Thursday, April 18, 2019

பஞ்ச பூதங்கள்

பஞ்ச பூத ஆற்றலகள், அப்படின்னா என்ன?


அக்குபங்சர்: இது சீன மருத்துவம். ஐந்து பஞ்ச பூத ஆற்றல்கள் ஐந்து மூலகங்களாகும் (Five elements). அவைகள்: 1. நெருப்பு  2. நிலம் 3. காற்று 4. நீர் 5. ஆகாயம் அல்லது மரம். அந்த ஐந்து மூலகங்களுக்கும் 12 உள்ளுறுப்புகள் இருக்கின்றன. அவைகள்: இருதயம் (Heart), சிறுகுடல் Small intestine), இருதய வெப்ப மேலுறை (Peri cardium), மூவெப்ப மண்டலம் (Trible energiser), மண்ணீரல் (Spleen), இரைப்பை (Stomach), நுரையீரல் (Lungs), பெருங்குடல் (Large intestine), சிறுநீரகம் (Kidney), சிறுநீர்ப்பை (Urinal bladder), கல்லீரல் (Liver), பித்தப்பை (Gall bladder),

உங்களது தோலின் மேல் பகுதியில் மேற்குறிப்பிட்ட உள்ளுறுப்புகளை இணைக்கும் 12 சக்தி நாளப் பாதைகளிருக்கின்றன (Energy channels). ஒவ்வொரு சக்தி நாளப் பாதையிலும், மேற்கூறிய ஐந்து மூலகப் புள்ளிகள் அமைந்துள்ளன. ஆக, 12 சக்தி நாளப் பாதைகளிலும் சேர்ந்து மொத்தம் 60 மூலகப்புள்ளிகள் இருக்கின்றன. இந்த அண்டத்தின், ஐந்து பஞ்ச பூத ஆற்றல்கள் உடலின் தோல் வழியாகச் செல்லும் 12 சக்தி நாளப் பாதைகளில், 60 மூலகப்புள்ளிகள் வழியாக  12 உள்ளுறுப்புகளுக்கு சென்று அவ்வாற்றலைக் கொடுத்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

                ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: