Sunday, April 21, 2019

மதியம், ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு!


A 139-MM 1-மம 4- -

மதியம், ஒரு ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு!

மதியம், ஒரு ஹோட்டலில், ஆசையை அடக்க முடியாமல்,நீங்கள் ஆஸ்த்மாவுக்கு சேராத உணவுப் பொருளை சாப்பிட்டுவிட்டு, தாகம் எடுக்காமல், நிறைய தண்ணீரும் குடித்து விட்டதாக வைத்துக் கொள்வோம். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உங்களது வீட்டிற்கு நடந்து செல்லும்போது, இளப்பு (Wheezing) வந்து விட்டது. அப்பொழுது மாத்திரையோ, உறிஞ்சு மருந்தோ இல்லை; நீங்கள் பயப்பட தேவையில்லை; 

உடனே நடப்பதை நிறுத்துங்கள்; உட்காருவதற்கு ஒரு இடத்தை கண்டுபிடித்து உட்காருங்கள்; இளப்புக்குரிய மருத்துவ மனபயிற்சியை (மம) 15 நிமிடங்கள் செய்யுங்கள்; இளப்பு குறையும் விதமாக,நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் சளி வெளியேறும்; நெஞ்சை அடைத்துக் கொண்டிருக்கும் ஏப்பம் வெளியேறும், வயிற்றை அடைத்துக்கொண்டிருக்கும் வாயு வெளியேறும்; இளப்பின் கடுமை குறைந்திருக்கும். 

மீண்டும் எழுந்து நடங்கள்; மீண்டும் இளப்பு வரும்; மீண்டும் மம-செய்யுங்கள்; இளப்பு நன்றாக குறைந்திருக்கும்; இப்படி தொடர்ந்து செய்து வந்து,, வீட்டிற்குள் நுழையும்போது இளப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டிருப்பீர்கள்; மனதில் இனம்புரியாத மகிழ்ச்சியை உணருவீர்கள். 

மனதின் மனபயிற்சியால் கிடைக்கும் ஆற்றலோடு, நடப்பதால் (உடற்பயிற்சியால்) கிடைக்கும் ஆற்றலும் சேரும்போது இளப்பு விரைவில் குணமாகிறது.

                    ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

Please register your comment.


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: