Friday, April 12, 2019

கோவிலுக்குப் போய்விட்டு வந்த பிறகு

 மனச் சஞ்சலத்திற்கும் ஆளாகிறீர்கள்.


D 183-TM-இரட்டை மருத்துவத்தின் ஆன்மீகம்-
கோவிலுக்குப் போய்விட்டு வந்த பிறகு நடப்பது என்ன? 

கோவிலுக்குப் போயிட்டு வந்த பிறகு வருடத்திற்கு வருடம், உங்களது எதிர்மறைக் குணங்களான கோபம், பொறாமை, பதட்டம் முதலியன குறைந்து, பிறருக்கு உதவி செய்யும் மனப்போக்கு வளர்ந்திருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால், எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாளும் பிறருக்கு கெடுதல் செய்யும் மனப்பாங்கு குறைந்து கொண்டே வர வேண்டும். இறைவன் தன்னிடம் தங்கி இருப்பதை, தான் செல்லும் இடத்துக்கெல்லாம் தன்னோடு வருவதை உணர வேண்டும். ‘எல்லாம் அவன் செயல்’ என்ற உண்மையை நடைமுறையில் உணர வேண்டும். 

எத்தனை ஆண்டுகள் ஆன்மீக யாத்திரை போய்விட்டு வந்தாலும் வந்தவுடனே, குடிக்கவும், மனைவி மக்களை அடித்து உதைக்கவும், சிகரெட் பிடிக்கவும், சூதாட்டம் ஆடவும் செய்தால், ஆன்மீக ஆற்றல் கிடைக்கவில்லை என்றுதானே பொருள்! ஆன்மீக ஆற்றல் கிடைக்காமல், உடலையும் வருத்தி, பல ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் செலவழித்து, ”இவ்வளவு வழிபாடும் பரிகாரமும் செய்தும் ஒன்றுக் நடக்கவில்லையே” என்று மனச் சஞ்சலத்திற்கும் ஆளாகிறீர்கள்.

                 ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: