Saturday, September 20, 2014

எதிர்காலம்-9

                                   
எதிர்காலம்  (future) யாருக்குச் சொந்தம?

C 248-MM 2-க.வா 9-இம !  

இரட்டை மருத்துவம்- மருத்துவ மனபயிற்சி மருத்துவம் பகுதி 2
                                TM-MMM II- ATTENTIVE LIFE 9 - TAMIL
                     கவன வாழ்க்கை 9
எதிர்காலம் யாருக்குச் சொந்தம்!
1.எதிர்காலம் மனிதனுக்குச் சொந்தமில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். அது வேறு ஒருவருக்குச் சொந்தம். ‘இக்கணத்தில் வாழும் நேரம்தான் (living presently)’ மனிதனுக்குச் சொந்தம். கற்பனை காண்பது, எதிர்காலத்தில் நடக்கப் போவதைப் பற்றியது. திட்டமிடுவது, எதிர்காலத்தில் செய்யப்போகும் செயல்பாடுகளின் வடிவமைப்பு. முடிவெடுப்பதுவும் எதிர்காலத்தில் எடுக்கும் நடவடிக்கையைப் பற்றியது. இந்த மூன்று செயலுமே, இறைவனுக்குச் சொந்தமான இடத்தில், ஆக்கிரமிப்புச் செய்து, வீடு கட்டுவதைப் போன்றதாகும்.

2. நம் கண்ணெதிரே, தங்கம், வைரம், வைடூரியம் மற்றும் மற்ற செல்வப் பொருட்களும், திருவனந்தபுரம் பத்மனாபா கோவிலின் சுரங்க அறைகளில் குவியலாகக் கொட்டிக் கிடப்பதைப் போலக் கிடக்கிறது. ஆனால், அந்தச் செல்வக் குவியல் மனிதர்களுக்குச் சொந்தமானதல்ல; அது இறைவனுக்குச் சொந்தமானதாகும். வேறொருவருக்குச் சொந்தமாயிருக்கும் போது, அந்த செல்வக் குவியலைக் கொண்டு, மனிதர்கள் எப்படி அவர்களது வசதியைப் பெருக்கிக் கொள்ள கற்பனை காணமுடியும், திட்டம் தீட்ட முடியும், முடிவு எடுக்க முடியும்?

3. கற்பனை, திட்டமிடுதல், யோசித்து முடிவு எடுத்தல் ஆகிய மூன்றின் மூலம் மனித வர்க்கம் இறைவனின் இடத்தில், அந்நியரின் இடத்தில் சொர்க்க பூமியை எழுப்ப நினைப்பது எந்த வகையில் நியாயம்!

4. கற்பனையின்படியும், திட்டமிட்டபடியும், முடிவின்படியும் எதுவும் நடப்பதில்லையே! ஏன்?
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்”.— ‘ஒருவன் பிறர்க்கு முற்பொழுதில் துன்பம் செய்தால், அவனுக்குத் துன்பம் பிற்பொழுதில் பிறர் செய்யாமல் தானே வரும்.’.
-தவத்திரு திருவள்ளுவப் பெருமான்.

5; “ஒருவர் செய்கின்ற கர்மம், அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுகதுக்கங்களுக்கு முதற்காரணம்”. -காஞ்சி காமகோடி பெரியவர்.

6. தமிழ் மொழியில் சொல்லப்படாத நீதிப் பழமொழிகளே இல்லை என்று சொல்லலாம். ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்’. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’. “For every action, there is an equal and opposite reaction”. இது நியூட்டனின் விதி. சுவற்றில் அடிக்கும் பந்து மீண்டும் வந்து அடித்தவரையே தாக்குவதைப் போல, மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்ச்செயல் உண்டு.

7. நான் நடந்து செல்கிறேன். எனது பெருவிரல் சாலையில் கிடக்கும் கற்களினால் இடறப்படுகிறது. அதனால் பெருவிரலை நீவிவிடக் குனிகிறேன். நான் கல் எடுக்கத்தான் குனிகிறேன் என்று என் செயலைப் பார்த்து, ஒரு நாய் தலைதெறிக்க ஓடுகிறது. இதே எனது செயலை பார்த்த, எதிரேயுள்ள குட்டிச் சுவரில் உட்கார்ந்திருந்த ஒரு காகம் ஒன்று தன்னைத்தான் கல்லால் எறிந்து அடிக்கப் போகிறேன் என்று அந்தக் காகம் பறந்து விடுகிறது. எனது குனிவு ஒரு செயல் என்றால், நாய் பயந்து ஓடுவது, காகம் பயந்து பறந்து செல்வது ஆகிய இரண்டும் எதிர்ச்செயல்களாகும்.

8. குழந்தை அழுகிறது-எதிர்ச்செயல்-தாய் வந்து பால் கொடுக்கிறாள்; சிறிது வளர்ந்த குழந்தை மருந்துப் பாட்டிலைத் தட்டி உடைத்து விடுகிறது-எதிர்ச்செயல்-தாய் வந்து செல்லமாக ஒரு அடி போடுகிறாள். வளர்ந்த பையன் பக்கத்து வீட்டுப் பையனை அடித்து விடுகிறான்எதிர்ச்செயல்இரண்டு குடும்பமும் சண்டை போட்டு போலீஸ் ஸ்டேசன் வரை பிரச்சனை சென்று விடுகிறது. சிறப்பாகப் படிக்கிறான்பரீட்சையில் முதல் மாணவனாகத் தேறுகிறான். ஒழுக்கமுள்ளவனாக வளருகிறான்எதிச்செயல்வாழ்க்கையில் உயருகிறான். இவ்வாறு குழந்தை வளர்ந்து ஆளாகி மண்ணுக்குப் போகும் வரை அது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல் ஏற்பட்டு விடுகிறது. சில செயல்களுக்கு எதிர்செயல் ஜெயில் தண்டனையாகத் தாமதமாகத் தான் வரும். இவ்வாறு மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயல் பாவ புண்ணியங்களாக இறைவனால் பதிவு செய்யப்படுகின்றன. அந்த பாவ புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல இன்பங்களும், துன்பங்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கின்றன.

9. ஒருவருக்கு இன்பமான செய்தி ஒன்று காலையில் கிடைத்ததென்றால், மாலையில் துன்பமான செய்தி ஒன்று வந்து அவரது கதவைத் தட்டும். சென்ற பிறவியில் நம்முடைய எதிர்ச்செயல்கள் இப்பிறவியில் வந்து இன்ப துன்பங்களாக மாறி மாறி வருவதைத்தான் ஊழ்வினைப் (fat) பயன் என்பது. 90 வயதில் ஒரு கிழவன் முன்பகை காரணமாக தன் மகன்களை ஏவி ஒரு கொலையைச் செய்யக் காரணமாகி பிறகு மாரடைப்பால் இறந்துவிடுகிறார். இவர் செய்த கொலைச் செயலுக்கு எதிச்செயல் அடுத்தப் பிறவியில்தானே வந்து சேர முடியும். இது தான் ஊழ்வினைப் (fat) பயன் என்பது.

10. “நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்”-
நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று விரும்பி அனுபவிக்கின்றவர், தீவினை உண்டாகும் காலத்தில் துன்பங்களை அவ்வாறே மகிழ்ந்து அனுபவிக்காமல் வருந்துவது ஏன்?’

11. “ஊழிற் பெருவலி யாவுள மற்றுந்தன் சூழினுந் தான்முந்நுறும்”- ‘ஊழ்வினையைவிட மிக வலிமையுடையது வேறு எதுவுமில்லை. ஊழ்வினையிலிருந்து தப்ப வேறுவழிதேடிப்போனாலும், அங்கேயும் நம்மை முந்திக்கொண்டு ஊழ்வினைதான் போய் நிற்கும்.’
- தவத்திரு திருவள்ளுவப் பெருமான்

12. முற்பிறவியின் ஊழ்வினையின் பலன்களினால் உண்டாகும் இன்ப துன்பங்களையும், இப்பிறவியில் செய்த நன்மை தீமைக் கேற்ற இன்ப துன்பங்களையும், அமுல்படுத்துவதற்கு இறைவன் தேர்ந்தெடுத்த காலந்தான் எதிர்காலமாகும்.

13. இக்கணமும், நிகழ்காலமும் (presently) ஒன்றே. நிகழ்காலத்தில் நடக்கும் செயலுக்கு எதிர்ச்செயல் எதிர்காலத்தில் தான் நடைபெறும். உதாரணமாக, இக்கணத்தில் ஓருவன் லஞ்சம் வாங்குகிறான்; இன்னொருவன் அலுவலகப் பணத்தை கையாடல் செய்கிறான். சில நாட்கள் கழித்து (எதிர்காலத்தில்) அவர்கள் வீட்டுக்கு போலீசார் விசாரணைக்கு வருகிறார்கள்.

14. நகரத்தில் திடீரென்று கலவரம் வெடிக்கிறது. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. சாலைகளும், தெருக்களும் வெறிச்சோடிக்கிடக்கின்றன. கடைகளை மூடிவிட்டார்கள். ஆள் நடமாட்டமில்லை. கலவரக்காரர்கள் மட்டும் அங்கேயும் இங்கேயும் ஓடி கலவரத்தைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

15. இந்தச் சூழ்நிலையில், ராமச்சந்திரன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் விதமாக பைக்கை மிக வேகமாக ஓட்டி வந்தார். ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியைக் கடக்கும் போது, ஒரு ஐந்து வயதுக் குழந்தை தோள்ப்பட்டையில் புத்தகப் பையை தொங்கப் போட்டு அழுது கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டார். கலவரத்தில் பள்ளிக்கூட வேன் டிரைவர் அவசரத்தில் பையனைக் கவனிக்காமல் விட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும் என்பதை அவர் புரிந்து கொண்டார். கலவரம் முடிய இரண்டு நாட்கள் ஆனது. அந்தச் சிறு பையனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கவைத்து, பிறகு, அந்தச் சிறுவனின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். சிறுவனின் அப்பா ஜெகதீசன் ஒரு பெரிய நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் வெளியூர் சென்றிருந்தார்.

16. பையனைக் காணவில்லை, கலவரம் என்று கேள்விப்பட்ட அவர் உடனே அடுத்த விமானத்தைப் பிடித்து ஊருக்குத் திரும்பினார். காவல் நிலையத்திற்கு நேரே சென்றுகூட புகார் கொடுக்க முடியவில்லை. போனிலே புகார் கொடுத்தார். ராமச்சந்திரன் அங்கு சென்றபொழுது இலவு வீடாகக் காட்சி அளித்தது. பையனைப் பார்த்தவுடன் அந்த வீட்டிலுள்ளவர்கள் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க இயலாது. ஒரு வாரம் கழித்து, ஜெகதீசனும் அவரது மனைவியும் பையனுடன் ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்தனர். ராமச்சந்திரனின் பெண் குழந்தைக்கு 5 பவுனுக்கு தங்கச் செயினும் மற்றவர்களுக்குத் துணிமணிகள் வாங்கி வந்திருந்தனர். ராமச்சந்திரனும் அவரது மனைவியும் எவ்வளவோ மறுத்தும் வாங்கி வந்த பரிசுப் பொருட்களை கொடுத்து, நன்றியைத் தெரிவித்துவிட்டுச் சென்றனர். அதற்குப் பிறகு இருகுடும்பங்களும் நட்புடன் பழகி வந்தனர்.

17.இவ்வாறு நாம்இக்கணத்தில் அதாவது நிகழ்காலத்தில்செய்யும் நல்லது கெட்டதுக்குத் தகுந்தவாறு பலன்களை அதாவது இன்பம் துன்பங்களை அளிப்பதற்கு இறைவன் தேர்ந்தெடுத்த காலம்தான்எதிர்காலமாகும்’. ஆகவே கற்பனை செய்தும், திட்டமிட்டும், முடிவெடுத்தும் எதிர்காலத்தை நாம் ஆக்கிரமிக்கக் கூடாது.

18. அன்புள்ள மகனை 14 வருடங்கள் காட்டுக்கு அனுப்பிவிட்டு தசரத மன்னன் புத்திர சோகத்தால் உயிர்விட வேண்டுமென்று ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட ஒன்று.

19. பாஞ்சாலியை சூதாட்டத்தில் பந்தயம் வைத்துத் தோற்றுவிட்டு, துச்சாதணன் அவளுடைய சேலையை உரிப்பதைப் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாமலிருக்கிறார் தர்மர். கோபமடைந்து கேள்வி எழுப்பும் தம்பிகளுக்கு, ஏற்கனவே இறைவனால் நிர்ணயக்கப்பட்ட ஒன்று, என்று தர்மர் அமைதியாகப் பதிலளிக்கிறார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் குருசேத்திரப் போருக்கு இது நடந்தேறவேண்டும் என்பது விதி.

20. எதிர்காலத்தில் இன்னாரது வீட்டில் கணவன் மனைவிக் கிடையில் கலகம் ஏற்படும் என்றும் இன்னார் நடத்தும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுமென்றும் மணி, நிமிடம், நொடி எல்லாம் கணக்கிடப் பட்டு கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கில் வைப்பதுபோல இறைவனால் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

21. நல்லநேரம் கெட்ட நேரம் பார்ப்பதில் உண்மை எதுவும் உண்டா?

உண்மை எதுவும் இல்லை!

22. மணிமேகலையைக் காதலித்த அரசகுமாரன் உதயகுமாரர், காஞ்சனன் என்னும் விஞ்சையனால் கொலையுண்டு மாண்டதினால் சோகமுற்ற அரசமாதேவிக்கு, மணிமேகலைஅவள் மகன் இறந்ததற்கு உருத்தெழும் வல்வினைதான் (முன்வினை)’ என்று கூறி ஆறுதல் படுத்துகிறார்.

23. சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகளில் ஒன்றுஊழ்வினை வந்து உருட்டும்என்பதாகும்.

24. ‘எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம்’.-விவேகானந்தர்.

25. எதிர்காலம் இறைவனுக்குச் சொந்தம். அக்காலத்திற்காக கற்பனை செய்வது, திட்டமிடுதல், யோசித்து முடிவெடுத்தல் ஆகிய மூன்றையும் செய்வது இறைவனுக்கு எதிராக செயல்படுவதாகும். மீறிச் செய்யும்போதுதான் இன்பதுன்பங்களுக்கு ஆளாகிறோம். ஊழ்வினைக்குள் மாட்டிகொள்கிறோம். நிகழ்காலத்தில் அல்லது இக்கணத்தில் வாழும்போதுதான் அதாவது கவன வாழ்க்கை வாழும்போதுதான் மனிதனின் வாழ்க்கை முழு நிறைவடைகிறது. ஆன்மீகத்தின் உச்சத்தை அடைந்து இறைவனின் முழு அரவணைப்பை பெறுகிறான்.

ஆர்..பரமன்(அரோமணி)
(Er.R.A.Bharaman alias Aromani)
cell:7092209028; 9442035291, 8754880126.
Please visit the following websites: nomedicine-tamil.com; twinmedicine.com for English 
copyright to R.A.Bharaman alias Aromani.முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: