Friday, April 12, 2019

தேவைகள் பூர்த்தி அடைதல்


இறைவனின் அருள் கிடைத்துவிட்டதா?


D 182-TM-இம.ஆன்மீகம்
கோவிலுக்குப் போய்விட்டு வந்த பிறகு இறைவனின் அருள் கிடைத்துவிட்டது என்பதை  எப்படி அறிந்து கொள்ள முடியும்?
D 182-TM-இம.ஆன்மீகம்
ஆன்மீக ஆற்றல் அல்லது இறைவனின் அருள் கிடைத்துவிட்டது என்பதை  எப்படி அறிந்து கொள்ள முடியும்?
ஒருவரைக் கேட்டால், நான் 20 ஆண்டுகளாக, 20 முறை பாதயாத்திரை சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறேன் என்று சொல்கிறார். இன்னொருவர் பதினைந்து ஆண்டுகளாக விரதமிருந்து இருமுடி கட்டி, ஆண்டவனை வழிபாடு செய்திருக்கிறேன் என்று சொல்கிறார். இப்படி பலபேர்கள் இருபது, முப்பது தடவைகள் இறைவனை பல ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து சாமி உருவத்தை வழிபாடு செய்து வருகிறார்கள். அவ்வாறு ஒவ்வொரு தடவை சென்று சாமி தரிசனம் செய்து வந்ததினால், அவர்களுக்கு ஆன்மீக ஆற்றல் எவ்வளவு கிடைத்திருக்கிறது என்று அவர்களால் சொல்ல முடியுமா?

அவர்களால் சொல்ல முடியாது. முதல் காரணம் தவறான வழிபாடுகள். மற்றொன்று ஆன்மீகப் பவரை அளவிட அவர்கள் அனுபவப்படவில்லை. அவர்களுக்கு ஆன்மீக ஆற்றல் கிடைத்திருந்தால், அவர்களுக்கு அதிசயங்கள் நடந்திருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை சந்திக்க மனதில் நினைத்தால், அவர் அவர்களுக்கு எதிரே வந்துகொண்டிருப்பார்; வி.ஐ.பி ஒருவரைச் சந்திக்க அவருடைய வீட்டிற்கு சென்றால், அவர் மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு அவர்களுக்காக காத்திருப்பதைப்போல, காத்திருப்பார். “மறுநாள் பையனுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த பணம் குறைவாக இருக்குதே மீதப் பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம்” என்று கவலையிலிருக்கும்போது, உங்களது நண்பர் வந்து “ இந்தாப்பா! எனது தேவைக்கு உன்னிடமிருந்து பணம் வாங்கிப் போனேன். ஆனால், அந்தப் பணத்துக்கு தேவையில்லாமல் போய்விட்டது. ரொம்ப நன்றிப்பா!” என்று சொல்லி பணத்தைக் கொடுத்து உங்களது கவலையை நீங்கச் செய்வார். இதேபோல உங்களது முயற்சி எதுவுமில்லாமல், உங்களது தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

                    ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)


முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: