாயகம் இரக்கப்பட்டு, அவனுக்கு எந்த எந்த விதத்தில் உதவி செய்து முன்னுக்குக் கொண்டுவரலாம் என்ற கற்பனை வருமா? அவர் என்ன செய்வார்? மனதிற்குள் அருவருப்படைந்து வேறு மேஜைக்குச் சென்று அமர்வார். ஆகவே அன்பு, ஈவு, இரக்கம் ஆகிய உணர்வுகள் மேல் மனதிற்கு வருவது அபூர்வம். இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். மேல் மனதிற்கு பெரும்பாலும் எதிர்மறை உணர்வுகள்தான் வருகின்றன; நம்மை ஆட்டிப் படைக்கின்றன.

35. பஞ்சனாதன், அமரன் தன் தங்கையை பொது இடத்தில் வைத்து,  கேலிசெய்ததை நினைத்துப் பார்க்கிறான். தன் தங்கை அவமானத்தால் கூனிக்குறுகிப் போனதைப் பற்றி கற்பனையில் நினைத்துப் பார்க்கிறான். கோப உணர்வு உடல் பூராவும் குப்பென்று பரவுகிறது.

36. இராமலிங்கம், ஒரு நெருக்கடியான சூழ் நிலையில், எங்கும் முடியாத நிலையில், தன் ஒன்றுவிட்ட அண்ணனிடம் உதவி கேட்டுச் செல்கிறான். அண்ணன் உதவிகரம் நீட்ட மறுக்கிறான். அந்தச் சமயத்தில் இராமலிங்கத்திற்கு ஏமாற்றம் ஏற்பட்டு அண்ணன் மீது வெறுப்பாக மாறுகிறது.

37. கணேஷ் தன் கையில் டெஸ்ட் ரிஸல்ட் அடங்கிய பேப்பர்களைக் கொண்ட ஒரு பெரிய கவர் ஒன்றை கையில் வைத்து டாக்டரைப் பார்க்க வரிசையில் உட்கார்ந்திருந்தான். அவன் மனதில் கற்பனை ஓடிக்கொண்டிருந்ததுபசி இல்லை. அதனால புற்று நோயாக இருக்கலாம் என்று டாக்டர் சொல்லாட்டிப் போனாலும், சந்தேகப் பட்டுத்தானேபயாப்சிடெஸ்ட் செய்யச் சொல்லியிருக்காரு!” இதை நினைத்த மாத்திரத்தில் கணேஷ்க்கு பயம் தொற்றிக்கொண்டது.

பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் இராமிடம் தேர்வு முடிவு வெளிவந்து விட்டதாக நண்பன் தெரிவித்தவுடன் இராமுவுக்கு பட படப்பு ஏற்பட்டு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. மேற்குறிப்பிட்டவாறு மனித இனம் கற்பனையினால் எதிர்மறை உணர்வுகளில்தான் அநுபவம் அடைந்து வருகிறது.

38. நமது உணர்வுகளில் காம உணர்வு மிகவும் முக்கியமானது; நமது வாழ்க்கையில் அத்தியாவசியமானது. இறைவன் இந்த உணர்வை வைத்துத்தான் உயிரினங்களின் உற்பத்தியைப் பெருக்குகிறான். இந்த உணர்வை சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்தும்போது பயன்படுத்துகிறவருக்கு பலன்கள் ஏராளம். இதற்கு எதிர்மறையாக செய்யும் போதுதான் விபரீதங்கள் பல நடக்கின்றன. இந்த உணர்வில்தான் மனித இனம் சொல்லமுடியாத துன்பங்களையும் துயரங்களையும்
அநுபவிக்கிறது. பெரிய பெரிய பேரரசுகளெல்லாம் சரிந்திருக்கின்றன.

39. மஜோல்சிங், 19 வயது நிரம்பிய வருண் மைரா என்ற கல்லூரி மாணவியை முதன் முதலாக பார்க்கிறான். மற்ற இளம் பெண்களிடம் இல்லாத முகக் கவர்ச்சி, உடல் வனப்பு மற்றும் நடை அவனை அவள்பால் ஈர்க்கிறது. இந்த ஈர்ப்பை உருவாக்கின்ற கற்பனை தோன்றியவுடன், அந்த கற்பனையை சுமந்து செல்லும் மேல்மனமானது கீழ் நோக்கி ஆழ்மனதிற்குச் சென்று புதைந்து கிடக்கின்ற காம உணர்வைக் கிளப்ப தோண்டுகின்றது. வருண் மைராவைப் பார்த்ததிலிருந்து, மஜோல்சிங்கிற்கு அவளின் முகம், உருவம் அவன் கண்முன் வந்து போய்க் கொண்டிருந்தது. அவ்வாறு அவன் அவளை நினைக்கும் போதெல்லாம் மனமானது ஆழ்மனதில் காம உணர்வைத் தோண்டிக் கொண்டிருக்கும். மஜோல்சிங்கின், வருண் மைராவைப் பற்றிய தொடர் கற்பனையால், ஆழ்மனதோடு ஐக்கியமாகிய மேல்மனமானது சக்தி பெற்று தோண்டப் பட்ட காம உணர்வை சுமந்து கொண்டு மேல் நோக்கிப் பயணமாகிறது. காலம் நகருகிறது. இதற்குத் தகுந்தாற் போல, காம உணர்வும் மனதின் பல்வேறு மேல்பகுதிகளுக்கு கொண்டுவரப்படுகின்றன. வருண் மைராவை அநுபவித்தே தீர்வது என்ற முடிவுக்கு மஜோல்சிங் வருகின்றபோது, கம்ப்யூட்டரில் கோப்பைத்(file) திறந்தவுடன், அது அந்த கோப்பை டெஸ்க்டாப்பில் கொண்டுவந்து வைத்துக்கொள்வதைப் போல, மேல் மனமானது காம உணர்வை தனது நுனிப்பாகத்தில் கொண்டுவந்து வைத்துக் கொள்ளும். இந்த நிலையில், இரைக்காக பாயத் தயாராக இருக்கும் புலியின் நிலையில்தான் மஜோல்சிங் இருப்பான். அவன், ஒரு நாள் தனியாக வரும் வருண் மைராவை கற்பழித்துக் கெடுத்து விடுகிறான்.

40. இதேபோலத்தான், முன் விரோதத்தால், மீண்டும் மீண்டும் நடந்த சம்பவத்தை பெருமாள்சாமி நினைக்கிறான். மேல் மனமானது கதிர்வேலு மீதுள்ள வெறுப்பு உணர்வையும், கோப உணர்வையும் தனது நுனிப் பகுதியில் கொண்டு வந்து வைத்துக் கொள்கிறது. என்றாவது ஒரு நாள் சிறு சண்டை ஏற்பட்டாலும் பெருமாள்சாமி கதிர்வேலுவைக் கொன்று கொலையாளியாகி விடுவான்.

41.ஈடன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் கனிகளை (நன்மை தீமை தரும் மரத்தின் கனிகளை) சாப்பிடுவதற்கு முன்பு துன்பத்தையே அறியாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். இறைவனோடு பேசினார்கள். அந்த வாழ்க்கைதான் கவன வாழ்க்கை. கனிகளை தின்றார்கள்; கற்பனை வாழ்க்கைக்கு மாறினார்கள். துன்பத்தை கண்டார்கள். ஆனால் இறைவனை காணவில்லை. மனித இனத்திற்கு பூமியில் வாழும் வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறியது.


ஹீலர், மருத்துவ மனபயிற்சி நிபுணர், பொறிஞர்.ஆர்..பரமன்(அரோமணி), மேற்பார்வை பொறியாளர் (ஓய்வு)/தமிழ்நாடு மின்சார வாரியம், செல்:9442035291.

please visit: www.medicineliving.blogspot.com
copy right to R.A.Bharaman
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: