Wednesday, December 25, 2019

முதல் விதி: அளவாக சாப்பிடுவது

ஆரோக்கியத்திற்கு அரோமணியின் 11 விதிகள்!-இம
     

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

முதல் விதி: அளவாக சாப்பிடுவது

முதல் விதி: அளவாக சாப்பிடுவது; ஒவ்வொரு கவளத்தையும் 30  முறை மென்று விழுங்க வேண்டும்; மூன்று ஏப்பங்கள் வரும்; மூன்றாவது ஏப்பத்துக்கு பிறகு வயிறு மந்தமாக இருந்தால், இரண்டு ஏப்பத்தோடு நிறுத்திவிடுங்கள்.
2-வது விதி: இயற்கை உணவு நோய்களை தருகிறது. ஆகவே பழங்களை இடலி பானயில் 2 அல்லது 3 நிமிடங்கள்  ஆவியில் வேகவைத்து சாப்பிட வேண்டும்.
3-வது விதி; உணவு சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இருக்க கூடாது.
4-வது விதி; தாகம் எடுத்தபிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
5-வது விதி: பசி எடுத்தபிறகுதான் உண்ண வேண்டும்.
6-வது விதி: மலம் முழுவதும் வெளியேறிவிட்டதை உறுதி செய்ய வேண்டும்.
7-வது விதி: காற்றோட்டமான அறையில் தூங்க வேண்டும்.   கொசுவலை, கொசுவத்தி பயன்படுத்த கூடாது.
8-வது விதி: பகலில் தூங்க கூடாது.
9வதுவிதி: உடலிலுள்ளதுவாரங்கள்அடைபடக்
கூடாது.
10-வது விதி. காலையிலும் மதியத்திலும் சாப்பிட்ட பிறகுதான்   நடக்க வேண்டும்.
11-வது விதி: காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்களுக்கு மார்பை  அல்லது தலையைக் கவனித்து,மருத்துவ மனபயிற்சி செய்ய வேண்டும்.  
               ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யுங்கள்.

Tuesday, December 24, 2019

எப்பொழுதும் மகிழ்ச்சி!


   எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேனே! - இம         

அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: வேலை செய்துகொண்டே நோய்களை குணபடுத்தலாம்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

A 25-TM
அதற்கு பரிகாரம் என்ன? குழந்தைகள் பிறக்கும்போதும், திருமணங்கள் கைகூடும்போதும், வேலைவாய்ப்பு கிடைக்கும்போதும், பதவி உயர்வு கிடைக்கும்போதும், அந்தஸ்து உயரும்போதும் மகிழ்ச்சியடைகிறீர்கள். இன்று இந்த பதவியில் இருக்கிறேன் என்றால் அதற்கு நான் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். இந்த மகிழ்ச்சியை என்னால் தாங்கமுடியவில்லை, அதற்கு பரிகாரம் காணவேண்டும் என்று எவரும் பரிகாரத்தைத் தேடிப் போவதில்லை! நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு தகுந்தாற்போல உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்கள் நடக்கின்றன

அதேபோலதான், நீங்கள் செய்த கெட்ட செயல்களுக்குத் தகுந்தாற்போல, துன்பச் செயல்கள் நடக்கின்றன!. இதற்கு மட்டும் பரிகாரத்தைத் தேடி மக்கள் ஏன் ஓடுகிறார்கள். உங்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செயல்களைத் தடுக்க எப்படி எவராலும் முடியாதோ, அதேபோல உங்களுக்கு துன்பம் தரக்கூடிய செயல்களை எந்த பரிகாரத்தாலும் தடுக்க முடியாது!

அதற்கு ஒரே ஒரு பரிகாரம் கவனவாழ்க்கை வாழ்வதுதான். கடந்த காலத்தையும் எண்ணாமல், எதிர்காலத்தையும் எண்ணாமல், எப்பொழுதும் செயல்களில், வேலைகளில் கவனத்தைச் செலுத்துவதுதான். அவ்வாழ்க்கையில் இறைவனின் பாதுகாப்பில், நேரடி பார்வையில் வந்துவிடுகிறீர்கள். அதன்மூலம் ஊழ்வினை தாக்கத்தை எளிதில் எதிர்கொள்ள முடியும். கவனவாழ்க்கைக்கு மாறுவதற்கு, மருத்துவ மனபயிற்சி உறுதுணையாக இருக்கும்.
                            
         ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.

Sunday, December 1, 2019

இளப்புக்கு காரணம் மலசிக்கல்

இளப்பு (Wheezing)-காரணம்-சிகிச்சை! -இம
              அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.

சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.

செல் எண்கள்: 9442035291;7092209028.

           இளப்புக்கு காரணம் மலசிக்கல்

இளப்புக்கு காரணம் மலசிக்கல்- அதுவும் குளிர்காலத்தில், மலசிக்கல் இருக்கும்போது, சிறிது அதிகமாக சாப்பிட்டாலும், பழங்களை வேகவைக்காமல் சாப்பிட்டாலும், தாகம் எடுக்காமல் நீர் குடித்தாலும், பசி எடுக்காமல் சாப்பிட்டாலும், காற்றோட்டமில்லாத அறையில் தூங்கினாலும், கொசுவலைக்குள் தூங்கினாலும், பகலில் தூங்கினாலும், உடலில் உள்ள வியர்வைத்துவாரங்கள் அடைபட்டாலும், உணவுக்கு தகுந்த உழைப்பு இல்லாவிட்டாலும் மனவழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்காவிட்டாலும் தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீராக ஒழுகுதல், சளி, இளப்பு கட்டாயம் ஏற்படும். மேலும் குளிர்காலம் உடல், தன்னை, பராமரிப்புக்கு உடபடுத்தி கழிவுப்பொருட்களை வெளியேற்றும் காலம்.

இதற்கு சிறந்த தீர்வு, காலையிலும் மதியமும் சாப்பிட்டபிறகு நடைப்பயிற்சி செய்வதுதான். மேலும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் மார்பு,  மூக்கு ஆகியவற்றை கவனித்து செய்யகூடிய மம-வை செய்து சேர்ந்திருக்கிற சளியை அப்புறபடுத்த வேண்டும். அப்பொழுதுதான் இரவில், மேற்கூறிய தொந்தரவுகள் இல்லாமல் நல்ல தூக்கம் தூங்க முடியும்.  மேலே குறிப்பிட்டபடி, மற்ற வாழ்வியல் விதிகளையும் கடைப்பிடிக்கும்போதுதான், உடல் ஆற்றல் பெற்று, கழிவுப்பொருட்கள் குறைந்து இளப்பிலிருந்து விடுபடுவீர்கள்.

                                   ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.