Tuesday, March 10, 2020

நேரடி தொடர்பு கொள்கிறார்கள்.


   இந்து மத வழிபாடுகளால் பகதர்களுக்கு பலன் எதுவும் இல்லை!

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028 

D 10-TM-இம.ஆ

இறைவனிடம் நேரடி தொடர்பு கொள்கிறார்கள்.
 1.   பெரு நகர கோவில்களிலிருந்து, சிறு கிராமங்களிலுள்ள கோவில்கள் வரை, நடக்கும் வழிபாடுகளில், பூசாரிகள்தான், பூஜைகள் செய்து பிரார்த்தனை என்னும் மனபயிற்சியின் மூலம் இறைவனிடம் நேரடி தொடர்பு கொள்கிறார்கள். ஆகவே இறைவன் அருள் அவர்களுக்குத்தான் கிடைக்கும். பக்தர்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்காது.     
 2.   மற்றும் நவகிரகங்களை சுற்றுதல், காவடி எடுத்தல், அலகு குத்தி வழிபடுதல், விரதமிருந்து நேத்திகடன் செய்தல், பாதயாத்திரை, மொட்டை அடித்தல், தேங்காய் உடைத்தல், அங்கபிரதட்சனம் செய்தல், மண்சோறு சாப்பிடுதல், எலுமிச்சை, வடை ஆகியவற்றால் மாலை சாத்துதல், இருமுடி சுமந்து வழிபடுதல்,  
 3.   மேலும், பொங்கல் வைத்து சாமி கும்பிடுதல், ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபடுதல், ரேடியோ போட்டு கோயில் விழா கொண்டாடுதல், மொளப்பாரி எடுத்தல், கரகாட்டம் ஆடுதல், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளினால் வழிபடுதல்,
 4.   2-வது, 3-வது பாராக்களில் பக்தர்களே வழிபாடுகள் என்று நினைத்து செய்கிறார்கள். அவர்கள் செய்யும் வழிபாடுகளில் மனதை ஈடுபடுத்தி பிரார்த்தனை செய்து இறைவனிடம் நேரடியாக மனபயிற்சியின் மூலம் தொடர்பு கொள்ளவில்லை. ஆகவே இறைவனின் அருள் கிடைக்காது. எனவே,  அவைகள் வழிபாடுகள் கிடையாது. உடலை ஈடுபடுத்தும் செயல்பாடுகள் மட்டுமே ஒட்டு மொத்தத்தில், இந்து மத வழிபாடுகளினால்,  பக்தர்களுக்கு எந்த பலனும் இல்லை என்றே சொல்லலாம்.

                           ஹீலர் அரோமணி 
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.



முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: